கனவு 22

அத்தியாயம்-22

ஒரு வாரம் கடந்தது.. வரதராஜன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். முழு நேர
ஓய்விலேயே வைத்திருந்தனர் அவரை அனைவரும். என்னதான் விக்னேஷுடன்
ஸ்டியோ சென்று வந்தாலும் தந்தையை
கவனித்துக்கொள்ளத் தவறவில்லை கௌசிகா.. கடமையாக அல்லாமல்
அக்கறையாக அவரை விழுந்து விழுந்து கவனித்தாள் கௌசி. சுமதியும் “ஏன் கௌசி அங்க வேலை செஞ்சிட்டு வந்துட்டு நீ இங்க செய்யணுமா.. டயர்டா
இருப்பல விடு.. நான் பாத்துக்கறேன்” என்று சுமதி எவ்வளவு முறை சொல்லியும்
அவள் கேட்கவில்லை.

கல்யாணம் ஆன அடுத்த தினத்தில் இருந்து விக்னேஷ் அறையிலேயே கௌசியும் தங்க ஆரம்பித்தாள்.
கல்யாணம் ஆன அடுத்த நாள்
அறைக்குள் நுழைந்த விக்னேஷ் கௌசி அவனுக்கு முன் உறங்கிக்
கொண்டிருப்பதைப் பார்த்தான். கட்டிலின் மறு பக்கம் சென்று படுத்தவன் உறங்க ஆரம்பித்தான். நள்ளிரவில் தன் மீது ஏதோ இருப்பதை உணர்ந்தவன்
கண்களைத் திறக்க கௌசிதான் அவன் அருகில் படுத்து அவனைக் கட்டி
இருந்தாள். கம்பத்தில் தனிக் கட்டிலில் படுப்பவள் எப்போதும் தலையணையைத்
கட்டியபடியே தூங்கிய பழக்கம்
தூக்கத்தில் எங்கு இருக்கிறோம் என்பதை மறந்து விக்னேஷை தலையணையை என்று நினைத்து அணைக்க வைத்தது.

ஒரு நிமிடம் மூச்சடைத்தது விக்னேஷிற்கு. அவன் மட்டுமே உபயோகப்படுத்த வாங்கியக் கட்டில் என்பதால் கொஞ்சம்
இடம் கம்மியாகத் தான் இருந்தது. அதனால் அவனால் தள்ளியும் படுக்க முடியவில்லை. இனித் தள்ளிப் படுத்தால் கீழே தான் விழ வேண்டும் அவன். அவனைக் கட்டி கழுத்தில் வளைவில்
கௌசி முகம் புதைத்திருக்க அவளின் மூச்சுக்காற்று அவனின் கழுத்தில் பட்டு
அவனை சித்தம் கலங்கச் செய்தது. கைகளை இறுக மூடியவன் தன் இளமை
உணர்வுகளுக்கு சங்கிலி போட்டுக் கட்டினான். கௌசி முன்னால் பட்ட கஷ்டம் கண் முன் வர அவன் உணர்வுகள்
அடங்கியது உண்மை தான். அப்புறம் அவனுக்கு எங்கே தூக்கம் வரும்.. மூன்று மணி வரை முழித்தே கிடந்தான். மூன்று மணிக்குப் பிறகு கௌசி அவனை விட்டுத் தானாக விலக தூக்கம் அவன்
கண்களைத் தழுவியது.

அடுத்த நாள் ஸ்டியோவில்
ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான் விக்னேஷ் கௌசிக்கு.
கௌசியை மேற்பார்வை பார்க்க வைத்தவன் சில அடிப்படை விஷயங்களைக் கற்றுத் தந்தான். விக்ரமிடமும் சொல்லி வைத்திருந்தான்.
பிறகு ஆர்டர்ஸ் அன் ஆட்ஸ் வரும் போது எப்படிப் பேசணும்.. எந்த மாதிரிப்
பேசினால் கஸ்டமர்ஸ்க்குப் பிடிக்கும் என்று ஒன்றையும் மிச்சம் வைக்காமல் சொல்லித் தந்தான். எல்லாவற்றையும்
கரெக்டாகக் கேட்டுத் தலை ஆட்டினாள் கௌசி.

மேலும் ஸ்டியோவில் விக்ரமிடம் நல்ல நட்பு ஏற்பட்டது அவளுக்கு. விக்ரமிற்கும் கௌசியைப் பற்றி அரைகுறையாகத்
தெரியும்.. அதுவும் மகாலிங்கம் அய்யா எப்போதோ சொன்னதை வைத்து.. ஆனால் அவன் மேலே எதையும் கேட்டு
ஆராயவில்லை. (நாட்டுல விக்ரம் மாதிரி பல பேர் இருந்துட்டா பிரச்சினையே
இல்லைதான்).

“கௌசி.. உள்ள போங்க” என்றான் விக்ரம் திடீரென.

வேலையில் மூழ்கி இருந்தவள் இவனுக்கு என்ன ஆச்சு திடீரென என்று விக்ரமைப்
பார்க்க அவனோ கௌசியை உள்ளே போ என்பதைப் போல சைகை செய்தான். சரி
என்று ஆபிஸ் ரூம் உள்ளே சென்று உட்கார்ந்தவள் அங்கு இருந்த சில செய்தித்தாளை புரட்டினாள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டுத்
திரும்பியவள் விக்ரம் நிற்பதைக் கண்டாள். “ஸாரி கௌசி.. இப்போ வந்த அந்த நாய்(கஸ்டமர்) ஒரு மாதிரி.. அவன் பார்வையே சரி இருக்காது.. அதான்” என்றவன் “இப்போ வாங்க” என்று
அழைத்தான்.

“அவன் அப்படி என்று உனக்கு..” என்ற கௌசி நிறுத்தி.. “நீ வா போ ன்னே பேசு விக்ரம்” என்றாள். அவனின் பார்வையிலும் பேச்சிலும் இருந்த
கண்ணியத்திலேயே அவள் அப்படிச் செய்தது.

“அவன் அப்படி என்று உனக்கு எப்படித் தெரியும் விக்ரம்” என்று பாதியில் விட்டக்
கேள்வியைக் கேட்டாள்.

“அவன் என்னையவே ஒரு மாதிரி தான் பாக்கிறான்” என்று வெளிப்படையாக
முணுமுணுக்க கௌசிக்கு சிரிப்பு வந்தது.

“என்ன உன்னையவா” என்று
குறுஞ்சிரிப்புடன் கேட்டாள் கௌசி.

“அதான் பாரேன்.. ஒரு பொண்ணு பாத்தா கூட நியாயம் இருக்கு” என்றான்
கம்யூட்டரில் வேலை செய்த படியே சிரிப்பு மாறாமல்.

“இல்ல கௌசி.. அவன் பார்வை யாரையுமே சரியா பாக்காது..” என்றவன் அங்கு கூட்டிப் பெருக்க வந்த ஆயாவிடம் “ஆயா இங்க வாங்களேன்” என்று
அழைத்தான்.

“இப்போ ஒரு சொட்டையன் வந்துட்டுப் போனான்ல… அவன் எப்படி” என்றுக்
கேட்டான்.

“அந்தக் கட்டைல போறவனா.. அவன் தலைல இடி விழுந்தா கூட வழுக்கி கீழ உழுந்துறும் தம்பி.. அந்தத் தலைய
வச்சிட்டு அவன் பாக்கற பார்வை இருக்கே யப்பே…” என்றவர் “அவன் கண்ணுல கொள்ளிய வைக்க” என்று
முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டு போனார்.

அந்த ஆயா நகர்ந்த பின் விக்ரமும் கௌசியும் வயிற்றைப் பிடித்துக் வயிறு
வலிக்கக் கொண்டு சிரித்தனர்.
“பாத்தியா.. நம்ம ஆயாவைக் கூட விட மாட்டிறான்” என்று சொல்ல இருவரும் சிரித்த படியே வேலையைச் செய்து
முடித்தனர்.

பின் வெளி வேலையை முடித்துக் கொண்டு விக்னேஷ் வர “வா.. சாப்பிடலாம்” என்று அழைத்தாள் கௌசி.
எதையோ தேடியபடி.

“இல்லடி.. வெளில இன்னொரு வேலை இருக்கு” – விக்னேஷ் தனது ட்ராவில்

“பத்தே நிமிஷத்துல என்ன ஆயிர போது” – கௌசிகா.

“அட நான் வந்து சாப்பிட்டுக்கிறேன்” என்றான் விக்னேஷ்.

“மணி இப்பவே இரண்டரை டா” என்று சொல்ல விக்னேஷிடம் பதில் இல்லை. கௌசிக்குக் கோபம் வந்தது.

“இப்போ நீ வரப்போறியா இல்லையா?” – என்று கௌசி குதிக்காதக் குறையாகக்
கேட்டாள்.

“அம்மா தாயே.. போய் எடுத்து வை டி.. வரேன்” என்றவன் கையைக் கழுவச் சென்றான்.

பின் அவன் வர அவளுக்குப்
பரிமாறினாள். “நீ சாப்பிட்டையா?” என்று
விக்னேஷ் கேட்க.. “ம்ம்” என்பது போலத் தலை ஆட்டினாள். அதற்குள் ஏதோ
ஃபைல் எடுக்க உள்ளே நுழைந்த விக்ரம் விக்னேஷைக் கண்டு “என்னடா.. அதிசயமா இருக்கு.. சாப்பிடலாம் செய்யறே” என்றான். கௌசிக்கு இந்த
விக்ரம் என்னக் கேனத்தனமா பேசறான். ஒரு மனுஷன் சாப்பிடத் தானே செய்வான்
என்று நினைத்தாள்.

விக்னேஷிடம் கேள்வியை வீசிவிட்டு கௌசியிடம் திரும்பிய விக்ரம் “இந்த மாதிரி டெய்லியும் பண்ணு கௌசி..
மதியம் வேலை வேலை என்று சாப்பிடவே மாட்டான்.. இந்த மாதிரிப் பிடித்து வைத்துக் கொள் இவனை” என்று தன்
பேச்சை முடித்தவன் ஃபைலை எடுத்துக் கொண்டுக் கிளம்பினான்.

அவன் போன பின் கௌசி பொறிந்து தள்ளி விட்டாள் விக்னேஷை.. “உனக்கு எங்கு இருந்து இத்தனை பழக்கம் வந்தது. சிகரெட் ஒரு நாளைக்கு பத்துக்கு மேல
போகுதுன்னு பாத்தா.. மதியமும் சாப்பிடறதில்லை போல.. அப்படி சாப்பிடாமல் சம்பாரித்து என்ன செய்யப்
போறே நீ.. இனிமேல் இதை எல்லாம் விடற வழியைப் பார்” என்று திட்டிக் கொண்டே வேலைகளை விக்னேஷ்
எதிரில் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தாள்.

தன் எதிரில் இருப்பவளையே பார்த்துக் கொண்டு சாப்பிட்டு முடித்தவன் எந்திரித்து கையைக் கழுவச் சென்றான்.
பின் வந்து தான் சாப்பிட்ட பாக்சை அவன் எடுக்க “நான் எடுத்து வச்சிடறேன்.. நீ போ” என்று கௌசி வர அவள் கையைப் பிடித்துத் தடுத்தவன் “நீ என் மனைவி தான் இல்லைன்னு சொல்லல.. ஆனா இந்த வேலை எல்லாம்.. அதாவது நான் சாப்பிட்ட பாக்சை நீ எடுக்கிறது எல்லாம்
வேண்டாம் டி.. நான் சாப்பிட்ட பாக்சை நானே எடுப்பேன்” என்று சொல்லிவிட்டுப் போக கௌசிக்கு அவன் செயல்
பெருமிதமாக இருந்தது.

காலம் மாறினாலும் நம் ஆண்கள் அப்படியே நிற்பதை அவள் கண்டு இருக்கிறாள். ஏன் அவள் பார்த்தவரை சிலர் இந்த மாதிரி சொல்லி அவள்
பார்த்ததில்லையே.. இன்னும் தனக்கு சமமாக வந்திடக் கூடாது என்று நினைக்கும் முட்டாள்கள் இன்னும்
இருக்கத்தானே செய்கிறார்கள். அதில்
விக்னேஷ் தன்னை இங்கு கூட்டி வந்து எல்லாம் கற்றுத் தருவது என எல்லாம் அவளை பெருமை அடையச் செய்தது.
அன்று அவளின் மனதில் புதைந்திருந்த காதல் எழத் துளிர் விட ஆரம்பித்தது.

அவள் சிந்தனையில் இருக்கும் போதே உள்ளே வந்த விக்னேஷ் “கௌசி.. ” என்று
அழைத்தான்.

“சொல்லுடா.. ” என்று திரும்பினாள்.

“அடுத்த வாரம் ஒரு எம்.எல்.ஏ வீட்டுக் கல்யாணம் இருக்கு.. ஸோ நீ போய் எல்லாம் கவனிச்சுக்க” என்றான் விக்னேஷ் சாதரணமாக.

“நானா… ” என்றாள் விழியை விரித்து.

“ஆமா.. நீதான்” என்றான் தன் பைக் சாவியை எடுத்த படி.

“எனக்கு எதுவுமே தெரியாது டா.. எம்.எல்.ஏ வீட்டுக் கல்யாணம் வேற.. நான்
வேற மேரேஜ்க்கு போயிக்கிறேனே” என்று கௌசி சொன்னாள்.

“நான் காலைல சொன்ன மாதிரி பண்ணு.. அதுவும் இல்லாமல் விக்ரம் உன்கூட
வருவான்” என்றான் விக்னேஷ்.

“டேய்ய்… ஆனா” என்று கௌசி
ஆரம்பிக்க விக்னேஷ் உள்ளே புகுந்தான்.

“மிஸஸ். கௌசிகா.. நான் உங்க முதலாளி.. நான் சொல்றத செய்றது தான் உங்க வேலை” என்று விக்னேஷ்
முறுக்கிக் கொண்டு சொன்னான்.

விடுவாளா நம்ம புள்ள.. “சரிங்க முதலாளி ஸார்” என்றவள் அவனை மிஞ்சிய
முறுக்கலோடு அறையை விட்டு வெளியே வந்தாள். வந்தவள் தனக்குள்ளேயே விக்னேஷைத் திட்டினாள். வெளியே வந்த விக்னேஷ் “விக்ரம் நான் கிளம்பறேன் அந்த துணிக்கடை ஆட்
விஷயமா” என்றவன்… கௌசியை ஓரக்கண்ணால் பார்த்து “விக்ரம் சிலரைத்
திட்ட வேண்டாம் என்று சொல்லு.. பொறை ஏறுது எனக்கு” என்றுவிட்டுப்
போய்விட்டான். ஆனால் விக்ரம் தான் இவன் என்ன சொல்றான் யாரைச் சொல்றான் என்று ஹேஹேஹே வென
விழித்தான்.

அவன் போன திசையைப் பார்த்தவள் “திமிரு புடிச்சது..” என்று மனதுக்குள்
முணுமுணுத்தாள்.

அன்று மாலை வீடு திரும்பிய
இருவருக்கும் சுமதி டீயையும்
வாழைக்காய் பஜ்ஜியையும் தந்தார் (ஆஹா.. கோயம்பத்தூர் மாலை.. அதுவும் கிணத்துக்கடவு.. டீ.. பஜ்ஜி.. சொர்க்கம் தான்). பின் கௌசி வரதராஜன் வர
அவரிடமும் சேர்ந்து கொண்டு
கலகலப்பாகச் சென்றது.

இரவு அறைக்குள் நுழைந்த விக்னேஷ்.. தலையணையை எடுத்துக் கீழே போட கௌசி முறைத்தாள். “உனக்கு என்னடா பிரச்சினை?” என்று சண்டைக்கு வந்தாள்.

“எனக்கா.. எனக்கு என்ன.. ஏன்டி சண்டைக்கு இழுக்கற என்னை” – விக்னேஷ்.

“நான் தான் அந்தக் கல்யாணத்திற்குப் போறேன்னு சொல்லிட்டேன்ல.. அப்புறம் ஏன் தலையணையை எடுத்துக் கீழே போடறே.. நேத்து மாதிரியே நீ இப்படி..
நான் இப்படி படுத்துக்கலாம் ல” என்றாள் கௌசி. நேற்று நடந்தது நியாபகம் இல்லை போல.

“ஆமா.. நீ போறேன்னு சொல்லிட்டே.. நான் எதுவும் சொல்லலியே டி உன்னை..
நான் கீழே படுக்கிறது வேற ரீசன் இருக்கு” என்றான் முகத்தை திருப்பியபடி.

“அப்படி என்ன ரீசன்.. சொல்லு
கேப்போம்” என்று கௌசி இடுப்பில் கை கொடுத்துக் கேட்க முதலில் தயங்கியவன்
பின் அவளின் நக்கலைக் கண்டு.. உன்னை என்று பல்லைக் கடித்தவன்
மேலே சொன்னான்.

“அதாவதுங்க மேடம்.. என் மாமன் மகள் நைட் தூங்கும் போது மேல கை போட்டுக்
கட்டிப் புடிச்சிக்கறா.. என்னால தூங்கவே முடியல அதான்” என்று விக்னேஷ் சீரியஸ் ரியாக்ஷனில் சொல்ல கௌசிக்கு முகம் எல்லாம் சிவந்து விட்டது (வெட்கமா?? இல்ல அடச்சை இப்படி
பண்டமே-னா?)”

ஒரு நிமிடம் தடுமாறியவள் “இல்… இல்ல.. நா.. நான்.. தலையணை என்று
நினைத்து.. இது.. கம்பத்தில் வந்த பழக்கம்” என்று கௌசி பிச்சு பிச்சு சொன்னாள்.

“ஹே. கூல் டி..” என்ற விக்னேஷ் “எனக்கு டிஸ்டர்ப் எல்லாம் இல்ல.. நீ ஃப்ரீயா படு..
அதுக்குதான்” – என்றான் விக்னேஷ். (அஹாஹாஹான்.. நல்ல கதை விடுடா..
அதுக்கெல்லாம் இல்லை.. கௌசி பக்கத்தில் இருந்தால் பையன் சித்தம் கலங்குது அதான்).

“இல்லடா நான் வேணா கீழே
படுத்துக்கிறேன் நீ மேல படு” என்றாள் கௌசி.

“உன்ன கீழே படுக்க வச்சிட்டு.. நான் ஹாயாயா மேலேயா.. நோ டி” என்றான் விக்னேஷ்.

“அப்போ நான் மட்டும் ஹாயாயா தூங்கறதா?” என்று கௌசி கேட்க “இப்போ என்ன தாண்டி பண்ணனும் உனக்கு” என்றுக் கேட்டான்.

“பேசாம.. நடுவுல பிள்ளோவை
வச்சிடலாம்.. நான் புடிச்சாக் கூட அதைப் புடிச்சுப்பேன்ல” என்று சொல்ல இருவரும்
இரண்டு தலையணையை நடுவில் அடுக்கினர். (வாவ் வாட் எ அறிவாளி கப்பில்ஸ்). வெறும் தலையணை
இருவருக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் காதல் ஈர்ப்பபை நிறுத்திவிடுமா என்ன?

நாட்கள் செல்ல அந்த எம்.எல்.ஏ வீட்டுக் கல்யாணமும் வந்தது. அன்று காலை அதற்குக் கிளம்பிய கௌசி.. தலையை
சீவிக் கொண்டு இருந்தாள். நீழமான அடர் நீல அனார்கலி அவளை ஜொலிக்க வைத்தது. பின் தலையை சீவி முடித்து..
நெற்றிக்கு வகிடிட்டவள் திரும்ப விக்னேஷ் பெட்டில் இருந்த படியே கையை தலைக்கு ஊன்றி அவளைப்
பார்த்துக் கொண்டு இருந்தான்.இல்லை இல்லை அவளை சைட் அடித்துக்
கொண்டு இருந்தான்.

“ஓகே வா டா” – என்று துப்பட்டாவை ஒரு பக்கமாகப் போட்டு அட்ஜஸ்ட் செய்தபடிக்
கேட்டாள் கௌசிகா.

“ஏன்டி… சேரி கட்ட மாட்டியா அவ்வளவா? இல்லை கட்டத் தெரியாதா?” என்று கேட்டான். அவன் கேள்வியில் நிமிர்ந்தவள் அவன் முகத்தில் இருந்த நக்கலைக் கண்டு அவனுக்குப் பதில் அளித்தாள்.

“அதெல்லாம் கட்ட முடியாது.. எனக்கு இதான் புடிச்சிருக்கு” என்றவள் “நீ சீக்கிரம் கிளம்பு டா.. அப்போ தான் அங்க
போக முடியும்… இப்போ காலையிலேயே போனா தான் லோகேஷன் எல்லாம்
மண்டபத்துல பாத்துட்டு.. எல்லாம் செட் பண்ண முடியும்ன்னு விக்ரம்
சொன்னான்” என்றவள் தனக்குத் தேவையானதை எல்லாம் எடுத்து வைத்தாள்.

“நான்லாம் அரைமணி நேரத்தில் கிளம்பீருவேன்” என்று விக்னேஷ் பெருமை அடிக்க “சரி சரி நல்ல தேச்சு
குளிச்சிட்டு வா. டைம் போதுன்னு தண்ணி ஊத்திட்டு வந்திடாதே” என்று
கிண்டலடித்தவள் அவன் திரும்புவதற்குள் அறையை விட்டு வெளியேறி தப்பித்தாள்.

பின் விக்னேஷ் கிளம்பி வர இருவரும் ஸ்டியோவிற்குக் கிளம்பினர். கௌசி அடுத்த நாள் வரை உடுத்த வேண்டிய
உடமைகளோடு அனைத்தும்
எடுத்திருந்தாள். பின் அங்கிருந்து ஒரு டீமே கிளம்ப கௌசியிடம் வந்த
விக்னேஷ் “நீ இன்னிக்கு தைரியமா போடி.. விக்ரம்ட சொல்லியிருக்க.. அவன்
பாத்துப்பான்.. நீயும் எல்லாம் எப்படின்னு பாத்துக்க.. இன்னிக்கு நைட் உனக்கு
அங்கையே தங்க ஏற்பாடு..
மண்டபத்துலையே தனி ரூம்
தந்திருவாங்க.. உனக்கு புடிக்கலைனா சொல்லு நான் வரேன்.. பக்கத்துல ரூம்
ஏதாவது போட்டுக்கலாம்… எப்படியும் நான் காலைல வரது தான்” என்று நீளமாகப் பேசியவனை கண் இமைக்காமல் பார்த்தாள் கௌசி. அவளுக்குத் தெரியவில்லை அவள் கொஞ்சம் கொஞ்சமாக விக்னேஷிடம் தன் காதல் உயிர்ப்பித்துக்
கொண்டிருப்பதை.

“என்னடி.. ஏன் இப்படி நிக்கற” என்று அவளின் பார்வையில் தோளைத் தட்டிக் கேட்டான்.

“ஒன்னும் இல்லடா..” என்றவளிடம் விக்னேஷ் தன் இதழால் அவள் நெற்றியில் முத்திரையைப் பதித்து  “எல்லாம் போகப்போக சரி ஆயிரும் கௌசி” என்றான் அவள் கையைத் தன் கைக்குள் வைத்து.

அதற்குள் அங்கு வந்த விக்ரம் “டேய் டேய் இங்க 5கிலோ மீட்டர் பக்கத்துல இருக்க மண்டபத்துக்கு விட்டா 5 மணி நேரம் பேசுவே போல நீ” என்று கிண்டல் செய்தான்.

“என் பொண்டாட்டி கிட்ட நான் பேசுவேன்.. உனக்கு என்ன டா?” என்று விக்னேஷ்
விக்ரமின் பின் கழுத்தைச் சுற்றிப் பிடித்தான்.

“சரி.. என் கழுத்த விடு.. எங்காவது ஒடஞ்சிருச்சுன்னா அப்புறம் வரப் போற பொண்டாட்டி கிட்ட உன்ன மாதிரி குனிஞ்சு நெத்தில முத்தம் குடுத்து கொஞ்ச முடியாது” என்று சீரியஸான
முகத்துடன் பேச விக்னேஷிற்கு வெட்கம்
வந்து விக்ரமைக் கட்டிப் பிடித்தான். “என்னைய ஏண்டா கட்டி புடிக்கற..” என்று தள்ளி விட்டவன் அந்த அறையை விட்டு வெறியேறினான்.

பின் கல்யாண மண்டபத்திற்குச் சென்று
இறங்க எல்லோரும் தேவையான எல்லாவற்றையும் கீழை இறக்கினர். பின்
விக்ரமும் கௌசியும் சென்று
மண்டபத்தைச் சுற்றி எங்கெங்கே கேமரா வைக்க வேண்டும்.. எங்கெல்லாம் பெண் மாப்பிள்ளையை தனியாக போட்டோ எடுக்க வேண்டும்.. என எல்லாவற்றையும் முடிவு செய்தனர்.

ஈவ்னிங் ரிசப்ஷன் ஆரம்பிக்க
எல்லோரும் பரபரப்புடன் இயங்க ஆரம்பித்தனர். எம்.எல்.ஏ வீட்டுக் கல்யாணம் என்பதால் அதற்குத் தகுந்த
பிரம்மாண்டமும் பணக்காரத் தன்மையும் இருந்தது. கௌசியும் விக்ரமும்
எல்லாவற்றையும் பார்வையிட்ட படியே வந்தனர்.. வரவேற்பில் இரண்டு
கேமராஸ்.. வீடியோஸ்.. உள்ளே நான்கு பக்கங்களிலும் கேமராஸ் அன் வீடியோஸ்
மேலும் இரண்டு ட்ரோன் கேமரா பறந்து கொண்டு இருத்தது. எல்லாம் நல்ல
படியாகவே சென்றது.

மணி பதினொன்று ஆகியும் கூட்டம் குறையவில்லை. தன் போனின் சத்தம் கேட்டு எடுத்த கௌசி திரையில் விக்கா
என்ற பெயரைப் பார்த்து அட்டென்ட் செய்து காதில் வைத்தபடியே வெளியே
வந்தாள். கூட்ட நெரிசலில் சிக்கி எப்படியோ வெளியே வந்தவள் “சொல்லுடா” என்றாள்.

“என்ன கௌசி.. எப்படிப் போது எல்லாம்” என்று வினவினான் விக்னேஷ்.

“குட் டா.. சாப்பிட்டையா?” என்று கேட்டாள்.

“இல்லடி நீ..?” என்று அவன் வினவ “நீ ஏன் இன்னும் சாப்பிடல..” என்று கௌசி
அதட்டினாள்.

“எல்லாம் உன்கூட உட்கார்ந்து சேர்ந்து சாப்பிடத்தான்” என்று காதின் அருகில் கேட்ட விக்னேஷின் குரலில் கௌசி
அவசரமாகத் திரும்பினாள்.

திரும்பியவள் அவன் மேலே இடித்து நிற்க “நீ எங்கடா இங்கே?” என்று வினவினாள்.

“உன்ன தனியா விட முடியல டி.. அதான்” என்றவன் கௌசியின் கைகளை பிடித்துக் கொண்டு உள்ளே சென்றான்.

ரிசப்ஷன் முடிந்த பின் தான் விக்ரம், கௌசி, விக்னேஷ் மற்றும் உடன் வந்த படை என அனைவரும் உட்கார்ந்து
சாப்பிட்டனர். கௌசிக்கு காலை வந்த போதே எம்.எல்.ஏ வின் மச்சான் அவள் தங்கும் அறையைக் காண்பித்திருந்தார். அனைவரும் கலைய விக்னேஷ் சென்று தன் உடைகளை எடுத்து வந்தான்.
(காலையில் பிரம்மமுகூர்த்தத்தில் முகூர்த்தம் என்பதாலே இரவு அங்கு தங்க ஏற்பாடு). பின் கௌசியும் விக்னேஷும்
சென்று அந்த அறைக்குள் முடங்க இருவருமே அலுப்பில் சீக்கிரம் உறக்கத்தைத் தழுவினர்.

அடுத்த நாள் நடக்கப்போவதை
அறியாமல் இருவருமே ஆழ்ந்த
உறக்கத்தில் ஆழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!