கனவு 25

அத்தியாயம்-25

வழக்கம் போல ஆபிஸில் வேலைகளைச் செய்த கௌசிகா.. எழுந்து விக்னேஷின் அறைக்குச் சென்றாள்.

“விக்கா… அந்த எம்.எல்.ஏ வீட்டுக் கல்யாணம் வீடியோஸ் ரெடி.. பட் போட்டோ இன்னும் நாலு நாள் ஆகிவிடும் டா.. நீ யார் கிட்ட சொல்லணுமோ
சொல்லிடு” என்றாள்.

“ம்ம்” – விக்னேஷ்.

கதவு தட்டும் ஓசைக் கேக்க “யெஸ்… ” என்றான் விக்னேஷ்.

உள்ளே வந்த விக்ரம் “டேய் யாரோ உன்னைப் பார்க்க வந்திருக்காரு டா. ஏதோ தனியா பேசனுமாம்” என்று விக்ரம் சொல்ல விக்னேஷ் “பெயர் என்ன?” என்று வினவினான்.

“எதோ தேவராஜ்-ன்னு சொன்னார்” – விக்ரம்…

“தேவராஜா..” என்று புருவம் சுருக்கிய விக்னேஷ் “அப்படி யாரும் எனக்குத்..” என்று முடிப்பதற்குள் கௌசி இடையில் புகுந்தாள்.

“விக்கா.. குருவோட அப்பா” என்றாள் இறுகிய முகத்துடன்.

கௌசியின் முகத்தை விட விக்னேஷின் முகம் இரண்டு மடங்கு இறுகியது. விக்ரமைப் பார்த்தவன் “சரி போய் வர
சொல்லு” என்றான்.

அவர் உள்ளே வர கௌசி அப்போது தான் அவரின் தோற்றத்தைக் கவனித்தாள்.
மகனின் இறப்போ என்னமோ
தெரியவில்லை.. அவரின் முகத்தில் உயிர்ப்பே இல்லை.. கொஞ்சம் சோர்வாகவும் தெரிந்தார்.

வந்தவரை “வாங்க” என்று அழைத்த விக்னேஷ் “உட்காருங்க சார்” என்றான்.

அவர்களது அழைப்பை ஏற்று தேவராஜ் உட்கார மூவருமே எதுவும் பேசவில்லை. கையில் ஏதோ பேக்கை வைத்திருந்த
தேவராஜ் அதைப் பார்த்தபடியே உட்கார்ந்து இருந்தார். கௌசிக்குமே தர்ம
சங்கடமாக இருந்தது. ஒருவேளை விக்னேஷிடம் தனியாக ஏதாவது பேச
வேண்டுமோ என்று எண்ணியக் கௌசி “நான் வெளியே இருக்கேன்..” என்று
நகரப் பார்க்க “இல்லமா நீ நில்லு” என்றார் தேவராஜ்.

பின் விக்னேஷும் கண்களைக் காட்ட விக்னேஷ் அருகிலேயே ஒரு சேரைப் போட்டு உட்கார்ந்தாள் கௌசிகா.
“கொஞ்ச நாள் முன்னாடி உங்கள எம்.எல்.ஏ வீட்டுக் கல்யாணத்துல பாத்ததா என் மாப்பிள்ளை உதய்குமார்
சொன்னார்” என்றார் தேவராஜ்.

கௌசியைப் பார்த்தவர் “கல்யாணம் ஆயிருச்சா டா” எனக் கேட்டார்.

“ஆமா அங்கிள்..” என்றாள் கௌசி.

“தெரியும் டா” என்று தேவராஜ் சொல்ல கௌசியும் விக்னேஷும் ஒருவரை
ஒருவர் ஒரு கணம் பார்த்தனர். இருவரின் மனதிலும் தெரிந்து கொண்டே ஏன் கேட்டார் கேள்வியை என்று இருந்தது.

“நான் ஒரு விஷயமாக தான் வந்தேன்” என்றவர் “கொஞ்ச நாள் முன்னாடி நடந்த எம்.எல்.ஏ வீட்டு கல்யாணத்துல உன்னைப் பார்த்ததா அங்கு வந்திருந்த உதய்குமார் (குருவுடைய அக்கா
வினித்ராவின் கணவன்) சொன்னார்.. அதுக்கு அப்புறம் நான் விசாரிச்ச போது
தான் உங்கள் இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆனது தெரிஞ்சது. ரொம்ப சந்தோஷம்” என்றவரின் கண்கள் கலங்கின.

“சார் எமோஷன் ஆகாதீங்க..” என்ற விக்னேஷ் விக்ரமைக் கூப்பிட்டு மூன்று ஜூஸ் கொண்டு வரச் சொன்னான்.

“என் மகனுக்குத் தான் இந்த மாதிரி ஒரு பெண்ணை வைத்து வாழக் குடுத்து
வைக்கல” என்றவர் விக்னேஷைப் பார்த்து “சாரி தம்பி.. உங்க முன்னாடி
சொல்றேன்னு நினைக்காதீங்க.. அதானே உண்மை” என்றார்.

“அதெல்லாம் இல்ல சார்.. மனசுல பட்டதச் சொன்னீங்க.. அவ்வளவு தானே விடுங்க” என்றான் பெருமையாக.

கௌசி எதுவும் பேசவில்லை.. அவரைப் பார்த்துக் கொண்டே தான் இருந்தாள் அதற்கு என்று கோபமாகவோ அல்லது
முறைத்துக் கொண்டும் நிற்கவில்லை. விக்ரம் வந்து ஜூஸை வைத்து விட்டுப்
போனான்.

“கௌசி எங்க வீட்டில் இருந்து வந்தப்போ அவளுக்கு போட்ட நகையை விட்டுட்டே
வந்திருச்சு பா.. ரொம்ப நாளா அதை வச்சிருந்தேன்.. நீங்களும் எங்கன்னு தெரியல.. அதான் இப்போ கொண்டு
வந்தேன்” என்று ஒரு பையில் போட்டு எடுத்து வந்த ஐம்பது பவுன் நகையை டேபிள் மேல் வைத்தார்.

“இது எதுக்கு அங்கிள்…” என்று கௌசி ஆரம்பிக்க.. விக்னேஷ் அளித்த பதில் அவளுக்குக் கோபத்தைக் கிளப்பியது.
“சரி அங்கிள்” என்றான் அவன்.

“அங்கிள் இதெல்லாம் வேண்டாம் அங்கிள்.. எடுத்துட்டு போயிடுங்க” என்று
கௌசி சொல்ல “இது நான் எடுத்துட்டுப் போக என்னுடைய நகை இல்லையே மா.. உனக்கு வந்து சேர வேண்டிய
பணத்தையும் நீயும் உன் அப்பாவும் மறுத்துட்டீங்க.. சரி அது உங்க இஷ்டம்.. ஆனால் இது எங்களுடையது
இல்லையே” என்றார் தெளிவாக.

“அங்கிள் ஜூஸ் எடுத்துக்கங்க ப்ளீஸ் ” என்று விக்னேஷ் சொல்ல ஜூஸைக் குடித்தவர் “தம்பி கௌசிகாவை நல்லாப்
பாத்துக்கங்க.. என் மகனால ரொம்ப கஷ்டத்தப் பாத்திருச்சு” என்று சொல்ல விக்னேஷ் கௌசி இருவருமே அவரை
யோசனையாகப் பார்த்தனர்.

“குரு இறந்த அன்று கௌசி மயக்கம் போட்டு விழுந்தப்ப பரிசோதித்தார். அப்போ கௌசியின் கையில இருந்த
காயத்தை வச்சே சொல்லிட்டார்” என்று
அவர் சங்கடமாகச் சொல்ல விக்னேஷ் கௌசி இருவருமே பேசவில்லை.

ஒரு நொடி கடந்து வாயைத் திறந்தான் விக்னேஷ். “உங்க மகன் உயிரோடு இருந்து நடந்தது எல்லாம்
தெரிந்திருந்தா அவனுடைய சாவு என் கையிலதான் சார்.. அதுல மாற்றம் இல்லை சார். ஆனா இப்போ கூட செத்தவனைத் தோண்டி அடிக்கணும்கிற அளவு கொலை வெறி இருக்கு எனக்கு..” என்று அடக்கப்பட்ட கோபத்தோடு பேசினான் விக்னேஷ்.

“இப்படி பேசறேன்னு தப்பா
நினைக்காதீங்க.. மனசுல இருக்கிற சொல்றதுல்ல தப்பு இல்லையே.. ஆனா கௌசியை எந்தக் குறையும் கஷ்டமும்
இல்லாமல் நான் வச்சிருப்பேன். அது கடமை இல்ல.. என்னோட விருப்பமும்
அதான்” என்றான் விக்னேஷ்
உறுதியானக் குரலோடு.

பின் ஜூஸைக் குடித்து முடித்துவிட்டு எழுந்த தேவராஜ் “ரொம்ப நிம்மதியாக இருக்கு மா.. நீ இனி நல்லா இருப்பே”
என்றவர் “வரேன் தம்பி” என்று கிளம்பி விட்டார்.

அவர் போன பின் விக்னேஷிடம் திரும்பிய கௌசி தன் கோபத்தைக்
காட்டினாள். “நானே இந்த நகை
வேண்டாம்னு சொல்றேன்.. நீ சரின்னு அவர்கிட்ட சொல்றே” என்று பாய்ந்தாள் கௌசிகா.

“ஏன் அதுல என்ன தப்பு இருக்கு?” என்றான் விக்னேஷ்.

“என்ன தப்பா.. இப்போ அந்த நகைய வச்சிட்டு நீ என்ன பண்ணப் போற சொல்லு” என்றவளைக் கேள்வியாய்ப்
பார்த்தான்.

“எனக்கு இந்த நகையே வேண்டாம் டா” என்று கௌசி சொல்ல விக்னேஷ் அவளை முறைத்தான்.

“பேசி முடிச்சிட்டியா? நான் பேசலாமா?” என்று கேட்ட விக்னேஷ் மேலே
தொடர்ந்தான். “இந்த நகை வேண்டாம் என்று சொல்ல உனக்கு உரிமை இல்ல
கௌசி..” என்றான் அழுத்தமாக.

“நீயே இந்த நகையை போட
ஆசைப்பட்டாலும் நான் விட மாட்டேன்.. இது எனக்கும் இல்லை.. உனக்கும் இல்லை.. இதை நாம மாமாக்கிட்டக்
குடுக்கப் போறோம்.. இந்த நகை முழுக்க முழுக்க அவருடைய உழைப்பு.. இத
அவருகிட்ட தந்திடலாம்.. அதுக்கு அப்புறம் அவருக்கு என்ன தோணுதோ  பண்ணட்டும்” என்றவன் “அப்புறம்இன்னொன்னு.. அந்த நகையை மாமா உனக்கே குடுத்தாலும் நீ வாங்கக் கூடாது. இது நான் குடுக்குற அட்வைஸ் இல்ல. புருஷனா சொல்ற ஆர்டர்..” என்று
என்றான்.

கௌசி அப்படியே நின்று அவனைப் பார்க்க “என் பொண்டாட்டிக்கு நான் என்
கையால என் பணத்துல நகை
போடுவேன்.. என்னால கண்டிப்பா போட முடியும்.. உனக்கு என் மேல் நம்பிக்கை
இருக்கு தானே” என்று தன் இருக்கையில் தலைக்குக் கை குடுத்து பின்னால் சாய்ந்து கேட்க கௌசி அவனது பேச்சில் தன்னை இழந்தாள். ஏற்கனவே அவன் தேவராஜிடம் பேசியதில் அதிசயத்து
இருந்தாள். முதலில் அவன் அவரிடம் மரியாதையாக நடந்து கொண்டது. பின்
அவருக்கு பதில் அளித்தது.. குருவைப் பற்றிப் பேசும் போது அவர் கண்களில் பிரதிபலித்த கோபம் என்று அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான்
இருந்தாள். ஆனால் அவன் நகையை வாங்கிக் கொண்டான் என்ற கோபத்தில்
அதை அவள் முதலில் யோசிக்கவில்லை. இப்போது அவன் எதற்கு சொன்னான்
என்றுத் தெரியும் போது அவனிடம் தன்னை முழுதாக இழந்தாள் கௌசிகா.

“என்ன என் மூஞ்சில ஏதாவது இருக்கா.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம பாத்துட்டே இருக்க” என்ற விக்னேஷின்
குரலில் தன்னிலைக்கு வந்தவள் அளித்த பதில் அவனை சந்தோஷம் அடையச்
செய்தது.

“நான் என் புருஷனை நம்பாமல் வேறு யாரை நம்பப் போறேன்.. அவன் சொன்னால் எல்லாம் சரியாத் தான்
இருக்கும்” என்றாள் கௌசி.

அவளின் பேச்சில் விக்னேஷ் வாய் அடைத்துப் போனான். இரண்டாவது முறையாக அவள் ‘என் புருஷன்’ என்று சொன்னது அவனுக்கு ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. அந்த சுழல் நாற்காலியில்
உட்கார்ந்திருந்தவன் சந்தோஷத்தில் சுத்தினான்.

ஆனால் அவனைத் தப்பாக
நினைத்ததிற்குத் தன்னைத் தானே திட்டிக் கொண்டிருந்தாள். “ஸாரி” என்று முணுமுணுத்தவள் அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். ஆனால் அதை
கேட்கும் நிலையில் விக்னேஷ்
இல்லையே.. அவளுக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை. வெளியே
வந்து தனியே நின்றவளுக்கு
விக்னேஷின் காதல் புரிந்தது. அவன் தன் மேல் வைத்திருக்கும் அன்பும் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.

இப்படித் தன்னை நேசிப்பவனிடம் இன்னும் இவனுக்கு எப்போதில் இருந்து
நம் மேல் காதல் என்று யோசித்து விலகி இருப்பது மடத்தனம் என்று நினைத்தவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.

செல்லும் வழியில் விக்னேஷ் ஏதேதோ பேசிக் கொண்டு வர கிணத்துக்கடவு வந்தவுடன் “வண்டிய நிறுத்து…” என்றாள்
கௌசி..

“என்ன?” – விக்னேஷ் யோசனையாக.

“வண்டிய நிறுத்துடா” – கௌசி
அமைதியானக் குரலில்.

விக்னேஷ் யோசனையாக வண்டியை நிறுத்த அவன் எதிர்பாராத காரியத்தைச்
செய்தாள் கௌசி. அவன் சட்டைக் காலரை பிடித்து அருகில் இழுத்தவள் அவன் கன்னம்.. நெற்றி.. கண்.. என்
முகம் முழுவதும் முத்தமிட்டாள். அவளது காதல் உணர்வை அவளால் அடக்கவே
முடியவில்லை.. இப்போதே அவனை முத்தமிட வேண்டும் என்ற எண்ணம் அவளை அப்படிச் செய்ய வைத்தது.
அவளது இந்த செய்கையில் முதல் முத்தத்தில் அதிர்ந்தவன் பின் அந்த ரோட்டில் தங்களைத் தவிர ஆள் யாரும் இல்லை என்று கண்களைச் சுழற்றி
பார்த்த பிறகு அவளின் முத்தத்தை முழுதாக அனுபவித்தான்.

அவன் அவள் இதழ் நோக்கிக் குனிய முதலில் அதை ஏற்க நினைத்தவள் பின் அவனைத் தள்ளி விட்டாள். “சிகரெட்
குடிச்சிருக்கியா டா..” என்று முகத்தைச் சுழித்தவள் “எருமை…” அவன் தோளில்
அடித்து கிள்ளி வைத்தாள்.

பின் அவனை விட்டவள் “காரை எடு” என்றாள் அவன் கண்களைப் பார்த்து. ஏனோ அவளின் இந்த செய்கையில்
நெகிழ்ந்தாலும் அடுத்த கட்டத்திற்கு ஏங்கியவன் அதை செயல்படுத்த தயங்கினான். (வாங்கின அடியே போதும்
என்று எண்ணினான்).

பின் இருவரும் வீட்டை அடைய சுமதி கோயிலிற்குச் சென்றிருந்தார். வரதராஜன் ஏதோ புத்தகத்தைப் படித்துக்
கொண்டிருந்தார். விக்னேஷ் பசியை உணர “கௌசி.. பசிக்குது டி.. ஏதாவது செய்யேன்” என்றான் வயிற்றைத் தொட்டபடி. (நீயெல்லாம் சிங்கிளா
இருந்திருக்கலாம் டா டேய்.. உன்னைய வச்சிக்கிட்டு யப்பாபா)

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்தது ஏதாவது இவனுக்கு நியாபகம் இருக்கா பாரு என்று நினைத்த கௌசி “மரமண்ட
மரமண்ட” என்று முணுமுணுத்துக் கொண்டு அவள் முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு சேலையை மாற்றாமல் சமையல் அறைக்குள் புகுந்தாள்.

அவள் சமையல் அறைக்குள் நுழைந்த பின் பாத்ரூமிற்குள் புகுந்ந விக்னேஷ் ப்ரஷை எடுத்து பல்லை விலக்கினான்.
பல்லை விலக்கி மௌத் வாஷ் ஊற்றி வாயைக் கொப்பளித்தவன் சிகரெட் நெடி
வருகிறாதா என்று வாயின் முன் கையை வைத்து ஊதிப் பார்த்தான். பின் சிகரெட்
நெடி இல்லாததை உணர்ந்தவன் ஹாலிற்கு வந்து டி.வி யைப் போட்டான்.

“விக்கா….” என்று கௌசி கூப்பிடும் குரல் கேட்டு “இப்போ இவளுக்கு என்னவாம்” என்று நினைத்தவன் சமையல்
அறைக்குச் சென்றான். அங்கே அவள் பெரிய ப்ளான் ஒன்றைப் போட்டிருந்தாள்.

“என்ன டி” – விக்னேஷ்.

“என்னைத் தூக்கு” – கௌசி
சாதாரணமானக் குரலில்.

“எது?” – விக்னேஷ் அதிர்ந்த குரலில்.

“என்னைத் தூக்குடா.. மேல கரம் மசாலா எடுக்கணும்” – என்றாள்.

“கௌசி நான் வேணா ஏறி எடுத்துத் தரட்டுமா” – என்றான் தயங்கியபடி.

“இங்க பாரு.. இங்க வச்சிருக்க சின்ன டப்பால தீர்ந்திருச்சு.. மேல பெரிய டப்பால இருந்து எடுக்கணும்.. உனக்கு கரம்
மசாலாக்கும் மத்த மாசலாக்கும் வித்தியாசம் தெரியுமா?” என்று செக்மேட்
வைத்தாள்.

“ஹிஹி.. தெரியாது டி” என்றான் அசடு வழிந்தபடி.

“அப்போ தூக்கு” – என்றாள் இரண்டு கைகளையும் நீட்டியபடி. (வேற லெவல் மா
நீ).

“இவ வேற நிலைமை புரியாம” என்று நினைத்த விக்னேஷ் சரியென்று போய் தூக்கினான். அவன் அவளைத் தூக்க அவள் பொறுமையாக ஒவ்வொரு டப்பாவையும் திறந்து பார்க்க பொறுமையை இழந்தவன் இன்னுமா இவ எடுக்கறா என்று நிமிர்ந்து பார்க்க அவன் கண்களுக்கு சில காட்சிகள் விருந்தானது. ஆமாம் அவள் கையைத்
தூக்கித் தேட சேலை விலகி அவள் இடை என அனைத்தும் அவன் கண்களுக்குக் குளிர் ஊட்டியது.

“கிடைச்சிருச்சு டா” – என்று கௌசி சொல்ல விக்னேஷிற்கு அவனுக்குக்
கிடைத்ததை விட மனமில்லை.

“வேற ஏதாவது வேணும்னா கூட எடுடி.. நான் தூக்கிப் பிடிச்சிருக்கேன்” என்று அவன் சொல்ல அவன் பார்வை சென்ற இடம் புரிந்தது கௌசிக்கு. “பொறுக்கி
ராஸ்கல் இறக்கி விடுடா.. பெரிய தாராளப் பிரபு” என்று ப்ளாஸ்டிக் டப்பாவை வைத்து அவன் தலையில் அடிக்க விக்னேஷ் அவளை
இறக்கிவிட்டான். (அவனைத் தூக்க வைக்க வேண்டும் என்றுதான் கௌசி
நினைத்தாலே தவிர.. அவன் ஒரு படி மேலே சென்று அவளைத் திக்க வைப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை).

இறக்கிவிட்டவன் “நீதானே டி தூக்க சொன்னே” என்று சீண்டினான். அதற்குள் சுமதி வர ஏதோ சொல்ல வந்த
கௌசி தன் அத்தையைப் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாள். சுமதி
இருவருக்கும் விபூதியை வைத்துவிட்டு விட்டு தன் அண்ணன் வரதராஜனிற்கும்
சென்று வைத்துவிட்டார்.

பின் இரவு உணவுத் தயாராக
அனைவரும் சாப்பிட்டு விட்டு ஹாலில் உட்கார்ந்திருந்தனர். அறைக்குள் சென்ற விக்னேஷ் ஒரு பையை எடுத்துக் கொண்டு வந்து வரதராஜன் முன் வைத்தான்.

எல்லோரும் அவனைப் பார்க்க “மாமா..” என்று ஆரம்பித்து இன்று குரு அப்பா தேவராஜ் வந்தது என அனைத்தையும்
கூறினான். “இந்தாங்க மாமா.. இதுல எல்லா நகையும் இருக்கு” என்றான்.

“இதை நீயே வைத்துக்கப்பா..” – என்றார் வரதராஜன்.

“இல்லை மாமா.. எனக்கு வேண்டாம்” – விக்னேஷ்.

“உன் தொழிலிற்கு வைத்துக் கொள் விக்னேஷ் இதை” – என்று வற்புறுத்தினார் வரதராஜன்.

“இல்ல மாமா.. இதெல்லாம் எனக்கு வேண்டாம்” – விக்னேஷ் பிடிவாதமாக. “ஏன் விக்னேஷ்… இது குரு வீட்டிற்கு
செய்தது என்று உனக்கு..” என்று வரதராஜன் ஆரம்பிக்க விக்னேஷ் கோபமாக உள்ளே புகுந்தான்.

“மாமா அப்படி எல்லாம் இல்லை.. எனக்கு உங்க கிட்ட இருந்து கௌசி மட்டும் போதும். இந்த நகை பணம் எதுவும் வேண்டாம் மாமா. அதனால தான் சென்னைல எல்லாம் வித்துட்டு வரும்போது உங்க பணத்தையும் அம்மா
பணத்தையும் உங்க இரண்டு பேரு பேர்ல டெபாசிட் பண்ணேன்” என்றவன் “இந்த
நகை உங்க உழைப்பு மாமா.. உங்களுக்கு என்ன பண்ணனும்ன்னு தோணுதோ
அதைச் செய்யுங்க” என்றான்.

“சரிப்பா.. அது என் உழைப்பு தானே.. அதை நான் என் பேரனிற்கோ பேத்திக்கோ செய்து கொள்கிறேன்.
ஆனால் அதில் நீயும் கௌசியும் தலையிடாதீர்கள்” என்று சொல்ல விக்னேஷ் தலை ஆட்டினான்.

பின் சுமதியும் வரதராஜனும் உறங்கச் செல்ல கௌசியும் விக்னேஷும் மட்டும் ஹாலில் இருந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் ஓரக்கண்ணால் பார்த்துக்
கொண்டிருக்க கௌசி இது சரிப்பட்டு வராது என்று எண்ணி முதலில் எழுந்து அறைக்குள் புகுந்தாள். அதற்காகவே காத்திருந்த விக்னேஷும் அடுத்து உள்ளே
நுழைந்தான். (ஓஓ முதல்ல உள்ள போனா உன் கிரீடம் இறங்கீருமா… சீன் சீன் சீன்
டா நீ).

உள்ளே நுழைந்தவன் கௌசி
நைட்டியோடு கால்களை மடக்கி அவனைக் கூர்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவள் முகத்தைப் பார்க்க வெட்கியவன் கண்களை
அவளிடம் திருப்பவே இல்லை. (அய்யோ.. எல்லாம் ஆப்போஸிட்டா நடக்குதே).

பெட்டின் மேல் சென்று உட்கார்ந்தவன் பேசாமல் கையை மடக்கி தலையின் மேல் வைத்துப் படுத்து விட்டான். கோபம் ஏறிய
கௌசி “டேய் எந்திரிடா” என்று
கத்தினாள்.

“ஏண்டி..” என்றான்.

“பெரிய நல்லவனா நீ.. இப்படி பண்ண. அடிச்சிருவேன் டா” என்று அவள் மிரட்ட அவனிற்கு சிரிப்பு வந்தது. (பின் எந்தப்
பெண் வாயை விட்டுக் கேட்பாள்).

“நல்லவன் தான்டி நான்” என்று இரண்டு கையையும் விரித்துச் சொன்னவன் “அப்புறம் அடிக்காதே டி.. நீ அடிச்ச
இப்போலாம் சுள்ளுன்னு வலிக்கிது” என்றான் பாவமாக.

“அப்படித்தான அடிப்பேன்” என்றாள் ஒற்றைப் புருவத்தை தூக்கி.

“அடிச்சிருவியா டி…” என்று சவாலாகக் கேட்டான் விக்னேஷ்.

“ஆமா.. கிஸ் அடிப்பேன்” என்ற கௌசி அவன் கொஞ்சமும் எதிர்பாரா வண்ணம் அவனைத் தன் அருகில் இழுத்து தன் இதழை அவன் இதழில் பொருத்தினாள்.
முதலில் தடுமாறியவன் பின் அவளுக்கு ஈடு கொடுத்து அவளைத் திண்டாடச் செய்தான். இருவருக்குமே இந்த முதல் முத்தத்தில் இளமை உணர்வுகள்
பேயாட்டம் போட்டுக் கொண்டு எழுந்தது. (கௌசிக்கும் இது முதல் முறை தான்.. காமம் கலந்த காதலுடன் கிடைத்த.
குருவிடம் அவள் காமத்தைக் கூட உணரவில்லையே.. அவள் ஜடமாக இருந்தாள் அங்கு).

பின் இருவரும் மூச்சுக்குத் தவித்துப் பிரிய “ஏய்.. நான் உன்னை ஒன்னும் தெரியாதவன்னு நினைச்சேன் டி” என்றான் விக்னேஷ் அவளின் தலையில் தன் தலையை முட்டியபடி.

“அதுவும் உன்னால தான்.. உன்
லேப்டாப்பால தான்” என்று சொல்ல விக்னேஷ் “கேடி டி நீ.. ” என்று அவளை அணைத்தான்.

“கௌசிக்” – விக்னேஷ் அணைத்தபடியே.

“சொல்லு” – கௌசி.

“ஓகே வா” – விக்னேஷ்.

என்னக் கேட்க வருகிறான் என்பது புரிய “டேய் நல்லவன் மாதிரி நடிக்காதே ன்னு
சொல்லிட்டேன்” என்று அவன் முதுகில் குத்தினாள்.

அவளின் பேச்சில் சிரித்தவனின் கைகள் அடுத்து அத்துமீறியது. பெண்மைக்கே
உரிய கூச்சத்தில் அவள் விலகி சிணுங்க “கௌசிக் வெட்கம் லாம் வருமா” என்று கேட்டு அவளை தாபத்துடன் அணைத்த விக்னேஷ்வரனின் காதல் வேட்கையில் கௌசிகா முழுவதுமாகக் கரைந்து
மூழ்கினாள். அவளது உடல் தளும்புகளை ஒவ்வொரு முத்தத்திலும் மொத்தமாக
மறைய வைத்தான் அன்று.

அடுத்த நாள் காலை கௌசி எழ விக்னேஷ் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் நெஞ்சில்
சாய்ந்திருந்தவள் “டைம் என்னடா?” எனக் கேட்டாள் தூக்கக் கலக்கத்திலேயே.

“பத்து டி” என்று சொல்ல அடித்துப் பிடுத்து எழுந்தாள்.

“அய்யய்யோ எழுப்பி இருக்கலாம்ல.. அத்தை கேட்டா என்னன்னு சொல்லுவேன்” என்று சிரிப்புடன் பதபதப்பில் கேட்டாள்.

“ஏய்.. இதெல்லாமாடி கேப்பாங்க..” என்றவன் “கேட்டால்.. உங்க மகனை நான்
தூங்கவிடலை அத்தை அப்படின்னு சொல்லு” என்றான் கைகள் இரண்டையும் பின்னால் தலைக்குக் குடுத்தபடி.

“எது நான் உன்னைத் தூங்க விடலையா?” என்று கேட்டு முறைத்தாள் கௌசிகா.

“ஆமா டி.. நல்ல வேளை நீ பையனா பொறந்து நான் பொண்ணா பொறக்கலை.. எந்த ஜென்மத்தில நான்
பண்ண புண்ணியமோ” என்று இரண்டு கைகளையும் கூப்பி மேல பார்த்தான்.

“ஆமாமா.. நீ அப்படியே எதுவும்
தெரியாதக் குழந்தை பாரு” என்றவள் அவனைத் தாக்கினாள்.

பின் சிறிய சீண்டல்களையும்
கேலிகளையும் இருவரும் முடிக்க.. கௌசி “நான் குளிக்கப் போறேன்” என்று
போர்வையைத் தன் மேல் சுற்றிக் கொண்டு எழ “நான் தான் பர்ஸ்ட்” என்று ஒரு துண்டை மட்டும் எடுத்துக் கொண்டு அவளுக்கு முன் புகுந்துவிட்டான்.

பின் அவன் வெளியே வர அவனை வேண்டுமென்றே இடித்துக் கொண்டு குளிக்கச் சென்றாள். கௌசி சென்றபின்
விக்னேஷ் உடையை மாற்றிக் கொண்டு தலையைத் துடைக்க துண்டு தவறி கீழே விழுந்தது. கீழே குனிந்தவன் அப்போது
தான் கட்டிலின் அடியில் இருந்த
கௌசியின் மஞ்சள் நிற ட்ராலியைப் பார்த்தான். இதை ஏன் இங்க வைத்திருக்கிறாள் என்று நினைத்தவன் அதை மேலே வைக்க எண்ணி அதை
கட்டிலின் அடியில் இருந்து வெளியே இழுத்தான். சரியாக மூடாமல் வைத்திருந்ததாலோ என்னவோ அந்த டைரி வந்து வெளியில் விழுந்தது.

அதை எடுத்தவன் முதலில் படிக்கத் தயங்கினான். பின் ஏதோ அவனைப் படிக்கச் சொல்ல அதை திறக்க அது
நேராக நடுப் பக்கத்தில் சென்று நின்றது. ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க அவன் முகம் இறுகியது. ஐந்து கவிதைகளைத் தான் படித்திருப்பான் அதற்குள் கௌசி வர அவன் அவளை இடுங்கிய விழிகளுடன் பார்த்தான்.

அவன் கையில் டைரியைப் பார்த்தவள் அவனிடம் உண்மையைச் சொல்ல  வந்தாள் ஆனந்தமாக.. ஆனால் அவள் காதில் இடியை இறக்கினான் விக்னேஷ்.
“யாரைடி லவ் பண்ண பர்ஸ்ட்” என்று அமைதியானக் குரலில் வினவினான்.

அவனது கேள்வியில் உறைந்து
நின்றவள் “இல்லைடா…” என்று ஆரம்பிக்க விக்னேஷ் பேசினான்.

“குருவைப் கல்யாணம் பண்ண
சொல்லிக் கேட்டப்போ அதுக்கு தான் அழுதையா? நான்தான் கேட்டேன்ல டி.. என்கிட்ட மறச்சிட்ட இல்ல”

“இப்படி உருகி உருகி காதலிச்சிட்டு எப்படி டி என்கிட்ட மறச்சே… அன்னிக்கு குரு
பண்ண டார்ச்சர் எல்லாம் சொன்ன நீ ஏன் இதை மறைச்சே.. சொல்லு” என்று
ஆற்றமையால் கேட்டான்.

“நீ சொல்லி இருந்தா.. அவனுக்கே உன்னை நான்” என்று சொல்லி முடிக்கவில்லை கௌசியின் கைகள் இடியாய் விக்னேஷின் கன்னத்தில் இறங்கியது.

அவன் சட்டையைக் கொத்தாகப் பற்றியவள் “என்ன சொன்ன.. என்னடா
சொன்ன.. நான் சொல்லி இருந்தா அவனுக்கே கல்யாணம் பண்ணி
வச்சிருப்பே.. அதானே சொல்ல வந்த.. உனக்கு இன்னமும் எதுவும் புரியல இல்ல?” என்று கத்தினாள் கௌசி.

“சரி டைரியைப் படிச்சயே முழுசா படிச்சியா?” என்று கோபத்தோடு கத்திக்
கேட்டவள் அவன் சட்டையை உதறிவிட்டு. தன் ட்ராலியை எடுத்து கவிழ்த்துக் கொட்டினாள்.

“பாருடா பாரு.. இவன் தான் நான் பல வருஷமா லவ் பண்ணிட்டு இருந்தவன்”
என்று விட்டு அந்த அறையை விட்டு முழுவதுமாக வெளியெறினாள் கௌசி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!