காலை கயல் எழும் போது மணி எட்டை கடந்திருந்தது.கண் விழித்திருந்தாலும் இன்னுமே திறந்திராத்தவளுக்கு அவள் அறையில் நடமாட்டம் உணர முடிந்தது. மெதுவாய் கண் திறக்க மீனாட்சி.சேலையை சற்று உயர்த்தி இடுப்பில் செருகியிருந்தவர் அவலறையை ஒழுங்கு செய்துக் கொண்டிருந்தார்.பார்த்தவளுக்கு தன் அன்னை இருந்திருந்தாலும் இப்படித்தானே செய்திருப்பார் என்று நினைத்தவள்,
“குட் மோனிங் மீனம்மா” என்று கூறிக் கொண்டே எழுந்து சம்மனமிட்டவாறு அப்படியே அமர்ந்து கொண்டாள்.
“ஹேய் ஹாப்பி மோனிங் டா.சத்தம் காட்டி எழுப்பிட்டேனா? ” என்றார்.
“நானேதான் எந்திரிச்சேன்.நீங்க ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க.ஹனின்னா திட்டிட்டே தான் கிளீன் பண்ணுவாங்க. அந்த திட்ட கேட்டுட்டே தான் எந்திரிப்பேன்.நீங்க சூப்பர் ” என கூற,
“ஓஹ் தீட்டலாம்தான் ஆனா அசந்து தூங்கிட்டு இருந்தியா அதான் எந்திரிச்சதும் தீட்டலாம்னு இருந்தேன்.பொண்ணு ரூம் போலையா வெச்சிருக்க.எல்லாம் இன்த தேனுவோட வேலனலதான்.”
“ஹ்ம்ம் கரெக்ட் மீனம்மா.ஹனி தான் என்னை வேலை செய்ய விடறதே இல்லை இனி நீங்க கத்து குடுப்பீங்களாம் நா சமத்தா கத்துப்பேனாம் “
“அது சரி.இப்போ போய் குளிச்சிட்டு வருவீங்களாம் அப்றம் மத்தது.” என்றிட,
“இப்பவே எப்டி மீனம்மா குளிக்கலாம்… ஹனி டீ போட்டு வெய்ட் பண்ணுவாங்க”
“முதல்ல எந்திரிச்சதும் தூங்கின கட்டிலை சரிபண்ணுவியாம்.அதுக்கப்புறம் பாத்ரூம் போவியாம்.வெளில வந்ததும் வோஷ் பண்ற ட்ரெஸ்ஸெல்லாம் எடுத்து வெச்சுட்டு ரூமை கிளீன் பண்ணிட்டு தான் ரூமை விட்டு வெளில வருவியாம்.இனி நானோ அப்பாவோட இந்த வேலைக்கு வர மாட்டனாம்.சமத்தா இப்போ குளிச்சிட்டு தான் வர இல்லன்னா…”
என அவர் அறையை ஒதுக்கியவாறே பேசிக்கொண்டு இருந்தவர் நிமிர்ந்து பார்க்க,அவள் முகம் அவரையே ஆசையாய் பார்த்திருந்து.
“என் ஹனியே நல்லம் போல.உங்க கூட சேர்ந்துக்கலாம்னா நீங்க ரொம்ப மோசம் காலைலயே குளிக்க சொல்றீங்க.என முனகிக்கொண்டே குளிக்க சென்றாள். மனதில் ‘தன்னை திட்ட,வேலை வாங்க ஒருவர் வந்துவிட்ட சந்தோஷம்.
அறையை ஒதுக்கியவர் வெளியே வர ,
“இன்னும் தூங்குறாளா?”அரசு கேட்க,
“அவ குளிக்கிறா.”
“ஏது குளிக்கிறாளா? ‘வியந்தவர்,
‘மேடம் எந்திரிச்சதும் பெட்ட விட்டிறங்கவே பதினைந்து நிமிஷம் ஆகும் இதுல குளிக்கிறாளா.திரும்ப பாரு தூங்குறாளா இருக்கும். “
“அது உங்க பொண்ணு.இப்போ என் பொண்ணு.போய் குளிச்சிட்டு வாங்க.அவ வந்ததும் சேர்ந்தே சாப்பிடலாம் “என கூறி சமயலறைக்குள் சென்றார்.
கயல் அறையை எட்டிப்பார்த்தவர், குளியலறையில் சத்தம் கேட்கவுவம், ஒரே நாள்ல சமத்து பொண்ணாகிட்டா.’ஹ்ம்ம் இதுக்குத்தான் அம்மா வேணுங்குறது,’ என்று மனதில் கூறிக்கொண்டு சென்றார்.
கயல் குளித்து வர நேரம் பத்தை தொட்டிருந்தது.இவளுக்காக காத்திருந்த இருவரையும் பார்த்துக்கொண்டே வந்து அரசுவின் அருகே அமர்ந்துக்கொண்டாள். தலையை இன்னும் சரியாக துவட்டியிருக்கவில்லை என்பது அவள் கூந்தலை தூக்கி கட்டியிருக்க,அதிலிருந்து அவள் தோள்களை நனைத்துக் கொண்டிருந்த நீர்த்துளிகள் கூறியது.
“என்ன கண்ணம்மா இது. தலை கூட துவட்டல “என்றவர் எழுந்து அவள் தலை துவட்டிவிட அவளும் வாகாய் அவர் வயிற்றோடு தலை வைத்து சாய்ந்துக்கொண்டாள்.
இன்னும் சில நாள்களுக்கு இது கிடைக்கப்போவதில்லையே.
இருவரையும் பார்த்திருந்த மீனாட்சியை கண்ட கயல் சட்டென நேரே அமர்ந்துக்கொண்டாள்.ஏதும் நினைத்துவிடுவாரோ என்று ஓர் எண்ணம் மனதில் எழ,
அதை உணர்ந்த மீனாட்சி,
“தலை துவற்ற வரை சும்மா இரு கயல்.பாரு அப்படியே குளிச்சிட்டு உடுத்தியிருக்க. ட்ரெஸ்ஸும் நனைஞ்சு போச்சு. இன்னும் சாப்பிடக் கூட இல்ல.அப்பாவும் பொண்ணும் ஒன்னு.காலைல இருந்து ரெண்டு பேரையும் பார்க்குறேன் சொல்லறது ஒன்னும் கேட்கிறதா இல்லை.அரசுவுக்கும் சேர்த்து பேசினார் மீனாட்சி.
‘நீ என்ன பண்ணின? ‘என்பதாய் அரசுவை கயல் பார்க்க அவரும் அவளை பாவமாய் பார்த்து வைத்தார்.
“அங்க என்ன பார்வை.காலைல எழுந்ததுல இருந்து என்னை ஒரு வேலை செய்ய விடல.வீட்டை எல்லாம் கிளீன் பண்ணி முடிச்சிட்டு இப்போதான் வந்து உட்கார்ந்தார்.”
‘அட ஆமால்ல.நேற்று தான் இவங்களுக்கு கல்யாணம் ஆச்சு.வீடெல்லாம் சுத்த பண்ண இருந்துச்சே’ என்று கயல் யோசிக்க, வீட்டிற்கு கயல் நேற்று தான் வந்தார் என்பது போலவே இருக்கவில்லை அவளுக்கு. அந்தளவுக்கு அந்த வீட்டோடும் அவளோடும் ஒன்றிய இருந்தார்.அதோடு அரசு மீனாட்சி இருவருமே முகத்தில் பலகாலமாய் ஒன்றாய் இருபவர்களாவே பேசி கொண்டிருந்தனர்.இதுதான் காதலா? தனக்கும் கிடைக்குமா இப்படி.நானும் ஏங்கி போயிருவேனா என் காதல் நினைத்து. முகம் மலர்ச்சியாக இருந்தது சோகத்தை தத்தெடுக்க,அதை கண்டு மீனாட்சி,
“போதும் தேனு அவளுக்கு தலை வலிக்க போகுது உட்காருங்க சாப்பிடலாம் என்றவர் கயலை பார்த்து சாப்பிட்டதும் டொப்பை மாத்திக்க கோல்ட் வந்துரும்டா” என்றவர் அவளுக்கும் பரிமாறனர்.
“ஹேய் ஹனியை விட தேனு… சூப்பரா இருக்கு” கயல் கூற, அரசு மீனாட்சியை முறைத்தார்.
“அட நல்லா இருக்குன்னுதான் சொன்னேன் ஹனி.எதுக்கு மீனம்மாவை முறைக்குற? மீனம்மா நீங்க அப்படியே கூப்பிடுங்க.இல்லன்னா இவரென்னவோ நாட்டுக்கே அரசன் போல அரசுன்னு சொல்ல சொல்லி நம்மளுக்கு ரூல்ஸ் போடுவார் எனக் கூற ஆமாடா காலைல இருந்து கட்டளைகள் அதிகம் தான் என அவரும் சேர்ந்துக்கொடு அரசுவை வம்பு பண்ணியவாறு உண்டு கொண்டிருக்க, அரசுவின் அலைபேசி அவறறையில் ஒலிக்க,அவர் எழுந்து எடுக்க சென்றார். அதற்கிடையில்,
அரசுவின் பிளேட் அருகே இருந்த கறிக்குழம்பை இட்டலிக்கு ஊற்றிய கயல் பார்க்கவே அவள் கண்கள் சிவக்க,அதன் சுவையில் இரண்டு மூன்று வாய் சாப்பிட்டுவிட்டாள்.
“தேனு போல நீயும் கரம் விரும்பி சாப்பிடுவியா? நல்லா இருக்கா? “
மீனாட்சி கேட்டு முடிக்க வில்லை கயலின் முகமெல்லாம் சிவந்து அதன் உரைப்பில் வாயெல்ல்லாம் எரிய நீரை மட மடவென பருகினாள்.
“ஹேய் என்னாச்சு? “என்றவாறு அரசு வரவும் அவள் தட்டை பார்த்தவர்,
‘எதுக்கு அதை சாப்பிட்ட ரொம்ப காரம் அது.அதான் நா என் தட்டு பக்கத்திலேயே வெச்சுக்கிட்டேன். நீ எதுக்கு எடுத்த? ” என்றவர் அவள் வாயில் சக்கரை அள்ளிப்போட்டார் .
“அவளுக்கு கரம் சாப்பிட்டு பலக்கக்கமில்லை மீனா.”
“ஆசோ!சாரிங்க ரெண்டு மூனுவாய் ஆசையா சாப்பிட்டா.அவளுக்கு ஒதுக்காதுன்னு தெரியாதுங்க.நீங்க ஆசையா சாப்பிடுவீங்கல்ல அவளும் சாப்பிடுவான்னு நினச்சுட்டேன். “
கயலை பார்க்கவே பாவமாய் இருந்தாள். உடல் வியர்த்து முகமெல்லாம் சிவந்து. கண்கள் கலங்கி. உதடுகள் செக்க செவேர் என சிவந்திருந்தது…
அதற்குள்ளும் கயலின் மனதில் ஓடியது இதுதான்.
‘சாப்பிடற சாப்பட்டைக் கூட எனக்காக மாத்திக்கிட்டாங்களா? ‘
இவ்வளவு நாளைக்கு அரசு காரமாய் எதுவுமே சாப்பிட்டு இவள் பார்த்ததில்லை. இவளுக்கு சிறு வயதில் இவ்வாறு ஒருமுறை நடந்திருக்க அதோடு கராசாப்பாட்டை மறந்திருந்தார்.
என்ன மனிதர் இவர் என்றுதான் தோன்றியது அவளுக்கு.எனக்காக சின்ன சின்னதாய் அவர் அனைத்தையுமே துறந்துதானே வாழ்ந்திருக்கிறார் நினைக்க கண்களில் கண்ணீர் வடிந்தது…
“என்னாச்சு ரொம்ப முடியலையா? டாக்டர்கிட்ட போகலாம் அரசு” என்று மீனாட்சி பதற,கயலை நன்கறிந்த அறிந்த அரசு அவளை அணைத்துக்கொண்டார். அவரை அணைத்துக்கொண்ட கயல்,
” லவ் யூ ஹனி… ” என்று கூற
மீனாட்சியை கண்களால் ஏதும் கேட்காதே எனக்கூறியவர்,கயலிடம் அவள் மனநிலை மற்றும் பொருட்டு,
“கண்ணம்மா இப்போ சார்லி தான் பேசினான்,உனக்கு நைட்டுக்கு டிக்கெட் போட்டிருக்கானாமே… தனியா போவியா? அப்பா வேணும்னா வந்து விட்டுட்டு வரட்டுமா? “என அவள் செல்வத்துக்கு அனுமதி கொடுத்துக்கூற,
அரசு என்ன சொல்வாரோ என பயந்துக்கொண்டிருக்க இவரோ அவ் விடயத்தை இலகுவாக கேட்க,அவளுக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம்.
இன்று இரவு செல்ல டிக்கெட் போட்டவன் காலையில் அதை தெரிவிக்கிறான் என்றாள் கயல் அதற்கான எல்லாம் தயார் செய்து வைத்திருப்பாள் என்பதை யூகித்துக்கொண்டார்.அவள் விருப்பப்படி இருக்கட்டும் என நினைத்த அரசு அவள் சென்று வரட்டும் என கூறினார்.
மீனாட்சி தவிப்பாய் கயலையும் அரசுவையும் பார்க்க கண்களாலேயே ‘அப்றம் பேசலாம்’ என கூறிய அரசு,கயல் முகம் பார்க்க அவள் முகம் சிவந்திருந்தாலும் காரத்தினால் ஏற்பட்ட தாக்கம் குறைந்திருந்தது.
டிரஸ் சேன்ஜ் பண்ணிக்கோ… ஏதும் முக்கியமா கொண்டு போக வேணும்னா பாரு வாங்கிக்கலாம்.நைட் எட்டுமணிக்கு
பிளைட்னு சொன்னான்.
(18.00p.m டிக்கெட்டில் போட்டிருந்த நேரம், ஆனால் சார்லி நேரத்தை மாற்றி கூறிவிட்டான் )
இங்க இருந்து அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பனும் அதுக்கேத்தாப்ல ரெடி பண்ணிக்கோ என அவளை அவலைறைக்கு அனுப்பி வைத்தவர், மீனாட்சியிடம் ஒரு தேநீர் எடுத்துவருமாறு கூறி அவரறைக்கு சென்றார்.
மீனாட்சி அவர் கையில் தேநீர் கப்பை வைத்தவர் கண்கள் கலங்கி இருக்க,
“ப்ச் என்ன மீனா இது.என அவரை அணைவாய் அனைத்துக்கொண்டவர்,
“கயலுக்கு நாம ரெண்டு பேரும் இப்படி ஒன்னா இருக்கணுமாம் ‘என இப்போது இருவரும் அமர்ந்திருக்கும் நிலையை காட்டிக் கூறியவர்,
‘அவ இருந்தா நாம அவளுக்காக யோசிப்போம்னு நினைக்குறா.அதுனால கொஞ்ச நாளைக்கு கனடா போகலாம்னு நினைச்சிருக்கா.அடுத்த வாரம்தான் போறதா இருந்தா.யேனோ இன்னைக்கு கிளம்புறது தான் யோசனையா இருக்கு. இருக்கட்டும்.அவ போறது அவளுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்னு தோணுது.போய்ட்டு வரட்டும் நீ எதுவுமே நினைச்சுக்காத என்ன. “
மீனாட்சியை ஆருதல் படுத்தினார்.
திருமணமே வேண்டாம் என்றிருந்தவரே மனைவியையும் மகளையும் சமமாய் தாங்கி நடுவே தளம்பாது நிற்க முடிவெடுத்துவிட்டார்…
“வேறேதும் இல்லையே? “என மீனாட்சி கேட்க அப்படியெல்லம் எதுவுமே இல்லை… ரொம்ப யோசிக்காத.இப்போவாச்சும் இந்த இடத்துக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண டைம் ஒதுக்கு”
என்று அவர் தலையில் கைவைத்து ஆட்ட அவர் தோள்களில் சாய்ந்துகொண்டார் மீனாட்சி.
அறைக்குள் வந்த கயல்,சார்லிக்கு கால் செய்ய எடுத்தவன்,
“பேப, அரசு ஓகே சொல்லி சொட்டாங்க. ஈவினிங் பிளைட் டைம் பார்த்துக்கோ கிளம்பிக்கோ அப்பாகிட்ட சொல்லிருக்கேன். டிக்கெட் உனக்கு மெயில் பண்ணிருக்கேன்.இங்க உன்னை பிக்கப் பண்ண வந்துருவேன் ஓகே.என்று அவனுக்குசில பொருட்கள் சொல்லி வாங்கிவருமாறு கூறி அழைப்பை துண்டித்தான்.
காயலது கைகள் அவள் பாட்டிற்கு அவளுக்கு தேவையானதெல்லாம் எடுத்துவைக்க மனமோ ருத்ராவை எப்படி சந்திப்பது என்பதிலேயே இருந்தது.
அவளருகே வந்த மீனாட்சி
“நா எதுவுமம் ஹெல்ப் பண்ணட்டுமா கயல்?”
எனக் கேட்க,
“நத்திங் மீனம்மா.ஏற்கனவே ரெடியா வெச்சதுதான்.அடுக்கமட்டும் தான் செய்றேன்.வழில ரெண்டு மூனு திங்ஸ் வாங்க இருக்கு அதை மட்டும் வாங்கிக்கணும் ” என்றாள்.
“உன்கிட்ட கம்பனி வேலையெல்லாம் கொஞ்ச நாளைக்கு ஒப்படைச்சுட்டு நான் பிரீயா இருக்கலாம்னா,நீ கனடா போறேங்குற. “
அவள் மனம் அறிய மீனாட்சி கயலிடம் கேட்க,
“இப்போவும் நீங்க பிரீயா இருங்க,உங்க பையன கம்பனியை வந்து பார்த்துக்க சொல்லுங்க.நா திரும்பி வந்ததுக்கப்றம் நா பார்த்துக்குறேன் என்று எவ்வித அலட்டலும் இல்லாமல் கூற,
“யாரு வருவா? இதோ காலைல பேசினான், விடியவே எங்கயோ போய்ட்டானாம். திரும்பி வர பைவ் டேஸ்கிட்ட அகலாம்னான். அவனை நம்பி எங்க.உங்கப்பாவை தான் கேட்கணும்.”
“அட இது நல்லா இருக்கே.ஆபிஸ்லயும் ஒன்னாவே உங்களுக்கு டைம் ஸ்பென்ட் பண்ணலாம் கையோட கூட்டி போயிருங்க.’
என்று குதூகலமாய் சொல்கியவள்,
‘நான் ருத்ரனோட பேசி அப்பப்ப கம்பனி பக்கம் போங்கன்னு சொல்லுறேன். “
“உன் பேச்சையாவது கேட்டான்னா சந்தோஷம் தான்.ரொம்ப ரிஸ்கியான வேலையெல்லாம் இழுத்து விட்டுக்குறான். அதோட என்கிட்ட மட்டும் சொல்லிட்டு கிளம்பிருவான்.மனசுக்கு அவன் வர்ற வரைக்கும் யோசனையாதான் இருக்கும். இப்போ மதவாவும் அப்பப்ப அவன்கூட சேந்துக்குறான்.”
கவலையாக சொல்லுக்கொண்டிருந்தார் அவர் வளர்ப்பு மகன் பற்றி.
“அவங்க மனசு பிடிச்சதை பண்ணறாங்க, அவங்களுக்கு அவங்களை பார்த்துக்க தெரியும் மீனம்மா.அவங்களை நினச்சு நீங்க யோசிக்க வேணாம்.ஹாப்பியா இருங்க” அவள் பேசிக்கொண்டிருக்கவுமே ருத்ரா அழைத்தான் மீனாட்சியை.
“டேய் வரு உனக்கு ஆயிசு கெட்டிடா… இப்போதான் பேசிட்டிருக்கோம். நீயே கால் பண்ற. “
“யார்கூட பேசிட்டிருக்கீங்க “
“கயல் கூடத்தான்.ஈவினிங் கனடா கிளம்புறா.ட்ரெஸ்ஸெல்லாம் பாக் பண்ணிகிட்டே உன்னை பற்றித்தான் பேசிட்டிருக்கோம். “
மீனாட்சி கூறுவதை கேட்டிருந்தாலும் மனதில் ‘நேற்று சரி என்கிட்ட இவ சொல்லலையே.சொல்லிருந்தா அவளை பார்க்க போயிருப்பனே.எதுக்கிப்போ அங்க போறா? என்னாச்சு இவளுக்கு. முழுங்குற மாதிரி பார்க்க வேண்டியது,ஆனா ஒரு வார்த்தை பேசுறதுன்னாலும் யோசிச்சு நிதானமா பேசுறப்ப நம்ம நிலை இப்படியா இருக்கு… ‘
‘ரெண்டு பேரும் பேசிட்டே இருக்கீங்க இதுல அவ சொல்லிட்டுபோக்கில்லைன்னு இவருக்கு வருத்தமாம் ‘ அறிவோ மனதுக்கு எடுத்துக்கொடுக்க அறிவோடும் மனதோடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தவனை
“வரு என்னடா பேச மாட்டேன்ற எங்கேயிருக்க இப்போ? ” மீனாட்சி கேட்க,
“கொஞ்சம் வேலையா இருக்கேன் அத்தம்மா.அப்புறமா பேசுறேன் “என்றவன் துண்டித்துவிட்டான்.
கயலுக்கு புரிந்தது அவனுக்கு கஷ்டமாக இருந்திருக்கும் என…
“அப்பா என்ன பண்ராங்கன்னு பார்த்துட்டு வரேன்” என மீனாட்சி எழுந்து செல்ல,
அவசரமாக ருத்ராவுக்கு அழைக்க அவனோ துண்டித்துக்கொண்டிருந்தான்.
“ஐ வாண்ட் டு மீட் யூ… “என தகவல் அனுப்ப,
“நோ வே.ஆம் சோ பார் பிராம் யூ.காண்ட் ரீச் யூ ”
அவன் அனுப்பிய தகவலை படித்தவள் நைட்டே பேசிருக்கணும்.அலைபேசியை தூர எறிந்தவள் மனமோ, அவனைகட்டிக்கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்து அவன் வாசம் அவளுள் சேர்த்து,அவன் இதயத்துடிப்பாய் இவள் மாறி அவனோடே இருந்திட துடித்தது.
‘நானுமே ரொம்ப தூரமா போறேன்.உங்க கூட இருந்தேன்னா என்னால என்னை மறசிக்க முடியாது.என்னால யாரும் கஷ்டப்படவேணாம்.ஒரு ஆறு மாச பலக்கம். ஆறு மாசம் பிரிஞ்சேன்னா அதெல்லாம் கடந்த காலமா மறந்துபோயிரும்.சந்திக்க முடியாம தடங்கல் வந்ததும் நல்லதுக்கு ‘ என்று மனதை தேற்றிக்கொண்டு அனைத்தையும் எடுத்து வைத்துகொண்டாள்.
பிரிவுகளே காதலை அதிகரிக்கும்,உணர வைக்கும். ஒரு நாள் பழகியவர்களே காதலால் அவதிப்பட ஆறுமாதம் தானே என சாதாரணமாய் சொல்பவள் எங்கனம் அதை எதிர்கொள்வாள்…
அவனை சந்திக்காமலே சென்றிடுவாளா அல்லது இவளை ஏற்றிக்கொள்ளாமலே இரும்புப்பறவை பறந்திடுமா பார்க்கலாம்…