கனலியின் கானல் அவன்(ள்)-16.1

“கயல் நான் சொன்னது போலவே  அவங்களுக்கான கோட்டேஷனை ரெடி  பண்ணி எடுத்துட்டு வா,டைமில்ல நமக்கு. இன்னைக்கே அனுப்பிரனும்,நேற்று வரு  சொல்லவும் தான் எனக்கே ஞாபகம் வந்தது. நீ கூட மறந்துட்ட.”

 

“சாரி மேம்,கிவ் மீ பிப்டீன் மினிட்ஸ் ஐ வில்…   “

“ஹேய் எதுக்கிப்போ சாரி? வரு எப்படியும் பதினொரு மணியைப்போலத்தான்  வருவான்.அதுக்குள்ள ரெடி பண்ணிட்டோம்னா அவன் வந்ததும் பார்த்துட்டு அனுபிரலாம் டா. “

 

இருவரும் இன்று செய்யவேண்டிய முக்கிய வேலைகளை பேசிக்கொண்டு அவர்களது  அறைக்கு வந்தனர்.அறைக்கு நுழையுமுன்னமே அறைவாயிலில் வைத்து கயலின் கை பற்றிய மீனாட்சி, 

 

“இன்னும் என்னை மேம்னு தான் பேசுற,   அப்போ நான் … ” எதுவோ சொல்ல வந்தவரை இடைநிறுத்திய கயல், 

 

“இது ஆபிஸ்,அம்மா பொண்ணெல்லாம்  வீட்லதான் சோ… என் வீட்டுக்கு எப்போ  வரேன் சொல்லுங்க,உங்களுக்கு ப்ரோமோஷன் தரேன்.சீக்கிரமே  எப்போன்னு சொன்னிங்கன்னா மனசுல ஆசையா கூப்பிடுறத நானும் வாயால கூப்பிடுவேன். “

 

“சரீங்க மேடம்.உங்க அப்பா எப்போ  கூட்டிப்போக வரார்னு கேட்டு சொல்லுங்க நானும் வரேன்.நீ தர ப்ரோமோஷனுக்காக மட்டும் தான்.பாவம்னு இருந்தா உங்கப்பா  ரொம்பதான் பேசுறார். “

 

சிரித்துக்கொண்டே அவர் கைப்பற்றியவள், 

 

“தேங்க்ஸ்.தேங்க்ஸ் அலோட்.கண்டிப்பா  சீக்கிரமே வந்துருவாங்க. ” 

என்றவள் அவர் கன்னத்தில் முத்தமிட்டாள். அவருமே அவள் கன்னத்தில் கைவைத்தவர்  ஹாபியா இருடா என்று விட்டு இருவருமாக அறையினுள் நுழைய, 

 

“குட்மோனிங் மீனாட்சி.இதான் நீங்க ஆபிஸ்  வர நேரமா? நீங்களே இப்படி வந்தீங்கன்னா உங்க பிஏ எப்டி ஏர்லியா வருவாங்க? நானும் எவ்வளவு நேரமா வெய்ட்  பண்ணிட்டு இருக்கேன்.வந்ததே லேட் இதுல வாசல்ல வெச்சு என்னவோ கொஞ்சல்ஸ் வேற.இது ஆபிஸா இல்லன்னா… “

 

முகத்தை சற்று கடுமையாக  வைத்திருந்தவாறே ருத்ரா கேட்கவும் மீனாட்சியை விட ஓரடி முன்னே எடுத்து  வைத்திருந்த கயல்,

 

“சாரி சார்.ஏர்லியா வந்துட்டேன்.மேமும் நானும் பேக்டரி போய்ட்டு வர்றதுக்கு  கொஞ்சம் லேட்டாகிருச்சி. “

 

அவனிடம் லேட்டாக வந்ததுக்கு விளக்கம்  தர, ‘நடுராத்திரில வீட்டுக்கு வந்து விடியற்காலைல எந்திரிச்சு ஓடி யோடி இவள  பார்க்க வந்தா நம்ம மேடம் அவங்களோட மேடமை கொஞ்சிகிட்டு நிதானமா வர்ராங்க.பார்த்து இருபது நாளைக்கும் மேலாச்சு.என் நிலைமை புரியுதா இங்க யாருக்கும்… ‘ கயலை பார்த்தவாறே மனதில்  பேசிக்கொண்டிருந்தவனை பார்த்த மீனாட்சி,   

 

“வெரி குட் மோனிங் வரு.என்னடா,இந்த நேரத்துக்கெல்லாம் ஆபிஸ் வர மாட்டியே. என்ன விஷயம் இப்போவே தரிசனம்  தந்திருக்க.பேச்சு,பார்வையெல்லாம் கூட சரியில்லையே… “

கூறிக்கொண்டே  அவனருகே செல்ல, அவர் தன்னை கண்டுகொண்டதை  உணர்ந்தவன், 

 

“அத்தம்மா… என்று எழுந்து அவரை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.நைட்  வர லேட்டாச்சு, இல்லன்னா வீட்டுக்கு வந்திருப்பேன். அதான் காலைலயே உங்களுக்கு முன்னமே வந்துட்டேன்.என்னாச்சு முகமெல்லாம் கொஞ்சம் பிரகாசமா இருக்க போல தெரியுதே? என்ன ரகசியம்? “

மீனாட்சியிடம் வம்பிழுக்க அவரோ, 

 

“அதெல்லாம்  ஒன்னுமில்லயே… சரி  இப்போ ஆபிஸ் வந்ததுக்கு இதான்  காரணமா இல்லன்னா … வேறேதாவது … “

என்று அவர் பேசிக்கொண்டே  அவரிருக்கையில் அமர்ந்தார்.   

 

“அதுக்காகவுக்கும்தான் அத்தம்மா.”  என்றவன் அவரருகே இன்னுமொரு இருக்கையொன்றை போட்டுகொண்டு அமர்ந்தான். 

 

“ஹேய் கயல் என்ன அங்கேயே நின்னுட்ட, பயந்துட்டியா?இவர் அப்பப்போ அவரு  போலீஸுன்னு இப்படித்தான் காமிச்சிருவார்.இல்லன்னா நாம மறந்துருவோம் பாரு.நீ போய் அதை ரெடி  பண்ணி கொண்டு வா. ” 

 

மீனாட்சி கயலிடம் கூறவும் அவலறைக்குள்  அவளும் நுழைந்துக்கொண்டாள். நுழைந்தவளில் மனமெல்லாம் நீண்ட  நாட்களின் பின்னர் அவனைக்கண்டது மனதுக்கு இதமாக இருக்க அவன் பார்வை இவளை தொடர்ந்து வருவதை உணர்ந்தவள் தன்னை பார்க்கிறானா என நிமிர்ந்தவளை ஏமாற்றாது அவனும் அவளைத்தான்  பார்த்துக்கொண்டிருந்தான். சட்டென்று பார்வையை தாழ்த்திக்கொள்ள அவன் முகத்திலும் புன்னகை.

 

அந்த புன்னகையுடனே தன்அத்தையிடம் கடந்த நாட்களாக நடந்த வேலைகளைப்பற்றி பேசிக்கொண்டிருந்தான்.பேசிக்கொண்டிருந்தவன் மீனாட்சியிடம், 

 

“நான் அங்க இருக்கப்பவே அப்பா பேசினாங்க அத்தம்மா.நீங்களும் நான்  வந்ததும் பேசிட்டு சொல்றதா சொன்னீங்கலாம்.எனக்குன்னா சரியா படல.பொண்ணு ஒன்னு வேற இருக்கதா சொல்ராங்க.அப்டி இருக்கப்ப … “

 

மீனாட்சி ருத்ரா இருவரின் பேச்சுக்கள் கயலின் காதிற்கு கேட்டாலும் அவளது வேலையை அவள் கை அதன் பாட்டில்  செய்துக்கொண்டிருக்க இப்போ அவன் பேசிய வார்த்தைகள் அவள் காதில் கேட்டதும்,கை அதன் வேலையை நிறுத்தியிருக்க அவன் பேச்சுமட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. 

 

“ஏன் வரு பொண்ணு இருந்தா என்ன? ” மீனாட்சி ருத்ரனை பார்த்து கேட்கவும்,   

 

“என்ன அத்தம்மா பொண்ணுன்னா  சின்னப்பொண்ணும் இல்லை.அதோட இப்போ கல்யாணம் பண்ண  நினைக்குறார்னா.அதுக்கப்புறம் அந்த பொண்ணோட நிலை.அதான் “

 

“வரு அதுக்காகத்தானே கல்யாணம்  பண்ணிக்கணும்னு நினைக்குறாங்க.” 

 

“அப்பா என்கிட்ட அப்படி சொல்லல.அப்பா  ஏதோ … “

வருவின் பேச்சை இடையில் நிறுத்தியவர், 

 

“எனக்கு உன்கூட பேசணும் வரு  அதுக்கப்புறம் நீ என்ன சொன்னாலும் ஓகே  தான்.ஈவினிங் பிரீன்னா வெளில போலாமா? “

 

“கண்டிப்பா போலாம் அத்தம்மா. மத்தவங்களுக்காக நீங்க சரின்னு சொல்ல  மாட்டீங்கன்னு தெரியும்.பட் சரின்னு சொல்லவேண்டிய நிர்பந்தத்துல இருக்கீங்கலா? யேன்னா எனக்கு இது சரியாவரும்னு தோணல அத்தம்மா.” 

 

மீனாட்சிக்கும் ஒன்றே ஒன்று தெளிவு படுத்திக்கொள்ள வேண்டுயிருக்க, 

 

“பொண்ணு இருக்கதாலத்தான்  வேணாம்னு சொல்றியா வரு? எனக் கேட்டார்.

“அதுவும் ஒரு காரணம் தான்…” என்றவன் மீதியை ‘அவனும் அவன் மண்டையும்’ வாயிற்குள் முன்னுத்தான்.

 

மீனாட்சியும் அப்போதுதான் கயல் உள்ளிருப்பதை நினைவு வந்தவராக  அவளைப பார்க்க அவள் முகமோ தன் பொருளை யாரோ பறித்துக்கொள்ளப்போகும் குழந்தையின் முகதைப்போல வைத்திருந்தாள்.

 

“கயல் முடிச்சாச்சா?” மீனாட்சி வினவ,  

 

“இதோ ரெண்டே நிமிஷம் மேம் ” என்றவள் தன்னை மீட்டுக்கொண்டு தான் தயார் செய்த பத்திரத்தை கொண்டு வந்து  நீட்டவும்,அவள் முகம் பார்த்தவாறே அதை எடுக்க,ருத்ரா அவர் கையிலிருந்து அதை எடுத்துக் கொண்டான்.அவன் கைக்கு  எடுக்கவும் அவள் பக்கம் திரும்பிய ருத்ரா கயலிடம், 

 

“மிஸ்.கயல் வயசுக்கு வந்த பொண்ணு இருக்கப்ப அவளோட அப்பா இன்னொரு  கல்யாணம் பண்றது சரின்னு நினைக்கிறீங்களா? “

 

‘இதென்ன நம்மகிட்ட கேக்குறாங்க.மனதில்  நினைத்தாலும் ‘ பதில் கூறினாள். 

 

“அதிலென்ன தப்பு சார்.பொண்ணுகப்றம்  தனக்கொரு துணை வேணும்னு நினைச்சிருக்கலாமே. “

 

“ஆனா பொண்ணு பாவமில்லை.”இது  ருத்ரா. 

 

” பாவம் தான் சார் ஆனா பொண்ணு  கல்யாணம் பண்ணி போய்ட்டான்னா அவருக்குன்னு யாரும் இல்லையே. அதுக்காக அவருக்கு துணையாக  கட்டிக்கலாமே. ” 

 

“எனக்குன்னா இது சரியா படல. கல்யானதுக்கப்றம் அந்த பொண்ணால  அவங்களுக்கு நிம்மதியா வாழ முடியும்னு தோணல.”

 

“சார், அவங்க பொண்ணே  அவங்கப்பாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சிருந்தா  கல்யானதுக்கப்றம் அவங்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காதே”

 

“அதுன்னா அப்டித்தான் ஆனா அத்தம்மா அப்பா அப்டி ஒன்னும் சொல்லல வேறேதுவோ… “

 

“வரு ஈவினிங் பேசலாம்னு சொன்னேன்  அதுக்கப்புறம் எதுன்னாலும் பேசு.இந்த டோபிக்க இதோட விட்ரியா?இதுல இவகிட்ட  வேற கேட்டுகிட்டு இருக்க… “

 

ருத்ராவிடம் கூறியவர்,கயல் நின்றிருக்கும் நிலை புரிந்து விட இருவரும் பேசி கயல்  ருத்ராவோடு சண்டையிடுவாளோ என்றெண்ணியவர். 

 

“கயல் கொண்டு வந்த டீடெயில்ஸ்  கரெக்டான்னு பாரு மெயில் பண்ணிரனும்” என்றார். 

 

அதைப் படித்து பார்த்தவன் அதில் ஒரு சில திருத்தங்களை கூறி அதை திருத்தி மெயில்  பண்ணுமாறு கூறி அவள் முகம் பார்க்க, கண்கள் கலங்கி முகம் சிவந்திருந்தது. ‘இவளுக்கென்னாச்சு.திடீர்னு  இப்படியாகிட்டா. ‘

அவன் யோசித்துக்கொண்டிருக்கும் போதே அவன் கையிலிருந்ததை எடுத்துக்கொண்டு இல்லை பறித்துக்கொண்டு   அவலறைக்குள் நுழைய, 

 

“ஆவ்…   ம்மா…”

 

என்று அவள் குரல் கேட்டு  திரும்பினான் ருத்ரா.காலில் அணிந்திருந்த செப்பல்  பிரண்டு விழப்பார்த்தவள் கதவை பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள்.கயல்  என்னாச்சு என்று பதறிய மீனாட்சி அவளருகே ஓடியவர் இப்டி உட்காரு என அவளை அமர வைத்து,அவள் கன்னம் தடவி,   

 

“அவன் வேறெதையோ பற்றி பேசுறான்.நீ  நம்மலை யோசிச்சிகிட்டு வந்து பாரிப்போ.”

 

“இல்ல பொண்ணிருந்தா  வேணாங்குறாங்க.நான் அவங்க கிட்ட சொல்லிர்றேன் நான் ஹனி  பெண்ணில்லைனு. “

 

“ஜஸ்ட் ஷட் அப் கயல்.எங்கயும் எப்போவும்  நீ தேனரசன் பொண்ணுதான்.அதோட இனி என் பொண்ணு.அதை மனசுல பதிய வெச்சுக்கோ.”கோபம் வந்தவராக  ருத்ராவுக்கு கேட்காது பட படவென பேசி விட, அவள் கண்களில் நீர் வழிந்தது. 

 

“பட்டது கால்ல கன்னத்தை தடவினா சரியா  போயிருமா? “

ருத்ரா அவளருகே ஒரு காலை  கீழே நிலத்தில் ஊன்றி அமர்ந்தவன் அவள்  காலில் அணிந்திருந்த மூன்றங்குல அடியைக் கொண்ட செப்பலை கழட்டியவாறு  ‘இவ்வளவு உயரமா கால்ல போட்டு நடந்தா விழாம என்ன பண்ணும்? இருக்க உயரம் போதாதா உனக்கு? “

 

“போட்டு பலகிருச்சு.ஒன்னில்லை விடுங்க…” 

 

என அவன் கைகளுக்குள் இருந்த தன் காலை உருவப்பார்க்க,அவன் பார்த்த பார்வையில் பேச்சை அத்தோடு விட்டாள். வழிவேறு அதிகரிக்க மீனாட்சியின் முகத்தையும் அவனையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள்.அவன் பிடித்திருப்பதும் வேறு இன்னும் வலித்தது. 

 

“அன்னைக்கும் இதே கால்லதானே சுளுக்கிருந்தது அதான்.குறைஞ்சது மூனு  மாசமாவது திரும்ப கால் சுளுக்காம பார்த்துக்கணும் பாரிப்போ.”

 

ருத்ரா அவளை திட்டிக்கொண்டே  இருக்க இவர்களை பார்த்திருந்த மீனாட்சி,  

 

“டேய்  நீ காலை பிடிச்சுக்கிட்டு இருக்கதே அவளுக்கு இன்னும் வலிக்குது போல.பாரு எவ்வளவு அழுத்தி பிடிச்சிருக்கன்னு. அதோட திட்ர, திட்டிட்டா வலி சரியா போய்டுமா? இந்தா முதல்ல இதை அவள் கால்ல வெச்சுவிடு ” வீக்கம் கூடப்போகுது.” என்றார் மீனாட்சி. 

 

ஐஸ் கட்டிகள் கொண்ட  பை ஒன்றினை கொண்டு அவள் கணுக்கால் பகுதிக்கு  சிறிது நேரம் ஒத்தடம் வைத்தான்.காலை மெதுவாக தடவி விட்டவாறு 

“வலிக்குதா?” 

எனக்கேட்க இல்லை என தலையாட்டினாள். 

 

“அத்தம்மா உங்க பிஏ இன்னும் அழுரா.நா  வர்றப்ப நீங்கதான் ஏதோ திட்டினீங்க அதுக்குதான் இன்னும் அழுரா.கால் வேற  வீக்கமா இருக்கு “

 

“ஆமா நா திட்டி அவ அழுந்துட்டாலும்… வா காபி சாப்பிடலாம்.சாப்பிட்டுட்டு அவளை ஹாஸ்பிடல் கூட்டி போய் பார்ப்போம் டா.” என்றவர், அவரறைக்கு காபி ஆர்டர் செய்வதற்காக செல்ல, 

 

“வழி இப்போ பரவல்லயா கவி? ‘ 

எனக்கேட்டவன்  ‘இனி இப்டி போடாத கொஞ்ச நாளைக்கு.அப்றம் அன்னைக்கு முதுகுல இருக்க காயம் சரியா போச்சா? “என்றான். 

 

“ஆஹ்… அது… சரியாப்போச்சு. “என்றாள்.

 

“சரி வா காபி சாப்பிடு,ஹாஸ்பிடல் போலாம்’ என்றவன், ‘வேற செப்பல் ஒன்னு இல்லல்ல.சரி போற வழில வாங்கிக்கலாம்.” 

 

என்றவன் அவள் எழுவதற்க்காக கை நீட்ட அவன் முகத்தை பார்த்தவள்,

“இல்ல நானே வரேன்.” என்று   நடக்கப்பார்க்க 

 

“முடியுமா உன்னால? ஜஸ்ட் ஹோல்ட் மை  ஹேண்ட் கவி.காலை ரொம்ப அழுத்தி வைக்காத.”ருத்ரா கூற,

 

அவன் முகத்தை பார்த்திருந்தவளுக்கு அவன் பேசும் போதும்,கவி என அவளை அழைக்கும் போதும் அவன் பார்வையில் ஒட்டுமொத்த காதலையும் தேக்கி வைத்து  பேசுவது புரிய 

 

‘தன்னால் இந்த காதலை அனுபவிக்க  முடியலையே.என் காதலை புரிந்து கொண்டால் நான் விலகும் போது  அவங்களுக்கு வலிக்குமே.அந்த வலியை அவங்களுக்கு கொடுக்க கூடாது.என் காதல்  என்னுடனே போகட்டும் ‘ என்று மனதில் எண்ண,அவள் முகமோ,அவள் நடந்துகொள்ளும் விதமோ அதற்கு எதிர்  பதமாய் அவனுக்கு அவள் காதலை காட்டிக்கொடுத்தது.

 

மீனாட்சி அவர் அறையை விட்டு  வெளியேறுவதை கவனித்தவன் அவளை தன்னை பார்க்குமாறு செய்து,  

 

“எதுக்கு கயல் எனக்கு தெரியக்கூடாதுன்னு நினைக்குர.வாட்ஸ் யூர் ப்ரோப்லம்? எதுக்காக விலகிப்போர.ஒட்டுமொத்த லவ்வையும் இந்த கண்ணு ரெண்டுகுள்ள வெச்சுட்டு வெளில வெறும் பார்வை பார்க்குற. எனக்கு இந்த கண்ணு ரெண்டையும் பார்த்தாலே புரிது. எதுன்னாலும் பேசினா தானே சால்வ்  பண்ணலாம்.எவ்வளவு நாளைக்கப்புறம் பார்க்க வந்தேன்.என்னைக்கண்டதும் அப்படி பார்த்த,அப்றம் முகத்தை இப்டி வெச்சிருக்க.என்னால புரிஞ்சிக்க முடில உன்னை.ப்ளீஸ் ஸ்பீக் அவுட் கவி.ப்ச்…’

 

என சலித்துக்கொண்டவன், அவளை  தூக்கி நிறுத்தியவன்

” என்னாச்சுடா…”என்றான். 

 

அவன் கேட்ட விதம் அவளை அவனுள் நுழைத்துக்கொள்ள கெஞ்சியது. 

 

அவள் வலக்கன்னத்தில் தன் இடக்கை வைத்தவன் காதோடு நான்கு விரல்களும்  கூந்தலுக்குள் நுழைய பெருவிரல் மட்டும் அவள் கன்னத்தில் மெதுவாக அழுந்த அவ்விரலை பற்றிக்கொண்ட  கயல் அவன் கண்களுக்குள் தன் பார்வையால் நுழைந்துக்கொண்டாள். 

 

அவளது கால் வலியெடுக்கவும் தான்  நின்றிருக்கும் நிலை புரிய அவள் விலகப்பார்க்கவும் தவறுதலாக வலி இருந்த காலையே ஊன்றி விட்டாள்.

 

“ம்மா.. ” என்று அவனையே பற்றிக்கொள்ள அவளை இடையோடு அவன் வலக்கையால்  அவனோடு சேர்த்து உயர்த்திக் தூக்கிக் கொண்டான்.அவள் முகம்,அவன் முகம்  அருகே மூக்கும் மூக்கும் உரசிக்கொள்ளும் தூரம்.அவளை அப்படியே தூக்கிச்சென்றவன் மீனாட்சியின்  அறையில் போடாட்டிருந்த இருக்கையின் அருகே இறக்கிவிட்டான்.அதோடு மீனாட்சியும் உள்ளே வர 

 

“கயல் இங்கயே வந்துட்டியா? கால் வலி  இப்போ ஓகேயா? எப்டி வந்த?நடக்க முடியுதா” 

கயலை கேட்டார். 

 

கயலோ “ஆமா… இல்ல அது நா, அவங்கதான் …” 

அவன் தூக்கிக்கொணடு வந்து விட்டான் என எப்படிக்கூற அவள் வார்த்தைகள் தேடி கோர்க்க ருத்ராவே, 

 

“அத்தம்மா அவ பறந்து வந்தா.இப்போ காபி  குடிக்கலாமா இல்லன்னா நாவெளில சாப்பிடட்டுமா?சும்மா கேள்விமேல கேள்வி  கேட்டுகிட்டு…அவளே வலில இருக்கா நீ வேற… ” எனபேச்சை மாற்ற, 

 

” சரி சரி… “என்றவர் சிரித்துக்கொண்டே  அவரே மூவருக்குமாக காபி கலந்து குடித்தனர்.

 

“அத்தம்மா நான் போறப்ப கயலை டாக்டர் கிட்ட காட்டிட்டு அவளை வீட்ல விட்டுர்றேன்.நீங்க ஈவினிங் எங்க மீட் பண்ணலாம்னு கால் பண்ணுங்க வந்துர்றேன்.”

 

“வேணாம்.நான் ஈவினிங் போறப்போ  அப்படியே டாக்டரை பார்த்துட்டு போறேனே.இப்போ அவ்வளவா வலி தெரில.” கயல் ருத்ராவிடம் கூற 

 

“ஈவினிங் வலி அதிகமாச்சுன்னா போய்  பாரு கயல்.நா இங்க அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன்” 

 

மீனாட்சி அவளை பேசி ருத்ராவோடு அனுப்பியே விட்டார்.லிப்ட் அருகேயே காரை கொண்டு வந்து நிறுத்தியவன்அவளை  ஏற்றிக்கொண்டான்.அவளுக்கு காலணி வாங்க இடையில் நிறுத்தியவன், கால்களுக்கு அவளிடம் அளவு கேட்டு மூன்று டிசைன்களை கார் அருகேயே கொண்டுவந்து அவளுக்கு போட்டு  பார்த்தே அவள் சரியென்றதை வாங்கினான்.  

 

டாக்டரிடம் காட்ட கணுக்காலில் உள்ள தசை நார்கள் இழுப்பட்டிருப்பதாலேயே சுளுக்கு  ஏற்பட்டுள்ளது எனவும் ஒருமுறை ஏற்பட்டால் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் அதிகம், அதனால் தசை நார்கள் கிழிந்து விட்டால் கால் வலி குணமாக நீண்ட நாள் எடுக்கும். என்றவர் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து  ஐஸ் ஒத்தடம் கொடுக்குமாறு கூறினார்.வலி ஏற்பட்ட காலை மிக அழுத்தி நடக்க வேண்டாம் என்றிருந்தார். 

 

அவளது வீட்டினருகே வண்டியை  நிறுத்தியவன் அவள் இறங்காப்பார்க்க,  

 

“எனக்கு உன்கூட பேசணும் கவி. இந்த ரெண்டு மூனு நாளைக்குத்தான் ப்ரீயா  இருப்பேன்.அப்றம் பிஸி ஆகிட்டேன்னா மீட் பண்றது கஷ்டம்.சோ டைம் என் பிளேஸ்  நீயே சொல்லு.உங்க வீட்லன்னாலும் ஓகேதான்.எனக்கு உன்கூட பேசணும்.அவ்ளோதான்.

இப்பயே பேசிருவேன் ஆனா எனக்கு  இன்னைக்கு இன்னொரு முக்கியமான வேலை இருக்கு.சோ நாளைக்கு ஓகேவா?” ருத்ரா அவள் பக்கம் திரும்பி அவள் கையை பற்றியிருந்தவன் அவளிடம் கேட்க, 

 

முடியாது என்று சொல்ல வாயெடுக்க  மனமோ சரியென்றது.காதலில் மனம் தானே வெல்லும்.சரி என தலையசைத்தாள்.  

 

“தென்,நானே வரேன்.நீ ரெடியாகிட்டு  எனக்கு கால் பண்ணு ஓகே. ‘என்றவன், 

‘கால் ரொம்ப அழுத்தி நடக்காத டேக் கேர்.”

என்றான்.அவளிறங்க உதவியவன் அவள்   

மெதுவாக நொண்டி நடந்தவாறு உள்ளே  செல்லவும் இவனும் வண்டியை கிளப்பினான்.