கனலியின் கானல் அவன் (ள் )-1

காலைக் கதிரவன் தன் பொற் கதிர்களை உலகுக்கு வழங்க உலகமோ பொன்னாய் மிளிர்ந்து பிரகாசிக்கும் காலை நேரமது.

அதனை வரவேற்கும் யாரும் காணா மலர்ச்சி கொண்ட மெல்லிதழ் வண்ணப் பூக்கள் அவள் கண்களை கொள்ளைக் கொள்ள, 

“ஹேய் ஹனி… என்னப்பா இது இவ்வளவு அழகாயிருக்கு. நைட் வந்ததால ஒன்னுமே விளங்கல.என் கண்ணையே எனக்கு சிமிட்ட பிடிக்கல…. இவ்வளவு பெரிய சிட்டில இப்படி அழகான அமைப்புல, அதுவும் முன் வாசலிலேயே பூங்காவனம் போல தோட்டத்தோட வீடு.. நினச்சு பார்க்கவே இல்ல.. 

யேன் ஹனி இதெல்லாம் விட்டுட்டு அந்த லண்டன்ல போய் செட்ல் ஆன? ஐ லவ் திஸ் பிளேஸ்… “என்று கூறிக்கொண்டே புல் பதித்திருந்த அந்நிலத்தில் கால் பதித்தவள்.. நம் நாயகி கயல்விழி.

 

ஐந்து புள்ளி ஐந்து அடி உயரம் கொண்டவள் பிரம்மனின் படைப்பை பெருமை சேர்க்கவென படைக்கப்பட்டவள்…..அவளின் ஒவ்வொரு அங்கதிற்கும் இயற்கை உவமையா? அல்லது இயற்கைக்கு உவமை கூறவென இவளை படைத்தானா என்பது கேள்விக்குறிதான்.

 

இந்தியாவில் பிறந்திருந்தாலும் லண்டனில் இரண்டு வயது முதல் வளர்ந்தவள் தன் இருபத்திரெண்டாவது வயதிலேயே நேற்று இரவு இந்தியாவில் அதுவும் சென்னையில் கால் பதித்துள்ளாள்.

 

அவள் புல் தரையில் நடந்து அத்தோட்டத்தின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த குடை போன்ற அமைப்புடனான மர இருக்கையில் அமர அவளை தொடர்ந்து வந்து அமர்ந்தவர் அவளுக்கு தந்தையா தமையனா என சிந்திக்க தூண்டும் அளவில் இருந்தார்… உடலும் அதற்கேற்ற உயரமும் மா நிறமும் ‘செம ஸ்மார்ட் கைய் ‘

வெளியாட்கள் இவர்களை ஒன்றாக கண்டாள் இருவரையும் ஜோடியாக சேர்ந்து பேசவும் வாய்ப்புகள் அதிகம் தான்…(???? )

 

இருபத்தி மூன்று வயதிலேயே தந்தை பட்டம் பெற்றவன், மனைவியையும் அதே வயதில் இழந்து இன்று வரை வாழ்கிறான் தன் நீங்கா நினைவுகளுடனும் தன் தேவதைப் பெண்ணுக்காகவும். …. 

 

“தேடியது கிடைக்கவில்லை

தோன்றியது நிஜமமுல்லை

தாண்டியது வழியேயில்லை

தாங்கியது சுமையுமில்லை

பாலைவனத்துக் கானல் நீர்”

 

(கானல் நீர் எனும் தலைப்பில் நான்  வாசித்த வரிகள் சில )

“கண்ணம்மா எனக்கும் இது புதிது தானே… நான் பக்கா கிராமத்தான்.. எனக்குமே இந்த சென்னை அதும் இவ்வளவு மாற்றங்களுடனான சென்னை புதிது தான்… இதுக்கே இவ்வளவு ஆச படர.. கிராமத்துக்கு போய் இருந்தா… நீ கண்ணசிமிட்ட எங்க தூங்கியே இருக்கமாட்ட… அவ்வளவு இயற்கை அழகுகள் கொட்டிக்கிடக்கும்… 

 

ஆனா இப்போஅதெல்லாம் இருக்குமான்னு சொல்ல தெரில…. அதோட அங்க போக நமக்கும் இப்போ யாரும் இல்ல…. “

 

“ஹ்ம்ம்… என்றவள், ஹனி ரொம்ப நல்லதா போச்சு மேரி ஆன்ட்டி இந்தியா வர விருப்ப படல. இல்லன்னா நமக்கு இந்த வீடு கிடைச்சிருக்காதே… “

 

லண்டனில் இவர்களுடன் நல்ல உறவில் இருந்த இந்திய குடும்பம் ஒன்றின் வீடே இது.. அவர்கள் அங்கேயே செட்ல் ஆகியிருக்க.. இவர்கள் இங்கே போகிறோம் எனவும் இந்த வீட்டை ஒரு குடும்பத்தின் கீழ் பராமரிப்பில் விட்டிருந்தவர்கள் குறைந்த விலையில் விற்க ஆறு மாதங்களுக்கு முன் வாங்கிஇருந்தார். வீட்டை பழைமையுடன் கூடிய நவீனமயப்பட்ட வீடாக மாற்றி தோட்டத்தையும் அமைத்திருந்தார்.

 

இவ்வீடு இருக்கும் பகுதி உயர்தர மக்களின் வாழ்விடமாக இருக்க அனைத்து வீடுகளும் இரண்டு மூன்று மாடி வீடுகளாகவும் பெரிய ராஜ வாயிற் கதவுகளுடனும் இருக்க இவ்வீடு மட்டும் முன்னால் பெரியளவிலான இடத்துடன் ஒரு தட்டு வீடாக, மேல் பகுதி வீட்டின் பாதியில் நிலா முற்றமாகவும் அமைக்கப்பட்ட இரண்டு அறை கொண்ட அழகான அம்சமான வீடு. பலரும் பலமுறை கைப்பற்ற முயன்றாலும் இவர்களுக்கு இன்று கிடைத்திருந்தது. 

‘கண்ணம்மா போய் குளிச்சிட்டு ரெடியாகி வாடா, ரெண்டு பேருமா சாப்பிடலாம்’ எனவும, 

” ஓகே ஹனி” என அவர் கன்னத்தில் முத்தமிட்டவள் உள்ளே சென்றாள்… இன்றும் அவன் கண்களுக்கு அவள் சிறு குழந்தைதான்.. தந்தையை என்றும் அப்பா என்று அழைத்ததில்லை எப்போதும் அவளுக்கு அவர் ‘ஹனி ‘ தான்.. ஏன் என்றாள் அவர் ‘தேனரசன்’…..அரசு என்று ஏனையோரால் அழைக்கப்படுபவர் .. 

 

சிறந்த கட்டிட பொறியியலாளர், அதோடு கட்டடக்கலை நிபுணரும் கூட.. லண்டனில் பிரபலமான கம்பனியில் பணிபுரிந்தவர் சிறந்த சேமிப்பையும் , மகளின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான படிப்பையும் வழங்கியவர் மேற்படிப்பை தொடர விருப்பமா என மகளை கேட்க,

 

அவளோ தொழில் செய்ய வேண்டும் அதோடு படிப்பை தொடருகிறேன் அதுவும் இந்தியாவில் என திடீர் முடிவொன்று எடுத்துக் கூற,(நோட் திஸ் பாயிண்ட் ) 

அவள் வாழ்வும் இந்தியாவில் அமைய வேண்டும் எனும் ஆசையோடு இருந்த தேனரசனும் வந்திறங்கினார் தன் தாய் நாட்டில்… 

 

இருவரும் அவர்கள் வேலைக்கான நேர்முகத்தேர்வினை ஒன்லைனில் முடித்திருந்தவர்கள் அடுத்த வாரம் முதல் அவர்களது வேலையில் சேர வேண்டும். 

 

“ஹனி பசிக்குது மேசையில் இருந்து சத்தமிட சமயலறையில் இருந்து வந்தவர் மேசையில் உணவை வைத்து விட்டு அவளை பார்த்தவர், “கண்ணம்மான்னு யேன் கும்பிடுவேனாம் உங்களை? ..”

‘ அது என் கண்ணு… ‘என எதுவோ கூற வந்தவள் ‘சாரி ஹனி ஜஸ்ட் ஆ மினிட். ‘ என்று தன் அறைக்கு ஓடியவள் மீண்டும் வந்து மேசையில் அமர அவளை நிமிர்ந்து பார்த்தவரோ சிறித்து விட்டு உணவினை பரிமாறி இருவரும் உண்டனர்.. 

 

அவள் கண்கள் எப்போதும் மை தீட்டிய விழிகளாக இருக்கும்.இருக்கவேண்டும். சிறுவயது முதலே அவளுக்கு அதனை பலக்கி விட்டிருந்தார்.ஏற்கனவே நீண்ட கருமையான அடர்ந்த கண் மயிர்கள், அதற்கு மையிட்டு அவள் அழகு பன்மடங்காகி இருந்தது… அவள் கண்களே ஆயிரம் கதைகள் பேசும்.. 

 

இவ்விழிகளுள் விழ காத்திருப்பவன் எவனோ….

Epi 1.2

 

அன்று சனிக்கிழமை காலை எட்டு மணியிருக்கும்… கயல் வசிக்கும் தெருவின் முடிவில் ஓர் உள்ளக அரங்கு இருப்பது கேள்விப்பட்டிருந்தவள் அதில் வந்த அடுத்தநாளே அங்கத்தவராகி தன் பிடித்தமான விளையாட்டின் கழகத்திலும் சேர்த்திருந்தாள்… 

 

லண்டனில் பிரபல டென்னிஸ் கழகம் ஒன்றில் அங்கத்துவம் பெற்று சிறு வயது முதலே நல்ல தேர்ச்சி பெற்றிருந்தவள் இங்கு வந்தும் அதனை தொடர நினைத்தாள். தனது ஹனியுடன் அவர் இரும்புக்குதிரையில் வந்திறங்கியவள் ‘ஹனி லெவனுக்கு வந்தா ஓகேவா இருக்கும்’ எனவும், சரிடா வரேன் என்றவர் திரும்பி செல்ல இவள் உள் நுழைந்தாள்…. வாயிலில் இருந்து பார்த்தால் சரியாக இரண்டாக பிரிக்கப்பட்ட ஆறு களங்களை கொண்டிருந்தது ஒரு பக்கம் ஆண்களுக்கெனவும் மறுபக்கம் பெண்களும் பயிற்சிகளில் ஈடு பட்டிருந்தனர். 

 

‘ஹ்ம்ம் நொட் பேட் ‘என மனதில் சொல்லிக்கொண்டவள் அவர்கள் பக்கம் செல்ல திரும்பும் நேரம் கண்ணில் விழுந்தான் அவன்…. 

 

உயர்ந்தவன் அடர் கேசம் சற்று கழுத்து வரை வளர்த்திருப்பான் போல. அரை மணி நேரமாவது விளையாடி இருப்பான் போலும்.. அவனது ஒவ்வொரு அடிக்கும் அவன் முடியில் வழிந்த வியர்வை துளி சிந்திச்சிதர, கை தசைகள் ஆட அவன் உடலை இறுக்கிப்பிடிடித்திருந்த அர்ம்லெஸ் டீ ஷர்ட் ஷார்ட்ஸ் அணிந்திருந்தவன் அவன் உடல் அவனை ஆணழகன் என காட்ட முதல் களத்திலேயே விளையாடிக்கொண்டிருக்க இவள் கண்களுக்கோ விருந்தானான். 

 

வெள்ளை நிறத்தில் முட்டிக்கு சற்று மேல் வரை இருந்த ஸ்கர்ட்டும் கோலர் வெய்த டீ ஷர்ட்டும் தலையில் கேப்பும் அணிந்திருந்தவள் அவன் கண்களிலும் விழ இரண்டு ஷார்ட்ஸ்களை தொடர்ந்து தவற விட அவன் விளையாடும் இடம் அருகே அமர்ந்திருந்த நண்பர்களும் இவள் பக்கம் திரும்பினார்கள். 

 

‘அச்சோ என்னடா இப்படி நின்னு பார்க்குறோம்.. ஹையோ கூட்டமா பார்க்குறாங்களே’ என மெதுவாக அவள் பக்கம் நுழைந்துவிட்டாள். 

 

சில நொடி அவன் கண்களில் விழுந்தவள் பட்டென மறைந்து விட. நண்பர்கள் கூட்டமோ அவனை பார்த்து என்னடா எனவும் ‘ நத்திங்’ என வெளியில் கூறி மனதில் சிரித்துக்கொண்டவன் ‘யாரோ பார்க்குறாங்களேன்னு பார்த்தேன்’ என்று விட்டு விளையாட்டை தொடர்தான்.. அவ் அரங்கத்தின் சொந்தக்காரன்… இருபத்தி எட்டு வயதை எட்டிப்பிடித்திருந்தவன் இவன் எட்டி பிடித்த உயரங்கள் பல… ஆனால் சனிக் கிழமை என்றால் காலைநேரம் அவன் இடம் இதுவே….. அவன் ‘RV’. 

 

சொன்ன நேரத்திற்கு பார்க்கிங்கில் வந்து ஒரு காலை கீழே ஊன்றி தன் வண்டியில் சாய்ந்திருந்தவர் தொலைபேசியில் நோண்டிக்கொண்டிருக்க அவரருகே வந்த கயல் அதனை பறித்துக்கொண்டு ‘இவ்வளோ அடக்கம் எதுக்கு ஹனி… எத்தனை அழகான பொண்ணுங்க பார்த்துக்கொண்டே போறாங்க. ஒன்னையாச்சும் பார்த்து ஒரு லுக் விடறது… எதுக்குத்தான் இப்படி நல்லவனா இருக்கியோ தெரில ஹனி என அவன் ஆர்ம்ஸில் குத்து விட்டவள் அவளது டென்னிஸ் பாகினை தோளில் மாட்ட அவரோ அவள் முகத்தில் இருந்த வியர்வை துளிகளை தன் கைக்குட்டையால் துடைத்து விட்டவர், ‘ரொம்ப கெட்ட பொண்ணாகிட்ட கயல் ‘ என்று கூறிக்கொண்டே வண்டியை கிளப்ப இவளும் பின்னேறி அப்போ சைட் அடிச்சா தப்பா? எனும் கேள்வியை கேட்டுக்கொண்டே அவருடன் வீடு சென்றாள்.. 

 

“ஹ்ம்ம் குடுத்து வெச்சவன்டா… நாம கொஞ்சம் சைட் அடிக்கலாம்னு பார்த்தா இவளுங்க எங்க… நம்மல விட பாஸ்டா இருக்காளுங்களே… ஆனா பாரு அவ ஆளுக்கு கொஞ்சம் வயசு வித்தியாசம் அதிகம் இருக்கும் போல… ” என RV யை பார்த்து நண்பன் ஒருவன் கூற அவர்கள் போகும் வரை அவர்களையே பார்த்திருந்த இவனுக்குமே மனதில் சிறு ஏமாற்றம் தான் போல … 

 

நண்பனை திரும்பி முறைத்தவன் “ரொம்ப முக்கியம் இந்த ஆராய்ச்சி.. கிளம்புடா “என வண்டியை கிளப்பிய நண்பர்கள் படை செல்ல கயல் அவள் வீட்டு வாசலில் நின்றிருப்பதை கண்டான்… ‘அட இவதான் இந்த வீட்டுக்கு குடி வந்ததா’ என பார்த்துக்கொண்டே அவர்கள் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி இருந்த தன் வீட்டினுள் நுழைந்தான்…. 

ப்பா வீடா அது ! கிட்டத்தட்ட ஒவ்வொரு மாடியிலும் ஐந்து அறைகள் இருக்கும் போல.. வீட்டுக்குள்ள 

போய் பார்த்தால் ஆட்களுக்குத்தான் பஞ்சம் போல…. 

அவீட்டோடு அருகே ஓர் அழகிய சிறு வீடு.இப்பெரிய வீட்டின் குட்டி போல…

அவ்வீட்டின் முன்னே ஒரு கருப்பு நிற கார் நின்றிருக்க…… ஹ்ம்ம் அவன் அன்பு அத்தை இல்லமாம் .. 

 

பெரிய வீட்டில் ஜனார்த்தனன் குடும்ப தலைவர் ஐம்பத்தைந்து வயதை சென்ற வருடம் கொண்டாடியிருந்தார்… அரசியலில் வெற்றிக்கொடி நாட்டியிருந்தவர்.. சமீபத்திலே ஓய்வு பெற்றிருந்தார் 

 

பார்வதி இவர் மனைவி அன்பான இல்லத்தரசி… அவரை திருமணம் முடிக்க அவரோ அவர் தந்தைக்கு ஒரே வாரிசாக இருந்தார்.மாமனாரின் அரசியல் வாழ்வை இவர் தலைமையில் விட்டவர் சில வருடங்களில் இறக்க அன்று முதல் இவர் ஆரம்பித்தது இவர் அரசியல் வாழ்க்கை.இவருக்கு ஒரு தம்பி ஒரு தங்கை. தம்பியோ குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட அவ்வப்போது வந்து செல்வர். தங்கை இவருடன் இன்று வரை…. 

 

ஜனார்த்தனனுக்கு நான்கு பிள்ளைகள். மூத்தவள் ரித்திகா முப்பது வயது, இவள் திருமணம் முடித்து அவருக்கு இரண்டு பிள்ளைகள்.மூன்றாவது இரட்டையர்கள் மாதவன், மதுமிதா கல்லூரி இறுதியாண்டு .

இவர்கள் இடையே இருப்பவன் ருத்ர வர்மன் இருபத்தியெட்டு வயது. இவனுக்கும் இவன் அக்காவுக்கும் இரண்டு வயதே வித்தியாசம் இருக்க இவன் பிறந்தது முதல் இவனை கூடுதலாக வளர்த்தது இவன் அத்தை அன்னையை விட அத்தம்மாவுடனே அதிக ஒட்டுதல்…

 

தன்விருப்பு முதல் வெறுப்புக்கள் வரை பகிர்ந்து தோழியென இருப்பவன் அவன் அத்தையுடனே. 

அதில் பார்வதிக்கு அதிக சந்தோஷம் என்றாள் அவன் அக்காளுக்கு பொறாமையுடன் ஒருவகை வெறுப்பும் கூட அவன் அன்பு அத்தையுடன்….

( ஏன் என்று கதைப்போக்கில் அறிந்து கொள்வோம் )

 

வீட்டில் நுழைந்தவன் பார்த்தது அன்னை மடியில் படுத்திருந்த தன் தம்பி மாதவனைத்தான்… அவன் எப்போதும் செல்லம் தான்.. வீட்டில் தன் அன்னையுடனும் அண்ணனுடனும் அதிக ஒட்டுதல் .இதுவரை ருத்ரா இவ்வாறு அன்னை மடி படுத்திருப்பான் என்பது சந்தேகம் தான்.

 

எப்போதும் தன் அத்தை மடி தான்..’ஹாய் மா’ என்றவாறு அவர்கள் அமர்ந்திருந்ததுக்கு எதிரே அமர்ந்தான்.. 

 

“மாதவா எந்திரி டா என் காலும் வலிக்குது என அவனை எழுப்பி விட்டவர், இருப்பா குடிக்க எதுவும் எடுத்து வரேன் “என உள்ளே செல்ல.. 

 

‘அண்ணா என்ன ஜோலியா சுத்திகிட்டு இருக்க அடுத்த ப்ராஜெக்ட் ஒன்னும் கிடைக்கலையா? நானும் செம்ம போர்ல இருக்கேன்.. கடைசியா தந்த வேலை போல குடுன்னா செம்ம த்ரில்லிங்கான வேலை’ என அவன் பேச.. 

 

‘டேய் உனக்கு எத்தனை வாட்டி சொல்றது வீட்ல இதைப் பற்றி பேசத்தன்னு.என் தொழிலுக்கே நான் ரிஸ்க் எடுத்து உன்னை சேர்த்துக்கிட்டு இருக்கேன்…வெளில மீட் பண்றப்ப பேசிக்கலாம்டா..’

 

‘ ஆஹ் ஓகே ஓகே சாரிண்ணா..’ என்றான்… ‘நானே போனா வாரம் தான் தலைவலியொன்னை முடிச்சிட்டு மலேசியாவிலிருந்து வந்திருக்கேன்… வந்ததோட பெரிய ப்ரொஜக்ட் ஒன்னு மாட்டியிருக்கு. ஆனா அதுல பல சிக்கல்கள் இருக்கும் போல. அதான் யோசிச்சிட்டு இருக்கேன். ரொம்ப ரிஸ்கியானது.. பார்க்கலாம் அத்தை கூட பேசிட்டு தான் எதுன்னாலும் ‘ என்றவன், 

அன்னை வரவும் பேச்சை மாற்றியவன் “எங்கம்மா மது? ” என 

‘ரூம்லதான் இருந்தா.ப்ராஜெக்ட் ஒர்க் என்னவோ எழுதனும்னு புலம்பிகிட்டு இருந்தா ‘ என்றவர் … சரிப்பா நீங்க பேசிட்டு இருங்க நான் சமையல் வேலையை பார்க்கணும் என எழுந்துக்கொள்ள, 

“ம்மா நா இன்னக்கி அத்தைக்கூட ” என ருத்ரன் கூறினான். “அதான் தெரிஞ்ச கதையாச்சேப்பா. சனிக்கிழமைன்னா நீ அத்தை வீட்லதான் இருப்பன்னு ..ஈவினிங் அவளையும் கூடிக்கொண்டே வாப்பா என்று ‘ கூறிக்கொண்டே உள்ளே சென்றார். 

 

” மாதவா, நம்ம மது பிரென்ட் சைக்கில் எப்டி? அவ கிளாஸ் பையன்கள் சொல்றமாதிரி நல்லவங்களா படல… கொஞ்சம் என்னனு பார்த்துக்கோ.ஆனா அவளுக்கு தெரியப்படுத்திக்காத … 

“சரிண்ணா பார்க்குறேன்” என்றவன் … ‘நம்ம சண்டி ராணியும் மதியத்துக்கு வராலாம்…என மாதவன் தன் அக்கா வருவதாக கூற. 

‘அப்போ அவ போனதுக்கப்புறம் கோள் பண்ணு நான் அத்தை வீட்ல இருந்து வரேன்’ என்றான்.

நோ சான்ஸ். இன்னக்கி தங்க வராலாம். மாமா வெளியூர் போயிருக்காங்களாம். சோ நாளைக்கு சாய்ந்தரம் தா போவா… ‘

 

“அப்படின்ற சரி விடு சமாளிச்சுக்கலாம்.. வெளில எவ்வளவு ப்ரோப்லேம் சால்வ் பண்ணாலும் இவளை மட்டும் பார்குறப்ப முடியலடா பரவால்ல விடு ” என்றவன் மூன்றாம் தலத்திலிருந்த அவனறைக்கு லிப்ட் வழியே சென்றான். 

RV என நண்பர்களால் அழைக்கப்படுபவன் தன் தந்தையின் அரசியல் வாழ்வில் புகுந்து விடாமல் தன் அத்தையுடன் இணைந்து ஓர் கம்பெனியை நடத்திவரும் சிறந்த இளம் தொழிலாளன்… (மற்றவர் பார்வைக்கு…?)

அதற்கான முதல் படியை எடுத்து வைத்தவரும் அவன் தந்தையே… 

 

ஆனால் இவன் அதிக ஆசைக்கொண்டது காவல்துறை… அதில் திறம்பட கற்று வெளிநாட்டிற்கு இந்திய காவல் துறையினால் அனுப்பப்பட்டு தேர்ச்சி பெற்று வந்தான். வீட்டில் எவரும் அறிந்திராத விடயம் இவன் காவல் துறையில் வேலை என்பது. 

கடந்த வாரம் இந்தியாவிலிருந்து கடத்தல் தொழிலில் ஈடுபட்ட ஒரு குழுவை மலேஷியா சென்று கைது செய்திருந்தான்.. இவனை வெளி உலகுக்கு காட்டி கொடுக்காததற்கு காரணம் அவன் யாரை குறி வைக்கிறானோ அவனுடனே சேர்த்திருப்பான் சிலகாலம்.. சேர்ந்து கூண்டோடு அளித்து விடுவான். மூன்று வருடமாக செய்யும் தொழில்…

 

இறுதியாக செய்த ப்ரொஜெக்ட்டில் நம்பிக்கையான ஒருவன் அவனுக்கு தேவையாக இருக்க தன் அத்தை கூறி மாதவனை சிறு வேலை ஒன்றை மலேசியாவில் இருந்தவாறு செய்வித்துக்கொண்டான். அதற்காக அவன் தொழில் பற்றி கூற நேர்ந்தது. 

அன்று முதல் தன் அண்ணனை போல ஆக வேண்டும் எனும் ஆசையில் அவனுக்கும் வேலைகள் தருமாறு இம்சை பண்ண ஆரம்பித்து விட்டான்… 

இவ்வாறு இரு முகம் கொண்டவன் சிலவேளை பகைவனுடன் இருக்கும் போது மூன்றாவது பொய்யான முகத்தையும் காட்டவேண்டி வரும்.. 

 

டென்னிஸ் களத்தில் அவள் கண்களுக்கு விருந்தானவன், இனி 

தன்னவளுக்கு எந்த முகத்துடன் அறிமுகம் கொடுக்கப்போகிறானோ…. !!!!

 

பார்க்கலாம் இனி வரும் நாட்களில் …

நாட்பது வயதை தொட்ட கன்னியவள்… நல்ல உயரம் உயரத்திற்கு ஏற்ப அளவான உடல்வாகு… உயர்த்தி கட்டினால் குதிரை வால் அசைந்தாடும் அளவிலான கூந்தல்…திறம்பட தொழிலை நடத்திவரும் இன்றைய தலைமுறைக்கு தலைவியாக விளங்கி வரும் பெண் சிங்கம் அவள்… கல்யாண வாழ்வு தன் திருமண நடந்து சில நாட்களிலேயே பொய்த்து விட இன்று மட்டும் தனித்து வாழும் அவள், இன்று வரையில் தன் கல்லூரி வாழ்வின் இனிப்பான நிகழ்வை எண்ணி வாழ்த்துக்கொண்டிருப்பவள். 

அவள் தான் நம் நாயகனின் அத்தையாம்….மிஸ்.மீனாட்சி 

 

(எதற்கு இவ்வளவு இவருக்கான முன்னுரிமை???? ) 

 

“அத்தம்மா !”..என்று வாயிலில் கேட்ட குரலை கேட்டவரின் வதனம் ஒளிர இதழ்கள் தாமாகவே பிரித்து சிரிப்பொன்றை வழங்கியது அம் மங்கைக்கு… 

வா வரு….என சமயலறையில் சமைத்தவண்ணம் இருந்தவர் குரல் கொடுக்க அவனும் அவர் இருந்த இடம் வந்தவன் அங்கிருந்த மேடையில் ஏறி அமர்ந்தான்.

“என்ன ஸ்பெஷல் இன்னக்கி? ” என்று கேட்டவன் அவரின் கையினால் துருவப் பட்டுக்கொண்டிருந்த கேரட்டை அவன் கைக்கு மாற்றி பாதி துறவியும் மீதி அவன் வாய்க்கும் செல்ல, “அல்வா வேணும்னா துருவுர வேலையை மட்டும் பாரு. இல்லன்னா வெச்சிரு” என மீனாட்சி கூற,சரி சரி என்றவன் பாதி கேரட்டை தான் துருவினான்….. “காலைல என்ன சாப்பாடு அத்தம்மா “எனவும் காலைல ஒரு காபி, அதோட இன்னும் எனக்கு பசிக்கலடா என்றார்.. 

என்ன அத்தம்மா தினமும் இப்படியே இருந்தா உடம்பு என்னத்துக்கு…”என ருத்ரா கேட்க 

‘அதான் இப்போ உன்கூட சேர்ந்து மூக்கு முட்ட திங்க போறனே.அதோட பாரு எப்படி இருக்கேன்னு.. என அவரை ஒரு முறை சுற்றி காட்டியவர்.. “உடம்பு நல்லாதானே டா இருக்கு”என்றார். 

 

“ஹ்ம்ம் பிகர் நல்லாத்தான் இருக்கு பிகருக்கு வாய்க்கொழுப்புதான் ஜாஸ்தி ஆகிடுச்சு… நேரத்துக்கு எதுன்னாலும் சாப்பிடு அத்தம்மா.. ” எனவும்

‘சரிடா வளந்தவனே ‘ என்றவர் ‘அதை விடு அடுத்த வாரமாவது கொஞ்சம் கம்பனி பக்கமா வர ஐடியா இருக்கா? ‘ எனவும்,

“இருந்தது, ஆனா நேத்து நைட் ஒரு ப்ரொஜக்ட் கைக்கு வந்திருக்கு என்றான் .’என்னடா இந்த தடவையும் தூரமா எங்கயாவது போகணுமா ? ‘என சோகமாக கேட்க, 

சமையல் மேடையில் இருந்து இறங்கியவன் “நோ.. நோ.. நம்ம ஏரியா, அதோட நம்ம மது, மாதவன் படிக்கிற காலேஜ், காலேஜ் பசங்களோட சம்பந்தப்பட்டது… அதான் யோசிக்கிறேன். அதோட ப்ரொஜக்ட் முடியிறப்ப கண்டிப்பா நா யாருன்னு தெரிய வரும்…. “

“காலேஜ் பசங்க சம்பந்த பட்டதுன்னா ரொம்ப பெரிய ப்ரோஜக்டா இருக்குமே!”

மீனாட்சி கேட்க,

“ஆமா அத்தம்மா பெரிய ஆளுங்க சம்பந்தப்பட்டிருக்காங்க, அதோட ஒரு ப்ராஜெக்ட் உள்ளேயே பல இருக்கும் போல… ‘

 

“சரிடா உன்னை நம்பி குடுக்குறாங்கன்னா,உன் மேல எவ்வளவு நம்பிக்கை இருக்கணும். இதன் மூலம் உன்னை தெரிய வெக்கிறதுல உனக்கு ரிஸ்க் இல்லன்னா, தாராலமா பண்ணு வரு… “

 

‘அதோட அத்தம்மா மாதவாக்கு அதுல கொஞ்சம் இன்வோல்வ் ஆகவேண்டி இருக்கும், ஆனா இந்த முறை அவனை சேர்த்துக்குறது பற்றி டிபார்ட்மெண்ட்ல முன்னமே பேசிருவேன்.’ என ருத்ரா கூறினான்.. 

 

சரி வா சாப்பிடலாம் என இருவருமே பரிமாறிக்கொண்டு பேசியவாறே உண்டனர்… 

 

வாரத்தில் சனிக்கிழமை காலை டென்னிஸ்.அது முடிய மாலை வரை அவன் அத்தையோடு தான் அவன் நேரம். அதன் பின் அவரும் அவனுடனே அண்ணன் இல்லத்தில் வந்து இருந்து விட்டு இரவு உணவையும் எடுத்துக்கொள்பவர் அவர் வீடு செல்வார். இதுவே வளமை.. மற்றைய நாட்களில் அவன் வீடு வரும் போது அவருடன் வந்து சற்று நேரம் செலவழித்து விட்டே செல்வான். முடியா நாட்களில் அவனோ அல்லது அவரோ தொலை பேசியிலாவது பேசிக்கொள்வார்கள்…. 

 

இவன் தனது கல்லூரி படிப்பை முடித்திருந்த சமயம் அவனது ப்ரோபசர் ஒருவர் அவனிடம் அவர் அத்தையை திருமணம் முடிக்க விரும்புவதாக கேட்க இவனுக்கும் அவர் மேல் நல்ல அபிப்ராயம் இருக்குக்கவும் தன் அத்தையிடம் கேட்டிருந்தான்… அவனுக்கும் இவ்வளவு அழகும் அறிவும் நிரம்பிய மங்கை தனித்து வாழ்வதை எண்ணி, நினைக்கும் பொழுதுகள் எல்லாம் அதற்கான காரணங்கள் என்னவோ, யேன் இப்படி என்று வருந்துவது உண்டு… ஆனாலும் அவனிடம் அவர் அதுபற்றி பகிர்த்திருக்க வில்லை … 

 

‘என்ன வரு நீ உனக்கு பொண்ணு பார்த்து சைட் அடிக்கிற நேரத்துல அத்தைக்கு மாப்பிளை பார்க்குற ‘ எனவும்,

 

“அத்தம்மா பி பிராக்டிகல், எப்பயும் இப்படியே இருக்க முடியுமா? உங்களுக்காக ஒருத்தர் வேணாமா? எனவும், 

“வேணும்டா வரு நா இல்லன்னு சொல்லல்ல.. எனக்கு தேடிக்கணும்னு தோணல.தோணி இருந்தா உங்கப்பாட்ட சொல்லி பண்ணிக்கொள்ள மாட்டேனா என்றவர் பார்க்கலாம் தோணினா பண்ணிக்கிறேன்” என்றார்.

 

” ஹ்ம்ம் உனக்கு தோணி பண்ணும்போது அறுபதாம் கல்யாணம் தான் அதுவும் எழுவது வயசு கிழவன் கூட. என்கூட வந்தாளே நீ என் அக்கவான்னு தான் கேட்குறானுங்க. உனக்கு தான் உனக்கிருக்க பவர் தெரில” என கூறியிருந்தான்…. 

“யேன் அத்தம்மா நம்ம சித்தி தம்பிய கல்யாணம் பண்ணி விட்டுட்டு வந்த? ” எனவும் ‘ நா விட்டுடு வரல்ல வரு அவந்தான் விட்டு டு போய்ட்டான்” 

 

‘அவன் கிடக்கான் மாங்கா மடையன்’ என்றவன். அத்தம்மா நீ என்கிட்டே யேன் உன்னை பற்றி சொல்லணும்னு தோணல? 

தோணும்டா சிலசமயம் கத்தி அழணும் போல இருக்கும் ஆனா அந்த டைமெல்லாம் நீ பக்கத்துல இருந்ததே இல்ல… “கோள் பன்னிருந்த வந்திருக்கமாட்டேனா யே என்னை கூப்பிடலல்ல “என அவர் அருகே வந்து அவர் தோளில் கைப் போட்டுக் கொண்டவன் ” சரி இப்போ சொல்லு ” எனவும்,

இப்போ வேணாம்டா பேசலாம் இன்னொரு நாள் கண்டிப்பா’

” ப்ரோமிஸ்” என இவன் கை நீட்ட 

‘ப்ரோமிஸ் வரு’ என அவன் புறங் கையில் முத்தமிட்டார்…

‘சரி வா போலாம் 

வீட்டுக்கு, நம்ம சந்திரமுகி வந்திருக்கா” என்றான்… 

டேய் அவ உன் அக்காடா.. எப்போ பாரு முறைச்சிகிட்டு… “உன்னை எதாவது சொன்னா எனக்கு வரும் பாரு கோவம்… “என அவன் முகமெல்லாம் சிவக்க 

” அய்யே நல்லாவே இல்ல என் பையன் ரொம்பதான் இப்போ கோவப்படுறான்.. உன் வேலைக்கும் அது நல்லதில்லை அதோட உனக்கு வர பொண்ணு அடுத்தநாளே நீ இப்படி இருந்தேன்னா அவ வீட்டுக்கு கிளம்பிருவா”என்றார்… பார்க்கலாம்… என்றவன், ” ஆஹ் அத்தம்மா இன்னக்கி நம்ம டென்னிஸ் கோட்டுக்கு ஒரு பொண்ணு வந்தா கொஞ்சம் பார்க்கலாமேன்னு …. நினைக்கும் போதே கிளம்பிட்டா அதுவும் அவ ஆல் கூட… “

“ஏண்டா இப்டி…. ” என அவனை பார்த்து சிரித்தவாறு வீட்டை பூட்டிக்கொண்டே ‘உனக்குன்னு பிறந்தவளை உன் கண்ணுக்கு கடவுள் காட்டுவான்டா சீக்கிரமே… அத்தை நா சொல்றேன் பாரு’ என்றவர் அவனுடன் தன் அண்ணன் இல்லத்தில் நுழைந்தாள்… 

 

(அத்தை கடவுள் காட்டிட்டான்.இவன் தான் சரியா பார்க்கல )

 

வீட்டில் இவர்கள் இருவரும் நுழைய வரவேற்பு அறையில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க “ஹாய் வரு மாமா” என தன் அக்காளின் பிள்ளைகள் இரண்டும் இவனை நோக்கி வர “ஹாய் ! எப்போடா வந்திங்க? ” என தெரியாதவாறு கேட்க நாங்க லஞ்சுக்கே வந்துட்டோம் மாமா என சொல்ல… 

‘ஆமா இவருக்கு நாம வந்தது எங்க தெரியப் போகுது. அதான் கையோடயே சுத்துதே ஒன்னு அவங்க கூடவே இருந்தா நம்ம கூட இருக்க உன் மாமாவுக்கு எங்க நேரம்’ ரித்திகா கூற. 

 

“ஆமாக்கா சரியா சொன்ன நேரமே இல்ல.உன்கிட்ட மிச்சமிருந்தா குடேன் நா யூஸ் பண்ணிக்கிறேன்’ என்றவன் மாதவன் அருகே அமர்ந்து போனை நோண்ட ஆரம்பிதான். 

 

மீனாட்சி அவர் அண்ணியின் அருகே போய் அமர்ந்தவர் கையோடு கொண்டு வந்திருந்த அல்வாவை கொடுக்க… ‘மிச்சம் வெச்சானா எனக்கு?என அவர் அதில் இருந்து ஒரு ஸ்பூன் வாயில் போட்டவாரே கேட்க. 

‘இன்னக்கி உங்களுக்கும் சேர்த்தே பண்ணிட்டேன் அண்ணி ‘ என்றார் மீனாட்சி … 

எனக்கும் என அதனை மாதவனும் மதுவும் பங்கு போட்டுக்கொள்ள.. ரித்திகா வேறு பக்கம் திருப்பி அமர்ந்தாள்…

 

மீனாட்சிக்கும் ரித்திகாவுக்கும் வயது பத்து வருடமே வித்தியாசம். வயதில் தான் இவர் அதிகம் மற்றபடி அழகிலும் அறிவிலும் அதிகமாக மீனாட்சி இருக்க ரித்திகாவின் காலேஜ் நாட்களில் நண்பர்கள் இவளை கேலி செய்ய அதோடு ரித்திகா சற்று பூசிய உடல்..இப்படி அல்ப விடயங்களுக்கெல்லாம் அவருடன் பொறாமை கொண்டு அவர் மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டிருக்கிறாள்.இப் போ தன் தம்பியை அவளோடு உறவாட விடுவதில்லையாம் என்று புதிய குற்றச்சாட்டு… யாருமே ரித்திகாவின் கதைக்கு காது கொடுக்காததும் இன்னும்pplகோபமே அதிகமானது 

 

என்றுமே ரித்திகாவின், பேச்சுக்களை காதில் வாங்கிக்கொள்ளாத மீனாட்சி, ரித்திகாவிற்கு திருமண வரன் வர துவங்கியதுமே தன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார்… அண்ணன். அண்ணி எவ்வளவு கூறியும் மனம் மாறாதவர் அவர்கள் வீட்டோடு ஒட்டியே அமைத்துக்கொண்டார்.. உங்களுடனே இருக்கிறேன் என்பதை காட்டுவதற்காக…

 

ஜனார்த்தனன் இன்றும் மனதளவில் தன் தங்கைக்கான நல்ல வாழ்வினை அமைத்து கொடுக்க முடியவில்லேயே. தன் தந்தை செய்துவிட்டு சென்ற காரியம் இன்றளவும் அவள் வாழ்வினை சரிபடுத்த முடிய வில்லையே என்று மீனாட்சியை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் மனதால் அழுது கொண்டு தான் இருக்கிறார்…. 

ருத்ரா இதை பலமுறை கவனித்திருந்தாலும் அத்தை கூறாது அவர் பற்றி யாரிடமும் கேட்க விருப்பப்படாதவன் இன்னும் அமைதியாக இருக்கிறான்