கனலியின் கானல் அவன் (ள் )-15

மாலை அந்திவெயில் முகத்தில் லேசாய்  பட்டுச்செல்ல கயலுடன் அரசுவை முந்தைய நாள் சந்தித்த அதே இடத்தில் அமர்ந்திருந்த  மீனாட்சிக்கு தான் சொல்லபோவதை அரசு எவ்வகையில் எடுத்துக்கொள்வாரோ எனும் எண்ணம் மனதை பிசைய,அவர்  அமர்ந்திருந்த இடத்தை சூழ இருந்த ஏனைய மேசைகளில் குடும்பமாக, ஜோடிகளா,நண்பர்கள் என அமர்ந்து சந்தோஷமாக பேசி சிரித்து கொண்டிருப்பவர்களை ஏக்கமாக  பார்த்திந்தார்.

 

ஆம் அவர் பார்வை அவரைநோக்கி நடந்து வந்த அரசுவுக்கு அவ்வாறு தான் தோன்ற  வைத்தது. 

 

அரசு அவரருகே அமரவும் அவரையுமே  அதே பார்வையோடு நோக்கியவர், 

 

“ஏன் தேனு நமக்கு மட்டும் இப்படியெல்லாம்  அமையல.எல்லாமிருந்தும் ஒண்ணுமில்லாதவளா வாழ்ந்துட்டு  இருக்கேன்ல.நீங்க இங்கயே இருந்திருக்கலாம்.எப்படியோ சந்திக்க  சந்தர்ப்பம் அமைஞ்சிருக்கும்.நானே இவ்வளவு உணர்ரப்ப கயல்,அவ எந்தளவுக்கு அவ அம்மாவ தேடிருப்பால்ல…”

 

எவ்வாறு பேசவென நினைத்திருந்தவருக்கு சூழ்நிலை அதை ஏற்படுத்திக் கொடுத்தது. 

 

“நம்மக்கு விதிச்சது இவ்வளவுதான்  மீனா.நமக்கான வாழ்க்கை இப்டித்தான்னு இருக்கப்ப அதற்கு ஏற்றார் போல வாழ  கத்துக்கணும்.ஏன் நீயும் கூட அப்படித்தானே வாழ்ந்துட்டு இருக்க.இப்போ கயல் வந்து  எதுவோ பேசி அவளும் குழம்பி உன்னையும் குழப்பி விட்டிருக்கா.ஆனா நான் என் கண்ணம்மாக்கு எந்த வகையிலும் குறை வைக்கல.என்னால முடியுமான எல்லாமே அவளுக்கு நான் கொடுத்துட்டு தான் இருக்கேன். “

 

“நா குழம்பிப்போய் தவிக்கல.இப்போதான்  சரியா யோசிச்சிருக்கேன்.நீங்க உங்க பொண்ணுக்கு குறையெல்லாம் ஒன்னும் வைக்கல.ஆனா அம்மாவோட இடத்தை யாராலும் நிரப்ப முடியாதில்லையா?அவள் அதுக்காக ரொம்ப ஏங்கி போயிருக்காள்னு தோணுது.”

 

“அம்மா நினைப்பு அவளுக்கு நான் வரவிட்டதே இல்லையே மீனா? “

அரசு மீனாவிடம் வினவ, 

 

அவரை பார்த்து இதழ் பிரியா சிரிப்பொன்றை உதிர்த்தவரோ, 

 

“நினைப்பு வந்தாலும் அவள் அதை  உங்ககிட்ட காமிக்கல.அதான் நிஜம் அரசு. அதோட நானும்தான் வாழ்ந்துட்டு  இருக்கேன் பல ஏக்கங்களோட.ஏன் நீங்களும் உங்க உணர்வுகள் எல்லாத்தையும் உங்களுக்குள்ள வச்சுகிட்டு வெளில பொண்ணுக்கு அப்பாவா மட்டும் வாழ்ந்துட்டா போதும்னு வாழுற வாழ்க்கை இன்னுமும் அவளுக்கு அவ அம்மாவை தேட  வைக்குது.இல்லன்னா என்னை பார்க்க வந்திருப்பாளா?

 

என்னாலேயே என்ன சொல்லனும்னு  தெரில.இவ்வளவு பெரிய பொண்ணு அம்மாவை தேடறான்னா…?எனக்கும் அதே அனுபவம் இருக்கு.அவளுக்கு அப்பாவது இருக்கு.எனக்கு?

 

அரசுவை கேள்வியாக நோக்க,அவருக்கும் அவர் தந்தை பற்றி தெரியுமே,மீனாட்சியின் கையை அவராகவே தட்டிக்கொடுத்தார். 

 

“அப்பாகிட்ட எவ்வளவு பிரெண்ட்லியா இருந்தாலும் ஒரு எல்லைக்கு மேல  முடியதில்லையா? நானுமே அதை ரொம்ப அனுபவிச்சிருக்கேன்.நீங்க அங்கேயே  இருந்திருந்தா அவளுக்கு விளங்கியிருக்காதோ என்னவோ.இங்க வந்து நம்ம மக்களோட பலக்கம் உறவுகளை பார்குறப்ப அவளுக்கு அம்மாவை தேட  வைக்குது.

அவளுக்கும் ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேலதானே எல்லாம் புரிய ஆரம்பிக்கும். அப்போ அவளுக்கு உங்க நிலையும் புரியும் தானே? தன்னாலதானே  அப்பா தனியா இருக்காங்கன்ற நினைப்பு இப்போ அவளுக்குள்ள இருந்துட்டே இருக்கு. 

 

அதோட கயலுக்கு உலகம் புரிய ஆரம்பிச்ச வயசுல,கலை அவளோட மனபாரத்தையும் இவளுக்கிட்ட இறக்கி வெச்சிட்டு  போயிருக்கா.

 

மீனாட்சி கூறக் கூற அரசு ‘என் பொண்ணு  அம்மாக்காக ஏங்கியிருக்காளா?’மனம் பிசைந்தது.அதோடு கலை என்ன சொன்னாள்,அவளை பற்றி நாம்  பேசிக்கொள்வதே இல்லையே.’மனதில் எண்ணியவர் மீனாட்சியிடம், 

 

“கலையோட என்ன பாரம் அவகிட்ட கொடுத்தா,கண்ணம்மாகிட்ட என்ன சொன்னா? எனக்கு புரியல மீனா…”

 

“அது…. “என ஆரம்பித்த மீனாட்சி,கயல்  இந்தியா வந்த காரணம்,அதோடு அவரது வீட்டுக்கு கயல் வந்தது முதல்,கயலுக்காக மீனாட்சி எழுதிவைத்து விட்டு சென்றது, அதில் இவர்கள் இருவர் பற்றி கூறியிருந்தது என அனைத்தையும் கூறினார். 

 

எல்லாத்தையும் சொல்லிட்டு போறப்ப  எனக்கு அம்மாவா வரீங்களானு ஒரு வார்த்தை கேட்டுட்டா.எனக்கு என்ன பதில்  சொல்றதுன்னே தெரில.நா ஒன்னுமே பேசலைன்னதும்,அதுக்கப்புறம் அதுக்காக மன்னிப்பும் கேட்டுட்டு எங்கப்பா மனசு விட்டு பேச,அவங்களுக்கு கடைசிவரை ஒரு துணையாக இருக்கீங்களான்னு அன்னக்கி அவளை பார்க்க வீட்டுக்கு வந்தப்போ கேட்டா.நானும் உங்ககூட பேசிட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன்.நானுமே ஒரு முடிவோடுதான் அவளை பார்க்கப் உங்க வீட்டுக்கு போயிருந்தேன்.”

 

“ச்சே… கண்ணம்மாக்கு  நான்… அவ என் பெண்ணில்லைனு… எப்பவும்  சொன்னதில்லை மீனா.எதுக்கு கலை அதை அவளுக்கு எழுதியிருக்கா?அவ மனசு  எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்.நான் என்னமோ அவளுக்காக எல்லாம் தியாகம் செஞ்சு வாழுறேன்னில்ல நினைச்சிருப்பா. அதான் இப்போ இப்படியெல்லாம் யோசிக்கிரா.என் பொண்ணு ரொம்ப மனசு  கஷ்டப்பட்டிருப்பால்ல.நா நினச்சும் பார்க்கல கலை இப்படி பண்ணுவான்னு.”

 

“அரசு காம் டவுன்… அவ எப்பவுமே உங்க பொண்ணுதான்.கலை தப்பா ஒன்னும் சொல்லல.பெய்யாவும் சொல்லல.அவ மகள் கிட்ட அவளோட மாமா பற்றி சொல்லிருக்கா தப்பில்லையே.கயலுமே அப்படித்தான் சொல்றா.

அருண் அண்ணா,கலை ரெண்டு பேருமா சேர்ந்திருந்த போட்டோ ஒன்னு கலை கொடுத்த புத்தகத்துல இருந்ததாம்.உனக்கு அப்பாவை பார்க்க தோணிச்சுன்னா பாருன்னுதான் கலை அதை வெச்சிருந்தாலாம்.அவளுக்கும் அவ மகளோட மனம் தெரிஞ்சிருக்கும் போல. 

 

ஆனா அவள் அதை இன்னைக்கு வர  பிரிச்சு பார்க்கலயாம்.என் அப்பா தேனரசன், அது என் மனசுல பதிஞ்சு போச்சு. இவங்கதான் என் அப்பா.அதை நான்  எப்பவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்னு அன்னக்கி என்கிட்ட சொல்லிட்டுதான் என்னை அப்படி கேட்டுட்டு  போனா.”

 

உங்களுக்கு கலையோட பொண்ணுக்கு  அப்பாவா வாழலாம்னா ஏன் அரசு,எனக்கு  உங்க பொண்ணுக்கு அம்மாவா வாழ முடியாது?என்னை ஒரு வாட்டி தேடி  வந்திருக்கலாமே,உங்க பெண்ணுக்காக? “

 

தூரத்துல இருக்கது தண்ணீர் தான்னு  நினச்சு தன்னோட தாகத்தை இங்கயிருந்தே தனிச்சுக்குற பாலை உயிர்களை போல ரெண்டு பேருமே  இருந்துட்டோம் இல்ல.கடைசில கிட்ட வந்து பார்த்தா அது தண்ணீரே இல்லைன்னு புரிது. 

யாராவது ஒருத்தர் கொஞ்சம் கிட்ட வந்து  பார்த்திருக்கலாம்.அது மாயைனு புரிஞ்சிருக்கும்.ரெண்டு பேருமே  தவறிட்டோம்.  

 

கயல் மீனாட்சியிடம் கூறியிருந்த வார்த்தைகள் கேட்டவருக்கு பதில்  சொல்லத்தெரியவில்லை.தன் பெண் தன்னை விட தன் மீது வைத்திருக்கும் பாசத்துக்கு ஈடாக எதுவுமில்லை என்றே தோன்றியது.ஆனால் மீனாட்சியிடம், 

 

“நீ வாழ்ந்துட்டிருக்க சொசைட்டில திடீர்னு அப்பாவும் பொண்ணும் வந்து நின்னா அத ஏத்துக்க ரொம்ப கஷ்டம் மீனா.உன் தொழில்  வட்டமும் ரொம்ப பெருசு. உங்க அண்ணாவோட அரசியல் செல்வக்கு, அவருக்கிருக்க மதிப்பு இதெல்லாம் என் ஒருதனால பாதிக்கும்.ஆம்புல என்னால சட்டுனு எல்லாத்தையும் கடந்துறலாம். உன்னாலயோ,ஏன் என் கண்ணம்மாவாலயோ அது ரொம்ப கஷ்டம். எவ்வளவு கேள்விகள் எழும்.அப்படியே ஆசையா ஏத்துக்கிட்டாலும் வாழ்க்கையை வாழ நம்ம சமூகம் விடாது.பல புரளிகள்  வந்திருக்கும்.  

 

நீ இப்போ சின்னப் பெண்ணில்லையே. நடைமுறை புரிஞ்சிக்க மீனாட்சி.நம்மலால  கண்ணம்மாவோட வாழ்க்கை எந்தவகையிலயும் பாதிக்க நான் விரும்ப மாட்டேன்.இவ்வளவே வாழ்ந்தாச்சு இதுக்குமேல… “அரசு முடிக்க முன்னர் இடையிட்ட மீனாட்சியோ, 

 

“ஹ்ம்ம் நீங்க சொல்ற எல்லாமே சரிதான் நான் இல்லைனு சொல்லப்போறதில்ல. நீங்க இப்படி பேசுரது எனக்கு சந்தோஷம்  தான்.நான் பேச வேண்டிய வார்த்தைகளைத்தான் நீங்க பேசிட்டிருக்கீங்க.ஆனா நாம நினைச்சிருந்தா எல்லாமே மாறியிருக்கும்.”

 

மீனாட்சியின் கையை பிடித்திருந்தவர் இன்னும் அப்படியே இருக்க அவரின் கைமேல் மீனாட்சியின் மற்றைய கையை வைக்கவுமே அரசுவுக்கு தான் இவ்வளவு நேரம் அவர் கையை பிடித்திருக்கிறோம் என்பதை உணர்ந்தார்.அவரை இடையிட்ட  மீனாட்சி தொடர்ந்து, 

 

“பொண்ணா,தனியா இவ்வளவு நாள் இந்த சமூகத்துல வாழ்ந்துட்டு இருக்க நான்,இந்த சமூகத்தை பயமில்லாம என்னால எதிர்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு இறுக்கத்தால நானே கேட்கிறேன்,

‘என்னை உங்க பொண்ணுக்கு அம்மாவா ஏதுக்குறீங்களா?’

 

‘எப்பவும் எனக்கு அடுத்தவங்க என்ன பேசுறாங்கன்னு கேட்டு பலக்கமில்லை.நா  எதையும் கடந்து வந்துருவேன்.மனசுல போட்டு என்னை வருத்திக்க மாட்டேன்.அது உங்களுக்கே தெரியுமே.இபோ வரை எனக்காக மட்டுமே வாழ்ந்துட்டு இருக்கேன்.

 

இப்போ என் பெண்ணுக்காக,நம்ம  பெண்ணுக்காக (அதை அழுத்தி சொன்னாரோ) உங்ககூட  இனி வாழப்போற கொஞ்ச நாளைக்கு நிம்மதியா வாழலாம்னு நினைக்குறேன் தேனு.

 

நீங்க தனியா இருந்தா தேடுறதை விட ரெண்டுபேருமா சேர்ந்து நம்ம பொண்ணுக்கு நல்ல வாழ்க்கையா அமைச்சு கொடுக்கலாம்.

(அவர் மனதில் அவரது வளர்ப்பு மகன் தோன்றி மறைந்தான்)

யோசிச்சு சொல்லுங்க.நான்,நீங்க அப்றம் நம்ம கண்ணம்மா மூனு பேரை மட்டுமே வெச்சு யோசிங்க.நம்மலை சுற்றி இருக்க யாருமே நம்மகூட வரப்போறதில்ல.நானோ கயலோ சமூகத்தை பார்த்து பயப்பட போறதும் இல்லை.உங்க பொண்ணுக்காகன்னு யோசிச்சு உங்க பொண்ண நீங்களே நோகடிச்சிறாதீங்க.”

 

என்று கூறிய மீனாட்சி எழவும்,அவரை அரசு நிமிர்ந்து பார்க்க மீனாட்சியின் கண்கள் கலங்கி கண்ணீர் விழக்காதிருக்க அதை மறைக்க குனிந்துக்கொண்டார்.

 

அரசு மீனாட்சி பேசியதை கேட்டு பிரம்மை  பிடித்தார் போல இருந்தவர் அவர் கண்கள் கலங்கியிருப்பதையும் கண்டுகொண்டு, 

 

“மீனா,எதுக்கு இப்போ அழர?”அவருடைய  குரலுமே சாற்று கரகரப்பாகவே இருந்தது. 

 

“இதோ,இப்படி அழ நினைக்கிறப்போ ஏன்  அழரன்னு கேற்க,அப்படியே என்னை தோள் சாச்சுக்க ஒரு தோளில்லையேன்னு தான். தரீங்களா? நானுமே உங்களுக்கு தரேன்.ரெண்டு பேருமா நம்ம பொண்ணுக்கு கொடுக்கலாம்.யோசிச்சு சொல்லுங்க வரேன். ” 

 

என்றவர் அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் சென்று விட்டார்.அரசுவுக்கோ  அவரை அணைத்து ஆறுதல் சொல்ல நினைத்தாலும் அவருக்கு என்ன முடிவெடுக்கவென புரியா நிலை தான். அப்படியே அமர்ந்திருந்தவர் நெடுநேரம் கடந்து போகவும் வீடு வந்தார்.

 

அவரோ மீனாட்சியோ சந்தித்து பேசியது பற்றி கயலிடம் காட்டிக்கொள்ளவில்லை. கயலுமே அவர்களிடம் கேட்கவில்லை. இருவரும் எதுவும் பேசாதிருக்கவே இன்று வேலை விட்டு வரவும் அரசுவோடு தொடங்கிய பேச்சு கொஞ்சம் அதிகமாய் வார்த்தைகளுடன் வெளிவந்திருந்தது. 

 

கயல் கோபித்துக்கொண்டு அவலறையில்  இருக்க அரசுவுக்குமே யோசிக்க இருப்பதால் அவறறையில் கட்டிலில்  சாய்ந்தமர்ந்து மீனாட்சி அன்று பேசிச்சென்றதை நினைவில் மீட்டியவர் அதோடு,இப்போ கயல் பேசியதும் சேர்த்து மண்டையில் அவரை குடைய அப்படியே உறக்கம் தழுவியிருந்தது. 

 

அரசு கட்டிலில் சாய்ந்தவாரே உறங்கியிருக்க சத்தமின்றி அவரருகே  வந்த கயல்,அவர் அருகில் படுத்துக்கொள்ள அவர் கையோ தாமாக அவளை உணர்ந்து அவள் தலைக்கோத,

“சாரி ஹனி “என்றவள் அப்படியே உறங்கிப்போனாள்.