கண்ட நாள் முதல்

Epilogue

 

சூர்யா வீடே பரபரத்தது… அனைவரும் படு பிசி. தேவியும் சந்தியாவும் ஓடி ஓடி வேலை பாரக்க, அதை பார்த்தவர்களுக்கு நல்லா நாளும் அதுவுமா இன்னைக்கு மேகத்தை பொத்துக்கிட்டு மழை வருமே என்ற பயம் தொற்றிக் கொண்டது. 

 

இன்று தேனு, அரவிந்த் நிச்சயதார்த்தம். தனம்மா விரும்பி கேட்டதால் சூர்யாவின் வீட்டிலேயே நெருங்கி உறவினர்கள் மட்டும் அழைத்து நடத்த முடிவு செய்தனர். அனைத்து வேலைகளும் நல்லபடி நடக்க. தேவிக்கு மட்டும் சின்ன சந்தேகம். “கொஞ்ச நாளா தன் தோழிகளும் சூர்யா, அரவிந்த்தும் தனக்கு தெரியாமல் ஏதோ ப்ளான் போடுறாங்களோ?” என்று பெரிய சந்தேகம். ஆனால், அது என்ன என்று தெரியவில்லை.. சந்தியாவை கேட்டதற்கு அவளும், “ஆமாக்கா ஏதோ பெருசா ப்ளான் பண்றாங்க. ஆனா, நா கேட்ட பதில் இல்லக்கா” என்று சோகமாக சொல்ல, தேவி என்ன ப்ளான் என்று யோசிக்க ஒன்னும் புரியவில்லை.

 

நிலா தேவி கையில் அழகிய பட்டு புடவையை கொடுக்க, “என்ன நிலா இது.?? இப்ப எனக்கு எதுக்கு புடவை?” என்று கேட்க

 

“அத போய் உன்னோட அருமை அண்ணாக்களை கேளு… நிச்சயத்துக்கு நம்ம நாளு பேருக்கும் ஒரே மாதிரி புடவை தான் கட்டணுமாம். அவங்களே போய் நமக்காக வாங்கிட்டு வந்து இருக்காங்க. சீக்கிரம் போய் கட்டிடு வாடி” என்று தேவியை விரட்டியவள். திரும்பி தேனுவை பார்த்து கண்ணடிக்க, தேனுவும் சிரித்துவிட்டு “சரி சரி வா டி நம்மளும் போய் ரெடியாவோம்..!!” என்று கிளம்பினாள்.

 

சாயந்திரம் நிச்சயத்துக்கு நேரம் நெருங்க அனைவரும் கூடி இருந்தனர். தேனு பட்டு புடவையில் தேவதை போல் ஜொலிக்க, அரவிந்த் சிரியஸ்சாக அவளை சைட் அடித்துக் கொண்டிருந்தான். இங்கு சூர்யா, நிலா போகும் இடமெல்லாம் அவளையே விடாமல் சுற்றிக்கொண்டு இருக்க,

 

 தேவியும் சந்தியாவும் பட்டு புடவையில் தயாராகி வந்தவர்கள் இவர்களை பார்த்து, “அய்யோ இதுங்க இம்சை தாங்க முடியலயே… ரெண்டு சின்னஞ்சிறுசுகளை வச்சுட்டு இப்படி அநியாயம் பண்றாங்களே!” என்று தலையில் அடித்துக்கொண்டனர்.

 

நிச்சயத்திற்கான நேரம் வந்ததும். தேனுவின் அப்பா, “நேரம் ஆச்சு நிச்சயதார்த்தத்தை 

தொடங்கலாமா?” என்க… இல்ல மாமா இன்னும் கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணலாம் என்றான் அரவிந்த். 

 

“ஏன் அரவிந்த் எல்லாம் தான் வந்தச்சே… எதுக்கு வெய்ட் பண்ணும்?? நல்ல நேரத்தில் ஆரம்பிக்கலாமே??”

 

  “இல்ல கலைம்மா ஒரு முக்கியமான ஆள் வரவேண்டி இருக்கு. அதான் சொல்றேன்.”

 

“இருக்கட்டும் பா. நம்ம ஆரம்பிப்போம் அவங்க வரப்பா வரட்டும். நிச்சயத்திற்கு பொண்ணு மாப்பிள்ளை தான் முக்கியம் நீங்க ரெண்டு பேரும் இங்க இருக்கீங்க.. அப்றம் என்ன??”

 

 ”நீங்க சொல்றது சரிதான் ம்மா. ஆனா, அந்த முக்கியமான ஆள் வராம நம்ம இந்த நிச்சயத்தை செய்ய முடியாது மா…”

 

“டேய் சூர்யா… அப்டி யாருடா அந்த முக்கியமான ஆளு. ஏன் அவங்க இல்லையின்னா இந்த நிச்சயம் 

நடக்காதோ?” என்று தனம்மா கேட்க..

 

“ஆமாம்மா அப்டி தான். பின்ன மாப்பிள்ளை இல்லாம நிச்சயம் எப்டி நடக்கும்” என்று குறும்பாக சொல்ல அனைவருக்கும் குழப்பம். 

 

தனம்மா, “டேய் சூர்யா என்னடா உளர்ரா..?? அரவிந்த் இங்க தானே இருக்கான். அப்பறம் மாப்பிள்ளை வரணும்னு சொல்ற? உனக்கு கிறுக்கு புடிச்சிருக்க என்ன???”

 

“எனக்கு ஒன்னும் கிறுக்கு புடிக்கல ம்மா. நா நல்லா தான் இருக்கேன். நீங்க கேட்ட கேள்விக்கு பதில் அங்க வந்துட்டு இருக்கு பாருங்க என்று வாசலை காட்ட, அங்கு வந்துகொண்டிருந்தவனை பார்த்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி என்றால், தேவிக்கு ஒரு நிமிடம் உலகமே நின்று விட்டது. 

 

சூர்யா, “சரி சரி வரவேண்டிய ஆள் வந்தாச்சு நிச்சயத்தை ஆரம்பிங்க” என்று சொல்ல.. நிச்சய பத்திரிகை வாசிக்கப்பட்டது.

 

 அதில் இன்னும் முன்று மாதம் கழித்து வரும் முகூர்த்தத்தில் தேன்மொழி, அரவிந்த், மற்றும் பிரசாத், தேவியின் திருமணமும் பெரியோர்கள் சம்மதத்துடன் நிச்சயிக்கப்படுகிறது என்று இருக்க. தேவி சிலையாய் உறைந்து விட்டாள். கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் வந்துகொண்டிருந்தது. 

 

தன்னுடைய இத்தனை வருட காதல் இன்று இனிதாக இணைந்தது என்ற மகிழ்ச்சி தேவியின் கண்ணில் கண்ணீராய் வர… தேவி அருகில் வந்த நிலா அவள் கண்களை துடைத்தவள். “எப்டி எங்க சர்ப்ரைஸ்?” என்று கண்ணடித்தபடி கேட்க. தேவிக்கு பேச்சே வரவில்லை, நிலாவை இறுக்கி கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

 

“ஏய் லூசு என்ன இது சின்னபுள்ள மாதிரி. அங்க பாரு நீ என்னை கட்டிபுடிச்சிருக்கிறத பாத்து உன் ஆளுக்கு அந்த கருவாயன் காதுல புகை வருது” என்று கலாய்க்க… தேனுவும் “ஆமாமாம்… கருகுற வாசனை காத்துல வருது.” என்று சிரிக்க

 

“ஹலோ என்னம்மா இது? மாப்பிள்ளைன்னு மரியாதை இல்லாமல் இப்படி கலாய்க்கிறீங்க?” என்று சூர்யா பொங்க. அரவிந்தும் பிரசாத்தும் அதற்கு ஆமாம்சாமி போட… பெண்கள் மூவரும் பார்த்த பார்வையில் “கப்சிப்” என்று ஆகிவிட்டானார். 

 

 “அது அந்த பயம் இருக்கட்டும்.!!”

 

நல்ல நேரம் முடிவதற்குள் இரு ஜோடிகளும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். நிறைவாக அனைத்து முடிந்த மகிழ்ச்சி பெரியவர்கள் செல்ல, இங்கு கொலைவெறியுடன் காத்திருந்த தேவியிடம் பிரசாத்தை தனியாக மாட்டிவிட்டு சூர்யா, நிலா, தேனு, அரவிந்த் ஓடிவிட, இங்கு பிரசாத்துக்கு செம்மையாக பூஜை தொடங்கியது. 

 

“ஏன்டா மாமா உனக்கு எவ்வளவு திமிர் இருந்த இவ்வளவு பெரிய விஷத்தை என்கிட்ட மறச்சு இருப்ப?” என்று தேவி அவன் முதுகில் தாளம் போட… 

 

“அடியேய் உன்னோட அந்த ரெண்டு ஃப்ரண்டு பிசாசும், அதுகங்க புருஷனுங்க, உன் நொண்ணானுங்களும் தான்டி உனக்கு சர்ப்ரைஸ் ஸா இருக்கனுன்னு சொன்னங்க. இப்ப என்னை தனிய புலிகுகையில் தள்ளிவிட்டு அதுங்க எஸ்கேப் ஆகிடுச்சு” என்றவனை தேவி தீயாய் முறைக்க… 

 

“ப்ளீஸ் டி செல்லம். மாமா பாவம் இல்ல. உனக்காக தானே மாமா வந்தேன்” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொள்ள. தேவிக்கு சிரிப்பு வந்து விட, இதுதான் சமயம் என்று அவளை இழுத்துக் கட்டிக்கொண்டான் அவள் கள்வன்.

 

தேனு அரவிந்த் நிச்சயதார்த்தம் பற்றி பேசும்போது நிலா அதோ நாளில் தேவிக்கு நிச்சயம் செய்துவிடலாம் என்று யோசனை சொல்ல, சூர்யாவும் அரவிந்த்தும் அதற்கான வேலையை பார்க்க தொடங்கி விட்டார்கள். நிச்சய நாள் வரை இது தேவிக்கு தெரியக்கூடாது என்று பிரசாத்திடம் சொல்லி விட அவனும் தேவியிடம் எதுவும் சொல்லவில்லை. தேவியின் பெற்றோர், பிரசாத்தின் பெற்றோரிடமும் சூர்யாவும் அரவிந்த்தும் பேசி சம்மதிக்க வைத்து இதோ இன்று எல்லாம் நல்லபடி முடிந்தது.

 

நாட்கள் வேகமாக செல்ல நாளை பொழுது விடிந்தால் திருமணம். 

 

நிலாவும் சூர்யாவும் தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். திருமணத்திற்கு முதல் நாள் சாயந்திரம் அனைவரும் மண்டபத்திற்கு கிளம்ப, 

நிலா, “தேனு, தேவிக்காக சில நகைகளை ஆர்டர் கொடுத்து இருக்கேன். அத வாங்கிட்டு நேராக மண்டபத்திற்கு வந்திடுறேன்” என்று சொல்லி விட மீதி அனைவரும் மண்டபம் சென்றுவிட்டனர். 

 

இங்கு மண்டபத்தில் நிற்க நேரம் இல்லாமல் அனைவரும் ஓடிக்கொண்டு இருக்க, சூர்யா நிலா மீது பயங்கர கோபத்தில் இருந்தான்.

 

 “டேய் சூர்யா விடுடா… போன இடத்தில் லேட்டாகி இருக்கும். வந்துடுவா டா. நீ டென்ஷன் ஆகாதே.. நிலா சீக்கிரம் வந்துடுவா.”

 

“இல்லடா அரவிந்த், நா அப்பவே சொன்னேன். நானும் வரேன்டி, கார்ல போய்ட்டு சீக்கிரம் வந்துடுவோம்னு, அவ தான் நான் கேப் புக் பண்ணிட்டேன். நீங்க போங்க மண்டபத்தில் நிறைய வேலை இருக்கும், அத பாருங்கன்னு அனுப்பி விட்ட. இப்ப பாரு இவ்ளோ நேரம் ஆச்சு. பங்ஷன் கூட தொடங்கபோகுது இன்னும் அவளை காணும் என்று இருப்பு கொள்ளாமல் தவிக்க… அரவிந்த், “டேய் அங்க பாருடா” என்று வாசலை காட்ட அங்கே நிலா வந்து கொண்டிருந்தாள்.

 

நேராக சூர்யா விடும் வந்தவள். கோபமாக இருந்த அவன் முகத்தை பார்த்து விட்டு அரவிந்த்திடம் கண்ணாலேயே என்ன என்று கேட்க… அவனும் “சூர்யா கடும் கோபத்தில் இருக்கிறான் சமாதானம் செய்” என்று சைகையில் சொல்லி விட்டு சென்றான்.

 

 “சாரி சூர்யா கொஞ்சம் லேட் ஆகிடுச்சு பா. சோ சாரி. அதுக்கும் காரணம் இருக்கு… நா உன்கிட்ட கொஞ்சம் தனிய பேசணும் வாயேன்” என்று ஆரம்பிக்கும் போதே சூர்யா அங்கிருந்து சென்று விட நிலாவின் முகம் வாடி விட்டது.

 

அதன் பின் வேலைகள் அவர்களை இழுத்துக்கொள்ள. கிடைத்த வாய்ப்பில் எல்லாம் நிலா சூர்யாவிடம் பேச அவன் பின்னாலே குட்டி போட்ட பூனை போல் செல்ல. சூர்யா அவளின் இந்த குழந்தைதனத்தை இன்னும் ரசிக்க நினைத்தவன் நிலாவை கண்டுகொள்ளவே இல்லை. பொறுந்து பொறுத்து பார்த்த நிலாவிற்கும் கோபம் வந்துவிட. “டேய் நீ ரொம்ப ஓவரா தான்டா போற… போடா போ, நீயா வந்து என்கிட்ட பேசுற வரை நா உன் கிட்ட பேசமாட்டேன். உன் பேச்சு கா. போடா என்று சின்ன குழந்தை போல் விராலை காட்டி ‘கா’ விட்டு செல்ல.. சூர்யா வந்த சிரிப்பை அடக்க மிகவும் கஷ்டப்பட்டான்.

 

திருமணம் வரவேற்பு முடிந்து அனைவரும் உறங்க சென்று விட. சந்தியா மற்றும் இரு கல்யாண ஜோடிகளுடன் சூர்யாவும் பேசிக்கொண்டிருந்தனர். 

 

“மாமஸ்… நிலாக்கா எங்க மாம்ஸ்? ஆளையே காணும்?” என்க.

 

 தேவியும் “ஆமா எங்க அண்ணா அவ?” என்று சூர்யாவை கேட்க.. அவன் சாயந்திரம் நடந்ததை சொல்லி சிரிக்க, “கடவுளே வர வர உங்க சின்னபுள்ள விளையாட்டுக்கு அளவே இல்லாம போச்சு.. போங்க போய் அவளை கரெக்ட் பண்ணி கூட்டி வாங்க” என்று தேவி சூர்யாவை விரட்ட,

 

“ஆமா மச்சான் போங்க போங்க போய் நல்லா வாங்கிகட்டிட்டு வாங்க” என்று பிரசாத் கலாய்க்க. அவனை முறைத்த சூர்யா, “ஹலோ மாப்புள்ளே ரொம்ப ஆணவத்தில் ஆட வேணாம். நாளைக்கு என் தங்கச்சி கழுத்துல தாலி கட்டுன பிறகு உங்க நிலைமையும் இதுதான், ஞாபகம் இருக்கட்டும்.” என்றதும் பிரசாத் ‘அப்டியா?” என்று தேவியை பார்க்க… “டெஃபனட்லி டெஃபனட்லி” என்று அவள் தோளை குலுக்க பிரசாத் தலையில் கைவைத்துக் கொண்டான். 

 

சூர்யா நிலாவை தேட, அவள் மொட்டை மாடியில் இருப்பதாக கலையம்மா சொல்ல, சூர்யா அங்கே சொன்றான்.

 

அங்கு நிலா உச்ச கட்ட கொதி நிலையில் இருக்க, “அய்யோ… செம்ம கோவத்துல இருக்கபோலயே இப்ப என்ன செய்றது” என்று யோசித்தபடி அவள் பின்னால் சென்றவன். அவளை அப்படியே இறுக்கி அணைக்க… திடுக்கிட்ட நிலா பின் அணைத்து தன்னவன் என்று தெரிந்தது. மூக்கு மேல் கோபம் வர.. “விடுங்க விடுங்க” என்று அவன் பிடியில் இருந்து விலக முயல, அவள் முயற்சி பலிக்கவில்லை. அதில் இன்னும்கோபம் கொண்ட நிலா…

 

“டேய் நா உன்கிட்ட பேச மாட்டேன் மரியாதையா என்ன விடு நான் கீழ போகணும்” என்று முறுக்கிக்கொள்ள அவளை திருப்பி தன்னோடு நெஞ்சோடு இன்னும் இறுக்கியவன். “நீ என்கிட்ட பேசாம, இங்கிருந்து போகமுடியாதுடி செல்லம்” என்று விம்பு பிடிக்க.

 

“முடியாது போடா… சாயந்திரம் நா எத்தனை முறை உன் பின்னாடியே வந்துட்டு இருந்தேன். நீ முஞ்சை திருப்பிட்டு போன இல்ல. இப்ப நாங்க உன் மேல கோபமாக இருக்கோம். உன்கிட்ட பேசமாட்டோம். போடா ” என்று முகத்தை திருப்பிக்கொள்ள.. 

 

சூர்யா அவள் நெற்றியில் செல்லமாக முட்டியவன். “அடியோ லூசு பொண்டாட்டி. அது நான் சும்மா உன்னை வெறுப்பேத்த பண்ணேன்டி… நீ என் பின்னாடியே சுத்தும்போது எனக்கு எப்டி இருந்துச்சு தெரியும. சூப்பர் ஃபீல் டி அது” என்று கண்ணடிக்க.

 

 நிலா கண்கள் இடுக்கி அவனை முறைத்தவள், அவனை அடிக்க வர, அவன் அவளிடம் இருந்து தப்பி ஓட நிலா அவனை விரட்டி பிடித்து, அவன் முதுகில் மத்தளம் வாசிக்க, சூர்யா அவள் கைகளை சிறை செய்தவன். ‘அடியேய் போதும்டி வலிக்குது. நாளைக்கு கல்யாணம் வேற இருக்கு விட்ட நீ என்ன ஹாஸ்பிடல் அனுப்பிடுவா போல?” என்று கெஞ்ச…

 

 “உன்னை அடிக்காம பின்ன கொஞ்ச சொல்றீய? ஒரு நிமிஷம்

பேசணும்னு சொன்னேனே கேட்டியாடா நீ. அப்டி முறுக்கிட்டு போறா?” என்ற நிலாவின் குரல் கம்மி விட.

 

“சாரி டா செல்லம்… ரொம்ப சாரி. இனி இப்டி பண்ணமாட்டேன். ரொம்ப சாரி” என்றவனுக்கு திடீரென ஏதோ நியாயம் வர. “ஆமாடி… அதென்னா நாங்க உன்மேல கோவமா இருக்கோம்னு சொன்னீயே அது யார் அது என் மேல கோவமா இருக்க இன்னொரு ஆளு.?? என்று அவள் முகம் பார்த்து கேட்க. 

 

வான் நில ஒளியில் நிலாவின் முகம் வெட்கத்தில் நட்சத்திரமாக ஜொலித்தது. அவள் அழகில் மயங்கி கிடந்தவனின் கைகளை தன் வயிற்றில் வைத்தவள். “இன்னொரு ஆள் உள்ள இருக்கு” என்று சொல்ல, முதலில் அதான் அர்த்தம் புரியாமல் முழித்தவன். பின் அர்த்தம் புரிய, நிலாவை இருக்கி கட்டிக்கொண்டவன் கண்களில் ஆனந்த கண்ணீர். நிஜமா வாடி… நா அப்பா ஆகப்போறனா?” என்று ஆனந்தம் ததும்பும் குரலில் கேட்க. அவள் தலையை ஆட்டி “ஆமாம்” என்று சொல்ல…

 

சூர்யாவிற்கு அந்த நொடி உலகமே தன்கையில் வந்தது போல் ஒரு சந்தோஷம். நிலா முகம் முழுவதும் தன் இதழை பதித்தவன்.” நா இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டி.. ரொம்ப ரொம்ப சந்தோஷமா!…” என்றவன் கண்கள் கலங்கி இருக்க. நிலா அவனின் அன்போடு அணைத்துக்கொண்டாள். இருவரின் உலகையும் அழகாக்கும் அந்த உயிரின் வருகை இருவரின் இதயத்தையும் நிறைத்து.

 

 “ஏன் னடி முன்னையே என்கிட்ட சொல்லல??”

 

“எனக்கே சாயந்திரம் தான் தெரிஞ்சுது சூர்யா. நகைகடையில இருக்கும் போது மயக்கம் வந்துடுச்சு. அங்க இருந்த ஒரு பொண்ணு என்ன ஹாஸ்பிடல் கூட்டி போன, அப்ப தான் டாக்டர் சொன்னாங்க. நா இத உன்கிட்ட தான் முதல்ல சொல்லணும்னு அடிச்சுபுடுச்சு ஓடி வந்த, நீ நா சொல்றதயே கேக்காம முறுக்கிட்டு போய்ட்டா. எனக்கு எப்டி இருந்துச்சு தெரியுமா?”என்றவள் குரலில் வருத்தம் இருக்க, அதை தாங்க முடியாமல் சூர்யா அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.

 

காலை சுபமுகூர்த்தத்தில் தேனு கழுத்தில் அரவிந்த்தும், தேவி கழுத்தில் பிரசாத்தும் திருமாங்கல்யம் பூட்ட அங்கு ஜென்ம ஜென்மத்திற்கும்மான ஒரு உறவு தொடங்கியது. அனைவரின் மகிழ்ச்சியையும் இரட்டிப்பு ஆக்கும் வகையில் சூர்யா நிலா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்ல… குடும்பத்திற்கு வாரிசு வந்த சந்தோஷத்தில் பெரியவர்கள் மனம்நிறைய அங்கே மகிழ்ச்சி கடல் பெருக்கெடுத்து ஓடியது.

 

நாட்கள் ரெக்கை கட்டி பறக்க இதோ ஒன்றரை வருடம் உருண்டு ஓடி விட்டது. நிலாவிற்கு சூர்யாவின் ஆசைப்படி தங்க சிலைபோல் நிலாவையே உரித்துவைத்து போல பெண்குழந்தை பிறக்க. சூர்யா நிலாவின் அம்மாவின் நினைவாக அவர் பெயர் அமிர்தவர்ஷினி யை தன் மகளுக்கு வைத்துவிட்டான். அதில் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. கல்யாணம் முடிந்த அடுத்த ஒரு‌ வருடத்தில் தேனுவுக்கும் தேவிக்கும் நிலாவை போலவே பெண்குழந்தைகள் பிறக்க, இதிலும் இவர்களின் ஒற்றுமையை நினைத்து அனைவருக்கும் ஆச்சரியம்.

 

தேனுவும், அரவிந்த்தும் மகளுக்கு அனன்யா என்று பெயர் வைக்க.. பிரசாத் தன் மனைவி தேவியின் விருப்பப்படி மகளுக்கு ஆத்விகா என்று பெயர் வைத்தான். 

 

இன்று மூன்று இளவரசிகளுக்கும் காது குத்து விழா நடக்க.. நிலாவின் மகளுக்கு தாய்மாமனாக அரவிந்த் இருக்க, அவனின் மடியில் வைத்து காதுகுத்த… தேனு, தேவியின் மகளுக்கு சூர்யா மடியில் வைத்து காது குத்தினார. அனைத்து நல்லபடி முடிய. இனி அவர்கள் வாழ்வில் எந்த குறையும் வராது என்ற நிம்மதியுடன் நாமும் செல்வோம்.

 

       .……………சுபம்………………