கனலியின் கானல் அவன்(ள்)-22.1

20200724153943

கனலியின் கானல் அவன்(ள்)-22.1

அன்றாடம் நடக்கும் செயல்பாடுகள் அது இனிதாகவே நடைப்பெற இந்த வீட்டில்,இந்த வீட்டின் உரிமையாளரிடம் பல மாற்றங்கள்.அது பார்ப்பவருக்கு புரியாவிடினும்  வாழ்ந்து அனுபவித்துக் கொண்டிருப்பவருக்கும்,மாற்றத்தினை ஏற்படுத்தியவருக்கும் அதனை நன்றாகவே உணர முடிகின்றது.ஆம்,அரசுவும்  மீனாட்சியும் முன்னமே மனம் ஒன்றிணைந்திருக்க அவர்களின் பிரிவு பிரிவே அல்ல என்பதாய் வாழ ஆரம்பித்திருந்தனர். கயல்விழிக்கும் அவள் விழிக்கொண்டு பார்க்க வேண்டியிருந்ததே அதுதானே. அவள் விட்டுச்சென்ற காரணம்  இனிதாகவே நடைப்பெற அங்கிருக்கும் அவளுக்குமே அது மகிழ்ச்சிதான். 

தேனரசன் வேலையை விட்டிருந்தார்.இனி மீனாட்சியோடு இணைந்து மிதமான  வேகத்தில் அவர் தொழிலை நடத்திக்கொண்டு சுகமாய் வாழ்வை அனுபவித்துக்கொண்டு இருக்கலாம்,ருத்ரா அவன் பங்கு வேலையை தொடரும் போது தொழில் எவ்வித சறுக்கும் இன்றி செல்லும் என்பதில் ஐயமற்றிருந்தனர். 

இந்த இரண்டு மாதங்களும் கயல் வீட்டில் இல்லை.கயல் பிறந்தது முதல் இதுவே நீண்ட நாட்கள் அவளை பிரிவது. அக்குறை அரசுக்கு மிகவுமே மனதை வதைத்தாலும் மனமோ எதிர் பாரா பெரும் சுகம் ஒன்றை அனுபவித்துக் கொண்டிருப்பதையும் தடுக்கவில்லை.

மீனாட்சிக்கும் அவ்வாறே. கணவன் என்ற ஓர் உறவு தன் நீண்ட நெடிய வருடங்கள் கடந்த பின்னர் கிடைத்திருந்தாலும் மனம் விரும்பிய உயிர் தன்னை வந்து சேர ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தார். 

மீனாட்சி தேநீர் அருந்தியவாறு இருக்கையில் அமர்ந்து நீச்சல தடாகத்தை  சுத்தப்படுத்திக் கொண்டிருந்த அரசுவோடு பேசியபடி இருந்தார். 

“இன்னும் எவ்வளவு நேரம் தேனு,’இதோ முடிஞ்சதுன்னு’ சொல்லி அரை மணி நேரமாச்சுப்பா.நான் கப்பையும் காலி பண்ணிட்டேன்.’ கையிலிருந்த தேநீர் கப்பை காட்டியவர்,

‘நீங்க எத்தனை மணிக்கு வந்து,நாம கிளம்பி வெளில போறது.”

“இதோ முடிஞ்சது…’ என தடாகத்தை விட்டு வெளிவந்தவர் அதில் நீர் நிரம்ப குழாயை  திறந்து விட்டு மீனாட்சி அமர்ந்திருந்த இருக்கைக்கு கீழ் அவரின் கால்களிடையே அமர்ந்துக்கொண்டார். 

‘மணி ஆறாச்சா?”

அலைபேசியில் நேரம்  பார்த்தவாறே கேட்க, அதற்கு மீனாட்சியின் பதில் இன்றி போக தலையை மேலாக உயர்த்தி பார்த்தார்.முகம் முழுதும் வியர்வையில் குளித்திருந்தது. தன் பருத்தி சேலைத்தலைபினால் முகத்தை துடைத்து விட்டவர்,  

“ரொம்ப டையர்ட் ஆகிட்டிங்க.இன்னொரு நாள் போகலாம்ங்க. “

“அச்சோ மீனா,டையர்ட் எல்லாம் இல்லடா.ரொம்ப வெயில் அதான் இப்படி.” தன் வியர்வையை சுட்டிக் காட்டியவர்,

‘குளிச்சிட்டேன்னா அம் ஓகே.பட் ஒரு டென்  மினிட்ஸ் “

என்று அமர்ந்த வாக்கிலே அவர் மேல் சாய்ந்துக்கொண்டார்.

அவர் நெற்றியில் இதழ் ஒற்றிய மீனாட்சியின் கைகள் அவர் தலைக் கோதிக்கொண்டே இருக்கையில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டவர்,  

“நான் மட்டும் போய் பேசிட்டு,அண்ணா என்ன சொல்றாங்கன்னு பார்த்து பேசலாம் தேனு. “

“வேணாம் மீனு எதுன்னாலும் நான் பேசுனா தான் சரியா இருக்கும்.பார்த்துக்கலாம்.நம்ம பொண்ணை வேணாம் சொல்ல எந்த காரணமும் இருக்கதா எனக்கு தோணல. “

“அதுக்கில்லைப்பா,அப்டி எப்பவும் சொல்ல மாட்டாங்க. ரித்தி வந்திருக்கா.ஏதும் உங்ககூட தப்பா பேசிட்டான்னா கஷ்டமாகிடுங்க.அதோட கயலுக்கு தெரிஞ்சா திட்டப்போறா.”

எழுந்தவர் மீனாட்சி எழ கைகொடுத்து அவரை தோளோடு அணைத்தவாறு, 

“மீனா நாமளா ஏதும் யோசிச்சுக்க வேணாம்.கயலை சொல்லிட்டு நீயே இப்டி யோசிக்கிற.ஹ்ம்ம்? ‘ நெற்றி முட்டியவர், 

‘போய் ரெடியாகு.சின்னதா ஒரு ஷாப்பிங்.அப்றம் அங்க போகலாம் ஓகே.நான் போய் குளிச்சிட்டு வரேன்” எனக் கூறி சென்றார்.  

கனடாவில் குளிர் ஆரம்பம்.காலை நேரமோ நண்பகல் வரை தொடர, அதிகாலையோ காலை நேர முடிவைத் தொட்டது. 

இன்னும் ரெண்டு மாதங்கள் ஆகும் போது போக்குவரத்து தடைபட்டு மக்கள் வீட்டுக்குள் அடைப்பட்டு கிடக்கும் அளவுக்கு குளிரின் தாக்கமும் பனிக்கட்டிகளின் சாம்ராஜ்யமும் அரங்கேறிவிடும்.

அதற்கு முன் நாடு திரும்பிட காலம் சரியாகிவிடும்.வந்து இன்றோடு இரண்டு மாதங்கள் பூர்த்தியாகி விட்டது.தினமும்  நாட்களின் எண்ணிக்கையை நினைவுபடுத்த அவனோ மறப்பதில்லை. அதை நினைவு படுத்தும் விதமும் அவள் மனதை கொள்ளை கொள்வதில்  ஆச்சரியமில்லை. 

நேற்று இரவு ருத்ராவோடு மிக நீண்ட  நெடுநேர பேச்சு நீண்ட நாட்களின் பின்னர்.இன்றைய பொழுது அவன் நினைவிலேயே வைத்திருந்தது.பேச்சு இனிதாய்  ஆரம்பித்திருந்தாலும் முடிவென்னவோ அவனை நோகடித்து விட்டதாய் மனதை  அரித்துக்கொண்டிருந்தது.வந்த இரண்டு மாதத்திலும் தினந்தோறும் அவன் பேசிக்கொள்ள நேரம் கிடைக்காத போதும் அவ்வப்போது அவளுக்காய் அனுப்பும் குறிஞ்செய்திகள் அலைபேசியில் நிறைந்துவிட, அவனை அதிகமாய் தேடினாள். அதுவும், 

 “வித் மை டீப் கிஸ்ஸஸ் டு மை…” என்று தொடரும் தகவலை திரையில் கானவும் முகம் சிவந்திடுவாள்.அவனோடு உரிமையாய் காதல் செய்ய தயங்கியவளை இவன் உரிமையாக்கி அவளுக்கு அதனை உணர்த்திக் கொண்டிருந்தான்.  

 

மீனாட்சியை கம்பனிக்கு வர அனுமதிக்காது அவனே சில மாதங்களாக  பார்த்துக்கொள்வதாகக் கூறி பொறுப்பேற்றிருந்தான்.இதுவும் கயலின்  வேண்டுகோள். இடையிடையே தன் கனவனோடு ஜோடியாக வரும் தன் அத்தையை காணக்காண மனம் நிறைந்து விடும்.அதை ஒவ்வொரு முறையும் அரசு,தோளோடு ருத்ராவை அணைத்து விடுவிக்கும் தருணங்களில் உணர்ந்திருக்கிறார்.அவன் அதை அவருக்கு உணர்த்தினான்.தன் அத்தையையே இவ்வளவு நேசிக்கும் இவன் தன் மகளை பார்த்து கொள்வது பற்றி நினைக்கவே தேவை இல்லை. என்று அவர்கள் பற்றி நினைத்து வருந்துவதை விட்டுவிட்டார். 

கம்பனி வேலைகளை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் ருத்ராவுக்கு அவன் காக்கி உடைக்கான வேலையை அவனின் உயர் அதிகாரி மூலம் சில நாட்கள் இவனை வந்தடையாமை மனதுக்கு சிறு நெருடல். அவரிடம் கேட்டும் இருந்தான்.சற்று ரிலாக்ஸ் செய்யுமாறும் அதற்காகவே அப்படி செய்ததாகவும் கூறியிருந்தார்.நம்பா விட்டாலும், இவனது கம்பனி வேலைகளை சீரமைக்க நேரம் கிடைத்தமையால்,எதுவுமே காரணமின்றி செய்ய மாட்டார் என்பதால் இவனும் அதற்கு மேல் ஒன்றும் கேளாது சரியென்று விட்டான். 

எப்போதும் ருத்ராதான் கயலை அழைப்பான்.இவளுக்கு பேச வேண்டும் என்று நினைத்தாலும் அவனுக்கு கூறி அவனையே எடுக்க வைப்பாள்.நேற்றிரவு கயலோ இவனை அழைக்க அதுவும் அவள் அழைத்த நேரம் பயந்து போனவன் அழைப்பை ஏற்றதும்,  

“கவி…என்னாச்சுடா?” ஒருவித பதட்டத்தினூடே கேட்க,

“பேசணும் போல இருக்கு வரு.அதான் வேறொன்னும் இல்ல…”

நேரத்தைப் பார்த்தால் அவளுக்கு நடு இரவு இரண்டு மணி. 

என்னடா தூங்கலையா இன்னும். ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கப்போறேன் சொன்ன இன்னும் என்ன பண்ணிட்டு  இருக்க.உடம்புக்கு ஏதாச்சும் பண்ணுதா? “

நடுநிசியில் தனியாக என்ன செய்கிறாள்.பயந்து போனான்.அவனுக்குத்தான் தெரியுமே சற்றே விரலில் காயம்  ஏற்பட்டாலும் கை உடைந்து போன அளவுக்கு ஆர்ப்பாட்டம் செய்பவள் என்று. 

“ஹ்ம்ம்ம் ஹ்ம்.உடம்புக்கு ஒன்னில்லை.நல்லா தூங்கிட்டுதான் இருந்தேன். திடீர்னு கனவுல பயந்து முழிச்சிட்டேன்.மனசுக்கு ஏதோ கஷ்டமா இருக்கு. “

“இப்போ எங்க இருக்க? ” 

“பெட்லதான் இருக்கேன். “

“சரி.பக்கத்துல தண்ணி வெச்சிருக்கியா? “

“ஹ்ம் இருக்கு…”

“எழுந்து அதை குடிச்சிட்டு சாஞ்சு  உட்கார்ந்துக்கோ… “

அவன் சொல்லச்சொல்ல செய்தவள்,அவனது டீஷர்டினையும் அணிந்துக்கொண்டாள். 

“இபோ எங்க இருக்கீங்க? “

“இன்னைக்கு ஒருத்தரை மீட் பண்ண வேண்டி இருக்குடா. வெளில வந்திருக்கேன்.”

“ஓஹ்… “அவளிடம் ஏதோ எதிர் பார்த்து ஏமார்ந்த உணர்வு.

என்னாச்சு ரொம்ப பயந்துட்டியா?நம்ம கனவுல அதிகமா நெகடிவ் தோட்ஸ் தான் வரும்பாங்கா.சோ கெட்டதுன்னா நல்லதே  நடக்கும்னு நினைச்சுக்கோ.

“உங்களை பார்க்கணும் போல இருக்கு. “

“கவிமா நான் வெளில இருக்கேன்டா.வீடியோ கால் எடுக்க முடில.எனக்கும் உன்னை  பார்க்கணும்னுதான் இருக்கு.வண்டிக்கு கூட போக முடியாது ஹோட்டல் உள்ள வந்துட்டேன். “

“உங்களை அன்னைக்கு போல  கட்டிக்கணும்னு தோணுது.” 

“இன்னும் ஒரே மாசம்தான் அப்றம் உன்கூடத்தானே இருக்கப்போறேன்… அதோட  அன்னைக்கு கட்டிக்கிட்டது போலத்தான் கட்டிக்கணும் சொல்ற. எத்தனைவாட்டி சொல்லிட்டேன் அன்னைக்கு ஜஸ்ட் கட்டிகிட்டோம்.இனி  அப்டில்லாம் கட்டிக்கிட்டு மட்டுமே இருப்பேனா தெரில.”

நான் உனக்குள்ள தொலைஞ்சு போறளவுக்கு கட்டிப்பேன்.உன்… ஆரம்பித்தவன் கூறிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அவளுக்குள் எழுந்த உணர்வுகள் அக்கணமே அவளை அவனுள் தொலைந்துவிட தூண்டியது.”

அவன் நின்றிருந்த இடத்தில் அவன் ஹோடேலினுள் நடந்துக்கொண்டே பேசும் விதம் பார்ப்பவருக்கு அவன் முக்கியமான ஏதோ விடயம் பேசிக்கொண்டே செல்வது போலத்தான் தோன்றும்.அவன் முகத்தில் எவ்வித உணர்வுகளும் வெளிப்படவில்லை. அவன் காதல் செய்கிறான் என்றாள் நம்பிடவே மாட்டார்கள்.குரல் மட்டுமே அதுவும் அவளுக்கு கேட்க மட்டுமே.அதுவே அவளை அங்கு பாடாய் படுத்தியது. 

“வரு… “அவள் குரலே கூறியது அவனை  அவள் எவ்வளவு தேடுகிறாள் என்று. 

“கவிம்மா,லெக்சஸ் ஒப் கிஸ்ஸஸ் டு மை ஏன்ஜல்…’ நான் இருக்க இடம், 

‘ப்ச் ஈவன் ஐ காண்ட் கிவ் அ கிஸ் ஓவர் தே போன் டா. “

‘கண்டிப்பா நாளைக்கு பேசலாம்.இப்போ அப்படியே துங்குவியாம்.”

“தூக்கம் வரல வரு. “

இன்னுமே அவள் கொஞ்சலில் மிஞ்சிக்கொண்டிருக்க,இருவருமே ஒருவரை ஒருவர் அதிகம் தேடினர்.காதல் செய்தாலும் அதை வெளிப்படுத்தி பகிர்ந்துக்கொண்ட அடுத்த நாளே இருவரும் இரு திக்கில் இருக்க,அலைபேசியின் அழைப்பு அவர்கள் இருவருக்குமே போதவில்லை.காதல் இன்னுமின்னும் கூடியதோடு, அவளுக்கு கிடைக்கப்பெறாத உறவுகளின் அன்பை மொத்தத்தையும் சேர்த்தே கொடுத்துக் கொண்டிருந்தான்,அவள் மனம் கொள்ளைக் கொண்ட காவலன். இருந்தும் அது அவளுக்கு அலைபேசியினூடே போதவில்லை.அவளை சகஜமாக்கும் பொருட்டு பேச ஆரம்பிக்க அது அவனுக்கே வினையாய் முடிந்தது. 

“நானே பேசனும்னு இருந்தேன் கவி. காலைல டைம்.நாளைக்கு மாமாவும் அத்தையும் எங்க வீட்டுக்கு ஜஸ்ட் ஒரு விசிட் பண்ணாலம்னு இருக்காங்க. “

“அது எப்பவும் போறது தானே. “

“எப்பவும் போறது தான்.ஆனா நாளைக்கு  கல்யாண விஷயமா பேசலாம்னு… “

“வரு பையன் வீட்ல இருந்து தானே பொண்ணு வீட்டுக்கு வருவாங்க.ஹனி எதுக்கு போறாங்க.நீங்களும் என் கிட்ட அதை சொல்றீங்க.நீங்க வேணாம் சொல்லலையா? “

“கவி… நானும் அதை மாமாகிட்ட  சொல்லிட்டேன்.அத்தை கூட சொல்லி பார்த்துட்டாங்க.ஆனா மாமா தான் ஜஸ்ட் பேசிட்டு வர்றது தானே,’யார் பேசினா என்ன  நான் பேசுறேன்னு’ சொல்ராங்க. “

“நான் ஹனி கூட பேசுறேன். அப்டியெல்லாம் போகவும் வேணாம். கேட்கவும் வேணாம். அவங்க என்னால யார் முன்னாடியும் தலை குனிய வேணாம்.அது யாரா இருந்தாலும். ‘எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்னு’ சொன்னீங்கள்ல.இப்போ அப்பாவை பேச அல்லோவ் பண்ணிட்டு பேசாம இருக்கீங்க…”

“கவி ஓரளவுக்கு மேல மாமாகிட்ட என்னால சொல்ல முடியாது மா. “

“உங்க வீட்ல பேசுறேன்னு தானே  சொன்னிங்க.நீங்க பேசி எங்க வீட்டுக்கு  கூட்டி போங்க. “

“கவி,மாமா என்னை ஒன்னும் பேச வேணாம் சொல்ராங்க. அவரே பெரியவங்களோட பேசுறதா சொல்ராங்க. அதான்…அப்படி சொல்றப்ப, “

“நீங்க என்கிட்ட என்ன சொல்லி  அனுப்பினீங்க? ஹனியோ இல்ல மீனம்மாவோ உங்க வீட்டுக்கு போய்  ஹர்ட்டாகி வந்தாங்கன்னு கேள்வி பட்டேன் அப்றம் நீங்க எனக்கு வேணாம்.வேணவே வேணாம்.நான் இங்கேயே இருந்துருவேன்.”

“கவி,அப்டில்லாம் ஒன்னும் ஆகாதுடா. நானும் வீட்லதான் இருப்பேன்.யாரும் மனசு கஷ்டப்படாம பார்த்துக்கிறேன். “

“ஹனி உங்க வீட்டுக்கு வர்றதே  அவங்களுக்கு மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கும்.நான் லவ் பண்ணதாலத் தானே அவங்க அப்படி பேச வேண்டி போறாங்க.’

‘நான் காலைல ஹனி கூட பேசிக்குறேன்.நீங்க ஒன்னும் பேசவேணாம்.கனவு கண்டு முழிச்சப்பவே நினச்சேன்.ஏதோ சரியில்லைன்னு.ஆனா என்னால ஹனிக்குதான் கஷ்டமாக போகுது.”

“கவிம்மா அப்டியெல்லாம் ஒன்னும் ஆகாது.நீ மனச கஷ்டப்படுத்திக்காத… ப்ளீஸ் டா “

நான் மாமா வீட்டுக்கு போக முன்ன  எப்படியும் அப்பாவை மாமாகூட பேச வெச்சிர்றேன்.ப்ரோமிஸ் மா “

அவள் விம்முவது கேட்க,அதோடு  அவனுடைய கிளையண்ட் வர நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. 

“நாளைக்கு,மாமா டின்னர்க்கு வர்றதா தான் சொன்னாங்க.அதுக்குள்ள அப்பாவை போய் மீட் பண்ண சொல்லிர்றேன்.நீ ஒன்னும் யோசிக்காத.எனக்கு இப்போ டைமாச்சு.வெச்சுடட்டுமா?  “

“ஹ்ம்… எனக்கென்னமோ மனசுக்கு கஷ்டமா இருக்கு.ஹனி மனசுக்கு கஷ்டமா இருந்துட்டா? அப்றம் நீ எனக்கு வேணாம்  சொல்லிருவேன்.”

“அப்டி ஏதும் அங்க நடந்துச்சுன்னா நானே ‘எனக்கு நீ வேணாம்’ சொல்லிர்றேன். சரியா? “

“வரு…” 

“நாளைக்கு அப்பா,மாமா மீட்டானதும் உன்கூட பேசுறேன்… குட் நைட். “

வார்த்தைக்கு வார்த்தை நீ வேணாம் நீ வேணாம் சொல்லவும் இவனுக்கு கோபம் வந்துவிட்டது.இன்னும் பேசினாள் அவள் கஷ்டபடுவாள் என அலைபேசியை நிறுத்திக்கொண்டான்.  

“நாளைக்கு ஏதும் ஆகிட்டா என்னை வேணாம் சொல்லிருவாங்களா? 

நடவாததை,நடக்க போகாததை நினைத்து கயல் தன்னை வருத்திக்கொண்டாள்.  

 

 

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!