கனலியின் கானல் அவன்(ள்)13-1

கிட்டத்தட்ட  இரண்டு வாரங்கள்  சென்றிருந்தது… கயல்  இரண்டு நாட்களுக்கு முன்பிலிருந்து வேலைக்கு வர தொடங்கியிருந்தாள். 

அன்று ருத்ரா  வீட்டில் வந்து  பார்த்ததன் பின்னால்   அவனை எங்கும் சந்திக்க வில்லை.காணக்கிடைக்கவும் இல்லை. 

 

அவன் நெஞ்சில் காதல் வேரூன்ற ஆரம்பித்த நொடியில் தன் நிராகரிப்பைக் கொண்டு அதனை பிடுங்கி எறிந்து  விட்டதாய் கயல் நினைத்திருக்க,அவனோ அவளை அவள் மீதான காதலை இதயத்தில் உரமிட்டு செழிப்பாக வளர்க்க ஆரம்பித்திருந்தான். 

 

அவன் அன்றே ‘தன்னிடம் அவளுக்கு  ஏற்பட்ட கோபத்தை தனித்து அவன் தன்  பிழையை உணர்ந்து மன்னிப்பு கேட்டதை அவளும் புரிந்து ஏற்றுக்கொண்டாள்’ என்றதோடு,  

‘அவள் வேண்டுமென்றே அக்கோபத்தை நிலை நிறுத்தி வேறேதோ ஒரு காரணத்தை தன்னிடம் மறைத்துக் கொண்டு அவளே  அவளை நோகடித்துக்கொண்டிருக்கிறாள்’ என்பதை நன்கறிந்துக்கொகண்டான்.  

 

அத்தோடு அவன் அவளை காணச்சென்றிருந்த அடுத்த நாளே வேலையொன்றுக்காக மலேஷியா சென்றிருக்க தன் அத்தையோடும் பேச நினைத்திருந்தவை பேசவும் நேரம் கிடைக்காமல் போனது.இன்னும் மூன்று நாட்களில் வருவதாக கூறியிருந்தான். 

 

அவன் வரும் போது அவனுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி எவ்வகையில் அவனை தாக்கும் என அறிந்திருந்தால்?…

 

வீட்டில் தேனரசன் அவளிடம் ஒன்றுமே கேட்கவில்லை.அவள் மனம் திறந்து  பேசும்வரை காத்திருந்தார்.மகள் ஏதோ அவள் வாழ்கையில் முக்கிய முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் தடுமாறிக்கொண்டு  இருக்கிறாள்,அவளே தெளிந்து வரட்டும் என விட்டிருக்க,அவள் அவரது வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தவே தவிக்கிறாள் என்பதை அறிந்தால்?… 

 

இவ்வாராக ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

 

கயலை மீனாட்சி ஒரு முறை அரசு  வேலைக்கு சென்ற நேரம் வந்து பார்த்துவிட்டு சென்றிருந்தார்.அவளை நலம் விசாரித்தவர்,கயல் அவரிடம் எதுவுமே கேட்கவில்லை என்பதை உணர்ந்த மீனாட்சியே,  

 

“கயல் எனக்கு உங்க அப்பாவை மீட்  பண்ணணுமே,என்ன பண்ணலாம்?”

அவர் கேட்ட மரு நொடி அவள் முகத்தில்  எழுந்த மலர்ச்சியை அவளின் கண்கள் விரிய அவரை பார்த்ததிலேயே  உணர்ந்தார்.  

 

ஆனால் அவர் என்ன பேச கேட்கிறாரோ  என நினைத்த மரு வினாடி அவள் முகம் பொழிவிழக்க, 

“ஹேய் என்னாச்சு?”என்றவர் அவள்  கைகளை அவர் கைகளுக்குள் கொண்டுவந்தவர்,”கயல் உங்கப்பா நீ என்கிட்ட கேட்டதை ஏத்துக்குவார்னு  எனக்கு நம்பிக்கை இல்ல.அதோட எனக்கும் எப்டி இதை ஏத்துக்குறதுன்னும் தெரியல…நீ அன்னக்கி வந்ததுல இருந்து இன்னுமே  ஒரு முடிவுக்கு வர முடியல.அதான் உங்கப்பாவோட பேசி பார்த்துட்டே எதுன்னாலும் யோசிக்கலாம்னு இருக்கேன்.

அதோட நான் எதுன்னாலும் வருவோடத்தான் ஷேர் பண்ணிக்குவேன். அவன் கிட்டயே என்ன பேசுறதுன்னு தெரில. நீ அன்னக்கி வந்ததை பார்த்துட்டு  இப்போல்லாம் உன்கூடத்தான் ரொம்ப 

பேசுறேனாம் கோவிச்சுகிட்டான்.”என்று  சிரித்தவாறு அவளை பார்க்க, 

 

“சாரி.நான் அன்னக்கி உங்க கிட்ட அப்படி  கேட்டிருக்க கூடாது மேம்.ஹனி ஹாப்பியா இருந்தாலே எனக்கு போதும்  மேம். இப்போவே நான் ரொம்ப லேட்னு தான் நினைக்குறேன்.என்னால ஹனி இழந்தது ரொம்பவே அதிகம்.அதையும் நா இங்க  வந்தப்பறம் தான் ரொம்பவே உணர்ந்தேன்.எங்கம்மா காதலுக்காக உயிரை இழந்தாங்க.ஹனிக்காக என்னை விட்டு போரதா நினைச்சாங்களே தவிர  என்னால என் ஹனியோட லைப் என்னாகும்னு நினைக்க தவறிட்டாங்க.உயிரை விடுறதுன்னு முடிவெடுத்தவங்க ஹனிக்கு ஒரு லைப் அமைச்சிருக்கலாம்.இல்லன்னா உங்களையாவது கான்டெக்ட் பண்ணிருக்கலாம்.நல்ல வேலை  எழுதியாவது வெச்சாங்க,அதையும் எனக்கு முன்னமே கிடைகிறது போல செஞ்சிருக்கலாமே.ப்ச் அவங்களை பிழை சொல்லவும் முடியாது தான்.அவங்க காதல் அப்படி. 

 

மேம்,ஹனி ஓகே சொல்லிட்டாங்கன்னா  நான் திரும்ப கனடா போயிருவேன்.நான்  அவங்களுக்காக தான் இந்தியா வந்தேன்.என் ஹனி ஹாப்பியா  இருந்தாலே எனக்கு போதும்.அவங்களுக்கு இனிமேலும் என்னால எந்த கஷ்டமும்  வரக்கூடாதுன்னு நினைக்கிறேன்.உங்களுக்கும் என்னால எந்த ப்ரோப்லமும் வராம  நடந்துப்பேன். இனி என்னால என்னைய பார்த்துக்கலாம். பாருங்க நானும் பெரிய பொண்ணா ஆகிட்டேன்.”என கண்களால் அவளை சுட்டிக்காட்டினாள்.

 

அவள் பேசி முடிக்கவும் குரல் உள்ளே சென்று மிகவும் கடினப்பட்டு அழுகையை  அடக்கி இருப்பதை உணர்ந்த மீனாட்சி, “அப்போ உனக்கு அம்மா வேணாமா?நான் ரொம்பவே ஆசைப்பட்டேன் எனக்கு  பொண்ணொன்னு இருக்காளேன்னு தான். ஆனா உனக்கு அதுல விருப்பம் இல்லை போலவே.”

 

அவரை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் நிறைந்திருந்த கண்ணீர் கன்னங்களை நனைத்தது.அவளை தோளோடு சேர்த்து  அனைத்தக் கொண்டவர் கண்களை துடைத்துவிட்டு,

“உங்க ஹனி நீ நினைக்கிறது போல  இலகுவா ஏத்துக்குவார்னு சொல்ல முடியாது.ஒரு பெண்ணா நான் எனக்கு  துணை தேவைன்னு பலமுறை உணர்ந்து இருக்கேன் கயல்.

ரொம்ப ஈஸியா தனியா ஒரு பொண்ணால வாழ்ந்துரலாம்னு சொல்வாங்க,சொல்லவும்  முடியும் ஆனா அப்டி வாழுரப்போ வரும் இன்னல்களையும் சவால்களையும் கடக்கும் போது ஏற்படும் மன உளைச்சலை   வார்த்தைகள் கொண்டு விவரிக்க முடியாது டா. 

எங்கண்ணா பலமுறை என்னை  கேட்டிருக்காங்க.நான் எப்பவும் மறுத்ததில்லை ஆனா என் மனசுக்கு பிடிச்சதா அமையவும் இல்லை.கடைசிவரை  இப்படியே வாழ்ந்துறலாம் தான்.ஏனோ இப்போ எனக்குன்னு ஒருத்தங்க இருந்தா நல்லா இருக்குமோனு தோணுது.

 

ஹ்ம்ம்… பார்க்கலாம் உன் ஹனி என்ன சொல்ராங்கன்னு.அதிகப்படியான  ஆசைதான் இல்ல… “

 

அவரை அமர்த்திருந்தவாறே அனைத்துக்கொண்டவள்,

“தேங்க்ஸ்…தேங்க்ஸ் அ லோட் “என்று கூறியவள் அவரை பார்த்து,”எப்போ  ஹனியை மீட் பண்ணலாம்? “எனக் கேட்க,  

 

“நீ முதல்ல உடம்பை தேதிக்கோ அப்றம்  பார்க்கலாம் எனக்கூற, “எனக்கொண்ணுமில்லை நான்  நல்லாத்தான் இருக்கேன்.” என்றாள்.. 

 

“சரிடா சீக்கிரமே பார்க்கலாம்.இப்போ நான்  கிளம்பட்டுமா?நீயும் இல்லையா வேலை கொஞ்சம் ஜாஸ்தியாச்சு.வரு வேற மலேஷியா போயிருக்கான்,நெஸ்ட் வீக்  தான் வருவான் சோ கொஞ்சம்  

பிசி ஷெடுல்.

சரி என தலையாட்டியவள்,”தேங்ஸ்…”  என்று அவரை மீண்டும் அணைத்துக்கொள்ள,ஹாப்பியா இருடா  என அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு கிளம்பினார்…

 

கயல் இன்று வேலைக்கு சென்று இன்னும்  வந்திருக்கவில்லை.அரசு சற்று நேரத்தோடே வந்திருந்தார்.அவருக்காக காபி ஒன்றை போட்டுக்கொண்டு,வீட்டின் வெளியே போடப்பட்டிருந்த சாய்விருக்கை ஒன்றில்  அமர்ந்திருந்தார்.அவர் முகத்தில் அந்தி வெயில் பட்டுதெறிக்க, முகமோ சற்று மலர்ந்திருந்தது என்றாலும் கண்களிலோ இதழிலோ அந்த மலர்வின் பிரதிபலிப்பை காணமுடியவில்லை.  

 

அவர் நினைவெல்லாம் இரண்டு  நாட்களுக்கு முன்னால் சந்தித்தவரினை  பற்றியும் அதோடு தன் செல்ல கண்ணம்மா செய்த செயல் பற்றியுமே இருந்தது…