கண்ட நாள் முதல்

அத்தியாயம் 26

 

தன் காதலை உணர்ந்து மனதின் எடை கூடி விட இதயம் வேகமாக துடிக்க அந்த சத்தத்தில் நிலாவின் உறக்கம் தொலைந்து போனது. அருகில் உறங்கும் கணவனை கண்களால் எடுத்து உள்ளத்தில் நிறைத்துக் கொண்டிருக்க, நேரம் காலை 6 மணியை காட்ட மெதுவாக எழுந்து மென்மையாக தன் இரண்டாவது முத்தத்தை தன் கணவன் கன்னத்தில் பதிக்க… அதை உணராமல் உறங்கிக்கொண்டிருந்தான் சூர்யா.

 

நிலா இறங்கி கீழே வர, வாசலில் கார் சத்தம் கேட்டு. தன் அத்தை வந்ததை அறிந்தவள் வாசலை நோக்கி ஓடியவள், “வாங்க அத்த வாங்க மாமா” என்றவள் காபி போட்டுக் கொடுத்து விட்டு தன் அத்தை அருகில் உட்கார்ந்தவளை தனம்மா வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க. “என்ன அத்த, என் முகத்தையே பாத்துட்டிருக்கீங்க??” என்று மெல்லிய குரலில் கேட்க. 

 

“இல்ல நிலா நீ எப்பவும் அழகு தான். ஆனா, இன்னைக்கு என்னமோ உன் முகத்தில் ஏதோ ஒரு புது மலர்ச்சி தெரியுது!… பாக்க ரொம்ப அழகா இருக்க!. என்ன விஷயம்?’ என்க நிலாவிற்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. “தன் நெஞ்சில் புதிதாக பூத்திருக்கும் தன் கணவன் மீதான காதலின் விளைவு தான் அந்த அழகும் மலர்ச்சியும் என்று வெளியே சொல்ல முடியுமா என்ன.?? போங்க அத்த அதெல்லாம் ஒன்னு இல்ல… நா எப்பவும் போல தான் இருக்கேன்” என்று வெட்கப்பட்டு தலை குனிய, அர்ததமாய் சிரித்த தனம்மா. “ம்ம்ம் நான் நம்பிட்டேன்” என்றவர் “சரி நிலா இன்னும் பத்து நாள்ல சூர்யா பிறந்தநாள் வருது. வருஷ வருஷம் வீட்ல பெரிய பூஜை செய்வது வழக்கம். ஜோசியர் நாளைக்கு நல்ல நாளுன்னு பூஜைய வைக்க சொல்லியிருக்காரு, நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை சோ தேனுவைவும் தேவியையும் இன்னைக்கு சாயந்திரமே வீட்டுக்கு வர சொல்லிடு, நா கலை அண்ணிக்கு ஃபோன் பண்ணி வர சொல்லிடுறேன். ஆனா, என்ன இந்த அரவிந்த் பையன் தான் வேலை இருக்கு வரமுடியாதுன்னு சீன் போடுவான். சரி பாப்போம்” என்று சொல்ல, “ம்க்கும் அந்த மர வேதாளம் வந்த என்ன? வாரட்டி எனக்கு என்ன? அது எங்கயாவது முருங்கை மரத்துல தொங்கிட்டு போகட்டும்” என்று மனதில் அரவிந்தை அர்ச்சனை செய்தவள். “நிலா” என்ற அத்தையின் குரலில் திரும்பியவள். “என்ன அத்தை எதுவும் சொன்னீங்களா.?”

 

“ஒன்னும் இல்ல நிலா எங்களுக்கு டிராவல் பண்ணது, ரொம்ப டயர்டா இருக்குமா. நாங்க போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறோம்” என்று தனமும் குமரேசனும் போய் விட. நிலா தேனுவிற்கு ஃபோன் பண்ண ஃபோனை தேட, அது மேலே ரூமில் இருக்க, தன் அறைக்கு சென்றவள். அப்போது தான் குளித்து முடித்து இடுப்பில் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு உடல் முழுவதும் ஈரம் சொட்ட சொட்ட நின்ற சூர்யாவை பார்த்தவள். “அய்யோ கடவுளே” என்று கைகளால் கண்களை மூடிக்கொள்ள. அவளை பார்த்து சிரித்த சூர்யா. “அடியேய் இப்ப என்னாத்துக்கு நீ இப்டி கண்ணமூடிட்டு கடவுளை கூப்பிடுற.?” என்றவன் அவள் அருகில் வந்து அவள் முதுகை உரசி நிற்க. உச்சி முதல் பாதம் வரை ஐஸ் வைத்தது போல் உடல் விறைத்து நின்றாள் நிலா. அவன் உடலில் இருந்து வந்த அவனது சோப்பின் வாசத்துடன், அவனின் வாசமும் அவளை கிறங்கடிக்க, அவன் தலைமுடியில் இருந்து சொட்டிய நீர் துளிகள் நிலாவின் தோளில் பட்டு கீழே வழிந்தது ஓட, அந்த நீர்த்துளி செய்த புண்ணியம் நான் செய்யவில்லையே!” என்று சூர்யாவின் அடி மனம் ஏங்கியது. அவள் முகத்தை மூடி இருந்த கைகளை தன் கை கொண்டு விலக்கி அவளை தன் புறம் திருப்ப அவனின் வெற்று மார்பை பார்க்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டாள். 

 

“ஏய் நிலானி நா என்ன அவ்ளோ கொடுமையாவ இருக்கேன். இப்டி கண்ணைமூடிட்டு இருக்க.? கண்ணைத்திறந்து என்னை கொஞ்சம் பாருடி” என்று வந்த சூர்யாவின் குறும்பு கலந்த வார்த்தைகளில் நிலா கண்களை திறந்து அவனை செல்லமாக முறைக்க. ஏனோ இன்று நிலாவின் கண்கள் சூர்யாவிற்கு அழகிய, புதிய தகவல் ஒன்றை வெளிப்படுத்தியது. அது என்ன என்று புரிந்த சூர்யா அதை அவள் வாய்மொழியாக அறிய ஆவல் கொண்டு, “நிலானி நேத்து நான் சொன்னத யோசிச்சு பாத்தியா? உனக்கும் என்மேல காதல் இருக்குனு உனக்கு புரிஞ்சுதா?” என்று ஒரு மாதிரி கிறக்கமான குரலில் கேட்க.. நிலா அவனின் அந்த குரலில் மதி மயங்கினாலும், தன்னை சமாளித்துக் கொண்டவள், “இல்லை” என்று பொய் சொல்ல முடியாமல் தலையை இட வலமாக ஆட்ட. நிலாவின் பட்டு கன்னங்களை தன் கையில் ஏந்தியவன். அவள் விழிகளை, தன் விழி என்னும் அம்புகளால் துளைக்க.. அந்த தாக்குதலை தாங்கமுடியாமல் எங்கே தன் காதலை சொல்லிவிடுவோமோ என்ற பயத்தில் நிலா அங்கிருந்து தப்பி ஓட பார்க்க.. அவளை சுவரோடு சாய்த்து தன் கரம் கொண்டு தடுப்பு சுவர் கட்டி, அவளை சிறை செய்ய பெண்ணவள் கண்கள் தண்ணீரை விட்டு வெளியே வந்த மீனைப் போல் அங்கும் இங்கும் தப்பிக்க வழி தெரியாது துள்ளி குதிக்க. அந்த இரு விழிகளில் காலம் முழுவதும் சிறைப்பட்டு இருக்கும் பேராசை கொண்டது சூர்யாவின் மனம். 

 

“ப்ளீஸ் என்ன விடுங்க நா போகணும்” என்று நிலா நடுங்கும் குரலில் சொல்ல. அவளின் அந்த நடுக்கமே அவள் காதலை சூர்யாவிற்கு காட்டிக்கொடுத்தது. “நா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் நீ இங்கருந்து போக முடியாது” என்று சூர்யா குழந்தை போல் வீம்பு பிடிக்க…

 

“அய்யோ ஏன்டா புருஷா என்னை இப்டி படுத்துற? உன்னோட பொறந்த் நாள் அன்னைக்கு என்னையும் எனனோட காதலையும் உனக்கு கொடுக்க ஆசைப்படுறேன்டா. நீ இப்டி இவ்ளோ பக்கத்துல் நின்னு கண்ணை பாத்து கேக்கும் போது எங்க என்னையும் மீறி என்னோட காதலை சொல்லிடுவேனோன்னு பயமா இருக்குடா. ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கே” என்று மனதிற்குள் புலம்ப. 

 

பயத்தில் எச்சில் விழுங்கிய படி அவனை பார்க்கும் நிலாவின் கண்களை பார்த்து இதழ்முடி சிரித்தவன். மீண்டும், “நீ உண்மையை சொன்ன தான் இங்கருந்து நீ போக முடியும். நீ என்னை காதலிக்கிற தானே?” என்று நிலாவை மேலும் நெருங்கி கிட்டத்தட்ட அணைத்தபடி கேக்க.. நிலாவின் நாக்கு அவள் மேல் அன்னத்தில் ஒட்டிக்கொள்ள, மறுபடியும் “இல்லை” என்று மெதுவாக தலையை மட்டும் இப்படி அப்படி ஆட்ட. 

 

“அடியேய் உன்னை இப்டியெல்லாம் கேட்ட வேலைக்காகாது” என்று நினைத்தவன். இன்னும் அவளை நெருங்கி அவள் பஞ்சு போன்ற கன்னத்தில் முத்தமிட்டு அவள் காதுகளில் தன் மீசை மூடி உரசி… “உண்மையை சொல்லுடி” என்று மென்மையான குரலில் கேட்க. நிலா மொத்தமாக கவிழ்ந்து விட்டது. ஆனால், அவள் வாய் மட்டும் அவள் காதலை மொழியவில்லை.. சூர்யாவின் நெருக்கம் இன்னும் இன்னும் அதிகமாக அவன் கைகள் நிலாவின் இடையை தன் கரம் கொண்டு வளைத்திருந்தது. ஏனோ நிலாவிற்கு அந்த அணைப்பில் இருந்து வெளியே வர விருப்பம் இல்லை. அவன் தீண்டாலுக்கு கட்டுப்பட்டு அவள் சிலைபோல் நிற்க.. சூர்யா தடையின்றி தன் கைகளை அவள் இடையில் படர விட்டவன் தன்னிலை மறந்து, தன் அவளிடம் கேட்ட கேள்விக்கு பதில் வராததையும் மறந்து, தன்னவளை தன்னோடு இன்னும் இறுக்கி அணைக்க… இந்த நொடி இப்படியே இங்கேயே உறைந்து விடக்கூடாதா” என்று காலத்தை வேண்டி நின்றனர் இருவரும். சூர்யா நிலாவின் இதழ்களை நோக்கி முன்னேறி போக (விதி… அதெப்படி நா இருக்கும் போது அப்டி நடக்குமா, நடக்க தான் விட்டுடுவேனா) இருவரின் மோன நிலையை கலைக்க அடித்து நிலாவின் ஃபோன் மணி.

 

ஒரு நிமிடம் தன்னை மறந்து நின்ற நிலா, அந்த சத்தத்தில் சுய உணர்வு வர… சூர்யா அசந்த நேரம் அவனை தள்ளி விட்டு ஃபோனை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டாள். 

 

“அடப்பாவி விதியே? அது என்ன எப்பாரு எனக்கு ரொமான்ஸ் சீன் வைக்கும் போது மட்டும் கரெக்டா கெடுத்துவிடும் பழக்கம் உனக்கு.? அன்னைக்கு அந்த அரவிந்த் பையன் ரொமான்ஸ் பண்ணானே அதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியலயா..?? இல்ல தெரியலயான்னு கேக்குறேன். இத்தனைக்கும் அவனுக்கு லைசென்ஸ் கூட இல்ல. நா கல்யாணம் பண்ணி லைசென்ஸ் வச்சிருந்தும் ஒரு மண்ணும் யூஸ் இல்ல… ச்ச்சே என்ன வாழ்க்கைடா இது. கண்டிப்பா அந்த மூனு வானரங்களில் ஒன்னு தான் ஃபோன் பண்ணி இருக்கும். நா ரொமான்ஸ் பண்ண மட்டும் கழுகுக்கு மூக்கு வேர்த்த மாதிரி வந்துருங்க. இதுங்க எல்லாம் எனக்கு உடன்பிறப்பு. டேய் சூர்யா இப்டியே போன நீ காவி கட்டி காசிக்கு தான் போகணும் போல” என்று தன் விதியை நினைத்து வாய்விட்டு புலம்பினான்.

 

(சில்லி பாய் சூர்யா… டோன்ட் வொரி. உன் புலம்பல் எனக்கு கேட்டுடுச்சு. சோ நீ அன்னைக்கு அரவிந்த் க்கு விட்ட சாபம் பலிக்க, இன்னைக்கு நைட்டுக்கு அவனுக்கு ஒரு ஆப்பு சீவி வச்சுட்டேன். பீ ரெடி இப்படிக்கு விதி.. ஈஈஈஈ… பைபை….)

 

நிலா மூச்சு இரைக்க கீழே ஓடி வந்தவள். ஆழ்ந்து மூச்சிழுத்து விட்டு தன்னை நிலை படுத்தி, அப்பாடி நல்ல வேளை ஃபோன் வந்து என்னை காப்பாத்துச்சு. இல்ல இன்னேரம் நானே அவர் கிட்ட ஐ லவ் யூ சொல்லி இருப்பேன். பாவி மனுஷன் கிட்ட வந்தாலே புத்தி ஆஃப் ஆகி, என்னோட மைன்ட் அவர் கூட கூட்டணி வச்சிடுது. கடவுளே இன்னும் ஒன்பது நாள் எப்டி தான் அவர்கிட்ட இருந்து தப்பிக்க போறேனோ… யாப்பா சாமி… அது சரி யாரு என்ன காப்பாத்துன அந்த நல்ல உள்ளம்” என்று ஃபோனை பார்க்க தேனு தான் அழைத்திருந்தாள்.

 

“ஹலோ தேனு… நானே உனக்கு கால் பண்ணனும்னு இருந்தேன். நாளைக்கு அத்த வீட்ல பூஜை வச்சிருக்காங்கடி. சாயந்திரம் தேவியையும் கூட்டிட்டு உங்க ரெண்டு பேரையும் வர சொன்னாங்க” என்று சொல்ல, தேவி ஃபோனை பிடுங்கி ஸ்பிக்காரில் போட்டவள். “சாரி நிலா எனக்கு இன்னைக்கும் நாளைக்கு நிறைய ப்ரோக்ராம் இருக்கு. என்னால வர முடியாது. நா ரொம்ப பிஸி” என்று கவுண்டமணி மாதிரி சொல்ல. 

 

“ஓஓஓ அப்டியாங்க மேடம்…! சரிங்க மேடம் பரவாயில்ல நீங்க உங்க முக்கிய வேலையை பாருங்க. ஒன்னும் பிரச்சனை இல்ல… என்ன நீங்க போன முறை கேரட் அல்வா கேட்டிங்கலாம். நாளைக்கு அதை உங்களுக்கு செஞ்சு தரணும்னு அத்தை சொன்னாங்க… பரவாயில்ல உங்களுக்கு தான் வேலை இருக்கே. நா அத்தை கிட்ட அதெல்லாம் செய்ய வேணாம்னு சொல்லிடுறேன்” என்று ஃபோனை வைக்க போக… தேவி திரு திருவென்று முழித்தவள், “ஏய்.. ஏய் பிடாரி இருடி.. நீயெல்லாம் ஒரு ஃப்ரண்ட டி. இல்ல ஃப்ரண்டான்னு கேக்குறேன். நா வராலன்னு சொன்னா… பூஜைய விட அப்டி என்ன கழட்டுற வேலை உனக்கு. மரியாதையா பூஜைக்கு வந்து சேருன்னு சொல்லாம, நீ பாட்டுக்கு பரவாயில்லனு சொல்ற?. நா வரலன்னா தனம்மா எவ்வளவு வருத்தப்படுவாங்க தெரியுமா? பாவம் அவங்க. அவங்க கஷ்டப்பட்ட என் மனசு தாங்காது. சோ நா என்னோட எல்லா வேலையும் விட்டுட்டு பூஜைக்கு வரேன். அப்புறம் தனம்மா மறந்து இருப்பாங்க… நா கேரட் அல்வா கூட வெங்காய பஜ்ஜியும் கேட்டு இருந்தேன். வெங்காயம் வெல அதிகமாக விக்குதுன்னு விட்டு இருக்கப் போறாங்க. அத அவங்களுக்கு ஞாபகம் படுத்து” என்று சொல்லி முடிப்பதற்குள் தேனுவும் நிலாவும் காறித்துப்பிய சத்தம் பக்கத்து தெரு வரை கேட்க. தேவி வெகு சாதாரணமாக “அரசியல்ல இதெல்லாம் சகஜம் அப்பா” என்று போய்விட. தேனு தலையில் அடித்துக் கொண்டாள். 

 

நிலா ஃபோனை வைத்தவள் பூஜைக்கு தேவையான வேலைகளை பார்க்க. சாயங்காலப் பொழுதும் வந்தது. தேவியும் தேனுவும் நிலா வீட்டிற்கு கிளம்பினார். தேனுவிற்கு தெரியவில்லை இன்று நிலா மூலம் அவளுக்கும் அரவிந்திற்கும் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது என்று…

 

நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால் விதிக்கு என்ன வேலை.

 

நிலவு வீதிவுலா வரும் நேரம் நிலாவின் வீட்டில் கூடி இருந்தனர் அனைவரும். மொத்த குடும்பமும் கூடி கும்மாளம் அடிக்கும் சத்தம் காதைப் பிளந்தது. ஒரு விட்டில் ஒரு குரங்கு இருந்தாலே கஷ்டம். முழு கிஷ்கிந்தையே இருந்தால் சொல்லணுமா என்ன? வீடே ரெண்டுபட்டது. ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதே தான் முதல் கடமை என்று களத்தில் இறங்கி வேலை செய்ய. தேனு மட்டும் யாரையோ எதிர் பார்த்து வாசல் மீது தான் மை விழியை வைத்து காத்திருக்க. அப்போது தனம்மா “இந்த அரவிந்த் பையனும் இங்க வந்திருந்த இன்னும் நல்லா இருந்திருக்கும். வேலையிருக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டான்” என்று சொன்னதை கேட்டதும் தேனு முகம் கையில் இருந்த ஐஸ்கிரீமை பிடிங்கிய குழந்தை போல் மாறிவிட. தேவி சந்தியாவை நோக்கி கண்களில் ஏதோ ஜாடை காட்ட, சந்தியா தான் ஃபோனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நழுவினாள். 

 

டைனிங் ரூம் சென்றவள், அரவிந்தை அழைத்தாள், “என்ன பிடாரி சிஸ்டர் எப்டி இருக்க?” என்று கேட்க சந்தியாவுக்கு வந்ததே கோபம். 

 

“ஹலோ மாம்ஸ் என்ன குளிர் விட்டு போச்ச? நிலா மட்டும் இத கேட்ட உங்களை படக்குன்னு ஒடச்சிடுவ… பாத்துக்கோங்க” என்று மிரட்ட… 

 

“அம்மா தாயே. அந்த பிசாசு நம்பர் ஒன் கிட்ட மட்டும் என்னை கேத்துவிடாதே தாயே… ஏற்கனவே என் லவ் மேட்டர் வேற அந்தரத்துல தொங்கிட்டு இருக்கு, நீ வேற

போறபோக்குல, அத்துவிட்டு போயிடாதே. வேணும்னா உன்னோட கல்யாணத்துக்கு மொத்த செலவையும் நா ஏத்துக்குறேன். இந்த மாமா மேல கொஞ்சம் கருனை காட்டு என்று சரண்டர் ஆக… 

 

“ம்ம்ம்ம் அது…!! அந்த பயம் இருக்கட்டும்” என்று கொத்தாக சொன்னவள். “அது சரி நீங்க ஏன் இங்க வரல” என்று கேட்க. “கொஞ்சம் வேலை இருக்குடா, அதான் வரமுடியல” என்று சொல்ல. 

 

“அப்டிய மாம்ஸ்… ஆனா, பாருங்க தேனுக்க முகம் தான் நீங்க வரலன்னு வாடி போச்சு” என்று சொன்னது தான் தாமதம். “ஏய் சந்தியா! தேனு சூர்யா வீட்லயா இருக்க?” 

 

“ஆமா மாம்ஸ், இங்க தான் இருக்காங்க” என்று சந்தியா சொல்லி முடிக்கும் முன் ஃபோன் கட்டாகி இருந்தது. 

 

சந்தியா ஃபோன் பேசி முடித்து ஹாலுக்கு வர அங்கே தேவி புருவத்தை தூக்கி “என்ன” என்று கேட்க. சந்தியா சக்ஸஸ் என்று தான் கட்டை விரலை உயர்த்தி காட்ட. தேவி வாய்க்குள்ளே சிரித்து விட்டு அமைதியாகி விட.. நிலா மட்டும் ஒருவித எதிர்பார்ப்போடு ஃபோனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

எல்லோரும் பேசி பேசி கலைத்து விட தனம்மா எல்லாருக்கும் டிபன் எடுத்து வந்தவர். “ம்ம்ம்ம் இந்த அரவிந்த் பையனுக்கு வெங்காய பஜ்ஜின்னா ரொம்ப பிடிக்கும். இப்ப பாத்து அவன் இல்ல” என்று சொல்லி வாய் மூடவில்லை. சரியாக அடுத்த குரங்கு, ச்சா… அரவிந்த், “அம்மா நா வந்துட்டேன்” என்று குரல் கொடுக்க. அவன் குரல் கேட்டது தான் தாமதம் தேனு முகம் 1000 வாட்ஸ் பல்பு போட்ட மாதிரி ஜொலிக்க. யாரும் பார்க்காத போது அரவிந்த் தேனுவை பார்த்து கண்ணடிக்க தேனு கன்னத்தின் வண்ணம் கூடி விட்டது. அவள் கன்னத்தை கிள்ள துடித்த கைகளை கஷ்டப்பட்டு அடக்கியவன். தனம்மா கையில் இருந்த பஜ்ஜியை தட்டோடு பிடுங்கி கொண்டான். 

 

“என்னப்பா நடக்குது இங்க? உங்க சத்தம் இந்தியா எல்லை தாண்டி கேக்கும் போல” என்று பஜ்ஜியை சாப்பிட ஆரம்பிக்க அவனை தீயாய் முறைத்த தேவி, “அண்ணா இதெல்லாம் நல்லா இல்லை” என்று கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல. 

 

“இல்லயே தேவிமம்மா… பஜ்ஜி சூப்பரா தான் இருக்கு” என்று பஜ்ஜியை சாப்பிட்டுக்கொண்டே சொல்ல. கொலைவெறியான தேவி, “நா என் சொத்தை கூட விட்டு கொடுப்பேன். ஆனா, வெங்காய பஜ்ஜி ன்னு வந்த, நா யாரு என்னன்னு பாக்க மாட்டேன். கொலைவிழும்” என்றவள். பஜ்ஜி இருந்த தட்டை அரவிந்த்திடம் இருந்து பிடிங்கிக்கொள்ள…

 

“தேவிமா.?? என்ன டா இது..?? மீ உன் அரவிந்த் அண்ணாடா என்னை பாத்து இப்டி சொல்லிட்ட?” என்று பாவமாக கேட்க. “சாரிண்ணா சோறுன்னு வந்துட்ட நா சொந்த பந்தமெல்லாம் பாக்க மாட்டேன்” என்றவள் பஜ்ஜியை வெளுத்து வாங்க. 

 

“அடியேய் எரும பாத்துடி.. கொஞ்சம் தண்ணி குடி. எங்கயாது சிக்கிக்க போகுது.” 

 

“இல்ல நிலா தண்ணி குடிச்ச முழுசா திங்க முடியாது” என்றவள் கைக்கும் வாய்க்கும் சண்டையை தொடர கடவுளே என்று நிலா தலையில் அடித்துக் கொள்ள.. அங்கே சிரிப்பலை பரவியது.

 

“அது சரி அரவிந்த், காலையில என்னமோ எனக்கு வேலை இருக்கு நா ரொம்ப பிஸினு சீன் போட்ட. இப்ப எப்டிடா இங்க வந்த” என்றதும், அரவிந்த் வாயிலில் இருந்த பஜ்ஜி அங்கேயே சிக்கிக்கொள்ள. என்ன பதில் சொல்லும் என்று தெரியாமல் அவன் திருட்டு முழி முழிக்க.. தேவியும் சந்தியாவும் ஒருவரை பார்த்து ஒருவர் கண்ணடித்து சிரித்துக்கொள்ள, “டேய் நா கேட்டுட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு முட்டை கண்ணை வச்சு முழிச்சிட்டு இருக்க?.”

 

” அதென்னும் இல்லமா… நீங்க ரொம்ப ஆசையா என்ன கூப்டிங்க. நா வராட்டி நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க இல்ல. நீங்க வருத்தப்பட்ட எனக்கு தாங்காதுமா.. அதான் நா எல்லா வேலையும் விட்டு ஓடி வந்துட்டேன்” என்று தன்ம்மா தலையில் ஐஸ் மலையையே தூக்கி வைக்க. 

 

தேவியும் சந்தியாவும், “இது உலக நடிப்புடா சாமி” என்று மைண்டு வாய்ஸ் போட… அந்த வாய்ஸ் அரவிந்த் காதில் விழுந்திருக்கும் போல, அவன் இருவரையும் பார்த்து அசடு வழிய சிரிக்க. சூர்யா பக்கம் சாய்ந்த சந்தியா “மாம்ஸ் பாத்தீங்களா இந்த அரவிந்த் மாமாவை… நா ஃபோன் பண்ணி நீங்க வரலயான்னு கேட்டப்ப கூட எனக்கு நிறைய வேலை இருக்குன்னு தான் சொன்னாரு. நா தேனக்கா முகம் வாடிபோச்சுன்னு ஒரு வார்த்தை தான் சொன்னேன். மனுஷன் மின்னல் வேகத்தில் இங்க வந்து விழுந்துட்டாரு… இப்ப பாருங்க எப்டி கலர் கலர்ரா ரீல் விடுறாருன்னு” என்று சொல்ல… 

 

சூர்யா, “அடாநாதாரி” என்ற ரேஞ்சில் அரவிந்தை பாக்க. ‘காதலில் இதெல்லாம் சகஜம் அப்பா’ என்று கண்ணலயே அவன் பதில் சொல்ல. சூர்யா “அடாத்த்து” என்று காறித்துப்பினான்.

 

பொழுது சிரிப்பும் சந்தோஷமாக நகர. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க அடித்தது நிலாவின் ஃபோன். அதில் தெரிந்த நம்பரை பார்த்து நிலா முகம் மலரா ஃபோனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். சூர்யா நிலாவின் இந்த மாற்றத்தை கவனித்தவன். “என்ன இவ்ளோ சந்தோஷமா போற. யாரு ஃபோன் அது?” என்று யோசனையில் இருக்க… அவனுக்கு தெரியவில்லை அடித்தது ஃபோன் மணி அல்ல அது அரவிந்த், தேனுவின் காதலுக்கு அடித்த எச்சரிக்கை மணி என்று.

 

ஃபோன் பேசி முடித்து வந்த நிலா. “எல்லாரும் இங்க கவனிங்க” என்ற அவள் குரலில் என்றுமில்லாத உற்சாகம். அது அனைவரையும் தொற்றிக்கொள்ள, “என்ன நிலா ரொம்ப ஹாப்பி இருக்க போல? என்ன விஷயம்” என்று கலைவாணி கேட்க.

 

” எல்லாம் நல்ல விஷயம் தாம்மா. நா ஒரு குட் நியூஸ் சொல்லப்போறேன்” என்றதும் அனைவரும் நிலா என்ன சொல்ல போகிறாள் என்று காத்திருக்க. 

 

நிலா சொன்ன குட் நியூஸ் தேனு, அரவிந்த் தலையில் இடியாக இறக்க… பெரியவர்கள் முகத்தில் மகிழ்ச்சியுடன் சிறு யோசனையும் இருக்க, சூர்யா, தேவி, சந்தியாவின் நிலையை சொல்ல வார்த்தை இல்லை.. தலையே வெடித்து விடும் போல் இருந்தது மூவருக்கும்.