மாலை மீனாட்சியை சந்தித்த ருத்ரா அவர் பேசப் பேச எப்படி உணர்ந்தான் என்று வார்த்தைகளால் வரையறுக்க முடியவில்லை.
‘இவ்வளவு நாளும் தான் அத்தையை கவனிக்காது விட்டுவிட்டேனே. ஒருமுறையாவது முயற்சி செய்திருக்கலாம். அவரை வற்புறுத்தி கேட்டிருந்தால்,அல்லது இன்று தேடிபார்த்ததை முன்னமே செய்திருக்க வேண்டுமோ? தன்னை பிழையாக எண்ணுவார் என நான் இப்படி இவரை விட்டுவிட்டதால் தானே இவ்வளவு நாளும் இவர் தனியாக இருக்கும் படியாகிவிட்டது.நானும் இதற்கு ஒரு காரணம் ஆகிவிட்டேன்.நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தானே அப்பாவும் ஒதுங்கி இருக்கிறார். ‘
அவன் மனமோ தன்னையே நொந்துக்கொள்ள மேசையின் மேல் தன் கைகள் கோர்த்து மீனாட்சியின் முன் தலை கவிழ்ந்தவனாக அமர்ந்திருந்தான்.
ருத்ராவிடம் தன் பள்ளிப்பருவம் முதல் அன்று கயல் தன்னிடம் பேசியது வரை கூறியவர், அவன் என்ன சொல்கிறான் என்பதை வைத்து அவர் தேனரசனோடு பேசியதை சொல்ல நினைத்து அவனை பார்க்க அவனோ தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தான்.
“வரு… என்னடா…”மீனாட்சி அவன் கை மேல் கை வைத்தவாறு கேட்க,நிமிர்ந்தவன் அவரை பார்த்து,
“சாரி அத்தம்மா உங்களை நான் சரியா பார்த்துக்கல போல.எப்டி உங்களால யாரோடவும் ஒன்னும் பேசிக்காம உங்க மனசுகுள்ளயே எல்லாத்தையும் வெச்சிட்டு இவ்வளவு நாளா இருக்க முடீது.கயல் வரலன்னா இப்பவும் நீங்க என்கிட்ட சொல்லிருக்க மாட்டிங்கல்ல.கடைசி மட்டுமே இப்படியே இருந்துரலாமா?
கயல் நினச்சதுகூட நான் யோசிக்கலயே அத்தம்மா.எனக்கப்புறம் யாரிருக்கா உங்களை பார்த்துக்க.ரொம்ப கஷ்டமா இருக்கெனக்கு.”
“வரு என்னடா இப்படியெல்லாம் பேசுற. எனக்கே பையன் இருந்திருந்தாலும் இப்படி பாசமா இருந்திருக்க மாட்டான்.நீ பையனா எனக்கு எந்தக்குறையும் வைக்கல கண்ணா.அவன் அருகே இருந்த இருக்கைக்கு மாறி வந்தமர்ந்தவர்,அவன் தலைக் கோதி நான் உன்கிட்ட இதையெல்லாம் பகிர்ந்துக்கணும்னு நினைப்பேன்.அப்றம் அதையே நினச்சு கஷ்டப்படுவன்னு விட்ருவேன்.அதோட பேசியும் எந்த பிரயோசனமும் இல்லைன்றப்ப…”
“என்ன யூஸ் இல்லைன்றீங்க அத்தம்மா. அப்பவே அப்பாவையும் பொண்ணையும் தூக்கிட்டு வசந்திருப்பேன்.எதுக்கு இவ்வளவு வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டு… ‘
அப்போது தான் அவன் அறிவுக்கு கிட்டியது அவரின் கடைசி வார்த்தை.
“இப்போ அதுக்கான யூஸ் இருக்கத்தாலத் தான் என்கிட்ட சொல்றீங்களா? அப்டின்னா… அத்தம்மா யூ மீன்.. “
“அப்டின்னா உனக்கு மாமாவா தேனரசனை கொண்டுவரலாம்னு ….”
மீனாட்சி கூறிமுடிக்கவில்ல அவரை தோளோடு சேர்த்தணைத்துக்கொண்டவன்,
“ஹாப்பி போர் யூ… ஹாப்பி போர் யூ… அத்தம்மா”
அவன் அணைப்பும் அவன் கூறும் விதமும் அவனின் மகிழ்ச்சியை மீனாட்சிக்கு உணர்த்தியது.
“அப்போ நாம இப்போவே போய் பேசலாம் அவர்கூட ” அவன் அவசரப்படுத்த,
“நான் அவங்க கூட பேசிட்டேன்டா. அவருதான் இன்னும் ஒன்னும் சொல்லல. அவருக்கு பொண்ணிருக்காம்,அதோட எனக்கு சமூகத்துல முகம் கொடுக்க கஷ்டமாகிருமாம் நிறைய பேசுறாங்க. யோசிச்சு சொல்லுங்கன்னு சொல்கிருக்கேன் பார்க்கலாம்.
கயல் தான் ஆசையா,தவிப்போட அவர் என்ன சொல்லப்போறாரோன்னு பார்த்துட்டு இருக்கா.நீ வேற இன்னைக்கு அந்த தலைல முடியில்லாத மாப்பிள்ளைய பற்றி சொன்னியா,அவ தேனரசனையும் அவளையும் பற்றி பேசுறன்னு நினச்சு டென்ஷனாகி காலையும் இடுச்சிக்கிட்டா.
நீங்க ஓகே சொல்லிட்டதா தானே என்கிட்ட சொன்னாங்க.”
“இப்போவாச்சும் கல்யாணத்துக்கு ஓத்துக்கோன்னு சொன்னாங்க.அதுக்குத் தான் ஓகே சொல்லிருக்கேன்.அந்த ஆளுக்கு இல்லை.’
என்று கூறிய மீனாட்சி,
‘வயசுக்கு வந்த பொண்ணை ஹாஸ்டல் அனுப்பிருவாராம் கல்யாணதுக்கப்றம் பொண்ணு அவ அப்பாக்கூட வீட்ல இருக்கமாட்டாளாம்னு பேசிருக்காங்க. அப்போ அந்த பொண்ணோட நிலை அம்மா இல்லாம வளந்த பொண்ணு இப்போ அப்பாவும் இல்லாம போகப் போகுது.பெத்த பிள்ளையோடயே பாசம் இல்லாதவன் கூட ச்சே.அந்தாளுக்கெல்லாம் கல்யாணமே சரி வரக்கூடாது.கடவுள்கிட்ட அப்போவே வேண்டிட்டேன்.மீனாட்சி கூற,
“கண்டிப்பா கண்டிப்பா நானும் கடவுள்ட்ட கேட்கிறேன்”
என ருத்ராவும் கூற,இருவருமாக நீண்ட நாட்களின் பின்னர் மனம் குளிர்ந்து முகம் இன்பத்தில் நிறைந்து சிரித்தனர்.
ருத்ராவின் அப்பாவும் அம்மாவும் மீனாட்சி ஹாஸ்பிடலில் அனுமதிருந்தபோது அமைச்சர் ஒருவரின் வீடு சென்றிருந்த நேரம் அவரது தம்பிக்கு மீனாட்சியை பேசக்கேட்க, மீனாட்சியோடு பேசிவிட்டு சொல்வதாக கூறியிருந்தனர். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் ஜனார்தனனுக்கு கிடைக்க, மீனாட்சியிடம் அது பற்றி பேசினார்.அவர் கேட்டதை மறுக்காத மீனாட்சி ருத்ரா வந்ததும் பேசிவிட்டு கூறுவதாக கூறியிருந்தார்.
எனவேதான் ருத்ராவிடம் மீனாட்சி ஜனார்த்தனன் கொண்டு வந்த வரனுக்கு சம்பந்தம் கூறியது போல பேசியிருக்க. இன்று ஆபிஸில் அப்படி ருத்ரா கேட்டான்.
“அத்தம்மா எப்போ நம்மளுக்கு கல்யாண சாப்பாடு போடப்போறீங்க”
மீனாட்சிக்கு ருத்ராவின் விருப்பமும் அவரின் எண்ணமும் ஒன்றாக இருக்குமா என்பதை பார்க்க எண்ணி அவனிடம்,
“விளையாடாத வரு.கயலுக்கு ஒரு வழி அமைஞ்சதுன்னா அரசு இவ்வளவு பேசி யோசிச்சுகிட்டு இருக்க மாட்டாங்க.நானே அவங்க கிட்ட போய் கேட்க மட்டும் இருந்திருக்கவும் மாட்டாங்க.நாம கல்யாணம் பண்ணிகிட்டத்துக்கு அப்புறமா அரசு சொல்றது போலவே ஒருவேள அவளுக்கொரு வாழ்க்கை அமையும் போது என்னாலயோ, நம்ம கல்யாணம் பண்ணினதாலயோ ஏதும் ப்ரோப்லம் வந்ததுன்னா,அரசு நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல தவிக்கிறத என்னால பார்க்க முடியாது வரு. “
“அப்போ கயலுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டு ரெண்டு பேரும் அறுபதாம் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா? “
“வரு நீ என்னை கிண்டல் பண்ற? “
“பின்னென்ன அத்தம்மா.சட்டுபுட்டுன்னு கல்யாணத்த பண்ணினமோ அப்படியே பொண்ண அண்ணன் பையனுக்கு கட்டிவெச்சோமான்னு இல்லாம இப்படி யோசிச்சிட்டு இருக்கீங்க “
வரு உண்மையாத்தான் சொல்றியா? “
“அத கான்போர்ம் பண்ணதானே கேட்டிங்க அப்றம் என்ன… அத்தம்மா எனக்கு கயலை ரொம்ப பிடிச்சுருக்கு.இப்போ என் அத்தப்பொண்ணு வேற.நான் மாமாகூட பேசிக்கிறேன். அவகிட்ட இதை பற்றி பேசவேணாம். நானே பேசிக்கிறேன.
அவளுக்கு உங்க ரெண்டு பேரோட கல்யாணத்தையும் பார்க்கணும்.முதல்ல அதை பண்ணிரலாம்.நீங்க இனி அதைப்பற்றி யோசிக்க வேணாம்.இனி கயல் என்னோட பொறுப்பு.நீங்க ஹாபியா இருங்க ஓகேயா. “
“தேங்ஸ் டா வரு ரொம்ப நாளைக்கப்புறம் மனசுக்கு என்னவோ ரொம்ப நிம்மதி கிடைச்சா மாதிரி தோணுது. “
ரொம்ப லேட்டாச்சு கிளம்பலாம் என இருவரும் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் கிளம்பினர்.
கயல் அவளது அறையில் கட்டிலில் சாய்ந்து காலுக்கு கீழ் ஒரு தலையணையை வைத்து அமர்ந்திருக்க, அப்போதுதான் தேனரசன் வேலைக்கு சென்று வந்திருப்பார் போல. அவளுமாக தேநீர் எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தவர்,
“கண்ணம்மா ஆபிஸ்ல பையன் வந்து வண்டியை விட்டுட்டு போறான்.நீ வர்றப்ப எதுல வந்த? “
கேட்டுக்கொண்டே அப்போதுதான் கண்டார் அவள் காலில் சிறிது வீக்கமாகவும் அவள் அமர்ந்திருக்கும் நிலையும். என்னாச்சு கால் திரும்ப வீங்கிருக்கு? ”
“ஆபிஸ்ல வெச்சு திரும்ப கால் ஸ்லிப் ஆகிருச்சு. அப்படியே சார் இருக்கவும் ஹாஸ்பிடல் கூட்டி போய்ட்டாங்க.டாக்டரை பார்த்துட்டு நான் பகலே சார் கூட வீட்டுக்கு வந்துட்டேன்.”
“என்னடா ரொம்ப வலிக்குதா? “அவள் காலை தன் மடியில் வைத்துக்கொண்டவர் தடவிக்கொடுத்தார்.
கொஞ்சமா வலிதான்.ஆனா அதை விட மனசு ரொம்பதான் வலிக்குது. அதை யாரு கேக்குறா… பொண்ணு ஆசையா கேக்குறாளே செஞ்சுப்போமேன்னு ஏதாச்சும் எண்ணம் இருக்கா.”
கயல் அரசுவை வேண்டுமென்றே சீண்டிய வண்ணம் அவர் கொண்டுவந்த தேநீரை பருகினாள் .
“சின்ன பசங்க மிட்டாய் வங்கிக்கேட்டு அடம் பண்ற போல நீ அம்மா கேட்டு அடம் பண்ற.”
“எனக்கு அம்மா வேணும் ஹனி. நான் சின்னதுலயும் இப்டி அடம் பண்ணிருந்தா என்ன பண்ணிருப்ப? “
“அப்பவும் எதாவது பேசி உன்னை சமாளிச்சிருப்பேன்.கண்ணம்மா… எல்லாராலையும் இன்னுமொருத்தரோட பசங்களுக்கு அம்மாவா அதுவும் உண்மையான பாசத்தோட இருக்க முடியாதுடா. ”
இப்போ நான் பெரிய பொண்ணாச்சே.இப்போ என்னை பார்த்துக்க அதோட போனாப் போகுதுன்னு
உன்னையும் பார்த்துக்க மீனாம்மா ஓகே சொல்ராங்க. இருந்தும் யேன் ஹனி.நீதான் இப்போ அடம் பண்ற.அவங்களை கல்யாணம் பண்ணிக்கோ மூணுபேரும் ஹாப்பியா இருக்கலாம். ப்ப்பா…ப்ளீஸ் ப்பா. “
கயலின் “அப்பா” என்ற வார்த்தை அவள் அவளையறியாமல் உணர்ச்சி வசப்படும் நேரங்களிலேயே அழைப்பாள். தனக்காகவே இப்படி மருகுகிறாள் என்பது அரசுவுக்கு அங்கு புரிந்தாலும்,
“நாம மூணுபேர் மட்டுமே இருக்க முடியாதே நாலாவதா உனக்குன்னு ஒருத்தர் வர்றப்ப எல்லோருக்கும் கஷ்டமாகிரும்டா… “
“அப்டி ஆகாது ஹனி. உங்களைப்போலவே என்னை, அப்றம் உங்களை புரிஞ்சிக்கிற ஒருத்தர் தான் எனக்கு கிடைப்பாங்க.நாம சந்தோஷமா இருக்கலாமே.”
அவள் சிறு குழந்தை என அவரிடம் கெஞ்ச, அவள் தலையில் தன் கை வைத்து ஆட்டியவர் நெற்றியில் இதழ் பதித்து,
“உனக்காக,உன் சந்தோஷத்துக்காக… ஒதுக்குறேன்…ஆனா… “
அவர் வாயில் தன் கை வைத்து அவரை பேசவிடாது செய்தவள் அவரை அணைத்துக்கொண்டாள்.
“ப்ளீஸ் ப்பா.எனக்காக எனக்கான்னு போதும்ப்பா.. உங்களுக்காக மீனம்மாக்காக இனி வாழலாம்.”
அவள் முதுகை தடவிக்கொடுத்தவர், அவளை சகஜமாக்கும் பொருட்டு,
“உங்க மீனம்மாவும் கயலுக்காக தானே ஓகே சொன்னாங்க. அதான் அப்பாவும் அப்படியே சொல்லிட்டேன். உங்க மீனம்மாகிட்ட சொல்லு ‘என் ஹனி எனக்காக உங்களை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லிட்டாங்கன்னு.”
“லவ் யூ சோ மச் ஹனி… ”
“மீ டூ கண்ணம்மா ” வளர்ந்த குழந்தையை தன் தோள்களில் தாங்கிய தந்தைக்கு அவளை நினைத்து பெருமிதமே…
அடுத்த வாரம் சந்திக்கலாம்…
இந்த அத்தியாயத்தில் கூடுதலாக உரையாடல்களே இடம்பெற்றிருந்தன. ஒவ்வொருவரினதும் உணர்வுகளை வெளிப்படுத்த அதுவே எனக்கு துணையாக.
கதையில் ஏதும் மாற்றங்கள் ஏற்பட வேண்டுமா,ஏதும் குறைகள் இருந்தால் பகிர்ந்துக் கொள்ளுங்கள். என்னை திருத்திக்கொள்ள அதுவே துணை புரியும்…