கண்ட நாள் முதல்

Final episode

 

ஒருவழியாக அனைத்து பிரச்சனைகளும் முடிந்து அனைவர் மனதில் நிம்மதி குடி கொள்ள. இது இப்படியே தொடர வேண்டும் என்று  இறைவனை வேண்டிக் கொண்டனார். 

 

நிலா கண்களை துடைத்து எழுந்தவள். அனைவரையும் பார்த்து,  இவ்ளோ நாள் இந்த உண்மையை உங்ககிட்ட சொல்லாமல் இருந்ததுக்கு என்ன எல்லாரும் மன்னிச்சிடுங்க” என்று கைகூப்பி கேட்க…

 

தனம்மா அவளருகில் வந்த நிலாவின் தலையை கோதிவிட்டவர், “நிலா… நீ இன்னையோட  பழசெல்லாத்தையும் மறந்துடு. இனி நீ அண்ணா, அண்ணிக்கு மட்டும் இல்ல எனக்கும் உன் மாமாவுக்கும் கூட இனி நீதான் மக. நாங்க நாளு பேரும் தான் உனக்கு அம்மா, அப்பா. சோ இனி நீ அழவே கூடாது ஓகே” என்று அவள் கண்ணீரை துடைக்க நிலா தனத்தை இறுக்கி அணைத்துக் கொண்டாள். 

 

பின் நிலா அரவிந்த் அருகில் வந்தவள். “ஹலோ மரவேதாளம் உன் மேல செம்ம காண்டுல தான் இருந்தேன். ஆனா, தெரிஞ்சோ தெரியமயோ நீ எனக்கு நல்லது தான் செஞ்சு இருக்க. அதனால உன்னை சும்மா விடுறேன். ஆஹான் அப்றம்  சூர்யா கிட்ட  உங்களுக்கு நான்  ஃப்ரண்டா  இருந்த போதுன்னு சொன்னீயாமே உண்மையா?” என்று கேட்க..?? அரவிந்த் “ஆமாம்” என்று தலையாட்ட.

 

“சாரி அரவிந்த் என்னால உன்னை ஃப்ரண்டா எல்லாம் ஏத்துக்க முடியாது” என்று சொல்ல, அரவிந்த் முகம் வாடிவிட்டது. அவனை பார்த்த சின்னதாக சிரித்தவள், “நீங்க எனக்கு அண்ணா இருக்கணும்னு நா ஆசைப்படுறேன். உங்களுக்கு ஓகே வா? இந்த பிசாச தங்கச்சியா ஏத்துக்க?” என்று தலையை சாய்த்து  அவன் முகம் பார்த்து குழந்தை போல் கேட்க.

 

அரவிந்த் சந்தோஷத்தில் உடனே “ஓகே என்று வேக வேகமாக மண்டையை மேலும் கீழும் ஆட்ட… நிலா அவன் தோளில் சாய்ந்தவள். “தேங்க்ஸ் ண்ணா, ரொம்ப தாங்ஸ்… நீங்க இல்லாட்டி சூர்யா எனக்கு கெடச்சிருக்க மாட்டாரு” என்று உணர்ச்சி மிகுதியில் நிலா கண்கலங்க. அவளின் கண்களை துடைத்த அரவிந்த், “நிலா என்ன இது.?? என் தங்கச்சியா இருந்துட்டு இப்படி எல்லாம் அழக்கூடாது. நம்ம தான் மத்தவங்களை அழ வைக்கணும். என்னோட செல்ல பிசாசு எப்பவும் சிரிச்சுட்டு தான் இருக்கணும்” என்று சொல்ல…

 

 “இது அநியாயம், அக்கிரமம், இதெல்லாம் நா ஒத்துக்கவே மாட்டேன்” என்று சூர்யா திடீரென கத்த, அனைவரும் அவனை புரியாமல் பார்த்தனர்.

 

தனம்மா, “டேய் என்னடா ஆச்சு?? ஏன் திடீர்னு கத்துற.?? அப்டி என்ன அநியாயம் நடந்துது இப்ப.??”

 

“பின்ன என்னம்மா.. எல்லாரும் நிலாவை என் பொண்ணு? என் தங்கச்சின்னு கொஞ்சுட்டு இருந்த… அப்றம் நான் எங்க போறதாம்.  நான் யாரை கொஞ்சுறது இல்ல என்னதான் யாரு கொஞ்சுறது?” என்று படு சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல. அனைவரும் சிரித்துவிட. நிலா கூட தன்னை மறந்து சிரித்துவிட்டாள்.

 

அரவிந்த் அவன் அருகில் வந்தவன். சூர்யா தலையில் நங்கு என்று ஒரு கொட்டு கொட்டி, “பொறாமை புடிச்சவனே..  ஏன்டா எங்கள பாத்து கண்ணு வைக்கிற. உனக்கு வேணுன்னு  தங்கச்சி கிட்ட சொல்லி வருஷத்துக்கு ஒன்னுன்னு பெத்துக்கிட்டு உன் குழந்தைகளை கொஞ்சிக்கே, யாரு வேணாம்னு சொன்னாங்க” என்று சொல்ல.

 

சூர்யா உடனே “வாவ் வாட் ஏ ஒன்டர்புல் ஐடியா மச்சி. உன் வாழ்க்கையில நீ சொன்ன ஒரே உருப்படியான ஐடியா இதுதான் டா” என்றவன் நிலாவை பார்த்து கண்ணடிக்க, நிலாவுக்கு வெட்கத்தில் கன்னம் சிவந்து விட… அங்கே மீண்டும் சிரிப்பலை பரவியது. 

 

“ஆமா சூர்யாண்ணா. அடிக்கடி என் ஆளுக்கு கூட மேல்மடி வேலைசெய்யுது” என்று தேனு அவள் பங்கிற்கு ஒரு பந்தை போட, “ஆமாடி ஆமா…! உன்னை லவ் பண்றதுக்கு முந்தி எங்க அண்ணாக்கு மேல்மடி  சூப்பரா வேலை செஞ்சுது. என்னைக்கு உன்னை லவ் பண்ண  ஆரம்பிச்சாரரோ,  அப்றம் தான் இப்டி ஆகிட்டாரு” என்று தேவி அரவிந்துக்கு சப்போட்டா பழமாக இருக்க.

 

“அப்டி சொல்லுடா தேவிமா” என்று அரவிந்த், தேவி hi-fi அடித்துக்கொள்ள. “அடியேய் உன்னை???” என்று தேவியும் தேனும் சண்டையில் இறங்க. 

 

நிலாவுக்கு நன்றாக புரிந்தது, தன்னை சிரிக்க வைக்க தான் சூர்யாவும், மற்றவரும் இப்படி பேசுகிறார்கள் என்று. தன் மனநிலையை மற்ற கோமாளி வேஷம் போடும். தன் உறவுகளையும் தோழிகளையும் பார்த்து நிலா கண்கலங்க நிறக…

 

தேனு நிலா அருகில் வந்து, “நிலா உன்னை அடச்சு வச்ச அந்த மூனு பேரையும் சும்மா விடக்கூடாதுடி. நீ நம்ம யுக்தாக்கு ஃபோன் பண்ணி அவனுங்களை புடிக்க சொல்லு. அவனுங்களுக்கு சரியான தண்டனை கிடச்சே ஆகணும்” என்று கோபமாக சொல்ல.

 

“அதுக்கு எந்த அவசியமும் இல்ல தேனு. அந்த மூனு பேரும் இப்ப ஜெயில்ல தான் இருக்காங்க” என்ற நிலா சூர்யாவை பார்க்க.

 

 சூர்யா, “இவளுக்கு எப்டி இது தெரிஞ்சுது” என்று நிலாவை பார்க்க.. 

 

நடந்தது என்னென்ன… நிலா  மயக்க போட்டு விழுந்த அன்னைக்கே சூர்யாவுக்கு டவுட் வந்து அந்த மால்ல இருந்த சிசிடிவி புட்டேஜ் செக் பண்ணி பாக்க.ன. அப்பவே அந்த மூனு பேரும் யாருன்னு கண்டுபுடிச்சு, போலீஸ் கமிஷனர் கிட்ட அந்த புட்டேஜ் வீடியோவை காட்டி. கமிஷனர் உதவியோட, மறுநாளே அந்த மூனு பேரை போலிஸ் பிடிச்சிட்டாங்க. அவர்கள் பெண்களை கடத்தி வித்தது மட்டும் இல்ல இன்னும் அதைவிட பெரிய குற்றங்கள் எல்லாம் செய்தது தெரிய நல்லா வசமாக மாட்டிக்கிட்டாங்க. நிலா அன்னைக்கு யுக்தாக்கு ஃபோன் செய்தபோது யுக்தா நடந்ததை சொல்லி, இதையெல்லாம் செஞ்சது உன் புருஷன் தான்னு  சொல்ல, நிலாவுக்கு அவ்ளோ சந்தோஷம். அந்த சந்தோஷத்துல தான் சூர்யாவுக்கு அந்த மூனு பேரையும் எப்டி அடையாளம் தெரிஞ்சுதுன்னு  யோசிக்க மறந்துட்டா… அந்த செயினை பார்த்த பிறகு தான் நிலாவுக்கு யுக்தா சொன்னது புரிஞ்சுது. அவ்ளோதான் நடந்தது…

 

நிலா நடந்ததை சொல்ல.. அனைவரும் சூர்யாவை அனைத்துக் கொண்டனார். தேவியும் தேனுவும் “சூப்பர் அண்ணா கலக்கிட்டிங்க” என்று கை குலுக்க. அரவிந்துக்கு இது ஏற்கனவே தெரியும் என்பதால் அவன் அமைதியாக இருந்தான்.

 

ராம்குமாரும் கலையும் கண்களால் அவனுக்கு நன்றி சொல்ல.. சூர்யாவின் அப்பாவும், அம்மாவும் தன் மகனை நினைத்து பெருமையாக இருந்தது. 

 

சந்தியா மட்டும் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருக்க, அர்விந்த் அவளை கவனித்து விட்டு “ஏய் சந்தியா என்ன ஆச்சு.? என்னத்தை இப்டி தீவிரமா யோச்சிட்டு இருக்க நீ.??”

 

“இல்ல மாம்ஸ்… சூர்யா மாமா செஞ்சது எல்லாம் சூப்பர் தான், ஓகே. ஆனா, நிலாவை அடச்சு வச்சிருந்தது. அந்த மூனு பேர்தான்னு மாமாக்கு எப்டி அடையாளம் தெரிஞ்சுது..?? என்று கேட்க. நிலா சூர்யாவையே பார்க்க, அப்போது தான் அனைவருக்கும் அந்த சந்தேகம் வந்தது. 

 

“ஆமாம் ல்லா… டேய் சூர்யா உனக்கு எப்டிடா அது அவனுங்க தான்னு கரெக்டா தெரிஞ்சது” என்று கேட்க.. 

 

“அடிப்பாவி குட்டி பிசாசே. யாருக்காச்சும் இந்த டவுட் வந்துதா இவளுக்கு மட்டும் ஏன் தான் இந்த மாதிரி எல்லாம் யோசிக்க தோனுதே தெரியலயே” என்று உள்ளுக்கு சந்தியாவை வறுத்தெடுத்த சூர்யா என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திரு திருவென்று முழிக்க, நிலா அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். 

 

“மாமா சொல்லுங்க மாமா… உங்களுக்கு அவங்களை எப்டி தெரியும். அந்த மூனுபேரையும் நிலாக்கும் அன்னைக்கு நிலாவை காப்பாத்தின அந்த ஆளுக்கும் மட்டும் தான் தெரியும். அப்படி இருக்க உங்களுக்கு” என்று ஆரம்பித்தவள் திடீரென ஏதோ புரிய. திரும்பி நிலாவை பார்க்க, அவள் முகத்தில் என்ன தெரிந்ததோ… சூர்யாவை விழி விரிய பார்த்தவள் ‘மாமா அப்போ அது…? நீ…? நீங்க தானா? 

அன்னைக்கு நிலாவ, நீங்க தான் காப்பாத்துனீங்களா?” என்று அதிர்ச்சி குறையாத குரலில் கேட்க.. அனைவரின் பார்வையும் சூர்யா மேல் தான் இருந்தது. 

 

சூர்யா சந்தியா சொன்னது உண்மை தான் என்பதை ஆமோதிக்கும் வகையில் “ஆமாம்” என்று தலையாட்ட…  அனைவருக்கும் செம்ம ஷாக்.

 

 “அடப்பாவிகளா ஒரு நாள்ல எத்தனை ஷாக் தான்டா கூடுப்பிங்க. முடியலடா சாமி” என்று அரவிந்த் நெஞ்சில் கை வைத்தவன், “ஏன்டா இத முன்னாடியே  சொல்லல?” என்று அரவிந்த் சூர்யாவை முறைக்க.

 

நிலாவிடம் நேற்று சொன்ன அதே காரணத்தை சூர்யா அனைவரிடமும் சொல்லி முடிக்கும் முன். சூர்யாவை ரவுண்டு கட்டியிருந்தனர் அரவிந்த், சந்தியா, தேனு, தேவி, ஐஞ்சு நிமிஷம் விடாது நாளு பேரும் மூச்சு திணற திணற சூர்யாவிடம் காட்டுகாட்டென்று தங்களின் கைவரிசையை காட்ட. 

 

“அடியேய் நிலானி இங்க உன் புருஷன் அடி வாங்கிட்டிருக்கேன். நீ என்னடானா புது படம் பாக்குற மாதிரி என்ஜாய் பண்ணி பாத்துட்டு இருக்க.. வாடி வந்து காப்பாத்துடி” என்று கெஞ்ச. நிலா உதட்டை பிதுக்கி காட்டிவிட்டு முகத்தை திரும்பிக்கொண்டாள். 

 

“அம்மா… என்ன பெத்த தெய்வமே நீயாது வந்து காப்பாத்து” என்று தனம்மாவை கூப்பிட. “ம்ம்ம் போடா டேய்… போடா… என் கிட்ட கூட நீ உண்மையை சொல்லல இல்ல, நல்லா வாங்கு” என்று முறுக்கிக்கொள்ள. கடைசியில் 

கலையம்மா வந்து சூர்யாவை அந்த வானரங்களிடம் இருந்து காப்பாத்த. சூர்யா கோவமாக தனம்மாவிடம் வந்தவன். “பெத்த தாயா நீ?? தாயா நீ?? இல்ல பெத்த பேயீ” என்று கண்களை கசக்க. அங்கு சிரிப்புக்கு பஞ்சம் இல்லாது போனது. என்ன தான் அனைவரும் சிரித்து பேசினாலும் நிலாவின் மனதில் இருக்கும் வலியும் வேதனையும் அனைவருக்கும் நன்கு புரிந்தது. அதனால் முடிந்த வரை அவள் மனதை மற்ற அனைவரும் முயன்றனர். அது ஓரளவு வெற்றியும் பெற்றது. 

 

இரவு வந்து விட எல்லா பிரச்சனைகளும், எல்லா ரகசியங்களும் வெளிவந்து ஒரு முடிவு கிடைத்த நிம்மதியுடன் அனைவரும் அங்கிருந்து கிளம்ப…

 

சூர்யாவும் நிலாவையும், தன் அம்மா, அப்பாவையும் அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர… அங்கு தனம்மா இருவரையும் வாசலில் நிற்க வைத்து சுத்தி போட்டவர். “இனி உங்க ரெண்டு பேருக்கும் எந்த குறையும் வராது. நல்லா இருப்பீங்க” என்றவர் சூர்யாவை நிலாவை அழைத்துக்கொண்டு போக சொல்லிவிட்டு.  இனி அவர்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று கடவுளை நினைத்தபடியே உறங்க சென்றார். 

 

இங்கு நிலா கட்டிலில் அமைதியாக அமர்ந்திருக்க. அவள் அருகில் சென்று தரையில் அமர்ந்து அவள் கைகளை பிடித்தவன். “சாரிடி. ரொம்ப சாரி… நான் உன்கிட்ட உண்மையை

மறச்சது எவ்ளோ பெரிய தப்புன்னு எனக்கு இன்னைக்கு தான்டி புரிஞ்சுது. ஏற்கனவே காயப்பட்டிருக்க உன்னை நானும் காயப்படுத்திட்டேன். சாரிடி, சாரி” என்று அவள் உள்ளங்கையில் தன் முகம் புதைத்து கேட்க, நிலாவின் கைகளை சூர்யாவின் கண்ணீர் நிறைந்தது. கணவனின் இந்த நிலையை காண முடியாமல். நிலா சூர்யாவின் முகத்தை தன் கைகளில் ஏந்தி அவன் கண்ணீரை துடைக்க..

 

தன் கன்னத்தில் இருந்த அவள் கைகளை தன் கைகளில் அழுத்தி பிடித்தவன். கலங்கிய கண்களோடு “நிலானி நா எதாவது தப்பு பண்ணி இருந்த, நீ எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் குடுடி. ஆனா, என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதடி. என்னால தாங்க முடியல. உயிரே போறமாதிரி இருக்கு” என்று சொல்ல வந்ததை சொல்ல விடாமல்.. நிலாவின் இதழ்கள் சூர்யாவின் இதழை மூடி இருந்தது. 

 

வெகுநாட்களாக தன் காதலை சொல்ல நினைத்தவள். இன்று ஒரே இதழ் முத்தத்தில் தன் முழு காதலையும் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தாலே என்னவோ. காற்று கூட புக முடியாத படி சூர்யாவை தன்னோடு இறுக்கி அணைத்து அவன் இதழை சிறைப்பிடித்திருந்தாள். 

 

நிலாவின் முத்தத்தில் சூர்யா முதலில் திகைத்தவன். பின் இதழ் 

முத்தத்திலேயே தன் காதலை சொல்லிய தன் காதலியை தன்னோடு இன்னும் இறுக்கி, அவள் தொடங்கி வைத்த முத்த யுத்தத்தை, அவன் ஏற்று நடத்த… உலகம் முடியும் வரை நடத்த ஆசைப்பட்டு தொடங்கி யுத்தத்தை மூச்சு திணறல் வந்து முடித்து வைத்தது. 

 

சூர்யாவின் கண்களை நேராக பார்த்த நிலா, “ஐ லவ் யூ டா புருஷா” என்று வெட்கம் கலந்த குரலில்  சொல்லிவிட்டு அவன் மார்பில் முகம் புதைத்து கொள்ள. கடிகாரம் மணியடித்து சரியாக மணி 12 என்று கத்தி சொல்ல… நிலா நெனச்ச மாதிரியே சூர்யா பிறந்த நாள் அன்னைக்கு அவ லவ்வை சொல்லிட்டா… 

 

சூர்யாவுக்கு நிலாவின் ‘ஐ லவ் யூ’ வை கேட்ட அந்த நொடி லட்சம் பூக்கள் தன்மேல் விழுந்தது போல் ஒரு சந்தோஷம். நிலாவின் முகம் பார்த்தவன். “ஏய் இப்ப நீ என்ன சொன்ன? திரும்ப சொல்லு?” என்று  ஆர்வமாக கேட்க.

 

அழகாய் சிரித்தவள், அவன் நெற்றியை முட்டி, “ஐ லவ் யூ சூர்யா” என்ற அடுத்த நொடி நிலாவின் எலும்புகள் உடையும் அளவிற்கு இறுக்கியணைத்தான் சூர்யா.

 

“எவ்ளோ நாள் இந்த வார்த்தையை கேக்க காத்திருந்தேன் தெரியுமாடி.. இப்ப இந்த நிமிஷம் நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டி. ஐ ஆம் வொரி வொரி ஹாப்பிடி” என்றவன் அவளை பூங்கொத்தை போல் தலைக்குமேல் தூக்கி சுத்த. அவன் குரலில் அத்தனை மகிழ்ச்சி. 

 

“ஆனாலும் நீ ரொம்ப லேட் டி. என் மேல் இருக்க காதலை புரிஞ்சுக்க உனக்கு இத்தனை நாள் ஆச்சு இல்ல?” என்று செல்லமாக கோபித்து கொள்ள. 

 

அவன் தோளில் தன் கைகளை 

மாலையாக்கியவள். “உங்களுக்கு உடம்பு சரியில்லாத அன்னைக்கு நீங்க என் கிட்ட பேசுனீங்களே… அன்னைக்கே எனக்கு உங்க மேல இருந்த காதலை நான் உணர்ந்துட்டேன்” என்று சொல்ல.. அவளை ஆச்சரியமாக பார்த்தவன். “அடிப்பாவி… அப்ப ஏன்டி இத அப்பவே சொல்லல. நா எப்டி புலம்பிட்டு திரிஞ்சேன் தெரியுமாடி உனக்கு?” என்று அப்பாவியாக சொல்ல?? 

 

அதைக்கேட்டு நிலா விழுந்து விழுந்து சிரிக்க.. அதில் இன்னும் கடுப்பானவன். அவளை தலையில் கொட்டி, “ஏன்டி நா கடுப்புல இருக்கேன். நீ சிரிச்சிட்டு இருக்கியா? மரியாதையா சொல்லுடி, ஏன்டி முன்னையே சொல்லல..?? என்று அவள் இடுப்பை கிள்ள.

“ஆஆஆஆ அய்யோ வலிக்குது  சூர்யா… நா வேணும்னு செய்யல. உங்க பெத்டே அன்னைக்கு சர்ப்ரைஸா சொல்லனுன்னு தான்” என்றவளை முறைத்தவன் பின் மீண்டும் அவளை கட்டிக்கொண்டான். 

 

“சரி சர்ப்ரைஸ் எல்லாம் ஓகே என்னோட பெத்டே ஸ்பெஷல் கிப்ட் எங்கடி.?” என்றதும் நிலா அவனுக்காக தானே டிசைன் செய்த பென்டென்ட் டை அவனிடம் காட்ட. அதை பார்த்த சூர்யாவின் மகிழ்ச்சி அவன் கண்ணில் மின்னலாய் தெரிக்க, “நீயே இத என் கழுத்துல போட்டு விடு நிலானி..”  என்று ஆசையாக கேட்க நிலா அவன் கழுத்தில் இருந்த தன் செயினில் அந்த பென்டென்டை கோர்த்து சூர்யா கழுத்தில் மாட்டி விட்டாள்…

 

“உனக்கு நான் தாலி கட்டுனேன். இப்ப நீ எனக்கு தாலி கட்டுற. ம்ம்ம்… நான் தீர்க்க சுமங்கலியாக இருக்கனுன்னு நல்லா வேண்டிட்டு கட்டுடி” என்று மீண்டும் அவள் இடுப்பை கிள்ள. அவன் கையை தட்டி விட்டவள். “டேய் சும்மா இருடா… எப்பாரு இடுப்பை புடிச்சு கிள்ளிட்டு.”

 

“என்னது டேய்யா!!! என்னடி மரியாதை தேயுது..??”

 

“ம்ம்ம்ம் இனிமே அப்படி தான் போடா.” என்று அவள் தள்ளிப்போக. சூர்யா அவள் பின்னலை பிடித்து இழுக்க, இழுத்த வேகத்தில் நிலா அவன் மார்மீது மோத, இருவரும் நிலைதடுமாறி கட்டில் விழந்தனர். 

 

நிலா அவனை தள்ளிவிட்டு எழ பார்க்க.. சூர்யா அவளை போகமுடியாத படி அணைத்தவன். அவள் காதில் “என்னோட பெத்டே கிப்ட்டை கொடுத்துட்டு போடி” என்க. 

 

“எது..?? டேய் இப்ப தானா நா கிப்ட் குடுத்தேன். அதுக்குள்ள மறந்துட்டிய?” என்று முறைக்க.

 

“அது உன்னோட கிப்ட்டி செல்லம். நா கேக்குறது என்னோட கிப்ட்.?” என்றவனை  நிலா புரியாமல் பார்க்க, 

 

“அடியேய் என் செல்ல பொண்டாட்டி. இது நம்ம கல்யாணத்துக்கு அப்றம் வர என்னோட பாஸ்ட் பெத்டே. சோ இன்னைக்கு நா என்ன கேக்குறேனோ. அந்த கிப்ட்ட,  நீ கண்டிப்பா எனக்கு குடுக்கணும்… புரிஞ்சுத..?? என்க,  

 

நிலா தன்னவன் என்ன கேட்கிறான் என்று புரிந்தாலும் புரியாதது போல் வேண்டுமென்றே,  “சரி உங்களுக்கு என்ன கிப்ட் வேணும்னு சொல்லுங்க முடிஞ்ச தரேன்??” என்றது தான், சூர்யா சட்டென எழுந்தவன். “இன்னைக்கு அரவிந்த் சொன்னானே, உன்னை கொஞ்ச ஆள் வேணும்னா நீயே பெத்துக்கன்னு..??”

 

“ஆமா… இப்ப அதுக்கு என்ன” என்று வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு நிலா சாதாரணமாக கேட்க. 

 

“எனக்கு உன்னை மாதிரியே கீயூட் பாப்பா வருஷத்துக்கு ஒன்னு வேணும்.!!” என்றவனை அதிர்ச்சியாக பார்த்தவள். “எது வருஷத்துக்கு ஒரு பாப்பாவாஆஆஆ?? போடா டேய், போடா… அதெல்லாம் முடியாது” என்று எழ போனவளை கையை பிடித்து இழுத்தவன். “அது எப்டி முடியாம போகுதுன்னு நானும் பாக்குறேன்.”  என்று அவளை அணைக்க.

 

தன்னவன் அணைப்பில் விரும்பி தன்னை இணைத்துக்

கொண்டாள். சூர்யா நிலாவின் இல்லறம் அங்கே இனிமையாக ஆரம்பித்தது. 

இரு இதயங்கள் இணைந்து இன்று இல்லறம் என்ற இனிய பயணத்தை தொடங்கிவிட்டது.

 

ஒரே நாளில் தன் அனைத்து துக்கமும் கவலையும் புள்ளியாக தேய்த்து விடவும். தன்னவனிடன் தன் காதலை சொல்லிய மகிழ்ச்சியில் நிலா கணவன் மார்பிலேயே தலைவைத்து உறங்கியவள். நான் வானில் வந்துவிட்டேன் என்று ஜன்னலின் திரைச்சீலையை விலக்கி உள்ளே வந்த சூரிய ஒளி நிலாவின் முகத்தில் பட உறக்கம் கலைந்து எழுந்தவள். உறங்கி கொண்டிருந்த சூர்யாவின் முகம் பார்க்க, நேற்றைய நிகழ்வு நினைவு வந்து கன்னம் வெட்கத்தில் சிவக்க, மெதுவாக அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். ஒரு நிமிடம் தன்னை மறந்து அவனை பார்த்தவள், கட்டிலில் இருந்து எழும்போது அவள் கையை சூர்யா பிடித்து இழுக்க அவன் மீது விழுந்தவளை இறுக்கியணைத்து கொண்டாவன். “நிலானி ப்ளீஸ் டி இன்னும் கொஞ்சம் நேரம் இப்டியே இருடி!” என்று கெஞ்ச. 

 

அப்போது தான் நிலாவிற்கு அவன் அவளை நிலானி என்று அழைப்பது நினைவு வர, “ஏன் சூர்யா எல்லாரும் என்னை நிலான்னு தான் கூப்பிடுறாங்க, நீங்க மட்டும் ஏன் நிலானின்னு முழு பேர் செல்லி கூப்பிடுறீங்க..??” என்றவளை இன்னும் தன்னோடு இறுக்கியணைத்தவன். “நான் உன்னை முதல் முறை பார்த்தப்போ என் மனசுல முதல்ல பதிஞ்சது உன் நிலானின்ற அழகான பேர் தான்டி. உண்மையை சொல்லணும்னா,  அன்னைக்கு நீ பயந்த குரல்ல நிலானின்னு உன்பேரை சொன்னப்பாவோ நீ என் மனசுல வந்துட்ட. எனக்கு தான் அது புரியல… உன்னை பத்தி நெனைக்கும் போதெல்லாம் எனக்கு உன்னோட குழந்தை முகமும், நிலானின்னு நீ சொன்ன உன்  குரலும் தான் ஞாபகம் வரும். அதான் அந்த பேர சுருக்கி கூப்பிட எனக்கு புடிக்கல” என்றவன் கண்ணில் தெரிந்த காதல் நிலாவின் கண்களை நனைக்க.. சூர்யாவை காதலாக பார்க்க.. அவள் பார்வையில் தெரிந்த காதல் சூர்யாவை தாக்க, “ஐய் ஜாலி என் பொண்டாட்டி லவ் மூடுக்கு வந்துட்ட, இனி புள்ளகுட்டி பெத்துக்குற ப்ராசஸில்ல இறங்கவேண்டியது” தான் என்று அவளை அணைக்க… 

 

“ஆச தோச… டைமாச்சு, மரியாதைய விடுங்க என்னை” என்றவள் அவன் பிடியில் இருந்து தன்னை விடுவிக்க பார்த்து முடியாமல் போக, “சூர்யா ப்ளிஸ் விடுங்க, நான் குளிக்க போகணும் டைம் ஆச்சு. கோயிலுக்கு போகணும். ப்ளிஸ் விடுப்பா” என்று கொஞ்ச..

 

“மை டியர் பொண்டாட்டி நீ பழைய 

படமெல்லம் பார்த்தது இல்லயா..??”

 

 “இப்ப எதுக்கு சம்பந்தமே இல்லாம படத்தை பாத்தி கேக்குறீங்க??”

 

“கணவனே கண்கண்ட தெய்வம்னு ஒரு படம் இருக்கு தெரியுமா உனக்கு. அதுபடி உன் கணவன் நான் தான் உனக்கு தெய்வம். சோ முதல்ல என்னை கவனி. அப்றம் கோயிலுக்கு போய் அந்த கடவுளை பாரு” என்றான் குறும்பு கொஞ்சமும் குறையாத குரலில்…

 

“ஓஓஓஓ அப்படிய..?? இது எனக்கு தெரியாம போச்சே. கணவனை தானே கவனிச்சிட்ட போச்சு” என்று சூர்யா முகத்திற்கு வெகு அருகில் வந்தவள். அவன் கன்னத்தோடு தன் கன்னம் உரச, அவனின் காதுகளில் அவள் மூச்சு காற்று பட, சூர்யா கண்மூடி அதை ரசித்துக் கொண்டிருந்தான். நிலா கண்கள் மூடி அமர்ந்திருந்த சூர்யாவை விஷமமாக பார்த்தவள்

சட்டென அவன் கன்னத்தை கடித்து விட, “ஆஆஆஆம்மா” என்று தன் கன்னத்தை தடவியவன். நிலாவை செல்லமாக முறைக்க.

 

 “என்ன கணவரே கவனிச்சது போதுமா இல்ல இன்னும் பலமாக கவனிக்கனுமா?” என்று புருவம் தூக்கி அழகாய் கேட்ட.. 

 

“ஏன்டி ராட்ச்சசி கொஞ்ச சொன்ன இப்படி கடிச்சு வைக்கிற, ஏன் உன் செல்ல மாமியார் உனக்கு ஆடு, கோழியெல்லாம் கண்ணுல காட்டுறது இல்லையா என்ன..??”

 

“ஹலோ என் அத்தையை பத்தி ஏதாவது பேசுனீங்க அடுத்து எதை கடிப்பேன்னு எனக்கே தெரியாது. மரியாதையா எந்திச்சு போய் குளிச்சுட்டு ரெடியாகுங்க.‌ நானும் போய் ரெடியாகணும்” என்று  விரால் நிட்டி அவனை எச்சரித்தவள் எழுந்து செல்ல, சூர்யா அவள் கையை பிடித்து இழுத்து அவள் இதழ்களை சிறைபிடிக்க. அவன் முத்தத்தில் நிலா தன்வசம் இழந்து அவனோடு இழைந்துவிட ஒரு முத்த யுத்தம் அங்கு ஆரம்பித்தது. முத்தம் முழுமையடைய நிமிர்ந்து நிலாவின் முகம் பார்த்தவன். வெட்கத்தில் கண்களை மூடி இருந்த நிலாவின் காதில், “இனி நீ என்னை கடிச்ச இதுதான்டி உனக்கு தண்டனை” என்றவன்  சிரித்துக்கொண்டே அடுத்த அறைக்கு குளிக்க செல்ல.

 

நிலா தீடீர் ஷாக்கில் இமைக்காமல் சூர்யாவையே பார்க்க, “அடியேய் இனி இதுமாதிரி ஷாக் அடிக்கடி அடிக்கும் தயாரா இரு.. இப்ப போய் குளி அம்மா வெய்டிங்” என்க.. அவனை செல்லமாக முறைத்துவிட்டு நிலாவும் குளிக்கபோய்விட்டாள். சூர்யா குளித்து தயாராகி கீழே வந்தவன் அங்கு பச்சை வண்ண பட்டில் அழகு சிலையாக இருந்த நிலாவை இமைக்கும் நேரம் கூட வீணாக்காமல் பார்க்க.. நிலாவும் பட்டு வேட்டி சட்டையில் ஆணழகனாய் இருந்த தன் கணவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள். 

 

தனம்மா இவர்கள் இருவரையும் பார்த்தவர், “ம்ம்ம் ம்ம்ம் பாத்த வரை போதும் கோயிலுக்கு டைம் ஆச்சு இப்ப கிளம்புங்க” என்றதும் நிலாவின் பட்டு கன்னம் சிவந்து விட, சூர்யாவின் முகம் அசடு வழிந்தது.

 

கோயிலுக்கு சென்றவர்கள் மலைபோல் வந்த கஷ்டங்கள் அனைத்து பனிபோல் விலகியதற்கு நன்றி சொல்லி, இனி வரும் காலம் இனிதாக இருக்கவேண்டும் என்ற வேண்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.