“கனலியின் கானல் அவன்(ள்)”-24.2(final2)

20200724153943

மீனாட்சியின் தோள்களில்  சாய்ந்திருந்தவளை பார்த்த ரித்திகா,

“அண்ணி முதல்ல மதுவோட போய் ட்ரெஸ் ச்சேஜ் பண்ணிக்கோ,எவ்வளவு நேரம் தான் இப்படியே இருப்ப. “

உரிமையோடு,உறவு முறையும் சேர்த்து, மூத்தவள் என்பதையும் தன் பேச்சில்  காட்டிக்கொண்டே கயலோடு பேசுவாள் ரித்திகா. மீனாட்சியும் அவளை உள்ளே செல்லுமாறு கூற கயலோ பார்வதியைத்தான் பார்த்தாள். தன்னிடமும் எதுவுமே பேசாது இருந்ததால்,தன் மீதுதான் பிழையோ என நம்பியவள், அவரருகே சென்று, 

“சாரி அத்தை,நான் தான் அவங்களை வர சொன்னேன், அதான் வந்தாங்க.இல்லன்னா வீட்ல தான் இருந்திருப்பாங்க. என்னாலதான்… “

அவள் பேசி முடிக்கக்கூட இல்லை கேவலோடு அழுகை வந்துவிட, 

“கயல் என்ன இது?காலைல கல்யாணத்த வச்சுக்கிட்டு அழலாமா? கண்ண தொட. அவன் வரேன்னு சொல்லவும் நானே ஓரெட்டு கூட்டி வந்திருக்கணும். வர வேணாம்னு சொன்னாலும் வருவான்னு தெரியும் அதான் வந்துட்டோம்.’ என்றவர், 

‘மனசை கஷ்டப்படுத்திக்காத என்பையன் வந்துருவான்” என்றிட,  

இவர்கள் அருகே வந்திருந்த ஜனார்த்தனன், 

“ம்மா நலங்கு வச்சதுமே பொண்ணும் பையனும் பார்த்துக்க வேணாம்னு சொன்னதுக்கப்றம் தான் பார்த்துக்கணும்னே தோணும். நானே அந்த டைம்ல உங்கத்தையை பார்க்க போனவந்தான்.என் பையன் சும்மாவா இருக்கப்போறான்.நீ உள்ள போ எதுன்னாலும் பார்த்துக்கலாம் மா.”என்றார். 

அவளும் மதுமிதாவோடு அவலறைக்கு சென்று கட்டிலில் அமர, 

“அண்ணி,முதல்ல போய் டிரஸ் ச்சேஜ் பண்ணுங்க” 

என்று அவளை  உடைமாற்றச் செய்தவள் அவள் கைகளில் இருந்த காய்ந்த மருதாணியை அகற்ற உதவினாள்.அவள் கட்டிலருகே இருந்த ருத்ரா நேற்று காலை தந்த அலைபேசி விட்டு விட்டு ஒளிருவதை கண்ட மது, 

“அண்ணி நான் வந்ததுல இருந்து ஏதோ  மெசேஜ் வந்துட்டே இருக்கு” என அவள் கைகளில் தர,அதைப் பார்த்த கயல் சற்று நேரம் எதுவுமே புலப்படவில்லை. அப்போதுதான் அவளுக்கு பார்வதியின்  அழுகையுடனான பேச்சுசத்தம் கேட்டது.

“என்னங்க யோசிச்சிட்டு இருக்கீங்க,எங்க கொண்டு வந்து தரணும்னு கேளுங்களேன். காலைல மண மேடைல உட்கார வேண்டிய பையன்.இங்க பொண்ணு நிலை யோசிங்க… நேரம் கடத்தாம எதுன்னாலும்  பண்ணுங்க. ” பார்வதி அழுந்துக்கொண்டே கூற, 

“அண்ணி பதட்டப் படாதீங்க.வரு என்ன சின்னப் பையனா? அவனை வெச்சுகிட்டு பணம் கேட்டு மிரட்ட… அவன் திரும்ப காலைல தான் பேசுறதா சொல்லி போனை வச்சுட்டான். அவனுக்கு வருவ தலை குனிய வைக்கணும்னு நினைக்கிறான் போல. கொஞ்சம் பொருமையா இருங்க அண்ணி. 

கேட்டிருந்த கயலுக்கும் பதட்டம் தொற்றிக்கொண்டது.

‘அத்தை என்னை சமாதானம் பண்ணிட்டு இப்போ இப்படி பேசுறாங்க.ரொம்ப பயந்துட்டாங்க போல.’கடவுளே என் வருவுக்கு எதுவுமே ஆகவேணாம். அவங்களை என்கிட்ட சேர்த்திடு… ‘

கடவுளை வேண்டியவள்,தன் கைபேசியிலேயே கண்களை பதித்திருக்க ருத்ராவுடை அழைப்பை தவிர்த்து இன்னுமொரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தவண்ணம் இருக்க அழைப்பை ஏற்று சிறுநடுக்கத்துடன் காதினில் வைத்தாள்.

அழைப்பில் சொல்லப்பட்ட செய்தியை கேட்டவளுக்கு மட்டுப்பட்டிருந்த கண்ணீர் மீண்டுமாய் வளிய மது அவள் கைகளைப் பற்றிக்கொண்டு என்ன வென்று செய்கையால் கேட்டாள்.தலையசைத்து  ஒன்றுமில்லை என்றவள் அலைபேசியில் கூறுவதை செவிமடுத்திருந்தாள்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்கு முன்…

கயலை கீழே செல்லுமாறு அனுப்பிய ருத்ரா அவன் வந்தவழியே வீட்டின் நீச்சல் தடாகம் இருந்த பகுதியில் மேல் வர அமைத்திருந்த இரும்புப் படி வழியே இறங்கியவன் மாதவனுக்கு அழைத்து கீழே வந்துவிட்டதாகக் கூற அவனும் வந்து,வந்த வழியே அழைத்துச்சென்று வீட்டின் வாயிலருகே விட,மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் கண்ட நண்பனை பார்த்தவன், அவனோடு செல்வதாக மாதவனை உள்ளே அனுப்பி விட்டான்.

“என்னடா,மாமியார் வீட்டு சாப்பாடு பிடிச்சுப்போச்சா? அங்கேயே தங்கிட்ட… “

“இல்ல டா RV,சுமிக்கு கொஞ்சம் உடம்புக்கு முடிலடா அதான் அங்கேயும் இங்கயுமா மாறி மாறி இருக்கேன்,நாளைக்கு தேவையான எல்லா ஏற்பாடும் ஓகேவா? எதாவது பண்ண இருக்கா? “

“எல்லாமே ஓகேடா.தாலி கட்றது மட்டும் தான் பாக்கி” என்று சிரித்தவனை பார்த்த ஹரி, ரிடா நானுமே அந்த பொண்ண பார்த்ததும் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.”

“விட்றா விட்றா நானே அப்படித்தான் நினச்சுட்டேன். மாம்ஸ் வேற அந்தளவுக்கு  ஸ்மார்டா இருந்துட்டா யாரும் நினைப்பாங்க தானே.”

“சரி வா வண்டிலேயே போயிருவோம்”  வெளில இருக்க வேணாம்.” என்று ஹரி அவனை அழைக்க, 

“ரெண்டு வீடு தாண்டி போக வண்டியா? வாடா நடந்தே பேசிட்டு போகலாம்.உன் வண்டி இங்கேயே இருக்கட்டும். வேணும்னா எடுத்துக்கலாம்.” என்றவன்,

பெண்ணின் வாசனை தன்னில் இன்னும் இருப்பதை உணர்ந்து அவள்  நினைவுடனேயே நடக்க சுற்றம் மறந்தான்.

ஹரி அவனோடு பேசிக்கொண்டே வர பேச்சுக்கு பதிலின்றி போக ருத்ராவை பார்க்க அலைபேசியில் எதையோ பார்த்துக்கொண்டு வந்தவனை பார்த்து, 

“என்னடா என்னாச்சு?இப்போவே மந்திருச்சு  விட்டவன் கணக்கா இருக்க.”ஹரி கூறவும் ருத்ரா பதில் கூற முன்னமே இருபக்கமும் இருந்து வந்த இரண்டு வண்டியில் ஒன்றில்  ஒருவன் கண்ணாடி வழியாக ஹரியின் கால்களுக்கு அடித்திருக்க ஹரி சுதாகரிக்கும் முன்னமே,ருத்ராவும் ஹரியை பார்த்த அடுத்த நொடி அடுத்த வண்டியிலிருந்த ஒருவன் ருத்ராவின் தலையை ஓங்கி அவன் இருந்த வண்டியிலேயே அடித்திருந்தான். 

சுற்றம் மறந்திருந்தவனுக்கு அந்நொடியை கையாள சிறு அவகாசம் தேவைப்பட்டது, எனினும் அந்நொடியை தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்டவர்கள் அவனை வண்டிக்குள் தள்ளிட வண்டியும் வேகமெடுத்திருந்தது. இரண்டு வண்டியும் இருபக்கமும் சென்றிருக்க எந்தவண்டியில் ருத்ராவை ஏற்றினார்கள் என்பதை கவனிக்க தவறினான் ஹரி. 

வண்டி இரண்டும் விலகவுமே அதன் வேகத்தில் அனைவரையுமே ஹரி இருந்த பக்கமாய் பார்க்க வைத்தது. மாதவனும் அவன் நண்பர்களும் அவனருகே வர கால் வலித்தாலும் ஹரியும்,எழுந்துக்கொண்டே, 

“மாதவா RVய வண்டில ஏத்திட்டானுக டா எந்தப் பக்கம் போனதுல இருக்கான்னு தெரில.ரெண்டு பக்கமாவும் போகலாம் என்றவன் ஹரி அவனோடு சிலரை ஏற்றிக்கொண்டு ஒரு பக்கமாகவும்,மாதவன் அடுத்த பக்கமும் சென்றனர்.

இருந்தும் இரு வண்டியை மட்டும் காணவில்லை.ஒன்றரை மணிநேரத்துக்கு  பின்னர் வீடு வர வெளியில் இருந்தவர்கள் வீட்டினுள் இருந்தவர்களுக்கு தகவல் கொடுத்து அவர்களும் பயந்திருந்தனர். 

ஜனார்த்தனன் ருத்ராவின் அதிகாரியை  அழைத்து பேசியிருக்க அவரும் பார்பதாகக்கூறி வைத்திருந்தார். இருந்தும் எவ்வித தகவலும் இதுவரை கிடைக்கப்பெறாமல் இருக்க விடியும் வரை பொருக்க முடியாத சூழ்நிலை.விடிந்தால் திருமணம், மணமகனுக்கு ஆபத்து என்றால் என்ன செய்வது… 

அரசுவின் நிலை சொல்லவும் வேண்டுமா, மனிதரின் முகம் யோசனையில்  வாடியிருந்தாலும்,ருத்ரா தன்னை காத்துக்கொள்வான் எனும் நம்பிக்கை அதை விட இருந்தது.அதைக்கொண்டே தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டிருந்தார்.

மீனாட்சியும் வெளியில் தன்னை திடமாய் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள்  கடவுளிடம் மன்றாடிக்கொண்டிருந்தார். 

அறையில் அலைபேசியை  செவிமடுத்துக்கொண்டிருந்தவள் அது தடைப்படவும் அதனை வைத்துவிட்டு  கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு எழுந்தவள் அறையில் இருந்தே தன் தந்தைக்கு அழைப்பேசியில் அழைத்தாள். 

அரசுவும் அழைப்பை ஏற்று பேச, 

“ப்பா…” என்றிட மகளின் அப்பா என்றழைப்பு எவ்வாறான நேரங்களின் வெளிவரும் என்பதை உணர்ந்தவர், 

“என்னடா கண்ணம்மா? “என்றிட, 

மது கயலின் கைகளை பற்றி ஆறுதலாய் தட்டிக்கொடுக்க அவள் கைகளை இருகப்பற்றிக்கொண்டவள், 

“ஹனி,மாமா பக்கத்துல இருக்காங்களா? “

“இருக்காங்கடா என்னாச்சு?எங்க இருக்க நீ” என்று அவர் பதட்டபப்ட்ட,  

“ஹனி,நான் தான் பேசுறேன்னு  காமிச்சுக்காத.என் ரூம்க்கு வாயேன். 

அவரும் அப்படியே செய்ய, 

அவர்  உள்ளே நுழைந்ததுமே கண்களில்  நீர் நிறைய,

“ஹனி வரு இருக்க இடம் தெரிஞ்சு போச்சு, ஆனாலும் மாமாவோ,மாதவனோ அவங்க ஆளுங்களோ போய்ட்டா தெரிஞ்சிரும். உன்னை தான் யாருக்கும் தெரியாது நீ போய் அழைச்சிட்டு வரியா?அங்க என்ன நிலைமைல வரு இருப்பாங்களோ தெரில.”

அவள் நிலை புரிந்தவரோ அவளை இருக்கையில் அமர வைத்தவர் அவளின் கைகளை பற்றிக்கொண்டு, 

“டென்ஷன் ஆகாம என்னனு சொல்லுடா? “

அவள் அலைபேசியை காட்டி வரு நேற்று தந்ததாகவும் அதில் இவர்கள் இருவரது எண்களோடு ருத்ராவின் மேலதிகாரியின் எண்ணும் சேர்த்து ஒன்றோடு ஒன்று எந்நேரமும் தொடர்பில் இருப்பதாகவும் மூவருக்கும் மூவரைப்பற்றி தெரிந்து கொள்ளலாம் என்றவள், இப்போதான் வருவோட ஹெட் பேசினாங்க. அவருக்கு நேரடியா வரமுடியாதாம். அவரோட மற்ற போன் கால் எல்லாம்  எப்படியும் ட்ராப் பண்ணிட்டு இருப்பாங்களாம்.வரு இருக்க இடத்துக்கு அவரோட ஆளுங்களை போக சொல்லிட்டாராம்.இருந்தும் நம்மல்ல யாரும் போனா நல்லதுன்னு சொல்ராங்க.நீங்க போவிங்கன்னு எதிர் பார்க்காததால உங்களை பற்றி அவ்வளவா  தெரிஞ்சிருக்காதாம் அதுனால உங்களையும் போக சொல்ராங்க.”

மூச்சு விடாது அலைபேசியில் சொன்னதை அப்படியே கூற அவள் பேசும் வரை கேட்டிருந்தவர், 

“அவளையும் எழுப்பி அவள் கண்களை தன் இரு கைகளாலும் அழுந்த துடைத்து விட்டு நெற்றியில் இதழ் பதித்தவர்,

“ருத்ராவுக்கு ஒன்னும் இல்லைபயப்படாத என்ன. கொஞ்சம் வெய்ட் பண்ணு வரேன்.” என அறைவிட்டு வெளியே செல்லப்பார்க்க, 

“ஹனி நானும் வரட்டுமா? ” என்றிட, 

“சரிடா,கொஞ்சம் வெய்ட் பண்ணேன் வந்துர்றேன்” என்றவர் முன்னறை நோக்கி சென்றார்.  

மற்றவர் கவனத்தில் படாதவாறு ருத்ராவின் தந்தையோடு பேசியவர்,மீனாட்சியை  அழைத்து, 

‘கயலுக்கு உடம்புக்கு முடியல பீவர் போல இருக்கு ஹாஸ்பிடல் கூட்டி போய்ட்டு வரேன் இருக்கவங்களை கவனிச்சுக்கோ’ என்றவர் அவர் வருவதாக கூறவும் அவரை மறுத்துவிட்டு கயலை அழைத்துக்கொண்டு கிளம்பினார். 

அரசுவும் நேராக அருகே இருந்த தனியார் வைத்தியசாலை ஒன்றை அடைந்தவர்  உள்ளே சென்று சிறிது நேரம் தாமதித்து மீண்டுமாய் வண்டியில் ஏறி வீட்டை நோக்கியே திரும்பினர். 

கயல் வண்டியில் ஏறுவதை கண்டிருந்த அமைச்சரின் ஆட்களோ இவர்களை தொடர்ந்திருந்தனர்.ருத்ராவின் உயரதிகாரி அவ்வப்போது தகவல் தந்தவண்ணம்  இருக்க இவர்களும் வீட்டருகே வரவும் பிரதான வழி போக்குவரத்து இடைநிறுத்ததின் போது தந்தையும் மகளும் வேறொரு வண்டிக்கு மாறியிருக்க அவர்களது வண்டியை வேறொரு நபர்  ஓட்டிச்சென்றார். 

அரசுவும் கயலும் சென்ற வண்டி போய் நின்ற இடம் அவனின் டென்னிஸ் களகம் அமைந்திருந்த இடத்திற்கு சற்று தள்ளி. 

அவனது இடத்திலேயே அவனை  கொண்டுவந்திருக்க யாரும் அவர்களை நெருங்க தாமதமாகும் என்று நினைத்திருந்தனர்.ருத்ராவுக்கு தலை அடி பட்டதும் சில நொடிகளே அதன் வலியால் தடுமாறினாலும்,அவர்களை சுலபமாக தாக்கியிருந்தான். அவனுக்கு இது சாதாரணமாகவே இருக்க,இது வரை வீட்டினர் அறிந்திராத விடயமல்லவா பயந்துவிட்டனர்.ருத்ரா வீடு சென்றிடலாம் என நினைக்கும் போது அமைச்சரோ  அங்கிருந்த ஒருவனின் அலைபேசிக்கு தான் இப்போ வருவதாகக் கூறியிருக்க அவரையும் பார்த்துவிட்டே செல்லலாம் என தாமதித்தான். ஆனால் அதற்கிடையே அரசுவும் கயலும் வந்து சேர்த்தனர். 

கயலின் அலைபேசியை அவனோடதோடு  இணைத்தது அவளுக்கு ஏதும் ஆபத்தென்றால் தான் தெரிந்துகொள்ளவே. ஆனால் அவள் அதைக்கொண்டு அவனை வந்தடைவாள் என எதிர் பார்த்திருக்கவில்லை.அதோடு ஜனார்தனனுக்கு அழைப்பு சென்றிருக்கும் என்றும் நினைத்திருக்காத ருத்ரா இவளைக் கண்டதும்,இவளை நெருங்க வெளியில் கேட்ட வண்டி சத்தத்தில் அவளை அவசரமாக இழுத்துக்கொண்டு அவனது அலுவலக அறைக்குள் கூட்டிச்சென்றான். 

அவனை விழி விரித்து ஆராய்ந்தவளைக் கண்டவன், 

“எனக்கு ஒன்னுமில்லடா,அம் ஓகே” என அவளை ஒருகையால்  அனைத்துக்கொண்டவன் வெளியில் யார் வருகிறார் என கதவினூடே பார்க்க, 

அவனை இறுக்கி அணைத்திருந்தாள்…அவள் தவிப்பை  உணர்ந்தவன் சற்று பொறுத்து அவளை விளக்கியவன், 

“நீ இங்கேயே இரு நா வரேன்” என்றுவிட்டு செல்ல,  

“வரு ஹனி வெளில இருக்காங்க.”

“நான் பார்த்துக்கிறேன்.” என்றவன் அவளை உள்ளே விட்டு அறையை பூட்டிக்கொண்டு சென்றான்.வெளியே வந்தவனோ, 

“அமைச்சரே என்ன கோலமிது? ” என்று  கேட்டவாறே வந்து அரசுவிடம்,  

“என்ன மாம்ஸ் இவனெல்லாம் ஓராளுன்னு உங்க எனெர்ஜியை வேஸ்ட் பண்ணிடீங்க.” என்றிட, 

“எனக்குமே ரொம்ப நாளா யாரையாவது  அடிச்சு பார்க்கணும்னு ஆசை அதான் கிடைச்ச சந்தர்ப்பத்தை யூஸ்  பண்ணிக்கிட்டேன் “

“சரிதான்” என்றவன், 

“ஆளு பார்க்க சின்னதா இருக்கானேன்னு தப்பா கணக்கு போட்டுடீங்க அமைச்சரே. என்னை பற்றி உங்க பையனையே கேட்டிருக்கலாமே? அச்சோ! அதுவும் இப்போ முடியதில்லையா? 

பையன்  இப்போதைக்கு கண்ணு முழிப்பானா தெரில.அதோட  உங்களாலையும் பேச முடியாத நிலை.சரி விடுங்க.’

‘அமைச்சரே,இனி என்னை தொடணும்னு  நினைக்கவோ, நினைக்க என்ன என்னை பற்றி யோசிச்சா கூட யோசிக்க தலைல மூளை இருக்குமான்னு தெரியாது. எனக்கு ரொம்ப புடிச்ச சாப்பாடுன்னா இந்த மூளைக்கறிதான்.சோ பார்த்து இருந்துக்குங்க அமைச்சரே.அதோட இன்னைக்கு காலைல என் கிளப் எப்படி இருந்துச்சோ அதுபோல நாளைக்கு இருக்கணும். “

அரசு  தன் மருமகனின்,மகளின் கணவனின்,தன் மனைவியின் வளர்ப்பு மகனின் தோரணையை சிரிப்புடன்  பார்த்திருந்தார். 

“மாம்ஸ் போலாம்”என கயலையும்  அழைத்துக்கொண்டு வீடு வந்தனர். 

வண்டி விட்டிறங்கவும் அரசு முதலில்  இறங்கிவிட முன்னிருக்கையில் இருந்தவன் பின் திரும்பி கயலைப் பார்த்தவன்,  

“கவி… இறங்கினதும் கேள்வி கேட்டு என்னை ஒரு வழி பண்ணிருவாங்க.நீ போய் நல்லா தூங்கி எழு.நாளைக்கு அப்போதான் பிரெஷா இருக்கும்.”

ஒன்றும் பேசாது அவனை இழுத்து இதழ் பதித்தவள்,வண்டி விட்டிறங்கினாள்.ராட்சசி  என்று முணுத்தவாறு வலித்த தலையை தடவிக்கொண்டு இவனும் இறங்கி அனைவரது கேள்விகளுக்கும் பதிலளித்து உறங்க செல்ல நேரம் என்னவோ அதிகாலையையே தொட்டிருந்தது.

நாளை ருத்ரவர்மன் மற்றும் கயல்விழியின் திருமணத்தில் சந்திக்கலாம்.