கனலியின் கானல் அவன் (ள் )-17

KKA -17

காலை பத்துமணி …  

 

“ஹனி எவ்வளவு நேரம் தான் அப்படியே  உட்கார்ந்து இருக்கதா ஐடியா? நீ வந்தப்றமா தான் நான் போகணும். அதுக்குள்ள யாரும் வந்துட்டா,சட்டுனு  போய்ட்டு வா ஹனி…”

 

“கண்ணம்மா காலைல எந்திரிச்சது  இப்போதான் உட்கார்ந்து இருக்கேன்.ஒரு  பத்து நிமிஷம் டைம் கொடுடா,அப்பா பாவம் இல்ல? “

 

“அய்யே மாப்பிளைக்கு இப்போவே  இவ்வளவு வருத்தமா?கல்யாணத்துக்கு  எவ்வளவு வேலையிருக்கு ஜஸ்ட் ரெண்டு  ஸ்வீட், ஒரு சாப்பாடு ரெடி பண்ணுறதுக்கு  ஹெல்ப் பண்ணி கொடுத்துட்டு என்னமோ பத்துபேருக்கு சமையல் பண்ணதுபோல இருக்க ஹனி. “

 

“ஸ்டவ்வை ஒன் பண்ணி அதுல கடாயி வெச்சு நான் வெட்டி வச்சதை சமைச்ச உங்களுக்கு இவ்வளவு டையர்ட்னா நீங்க  எந்திரிக்க முன்னமே எந்திருச்சு பூல் கிளீன் பண்ணிட்டு அப்படியே வெளில கூட்டி பெருக்கி,வீட்டையும் கிளீன் பண்ணிட்டு  இப்போ உங்க ரூமையும்…சோ மீ டூ டையர்ட டா கண்ணம்மா. “

 

சோபாவில் அமர்ந்தவாறு கால்கள்  இரண்டும் அதற்கு முன்னிருந்த கண்ணாடி  மேசையில் நீட்டி முதுகுக்கு அலங்கார தலையனைக்களை வைத்து சாய்ந்து  அமர்த்திருந்தவள் அவளுக்கு எதிரே அமர்ந்திருந்த தேனரசனோடு வம்பிழுத்துக்கொண்டிருந்தாள். 

 

“சரி சரி இப்டி சொல்லிக் காட்டி  எனக்கொன்னும் ஹெல்ப் பண்ண வேணாம்.நான் இப்போதானே  கத்துக்குறேன் சீக்கிரமே கத்துப்பேன். பாவமாய் முகத்தை  வைத்துக்கொண்டு கயல் கூற, 

 

“அவங்க வீட்ல இருந்து வந்ததும் அப்பா தான் எல்லாம் பண்ணாங்க சொல்லக்கூடாது.பெரியபொண்ணாட்டம்  நடந்துக்கணும்.யாரும் என் பொண்ணை தப்பா பேசிட்டா அப்றம் ஒன்னும் வேணாம் போயிருங்கண்ணுவேன்.”

 

தேனரசன் கயலிடம் கூற,தன் இருக்கையில்  இருந்து பட்டென்று எழுந்தவள் அவர் அருகே  வந்து அவரிருக்கையின் இரு கை பிடியிலும் கைகளை ஊன்றி குனிந்தவள், 

 

“அவங்க வந்ததும் அவங்க பேசுறதுக்கு  பதில்,தட்ஸ் ஆல்.மத்தபடி எதாவது பேசி  சொதப்பின அப்றம் இந்த கயல் யாருன்னு தெரியும்.நானே என் இமேஜிற்கு டேமேஜ் பண்ணிப்பேனா? 

சோ யூ டோன்ட் வொரி அபௌட்  தட் ஹனி. ஒழுங்கா இருந்தமா பேசினமான்னு இருக்கணும்.மவனே சொதப்பின…”

 

கயல் அரசுவை மிரட்ட, அரசுவுக்கு சிரிப்பு  தாளவில்லை. 

 

“எதுக்கிப்போ இவ்வளவு டென்ஷன்? எங்கப்பாக் கூட  என்னை இப்படியெல்லாம் மிரட்டினதில்ல நீ ரொம்பத்தான் மிரட்ட

என்னை. ” அரசு  கூற, 

 

“உங்கப்பா உன்னை ஒழுங்கா வளர்கல. அதான் இப்டி தனிமரமா வளர்ந்து நிக்கிற. நானும் உன்னை அப்டியே விட்டுட்டேன்.  இனியும் இப்படியே இருந்தேன்னா ரொம்ப கஷ்டமா போயிரும்.முதல்ல பேச்சை நிறுத்திட்டு குளிக்க போனா நல்லது. “

 

“சரிங்க  மேடம் … முதல்ல போய் பேஸ் வோஷ் பண்ணிடு,டுவெண்ட்டி மினிட்ஸ்  ஆச்சு.முகத்துக்கு சுண்ணாம்பு தடவி. “

 

அட ஆமால்ல.அப்போ பக்கத்துல வர்றப்ப நீ  பயப்படல. “

 

“சும்மா இறுக்கப்பவே பயப்படல சோ…”

“ஹனி… ” கயல் கத்தவும், 

 

“இதோ நான் குளிச்சிட்டு இருக்கேன்  கண்ணம்மா…”

 அரசு சிரித்துக்கொண்டே மெதுவாக தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டார். 

 

அவர் அறை வாசலில் நின்றுக்கொண்ட  கயல், 

“வர வர உனக்கு என் மேல இருக்க பயம்  விட்டுப்போச்சு.வரட்டும் எங்கம்மா அப்றம் இருக்குனக்கு. “

 

“யாரு உங்கம்மா… பார்க்கலாம்  பார்க்கலாம்.” என அரசு குளியலறையில் இருந்தவாரே குரல் கொடுத்தார். 

 

“ஹாப்பி இன்று முதல் ஹாப்பி … ஹாப்பி..”

என கயல் பாடியவாறே அவள் அறைக்குள்  நுழைந்துக்கொண்டாள். 

 

அவள் பாடிக்கொண்டே செல்வது கேட்ட அரசு மனதில் ‘எனக்கும் அது மட்டும் போதும்டா கண்ணம்மா… ‘என  நினைத்துக்கொண்டார். 

 

அரசுவின் உடல் நீரில்  நனைய மனமும் மகளின் சந்தோஷத்தில் நனைந்து போனது.  

ருத்ரா மீனாட்சியை சந்தித்த மறுநாள்  கயலை சந்திக்க முடியலவில்லை.அவளிடம் ‘அரசுவை அவசரமாக சந்திக்க வேண்டும்,நாம் இன்னொரு நாள் சந்திக்கலாம்’ எனக் கூறியிருந்தான். 

 

அவளுக்குமே மீனாட்சியை சந்தித்து விட்டு அரசுவை சந்திக்க வேண்டும் என்று ருத்ரா கூறியதில் ஏதோ விளங்க, சரியென்றுவிட்டாள். 

 

அவன் அலைபேசியில் பேசிவிட்டு வைத்த  மறு வினாடி அவளது ஒளித்திரையில் அவனது தகவல், 

“நீ ஆரம்பித்து வைத்த செயலை இனிதே  முடிக்கப்போகிறேன். அதுவே நமக்கும் அமையும் என்றால்…”

 

வாசித்தவளின்  இதயம் வேகமெடுக்க ‘எனக்குமே சந்தோஷம் தான் வரு.’ ஆனால்,’எனக்கு என் ஹனி,மீனாம்மாவின்  வாழ்வில் இனி நிம்மதியான, சந்தோஷமான நாட்களே இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.அவர்களுக்கு  மனக்கஷ்டங்களோ,சங்கடங்களோ என்னால் ஏற்பட்டு விடக்கூடாது.அதற்கு எப்போதும் நான் காரணமாகவும் இருக்க மாட்டேன். ” 

 

மனதில் கூறிக்கொண்டவள்,அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதில்  குழம்பிப்போனாள். 

 

ருத்ராவை அடிக்கடி சந்திக்க நேரிடும். பேசியே ஆகவேண்டிய சூழல் ஏற்படலாம். அப்போது அவனை தவிர்க்க முடியாதே. அரசுவின் கல்யாணம் முடியும் வரை  சமாளிக்கலாம். அதன் பிறகு ருத்ராவோடு பேசினால் புரிந்துக்கொள்வான்.

 

‘நாம் ஒன்றும் காலேஜ் செல்லும் பசங்க  இல்லயே.சொன்னால் புரிஞ்சிப்பார். அவருக்கும் அவர் அத்தை சந்தோஷம்  தானே முக்கியம்.’தன் மனதோடு பேசி முடிவெடுத்துக்கொண்டாள் கயல்விழி. 

 

ஆனால் இங்கு அரசுவோடு பேசிய ருத்ரா அதற்கு எதிராய் முடிவெடுத்திருந்தான்.

 

அன்று ருத்ரா,அரசுவை சந்திக்க கேட்டபோது அரசுவும் மீனாட்சி பற்றித்தான்  பேசப்போகிறான் என்று நினைத்து மீனா, கயல் இருவருமே நடைமுறையை புரிந்துகொள்ள மறுக்கின்றதை அவனுக்காவது புரிய வைக்கலாம் என நினைத்துக் கொண்டு செல்ல,அங்கு அவனோ பேசியது வேறு. 

 

சந்தித்ததும் சுமுகமான பேச்சோடு,அவனது தொழில் நடவடிக்கைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.அவன் பேச வேண்டியதை பேச நினைத்த ருத்ரா அரசுவிடம், 

 

“எனக்கு உங்க பொண்ணு கயல்விழியை பிடிச்சிருக்கு,கல்யாணம் பண்ணிக்கலாம்னு  நினைக்குறேன்.அவளுக்கும் என்னை ரொம்ப புடிக்கும்னு என்னால உணர முடியுது,பட் ஏதோ ஒரு காரணத்துனால என்கூட இது பற்றி பேச மாட்டேங்குறா. ‘

 

அரசு இவன் பேசுவதை இடைமறிக்காது  கேட்டிருப்பதை பார்த்தவன் தொடர்ந்து,  

 

‘அப்புறம் நேற்று அத்தம்மா,ஐ மீன் மீனாட்சி அத்தை உங்களை பற்றி சொன்னாங்க. அப்போதான் புரிஞ்சிக்கிட்டேன்.கயல் மைண்ட்ல இந்த ப்ரோப்லம் ஓடிட்டு இருக்கத்தாலத் தான் என்னை அவொய்ட் பண்ண நினைக்குறான்னு. 

 

‘வை டோன்ட் யூ திங்க் அபோட் திஸ் இன் அ பாசிட்டிவ் வேய்? ‘

எனக்கு இது பற்றி உங்ககூட பேசுறது  முறையான்னு கூட தெரில.பட் அத்தம்மாக்கு ஒரு நல்லது நடக்கும்னா அதுல முதல் ஆலா நான் தான் இருப்பேன்.நீங்க  ரெண்டுபேருமே முடிவெடுக்க வேண்டிய விஷயம், பட் இப்போ உங்க பொண்ணு லைஃபும் இதுக்குள்ள இருக்கு.நீங்க ஓகே சொல்லிட்டீங்கன்னா என்  அத்தப்பொண்ணை உரிமையோடு என் வீட்டுக்கு அலச்சிட்டு போவேன்.நீங்க இப்போ மருத்தா உங்க பொண்ணோட கல்யாணமும் தான் இதுல தடை படும்னு இருக்கு. 

நீங்க அத்தைய மெரி பண்லன்னா,எப்பயுமே  கயல் என்னை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்ல மாட்டா.சோ நீங்கதான் நல்லதா யோசிச்சு முடிவு பண்ணனும். “

 

(கல்யாணம் பண்ணினாலும் கயல் ஒத்துக்கொள்ளமாட்டாளே.கயல் மனதில்  இருப்பதை அறியாத ருத்ரா அரசுவோடு பேசி முடிவெடுக்கிறான்.பார்க்கலாம் யார் முடிவு செல்லுபடியாகும் அல்லது நம்மை  ஆட்டுவிப்பவன் புதிதாய் வேறொரு முடிவையும் அமைத்திருக்கலாம். )

 

ருத்ரா பேசி முடிக்கும் வரை அவனது பேச்சினை உள்வாங்கிக்கொண்டிருந்த தேனரசன், 

“நீங்க பிஸ்னஸ் மேன் அதோட பக்கா காவல் காரன் என்பதையும் நிரூபிச்சுடீங்க. அதோட மூனுபேரும் மூன்று பக்கத்துலையும்  என்னை லாக் பண்ணிடீங்க.என்னால கயலோட ஆசைகளுக்கு எப்பவுமே மறுக்க முடியாது.இதுவரைக்கும் அவளா எதுவும் ஆசைப்பட்டு,ஐ மீன் ரொம்ப பெறுமதியான, என்னால முடியாத எதையும் கேட்டதில்லை. 

 

இதான் அவ என்கிட்ட கேட்ட முதல்  விஷயம்,அதோட ரெண்டு நாள் மேடம் என்கூட பேசக்கூட மாட்டேன்றா.இதுலயும்  அவளுக்காகன்னு கேட்டாலும் முழுக்க முழுக்க என் சந்தோஷத்துக்காகத்தான் கேட்கிறாள்னு என்னால புரிஞ்சிக்க  முடியுது.அப்பவும் முந்தாநாள் அவ மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு ஓகே சொல்லிட்டேன்.ஆனாலும், 

 

இதுக்கு சரிக்கண்டு அப்றம் கயலுக்குன்னு ஏதும் நல்லது நடக்கும் போது மீனாக்கும் கயலுக்கும் நடுவுல எனக்கு யாருக்காக பேசுறதுன்னு ஒரு இக்கட்டான சுழல்  அமைஞ்சிரும்னு தான் என்னால ஒரு முடிவும் எடுக்க யோசனையா இருக்கு. 

 

என்னால ரெண்டு பேருல ஒருத்தர்னு எப்போவுமே பேச முடியாது.இல்லன்னா மீனா என்கிட்டே கேட்குற அளவுக்கு வெச்சிருக்க மாட்டேன்.  “

 

அரசு பேசி முடிக்க அவர் முகத்திலும் சங்கடம்.அவர் மனநிலை புரியாமல் இருக்க ருத்ரா சின்னப்பையன் அல்லவே. 

 

“என்னால புரிஞ்சிக்க முடியுது.பட் கயலுக்கு  நடக்குற நல்லது என்கூட அமைறப்ப உங்களுக்கு அந்த நிலை வர்றதுக்கு சான்ஸ் இல்லையே. ‘

 

(அப்போதானே அதுக்கான வாய்ப்பு அதிகம் அதானே கயல் உன்னை மறுக்க காரணமே )

 

முதல்ல உங்க விஷயம் சந்தோஷமா  நடக்கட்டும்.கயலுக்கும் அதானே வேணும். அப்றம் உரிமையா என் அத்தப்பொண்ணை 

கட்டிக்குறேன்.கட்டித் தருவீங்க தானே? “

 

ருத்ரா கேட்க அரசு மறுப்பதற்கு காரணங்கள் உண்டா,தன் மகளுக்குமே அதுதான் விருப்பம் என்பதை அவருமே  உணர்த்திருக்கிறார் தானே.

 

அரசுவின் அகமகிழ்வுடனான சம்பதத்தை பெற்றான் ருத்ரா. ஆனால் கயலிடம் அவன்  காதலை சொன்ன பிறகே அவர்களது கல்யாண விடயம் பற்றி பேச வேண்டும். அதுவரைக்கும் அது பற்றி கயலிடம் கேட்க  வேண்டாம் என கூறிய ருத்ரா அடுத்த வாரமே தன் பெற்றோரோடு அவனை சந்திக்க வருவதாக கூறிக்கொண்டு சந்தோஷமாக விடைபெற்றான்.  

 

சொன்னது போலவே அரசுவின் வீட்டு  வாயிலில் வந்திறங்கினான் அவனது அன்னை தந்தை மற்றும் அக்காவின்  கணவரோடு. 

 

“கயல் அவங்க வீட்ல இருந்து வந்தாச்சு நீ  இன்னும் ரூம்ல எண்ணப்பண்ணிட்டு இருக்க? ” அரசு குரல் கொடுக்க,அறை  விட்டு வெளியே வந்தவள், 

 

“ஹேய் எதுக்கிப்போ சத்தமா பேசுற ஹனி?  பார்க்கவர்றது உன்னை.சோ கீப் குய்ட். சமத்தா இரு.நா சொன்னபடி கேட்டு அவங்க போறவரைக்கும் நடந்துக்கணும்.எதாவது  சொதப்பின… “

 

அவள் கூறி முடிக்கவும் ருத்ரா மற்றும்  அவனது அன்னை வண்டியின் பின்னிருக்கையில் இருந்து இறங்க, அவனது அப்பா முன்னிருந்து இறங்கினார். 

 

“என்னடா வரு உன்னை விட  ஹண்ட்ஸம்மா இருக்கார் உங்க மாமா.” 

ருத்ராவின் அன்னை அவன் காதை கடித்தவாறே கயலின் வீட்டு வாசலை அடைந்தனர்.

 

‘ஹ்ம்ம் அதானே எனக்கு கொஞ்சநாளா  வினையா இருந்தது.நானே சமீபத்துலதான் தெழிஞ்சேன்.’மனதில் கயல்,அரசுவை  பற்றி தவறாக எண்ணியமைக்கு தன்னைத்தானே நொந்துக்கொண்டான். 

 

“சும்மாவே அக்காக்கு அத்தைய கண்டா ஆகாது.இப்போ அவ தொப்பை வெச்ச  புருசனோட இவரை கம்பேர் பண்ணி அடுத்த சண்டைக்கு ரெடியாகிருவா”

 

எனக் கூறிக்கொண்டு வாசலில் நின்றிருந்த கயலை தன் கண்வழியே தனக்குள் இழுத்துக்கொண்டான் ருத்ர வர்மன். 

 

“உனக்குத்தான் உங்கக்காக்கு ஒன்னும்  சொல்லாம இருக்க முடியாதே… “பார்வதி கூற, 

 

“ஹல்லோ… அரசு எவ்வளவு நாளாச்சு” என்ற ஜனார்த்தனன்,குரலில் அம்மாவும் மகனும் வாய் மூடிக்கொண்டனர். அரசுவோடு கை குலுக்கி அப்படியே தோளில் தட்டிக்கொடுத்த ஜனார்த்தனன் அவர் கைகளை விடாது பிடித்துக்கொண்டார். 

 

“நல்லா இருக்கேன்.ப்ளீஸ் கம் இன்” என  அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

 

உள்ளே சென்று அமர கயலும்  வரவேற்பறைக்கு வந்தாள்.அவளை தோளோடு அணைத்துக்கொண்ட அரசு என் பொண்ணு ‘கயல்விழி’ என அனைவருக்கும்  அறிமுகபடுத்தினார். 

 

கயலுக்கு ருத்ராவை கண்டதோடு தன்னை  அறிமுகப்படுத்தவும் சற்று முகம் சிவந்து  வெக்கமாகி போனது.நீண்ட தரைதொட்ட சல்வார் அணிந்திருந்தாள். 

 

சகஜமாக ஜனார்த்தனன் தன் மருமகனை  அறிமுகப்படுத்தி விட்டு பேச அரசுவுக்கும்  சுமுகமாக பேச முடிந்தது.கயலை அருகே அமர்த்திக்கொண்ட பார்வதி அவளுடன்  பேசிக்கொண்டிருந்தார்.ருத்ராவுக்கு அழைப்பு வரவும் எழுந்து வெளியில்  

சென்றான். 

கயல் அனைவருக்குமான இனிப்புகளும் தீன் பண்டங்களும் வைத்து பரிமாறி தேநீர்  கொடுத்து உபசரித்தாள்.அதுவரையிலும் உள்ளே வாராதிருந்த ருத்ராவை அரசு வெளியே சென்று அழைத்துவந்தார்.  

 

“வந்த இடத்துலயும் உன் போனை  கொஞ்சநேரம் வெச்சுட்டு இருக்க முடியாதா  வரு…”பார்வதி கடிந்துக்கொள்ள, 

 

“எப்பவோ பேசி முடிச்சிட்டேன்.இடம் நல்லா இருந்ததா அதான் பார்த்துட்டு இருந்தேன்” என்றான். 

 

அதை கேட்ட ஜனார்த்தனன், 

“ரொம்ப நாளா வரு இந்த வீட்டை வாங்க கேட்டுட்டே இருந்தான்.சென்னைல இப்படி பிரீயா இருக்க இப்போ இடம் கிடையாதே.ஆனா ஓனர் முடியாதுன்னுட்டாங்க.இப்போ அதே  அவனுக்கு மாமா வீடா போச்சு என சிரித்துக்கொண்டே கூற கயலும் ருத்ராவும் ஒருவரை ஒருவர் ஓர் நொடி பார்த்துக்கொண்டனர். அரசுவும் அதை கண்டுக்கொண்டார். 

 

ஆண்கள் பேசிக்கொள்ளட்டும் என  நினைத்த பார்வதி “கயல் நாம வீட்டை  பார்க்கலாமா? ” எனக்கேட்டு அவளுடன் 

 எழுந்து உள்ளே சென்றார். 

 

கோவிலில் தாலி கட்டியதும் குடும்பத்தினர் மட்டும் வெளியில் ஒன்றாக உணவை  முடித்துக்கொண்டு வீட்டுக்கு வரலாம் என அரசு கூற,அதை மறுத்த ஜனார்த்தனன்,வீட்டிற்கு பதிவாளரை வரவழைத்து பதிவு செய்த பின் சிறு பகல் விருந்தொன்று வீட்டிலேயே வைத்துக்கொள்ளலாம் என கூறியிருந்தார்… 

 

வரவேற்பு ஒன்று ஏற்பாடு பண்ணலாம் என  ஜனார்த்தனன் கூற அதை அரசு மறுத்துவிட்டதனால் பகல் விருந்துக்கு  ஒத்துக்கொண்டார் அதுவும் ‘வீட்டில் தான் ஏற்பாடு பண்ணுவேன் அதற்கு மறுப்பு  சொல்லவேண்டாம்’ எனக்கூற சரியென்றுவிட்டார்… 

 

கல்யாணத் திகதி தீர்மானித்துக்கொண்டே வந்திருந்தமையால் அடுத்த மாதம் முதல்  வாரத்தில் நல்ல நாள் இருப்பதாகவும் அதிலேயே கல்யாணத்தை முடிக்கலாம் எனக்கூற அரசு எதுவோ கூற வாயெடுக்க, 

 

‘ஹனி கீப் குய்ட்’  என கண்களாலேயே கயல் மிரட்ட அவர் தலையாட்டிவைத்தார். 

அதனை கண்டுகொண்ட ருத்ரா அரசுவை  பார்த்து சிரிக்க அவரும் கண்களால் அவர் நிலையை காட்டி புன்னகைத்தார்.  

 

அனைவரும் கிளம்புவதாகக் கூற,பகல்  உணவை அன்புடன் பரிமாறி பசியாற்றியே அனுப்பி வைத்தனர். 

 

கயலுக்கு தலையசைத்து  விடைக்கொடுத்தவன் அரசுவிடமும்  கூறிக்கொண்டு சென்றான்.அவர்கள் வண்டி கிளம்ப அரசுவின் தோள்களில்  தொங்கிக்கொண்டவள் அவர் கன்னத்தில் இதழ் பதித்து

 “ஹாப்பி போர் யூ மை ஸ்வீட்…  ஹனி” என்று கூற, 

 

“கண்ணம்மா ஒரு ரெண்டு மாசம் கழிச்சு  பண்ணிக்கலாம் டா.இன்னும் இருபது நாள்னா; இவ்வளவு அவசரமா எதுக்கிப்போ…”

 

கயல் பார்த்த பார்வையில் அரசு பேச்சை  நிறுத்திக்கொள்ள,

 

 “இப்போவே ரொம்ப லேட் இதுல இன்னும் ரெண்டு மாசமெல்லாம் வெய்ட் பண்ண  முடியாதுப்பா.நானே எப்போடா உன்கிட்ட எனக்கு ரிலீஸ் கிடைக்கும்னு இருக்கேன் நீ  என்னன்னா… ‘ 

 

அச்சோ மறந்தே போய்ட்டேன்” என்றவள்  சமயலறையில் நுழைய “என்னாச்சு” என்று அவரும் பின்னோடு வந்தார். 

 

“மீனாம்மாக்கு சாப்பிடாதிங்க நான்  எடுத்துட்டு வரேன் சொல்லி மெசேஜ் பன்னிருந்தேன்.அதான் லேட்டாச்சு… என்றவள் அவருக்காக உணவை பேக்  செய்து எடுத்துக்கொண்டாள்… 

“நீ கூட இன்னும் சாப்பிடல கண்ணம்மா “

 

“நான் அவங்க கூடவே சாப்பிட்டுப்பேன்.நீ சாப்பிட்டு எல்லாம் கிளீன் பண்ணிரு நான் அதுக்குள்ள வந்துர்றேன். ” கூறியவள் தன் வண்டியில் சிட்டென பறந்துவிட்டாள். 

 

அதானே பார்த்தேன் என்ற தேனரசன் மகள் சொன்ன வேலையை செய்து முடித்தார்.