கண்ட நாள் முதல்

கண்ட நாள் முதல்

அத்தியாயம் 4

 

மறுநாள் ஆஃபீஸ் வந்த நிலாவை வழிமறித்தாள் அவள் தோழி தேவி. 

 

“நிலா நேத்து அந்த அரவிந்தை பாக்க போனீயே என்னடி ஆச்சு.? ஃபோன் பண்ணுவேனு பார்த்தேன். நீ பண்ணல.. சரின்னு நானே ஃபோன் பண்ண நீ எடுக்கல… என்னடி ஆச்சு? எல்லாம் ஓகே தானே?” 

 

“என்னடி பிரச்சனை எனக்கு தெரியாம?” என்று குரல் வந்த திசையில் வந்து கொண்டிருந்தாள் தேன்மொழி. (நிலானி, தேவி, தேன்மொழி மூவரும் கல்லூரியில் இருந்தே நல்ல தோழிகள். நிலா தைரியசாலி, குடும்பம் என்றால் உயிர்.. தேவி கொஞ்சம் பயந்த சுபாவம் என்றாலும் தோழிகளுக்காக எதுவும் செய்வாள், தேன்மொழி தைரியம், கோவம் ரெண்டு ஒன்றாக கலந்த கலவை, தோழிகளுக்கு தோள் கொடுப்பவள்.) 

 

“என்னடி நா கேட்டுட்டே இருக்கேன் நீங்க வாய மூடிட்டு உட்கார்ந்திருக்கீங்க? என்ன ஆச்சு??”

என்றவள் நிலாவின் முகம் பார்க்க. அது வாடிப்போயிருக்க. “ஏய்! என்ன தான்டி ஆச்சு? இவ ஏன் இப்டி மூஞ்சியில வயலின் வாச்சிட்டு இருக்க? என்ன நடந்துது, சொல்லி தொலைங்கடி” என்று தேன்மொழி கத்த…

 

“அதொன்னும் ஒன்னு இல்ல தேனு, இவள பொண்ணு பாக்க வந்த அந்த பையன், நேத்து இவள தனிய பாத்து பேசியிருக்காரு. அவர் என்ன கேட்டாரோ தெரியல, மேடம் காலையில இருந்து ரொம்ப மூட் அவுட் ல இருக்காங்க”

 

தேவி சொல்றது நெஜம நிலா? என்ன அவன் உங்கிட்ட ஏதும் ராங்க பேசினான? இருந்த சொல்லுடி அவனை உண்டு இல்லன்னு பண்ணிடுறேன்.??”

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல தேனு.. நா அவ்ளோ தூரம் வேண்டாம்னு சொல்லியும் பொண்ணு பாக்க வந்து என்ன புடிச்சிருக்குனு வேற சொல்லிட்டான். அதோட தனிய பேசணும்னு சொல்லி நேத்து காபி ஷாப் வர வச்சு ஒரே இம்சை…” 

 

“ஓஓஓஓ .!! அதுசரி பையன் எப்படி..??” என்று கண்ணடித்த தேனுவை முறைத்த நிலா,”அவனுக்கென்ன நல்லா தான் இருக்கான்.”

 

“அப்றம் என்னடி? நீ ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்ற? என்று தேனு கிண்டல் அடிக்க…

 

“ஏய் லூசு, நீ புரிஞ்சு தான் பேசிறிய? இல்ல என்ன வெறுப்பேத்த இப்டி பண்றிய” என்று நிலா தேனை முறைக்க.

 

“நா என்னடி செஞ்சேன்” என்று சிரித்தவளை நிலா மீண்டும் முறைக்க, “சரி சரி நெத்திக்கண்ண தொறக்காத, அப்டி என்ன தான்டி பேசுனீங்க? நீ ஏன் இப்டி பீஸ் போன பல்பு மாதிரி இருக்க?”

 

“எனக்கு கல்யாணம் புடிக்கலன்னு சொன்ன? என்ன காரணம்னு கேக்குறான்டி. அதெல்லாம் சொல்ல முடியாதுனு சொன்ன… அப்ப நா உங்க வீட்டில இந்த கல்யாணத்துல எனக்கு சம்மதம்னு சொல்லிருவேனு பிளாக்மெயில் பண்றான்டி அந்த மரவேதாளம்.” 

 

“அடங் கொப்பமவனே எவ்ளோ திமிர்டி அவனுக்கு உன்னையே பிளாக்மெயில் பண்றானா? நீ அவனை சும்மா வா விட்ட?”

 

“என்னால ஒன்னு செய்ய முடியலடி. நா இன்னொருத்தனை லவ் பண்றேன்னு சொல்லியும் அவன் நம்பலடி. நீ பொய் சொல்ற, நா நம்ப மாட்டேனு ஒரே ரகளை” 

 

“ஓய்? ஓய்? ஏன்டி? ஏன் நம்பமாட்டானாம்.?” என்று தேவி கேட்க

 

“அவன் என்ன பத்தி நல்லா விசாரிச்சு, எனக்கு லவ் எதுவும் இல்லனு தெரிஞ்சு தான் என்ன பாக்க வந்தானாம். சோ… லவ் இருக்குனு நா பொய் சொல்றேன்னு ஒரே பிரச்சனை.”

 

“எவன்டி அவன் புடிக்கலன்னு சொன்ன போகாம, இப்டி இம்சை பண்றான்” என்று தேவி கொதிக்க.

 

தேனு, “நீ என்ன பண்ண நிலா எப்டி அவனை சமாளிச்ச?”

 

“வேற வழி இல்லாம எல்லா உண்மையும் சொல்லிட்டேன்” என்றவள் காபி ஷாப்பில் நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க…

 

“என்னது..!!!” என்று அதிர்ந்தனர் தோழியர் இருவரும். “என்னடி சொல்ற உண்மையாவ?” என்று இருவரும்‌ வாய் பிளந்து நிற்க…

 

“ஆமாடி…எனக்கு வேற வழி தெரியல” என்று நிலா இதழ் பிதுக்க…

 

“ஏய் நிலா! இதுவரை இந்த விஷயம் நம்ம மூனு பேரை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஏ கலை அம்மா, குமார் அப்பா, நம்ம சந்தியாக்கு கூட அன்னைக்கு நடந்தது தெரியாதேடி.. அப்டியிருக்க, யாருன்னு கூட தெரியாத ஒருத்தன் கிட்ட எந்த நம்பிக்கையில, நீ எல்லாத்தையும் சொன்ன? என்ற தேனு வை நிமிர்ந்து பார்த்த நிலா “அவன் கிட்ட ஏன் எல்லாத்தையும் சொன்னேன்னு எனக்கே தெரியல? எந்த நம்பிக்கையில அவன் கிட்ட நான் என்ன பத்தி எல்லாம் சொன்னேன்னு இப்ப வரை எனக்கே கொழப்பம தான் இருக்கு” என்று நினைத்தவள். “எனக்கு வேற ஆப்ஷன் இல்லடி” என்றாள்.

 

“நிலா இது உனக்கே ஓவரா தெரியல? இதுக்கு முன்னாடி எத்தனை முறை, நீ வந்த மாப்புள்ளைய ஓடஓட விரட்டி இருக்க.. இப்ப மட்டும் என்னாச்சு? நீ வேற ஏதாவது சொல்லி இருக்கலாம் இல்ல” என்ற தேவி பார்த்தவள், “அந்த அரவிந்த் என்ன பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருந்தான்டி. என்னால ஒன்னும் பண்ண முடியல…” 

 

“சரி விடு அதன் உன்னோட காதல் காவியத்தை சொல்லிட்டியே. அப்றம் என்ன? அவன் எப்டியும் இந்த கல்யாணம் வேணாம்னு தான் சொல்லுவான் நீ கவலைப்படாத நிலா” என்று தேவி நிலாவை சமாதானப் படுத்த…

 

“நீ வாய மூடு தேவி எப்பபாரு அவளுக்கு சப்போட் பண்ணிட்டு..” என்று தேன்மொழி கத்த…

 

தேவி, “என்னை ஏன்டி திட்ற?? நா என்ன செஞ்சேன்?”

 

“பின்ன அவ எப்பவோ நடந்த சம்பவத்தை இன்னும் நினைச்சுட்டு கல்யாணம் வேணாம்னு.. வர மாப்புள்ளை எல்லாம் விரட்டிட்டிருக்க… நீ அவளுக்கு சப்போட் பண்ணிட்டிருக்க..” என்று தேனு முறைக்க.

 

“ஏன்டி, அவ லவ் பண்றதுக்கு, நீ என்னை திட்டுறது உனக்கே நியாயமா இருக்காடி. நா அவளுக்கு ஆறுதலுக்கு பேசுனேன். அது ஒரு குத்தமா.? அய்யகோ கடவுளே என்னை காப்பாத்து” என்று புலம்ப’

 

“காபி குடிக்கிறீய தேவி என்று தேனு அன்பாக கேட்க.. (என்ன இது திடீர்னு நம்ம மேல இவளுக்கு பாசம் பொங்குது.. வாய்ப்பில்லையே).. “இல்ல தேனு, வேண்டாம்” 

 

” டீ, ஜுஸ் ஏதும் வேணுமா?”

 

“இல்லடி… எனக்கு எதுவும் வேணாம் என்ற தேவியை கோவமாய் பார்த்த

தேனு, “அப்ப என்ன குடுத்த நீ கொஞ்ச நேரம் உன் திருவாயா மூடிட்டு சும்மா இருப்ப தேவி?” என்று திட்ட

 

உதடுகளை பிதுங்கிய சோகமாய் முகத்தை வைத்துக்கொண்ட தேவி “ஓகே ஜிப் லாக்” என்று வாயை மூடிக்கொண்டாள்.

 

 

“நீ சொல்லு நிலா? இன்னு எவ்ளோ

 நாள் நீ இப்டியே இருக்க போற? பேரு கூட தெரியாத ஒருந்தனுக்காக, நீ உன் வாழ்க்கைய வேஸ்ட் பண்ண போறீயா? என்ற தேனுவின் கேள்விக்கு பதில் சொல்லாது நிலா அமைதியாக இருக்க. 

 

“நிலா, நா ஒன்னு கேட்ட நீ கோச்சிக்க மாட்டியே..?”

 

“ஏய் என்னடி இது.?? நமக்குள்ள எப்ப இருந்து இந்த மாதிரி பார்மாலிட்டீஸ் வந்தது? என்ன கேக்கணுமோ கேளுடி”

 

“அந்த அரவிந்த் கேட்டதயே தான் நானும் கேக்குறேன். நீ கல்யாணம் பண்ணிக்காம இருக்க உன்னோட இந்த காதல் மட்டும்தான் காரணமா நிலா ?” என்ற தேனுவை உற்று பார்த்தாள் நிலா..

 

“ஏன்டி அப்டி கேக்குற?” என்று கேட்ட தேவியையும், நிலாவை மாறி மாறி பார்த்த தேனு. “பின்ன என்னடி? நம்ம மூன்று பேரும் ஏட்டு வருஷமா ப்ரண்ட்ஸ். இவள பத்தி நமக்கு நல்லா தெரியும். இவ எல்லா விஷயத்தையும் நல்லா யோசிச்சு பிராக்டிக்கல முடிவு பண்ணுவா. ஆனா, இந்த காதல் விஷயத்துல மட்டும் இவ நம்ம நிலாவானு எனக்கு சந்தேகம் வருது. யாருன்னே தெரியாத? வருவானா? மாட்டானான்னு கூட தெரியாத ஒருத்தனுக்காக இவ காத்திருக்கிறது எப்டின்னு எனக்கு சத்தியமா புரியல தேவி.” என்று தேனு நிலாவை பார்க்க.

 

தேனு கேள்வியில் நிலாவின் முகம் முழுதாய் வாடி விட்டிருந்தது.

 

“சாரி டி. எனக்கு உன்னோட எதிர்காலத்தை நினைக்கும் போது ரொம்ப பயமா இருக்கு.. அதான் அப்டி கேட்டுட்டேன். சாரிடி நிலா.”

 

“பரவாயில்லை தேனு விடு. இப்ப அந்த அரவிந்தை எப்டி சமாளிக்கிறது அதை யோசிப்போம்.”

 

“ம்ம்ம். முதல்ல அவன் என்ன சொல்றான்னு பாப்போம். அதுக்கு அப்புறம் நாம நம்ம வேலையை காட்டுவோம். இது என்ன நமக்கு புதுசா என்ன?” என்று தேனு கண்ணடிக்க.. மூவரும் “அதானே” என்று கைகளை உயர்த்தி HiFi அடித்துவிட்டு வேலையை பார்க்கச்சென்றனார்.

 

இங்கு அரவிந்த் எதையோ யோசித்தவன் அப்படியே தன் இருக்கையில் கண்கள்மூடி அமர்ந்திருந்தான்.. நேற்று நிலாவுடன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவன் நினைவுகளில் வந்துபோனது. அடுத்து என்ன செய்வதென்று பலவிதமாக யோசித்து, கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவன்..அப்படியே விழிமூடி உட்கார்ந்திருக்க, திடீரென முதுகில் பலமாக அடி விழ “யாருடா அது” என்று கத்தியபடி எழுந்தவன் எதிரில் நின்ற சூர்யாவை பார்த்து, “ஏன் டா.? ஏன் இப்டி.? மனுஷனை யோசிக்க விடமாட்டியா? இப்டி திடீர்னு வந்து அடிச்சு எனக்கு ஹார்ட்அட்டாக் வந்த என்னடா பண்றது? இம்சபுடிச்சவனே” 

 

“அதெல்லாம் வராது மச்சி. அப்டி எதும வந்த நா பாத்துகிறேன்.”

 

“எதை என்னோட ஹாஸ்டலில் செலவையாடா..??”

 

“ஆமாடா.. நீ என் உயிர் நண்பன் மச்சி, இதை கூட செய்யமாட்டானா என்ன?”

 

“போடங்கு நீயும் உன் நட்பும். கொலைகாரா பாவி.”

 

“சரிடா அதவிடு, முந்தாநேத்து பொண்ணு பாக்கப் போனீயே என்னச்சுடா? எப்ப கல்யாணம்?” என்ற சூர்யா கடுப்போடு பார்த்த அரவிந்த், “நீ வேற ஏன் டா வயித்தெரிச்சலை கிளப்புற. நானே இங்க ஆஃப் ஆகி கெடக்கேன். நீ வேற கடுப்பகெளப்புற. போடா அங்குட்டு.”

 

“ஏன்டா? என்னச்சு? அந்த பொண்ண பத்தி நல்லா விசாரிச்சுட்டு, கிட்டத்தட்ட ஒரு மாசம் அவ பின்னாடி சுத்தி அவள பத்தி எல்லாம் தெரிஞ்சு தானே பொண்ணு பார்க்க போனீங்க? அப்றம் என்ன பிரச்சனை. ஏன் பொண்ண உனக்கு பிடிக்கலயடா? “

 

“அடாபோடா! பொண்ணுக்கு தான்டா என்னை புடிக்கல..” 

 

“எது.. உன்னை பிடிக்கலனு ஒருத்தி சொன்னாளா?. என்னடா இது ஆச்சரியமா இருக்கு..”

 

“ஆமாண்டா அவளுக்கு என்னை புடிக்கலயாம். பத்தாக்குறைக்கு அவள புடிச்சிருக்குனு சொன்ன பின்விளைவுகள் மோசமாக இருக்கும்னு என்னை மிரட்டிட்டு வேற போறாடா அவ…”

 

“எது மிரட்டினாளா?? என்ன பொழுப்புடா அவளுக்கு? நீ அவள சும்மாவா விட்ட”

 

“பின்ன என்ன பண்ண சொல்ற..?? ஏதாவது பேசி காபி ஷாப் ல அவ டென்ஷனாகி எழுந்து என் கன்னத்துல பளார்ன்னு ஒரு அறைவிட்ட என்னாகுறது?” 

 

“ஹா ஹா ஹா என்று வாய்விட்டு சிரித்த சூர்யா “ம்ம்ம்ம் அதுவும் சரிதான்… ஏண்டா அந்த பொண்ணுகிட்ட என்ன காரணம்னு கேட்டியா..?? உன் மாதிரி ஒருத்தனை வேணாம்னு சொல்ல அந்த பொண்ணுக்கு என்ன பைத்தியமா?”

 

“ம்ம்ம் கிட்டதட்ட பைத்தியம் மாதிரி தான். காதல் பைத்தியம். அவ ஏற்கனவே ஒருத்தனை லவ் பண்றாலாம்டா” என்றான் சோகமாக கன்னத்தில் கை வைத்துக்கொண்டு..

 

 “அப்புறம் எதுக்கு உன்னை பொண்ணு பார்க்க வர சொன்னாங்க? உன் அலையவிட்டு வேடிக்கை பார்க்குறங்களா?” என்று கோபமாக கேட்க..”

 

 “அதெல்லாம் இல்ல சூர்யா. அந்த பொண்ணு இங்க ஆபீஸ்க்கு வந்து எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்ல. நீங்க தயவுசெஞ்சு பொண்ணு பார்க்க வராதீங்கன்னு சொல்லிட்டு தான் போன. அவமேல ஒன்னு தப்பில்லை”

 

“அந்த பெண்ணு தான் தெளிவாக சொல்லியிருக்கே. அப்புறம் எதுக்குடா நீ அங்க போன??”

 

“நா விசாரிச்ச வரை அவளுக்கு லவ் எதுவும் இல்லை சூர்யா. வேற ஏதோ காரணத்திற்காக தான் இந்த கல்யாணம் வேணாம்னு சொல்றானு‌ நெனச்சு, பொண்ணு பாக்க போனதுக்கு அப்றம், அவகிட்ட தனிய பேசி பிரச்சனை என்னன்னு தெரிஞ்சு அதுக்கப்புறம் ஒரு முடிவு எடுக்கலாம்னு நினச்சேன், கடைசியில இப்டி ஆகிப்போச்சு..”

 

“சரி விடுடா… நீ கிடைக்காது அவளுக்கு தான் நஷ்டம்..”

 

“இல்லடா அந்தமாதிரி ஒரு பொண்ணை மிஸ் பண்றேன் பாரு நான் தான்டா துரதிஷ்டசாலி. ஆனா, எனக்கு அதை நினச்சு கூட வருத்தமில்லடா. அந்த பொண்ணு கல்யாணமே பண்ணிக்காம இருக்கப்போறதை நினைக்கும்போது தான் எனக்கு கஷ்டமா இருக்கு”

 

“ஏன்டா அப்டி சொல்ற? அவதான் யாரையோ லவ் பண்றான்னு சொன்னீயே.. அப்றம் என்ன?”

     

“அங்க தான்டா சிக்கலே. அவ லவ் பண்ற பையன் பேரு கூட அவளுக்கு தெரியாதுடா…” 

 

“டேய் என்னடா உலர்ரா? பேரு கூட தெரியுமா காதலா..!!” 

 

“ஆமாடா” என்றவன் நிலாவை பார்த்தது முதல் நேற்று நடந்தது வரை எல்லாவற்றையும் சூர்யாவிடம் சொல்லி முடித்தான்.

 

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சூர்யா எதையே யோசித்தபடி அமைதியாக இருந்தவன், அரவிந்தை பார்த்து, “ஏன் டா அந்த பொண்ணு தான் சின்னப்புள்ளத்தனமா ஏதோ சொல்லுது. நீயும் அதைக் கேட்டு வந்து இப்டி உக்காந்து யோசிச்சுட்டு இருக்க.” 

 

“பின்ன வேற நான் என்ன தான்டா செய்றது?” 

 

“டேய் இதெல்லாம் பப்பி லவ் டா. அத போய் பெருசா நினச்சு அந்த பொண்ணு பேசி இருக்கு. நீயும் அத கேட்டு இப்டி அப்செட் ஆகி இருக்கியே என்ன டா நீ. போ டா.”  

 

“இப்ப என்னை என்ன செய்ய சொல்ற நீ”

 

“அப்டி கேளு அந்த பொண்ணு தான் அவ அப்பா பேச்சை கேட்பான்னு சொல்ற இல்ல. உனக்கு அந்த பொண்ண அவ்ளோ புடிச்சிருந்தா? பேசாம நீ அவங்க அப்பா அம்மா கிட்ட பேசி அவளை கல்யாணம் பண்ணிக்க. அதுக்கு அப்புறம் அவ இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் மறந்துட்டு உன் கூட வாழ ஆரம்பிச்சுடுவா…” என்ற சூர்யா கேவலமாக ஒரு லுக்கு விட்ட அரவிந்த், 

“ஏன்டா டேய்? இது உனக்கே ரொம்ப ஓவரா தெரியல?!”

 

“இல்லடா… உன் பேச்சுலயே தெரியுது. உனக்கு அந்த பொண்ணை எவ்ளோ பிடிச்சிருக்குனு. சரியே? தப்பே? நீ ஆசைப்பட்ட பொண்ணு உனக்கு கிடைக்கும். நீ ஆசைப்பட்டது எல்லாம் உனக்கு கிடைக்கனும். நீ அந்த பொண்ண கல்யாணம் பண்ணு அப்புறம் எல்லா சரி ஆகிடும்.”

 

“இல்ல சூர்யா… நீ நினைக்கிறது தப்பு அவ அப்படிபட்ட பொண்ணு இல்ல.”

 

“டேய் உன்ன மாதிரி அழகாக, வசதியான, நல்ல பையன் கிடைச்ச எந்த பொண்ணு வேணாம்னு சொல்லமாட்ட டா…”

 

அரவிந்த் அசட்டையாக சிரித்தவன், “அவ சொல்லுவாடா. ஏன்னா? அந்த பையன் அந்தளவுக்கு அவ மனசு முழுக்க நெறஞ்சு இருக்கான்.”

 

“அப்டி என்ன டா பெருசா பண்ணிட்டான்? ஏதோ ஆபத்துல இருந்து அவளை காப்பாத்தி இருக்கான். இது என்ன பெரிய விஷயம்?” என்ற சூர்யாவை பார்த்து மென்மையாக சிரித்த அரவிந்த், “சரி சூர்யா நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு..??

 

“என்னடா? கேளு..??”

 

“ஒரு பொண்ணும் தனக்கு வரப் போற புருஷன் கிட்ட இருந்து எதிர்பார்க்கிற குணம் என்னன்னு நீ நெனைக்ற..??

 

” உண்மையான அன்பு, பாசம், நம்பிக்கை,எந்த சூழ்நிலையிலும் தன்னை கைவிட மாட்டான்ற நம்பிக்கை அவ்ளோதான்”

 

“கரெக்ட் சூர்யா. நீ சொல்றது சரிதான். நீ சொன்ன இந்த எல்லா விஷயத்தையும் அந்தப் பொண்ணு அந்த பையன் கிட்ட அந்த ஒரு நாள்ல முழுசா உணர்ந்து இருக்க… அது மட்டும் இல்லடா அந்தப் பையன் நெனச்சிருந்த, நிலா கிட்ட எப்டி வேணும்னாலும் நடந்திருக்கலாம். ஆனா, அவன் நிலாவை தப்பா ஒரு பார்வை கூட பாக்கள. இப்ப இருக்க சூழ்நிலையில் ஒரு பெண் தனிய ரோட்ல போறதே பாதுகாப்பு இல்லை…

ஏன் குழந்தைகளுக்கு கூட இப்ப அதே நிலை தான். அப்டி இருக்க அவன் நிலா கிட்ட கண்ணியாம நடந்துகிட்ட விதம் தான், அவ மனசுல ஆழமா பதிஞ்சு போய், இந்த அளவு அவ மனசை பாதிச்சு இருக்கு. அதோட அவனோட பெண்மையை மதிச்ச குணம். ஆணாக பிறந்த எல்லாருக்கும் பெண்களை மதிக்க தெரிஞ்சு இருக்கனும். அப்டி பாத்த அவன் சுத்தமான ஆம்பளைடா.

அது மட்டும் இல்லடா அவ பார்வையிலையே அவ மனசு தன்னை பத்தி என்ன நினைக்குதுன்னு புரிஞ்சு அது அவளுக்கு நல்லது இல்லைனு நெனச்சு, எங்க தன்னோட பேரை சொன்ன அது அவளுக்கு அவனை ஞாபகப்படுதுமோனு, அவன் பேரை கூட சொல்லாம போய் இருக்கான் பாரு.. அப்டிபட்டவன் மேல காதல் வராம இருந்த தான்டா அதிசயம்”

 

“நீ சொல்றது எல்லாம் ஓகே அரவிந்த். ஆனா, அவன் யாருன்னு தெரியாம அந்த பொண்ணு காத்திருக்குறதுல என்ன யூஸ்? அந்த ஆள் கடைசி வரை கெடக்காமயே போய்டா? கொஞ்ச நாள் கழிச்சு அவ யாரையாவது கல்யாணம் பண்ண தானே வேணும்.” 

 

“இல்லடா அவ கல்யாணம் வேணாம்னு சொல்ல, அவ காதல் மட்டும் காரணம் இல்ல. இன்னும் ஏதோ பெரிய காரணம் இருக்கு…”

 

“ஏன் அப்டி சொல்ற அரவிந்த்.”

 

“ஆமா டா. எனக்கு தெரிஞ்சு நிலா ரொம்ப பிராக்டிக்கல்.. எதையும் யோசிச்சு செய்றவ. அப்டி பட்ட ஒருத்தி இந்த காதல் விஷயத்தில் மட்டும் வேற நிலாவாக இருக்க. அது தான் எனக்கு குழப்பமா இருக்கு. இதுக்கு பின்னாடி ஏதோ பெரிய காரணம் இருக்கணும்.”

சூர்யா இழுத்து பெருமூச்சு விட்டவன், “சரி டா இப்ப, நீ என்ன பண்ண போற?”

“நிலா வீட்டுக்கு ஃபோன் பண்ணி என் முடிவை சொல்ல போறேன்…”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!