கனலியின் கானல் அவன்(ள்)- 24(final3)

இனி எல்லாம் ஒளிமயமே…. 

நம் கண்களுக்கு தெரியும் மாயமான ஒன்றை நம்பி வாழ்வதென்பது கடினமே.அது மாயை அல்ல உண்மை என்றாகிட  நம் நிலை இன்பத்திலும் உச்சம் அல்லவா. 

கிடைக்கப்பெறாது, தனக்கு அதை சொந்தமாக்கிட முடியாது எனும் நிலையில் இருந்த  இரு உள்ளங்களை ஒன்றோடொன்று சேர்ப்பித்தவள்,அது இனி இணைந்தே இருக்க தன்னால் தடை வேண்டாம் என்று தன் காதலை மறைத்திட தவிக்க, 

அவனோ,அவள் கண்களின் வழி நுழைந்து, உள்ளத்தோடு உறவாடி அவளை சரிபாதியாக்கிக்கொண்டவன் இன்று உலகறிய தன் மனைவியாய் கரம் பிடிக்க மணமேடையில் அமர்ந்து ஐயர் மந்திரம் ஓத தன்னவள் வரவை எதிர்பார்த்து காத்திருந்தான். நொடிகளும் யுகங்களாக கடக்கும் நேரமிது. 

காலை முகுர்த்தம் பத்திலிருந்து பதினொன்றுக்குள் என கூற,மண்டபம் அருகே இருந்து கோயிலில் பெண்ணழைப்போ சிறப்பாய் முடிந்து  மண்டபத்திற்கு வந்திறங்கிய மணமக்கள் ஒன்றாய் வந்து,மணப்பெண் மீண்டுமாய் தன்னை சரிப்படுத்திக்கொண்டு ஐயர், 

“பொண்ணை அழச்சிண்டு வாங்கோ… ” 

என்று குரல் கொடுத்த நேரம் பதுமை என வந்தாள் கயல்விழி.பெண்கள் ஒரு படையே அவளோடு வர பெண்ணுக்கோ கால்கள் பின்னிக்கொண்டன.உடலில் சிறு நடுக்கம், அவளுக்கும் மண மேடைக்குமான இடைவெளி நீண்டுக்கொண்டே செல்வதுபோல இருக்க எப்படியோ அவனருகே வந்து அமர்ந்திருந்தாள். சிவப்பும் அல்ல அது செம்மஞ்சலும் அல்ல அவள் தங்க நிறத்தை எடுத்துக்காட்டும் அந்த பட்டுச்சேலை பாந்தமாய் அவளை தழுவியிருந்தது.

காதல் உள்ளத்தில் நிறைந்திருக்க கண்களில் தன்னவள் என்ற உரிமையிருக்க காதல் கணவனாய் உரிமைபெற போகிறவன் தன்னவள் அவனை நோக்கி வர,அவளை அனைவரும் இருக்க பார்வையாலும் தொடர்ந்து பருகிட முடியாதவன் தன்னருகே அமர்ந்ததும், கழுத்தில் இருந்த மாலையை சரி செய்தவாறே அவள் புறம் சாய்ந்து அவ்வப்போது வார்த்தைகளால் அவள் உணர்வுகளை தீண்டினான்.பெண்ணோ அவன் காதல் வார்தைகளில் திண்டாடினாள். 

இனிதே ருத்ராவின் கரங்கள் தன்னவளின் கழுத்தில் பொன் தாலியை அணிவித்து தன் உயிரினும் மேலான மனைவியாய் அவனுள் நுழைந்து உரிமையாய் அவன் உயிர் குடிக்க அனுமதி தந்தான்.

சடசங்குகள் முடிய,கணவனுடன் ஒன்றாய் இணைந்து கணவனின் வீடு வந்தவள் அவன் கரத்தோடு தன் கரம் பிணைத்து வீட்டினுள் நுழைந்தவள் அவன் இதயவீட்டில் என்றோ நுழைந்து சாவியை தொலைத்து விட்டிருந்தாள்.  

அவர்களுக்கான இன்ன பிற சடங்குகளும் முடித்து பகல் உணவு உண்ணும் வரையிலும் உறவினர் படைகள் சூழ இருக்க இருவருக்குமே பேசிக்கொள்ள சந்தர்ப்பம் அமைய வில்லை. மாதவனும்,மதுமிதாவும் மாறிமாறி கேலி செய்துக் கொண்டு,அவர்களை  இம்சித்துக்கொண்டே இருந்தனர்.பகல் உணவுண்ண அமர்ந்ததும் ஒருவரை ஒருவர் ஊட்டிவிடவும்,அதை புகைப்படம் எடுக்கவும் என ஒருவழியாக்கி விட்டனர்.மாலை ஆறு மணியளவில் வரவேற்பு விழாக்காக மண்டபம் செல்லவிருப்பதால் மணமக்களை ஓய்வெடுக்குமாறு அனுப்ப கயலை கீழே இருந்த ஓரறைக்கு  ரித்திகா அழைத்து செல்ல அவர்கள் பின்னே வந்த ருத்ராவை பார்த்தவளோ,”வரு நீ மாடிக்கு போ”என்றிட, 

கயல் அவனை பார்த்து சிரிக்க கோபம் கொண்டவனோ அவளை முறைத்து விட்டு அவனறைக்கு சென்றுவிட்டான்.சென்றவன் கட்டிலில் விழுந்ததுதான் தெரியும் உறங்கியிருந்தான்.கயலும் அப்படியே. வீட்டில் மற்றவர்களும் சற்று ஓய்வு வேண்டி சிறு தூக்கம் போட்டனர்.அரசுவும் மீனாட்சியும் ஓரறையில் இருக்க காலை முதல் பார்த்திருந்த அனைத்து நிகழ்வுகளும் மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருந்ததோடு மகளின் மலர்ந்த முகம் பெரும் நிம்மதியை அளித்தது.மீனாட்சி அருகே வரவும் அவரை இறுக அண்ணைத்துக்கொண்டவர் தன் மனைவிக்கு தன் சந்தோஷத்தை வெளிப்படுத்த மங்கையவர் திக்குமுக்காடி போனார்.

அரசுவின் தோளில் தலை வைத்து கட்டிலில் சாய்ந்து இருந்த மீனாட்சியும் நிறைவாய் உணர்ந்தார்.  

மாலை வரவேற்பு விழாவும் இனிதே நடந்து முடிய,மலர் அலங்காரங்களுடன் மணமக்கள் இருவரும் ருத்ராவின் வண்டியில் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.நேற்றைய இவரோடு நடந்த நிகழ்வு இவர்களோடு குடும்பத்தையும்  குழப்பிவிட்டிருக்க, இப்போது இருவருமே மன நிறைவோடு இருந்தனர்.கயலுக்கு தன்னை விட்டுவிட்டு தன் அன்னை தந்தை சென்றுவிடுவர் எனும் அடுத்த நிகழ்வு நினைவுக்கு வர கண்கள் கலங்க தானாகவே ருத்ராவின் தோள்களில் தலை சாய்ந்தாள். 

“என்னடா ரொம்ப டையர்டா இருக்கா? “

ருத்ரா கேட்கவும்,இல்லை என்றவள்  எழப்பார்க்க,அவளை அனைத்துக்கொண்டவனோ, 

“என்கிட்ட வர மட்டும் தான் முடியும். வந்தப்புறம் திருப்பி அனுப்புறது என் கையிலதான் இருக்கு.சோ இபோதைக்கு எனக்கு அந்த எண்ணம் இல்லை.” என்றான். 

அவளும் அவன் கைகளை தன் இருக்கரங்களால் பற்றிக்கொண்டு இன்னுமாய் அவனில் சாய்ந்துக்கொண்டாள். 

அரசுவும் மீனாட்சியும் விடைபெற நினைக்க  பெண்ணவளின் கண்கள் காண இயலாத தந்தையின் கண்களோ அணைவிட்டு வெளிவரகாத்திருக்கும் கண்ணீருடன். 

அவரை அனைத்து அவர் தோள் சாய்ந்திருந்த மகளின் தலை வருடிக்கொடுத்தவர் அவளை இலகுவாக்கும் பொருட்டு இதமாக பேசி விடைப் பெற்றார்.மீனாட்சிக்கும்  மகளளுடைய நிலையையும் கணவனையையும் இலகுவாக்க நினைத்திட அவரும் அதே நிலையில். ருத்ராவின் கையணைப்பில் இருத்தவரோ, 

“வரு,அவளை சந்தோஷமா பார்த்துக்கோடா. அப்பாட உறவு மட்டுமே அவளுக்கு இருந்திருக்கு இனி எல்லாமுமாய் நீதான். அவளை நோகடிச்சுறாத.பெரிய பொண்ணாட்டம் நடந்துக்கொண்டாலும் குழந்தைடா.”  

“அத்தம்மா மாம்ஸ் பார்த்துக்கொண்டதை போலயே பார்த்துக்குறேன் போதுமா. இதுக்கப்றம் நம்மளை யோசிச்சுகிட்டு இருக்காம நீ சந்தோஷமா இரு.அப்போதான்  எங்களுக்கும் அது. “

எந்த பெண்ணும்  தன் இல் வாழ்வில் தோற்றுவிடும் முதலிடம் தன் தந்தையை தன் கணவனின் தேடும் போது தானே. அந்தக் கணவனே அதை கொடுக்கிறேன் என்றால் பெண்ணவள் கொடுத்துவைத்தவள் தானே. 

அவர்கள் விடைபெற்று செல்ல கயலை ரித்திகா அழைத்து சென்று உடைமாற்றி  ருத்ராவின் அறைக்கு அனுப்பினாள். 

கயல்விழியின் விழிகள் மட்டும் மை தீட்டிஇருக்க கழுத்தில் பொன்தாலி மட்டும்.அவ்வழகே தன் காதல் கணவனை தன்னுள் மூழ்கச்செய்திடும் படியாக இருக்க,இள நீல நிற ஷிப்போன் சேலை இரண்டங்குல அடர் நீல கற்கள் பதித்த பார்டர் வைத்திருந்தது.அவள் உடலை பாந்தமாய் தன்னுள் சுருட்டிக்கொள்ள கூந்தல் விரித்து விட்டு ஒரு கிளிப்பிற்குள் அடக்கி அதில் மல்லிகைச்ச்ரத்தினை சூடியிருதாள் வீட்டினுள் நிலவாய் ஜொலித்தாள்.  

பெண்ணவள் எவ்வளவு மெதுவாக சென்றலுமே அவன் அறை வந்திடத்தான் செய்தது. கதவில் கைவைத்து இவள் திறக்க உள்ளிருக்க வேண்டியவனோ இவள் பின்னிருந்து, 

“ஹாய் பொண்டாட்டி… “என்றிட, 

 உடல் சிலிர்த்து தலை திருப்பி பார்க்க இதழோடு கண்கள் சிமிட்டி சிரிக்கும் ஆணழகனைக் கண்டவள் பேச்சின்றி உறைந்துவிட்டாள்.

அவளின் நிலைக்கண்டவனுக்கு சொல்லவும் வேண்டுமா?

“நீ இல்லாம உள்ள போக பிடிக்கல.ரெண்டு பேருமா சேர்ந்து போகலாம்னு வெயிட்பன்றேன். “என்றவன்,அவள் தோளோடு அணைத்துக்கொண்டவன்,”வா ” என அவளை உள்ளே அழைத்துச்சென்றான்.

காதல் கொண்டவன், பெண்ணவளை இல்லறத்தின் ஆரம்பத்தை காண அவனோடு அவளையும் அழைத்துச்செல்ல இடையே இருவருக்கும் இருந்த தடைகளை காதல் கணவன் தகர்த்திட, பெண்ணவள் அவள் ஆயுதம் எனும் நாணத்தின் துணைக்கொண்டு தடுத்திட முயல,காதல் கண்ணாளனோ அவள் தடுத்திட எடுத்த ஆயுதத்தை தன் இதழாயுதம் கொண்டு முன்னேறிச் சென்றான்.ஆரம்பத்தை கண்டவர்களோ அதன் முடிவை கண்டிட பேராசை எழ இருவரும் ஒருவருக்கு துணையாய் இன்பம் பெற்று கலைத்து அவள் மார்பில் தஞ்சம் கொண்டவனின் தலை கோதிக்கொண்டிருந்த மங்கை அவன் முகம் காண நாணி அவன் தலையோடு தன் தலைவைத்து அணைத்துக்கொண்டாள்.

அவர்களின் கானலாய் நினைத்திருந்த காதல் கானலாய் மாறியதன் விளைவில் நிம்மதியான துயில் நீங்கி எழுந்திடும் நேரம் 

கதிரவனின் ஒளியானது அவர்களின் அறை யன்னலினூடே மஞ்சத்தில் பட்டுதெறிக்க அவ்விடம் ஓவியனின் கண்ணில் பட்டிருக்குமெனில் அவன் கையில  பார்பபப்வரை நாணம் கொள்ளச்செய்யும் சித்திரமாய். 

பெண்ணவளின் கழுத்துவரை போர்த்தியிருந்த கம்பளியோடு,கூந்தல் ஒரு பக்கமாய் முகத்தை மறைத்திருக்க ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.தன் விரல் கொண்டு கூந்தலை ஒதுக்கியவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து மறுபக்கம்  திரும்ப முன்னமே மனைவியவள் அவனோடு ஒன்றிக்கொண்டு இமைகளை மெதுவாகத் திறந்தவள் அவன் முகம் பார்த்து புன்னகைக்க அந்த புன்னகை தந்த தித்திப்பு, அன்றைய நாளுக்கான அவனது ஆகாரமாய் மாறிட இனி என்றும் எப்போதும் அவர்கள் வாழ்வு ஒளிமயமாய்… 

 

மூன்று வருடங்கள் கடந்திருக்க… 

தன் ஒன்றரை வருட பேத்தியுடன் ஐக்கியமாகி இருந்த மீனாட்சி, அரசுவைப் பார்க்க தன் மடியில் தலை சாய்ந்திருந்த கண்ணம்மாவின் தலை வருடிக்கொண்டு  இருவருமாக பேசிக்கொண்டிருந்தனர்.

ருத்ரா வெளியூர் சென்றிருக்க தன் தாய்வீடு வந்திருந்தவள் இரண்டு நாட்களின் பின் வரும் கணவன் வரும்வரை தந்தை மடியில் தஞ்சம் . 

வண்டிச்சத்தம் கேட்கவுமே தன் கைகளை உயர்த்தி பாட்டியை தூக்குமாறு சொல்ல மீனாட்சியும் தன் பேத்தியை தூக்கிக்கொண்டு எழ “ப்பா ப்பா… ” என முன்வாசலை காட்டி போகுமாறு கூறி,அவரும் சென்றார். 

கயலும் தந்தை மடிவிட்டு எழுந்தவள் முகத்தை உர்ரென வைத்துக்கொள்ள, 

“எதுக்கிப்போ முகத்தை தூக்கி வெச்சுக்குற? 

காரணம் தெரிந்தும் மீனாட்சி கேட்க,

“அவங்க வந்ததுமே அவங்களை தூக்க சொல்லுவா அப்றம் என்னை பக்கத்துலயும் விடமாட்டா.சோ நாந்தான் இன்னைக்கு  முதல்ல… “

என சிறுபிள்ளையாய் தன் மகளுடன் போட்டிக்கு நிற்க,

மகளுக்கோ “அம்மா” என்று சொல்வதை விட பேசப்பலகும் மழலைக்கு “கவி “என்று இலகுவாய் வந்திட தந்தையுடன் மகளும் அப்படியே அழைக்க பலகிவிட்டனர்.

“கவி டூ…க்  கு… ப்பா பூ வா…” என்று பேசும் தன் தந்தையை ஒத்து பிறந்திருந்த மகளுக்கு ‘அமுதா’ என பெயர் சூட்டி இருந்தனர். 

“அம்மு…”  என தந்தை அழைக்க தன்னைப்போலவே இதழ்களோடு போட்டியிட்டு சிரிக்கும் கண்களை கொண்டவள் தன் அத்தையின் கைகளில் இருந்து இவனிடம் தாவ மகளை தூக்கி அணைத்துக்கொள்ள, மகளோ அவன் குத்தும் தாடியை இரு தளிர் கைகளாளும் பிடித்துக்கொண்டு அவன் நாசியை முத்தமிட்டு கடித்து வைக்க பார்த்திருந்த காதல் மனைவியோ இதழ்களில் புன்னகை இருந்தும் முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு நின்றிருந்தாள். 

உள்ளே இவன் வர மீனாட்சி கயலை கண்களால் சிரிப்போடு காட்டிவிட்டு அவனுக்கு குடிக்க ஏதும் எடுத்து வர உள்ளே சென்றார்.

மகளை ஒரு கையால் தூக்கிக் கொண்டவன் மனைவியருகே வர அவளோ தன் தந்தையோடு அமர்ந்துக் கொண்டாள்.இனி சமாதானம் செய்ய உடன்படிக்கை போட வேண்டாமா… காதல் கணவனுக்கு அதுவெல்லாம் அத்துப்படி.

தன் மாமனாரோடு பேசியவன் மகளோடு எழுந்து சமையலறை  சென்றவன் தன் அத்தையிடம் மகளை கொடுக்க, 

“முன் வாசல்ல இருந்து வர உனக்கு இவ்வளவு நேரமா வரு? பாரு அவ எப்டி இருக்கான்னு.நைட் வர கொஞ்சம் லேட்டானாலே பாடுதான்.இன்னைக்கு  ரெண்டு நாள் வேற.உன் பாடு திண்டாட்டம் தான்.அவன் கைகளில் தேநீர் கோப்பையை கொடுத்தவர் தேனு… என இங்கிருந்தே அழைக்க அரசுவும் மகளிடம் தப்பி மனைவியிடம் ஓடி வந்தார். 

கணவன் வருவதைக் கண்டவள் என் செய்வான் என தெரிந்தும் அமர்ந்திருந்த இடத்திலேயே இருக்க அவளை தன் கைகளில் அள்ளிக்கொண்டவன், 

“ராட்சசி என்னை எதுக்குடி படுத்துற? ” என அவளைக் கொஞ்சிக்கொண்டே தம்மறைக்கு அழைத்து வந்தவன் இறக்கி விட்ட அடுத்த நொடி அவன் இதழ்களை தன் இதழ் கொண்டு பற்றிக்கொள்ள அவள் இடையோடு கைகோர்த்து அவளை தன்னுள்  இழுத்துக்கொண்டான்…. 

தொடரும்  இவர்கள் வாழ்வு இனி என்றும்  நிறைவாக… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!