கனவு 24

அத்தியாயம்-24

பின் கீழே கௌசி வர வியாஹாவும் எழுந்து விக்னேஷின் மடியில்
உட்கார்ந்தபடி எதையோ
பேசிக்கொண்டிருந்தாள். சுமதி
காஃபியைக் கொண்டு வர “கௌசி.. நீ இன்னிக்கு ஸ்டியோ வர வேண்டாம்.. வியா கூட இரு” என்று சொல்ல தலையை ஆட்டினாள் கௌசி.

நாட்கள் கடந்து வேகமாக நகர்ந்தது. சந்தியாவிற்குக் குழந்தையும் பிறந்தது. போய் பார்க்கச் சென்ற போது விக்னேஷ் குழந்தையை ஆசையாகப் பார்த்தது கௌசி கவனித்தாள். ஏனோ குற்ற
உணர்வு வந்தது அவளுக்கு.

வீட்டிற்கு வந்து அறைக்குள் நுழைந்தவள் “உனக்கு குழந்தைனா புடிக்குமா டா?”
என்று கேட்டாள்.

“யாருக்கு தாண்டி புடிக்காது.. எனக்கு ரொம்ப பிடிக்கும்.. நம்ம வியா குட்டி பிறந்தப்போ கூட ரொம்ப க்யூட் தெரியுமா?” என்றவன் அப்போது தான்
இவள் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டாள்
என்று யோசித்து கௌசியிடம்
திரும்பினான்.

அவள் கண்களோ கலங்கி இருக்க “சாரிடா” என்றாள் குற்ற உணர்வில்.

“ஏய் எதுக்கு டி அழறே.. எதுக்கு சாரி” என்று வினவியவன் அவள் அருகில் வந்தான்.

“வந்து.. எனக்கு உன்ன புடிச்சிருக்கு டா.. ஆனா என்னால ஏதோ முழு மனசா
இருக்க முடியல.. ஏதோ ஒண்ணுத் தடுக்குது..” என்றவளை அணைத்தான்
விக்னேஷ்.

“லூசு.. இதுக்கு எதுக்குடி அழறே.. நமக்கு என்ன அறுபது வயசா ஆச்சா.. இன்னும்
வயசா இருக்கு.. நான் வெயிட் பண்றேன்.. இல்லைனாலும் கடைசி வரை இப்படியே
இருந்து விடலாம்” என்றவனின் சொற்கள் அவளை உருக்கியது.

அவளது குற்ற உணர்வுக்கு இன்னொரு காரணமும் இருந்தது.. அது அன்று வியா
வந்த அன்று நடந்த ஒன்று.

வழக்கம் போல ஸ்டியோவில் இருந்து ஏழு மணிக்கு வரும் விக்னேஷ் அன்று ஐந்திற்கே வந்தான். வியாஹா ஹாலில்
உட்கார்ந்து அவள் பாட்டுக்கு ஏதோ ஒரு நோட்டில் வரைந்து கொண்டு இருந்தாள். விக்னேஷ் உள்ளே நுழைய “ஹாலிலேயே உட்காரு டா.. பெட்ரூம் போகாதே இப்போது தான் துடச்சு விட்டிருக்கேன்”
என்றாள் கௌசி.

“ம்ம் சரி” என்றவன் மாலை மலரை எடுத்தான். ஆனால் அவனை நல்ல பிள்ளையாக இருக்க விடாமல் கௌசியின் சேலை வேலையைக்  காட்டியது. சேலையை லேசாகத் தூக்கி இடுப்பில் சொறுகியபடி கௌசி மாப்பில்
ஹாலைத் துடைக்க அவள் இடுப்பின் பகுதி இடது பக்கம் முழுதும் அவனுக்குக் காட்சி அளித்தது.

கண்களைத் திருப்ப முடியாமல் அவன் பார்க்க வியா அருகில் இருப்பதை உணர்ந்தவன் நியூஸ் பேப்பரை நன்றாக
விரித்து வைத்து அதில் மூழ்க
முயற்சித்தான். ஆனால் அவனால் முடியவில்லை.

“ஐயோ குஷி பட விஜய் நிலைமை இப்போ தான் புரியுது டா சாமி” என்று
கண்களை இறுக மூடினான்.

தன்னோடு வாதாடித் தோற்றவன் லேசாக நியூஸ் பேப்பரை இறக்கி கௌசியை..
இல்லை இல்லை அவள் இடுப்பைக் கவனித்தான். அவ்வப்போது வியாவையும் பார்த்தான் வியா தன்னை
கவனிக்கிறாளா என்று. வியாவோ கர்மமே கண்ணாக நோட்டில் ஒரு சூரியனை வரைந்து கொண்டு இருந்தாள்.
பின் தைரியம் வந்தவனாக கண்களை தனக்கு இஷ்டமான இடத்திற்கு கொண்டு
சென்றான்.

கௌசி ஹாலை துடைத்து முடித்துவிட்டு சமையல் அறைக்குள் செல்ல.. தன்னை
மீறி எழுந்தவன் வியாஹாவைப் பார்த்தான். அவள் சூரியனுக்குக் கீழே
வீடு வரைய ஆரம்பித்திருந்தாள். பின்
மெதுவாக சமையல் அறைக்குள் நுழைந்தவன் கௌசியின் பின் சென்றான். அவளோ எதையோ எடுத்து
கிட்சன் சின்க்கில் வைத்துக்
கொண்டிருந்தாள். விக்னேஷிற்கு வேர்க்கத் துவங்கி நெற்றியில் இருந்து
வழிந்தது. மோகப் பிடியில் இருந்தவன் கௌசியின் பின் சென்று அவளை பின் இருந்து அணைத்து விட்டான்.

திடுக்திட்ட கௌசி திரும்ப ஒரு நிமிடம் அவளிடம் இருந்து விலகிய விக்னேஷ் மீண்டும் அவளை இறுக முன்னால்
இருந்து அணைத்தான். ஒரு காலத்தில் இதை எல்லாம் நினைத்துக் கனவு கண்டவள் தான் கௌசி. ஆனால் அவள்
மனதில் இருந்த கேள்வி அவளைத் தடுத்தது. ஆமாம் விக்னேஷிற்கு திடீரென எங்கிருந்து வந்தது இந்தக்
காதல் என்று. மேலும் அவள் உடல் தன்னை அறியாமல் நடுங்கியது. அவளை அணைத்திருந்த விக்னேஷின்
கரங்கள் அவள் இடைப் பகுதிக்குச் செல்ல அவன் கையைப் பிடித்தவள் “பயமா இருக்கு டா.. ப்ளீஸ்” என்றவள்
அவன் மார்பிலேயே புதைந்து அழ ஆரம்பித்தாள்.

கௌசியின் பேச்சையும் அழுகையையும் உணர்ந்தவன் “ச்ச என்னப் பண்ணிட்டு
இருக்கேன்” என்று தன்னைத் தானே கடிந்தவனுக்கு அவள் அழுகை வேறு ஏதோ செய்தது.

“கௌசி.. சாரிடி.. ஏதோ தெரியாம.. ச்சு.. சாரி டி.. இனிமேல் இப்படி நடக்காது..
ப்ராமிஸ்” என்று கெஞ்சினான் அவள் அழுகையை நிறுத்த.

“நான் இதுக்கு தான்டா.. சொன்னேன் வேற பொண்ணை கல்யாணம்
பண்ணிக்கோன்னு.. இப்போ பாரு.. என்னால உனக்கும் தானே கஷ்டம்” என்று கௌசி பேச விக்னேஷிற்கு கோபம் வந்தது.

“ஏய் என்னை என்னன்னு நினைச்சுட்ட.. வெறும் உடம்புக்கு அலையுறவன்னா..
இங்க பாரு இப்போ நடந்தது என் தப்பு தான்.. அதுக்குன்னு நீ வேண்டாம்ன்னு சொன்ன அப்புறமும் உன்ன கஷ்டப்படுத்த மாட்டேன்.. நானும் மனுஷன் தான் டி.. இப்படி எல்லாம் நீ பேசறது என்ன அசிங்கப் படுத்தற மாதிரி இருக்கு கௌசி” என்று அவளிடம் ஆதங்கப்பட்டான். “அடுத்தவள கல்யாணம் பண்ண சொல்றவ நேத்து ஏன்டி கௌசிகா விக்னேஷ்வரன்னு அவ்ளோ கர்வமா சொன்னே..” என்று கேட்டவன் “காரணம் உனக்குள்ளும் இருக்கு ஆனா என்கிட்ட நெருங்க தானே தயக்கம்.. எல்லாம் சரி ஆகிவிடும்ன்னு நம்பிக்கை வை டி” என்று அவளை சமாதானம் செய்தான்.

“இனி நீயே என்கிட்ட வர வரைக்கும் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் டி” என்று அவளுக்கு வாக்களித்தவன்
வெளியே வர சுமதி பக்கத்தில் இருந்த கோவிலுக்கு சென்றுவிட்டு வந்து உள்ளே
நுழைந்து கொண்டு இருந்தார். தான் அவனது உணர்வுகளுக்கு மதிப்பு
அளிக்காமல் இருந்ததில் வருந்தினாள் கௌசி.

அந்தக் குற்ற உணர்வில் இருந்தவளுக்கு சில நாளில் சந்தியா குழந்தையைப் பார்த்து வந்த அப்புறம் அது தலை தூக்கியது. விக்னேஷிற்குமே அது வருத்தமாக இருந்தாலும்
கௌசியின் முன் அவனுக்கு எதுவும் பெரிதாகப் படவில்லை.

ஒருவழியாகக் கௌசியைச் சமாதானம் செய்தவன் “கௌசி நான் இன்னிக்கு நைட் லேட்டாகத் தான் வருவேன்”
என்றான் விக்னேஷ்.

“ஏதாவது வேலையா?” – கௌசி.

“இல்லை.. நம்ம மகாலிங்கம் தாத்தா வீட்டிற்கு தான்.. ஒரு குட்டி பார்ட்டி.. நான்.. தாத்தா.. விக்ரம்.. ஜீவா” என்றான்
விக்னேஷ்.

கௌசியின் பார்வையை உணர்ந்த விக்னேஷ் “நீ நினைக்கற மாதிரி இல்லைடி. லைட்டா தான்” என்று சொல்ல
கௌசி ஆரம்பித்தாள்.

“சரி ஆனா.. ஜீவா ட்ரிங்க் பண்ணிட்டு சிட்டிக்குள்ளே போக வேண்டாம்.. முடிச்சிட்டு அவன இங்கேயே கூட்டிட்டு
வந்திடு.. காலைல போகட்டும்” என்று சொல்ல தலையை ஆட்டினான்.

அன்று இரவு பத்து மணிக்கு எல்லோரும் மகாலிங்கம் அய்யா வீட்டில் கூத்தடிக்கத்
தயாராக இருந்தனர். மகாலிங்கம் அய்யா கூட டி சர்ட் முட்டி கால் வரை இருந்த நைட்
பேண்ட் போட்டிருந்தார். மகாலிங்மும் விக்னேஷும் தயாராக இருக்க… விக்ரமும்
ஜீவாவும் பாட்டில்களோடு வருகை தந்தனர். “என்னடா இவ்ளோ.. எவ்வளவு ஆச்சு” என்று வழக்கத்திற்கு மேல்
அதிகமாக இருந்த சரக்கை பார்த்த விக்னேஷ் கேட்டான்.

“இன்னிக்கு ஷேர் இல்லடா.. என்னுடைய ட்ரீட் தான்” என்று ஜீவா சொல்ல “என்ன மாமா ஆனதுக்கா..” என்று மாடிப்படி
ஏறியபடியே விக்னேஷ் கேட்டான்.

“இல்ல” என்பதைப் போலத் தலை நிமிர்ந்து அசைத்தான் ஜீவா விக்னேஷின் பின்னோடு படி ஏறியபடி.

“அப்புறம்…” – விக்னேஷ்.

பின் நான்கு பேரும் ரவன்டாக உட்கார்ந்த பின்னார் ஜீவா மூவரையும் பார்த்து “வியாஹா குட்டிக்கு தங்கச்சி பாப்பா
வரப்போகுது” என்றான் ஜீவா
வெட்கத்தோடும் கம்பீரத்தோடும்.

எல்லோரும் வாழ்த்துகளைத் தெரிவிக்க “இன்று எல்லாம் என் ட்ரீட் தான்.. ஸோ நோ ஸேர்” என்று விஸ்கியை எடுத்து எல்லோருக்கும் ஊற்றினான் ஜீவா.

வழக்கம் போல தனக்கு ஒரு கிளாஸை ஊத்திக் கொண்டு உறிய ஆரம்பித்தார் மகாலிங்கம். அவருக்கு அவ்வளவு தான்.. அதற்கு மேல் உள்ளே போகாது. விக்ரம்
தான் சில சமயம் மொடாக் குடிகாரனாகக் குடித்துவிட்டு மகாலிங்கம் வீட்டிலேயே
கிடப்பான். விக்னேஷும் ஜீவாவும் அளவு தான் எப்பவும்.

என்னதான் ஜீவாவிற்கு வாழ்த்து தெரிவித்தாலும்.. விக்னேஷின் மனம் முழுதும் கௌசியிடமே இருந்தது.
அவனுக்கும் குழந்தை ஆசை பிறந்தது. அதற்கு என்று கௌசியை கஷ்டப்படுத்தவும் மனம் வரவில்லை.. ஒருவித இயலாமையுடன் உட்கார்ந்து
மதுவை அருந்திக் கொண்டிருந்தவனிடம்
விக்ரம் வாயை விட்டான். “நீ எப்போடா விக்னேஷ் குட் நியூஸ் சொல்லப்போறே”
என்று விக்ரம் விக்னேஷிடம் கேட்டான்.

“இவன் இன்னும் இரண்டு மாசத்துல சொல்லிடுவான்” என்று சிரிக்க ஜீவா சிரிக்க “நீங்க வேற இன்னும் ஒரு மாசம் போதும்.. இரண்டு பேரு என்னம்மா பேசிக்கறாங்க… ஒருத்தர ஒருத்தர்
பாத்துக்காறாங்க” என்றான் விக்ரம். (டேய் அவங்க இரண்டு பேரும் பாத்துட்டு மட்டும் தான் இருக்காங்க).

“டேய்… அப்படியா.. சொல்லவே இல்ல” என்று ஜீவா கேட்க…. விஸ்கி பாட்டிலை எடுத்தவன் பாதி பாட்டிலை முழுதாகக்
குடித்து உள்ளே இறக்கினான்.

“டேய் டேய்… என்னடா பண்ணற” என்று ஜீவாவும் விக்ரமும் மாறி மாறி அவனிடம்
கத்தினர்.

பாதி பாட்டிலை குடித்து முடித்து கீழே வைக்க அவனுக்கு மேல் இருந்து கீழ் வரை போதை ஏறியது. கண்கள் எல்லாம்
மங்கலாகத் தெரிந்தது. அரை ட்ரௌசர் டி சர்ட் போட்டிருந்தவன் தள்ளாடியபடியே எழ “எங்கடா போற” என்று பிடிக்க வந்தான் ஜீவா.

“ஜீ… ஐ லவ் யூ டா” என்று போதையில் பேசியவன் அவனது கன்னத்தில்
முத்தத்தைத் தர “டேய்.. என்னடா பண்ணற” என்று ஜீவா தன் கன்னத்தைத்
தடவி பார்த்தபடியே கேட்டான்.

“அப்போ என் மேல உனக்கு பாசம் இல்லையா.. நான் உனக்கு முத்தம் தரக் கூடாதா?” என்று போதையில்
தள்ளாடியவன் ஜீவாவையும் பிடித்து தள்ளாட வைக்க அவனுடன் சேர்ந்து எட்டு
போட்டுக் கொண்டிருந்தான் ஜீவா.

விக்ரம் அருகில் வர “மச்சா.. உனக்கு ஐ லவ் யூ” என்று இருவரையும் இரண்டு
கைகளால் இரு பக்கம் பிடித்தவன் நன்றாகத் தள்ளாடினான். விக்ரமிற்கும்
ஜீவாவிற்கும் சிரிப்பு வர இருவரும் ஒரே நேரத்தில் “லவ் யூ டா விக்னேஷ்” என்று
பிடித்து தங்களின் நட்பையும்
பாசத்தையும் அவனிடம் கொட்டினர்.

“தாத்தா” என்று மகாலிங்கம் அய்யா அருகில் சென்றவன் அவரையும் விட்டு வைக்காமல் ஒரு முத்தத்தைத் தந்து “ஐ
லவ் யூ தாத்தா” என்று ஒரு முத்தத்தைத் தந்து அவரிடம் உட்கார “விக்ரம்.. இவன நான் கூட்டிட்டு போறேன்” என்று ஜீவா விக்னேஷை அழைத்துக் கொண்டு சென்றான்.

வீட்டிற்கு வந்து காலிங் பெல்லை அடிக்க அவர்கள் வருவார்கள் என்று காத்திருந்த
கௌசிகா.. வந்து கதவைத் திறந்தாள். விக்னேஷைப் பார்த்து அதிர்ந்தவள்
“கௌசி எப்போமே இப்படி ஆகாது.. இன்னிக்கு தான் இப்படி குடிச்சிட்டான்” என்று சொல்ல அவர்களுக்கு வழியை
விட்டு நகர்ந்து நின்றாள் கௌசி.

உள்ளே நுழைந்த விக்னேஷ்
பொறுப்பான பிள்ளையாக “இருடா… கதவைப் பூட்டணும்” என்று கௌசிக்கு முன்னால் சென்று சோபாவின் பக்கத்தில்
இருந்த சாவியை எடுத்தவன் கதவைப் பூட்ட வந்தான். ஆனால் கண்கள் வேறு
மங்கலாகத் தெரிய அவனால் சாவி துவாரத்தில் சாவியை நுழைக்க முடியவில்லை. சாவி துவாரத்தில் வைக்க முடியாமல் அவன் கை அதை சுற்றியது.

சாவியை விக்னேஷிடம் இருந்து பிடுங்கியவள் “நீ இதுக்கு ஆரத்தி எடுத்தது போதும்.. போ போய்த் தூங்கு”
என்றாள் கௌசி கோபமாக.

பின் விக்னேஷ் உள்ளே சென்றுவிட எதார்த்தமாக ஜீவா.. மகாலிங்கம் அய்யா
வீட்டில் நடந்ததைச் சொன்னான். கௌசிக்கு முதலில் வந்த சிரிப்பு
தன்னால் நின்றது. ஜீவாவிற்கு
வாழ்த்துகளைச் சொல்லி விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தவளுக்கு அவன் ஏன்
இப்படிக் குடித்தான் என்று தெரிந்து விட்டது. தண்ணியைக் குடித்தவள் ஒரு
முடிவு எடுத்தவளாக ஹாலிற்கு வர ஜீவா தான் மொட்டை மாடி அறைக்கு செல்வதாக கூறிச் சென்று விட்டான்.

கௌசி அறைக்குள் நுழைய விக்னேஷ் எதையோ கப்போர்டில் தேடிக்
கொண்டிருந்தான். அவனைப் பிடித்து கௌசி இழுக்க அவன் அவளின் திடீர் செயலில் கௌசி மேல் விழ இருவரும்
பெட்டில் விழுந்தனர். கௌசி மேல் விழுந்தவன் அவளின் கழுத்தில் புதைந்தான். அவனுக்கு எல்லாம் மங்கலாகத் தெரிந்தது. “நீ இப்படிலாம் கஷ்டப்படாத டா.. ப்ளீஸ்.. எனக்கு இப்போ எந்த ப்ராப்ளமும் இல்லை.. எனக்கு ஓகே” என்று கௌசி சொல்ல விக்னேஷ் அவளிடம் இருந்து நகர்ந்து மறுபக்கம் படுத்தான்.

கௌசி அவனைப் பார்க்க “இப்படிலாம் எனக்கு எதுவும் வேண்டாம் டி.. உன்னோட
உடம்பு மட்டும் எனக்கு வேண்டாம்.. ஐ நீட் யூ வித் யுவர் லவ்..நான் வெயிட் பண்றேன்..” என்றவன் “ஐ லவ் யூ கௌசிக்” என்று மறக்காமல் அவளுக்கு
கன்னம்.. நெற்றி என முத்தத்தைத் தந்து அவளை அணைத்தபடியே தூங்கி
விட்டான். கௌசி அவனின் பேச்சில் அதாவது இந்த போதையிலும் அவன் பேசியது அவள் மேல் இருந்த காதலை
பறைசாற்ற அவனை அணைத்த படியே தூங்கிப் போனாள் கௌசி.

காலையில் கௌசிக்கு முன்னால் கண் விழித்தவன் தன் மேல் சாய்ந்த படி
உறங்கிக் கொண்டிருந்த கௌசியைக் காண்டான். அவள் தூக்கம் கலையாமல்
அவளை விட்டு விலகி எழுந்தவன் அவளை ஒரு தரம் பார்த்துவிட்டு முகத்தைக் கழுவினான். நேற்று அடித்த
சரக்கு இன்னும் இறங்காமலே தான் இருந்தது அவனுக்கு.. எப்படியும் ஜாக்கிங் போக முடியாது என்று நினைத்தவன்
பேசாமல் மாடிக்குப் போய் காலை நேரத் தென்றலை அனுபவிக்கலாம் என்று
சென்றான். நேற்று நடந்தது
ஒவ்வொன்றாக நியாபகம் வந்தது அவனுக்கு.. பாட்டிலை வாயில் கவுத்தது..வீட்டிற்கு வந்தது.. கௌசி ரூமில் பேசியது என அனைத்தும் கண் முன் வந்து நின்றது. அவளை எப்படி மாத்தலாம் என்று யோசித்தவனுக்கு விடை
தெரியவில்லை.

மேல் அறையின் கதவு சத்தம் கேட்டு விக்னேஷ் திரும்ப ஜீவா நின்றிருந்தான். “என்னடா.. ஜாக்கிங் போகலையா நீ”
என்று கொட்டாவியை வெளி
விட்டபடி ஜீவா வந்தான்.

“இல்லை டா.. நேத்து அடிச்சதே தெளியாத மாதிரி இருக்கு” என்றவனிடம்… “என்னடா
விக்கி. என்ன காலங்காத்தால இவ்வளவு யோசனை?” என்று வினவினான்.

“ஒன்றுமில்லை டா… வேலை விஷயமாக டா” – விக்னேஷ்.

“எதையும் யோசிக்காதே அதிகமா.. வீணா குழப்பம் தான் மிஞ்சும்.. அது போக்குல
விட்ரு” என்று ஜீவா சொல்ல அது ஏதோ தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கே சொன்ன மாதிரி இருந்தது அவனுக்கு.

“ம்ம்” என்றவன் பேச்சை வேறு திசைக்கு மாற்றினான்.

இருவரும் கீழே வர படி கைப்பிடியை பிடித்த படி இருவரையும் முறைத்துத்
கொண்டு நின்றாள் கௌசிகா. இவளைப் பார்த்த இருவரும் தலையைக் குனிந்து கொண்டு கீழே வர… முதல் படிக்கு
அருகில் நின்று அவர்களை மறைத்தவள் “ஏன்டா.. உங்க இரண்டு பேருக்கும் அறிவே இல்லையா?” என்று திட்டினாள்.

“இரண்டு பேரும் நைட் வந்தீங்க சரி.. வீட்டுக்கு என்னத்த எடுத்துட்டு வந்திருக்கீங்க பாருங்க?” – என்று வீட்டின்
முன் கூட்டிச் சென்றவள். செருப்பு விடும் இடத்தைக் காண்பித்தாள்.

நேற்று விக்னேஷ் வரும் போது காலி பாட்டிலையும் கையில் எடுத்திருந்தான். அதை ஜீவாவும் கவனிக்கவில்லை. வந்து வெளியில் செருப்பை விடும் போது பாட்டிலையும் அழகாக இரண்டு செருப்பிற்கு நடுவில் வைத்துவிட்டான்
விக்னேஷ். “பாரு.. இவன் செருப்புக்கு அவார்டு மாதிரி வச்சிருக்கான்” என்று திட்டியவள் “இந்தக் கருமத்தை எடுத்து வெளிய போடுங்க டா” என்று திட்டிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.

இருவரும் ஒருவருக்கொருவர் சிரித்துக் கொள்ள விக்னேஷ் பாட்டிலை எடுத்து வெளியே வீசிவிட்டு வந்தான்.

அவன் காலத்தின் மீது நம்பிக்கை வைக்கலாம் என்று முடிவு செய்ய விதியே அவர்களை சேர்க்க முன் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!