கனலியின் கானல் அவன்(ள்)-14.1

ஹாய் ஹனி… “என வண்டியை விட்டிறங்கிய கயல் அவர் அமர்ந்திருந்த  இடம் வந்தாள். 

 

“என்ன இன்னைக்கு லேட்டா? “

 

“யெஸ் ஹனி ஹேவி ட்ராபிக்…ரொம்ப  டையர்ட்” என அவருக்குப் பக்கத்தில்  இருந்த இருக்கையில் சாய்ந்தமர்ந்தாள். 

 

“ஜஸ்ட் வெய்ட் ஐ வில் மேக் டீ போர் யூ.”என கூறிக்கொண்டு எழப்பார்த்த அரசுவின்  கையை பற்றிய கயல் அவர் முகம் பார்க்க,   

 

“என்னடா? “எனக் கேட்டார், 

 

“என்னாச்சு ஹனி என்கிட்ட ரெண்டு நாளா  ஒழுங்கா பேசவே மாட்டேன்ற? வாட் டிட் ஐ டூ? “

 

அவளை பார்த்தவர்,”உனக்கு நீ என்ன  பண்ணிட்டு இருக்கன்னு தெரியாதா? இது சரின்னு நினைக்குறியா கண்ணம்மா?அது  உன் லைஃப எவ்வளவு பாதிக்கும்னு நீ நினைக்கவே இல்லை.பட் என்னால அப்படி இருக்க முடியாதே. “

 

“அப்போ இப்பவும் என்னாலதான்  எனக்காகத்தான் வேணாம்டற,உனக்கு,  உன் மனசுக்கு பிடிச்சு தானே இருக்கு ஹனி.”

 

“ஜஸ்ட் ஷட் அப் கயல்.எனக்கு வேணும்னு  நான் கேட்டேனா உன்னை?எனக்கு தேவையிருந்திருந்தா இவ்வளவு நாள் எதுக்கு வெய்ட்  பண்ணப்போறேன்.நீ நினைக்குறது போல எல்லாம் நடத்திர முடியாது.நாம இப்போ கனடால இல்ல  இருக்கோம்.அதை முதல்ல புரிஞ்சுக்கோ. நாம வாழ்ந்த லைஃப்ல இதெல்லாம் சகஜம் தான்.ஆனா இங்க அப்படி இல்லை  கூட்டத்தை போட்டு பேசி பேசியே தூக்குல தொங்க விட்ருவாங்க. 

 

நீ நினைக்கிறது நடந்தா அதோட நல்ல  பக்கத்தை மட்டுமே இப்போ வரைக்கும் நினைச்சுட்டு இருக்க.பட் அதை விட அதோட மற்றைய பக்கம் ரொம்ப  கரடுமுரடானது. உன்னாலயோ என்னாலேயோ,ஏன் மீனாவாலயோ கடக்கிறது ரொம்ப கஷ்டம் டா.இதோட இந்த நினைப்பை விற்று. “

 

“ஹ்ம்ம் ஓகே பட் ஒன் திங் ஹனி… டுவெண்ட்டி இயர்ஸ் எனக்காக,எனக்காக மட்டுமே (இதை அழுத்தி சொல்லியவள்) உன் லைப கூட பார்க்காம  வாழ்ந்ததுக்காக, நானும் ஒரு முடிவு பண்ணிட்டேன்.இனி நானும் உனக்காக மட்டுமே வாழ்ந்துரலாம்னு… உன்னால வாழ  முடியிறப்ப உன் பொண்ணு என்னால முடியாதா என்ன. “

 

“கயல் என்ன பேசுறேன்னு புரிஞ்சிதான்  பேசுறியா? வை டோன்ட் யு ன்டர்ஸ்டான்ட் மீ? எனக்கப்புறம் யாரிருக்கா உன்னை  பார்த்துக்க?பொண்ணா அது ரொம்ப கஷ்டம்.நாம இங்க வந்ததே குறிப்பா நான் இங்க வந்தது உனக்காக ஒரு வாழ்க்கையை அமைக்கணும்னு தான்.  ”  

 

“ஏன் உங்க மீனாட்சி வாழுறாங்களே தனியா  அதுபோல நானும் வாழுறேன்”

 

“அவளுக்கு அவளை சுத்தி அவ பேமிலி  இருக்கு.நமக்கு நம்மளை விட்டா யாரிருக்கா? “

அவங்களுக்கு அவங்க பேமிலி இருக்குன்னு  சொன்னாங்களா உங்க கிட்ட? 

 

“ஏன் அவ… அவ அண்ணன் வீட்ல தானே  அவங்ககூட இருக்கா? “அரசு தடுமாற்றத்துடன்  கேட்க, 

 

“அவங்க அண்ணன் வீட்டோட பக்கத்துல அவங்க மட்டும் தனியா தான் இருக்காங்க.அடுத்தவன் பார்வைக்கு  அவங்க அண்ணனோட.இப்போ உங்க பார்வைக்கு தெரிந்தது போல.அதோட அண்ணன் பையனை அவங்க அறியாமலையே அவங்களுக்கு துணையா வெச்சிருக்காங்க.

 

அவங்க ஏன் துணை தேடிக்கல தெரியுமா? பொண்ணால நல்லவனை தேடிக்க ரொம்ப கஷ்டம்.ஆனா பசங்க நினச்சா பொண்ணை நல்லா பார்த்துக்கலாம்ல.அதுவும் பொண்ணா அவங்க எப்படி அவங்களளுக்கான துணையாக தைரியமா, நபிக்கையா ரெண்டாந்தாரமா இன்னொருத்தரை ஏதுக்குவாங்க?அந்த தைரியம்,நம்பிக்கையை யாரும் அவங்களுக்கு கொடுத்தா தான் உண்டு. அவ்வளவு பெரிய சொசைட்டில இருக்கவங்க இப்போ அவங்களுக்கான துணையை தேடிக்கணும்னு நினைக்குறப்ப, வை டோன்ட்  யு ஹனி?

 

அதுவும் நீங்கன்னு நான் கேட்டதுக்கப்றம். அப்டின்னா இன்னைக்கு வரை உங்க மேல இருக்க நம்பிக்கையும் பாதுகாப்பையும் அவங்க இன்ன யார்கிட்டயும் பார்ததில்லைனு தானே அர்த்தம். “

 

“வில் ஸ்டாப் திஸ் டாபிக் கண்ணம்மா.”

 

“ஓகே ஹனி,பட் அம்மா உங்களுக்கு துணைன்னு என்னை வெச்சிட்டு போனதுக்கு என்னை அவங்க கூடவே கூட்டி போயிருக்கலாம்.என்னால தானே உங்க லைப்…”

 

“கயல்….” கைகளை அவளை அடிப்பதற்காக அரசு ஓங்கியிருக்க அப்படியே  நிறுத்திக்கொண்டார்.  

 

நீட்டிய கையின் சுட்டுவிரல் நீட்டி அவளிடம், “இதுக்கு மேல பேசின…’,என உறுமியவர்,’போ உள்ள… “

என்றுவிட்டு அப்படியே விறுவிறுவென  அவரறைக்கு சென்றுவிட்டார். 

 

அரசுவின் மனம் ஒரு நிலையில்லாம் தவித்தது.நேற்று முன்தினம் மீனாட்சியை  சந்திக்க சென்ற அரசுவிடம் மீனாட்சி கூறியவை நினைவில் வர,’அவளே வாய்விட்டு கேட்டிருக்காள்னா,எந்தளவுக்கு  அவள் கஷ்டப்பட்டிருப்பாள்…ஆனா கண்ணம்மா!.அவளுக்கான வாழ்க்கை என்னால பாதிச்சிருமே…’

 

இவ்வளவு வருடங்கள் கடந்தும் என்றுமே  இருவருக்கிடையே எதைப் பற்றியும் இந்தளவுக்கு வாக்குவாதம் செய்ததில்லை. ஏன் கயல் கோவித்துக்குக்கொண்டு  செல்லச் சண்டையிட்டாலும் அவளுக்கு எதிராய் எதுவும் பேசியதில்லை.சிறிது நேரத்திலேயே அவர் கழுத்தில் தொங்கிக்கொண்டு சமாதானமாகி விடுவாள் அவளும். 

 

இன்றோ இருவரும் ஒருவரை ஒருவர்  எதிர்த்து பேசிக்கொள்ள அவள் கடைசியாய்  கூறிய வார்த்தை அவரை மிகவும் நோகடித்து விட்டது.தான் பேசியது சற்று  அதிகப்படிதான் என்று தோன்றினாலும், இவரை சம்மதிக்க வைக்க வேறு வலி அவளுக்கு தெரியவில்லை.

‘எனக்காக எனக்காகன்னு இனி போதும்  ஹனி.என்ன ஆனாலும் இதை நடத்தாம விடப்போறதில்லை.’மனதில்  கூறிக்கொண்டவள்,உள்ளே செல்ல அவரோ அவர் அறையினுள்ளே இருந்தார். 

 

அவரின் அறை அருகே சென்றவள், 

“என்னை அடிக்க கை நீட்டிடல்ல, கண்ணம்மா நொண்ணம்மானுகிட்டு வருவல்ல அப்ப இருக்குனக்கு.எனக்கு அம்மா இருந்திருந்தா இன்னைக்கு நீட்டின கையை அப்படியே ஒடச்சிருக்க மாட்டா”

 

“ஆமா வாரவ உன்னை பார்த்துக்க தானே வருவா? வந்திருந்தா புரிஞ்சிருக்கும் சித்தி கொடுமை எப்படின்னு. “உள்ளிருந்து அவர் குரல் கொடுக்க, 

 

“நான் எப்போ சித்தி வேணும்னேன். உனக்கு அந்த ஆசை வேற இருக்கோ. எனக்கு அம்மாதான் வேணும்.அதுவும் மீனாம்மா.உன்னால முடிஞ்சா ஓகே  சொல்லு.அவங்க வந்து வெக்கத்தை விட்டு கேப்பாங்களா அவங்களை கல்யாணம் பண்ணிக்கோன்னு.நீதான் கேக்கணும். முடிவு பண்ணிக்கோ இல்லன்னா இப்படியே நாம ரெண்டு பேருமா இருந்துக்குவோம். ஆனா உனக்கப்புறம் என் நிலைமை.ஹ்ம்ம்  பார்த்துக்கலாம் விடு.என் விதி உன் கையாலேயே சாப்பிடனும்னு.

 

ஆனா ஒன்னு ஹனி,என்ன காரணத்துக் காகவும் நானும் என் முடிவை மாத்திக்க  மாட்டேன்.உன் மேல ப்ரோமிஸ்.”என அவன் கதவில் ஓங்கி அடித்தவள் அவன் கதவை  திறக்கும் முன்னமே அவலறைக்குள் ஓடி நுழைந்துக்கொண்டாள்.

 

“ரொம்ப ஹர்ட் பண்றேன் ஹனி,ரொம்ப  சாரி.போதும் எனக்காக வாழ்ந்தது. இனியாவது கொஞ்சம் சந்தோஷமா, நிம்மதியா வாழ உங்களுக்கு கண்டிப்பா  மீனாட்சி அம்மாவோட துணை வேணும். ரொம்ப லேட் தான்,ஆனால் ஹாபியா இருப்பல்ல. அதுக்காக கொஞ்சம் ஹர்ட்  ஆகலாம் பரவால்ல.. உன் முகத்துல சந்தோஷத்தை பார்க்கணும் எனக்கு.இவ்வளவு நாளும் நான் பார்த்தது எனக்கானது  மட்டும்.இனி உன் முகத்துல உனக்கான சந்தோஷத்தை பார்க்கணும், பார்ப்பேன். ஐ லவ் யூ சோ மச் ஹனி.’

 

இறுதி வரிகள் அவள் மனம் கூற, நினைவுகளில் அவள் நாயகன்.இதழில்  மென் சிரிப்புடன் மனதில் ஓர் இதம் பரவுவதை உணர்ந்தாள். 

 

‘உன் முன்னாடி இதை கூறியிருந்தேன்னா உன் முகம் எப்படி மாறியிருக்கும்ல.என்னை  அப்படி நினைக்கிற அளவுக்கு என் மேல உனக்கு அவ்வளவு லவ்வா வரு? உன் லவ்வை எனக்கு அனுபவிக்க குடுத்து வைக்கல போல.உன்னை ரொம்ப மிஸ்  பண்றேன் வரு.தூர இருந்தாவது உன்னை பார்க்க லாம்னா,கன்னை தூக்கிட்டு கள்வனை பிடிக்க ஓடிர்ர.நா என்ன பண்ணட்டும் !!!

 

இவள் அவன் நினைவுகளில் வாட,அவனோ அங்கு அவள் நினைவில் மலர்ந்திருந்தான்.