கனலியின் கானல் அவன் -12

பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றின் வாயிலில்  நுலைந்தவாறு,  

“ஒரு வார்த்த என்கிட்ட சொல்லி  இருக்கலாமே.நீங்க எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு இப்டி இருக்கீங்கல்ல.என் மனசு தாங்க மாட்டேங்குது.அவன்  இப்போதானே காலேஜ் போய்ட்டிருக்கான். இன்னக்கி உயிருக்கு எதாவது ஆகியிருந்தா…என்னால நினச்சும் பார்க்க முடில “பார்வதி அழுந்துக் கொண்டே கூற, 

 

“பார்வதி,கையில தான் சின்னத்தா காயம், பயப்படும் படியா ஒன்னும் இல்லைனு வரு  கால் பண்ணி சொன்னான் தானே எதுக்கிப்போ இப்டி அழர? “ஜனார்த்தனன் மனைவியை சமாதானப்படுத்தியவாரு மாதவன் அனுமதிக்கபட்டிருந்த ஹாஸ்பிடல் உள்ளே நடந்து வந்துக்கொண்டிருந்தனர். 

 

பார்வதியின் மறுபக்கம் நடந்து வந்த மதுமிதா, 

“ம்மா மாதவாக்கு ஒன்னும் ஆகலம்மா.. ஆழாம வாயேன் “என அவர் கை பிடித்தவாறு வர அவள் மனதிலோ ‘நானே அண்ணாகிட்ட வாண்டடா ஏச்சு வாங்கிட்டு திரும்ப திட்டுவானோன்னு பயந்துட்டு வரேன்.இவங்க வேற ‘…

 

மாதவன் அனுமதிக்கப்பட்டிருந்த அறையினுள் இவர்கள் நுழைய ருத்ரா  மாதவன் அருகே ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தான். 

 

“மாதவா…” என பார்வதி அவனருகே சென்று தலைக்கோத, 

“ஒண்ணுமில்லம்மா கைல சின்னதா ஒரு கீறல் கொஞ்சம் ஆழமா இருக்கதால  ஜஸ்ட் ஏழு தையல் போட்டிருக்காங்க.”எனக்கூற, அவனை பார்த்த பார்வையில் வாயை  மூடிக்கொண்டான்.  

 

சிறிதுநேரத்தில் அங்கே வந்து விட்ட ரித்திகா, “என்னாச்சு என்ன திடீர்னு  போலீஸ் அது இதுன்னு.ரெண்டு பேரும் வீட்டுக்குள்ள ரகசியம் பேசுறப்பவே புரிஞ்சது ஏதோ கள்ளத்தனம்  பண்ணுறானுங்கன்னு.ம்மா நீ தான் இவனுங்களை கண்டிக்கிறது இல்லை.பாரு இப்போ என்னெல்லாம் பண்ணிட்டு வந்திருக்கான்.”

 

“ரித்தி சும்மா இரேன்.எனக்கு ருத்ரா NCB ல இருக்கான்னு அவன் சேர்ந்தப்பவே தெரியும்,மூனு வருஷமா பன்றான் அதோட மாதவாக்கும் அதுலதான் இன்டரெஸ்ட்னா அதுல தப்பில்லையே.அவங்களுக்கு பிடிச்ச தொழில் அவங்க பன்றாங்க.இதுல யாரும்  தலையிட முடியாது.அதோட தொழில் அடுத்தவங்க விருப்பத்துக்கு பண்ணவும் முடியாது.தைரியமான பாசங்களை தான் பெத்திருக்கேன்.” ஜனார்த்தனன் கூற அவரை பார்த்திருந்த ருத்ராவுக்கு பெருமை தன் தந்தை எண்ணி. 

 

“யாருங்க அவங்களுக்கு பிடிச்ச தொழில்  பண்ண வேணம்னா.என்கிட்ட ஒரு வார்த்த சொல்லிருக்கலாமே!”பார்வதி கூற 

 

“ம்மா அத்தம்மாக்கு தெரியும்மா.”ருத்ரா கூற, 

 

” வரு நான் உங்க அம்மாடா… என்கிட்ட நீங்க சொல்லிருக்க வேண்டாமா?” பார்வதி  கேட்க முந்திக்கொண்ட ரிதிக்கவோ, 

 

“அதானே அம்மான்னு எதுக்கு  இருக்காங்க.அவங்க எண்ணானாலும்  அத்தை தான். அம்மா ஆகிட முடியுமா? இப்போ அம்மா பையனையும் பிரிச்சு வெக்கிற வேலையெல்லாம் பார்க்குறாங்க.”

 

“அக்கா சும்மா இரேன் நீ வேற… ம்மா,நானா தான் அண்ணா கூட சேர்ந்தேன். அண்ணாவோட வேலையை பொறுத்து  வெளில என்ன பண்ராங்கன்னு காட்டிக்கப்படாது அதான் வீட்லயும் யார்கிட்டயும் சொல்லல.அத்தைகிட்ட அவன் எதையுமே மறைச்சதில்லயே.அதான் அவங்களுக்கு மட்டும் தெரியும்.”என்று மாதவன் கூற, இவ்வளவுக்கும் ருத்ரா எதுவும் கூறவில்லை. 

 

ரித்திகா மீண்டும்,”உயிருக்கு ஆபத்தான தொழில் பண்ண சப்போர்ட் பன்றாங்க, எனக்குன்னா இதுல ஒரு பாசமும்  தெரில.பலசு எதுவோ மனசுல வெச்சுகிட்டு அவங்களுக்கு கிடைக்காத சந்தோஷம் நம்ம வீட்டுக்கு கிடைக்க கூடாதுன்னு நினைக்குறாங்களோ என்னவோ..”

 

“அக்கா… ரித்தி… “என்று ருத்ரா, ஜனார்த்தனன்,பார்வதி என அவளை பார்த்து கத்த, 

 

“அக்கான்னு பார்க்குறேன் இல்லன்னா  நடக்கிறதே வேற.உனக்கென்ன அவ்வளவு அவங்க மேல பகைன்னு என்னால  புரிஞ்சுக்க முடில.இப்படி பேசி நீயே உன்ன தாழ்த்திக்குற ச்சே ‘என்றவன்,’இவங்க  அம்மாதான் ஆனா அத்தை எனக்கு அதுக்கும் மேல.அது அம்மாக்கே தெரியும் நீ எதுக்கு சும்மா நடுவுல … “

 

என்றவன், கோவத்தில் அறை விட்டு செல்ல  வாசலை நோக்கி திரும்ப மீனாட்சி நின்றுக்கொண்டிருந்தார்.அவனின் கையை  பிடித்து அழுதிக்கொடுத்தவர் “வெளில வெயிட் பண்ணு வரேன்”என அவனை அனுப்பி விட்டு உள்ளே வந்தார் மீனாட்சி. 

 

‘அச்சோ ஏதும் தப்பாக நினைத்திருப்பாளோ என பார்வதி அவரை பார்க்க, உள்ளே  வந்தவரோ எதையும் காதில் வாங்கிக்கொள்ளாதவரைப் போல,  

 

“என்ன மாதவா ரொம்ப வலிக்குதா? அடுத்த முறை உன் பெயர்  நியூஸ்ல வரனும்டா. இப்படி சின்ன கீரலுக்கே ஹாஸ்பிடல் வந்தா நல்லா இருக்கே.உங்க அண்ணா எதை செஞ்சாலும் அவன் பெயரை  வெளில சொல்லமாட்டான்.நீயாவது நாம பெருமை பீத்திக்க சான்ஸ் குடுடா.”என கேட்டு அவனோடு பேசி கை ரொம்ப வழியா என அவன் தலைக்கோதி நலம் விசாரிக்க, 

 

“அத்த கண்டிப்பா இன்னக்கி அண்ணா வரலைன்னா நானேதான் ஹீரோ.நடுவுல  மாஸ் என்ட்ரி கொடுத்து என்னை அனுப்பி விட்டுட்டான்.இல்லன்னா நியூஸ் பூரா நம்ம  புகழுரைத்தான்… “மாதவன் அங்கு நடந்தவைகளைக் கூற, 

 

“அண்ணி பசங்க உங்க பெயர்,மரியாதை அப்றம் அவங்க மானம்,உயிர் எதையும்  இல்லமாக்கிக்குற நிலையில அவங்களை நீங்க வளர்க்கல்ல.உங்ககிட்ட சொல்லக்கூடாதுன்னு இல்ல.அவங்க பண்றது அடுத்தவங்களோட  உயிர்,மானம் காக்குர தொழில்.சோ இப்டி இருந்தா தான் அவங்களால அதை நல்ல படியா பண்ண முடியும்.அவனுக்கு காயமானதும் மனசுக்கு கஷ்டம் தான் ஆனா மூனு பொண்ணுங்கட மானத்தை காப்பாத்திருக்கானுங்க நீங்க பெருமை பட வேணாமா.?நம்ம மதுவுக்கு இன்னக்கி ஏதும் ஆகியிருந்தா நம்ம  இன்னக்கி என்ன பாடு பட்டிருப்போம்? “

 

கண்களை துடைத்துக்கொண்டு பார்வதி,   “திடீர்னு சொல்லவும் மனசு கஷ்டமாகிரிச்சு  மீனாட்சி.வீட்ல கைல சின்னதா கீறல் விழுந்தாலே வீட்டை ரெண்டு பண்னுவான். இவன் சண்டைக்கி போனான்னா பயம் வரத்தானே செய்யும்” என பார்வதி கூற 

 

“என்னம்மா நீயே என் இமேஜூக்கு டேமேஜ்  பண்ற “அவ்விடம் சற்று சமன்பட்டது. 

 

“அண்ணி ருத்ரா எங்கிட்ட பாசமா  இருந்தாலும்,நான் என்னைக்கும் அவன்கிட்ட அத்தைன்ற எல்லையை மீறி அம்மாவா அவன்கிட்ட எதையும்  எதிர்பார்த்தது இல்ல.அவன்கிட்ட அதையும் தாண்டி ஒரு நல்ல பிரெண்டா தான் இருக்கேன்.அதுனால எப்பவும் அவனுக்கு  நீங்கதான் அம்மா.”என்று மீனாட்சி கூறவும்,   

பார்வதி எதுவோ கூற வர,அப்பொழுது  அங்கே ருத்ராவின் உயர் அதிகாரி வந்தார்.  

 

வந்தவர் மாதவனை பார்த்து விட்டு நன்றி  கூறி பாராட்டியவர்,ருத்ராவின் அப்பாவிடமும் பேசி மகன்மார்களின் புகழ்   பேச பெற்றவர்களுக்கும் அது பெருமையே.. அதோடு அங்கிருந்த மீனாட்சியை கண்டவர்  அவரிடமும் பேசி விடைப்பெரும் நேரம்,  

 

“ருத்ரா அந்த பொண்ணு எப்டி இருக்காங்க பார்த்து பேசிடுங்க.ரொம்ப இன்ஜுர்ட் ஆகி  இருக்கா? “எனவும், 

 

“சார் இன்னும் அவங்களை காண்டாக்ட்  பண்ணவே இல்லை,பார்த்துட்டு உங்க கூட  பேசுறேன் எனக்கூறி அவருடன் சென்று அவரை விட்டு வந்தவன் தன்னையே  நொந்துக்கொண்டான். 

 

இவ்வளவு நேரமாச்சு எப்டி இருக்கானு  பார்க்கவே இல்லை என தன்னை தானே திட்டிகொண்டவன்,கயலின் எண்ணுக்கு அழைக்க அது சுவிட்ச்ஆப் என வரவும், அரசுக்கு எடுத்தான்.அவரும் அதே ஹாஸ்பிடலில் இருந்து இப்போ தான் வீட்டுக்கு செல்வதாக கூறவும் நாளை சந்திக்க வருவதாக கூறி வைத்தான். 

 

அவனருகே வந்த மீனாட்சி தெரிஞ்ச பொண்ணாடா என கேட்கவும் “நம்ம கயல்  தான் அத்தம்மா. “

 

“என்னடா சொல்ற ரொம்ப முடியலையா அவ எப்டி அங்க வந்தா? நல்லா  பயந்திருப்பாளே” எனக்கேட்க, 

அவனோ மதுவை திரும்பி முறைக்க அவரும் மதுவை பார்க்க ஏற்கனவே  பயத்தில் இருந்தவள் அண்ணனின் முறைப்பில் பயந்து “ண்ணா,உண்மையா  எனக்கு அவனுங்க எதுக்கு கூப்பிட்டாங்கன்னு தெரியாது.இல்லன்னா நா போயிருக்கவே மாட்டேன்.”என அழ ஆரம்பிக்கவும் , 

 

“வரு என்ன இது அவளுக்குமே அது கஷ்டமா தானே இருக்கும்,அவளும்  பயந்துபோய் இருக்கா நீ வேற அவளை…” என அவளை தோளோடு அணைத்துக்கொண்டார் மீனாட்சி. 

 

“அத்தம்மா பழகுற பிரெண்ட்ஸ் எப்டி பட்டவங்கன்னு தெரியாதளவ்க்கு மது  என்ன சின்ன பொண்ணா?அவளுக்கு மட்டும் ஏதும் ஆகியிருக்கனும் அப்றம் தெரிஞ்சிருக்கும் நான் யாருன்னு.”

ருத்ரா கோபத்தில் பேசியப் படியே   அவனையே பார்த்திருந்த மீனாட்சியைக்  காணவும் வாயை மூடிக்கொண்டான்… 

 அவரும் பேச்சை மாற்றும் பொருட்டு, அதோடு கயலை காணும் ஆவலில்

 

 “இப்போ எங்க இருக்கா கயல்?வா போய் ஓரெட்டு பார்த்துட்டு வந்துரலாம் வரு”

 

“இப்போதான் வீட்டுக்கு போய்ட்டு இருக்காங்களாம்.அவங்க அப்பாகூட  பேசினேன்” என்றவன்,நா கிளம்புறேன் அத்தம்மா.நீங்க யார்கூட வரீங்க? “என  பார்க்க,  

“நா வரேன் நீ போ.போய் முதல்ல நல்லா தூங்கி எழு.மோனிங் பேசிக்கலாம்.” என்றவர் அவனருகில் வந்து

“அவளுக்கு ஒன்னுமிருக்காது நாளைக்கு போய் பாரு வரு.”எனக் கூற அவர் முகம் பார்த்தவன் எதுவும் கூறாது  சென்றுவிட்டான்… 

 

போகும் அவனையே பார்த்தவர், 

“மது வா நாம அப்பாகிட்ட சொல்லிட்டு கிளம்பலாம் அவங்க இருந்துட்டு வரட்டும்.” என்றவர்  ஜனார்தனனிடம் கூறிக்கொண்டு மதுவோடு கிளம்பினார்.  

 

அரசுவோடு வீட்டுக்கு வந்த கயல் அவரின் வற்புருதலுக்காக ஹாஸ்பிடல் வந்தவள்  அங்கே அவளை அட்மிட் செய்யுமாறு கேட்டுக்கொள்ளவும் முடியாது என்று அடம் செய்து ட்ரிப்ஸ் ஏறும் வரை மட்டுமிருந்து வீட்டுக்கு வந்தாள்… 

 

தசைநார்கள் இழுபட்டு கணுக்கால் சுளுக்கியிருக்க அவளால் சரியாக நடக்கவும் முடியவில்லை.அதோடு முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் கீறல்  என்றாலும் மரக்கம்பினால் கீறியிருக்க வழி தாங்க முடியவில்லை அவளால்.காயத்துக்கு மருந்திட்டிருந்தாலும் பென்டேஜ் பண்ணாது ஓயின்மெண்ட் போட்டிருக்க ஆடை அதில் படும் போது கஷ்டமாக உணர்ந்தாள். தந்தையோடு இருப்பவள் என்னதான் செய்வாள். 

அதை புரிந்துக்கொண்ட  அரசு அவளை கட்டிலில் படுக்குமாறு கூறியவர், “கண்ணம்மா நல்லா தூங்கி எழுந்துட்டேன்னா காலைல சரியாகிரும்டா. ஒன்னும் யோசிக்காத,ஜஸ்ட் ஸ்மோல்  ஆக்சிடன்ட் ஓகே… டோன்ட் திங்க் மச் அன் டோன்ட் ஹர்ட் யுவர் செல்ப்.” எனக்கூறிக்கொண்டு போர்வையை கழுத்து வரை போர்த்தி விட்டு அவள் நெற்றியில் இதழ் பதித்தவர்,  

 

“டீ ஷர்ட்  ரிமூவ் பண்ணிக்கோ,காயத்துல  பட்டா உனக்கு கஷ்டமா இருக்கும்,அப்பா  வர்றப்ப டோர் நொக் பண்ணிட்டு வரேன் பிரீயா தூங்கு.” என்று கூறி அவள் கூந்தலை வருடிவிட்டு அவர் அறைக்கதவை  சாற்றிக்கொண்டு சென்றார். 

 

அவர்  கூறியப்படியே படுத்துக் கொண்டவளின் மனமோ தவித்தது.இன்று அவள் தந்தையோ அல்லது ருத்ராவோ  வந்திருக்கா விட்டால் இவள் நிலைமை. எதோ ஒரு தப்பு நேர்ந்திருக்குமே.’என்னால எவ்வளவு பெரிய அவமானம் நேர்ந்திருக்கும்.என்னால ஹனி படர கஷ்டம் போதுமே.

எனக்கும்  அம்மா இருந்திருக்கலாம் இதோ  இப்போ நான் மடி சாஞ்சிக்க எனக்கு அம்மா வேணும்.’மனம் ஊமையாய் அழ தாயை  தேடிய மனம் அந்நொடி அரசு அதை அறிந்தால் அவர் வருந்துவார் என்பதையும் உணர்ந்துதான் இருந்தாள். 

 

‘வரு…’ என அவள் மனம் அவன் பெயர்  கூறக்கேட்டவள் இதயம் இதமானது.அவன் கண்களில் அவளுக்காண தவிப்பை  கண்டாள்.அரசு வர முன்னமே ருத்ரா தேடி வரும் போது இவள் அவனிடம் செல்லவேண்டும் என்று நினைத்தாள் தான், ஆனால் அந்நிலையிலும் அவனை நெருங்கி தன்னால்,தன் காதலால் தன் தந்தையின வாழ்க்கைக்கு நடத்த  நினைத்திருக்கும் நிகழ்வு தடைப்படும் என்றே அவன் முன் வராது அரசு வரும் வரையில் காத்திருந்தாள். 

 

‘எங்கம்மா காதல் போலவே என் காதல் கூட  இடையிலேயே நின்னுரும் போல வரு.என் காதலை நா உங்க கிட்ட தெரியப்படுத்த  போறதில்ல.என்னோடவே இருக்கட்டும்.

 

“கானல் நீராய் என் காதலும் மாறிப்போகுமோ- கண்கள் காண்பது  நிஜமல்ல அறிவுக்கு அது பொய்யென தெரிந்தும் தூரத்தில் தெரிவது நீர் தான் என அதை நம்பியே வாழும் பாலை நிலை  உயிர்கள் போல கிடைக்கப்பெறாத காதல் தான் என்னது என தெரிந்தும் அதை மனதில் நினைத்துக்கொண்டே வாழ்ந்துக் கொண்டிருக்கும் உங்கத்தை,என்  அப்பாவை போல… நானும் இருந்திடுவேன். 

 

உடல் காயங்களுடன் அவள் மனதில் உள்ள  கலக்கங்களுடனும் போராடி இறுதியில் உறக்கத்தை தழுவினாள். 

 

காலை எட்டு மணியிருக்கும் அரசுவின்  வீட்டு வாசலில் வந்து நின்ற வண்டி சத்தத்தில் சமயலறையில் கயலுக்காக உணவினை தயாரித்துக்கொண்டிருந்த  அரசு வெளியில் வந்து பார்க்க,ருத்ரா இறங்கினான். 

 

“ஹலோ குட் மோனிங் மிஸ்டர்.அரசு  காலையிலேயே வந்துட்டேன் ரொம்ப சாரி.”என்றவாறு அவன் கண்ணாடியை கண்களில் இருந்து கழட்டியவாறு கூற  

 

“அப்டில்லாம் இல்ல ப்ளீஸ் கம் இன்.”  என அவனை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார் அரசு.

 

“நான் கொஞ்சம் அவசரமா வெளில  கிளம்பனும் அதான் அப்படியே பார்த்துட்டு  போயிறலாம்னு…போனேன்னா எப்ப திரும்புவேன்னு சொல்லமுடியாது.”

 

“அதுக்கு பரவாயில்ல ருத்ரா.உங்க  பிரதர்க்கு அடிபட்டதா சொன்னா இப்போ  எப்டி இருக்கு?”

 

“அது சின்ன காயம் தான் இப்ப மோனிங்  வீட்டுக்கு வந்துருவான்.வீட்ல தான் கொஞ்சம் பயந்துட்டாங்க” என்றான். 

  

“கயல் இன்னும் எந்திரிக்கல டென்  மினிட்ஸ் வெய்ட் பண்றிங்களா?”எனவும் 

 

“கண்டிப்பா” என்றவன் மீண்டும், ‘சாரி நான்  கால் ஒன்னாவது உங்களுக்கு பண்ணிட்டு வந்திருக்கலாம்” என்றான் ருத்ரா. 

 

தட்ஸ் ஓகே ருத்ரா,வெய்ட் பண்ணுங்க  வந்துர்றேன் என அவன் தோள்களில் தட்டிவிட்டு உள்ளே சென்றார். 

 

இரவு முழுதும் அவள் நினைவுகளே  அவனை ஆக்கிரமித்திருந்தது…அவனுக்கு  நன்றாக தெரிந்தது,கயல் அவனை பார்த்தும் அவள் இருந்த இடத்தை  விட்டு வெளிவராமல் இருந்திருந்திருக்கிறாள் என்று.என் மேல அவளுக்கு ஒன்னும் இல்லையா? அவ என்னை நிமிர்ந்தும் ஒரு பார்வ பார்கலையே.நான் அவளை தப்பா  புரிஜிக்கிட்டேன்னு என்னை வெறுத்துட்டாளோ? கண்டிப்பா என்னை வெறுத்திருப்பாள்.அதானே என்னை அவொய்ட் பண்ணா. 

எனக்கு ஏன் தான் புத்தி இப்படி போகுது.. தன்னைத்தானே திட்டிகொண்டவன்,நாளை  முதல் வேலையாக அவளை ஒரு முறை பார்த்து அவள் உடல் நிலை பற்றி விசாரிக்க வேண்டும் என்று  நினைத்துக்கொண்டான்.

 

இரண்டு நாட்களுக்கு முன் அவனது துப்பறியும் நண்பன் மூலம்  கிடைக்கப்பெற்ற அரசு பற்றிய தகவல்கள் அதோடு தன் அத்தையின் பெயரும் தொடர்பு பட்டிருக்க இது பற்றி மீனாட்சியோடு பேசவேண்டும் என்று நினைத்திருக்கும் போதே இந்நிகழ்வு  ஏற்பட்டிருந்தது…இதையெல்லாம் யோசித்தப்படி உறங்கியவன் காலை எழுந்ததும் இங்கு வந்து அமர்ந்திருக்கிறான். 

 

“கண்ணம்மா.. 

“என அரசு கதவை தட்ட “ஹனி…”  என அவள் தூக்கம் இன்னும் எஞ்சியிருந்த  அவள் குரல் ருத்ராவுக்கு மெலிதாக கேட்டது.. 

 

“வரட்டுமா? “என இவர் கேட்க சில  வினாடிகள் சென்று இவள் அழைக்க உள்ளே சென்றவர் காயம் எப்படியிருக்கு  என இவர் கேட்க அவரை முறைத்தவள் 

 

“பின்னாடி எனக்கு கண்ணிருக்கா நான் எப்டி பார்ப்பேன்  ஹனி ” என்றவள் அவர் தோள்களில் மீண்டும் தூங்கி வழிய, “அதானே!” என்றவரும் அவளது டீ ஷிர்ட்டை  மெதுவாக கீழிறக்கி பார்த்தவர் கொஞ்சம் “பெட்டெரா இருக்குடா.நனைக்காதே போய் பேஸ் வோஷ் மட்டுமே பண்ணிக்கோ உன்னை பார்க்க ஒருத்தர் வந்திருக்காங்க.” என்றிட, 

“என்னைப்பார்க்க யாரு  ஹனி வராங்க என்னை எழுப்ப நீ பொய் சொல்ற. “

 

“கண்ணம்மா ருத்ரா வந்திருக்கார்.உன்னை  கூட்டிவரேன்னு சொல்லிட்டு உள்ள வந்து பத்து நிமிஷம் ஆச்சு. “

 

“ஹனி அவங்க எதுக்கிப்போ  வந்திருக்காங்க?நான் ஏதும்  பண்ணலையே? “

 

மனதில் அவன் வரவை எதிர் பார்க்காதவள் மனதில் இதம் பரவுவதையும் உணர்ந்தாள். 

 

“எதுக்குன்னு தெரில நான் போய் பேசிட்டிருக்கேன் நீ வரியா?அவரை உட்கார  வெச்சுட்டு நா உள்ள வந்தது சரியில்லை தானே? ” 

 

“சரி” என்றவள் அவர் செல்லவும் மெதுவாக எழுந்து முகம் கழுவி வந்தாள். உடுத்தியிருந்த ட்ஷிர்ட்க்குக்கு மேலால்  ஓவர் கோர்ட் ஒன்றினை அணிந்துக்கொண்டு கூந்தலை உயர்த்தி போனிடெய்ல் போல போட்டுக்கொண்டவள் முன்னறைக்கு செல்ல இதயமோ வெளியில்  குதித்து விடும் அளவுக்கு துடிதுக் கொண்டிருந்தது. 

 

காலை நொண்டியபடி வந்தவள் வழி பொருக்க முடியாமல் கண்களும் கலங்கி விட்டது.அவன் வந்திருக்கிறான் எனும் நினைவில் கால் வலியையும்  பொருட்படுத்தாது நடந்தவளுக்கு இப்போ வழி உயிரெடுக்க ஹனி எனவும் ருத்ராவும் அவளைத்தான் பார்த்தான்.

 

அவள் முகம் அவள் வலியை காட்ட 

“ஹேய் வெய்ட்…ரொம்ப ஸ்ட்ரைன்  பண்ணிக்காத அங்கேயே இரு.” என்றவன்  எழுந்து அவள் நின்றிருந்த இடதுக்கு வந்தான்.

“அம் சாரி நான் கஷ்டப்படுத்திட்டேன். பார்க்கனும்னே தோனிட்டு இருந்தது  அதான்” எனவும் அவனை பார்த்தவள் எதுவும் கூறாது அருகே இருந்த இருக்கையில் அமர அரசு  அவனையும் அமரும் படி கூறினார்.  

  

“கண்ணம்மா நீங்க பேசிட்டு இருங்க  வந்துர்றேன்’ என்றவர்,’ருத்ரா என்ன சாப்பிடறீங்க? “எனக்கேட்க அவன் ஒன்றும் வேணாம் எனக் கூறி மறுக்கவும், 

 

“பயப்புடாம குடிக்கலாம் என்கையால.என்  பொண்ணு போட்டது குடிக்கத்தான் நீங்க யோசிக்கணும் என்றவர் உள்ளே செல்ல  அவரை முரைத்தப் படி அமர்ந்திருந்தாள் கயல்விழி. 

 

கால் வலி இன்னும் அப்படியே தான்  இருக்கு போல.முடிலன்னா எதுக்கிப்போ  எழுந்து வந்த.பார்க்க முடியாதுன்னு சொல்லிருந்தன்னா நான் அப்படியே போயிருப்பேன்” என்றான்.

 

‘எனக்குமே உன்னை பார்க்கணும் போல இருந்ததே’அதை எப்படி அவனிடம் கூற, ஒன்னும் பேசாது கயல் அமர்த்திருக்கவும், அதோடு அவன் முகம் காணாது இருந்தது அவனை உறுத்தியது. 

 

“பயந்துட்டியா? ரொம்ப  சாரி.மதுவுக்கு அந்த பசங்க எதுக்கு பேசினாங்கன்னு  தெரியாம உன்னையும் வரச்சொல்லியிருக்கா.”

 

“அவங்க மேல பிழை எதுவும் இல்லை.  பாவம் அவங்களையே ஏமாத்திதான் கூப்புட்டிருப்பானுங்க போல.நான் வண்டில  ஏறும் போதே எதுவோ தப்பா பட்டது.அதான் ஹனிக்கு மெசேஜ் பண்ணிட்டேன்.இதுக்கு  முன்ன இப்பிடியெல்லாம் நடந்தது இல்ல அதான் கொஞ்சம் பயந்துட்டேன்… “

கயல் பதிலளித்தாள்.

 

“உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். எந்தளவ்குன்னு நேத்து நீ என்னை பார்த்தும்  வெளில வராம உங்கப்பாவை பார்த்ததும் வந்தியே அப்பவே புரிஞ்சிக்கிட்டேன். உன்னை தப்பா நினைக்கல்ல பட் தப்பா  புரிஞ்சிக்கிட்டேன்.என் சூழ்நிலை அப்டி அமஞ்சிருசிச்சி.”

 

அவன் அவள் முகம் பார்த்து கூறி முடிக்கும் வரை அவனையே  பார்த்திருந்தாள்.மனதில் ‘ஆமால்ல உன்கூட நான் டு விட்டு தானே  இருந்தேன்.நீ என்னையும் ஹனியையும் தப்பா புரிஞ்சிட்டு தானே என்னை  பேசின.ஆனா என் மனசு அதையும் தாண்டி உன்னை லவ்வோ லவ்வு பண்ணிட்டு இருக்கே.ஆனா இந்த கோவத்தையே  உன்கிட்ட கண்டினியு பண்ணினேன்னா தான் என்னால உன்ன அவொய்ட் பண்ணலாம் ‘என நினைத்துக்கொண்டு அவனிடம் ஏதும் கூறாது எழுந்து உள்ளே செல்லப்பார்க்க, 

 

கால் வலி,மனம் ஒருநிலை இல்லாது  தவிக்கும் நொடிகள்,ஆறுதல் தேடி தோல் சாயா துணை அருகே இருந்தும் அதை ஏற்க துணிவில்லா தன் நிலை என அனைத்தையும் அந்நொடி வெறுத்தவள் 

கண்கள் கலங்கி ஓரடி எடுத்து வைக்கவும் நிலை தடுமாறி பிடிமானம் இன்றி அவன் கையையே பற்றினாள்.

 

“ஹேய்  கவி… பார்த்து” என அவளை  தாங்கிக்கொண்டவன் முதல்ல இப்டி  உட்காரு என அதே இருக்கையில் மீண்டும்  அமர வைத்தவன் அவள் கால்களை தூக்கி அருகே இருந்த இன்னுமொரு  இருக்கையை இழுத்து அதில் மெதுவாக தூக்கி வைத்தான். 

“என் மேல இருக்க கோவத்தை இப்டி  காமிக்காத ப்ளீஸ்.”என்றான். 

 

அரசு மூவருக்குமாக தேநீர்  எடுத்துக்கொண்டு வந்தார்.கயலின்  கண்கள் கலங்கியிருக்க முகமும் எதுவோ  சரியில்லை என்பதை உணர்ந்தார்.அவர் சமயலறையில் இருக்க இவர்கள் இருவரது  பேச்சு சத்தம் கேட்டாலும் என்ன பேசினர் என்பது கேட்கவில்லை.

 

“என்னாச்சு? “என அவளை பார்த்துக்கொண்டே கேட்க அவள்,அவரை  பார்த்து முறைப்பதை கண்ட ருத்ரா, 

“அவங்க எழுந்துக்க பார்த்தாங்க கால்  வலிசிருக்கும் போல நீங்க பக்கத்துல இல்லைன்னதும் கோவப்பட்டுட்டாங்க ” என்று ருத்ரா அவள் முறைப்பிற்கு விளக்கம் தந்தான். 

 

“ஓஹ் சாரி கண்ணம்மா.” என்றவர் அவள் முறைப்பை கண்டுகொள்ளாது அவனது தேநீரை கொடுத்து விட்டு அவளுக்கும் கொடுத்தார். 

 

அதன் பின்னர் அவனுடன் நேற்றைய  சம்பவம் பற்றி பேசி தெரிந்துக்கொண்டவர்  அவனை பாராட்டவும் தவரவில்லை.

 

இருவரிடமும் கூறிக்கொண்டு  விடைபெற்றவன் வெளியில் வந்து அரசுவோடு இன்முகமாகவே விடை பெற  அவருக்கும் அவனை ஏற்கனவே பிடித்திருக்க,இபோது இன்னும் ஏதோ ஒருவகையில் அவரை ஈர்த்தான். அவனுக்கும் அவர் மேல் ஒரு வித பிணைப்பை உணர்ந்தான்.வண்டியருகே போகும் போது தான் அவன் அலைபேசி ஒலிப்பது உள்ளிருந்து கேட்க அவனும்  உள்ளேயே வெச்சுட்டு வந்துட்டேன் போல எடுத்துட்டு வரேன் எனஅவனே உள்ளே சென்றான். 

 

அதுவரையில் கயல் அமர்ந்த இடத்திலேயே  இருக்க ஒலியுடன் ஒளிரும் அலைபேசியில் அவள் கண்கள் நிலைத்திருந்தது. 

 

திரையில் அவனும் அவளும் கம்பனி   பார்ட்டியின் போது இருவரும் ஒன்றாக  நடனமாடும் போது எடுக்கப்பட்ட படம்.அவன்  தோள்களில் அவள் கை முகமோ அவனை பார்த்திருக்க அவனும் அதற்கு ஈடாக  அவளை காதல் பார்வையுடன் பார்திருந்தான்.பக்கவாட்டில் இருந்து எடுக்கப்பட்ட படமது.. 

 

அவன் போனை கையில் எடுக்கவும்  அவனை நிமிர்ந்து பார்க்க, 

“டேக்  கேர்…ஸ்ட்ரைன் பண்ணிக்காத”  என்றவன்,அவள் கன்னத்தில் நடுவிரலோடு  சேர்ந்து அடுத்த இரு விரல்கள் கொண்டு தட்டியவன், 

“எல்லாத்துக்கும் ரொம்ப சாரி” என்று விட்டு வரேன்” என்று விட்டு மூடியிருந்த அவள் கண்களை பார்க்க,’தன்னை பார்க்கவும்  அவளுக்கு பிடிக்கவில்லையா?’ என்றெண்ணியவன் மனம் நோக, திரும்பியும் பாராது சென்றான்.

 

அவன் கன்னம் தொடவும் கண்மூடியவள்  அவன் செல்லும் நடை சத்தத்தில் கண்திறக்க கன்னத்தில் கண்ணீர்  உருண்டோடியது…

 

“லவ் யூ சோ மச் வரு….”என அவள் உள்ளம் சத்தமிட்டு அழைக்க, அது தெரியாத அவன்  நிலை…