கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
அத்தியாயம் 8
இளா ஆராவின் கதையை கேட்டதுக்கு அப்புறம் ரோஜா விற்கு அவர்கள் மீது தனிப் பாசமும், எப்போதும் அன்பை மட்டும் பொழியும்…, மாமியாரையும் தன் கணவன் கிருஷையும் நினைத்து பெருமையாகவும் இருந்தது… பொழுது சாய்ந்ததை உணர்ந்து பூஜையறையில் விளக்கேற்றியவள்.., தன் அண்ணனுக்கும் ஆராவிற்கும் சீக்கிரம் திருமணம் நடக்கணும் இறைவா என்று வேண்டி கொண்டு வந்தாள்..
வேதாவிற்கோ.., எல்லா மனபாரத்தையும் இறக்கி வைத்ததில் மலர்ந்த முகத்தோடு நடமாடி கொண்டு இருந்தார்…..
இளா தான் வீட்டுக்கு முதலில் வந்தான்… மனசு முழுக்க காதல் கொடுத்த பரபரப்பும்…, இந்த வீட்டுல தானே என் ஆரா இருக்கிறா…. என்ற நினைப்பு தந்த சந்தோஷமும், அவனையும் அறியாமல் இளா வை பரவசமடைய வைத்தது… சிரித்தபடியே உள்ளே போகாமல் , போர்டிகோவை ஒட்டியிருந்த சிட்அவுட்டில் அமர்ந்தபடி ஷூ வை கைகளால் தடவி கொண்டு மேலே பார்த்து எதையோ ரசித்து கொண்டிருந்தான்.
முதல் முதலில் காதல் உணரப்படும் தருணம் தரும் விளைவு இது..
“பார்த்து பார்த்து பொறுமையா தேய்… ஷூ க்கு வலிக்க போகுது…” நம்ம கிருஷ் தான்..
விழித்து கொண்ட இளா,
“ம்………என்னடா கேட்ட….?”
“இந்த ரூட்டில் டுவென்டி நயன் சீ (29 c) பஸ் வருமான்னு கேட்டேன் சார்…”
“இங்க எப்படிடா பஸ் வரும் கூமூட்டை…? வாத்தைத் தின்னு வாத்து மடையனா ஆயிட்ட மச்சான் நீ.”
“நான் வாத்து மடையன்.. ரைட்டூ….. தம்பி இங்க என்ன செஞ்சிட்டு இருந்தீங்க இவ்வளவு நேரம்….?”
“பார்த்தா தெரியல…? ஷூ கழட்டிட்டு இருந்தேன் டா.. ஷூ லேசை அவிழ்க்க வேணாமா….?”
“உன் ஷூ ல லேஸ் எங்கடா இருக்கு …? ஆஃபீஸ் வேர் ஷூ வை போட்டுகிட்டு அரைமணி நேரமா கழட்டுறான்…… மோட்டு வலையில , சிலுக்கு சுமிதா இருக்கிறது போல இந்த பார்வை பார்த்திட்டு இருக்கிற இது சரியில்லையே….எதுவா இருந்தாலும் சொல்லுடா…?”
“அது ஒன்னுமில்லை மச்சான் ஐ லவ் யூ டா.. “
ஓடி வந்த இளா , கிருஷ் ஆஹ் கட்டி பிடித்து முத்தம் கொடுத்தான்.
“சீ… விடுறா..கருமம் புடிச்சவனே…. உன் கிட்ட முத்தம் வாங்கத்தான் அஞ்சு கிலோ மீட்டர் கார் ஒட்டிக்கிட்டு அரக்க பரக்க ஓடி வந்தேன் பாரு…. அது என்னடா நெருப்பு பத்த வைக்கிற அளவுக்கு உம்மா கொடுக்குற…என்னதான் டா ஆச்சு உனக்கு…? “
“டேய் எனக்கும் வந்துருச்சு டா… “
“என்ன கண்றாவி டா வந்துச்சு…? சூ…சூ….வா … ? இந்த நெளி…, நெளியுற…ஒன்னுக்கு ஆறு டாய்லெட் கட்டி வச்சிருக்கேன்…, போய் தொலைய வேண்டியது தான…?”
“ஆமாம் டா என் வீட்டுல வாஸ்து சரியில்லை வரமாட்டேங்குது… உச்சா போகத்தான் உன் வீட்டுக்கு வந்தேன் பாரு. போடா பண்ணி…. நான் எவ்வளவு ரொமான்டிக் மூடுல இருக்கேன்…. முதல்ல என் கிட்ட வா….. சொல்லுறேன்…”
“எதுவா இருந்தாலும் பத்தடி தூரத்தில் நின்னுகிட்டே சொல்லு… இல்லைன்னா என்னை பலாத்காரம் பண்ண டிரை பண்ணினனு சொல்லி ஆண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கம்பளைன்ட் கொடுத்திடுவேன்…”
“போடா …, எப்ப பாரு காமெடி பண்ணிகிட்டு… உன் முகத்தை பார்த்து சொல்ல முடியல, என்றபடி கட்டி பிடித்தவன்…,
கண்றாவி லாம் வரல டா மச்சான் காதல் வந்திருச்சு… என் மனசில் மாற்றம் வந்ததுக்கு நீதாண்டா காரணம்… ஐ லவ் யூ டா .”. என்றபடி மறுபடி முத்தம் கொடுத்தான்..
“உன் காதலே கன்றாவியாத்தான் இருக்கு… இங்க பாருடா… நான் ஒன்னும் நீ நினைக்கிற மாதிரியான பையன் கிடையாது… நான் உன்கிட்ட நல்ல தோஸ்த்தா தான் பழகினேன், தோஸ்தானாவா இல்லை… என்னை மறந்துரு…”கிருஷ் எகிறி குதித்து ஓடினான்…
இளா துரத்த வீட்டுக்குள்ளே ஓட முயன்றவன், வாசலில் நின்றபடி சத்தமில்லாமல் அவர்களை பார்த்து சிரித்து கொண்டிருந்த ரோஜாவை அப்போதுதான் பார்த்தான்…
“அங்க என்னடி எக்களிப்பு…..? ஒருத்தன் கற்பை காப்பாத்திக்க போராட்டம் பண்ணிகிட்டு இருக்கான்.., நீ என்னன்னா இளிக்கிற….? வந்து ஒரு கை போடு…”
“நீங்க என்ன ரம்மியா கிருஷ் விளையாடுறீங்க வந்து ஒரு கை குறையுதுன்னு போட… அதெல்லாம் என் அண்ணன் உன்னை ஒண்ணும் பண்ணமாட்டார்…அவர் என்ன செஞ்சாலும் எல்லாத்துக்கும் உள்ளர்த்தம் இருக்கும்… பேசாமல் அவருக்கு ஒத்துழைப்பு கொடுங்க…”
“சரியான விவஸ்தை கெட்ட குடும்பம்டி உங்களுது. நீ செய்ய வேண்டியதையெல்லாம் இவன் செய்யறான்…..இதுக்கு நான் ஒத்துழைப்பு தரணுமா….”
“குடும்பத்துல யாராவது ஒருத்தர் கடமையாற்றினா போதும். உங்களோட இன்னைய கோட்டா இங்கேயே முடிஞ்சுது….ஓவர் சீன் போடாமல், உங்க மாமன் மச்சான் விளையாட்ட வேகமா முடிச்சிகுங்க…. என் அண்ணனுக்கு இந்நேரம் பசி எடுத்திருக்கும். சீக்கிரம் உள்ள வாங்க அண்ணா… எனக்கு உள்ள முக்கியமான வேலை இருக்குது கிருஷ்… பாதியிலே அதை விட்டுட்டு உன் குரங்கு சேட்டையை வேடிக்கை பார்க்க எனக்கு டைம் இல்லை…”
“அய்யோ சாரி…… நீங்க உள்ள போங்க மேடம் சீக்கிரம்……..”
ரோஜா உள்ளே போனதும்…
“போடி இவளே…. கேரள வெள்ளத்துல ஹெலிகாப்டர் ஓட்டிட்டு இருக்கா… பாதியில விட்டுட்டு வர முடியாது ….இவங்க தான் விமான படை மீட்பு குழு இளா…… அப்ப எங்கம்மா கண்டிப்பா கப்பற் படையா தான் இருக்கும்.. நீ வேணுமின்னா உள்ளே வந்து அந்த தாய் கிழவி முகத்தை பாரேன்…, கப்பல்ல போயி பினராயி விஜயனையே முங்கு நீச்சல் அடிச்சு காப்பத்திட்டு வந்தேங்குற ரேஞ்ச்க்கு பில்ட் அப் கொடுத்தாலும் கொடுக்கும்….”
“உனக்கு வேற வேலையே இல்லை…. எப்ப பார்த்தாலும் என் டாலிய தாளிக்கறதையே முழு நேர சோலியா வச்சிருக்க பிச்சு புடுவேன் பிச்சு…”
“யாரு நான் தாளிக்கிறேன் அந்த தாய் கிழவிய……? போடா இவனே .., உன் கிட்ட போயி நியாயம் கேட்டேன் பாரு.. நீயே அந்த தாய்கிழவியோட ஸ்லீப்பர் செல்தான பின்ன எப்புடி பேசுவ…? வா உள்ள போயி இன்னைக்கு என்ன பெர்ஃபார்ம் மென்ஸ் காட்டுதுங்கன்னு பார்ப்போம்…”
இளா வை அழைத்து கொண்டு உள்ளே சென்றான் கிருஷ்…. சுற்றி முற்றி பார்த்த இளா,
“எங்கடா என் ஆள காணோம்….. “ கிருஷின் காதை கடித்தான்…
விஷம மாக சிரித்தபடி கிருஷ்,
“யாரு என் தாய்கிழவி யா உள்ள, என்னை போட்டு தள்ளுறதுக்குக்காக சயனைடு குப்பி போல ஏதாவது ஐட்டம் ரெடி பண்ணிட்டு இருக்கும்…”
“கிருஷ் என்ன சொன்னே…? “என்றபடி ரோஜா பின்னால் வந்து நிற்க….
ஆத்தி….. உள்துறை அமைச்சரோட உளவுத்துறை இங்க தான் இருந்திருக்கா போல….
“ஒண்ணும் இல்லைடி தங்கம் , என் மம்மி எனக்காக ஜலப்பீனோ ஜப்பி செய்யுறாங்க போலன்னு சொன்னேன் டா குட்டிமா…”
“இல்லையே என் காதுல சயனைடு குப்பின்னு இல்ல விழுந்துச்சு…”
அதான் விழுந்ததுல அப்புறம் என்ன விஜயசாந்தி போல விறைப்பா விசாரணை… போடி உள்ள…கிருஷின் மனதிற்குள் தான்…
“சும்மா வழக்கம் போல காமெடி மா… யூ கோ டா….” ரோஜா உள்ளே போனதும்…
“உனக்கு நேரம் சரியில்லை போல… எதுக்குடா திடீர்னு பம்முற… “
“உன் கிட்ட நான் எவ்வளவு பாவம்னு காட்ட வேண்டாம்… நான் பேசாமல் இருக்கிறேன்… அந்த தாய் கிழவி.., ஆஸ்கார் கொடுக்குற அளவுக்கு ஒரு ஆக்டிங் கொடுக்கும் பாரு…”
“எனக்கு இப்ப அதையெல்லாம் பார்க்குற மூடு இல்ல… நான் என் ஆராவை தேடுறேன் போடா….”
“கொஞ்ச நேரம் உன் ஆராவை ஆற போடு…. மரியாதையா நீ இப்ப உட்காரல உன்னை சிலுக்கு சீமா கிட்ட கோத்து விட்டு, மாமா எஸ்கேப் ஆகிடுவேன் பார்த்துக்க…?”
“உக்கார்ந்து தொலைக்கிறேன்…. ரெண்டு காதலர்களை பிரிச்ச பாவம் உன்னை சும்மா விடாது டா…”
“இன்னும் நீ ஒன் வே ல தான் போயிட்டு இருக்க தம்பி… டூ வே ஆகனும்னா, தங்களுக்கு இந்த தானைத் தலைவனின் உதவி வேண்டும் ஐயா….” காலரை தூக்கி விட்டு கொண்டான் கிருஷ்…
“நீ தானைத் தலைவனா.., இல்ல பூனை தலைவனான்னு இப்ப ரெண்டு பேரு வந்து காட்டுவாங்க இரூடி…. நண்பன் அசிங்க படறதை பார்க்க வேணாம்னு பார்த்தேன்…. இவ்வளோ பேசிட்ட இல்ல… அதான் இருந்து பார்க்கலாம்னு முடிவெடுத்துட்டேன்.”
“எங்களுக்கு அசிங்கமெல்லாம் அத்தர் மாதிரி எடுத்து சட்டையில அப்பிட்டு போய்கிட்டே இருப்போம்…”
அதற்குள் ரோஜாவும் , வேதாவும்.. ஸ்நாக்ஸ் தட்டுடன் வந்தார்கள்…
வேதா,” லட்டு வை போயி அழைச்சிட்டு வாடா ரோ…”
“நான் போயி கூட்டிட்டு வரேன் டாலி…” இளா ஆர்வமுடன் கண்கள் பள பளக்க எழுந்தான்..
“நீ தான் ரோ வா… காலையில தான விட்டுட்டு போன அதுக்குள்ள கண்ணு தேடுதோ….? உக்காரு டா …
நாம முதல்ல சாப்பிடுவோம்… …பலகாரம்ன்னு எழுதினாலே மோப்பம் பிடிக்கிற கேசு அவ……பால்கோவாவே ரெடி ஆக இருக்கு… இப்ப பாரு லட்டு எப்படி சிட்டா பறந்து வரான்னு…” இளா வை கிருஷ் அடக்கினான்…
“அவன் கிடக்கிறான்…நீ போய் கூட்டிட்டு வா ரோ… பாவம் என் பொண்ணு, அவ வரத்துக்குள்ள இந்த வட சட்டி எல்லாத்தையும் வழிச்சு நக்கிடுவான்..….”
என்றதற்கு, கிருஷ் முரைப்பதையும் கண்டுகொள்ளாமல்.,
“நான் சொன்னது போலவே….,சந்தோஷமான விஷயத்தை சொன்ன என் சக்கரை குட்டிக்கு இந்தாங்க பால்கோவா” என்றபடி இளா விற்கு ஊட்டினார் வேதா….
“தாங்க்ஸ் டாலி… “ என்றான் இளா..
“அப்புடி என்ன உலக சாதனை நிகழ்த்தினார் தலைவர்…. பால்கோவாலாம் ஊட்டி விடுறீங்க மேடம்…” கிருஷ் காந்த….
“லட்டுவ லவ் பண்றான் டா என் பட்டு… அதுக்கு தான், சுவீட்டு , இந்த வேதா வோட கிஃப்ட்..”
“அப்படியே மண்டையில வக்கட்டா ஒரு கொட்டு……? ஊருப்பட்ட சுகரை உடம்புல வச்சிக்கிட்டு வாரத்துக்கு ரெண்டு முறை ஸ்வீட்…..? இதுல லட்டு, பட்டுன்னு ரைமிங் வேற… போம்மா கடுப்பை கிளப்பகிட்டு….”
“நான் எங்கடா தின்னேன்… பிள்ளைகளுக்கு பிடிக்கும்னு செஞ்சேன்….” வேதா கூற…
“என் டாலி மேல பழி போட ஆரம்பிச்சிட்டியா மறுபடியும்…” இளா கொந்தளித்தான்.
அதற்குள் குடு குடுவன ஓடி வந்த ஆரா…..கிருஷ்க்கும் , இளாவிற்கும் இடையில் புகுந்து கிருஷயை இடித்து தள்ளிவிட்டு இளாவினை ஒட்டிகொண்டு அமர்ந்தாள்…
“ஊருக்கு இளைச்சவன், பிள்ளையார் கோவில் ஆண்டியாம் … உனக்கு கூட நான் இளப்பமாயிட்டேன் இல்ல லட்டு…?” கிருஷ் பாவமாக கேட்க…
“அண்ணா நீ எப்போ இளைச்ச… ஆண்டியாகறதுக்கு..? உன் தொப்பைக்கு பிள்ளையாரா வேணும்னா ஃபிக்ஸ் ஆகுவ சரியா….? “
என்றபடி இளாவின் ஸ்பூனை பிடுங்கி பால்கோவா வை சாப்பிட ஆரம்பித்தாள் ஆரா..
இளா விழுந்து விழுந்து சிரிக்க….
“என்ன உன் ஆளு காமெடி பண்ணிட்டான்னு இந்த இளிப்பா….? உன் லவ்வை பத்தி லட்டுகிட்ட சொல்லிப்பாரு… யாரு காமடியன்னு அப்ப தெரியும்.. என்னை பார்த்தா சிரிக்கிறீங்க..
ஆறு புள்ள பெக்க போறோம் னு அங்களிப்பா உனக்கு…..உங்க ரெண்டு பேருக்கும் ஃபர்ஸ்ட் நைட்டே , பத்து மாசம் கழிச்சு தான் நடக்கும்.. இந்தா… பிடி …என் சாபத்தை… சபிக்கிறேன்… லுச்சா… என்று தண்ணீரை இளா , ஆராவின் மேல் தெளித்து சாபம் விட்டான் கிருஷ்..
“ஏன் கிருஷ் இப்படி ஒரு சாபத்தை கொடுக்குற… என் அண்ணனுக்கு…”
ரோஜா பொங்கினாள்…
“லவ் பன்றவனுக்கு ஃபர்ஸ்ட் நைட்டை கெடுத்து விட்டாதான், பாதிக்கபட்டவனோட வலி என்னன்னு தெரியும்.., அப்ப தான் அடுத்த முறை உன் அண்ணன் இந்த கெத்து கிருஷ் கிட்ட வாலாட்ட மாட்டான்..”
“சொல்லி முடிக்கும் முன்…, யாருக்கு ஃபர்ஸ்ட் நைட்….? உனக்கா அண்ணா…?” என்று ஆரா கேட்க….
“பார்த்தியாடி ரோஜா… பால்கோவா தின்னுட்டு இருக்குற பால்வாடி புள்ளை கிட்ட…, உன் அண்ணன் ஆறு புள்ளை பெக்குறேன்னு சவால் விட்டுருக்கான்……” அருகில் சென்று ரோஜாவின் காதில் கிருஷ்.
“அதெல்லாம் என் அண்ணன் பார்த்துப்பார். நீங்க உங்க வேலைய பாருங்க….”
ரோஜா சப்போர்ட்டினாள் இளாவிர்க்கு…
“சரி அவளே நமக்கு தான் ஃபர்ஸ்ட் நைட்டுன்னு முடிவு பண்ணிட்டா…. மாமன் ஒரு ஃபார்ம் முக்கு வந்திட்டேன்… அஞ்சாறு தூக்க மாத்திரைகளை போட்டு இந்த அரை லூசுங்களை எல்லாம் தூங்க வச்சிட்டு சீக்கிரம் மஞ்சத்துக்கு வாடி என் மரிக்கொழுந்தே….”
ரோஜாவிடம் கிருஷ் ரகசியம் பேசினான்…… பேசி முடிக்கும் முன் ஒரு குறுக்கீடு….
“அண்ணா…. அண்ணா…..”
“ம்……ம்…… என்னா…?”
திரும்பி பார்க்காமலே…,மறுபடியும் ரோஜா விடம் “ரோசாகுட்டி….” கிருஷ் , காதல்….கிசு கிசுக்க….
“அண்ணா…………….இங்க பாரு……….”
ஆரா , தான் கிருஷின் கையை நிமின்டினாள்…. ரோஜா அவளை பார்த்ததும்…, வெட்கத்துடன் விலகிக் கொள்ள..
“இப்ப உனக்கு என்னடி வேணும்….? எதுக்கு இப்ப நோண்டுற…?” கிருஷ் கடுப்ஸ்ஸாக….
“ இவ்வளவு பேர் இங்கிருக்கோம்… அங்க என்ன அண்ணிகிட்ட தனியா குஸ்… குஸ்…….? “
இதைப் பார்த்த அனைவருக்கும் சிரிப்பு வர….
“ஒண்ணும் இல்லடா லட்டு…, நைட் டின்னர்க்கு எந்தெந்த டிஷ், எப்ப கிடைக்கும்னு கேட்டேன்.. அதான்.”.கிருஷ் சமாளித்தான்…
“என்கிட்ட தான எப்போதும் மெனு கேட்டு சமைப்பீங்க.. இப்ப என்ன புது பழக்கம்…. வாங்க அண்ணி…. இன்னைக்கு நைட்டு புல்லா நாம மொட்டை மாடியில சாப்பிட்டுகிட்டே என்ஜாய் பண்ணலாம்…..” ரோஜாவின் கையை பிடித்தபடி ஆரா கூற….
“ஆமாண்டி…ராத்திரி முழுக்க சாப்பிட்டுக்கிட்டே இருக்கிறதுக்கு பேரு என்ஜாய் மெண்ட்டா…? சோத்து மூட்டை.., எனக்கு கல்யாணமாகிட்டு தெரியுமா….? ரோஜா என் பொண்டாட்டி அது ஞாபகம் இருக்கா…?அவ என் கூட தான் இருப்பா….” கிருஷ் உரிமையை நிலை நாட்டினான்…
“இது தெரியாதா…? அவங்க உங்க பொண்டாட்டி தான்…யாரு இல்லைன்னு சொன்னா….? நான்தான் நாத்தி விளக்கு புடிச்சேன் உன் கல்யாணத்துக்கு…. அதுக்கு கொஞ்சமாச்சும் நன்றி இருக்கா உனக்கு….” வம்பை தொடர்ந்தாள்..
ஒரே இடத்தில் ரெண்டு அவ்வாபட்டிகள்(வாயாடிஸ்) இருக்கும்போது இந்த மாதிரி வாய்க்கால் தகராறுகள் ஜகஜமப்பா…… என்று மற்ற மூணு பேரும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு கொண்டே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்….
“விளக்கு புடிச்சதுக்கு, நன்றி யாமா….? இங்க பாரு…, நீ என் கல்யாணத்துக்கு விளக்கு பிடிச்சதுக்கு.., என் பொண்டாட்டி உனக்கும் , இளாவுக்கும் நடக்குற கல்யாணத்துல நாத்தி விளக்கு புடிப்பா… போதுமா…? சொல்லி காட்டுறா பாருடா …..அப்புறம் அவ்வளவு தான்….”
“என்னது…. அவ்வளவு தானா? அப்போ உன் கல்யாணத்துக்கு இளா, மச்சான் மோதிரம், செயின், பிரேஸ்லெட், அது கூட ஒரு வோக்ஸ்வேகன் காரு எல்லாம் கொடுத்தான்ல….? நீ யும் எல்லாத்தையும் எங்க கல்யாணத்துக்கு கொடுக்கணும்… இல்லைன்னா இந்த ஆரா யாருன்னு தெரியும்…. அண்ணனு பார்க்க மாட்டேன்……”( ஹெலிகாப்டர் கேட்காம போனாளே)
அனைவரும் வாயடைத்து போயினர்… இளா வுடனான திருமணத்தை பற்றி பேசியதும்…எல்லாருக்கும் அதிர்ச்சி என்றால்…, இளா விற்கு இன்ப அதிர்ச்சி…. முதலில் சுதாரித்து கொண்டது கிருஷ் தான்..
“பார்த்தியாமா…பொண்ணு , பொண்ணுன்னு தலையில தூக்கி வச்சி ஆடின. இப்ப பாரு உன் சின்ன பொண்ணு என்னென்ன லிஸ்ட் போடுறான்னு.? எல்லாத்தையும் ஞாபகம் வச்சி இருக்கு இந்த குட்டி பிசாசு….”
மனம் நெகிழ்ந்து இருந்த வேதாவோ…. “அவ சொல்றதுல என்ன தப்பு டா… அவ கேக்கறதுக்கு மேலேயே செஞ்சு அனுப்புவேன்டா என் பொண்ணை….”
“நீ எதுக்கு மாதாஜி செய்யணும்… என் கிருஷ் அண்ணா தான் எல்லாத்தையும் கொடுக்கணும்… என் அண்ணி விளக்கு பிடிக்கணும். அவளோ தான்..,” ஆரா , கிருஷை டார்கெட் செய்தாள்.
கிருஷ்…,
“பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்..,
பாலை குடிச்சிப்பிட்டு பாம்பாக கொட்டுதடி….
என்று பாடிக்கி கொண்டே எல்லோரையும் பார்க்க…..”
(ம்….க்கும் ……..வழக்கம் போல யாரும் தலைவரை கண்டுக்கல..)
“நான் டிசைன் செஞ்ச டிரெஸ்ஸை காட்டுறேன்… வா இளா நாம போகலாம்…..”
இளாவைஇளாவை கையை பிடித்து அழைச்சிட்டு உள்ளே போனாள் ஆரா….
காற்றில் உலா வந்து கொண்டிருந்த இளா… தன்னை மறந்து அவள் பின்னே சென்றான்…
வேதா ,மேல் நோக்கி கடவுளுக்கு நன்றி சொல்ல, ரோஜா வேதாவை கட்டி கொண்டாள்…. அதை பார்த்ததும்….
“ஏது பந்த பாசம்…?
எல்லாம் வெளி வேஷம்….”
கிருஷ்தான் பாடி…. கலைத்தான்….
“இப்ப எதுக்குடா கழுதை கத்துற…?” வேதா தான் கேட்டார்…
“நான் இங்க அசிங்கபட்டு நிக்குறேன்.. உங்களுக்கு ஆனந்த கண்ணீரா… “
“அய்யோ …, இதை நான் எதிர்பார்க்கவே இல்லை….எப்படி பேசினா பாருடா என் பொண்ணு…. முத்து முத்தாய்….”
“முத்து முத்தாய் பேசினா… பொறுக்கி மணியா கோர்த்து கழுத்திலே போட்டுக்க வேண்டியது தான.?”
இடையில் ரோஜா, நழுவ பார்க்க.
“எங்கடி போற..?”
“இல்ல கிருஷ்…. அண்ணனுக்கு டீ கொடுக்க மறந்துட்டேன் அதான் கொடுக்கலாம்னு……” ரோஜா கூற….
“டீ வேணாம்… ஒரு சொம்புல பாலும், இந்த தட்டுல இருக்குற பால்கோவாவையும் கொண்டு போயி வை… அப்படியே மறக்காமல் விளக்கை எடுத்திட்டு போயி புடி… அதான் நீதான் விளக்கு பிடிக்கணும்னு, விளக்கமா சொல்லிட்டு போனாளே உன் நாத்தனார்…”
“சும்மா…… வேற வேலையே இல்லை கிருஷ் உங்களுக்கு, சின்ன பொண்ணு கிட்ட எப்ப பாரு வம்பு வளர்த்து கிட்டு….”
“கோழி குஞ்சு சைஸ்ல இருந்துகிட்டு எப்படி கொரில்லா தாக்குதல் நடத்தினா பாருடி….அவளா குழந்தை……. “
“ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் …..
உலகம் புரிஞ்சு கிட்டேன் ……
கண்மணி என் கண்மணி……….
நாலும் தெரிஞ்சிடுச்சி…….
ஞானம் பிறந்திடுச்சி ……
கண்மணி என் கண்மணி…..” கிருஷ் தொடர்ந்தான்..
“விடு ரோ…… இவன் எப்போதும் இப்படித்தான்….. நிறைய ஸ்நாக்ஸ் சாப்பிட்டா….ஜீரணம் ஆகாமல் எல்லார்கிட்டயும் வாயாடிச்சு, பாட்டு பாடி செரிக்க வச்சிப்பான்…
வா நாம டின்னர் செஞ்சு எடுத்து கிட்டு மொட்டை மாடிக்கு போவோம்……இந்த தடியன்…,பசங்கள தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கோ அப்பப்ப…பாவம் மனசு விட்டு பேசட்டும் அதுங்க…..”
“விடுங்க மீ….. நான் பார்த்துக்கிறேன்… “
வேதா கிச்சனுக்குள் சென்றதும், கிருஷிடம் ஓடி வந்தாள்….
டிரஸ் மாற்ற மாடிபடி ஏறியவனை, கையை பிடித்து நிறுத்தி..,
“கிருஷ்”… அழைக்க,
அவன் என்னவென்று திரும்பி பார்க்க…..
அவனை கட்டிபிடித்து ,கன்னத்தில் ஒரு இச்…….
“அறிவு இருக்காடி உனக்கு…,”
ரோஜா திரு திருத்தாள்.
“கன்னத்துல போயி கொடுக்குற முத்தம்……….,
கல்யாணத்துக்கு அப்புறம் உதட்டுல
கொடுக்கலைன்னா ஆயிடும் தெய்வ குத்தம்………”
டி ஆர் ஆகிவிட்டான்…
“எதுக்குடி இந்த ஐஸ்… என்ன உன் புருஷனுக்கும் இரக்கம் காட்டுற….?”
“இன்னைக்கு ரோஜா ஹேப்பி அண்ணாச்சி…..”
“நல்ல மூடில , மண்ணை போடுற மாதிரி அண்ணாச்சி… எதுக்கு ஹேப்பி டி… ? உன் அண்ணனுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனதுக்கா…?”
“அது மட்டுமில்ல…., கூடிய சீக்கிரம் , செத்து போன மாமாவை திரும்ப பெத்துதரேன்னு , மீ க்கு வாக்கு கொடுத்திருக்கேன் கிருஷ்…”
“பாருடா…பாருடா…. செத்து போன கோதண்டம், ரிட்டர்ன்ஸ்ஸா….. துணைக்கு உங்களை சமாளிக்க எனக்கு ஒரு ஆள் வரப்போகுது…. அஞ்சாறு தூக்க மாத்திரை கலக்காதடி, அப்படியே டப்பாவோட கலந்துடு சரியா….?”
“அய்ய…. ஆளை பாருங்க…. மாத்திரையை விட்டு தொலையுங்க. இன்னும் புது மாப்பிள்ளை இவரு…..வெயிட் பண்ணுங்க எல்லாரும் சாப்பிட்டுட்டு, தூங்கினதும் வரேன்…. அண்ணன் அவரு மனச ஆராக்கிட்ட சொல்லட்டும்.. இடையில போய் அவங்களை இங்கிதம் இல்லாமல் தொல்லை பண்ணாதீங்க கிருஷ்…”
“எங்களுக்கும் எல்லா சங்கீதமும் தெரியும்…… போடி….”
“ம்… க்கும். இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…”.குமட்டில் குத்தி விட்டு , சிரித்தவாறே
படி இறங்கினாள்…
உள்ளே போன இளாவிற்கு, இன்ப பட படப்பு… மூச்சு முட்டியது…
“என்னாச்சு இளா…? “
அருகில் வந்து நெற்றியில் கைவைத்து பார்த்தாள் ஆரா…. இளாவின் மனதினுள் முதல் காதல் தொடல்.. உடலின் ஒவ்வொரு பாகமும் பாப்கார்ன் போல பாப் அப் ஆகிக்கொண்டிருந்தது. அவளது இந்த ஸ்பரிசம் தரும் உணர்வுகள் புதிது.
நேற்றுவரை ஆராவின் தொடுதல் அவனுக்கு புதிதல்ல, ஒன்றாய் வளர்ந்ததால், வளர்த்ததால்…., வயசுக்கு வந்த பொண்ணுக்கிட்ட தொட்டு தொட்டு என்ன பேச்சு..? கண்டிக்க ஆள் இல்லாததால்,
அருகருகே அமர்வது, எல்லைத்தாண்டா அரவணைப்பு , அணைப்பு, மடித்தூக்கம், கட்டிப் புரளும் சண்டைகள், கன்னத்து பிள்ளை முத்தங்கள் என சகஜங்கள் நிறைய.
இன்று இளாவின் ஹார்மோன்கள் ஆராவைப் பார்த்து எக்குத்தப்பாய் தப்பு தாளங்கள் போட, தடுமாறினான்.
ஆராவின் உதடுகள், திடீரென இளாவின் இதழீர்ப்பு மையமானதில், … கட்டுபடுத்த முடியாதவனாய் , அவன் முன்னேற,
பவர் கட் ஆகி விட்டது…. யூ பீ எஸ் சில் மாறி வரும் சில நொடிகளில், சுதாரித்து கொண்டான்…. தலையை உலுக்கி கொண்டு அருகில் இருந்த சேரில் அமர்ந்து விட்டான்… இவன் விட்டாலும் அவ எங்க விடுவா…. போயி அதே சேரில் பாதி கை பிடி பாதி இளா மடியிலும் என ஆரா அமர…இளாவின் கண்ட்ரோல் யூவர் செல்ஃப்…? மந்திரம் செல்ஃபில் போய் அமர்ந்து கொண்டது…
இளா காதல் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்தான்…
“ஆரா…. “ இளா கூப்பிட…
“ம்….ம்……” மட்டும் கூறினாள்…
மடியில் லேப் டாப் பை நோண்டி கொண்டிருந்த ஆரா…
மீண்டும் நம் காதல் பொக்ரான் விடாமல்.., “லட்டு …!”
“ம்…..ம்..ம்……”
இந்த முறை அழுத்துடன் ”ம்” போட்டவள்…, இன்னும் பின்னே அவன் மடியில் நெருங்கி அமர்ந்து முதுகினால் மொத்தினாள்.
தொல்லை பண்ண கூடாதென… சிம்பாளிக்கா இடித்த இடி கூட, அவன் இதயத்தில் தான் விழுந்தது.…
“வரைந்த டிசைனை காட்டுறன்னு, நீ மடிமீது செய்த ஆக்கிரமிப்புகள், எனக்குள்ளே டிசைன், டிசைனாக காதல் ஊற்றெடுக்க வைக்கிறது பாரடி…என் வசம் நானில்லை கண்மணி” இளா முணுமுணுப்பாய் கவி பாடிக் கொண்டிருக்க,.
உண்மையில மன்மதன் அம்பை எடுத்து இளாவின் விலாவினை சிறப்பித்து கொண்டிருந்தான்..