கண்ட நாள் முதல்

 

அத்தியாயம் 31

 

மனதில் ஏற்பட்ட வேதனை, தூக்கத்தை தூர விரட்ட. நிலா, சூர்யா இருவருக்கும் அன்றைய இரவு தூக்கமின்றி கழிந்தது. 

 

காலை கண்விழித்ததும் முதல் வேலையாக சூர்யா நிலாவை காண செல்ல. அங்கு அவள் இல்லாத அந்த காலி அறைதான் அவனை வரவேற்றது.

 

வீடு முழுவதும் தேடி நிலா வீட்டில் இல்லை என்பதை உணர்ந்தவன். “இவ்ளோ காலையில எங்க போய் இருப்ப?” என்று அவன் மூளை பலவாறு சிந்திக்க. “ஒருவேள நாம அவகிட்ட உண்மையை மறச்சதுக்கு கோவப்பட்டு என்ன விட்டு போய்ட்டாளா?” என்று மூளை யோசித்ததை முழுதாய் யோசிக்க முடியாமல் மனம் பதைபதைக்க.. அப்படியே தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

 

அழகாய் பூத்து அருமையாக வசம் வீசிக்கொண்டிருந்த இவர்கள் காதல் மலர் இன்று ஒரே நாளில் வாடி வதங்கி விட்டது. இனி அது மலருமா, மணம் கமழுமா.??

 

ஆண்டாண்டு காலம் தேடி அரும்பொருளாய் கிடைத்த என் காதலியே! எங்கே சென்றாயடி என்னை விடுத்து. சூரியன் வந்த பின் இரவு விடியும் என்றால், என் நிலவை பார்த்த பின் விடியுமாடி என் விடியல், உன் முகம் பார்க்காத இவ்விடியல் ஒளி இல்லா சூரியனாய் இருள் சேர்க்குதடி என் மனதில்

 

நிலா எங்கே, கோவத்தில் தன்னை விட்டு சென்றுவிட்டாளோ என்ற நினைப்பே சூர்யாவை வாட்ட.. அப்படியே கண்களை மூடி சோபாவில் உட்கார்ந்து விட்டான். எவ்வளவு நேரம் அப்படி இருந்தானே அவனுக்கே தெரியவில்லை. மெல்லிய கை தன் தலையை மெதுவாக வருட… ஒரு நிமிடம் உள்மனதில் உவகை பொங்க நிலா தான் வந்துவிட்டால் என்று மின்னல் வேகத்தில் நிமிர்ந்து பார்க்க, அங்கு தனம்மா நின்றிருந்தார். “என்னடா இங்க உக்காந்திருக்க? ஜாகிங் போகலயா?” என்ற தாய்க்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது. “ம்மா நிலானி.. நிலானி ரூம்ல இல்ல” என்று வார்த்தைகளை மென்று முழுங்க.

 

“ஆமாடா நிலா வீட்டுல இல்ல தான். நா தான்  நாளைக்கு உன் பிறந்த நாளுக்கு கோயில்ல அபிஷேகம் ஏற்பாடு பண்ண சொல்லி சொன்னேன். உன் கிட்ட சொல்ல வந்த, நீ தூங்கிட்டு இருந்த போல, நான் தான் நா அவன் கிட்ட சொல்லிக்குறேன். நீ கிளம்புன்னு சொன்னேன்.” என்றதும் தான் சூர்யாவிற்கு போன உயிர் திரும்பி வந்தது. “நிஜமா தான் சொல்றியாமா?” என்று கேட்ட சூர்யாவை வினோதமாக பார்த்தவர். “ம்ம்ம் இல்ல காலையில எனக்கு வேற வேலை இல்ல பாரு, அதான் உன் கிட்ட  பொய் சொல்லி விளையாடுறேன். மூஞ்ச பாரு காலங்காத்தால நிசமா பொய்யா ன்னு, கேள்வி கேட்டுட்டு… போடா போய் ரெடியாகு. நிலா கோயில்ல இருந்து கலை அண்ணி வீட்டுக்கு போய்டுவா. நம்மயும் பத்து மணிக்கு அங்க வர சொல்லி இருக்க, ஏதோ பேசணும்னு  சொன்ன?”

 

“என்ன விஷயம்மா.? எதுக்கு அங்க வர சொன்ன?” 

 

“தெரியலடா… ஏதோ முக்கியமான விஷயம்.. அங்க வாங்கன்னு சொன்னா… அவ முகமே சரியில்ல, அதான் நானும் மேற்கொண்டு ஏதும் கேக்கல” என்க.. சூர்யாவிற்கு ஒன்றும் புரியவில்ல. “எதுக்கு நிலா அங்க  வர சொன்னா.? எதுவா இருந்தாலும் இங்கயே சொல்லி இருக்கலாமே? அப்படி என்ன முக்கியமான விஷயம்?” என்று பலவாறு யோசிக்க. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்படியே சிந்தனையில் மூழ்கி இருந்த சூர்யாவை உணர்வுக்கு  கொண்டு வந்தது அவனின் ஃபோன். ஃபோனை எடுத்து பார்க்க அரவிந்த் தான் அழைத்திருந்தான். 

 

“என்ன டா அரவிந்த் காலையிலையே ஃபோன் பண்ணி இருக்க.??”

 

“டேய் தேனு ஃபோன் பண்ணி இருந்த டா. நிலா ஏதோ முக்கியமா பேசணும். பத்து மணிக்கு தேனுவா தேவியையும் என்னையும் அழச்சிட்டு, அவ வீட்டுக்கு வர சொல்லியிருக்க ஆனா, என்ன விஷயம்னு ஒன்னும் சொல்லல, உனக்கு ஏதும் தெரியுமா?” என்று கேட்க. சூர்யா மொத்தமாக குழம்பிப் போனான். “இல்லடா. எனக்கும் ஒன்னு புரியல. காலையில நா எந்திரிக்கு முன்னையே அவ கிளம்பிட்ட. அம்மா கிட்டயும் ஏதோ பேசணும் பத்து மணிக்கு வீட்டுக்கு வாங்கன்ணு சொல்லிட்டு போய்யிருக்க. எனக்கும் ஒன்னு புரியல, ஒரே குழப்பமா  இருக்கு!” 

 

“சரி விடுடா. அவ தான் வீட்டுக்கு வர சொல்லியிருக்களோ, அங்க போய் என்னன்னு தெரிஞ்சுப்போம். நீ போய் கிளம்பு, நானும் டைமுக்கு வந்துடுறேன்” என்று ஃபோனை வைத்து விட. சூர்யாவிற்கும் அரவிந்த் சொல்வது சரி என்று தோன்ற அவனும் நிலா வீட்டிற்கு செல்ல தயாரானான்.

 

இங்கு கோயிலில் அமைதியே உருவாய் அருள் பொழியும் முகத்துடன் வீற்றிருந்த அம்மனின் முகத்தில் தான் அன்னையை கண்டவள். வாய்மொழியாது, மௌனமாக தன் அன்னையிடம் சண்டை போட்டு கொண்டிருந்தாள். “ஏம்மா? ஏன்? எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை. மோசமான கடந்த காலத்தை கொடுத்து வாழ்க்கையை வெறுக்க வச்ச அதே நாள்ல, எனக்கு ஒருத்தனை காட்டி, வாழ்க்கை மேல மறுபடியும் நம்பிக்கை வர வச்ச… அப்றம் அவன்கிட்ட இருந்து என்ன பிரிச்சு வச்சு. யாருன்னு தெரியாமயே அவரையே என்னை கல்யாணம் பண்ணிக்க வச்ச. என்ன நெனச்சுமா நீ என்கிட்ட இப்படி விளையாடிட்டு இருக்க. எனக்கு ஒரே குழப்பமா இருக்குமா” என்று அம்மனிடம் பேசிக் கொண்டிருந்தவள். கண்களை மூடி ஆழ்ந்த முச்செடுத்து. “எது எப்டியோமா. நா இன்னைக்கு எல்லார் கிட்டயும் எல்லா உண்மையும் சொல்லபோறேன். இனியும் எதையும் மறைச்சு வைக்க நா விரும்பல… அதுக்கு அப்புறம் என்ன நடக்குதே அது உன் விருப்பம்னு நா நெனச்சுக்குறேன்” என்றவள் அம்மனை மனதில் நினைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

 

வீட்டிற்கு வந்த நிலாவின் முகத்தை பார்த்தே கலைக்கு ஏதோ சரியில்லை என்று பட. அவளின் அருகில் அமர்ந்து ஆறுதலாக அவள் தலையை வருட, அந்த நொடி தன் கஷ்டம் எல்லாம் சிறுபுள்ளியாய் தேய்த்து போனது போல் மனது லேசாக, நிலா அப்படியே கலையின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.

 

கலை நிலாவின் தலையை கோதி கொண்டே “என்னடா ஆச்சு.?? ஏன் ஒருமாதிரி இருக்க? ஏதும் பிரச்சனையா? என்று வாஞ்சையுடன் கேட்க. நிலா திரும்பி தாயின் முகம் பார்த்தவள். அழகாக ஒரு புன்னகை செய்து விட்டு, “உனக்கு நா எதுவும் சொல்லாட்டியும், உனக்கு எல்லாம் புரிஞ்சுடுதுதே அது எப்டிமா..??”  என்ற நிலாவின் கன்னத்தை செல்லமாக கிள்ளியவர். “நா உன் அம்மா டி. உன் முகத்தை பாத்தாலே உன்னோட மனசு எனக்கு புரிஞ்சுடும்.” என்றவரை 

நிலா தன்னை மறந்து கண்ணில் நீர்கோர்க்க பார்த்திருக்க. “ஏய் நிலா என்ன ஆச்சு உனக்கு இன்னைக்கு..? ஏன் ஒரு மாதிரி  இருக்க.?? என்ற கலையின் குரல் அவளை எழுப்ப,

 

” அதெல்லாம் ஒன்னு இல்லமா, நா நல்லா தான் இருக்கேன். ஆஆஆ அம்மா இன்னைக்கு  அத்த, மாமா, தேனு,தேவி அரவிந்த் எல்லாரையும் பத்து மணிக்கு வீட்டுக்கு வர சொல்லி இருக்கேன்” என்ற மகளை புரியாமல் பார்த்த கலை, “எதுக்குடி இப்ப எல்லாரையும் வர சொல்லி இருக்க.?? என்று புரியாமல் பார்க்க,

 

வெறுமையாக சிரித்தவள். “எல்லாருக்கும் தெரிஞ்ச கதையோட தெரியாத பக்கத்தை இன்னைக்கு படிச்சு கட்ட போறேம்மா.. கடந்த காலத்தோட எனக்கு இருந்த எல்லா தொடர்பையும் இன்னையோட முடிக்க போறேன். இன்னைக்கு எல்லாத்துக்கும் ஒரு முடிவு கிடைச்சுடும். நீங்க சீக்கிரம் சந்தியாவையும் குமாரையும் ரெடி ஆக சொல்லுங்க” என்று விட்டு தன்னறைக்கு சென்ற மகளையே  பார்த்துக் கொண்டிருந்த கலை திரும்பி பார்க்க, அங்கு குமார் நின்றிருக்க அவர் அருகில் வந்தவர். “ஏங்க அவ ஏதோ மாதிரி பேசிட்டு போற. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. எனக்கு நிலா வேணுங்க. அவளை விட்டு என்னால இருக்க முடியாது. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று புலம்ப.. குமாருக்கும் அதே நிலை தான். 

 

நேரம் பத்து மணியை தொட… தேனுவும் தேவியும் அரவிந்துடன் நிலா வீட்டிற்கு வர. அவர்கள் பின்னாலேயே சூர்யாவும் தன் தாய், தந்தையுடன் வந்துவிட்டான்..ன 

 

கலையும் குமாரும் வந்தவரை உட்கார வைத்து குடிக்க ஜூஸ் கொடுக்க.. சூர்யா கலையிடம், “நிலானி எங்கமா?” என்று கேட்க.. “அவ ரூம்ல தான் இருக்க மாப்ள. இதோ கூப்பிறேன்” என்று அவள் அறைக்கதவை தட்ட. “அம்மா ஐஞ்சு நிமிஷம்மா வந்துடுறேன்” என்று குரல் மட்டும் கொடுக்க. அது அனைவரின் காதிலும் விழுந்தது. 

 

அரவிந்த் “எதுக்கு நிலா வரசொன்ன?” என்று தீவிரமாக யோசித்தவன். சூர்யாவை பார்த்தவன, “டேய் மச்சி என்னடா மறுபடியும் அந்த செயினை கழுத்துல போட்டுக்கிட்டிய?” என்று வியப்பாக கேட்க. அறையை விட்டு வெளியே வந்த நிலா அந்த வார்த்தையில் அப்டியே நின்று அவர்களின் பேச்சை கவனித்தாள். 

 

தேனு, “ஏங்க.? ஏன் இப்டி கேக்குறீங்க.? அண்ணா செயின் போட கூடாதா என்ன.? ஏதோ உலக அதிசயம் நடந்த மாதிரி இல்ல பீல் கொடுக்குறீங்க..?” 

 

“அது அப்டி இல்லடி பிசாசு. அவனுக்கு அந்த செயின் ரொம்ப ஸ்பெஷல். கழுத்த விட்டு கழட்டவே மாட்டான். காலேஜ் படிக்கும் போது ஒரு தடவை தெரியாம என் கை பட்டு அந்த செயின் அறுந்து போச்சு. அதுக்கு விட்டான் பாரு ஒரு அற… எனக்கு தலைக்கு மேல சிட்டுக்குருவி எல்லாம் பறந்துச்சுன்னா பாரேன். அதுக்கு அப்றம் நாலு நாள் சார் என்கிட்ட பேசவே இல்ல. அந்த செயினை மறுபடியும் சரி பண்ணி கழுத்துல போட்ட அப்றம் தான். என் கிட்டயே பேசுனான். அவ்ளோ ஸ்பெஷல் அந்த செயின். ஆனா, என்ன மேட்டர்னு தெரியல கெஞ்ச நாளா அவன் கழுத்துல அந்த செயினை காணும். இப்ப மறுபடியும் போட்டு இருக்கவே தான் அப்டி கேட்டேன்” என்று தன் உறையை முடிக்க.  நிலாவுக்கு தன் தலையில் ஐஸ் மழையே பொழிவது போல் இருந்தது.

 

“சூர்யாண்ணா நிஜமா வா.. அந்த செயின் அவ்ளோ ஸ்பெஷல்ல ண்ணா?” என்று தேவி ஆர்வமாக கேட்க. சூர்யா தன் கழுத்தில் இருந்த நிலாவின் செயினை தடவியபடியே. “ஆமா தேவி.  இது நான் என் உசுருக்கு மேல நேசிக்கிற ஒருத்தியோடது. என் உயிருக்கும் மேல” என்று சொல்லி முடிக்கும் முன் அங்கு வந்திருந்தாள் நிலா. 

 

சூர்யாவையும் அவன் கழுத்தில் இருந்த தன் சங்கிலியையும் ஆசையாக பார்த்தவள் இதழில் அழகாக குறுநகை குடிகொள்ள. சூர்யா சிரிக்கும் அவள் முகத்தை தன்னை மறந்து ரசித்துக்கொண்டு இருந்தான். 

 

“ஹலோ மாம்ஸ் உங்க பொண்டாட்டியா அப்றம் சைட் அடிக்கலாம். இப்ப முதல்ல அவ எதுக்கு இப்டி அவசர மீட்டிங் கூப்பிட்டு இருக்கணுன்னு கேளுங்க. காலங்காத்தால பத்துமணிக்கே எழுப்பி விட்டு இம்ச பண்ற உங்க பொண்டாட்டி” என்று சந்தியா கத்த. அதை கேட்ட அடுத்த நிமிடம் நிலாவின் முகத்தில் இருந்த சிரிப்பு இருந்த இடம் தெரியாமல் போனது.

 

நிலா கண்களை இறுக்க மூடி கடவுளை நினைத்தவள். எல்லாம் அவன் செயல் என்று பேச தொடங்கினாள்.

 

நிலா முதலில் திரும்பி தன் அத்தையையும் மாமாவையும் பார்த்தவள். “அத்த, மாமா உங்களுக்கு என்ன பத்தி எந்த அளவுக்கு தெரியும்னு எனக்கு தெரியாது. இங்க இருக்க எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம் உங்களுக்கு தெரிஞ்சு இருக்க வாய்ப்பில்ல. சோ  இப்ப நானே அதை உங்களுக்கு சொல்லிடுறேன்” என்று ஆரம்பித்தவள். அரவிந்துக்கு தன்னை பெண் பார்த்தது முதல், அவனிடம் தன்னை பற்றி சொன்னது வரை ஒன்று விடாமல் சொல்லி முடித்தவள். தன் அத்நை தன்னை பற்றி என்ன நினைக்கிறாரோ என்று  அத்தையின் முகம் பார்க்க. மீதி பேரும் அவரையே தான் பார்த்துக் கொண்டிருக்க.  

 

தனம்மா வெகு சாதாரணமாக, “அதுக்கு இப்ப என்ன நிலா. அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில உன்னை காப்பாத்தினா பையன் மேல உனக்கு ஈர்ப்பு வந்திருக்கு. இதுல பெருசா பேச ஒன்னும் இல்லயே… இது சகஜமான விஷயம்டா” என்று சொல்ல… அந்த நொடி நிலாவின் மனதில் மட்டுமல்ல அங்கிருந்த அனைவரின் மனதிலும் உயர்ந்து நின்றார் தனம்.

 

நிலாவுக்கு சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை, கண்களால் அவருக்கு நன்றி சொன்னவள். இப்ப நான் சொன்னது என்னோட பாதி கதை தான் அத்த.. உங்க எல்லார் கிட்டயும் அன்னைக்கு என்ன மூனுபேர் கடத்திட்டு போனாங்கன்னு நா சொன்னது பொய். என்ன அவங்க கடத்தல” என்று குண்டை தூக்கி போட. இது சூர்யா ஏற்கனவே யூகித்த விஷயம் என்பதால் அவனுக்குள் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், மற்றவர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியை தந்தது. ஆனால், அடுத்து நிலா சொல்ல போகும் செய்தியில் இடியே விழப்போகிறது என்று யாரும் அறியவில்லை.

 

“நிலா என்ன சொல்ற நீ. உன்னை கடத்திட்டு போகலன்னா, அப்ப அங்க நீ” என்று கேட்க வந்ததை முழுதாக கேட்க முடியாமல் கலைக்கு தொண்டையை அடைக்க…

 

“ஆமாம்மா. என்ன அவனுங்க கடத்தல. என்னை ஒருத்தன் பணத்துக்காக அவனுங்க கிட்ட விலைபேசி வித்துட்டான்” என்றவள் கண்களில் அத்தனை கொலைவெறியு அனல் தெறிக்க வந்தது விழுந்து நிலாவின் வார்த்தையிலும் அவள் நின்ற கோலத்தையும் பார்த்து ஒரு நிமிடம் அனைவருமே பயந்து தான் போயினார். 

 

நிலாவின் வார்த்தைகளை கேட்ட சூர்யாவுக்கு உள்ளே எரிமலை வெடித்து சிதறியது. “யாரு நிலானி அது? யாரு அந்த ராஸ்கல் சொல்லு… யாருடி அது?” என்று அவள் தோள்களை பற்றி உலுக்க…

 

அவனை நிமிர்ந்து வறண்ட பார்வை பார்த்த நிலா, “எங்கம்மா புருஷன், என்னை பெத்த அப்பன்” என்ற நிலாவின் வார்த்தையில் சூர்யா விரிந்த கண்கள் விரித்த படி அப்படியே சிலையாக நிற்க. மற்ற அனைவருக்கும் தலையில் இடி இறங்கியது போல் ஒரு உணர்வு என்றால், ராம்குமாருக்கும் கலைக்கு உலகமே ஒரு நிமிடம் நின்றது போல் ஆகிவிட்டது.

 

நிலா திரும்பி ராம்குமாரையும் கலையையும் பார்த்தவள். தன் கடந்தகால கசப்பை உமிழ ஆரம்பித்தாள். 

 

“என்னை பெத்த அம்மா பேரு அமிர்தா. வசதியான குடும்பத்துக்கு ஒரே பொண்ணு. நல்ல குடும்பம், படிப்பு, சந்தோஷம்னு நல்லா போய்கிட்டிருந்த அவங்க வாழ்க்கையில கிரகணம் மாதிரி வந்தான் ஒருத்தன். காதல் அது இதுன்னு பேசி எங்கம்மா மனசை மாத்தினான். அவனோட நடிப்பை உண்மைனு நம்பி அம்மாவும் வீட்ட எதிர்த்து அவனை கல்யாணம் பண்ணாங்க. ம்ம்ம்… காதலிக்கும்போது நம்ம நேசிக்கற ஆளு நம்ம காதலுக்கும் நேசத்துக்கும் தகுதியானவன் தானான்னு ஒரு நிமிஷம் எங்கம்மா யோச்சிருந்த அந்த பொறுக்கி ராஸ்கல கல்யாணம் செஞ்சிருக்க மாட்டாங்க. ப்ச்… விதி யாரா விட்டுது‌. அந்த பொறம்போக்கை நம்பி வந்துட்டாங்க. கல்யாணம் ஆன கொஞ்ச நாள் கழிச்சு நானும் பொறந்தேன்.  அம்மாவோட அப்பாவும் பேத்தி பிறந்த சந்தோஷத்தில் அம்மாவை மன்னிச்சு ஏத்துக்கிட்டாங்க. அவரோட மொத்த 

சொத்தையும் அம்மா பேர்ல எழுதி வச்சாரு. எங்களோட வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா தான் பேச்சு, கொஞ்ச நாள்ல தாத்தா இறந்துட்டாரு. அவர் இறந்த பிறகு தான் அந்த ராஸ்கல்… என் அப்பானோட சுயரூபம் தெரிய ஆரம்பிச்சது. அவனுக்கு வேலைவெட்டி இல்ல. இதுல குடி, ரேஸ், பொம்பளைங்க னு அவனுக்கு இல்லாத கெட்ட பழக்கமே இல்ல. குடிச்சே மொத்த சொத்தையும் கொஞ்ச நாளில் அழிச்சிட்டான். அம்மாவும் அந்த ஆளை திருத்த எவ்ளவோ முயற்சி பண்ணாங்க. ஆனா, முடியல. மனுஷனை திருத்தலாம். ஆனா தெரு நாயா எப்டி திருத்துறது.” என்று தன்‌ தாயை எண்ணி விரக்தியாக சிரித்தவள்.  “கொஞ்ச நாள் கழிச்சு தான் அம்மாவுக்கு தெரிஞ்சது. அவங்க சொத்துக்கும் பணத்துக்கு ஆசைப்பட்டு தான் அந்த பொறுக்கி காதலிக்கிற மாதிரி நடிச்சு தன்னை  ஏமாத்தி இருக்கன்னு. அது தெரிஞ்ச பிறகு அம்மா ரொம்ப உடைஞ்சு போய்ட்டாங்க. அதுக்கு பிறகு அந்த ஆளு எங்கம்மாவை ரொம்ப கொடுமை படுத்தினான். எனக்காக அம்மா எல்லாத்தையும் தாங்கிகிட்டாங்க. ஒரு டைம்ல சாப்பாட்டுக்கே வழியில்லாம போக அம்மா வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க.. அந்த நிலையிலையும் என்ன கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க. அப்டி இப்டின்னு நானும் +2 வரைக்கும் வந்துட்டேன். அப்பதான் ஒரு நாள் அந்த ராஸ்கல் நல்லவன் மாதிரி அம்மாகிட்ட வந்து, என்ன மன்னிச்சுடு, நா பண்ணது தப்பு தான். எனக்கு திருந்தி வாழ ஒரே ஒரு வாய்ப்பு கொடு அமிர்தா ன்னு கண்ணீர் விட்டு கொஞ்சுனான். அம்மா அவனை நம்பவே இல்ல. ஆனா, அந்த ஆள் கத்தியை எடுத்து கையை அறுத்துக்கிட்டு இப்பவாது என்ன நம்பு அமிர்தா. இனி நீயும், நிலாவும் தான் என் உலகம்னு அவன் நடத்துன நாடகத்துல அம்மா அவனை நம்பி அவனை மன்னிச்சு பெரிய தப்பு பண்ணிட்டாங்க. கொஞ்ச நாள் நல்லவன் மாதிரி என்னையும் அம்மாவையும் நல்ல பாத்துக்கிட்டான். நானும் +2 பரிட்சை முடிச்சு காலேஜில் சேர காத்துட்டு இருந்தேன். அப்ப தான் ஒரு நாள் அந்த ஆளு அம்மாகிட்ட ஊட்டில ஒரு பெரிய பணக்காரர் கிட்ட என்னோட படிப்புக்கு உதவி கேட்டு இருக்கிறதாகவும், அதனால என்னை அவன் கூட அனுப்ப சொல்லியும் சொன்னான். அம்மாவும் அவனை நம்பி என்ன அவன் கூட அனுப்பி வச்சாங்க. அந்த நாள்… அந்த நாள் தான் என் வாழ்க்கையையே புரட்டி போட்ட நாள்… அந்த ராஸ்கல் என்ன ஊட்டிக்கு கூட்டிப்போனான். அங்க ஒரு பழைய வீட்டுக்கு போனோம். வீட்டு ஹால்ல என்னை வெய்ட் பண்ண சொல்லிட்டு, அவன் மட்டும் மேல போனான். கொஞ்ச நேரம் கழிச்சு அந்த ஆளும் அவன் கூட இன்னொருத்தனும் வந்தங்க. வந்தவன் என்னங ஒரு மாதிரி பாக்க எனக்கு அவனை சுத்தாம புடிக்கல… மெதுவா அந்த ராஸ்கல்  கிட்ட போய் ‘அப்பா எனக்கு இந்த ஆள் பார்வையே பிடிக்கல… இந்த ஆள் உதவியே நமக்கு வேண்டாம் வாங்க இங்கிருந்து போயிடலாம்னு சொன்னேன்.’ ஆனா, அதுக்கு அவன், “அது என்னால முடியாது நிலா. உன்மேல இனி எனக்கு எந்த உரிமையும் இல்ல. ஏன்னா நான் ரெண்டு லட்சம் பணத்துக்கு உன்னை அவருக்கு வித்துட்டேன்னு சொன்னான். அந்த நிமிஷம் எனக்கு உலகமே ரெண்ட பிளந்தத மாதிரி இருந்துச்சு… 

 

“அப்ப…” 

 

“அப்பா…???”

 

“நீங்க என்ன சொல்றீங்க.. சும்மா பொய்தானே சொல்றீங்க?” என்று தன் காதில் கேட்ட வார்த்தைகள் பொய்யாக இருக்க கூடாதா என்ற நம்பிக்கையில் தட்டுத்தடுமாறி கேட்க…

 

“இல்ல நிலா. நான் உண்மையா தான் சொல்றேன். உன்னை இங்க கூட்டி வர தான் நல்லவன் மாதிரி நடிச்சு உங்கம்மாவ நம்பவச்சேன். இருந்தாலும் அவ என்ன நம்பி உன்னை அனுப்பி வைக்க மாட்டானு தெரிஞ்சு தான், படிப்புன்னு ஒரு பிட்டு போட்டேன். உங்கம்மாவும் உடனே நம்பிட்ட” என்று பலமாக சிரிக்க.. நிலா மொத்தமாக யோசிக்கும் சக்தியை இழந்து இருந்தாள்.

 

எந்த பெண்ணிற்கு வரக்கூடாத ஒரு கேவலமான நிலையில் இருந்தாள் நிலா.  தன்னை பெற்றவனே தன் பெண்மையை விலைபேசி விட்டானே என்று நினைக்கையில் அவளுக்கு உடல் எல்லாம் பற்றி எரிந்தது.

 

“டேய் நீயெல்லாம் ஒரு அப்பனா டா. மத்த பெண்களை தப்பாக பாக்குறவன் கூட, நம் வீட்டிலும் பொம்பள புள்ள இருக்கே, நாளை இதே மாதிரி ஒருத்தன் அதுங்களை தப்ப பாக்கும்போது நமக்கும் எப்டி இருக்கும்னு நெனச்சு திருந்தி நடக்குறனுங்கடா. அப்டி இருக்கு இப்டி பெத்த மகளை காசுக்கு வித்திருக்கீயே… நீயெல்லாம் என்ன ஜென்மம்டா. ச்சீ உன்னை எல்லா ஆம்பளன்னு சொல்லக்கூடாது. அது ஆம்பள வர்க்கத்துக்கே அசிங்கம்டா. நீ நல்லா புருஷனும் இல்ல, நல்லா அப்பனும் இல்ல. ஒரு நல்லா ஆம்பளையும் இல்லடா…” என்று கத்தியபடியே, எப்படியும் தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற  கையில் கிடைத்த பொருட்களை கொண்டு அங்கிருந்தவர்களை அடிக்க ஆரம்பிக்க. அப்போது அவள் அப்பா நிலாவின் முகத்தில் ஏதோ துணியை வைத்து அழுத்த நிலா மயங்கி சரிந்தாள். மயங்கியவளை ஒரு இருட்டறையில் அடைத்து வைக்க சொல்லி ஒருவன் சொல்ல. நிலாவின் அப்பா பணத்தை வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.

 

தன்னை அடைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து நிலா தப்பித்தது. சூர்யா அவளை காப்பாற்றியது எல்லாம் நமக்கு ஏற்கனவே தெரியும். சோ நம்ம இப்ப நிலாவை தேனியில் சூர்யா விட்டு சென்ற பிறகு என்ன ஆச்சுன்னு பாப்போம்.

 

சூர்யாவை விட்டு வந்த நிலா தன் வீட்டிற்கு செல்ல.. அவள் இருந்த கோலத்தை கண்ட அமிர்தா ஒரு நிமிடம் பதறி விட்டார். “நிலானி..?? நிலானிமா.?? என்ன ஆச்சுடா உனக்கு? ஏன் இந்த கோலத்துல இருக்க. என்னடி ஆச்சு” என்று சத்தம் கதற.. நிலா ஓடி சென்று தன் தாயை கட்டிப்பிடித்து கதறி அழுதவள். நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ஒரே மூச்சில் சொல்லிமுடிக்க. அமிர்தா தன் உயிர் உடல் விட்டு போனது போல் எங்கேயோ வெறித்து பார்த்தபடி அமர்ந்துவிட்டார். நிலா தாயின் மடியில் தலை வைத்து படுத்தவள் அழுதுகொண்டே இருக்க. அமிர்தா ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தார். தான் செய்த தவறு தன் மகளின் வாழ்க்கையையே அழிக்க பார்த்ததே என்ற குற்றவுணர்வு அவரை கொல்லாமல் கொல்ல நினைவிழந்து கிடந்தார். ஃபோனின் மணி ஓசை ஒலித்து அவர் யோசனையை கலைக்க. அதை எடுத்து காதில் வைக்க. அந்த பக்கத்தில் பேசியவர், “இங்க நடந்த ஒரு ஆக்சிடென்ட்ல ஒரு ஆள் செத்து போய்ட்டாரு. அவர் சட்டை பையில் பேப்பரில அமிர்தான்னு பேரும் இந்த ஃபோன் நம்பரும் இருந்துது. ஆள் அடையாளம் எதுவும் தெரியல. ஒரு‌ நப்பது வயசு இருக்கும். கொஞ்சம் குள்ளமான் ஆளு. உங்களுக்கு தெரிஞ்ச ஆளா? அங்க அமிர்தான்னு யாரும் இருக்காங்களா? என்று கேட்க.. செத்தது யார் என்று அமிர்தாவுக்கு நன்கு புரிந்தது. “அப்டி யாரும் இங்கு இல்லை என்று  ஃபோனை வைத்தவர். நிலா அருகில் வந்து, “நிலானி எழுந்லு கிளம்பு” என்று சொல்ல. நிலா தாயை புரியாமல் பார்க்க… உள்ளே சென்று நிலாவின் துணிமணி, படிப்பு சான்றிதழ், வீட்டில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்துக்கொண்ட அமிர்தா, நிலாவுடன் சென்னைக்கு வந்தவர் நேராக சென்ற இடம். தன் உயிர் தோழி கலைவாணியின் வீடு தான். கலையிடம் நடந்த எதையும் சொல்லாமல், நிலாவின் தந்தை இறந்ததை மட்டும் சொல்லி விட்டு. நிலாவை ராம்குமார் மற்றும் கலையின் கையில் ஒப்படைத்தவர். “இனி இவ உங்க பொறுப்பு” என்று சொல்லி முடிக்கும் முன்பே அந்த தாயின் உயிர்  உடலை விட்டு பிரிந்து இருந்தது. 

 

நிலா அனைத்தையும் சொல்லி முடிக்க, அங்கு மயான அமைதி. யாரும் எதுவும் பேசும் மனநிலையில் இல்லை. இருந்த இடத்தில் அனைவரும் கல்லாக சமைத்திருக்க. அனைவரின் கண்கள் மட்டும் நிலாவை எண்ணி கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது.

 

நிலாவின் கடந்த காலத்தையும் அவள் கடந்து வந்த காயத்தையும் நினைத்து யாரும் எதும் பேசு மனநிலையில் இல்லை. ஆறுதல் சொல்ல கூட முடியாமல் அனைவரும் அமர்ந்திருக்க. சூர்யாவோ தன்னவள் கடந்து வந்த கஷ்டங்களை நினைத்து ரத்தகண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.

 

ராம்குமாரும் கலையும் இத்தனை காலம் தன் மகள் இவ்வளவு துயரத்தையும் தன் மனதிற்குள் வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டதை நினைத்து பார்க்கவே இதயம் வலித்தது.

 

தேவி, தேனு தலையில் இடிவிழுந்த உணர்வில் உறைந்து விட்டேன். சந்தியாவின் கலங்கிய  கண்களுடன்‌ தான் அக்காவையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

அனைவரின் நிலையை பார்த்த நிலாவிற்கு கூட மனம் கனத்து போனது. மெல்ல ராம்குமார் உட்கார்ந்திருந்த சேரின் முன் முட்டிபோட்டு தரையில் அமர்ந்து அவர் முகத்தை பார்த்தவள். “உனக்கு ஞாபகம் இருக்க குமார். அம்மா எத்தனையோ தடவ உன்னை அப்பானு கூப்ட சொல்லி இருக்காங்க. ஏன் அடிச்சு கூட இருக்காங்க. ஆனா, ஒருதடவ கூட நா உன்னை அப்டி கூப்டாது இல்ல. நீங்க கூட ஒருதடவ சொன்னீங்க. உன்னை அம்மாவா ஏத்துக்கிட்ட அவளால என்ன அப்பாவா ஏத்துக்க முடியல போல. அவள மனசு மாறி எப்ப என்னை அப்பான்னு கூப்பிட நினைக்கிறாளோ அப்ப கூப்பிடட்டும்… உண்மையை சொல்லனும்னா.. இந்த உலகத்துல கலைய விட எனக்கு புடிச்சது  நீங்க தான். ஆனா, என் பெத்த அந்த பொறுக்கியை அப்பா கூப்பிட்ட வாயல, உன்னையும் அப்பான்னு சொல்லி உன்னை நான் அவமானப்படுத்த விரும்பல”   என்றவள் அதற்கு மேல் பேச முடியாது அவர் தொடைகளில் முகத்தை புதைத்து கத்தி அழுக ஆரம்பிக்க. அவள் அழுவதை தாங்க முடியாது அவளை சமாதானம் செய்ய வந்த கலையை தடுப்பதுபோல் கைகளை காட்டி சூர்யா. “அவ அழுகட்டும் ம்மா. பல வருஷமா மனசுல அடக்கி வைச்சிருந்த கண்ணீர் இன்னைக்கு வெளிய வருது. வரட்டும் முழுசாக அவ மனசுல இருக்க மொத்த கவலையையும் வெளிய வரட்டும்.. இன்னையோட அவளுக்கு கடந்தகாலத்தோட இருந்த எல்ல தொடர்பும் முடியட்டும். அவளா அழ விடுங்க” என்க கலை அமைதியாகி விட்டார். 

 

தன்மடியில் முகம்புதைத்து அழுதுகொண்டு இருந்த, தன் மகளின் தலையை வாஞ்சையோடு தடவிக்கொடுத்தவர். “நிலாம்மா” என்று மெல்லிய குரலில் அழைக்க.. நிலா தலைநிமிர்ந்து தன் தந்தையின் முகம் பார்த்தவள். அவர் கண்களில் தெரிந்த வேதனையும், அதில் இருந்த கேள்வியும் புரிந்தது. ஆனால், அதற்கு பதில் தான் அவளிடம் இல்லையே… வரண்ட குரலில் நிலாவின் “குமார்… நா…” என்று அவள் தடுமாற,

 

அவள் கண்களை துடைத்த ராம்குமார். “நிலாம்மா இந்த உலகத்தில் உனக்கு அப்பான்னா அது நான் மட்டும் தான்டா.அந்த உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு. அத நான் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்… அந்த பொறுக்கி வேணும்னா உன்னை பெத்திருக்கலாம். ஆனா, அவனுக்கு உனக்கு அப்பாவ இருக்க தகுதியில்ல. என் நிலாக்கு அப்பான்னா அது நான் மட்டும் தான். நீ எம் பொண்ணு எனக்கு மட்டும்தான் சொந்தம். இனி உனக்கு அப்பான்னா என் ஞாபகம் மட்டும்தான் வரணும்” என்று அழுத்தமாக அதேசமயம் உறுதியோடு சொல்ல… அதான் அர்த்தம் புரிந்தவள். ராம்குமாரையே உற்று பார்த்தவள். அடுத்த நொடி அவரை இறுக்கி அணைத்து “அப்பா… அப்பா” என்று சத்தம் போட்டு கத்தி அழு… ராம்குமாருக்கு ஒரு நிமிடம் உலகமே தன் கையில் கிடைத்த மகிழ்ச்சி. சந்தியா பிறந்த அன்று முதல் முதலில் அவளை தன் கையில் ஏந்திய போது அவர் எவ்வளவு சந்தோஷப்பட்டாரோ அதைவிட அதிகமாக இன்று சந்தோஷப்பட்டார். அவர்களின் அந்த சந்தோஷம் அனைவரின் நெஞ்சிலும் நிறைய. சந்தியா ஓடி வந்து அக்காவையும் தந்தையும் சேர்த்தணைத்து கொள்ள, கலையின் கண்களில் ஆனந்தக்கண்ணீர்.