அத்தியாயம்-6

தன் பிறந்த நாளிற்கு அடுத்த நாள் காலை எழுந்தவள் வழக்கம் போலத் தன்
அப்பாவிற்கு உதவி செய்கிறேன் என்று தன் தந்தையை முடிந்த அளவு டிஸ்டர்ப் செய்தவள் குளிக்கிறேன் என்று
சென்றுவிட்டாள். கௌசி படிப்பை முடிக்க வரதராஜனும் ரியர்ட் ஆகிவிட்டார்.

குளித்து முடித்து ரெடி ஆகி ஜீன்ஸிலும் கேசுவல் சர்டிலும் வந்தவள் சாப்பிட்டு
முடித்துவிட்டு “அப்பா நான் கிளம்பறேன் ப்ரௌனியைப் பாத்துக்கங்க.. நீங்களும்
மறக்காம சாப்பிட்டுக்கங்க.. அப்புறம் மாத்திரை போட்டுக்கங்க” என்று ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு ஓ.எம்.ஆர்-இல் உள்ள தான் வேலை செய்யும் ஐடி கம்பெனிக்குக்
கிளம்பிவிட்டாள்.

ஜீவா, மதி வேலை செய்யும் இடத்தில் தான் வேலையில் இருந்தாள் கௌசிகா.
மதியின் டீமும் கூட. முதலில்
அவர்களுடன் வேலையில் இருந்த விக்னேஷ் பின் இரண்டு வருடம் கழித்து
அதே ஓ.எம்.ஆர்-இல் வேறு இடத்தில் வேலை கிடைக்க அங்கே சேர்ந்துவிட்டான்.

ஒன்பது மணி அளவில் ஆபிஸிற்குள் நுழைந்தவள் மதியும் ஜீவாவும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு
அவர்களின் அருகே சென்றாள். “என்ன காலங்காத்தலையே கடலையா?” என்று கேட்டுச் சிரித்தவள் மதியின் கண்கள்
சிவந்திருப்பதைக் கண்டாள்.

“ஏய் மதி என்னாச்சு? ஏன் டல்லா இருக்க?” என்று விசாரிக்க அவளால்
பதிலே பேசமுடியவில்லை.

ஜீவாதான் ஆரம்பித்தான். நேற்று மதியின் அம்மா பரமேஸ்வரி மதியைப் பார்க்க சொல்லமல் கொள்ளாமல்
சென்னை வந்திருக்கிறார். ஹாஸ்டலிற்கு வந்தவரிடம் ரூம் மேட் என்ன சொல்லுவது
என்று தெரியாமல் அவள் வேலை விசயமாக ஆபிஸ் வரை போயிருக்கிறாள்
என்று சொல்லிவிட்டாள்.

ஞாயிற்றுக்கிழமை ஆபிஸா என்று யோசித்துவிட்டு பரமேஸ்வரி மதிக்குப் போன் போட்டார்.

மதி போனை எடுக்க “ஹலோ” என்றார் பரமேஸ்வரி.

“ஹலோ அம்மா” என்றாள் மதி.

“என்ன பண்ற மதி.. சாப்பிட்டயா? எங்க இருக்க?” – பரமேஸ்வரி.

“நான் சாப்பிட்ட மா.. நான் ரூமில் தான் இருக்கேன்” என்றவள் “அம்மா ஒரு
சின்ன வேலை அப்புறமாக கூப்பட்றேன்” என்று வைத்தவள் கூப்பிடவே இல்லை. போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டாள். அவளது ரூம் மேட்டினாலும் அவளுக்கு
இன்பார்ம் பண்ண முடியவில்லை.

மதியை இறக்கிவிட்டு நேற்று மற்றவர்கள் கிளம்ப யாருக்கும் தெரியாவண்ணம் தன்
உதட்டைக் குவித்து ஜீவாவிற்கு ஒரு முத்தத்தைத் தூரத்தில் இருந்து தர அவளது ரூமில் மறைந்து நின்று
அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தார் பரமேஸ்வரி.

ரூமிற்குச் சென்ற மதி தன் அன்னையைக் கண்டு அப்படியே நின்றுவிட்டாள்.
அவளின் அம்மா அவளை எரித்துவிடுவது போல பார்த்துக் கொண்டு இருக்க
“அம்மா எ… எ.. எப்போ வந்தீங்க?” என்று
தடுமாற்றத்துடன் கேட்டவள் தன் தாயின் முகத்தைத் தவிர்த்து உடை மாற்றுவதற்கு
போவது போல குளியல் அறைக்குள் புகப்
பார்த்தவளை இழுத்து வைத்து நான்கு அறை விட்டார். “யாருடி அவன் யாரு அவன்?..கீழே நடந்த அத்தனையும் நான்
பாத்துக்கிட்டு தான் இருந்தேன்” என்று கையைப் பிடித்து அழுத்தி ஆங்காரமாகக்
கத்தினார்.

நல்லவேளை அவளின் ரூம் மேட் பக்கத்து அறைக்கு ஏஸ்கேப் ஆகிவிட்டாள்.

பதில் பேசாமல் இருந்தவளை இன்னும் ஒரு அறைந்து தள்ளினார். “நாளைக்கு நீ
வேலைக்குப் போக வேண்டாம்.
என்னோட கோயம்பத்தூர் கிளம்பு” என்று அவர் கட்டளையிட “அம்மா..” என்று
விசும்பியவளை “என்ன?” என்று கேட்டார் பரமேஸ்வரி.

“அம்மா நாளை ஒரு நாள் மட்டும் ஆபிஸ் போயே ஆக வேண்டும்.. ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் இருக்கு” என்று
மதி சொல்ல “ஏன் நாளை அப்படியே ஓடப் ப்ளான் போடுகிறாயா?” என்று கேட்க
மதியால் அவளின் முகச் சுளிப்பை மறைக்க முடியவில்லை.

“அம்மா.. அவர் என்னுடன் காலேஜில் படிச்சவர்.. ஆபிஸ் மூலியமாக ஏற்பட்ட பழக்கம் இல்ல” என்று பொய்யைச்
சொன்னாள் மதி.

“சரி நீ போ.. ஆனா நாளைக்கு மதியம் உன் அப்பா வந்துடுவார். நாளை நைட்டே நாம கோயம்பத்தூர்
கிளம்பறோம். வரட்டும் அந்த மனுஷன் உன்னை படிப்பு முடிஞ்சவுடனே கல்யாணம் பண்ணிக் கொடுத்திடலாம் ன்னு அடச்சுக்கிட்டனே.. கேட்டாரா.. அந்த சனியன் புடிச்ச வேளைக்கு நாளையே
முழுக்கு போட்டுவிட்டு வந்துவிடு” என்று
பரமேஸ்வரி ரௌத்திரமாகப் பேச தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் மதி.

அத்தனையையும் கேட்டு முடித்த கௌசிக்கு என்னவோ போல ஆகிவிட்டது. நம் பிறந்த நாளிற்கு வந்து தானே
இவளுக்கு இப்படி ஆகிவிட்டது என்று நினைத்த கௌசி “சாரி மதி.. என் பர்த்டே-க்கு வந்து தானே உனக்கு இந்த நிலைமை” – சங்கடத்துடன் பேசினாள் கௌசி.

“சீச்சீ.. அதெல்லாம் இல்ல கௌசி.. எப்படியும் இன்னும் இரண்டு மாசத்துல நானே சொல்லலாம் என்று இருந்தேன்.. அதுக்குள்ள தானாகத் தெரிந்துவிட்டது
அவ்வளவு தான்” என்று கௌசியைச் சமாதானம் செய்தாள்.

ஆபிஸில் எல்லோரும் வர ஆரம்பிக்க “சரி இன்னிக்கு மதியம் லீவ் போட்டுட்டு
இரண்டு பேரும் வாங்க பேசிக்கலாம்” என்று ஜீவா இரண்டு பேரையும் அனுப்பி
வைத்தான்.

மணி ஒன்று ஆக ஜீவாவிற்காக வெயிட்
பண்ணிக்கொண்டு இருந்தனர் மதியும் கௌசியும். ஜீவாவிடம் இருந்து கௌசிக்கு மெசேஜ் வந்தது “கௌசி நான் வர டைம் இன்னும் ஒன் ஹார் ஆகும்..
நீங்க போய் சாப்பிடுங்க.. நான் வரேன்” என்று அனுப்பியிருந்தான் ஜீவா.

“மதி ஜீ மெசேஜ் அனுப்பி இருக்கான்” என்று மெசேஜைக் காண்பித்தாள்.

“எனக்கு வேண்டாம் கௌசி.. பசியில்லை” – மதி.

“எனக்கு பசிக்குது.. அட்லீஸ்ட் கம்பெனி தாயேன்” என்று கௌசி கேட்க “சரி
அங்கையாவது போய்
உட்கார்ந்திருக்கலாம்” என்று நினைத்து கௌசியுடன் சென்றாள் மதி.

ஆனால் கேன்டீனிற்கு சென்று மதிக்கும் வாங்கிக் கொண்டு வந்து கௌசி டேயிளில் வைக்க “கௌசி ப்ளீஸ்..
என்னாலா இந்த நிலையில் சாப்பிட முடியல” என்றாள் மதி.

“அதேதான் நானும் சொல்றேன். இதே நிலையில் இருந்தேனா இன்னிக்கு
ஈவ்னிங்குள்ளே மயக்கம் போட்டிடுவ.. தயவு செஞ்சு சாப்பிடு” என்று கௌசி சொல்ல மதி கொஞ்சம் சாப்பிட
ஆரம்பித்தாள்.

அதற்குள் ஆபிஸில் அவர்கள் டீமில் இருக்கும் சௌமியா அவர்கள் எதிரில் இன்னொருத்தியுடன் வந்து உட்கார்ந்தாள். கௌசிகாவிற்கு எரிச்சல் வந்தாலும் அவளிடம் காட்டாமல் அமைதியாக தன்
உணவை உண்டு கொண்டு இருந்தாள். மதியுமே அவளிடம் வாயைக் கொடுக்க மனமில்லாமல் அமைதியாக சாப்பிட அந்த அமைதியைக் கலைப்பதற்கு என்றே வந்த சௌமியா ஆரம்பித்தாள்.

“ஏய் உனக்கு ஒன்னு தெரியுமா டி” என்று பக்கத்தில் இருந்தவளிடம் ஆரம்பித்தாள்.

என்ன என்று அவள் கேட்க “இப்போலாம் லவ் அது இதுன்னு கண்டபடி சுத்துறாங்க.. அதெல்லாம் கல்யாணத்தில் முடியுமா?”
என்று கேட்டாள் கூட இருந்தவளிடம்.

மதிக்கும் கௌசிக்கும் புரிந்துவிட்டது. நேற்று கௌசி பிறந்தநாளிற்கு எடுத்த
போட்டோவை ஃபேஸ்புக்-இல் அப்லோட் செய்ததைப் பார்த்து வயிறு எரிந்திருக்கிறாள். அதான் இங்க வந்து அந்த எபக்டை கொட்டுகிறாள் என்று.
காரணம் அவள் ஜீவாவை ஒரு தலையாக வந்த புதிதில் காதலிக்க அதற்குள் ஜீவாவும் மதியும் ஒன்று சேர்ந்தது.

“என்ன டி சம்மந்தமே இல்லாம பேசற?” என்று சௌமியாவின் பக்கத்தில் இருந்தவள் கேட்க “இல்லை டி நாட்டுல
நடக்கிறதைத் தான் சொல்றேன்” என்று அவளையும் பேச்சிற்குள் இழுக்கச் செய்தாள் சௌமியா.

“ஆமாம் டி மோசமா போயிட்டு இருக்கு” என்று அவள் சலிக்க “என்ன மாதிரி சொல்ற?” என்று சௌமியா துருவ “அதான் நன்றாக சுற்றிவிட்டு செய்யக்
கூடாத வேலை எல்லாம் செய்துவிட்டு பிரண்ட்ஸ்-ன்னு சொல்லிக்கறாங்க” என்று அவள் பொதுவாக சொல்ல
சொமியாவிற்கு எதிர்ப்பார்த்து கிடைக்க வாயெல்லாம் பல்லாகி விட்டது.

“ஆமாம் அதுவும் இந்த அப்பாவி மாதிரி முகத்தை வைத்துத்தான் சில பெண்கள்
ஏமாத்துறாங்க” என்றவள் “இல்லை மதி?” என்று மதியிடம் திரும்பிக் கேட்டாள்.
வேறு ஏதாவது சமயமாக இருந்திருந்தால் மதி திருப்பிக் கொடுத்திருப்பாள். ஆனால் இப்போது அவள் இருக்கும்
மனநிலைக்கு எதுவும் பேசமுடியவில்லை.

“ம்ம்” என்று மட்டும் தன் சிந்தனையை வேறு எங்கோ வைத்துக்கொண்டு தலை
ஆட்டினாள்.

“அதுவும் உங்கள மாதிரி மதி” என்று முணுமுணுக்க கௌசிக்கு அது நன்றாகக்
கேட்டது.

அவள் எப்படியும் நம்மிடம் வாயைக் கொடுத்து மாட்டுவாள் என்று நினைத்த
கௌசி அமைதியாக இருந்தாள். அதேபோல நடந்தது.

“அதுவும் நம் கௌசிகாவைப் போல எல்லாம் தெரிஞ்சவங்களா இருந்தா…
அவ்வளவு தான் லவ் பண்ண ஆரம்பிச்ச அப்புறம் எதுக்கு வேண்டுமானாலும்
துணிவாஙாக ” என்று சொல்ல “வாடி மாட்டுனியா.. பத்து பேருடன் கடலை போடற நீ பேசுறியா” என்று நினைத்த
கௌசி சிரித்த முகத்துடனே
ஆரம்பித்தாள்.

“சௌமியா.. நீ சொல்றது உண்மைதான். நான் எல்லாம் தெரிஞ்சவதான்” என்ற
கௌசி “அதுவும் உன் பாஷையில் பேச வேணும்ன்னா நான் அப்பாவி இல்ல தான்” என்று அவளின் தேவையில்லாத பேச்சைக் குத்திக் காட்டினாள் கௌசி.

மேலும் “உனக்கு ஒன்னு தெரியுமா சௌமியா. எல்லாம் தெரிஞ்சவங்க தான் எது தப்பு எது சரி ன்னு நடந்துப்பாங்க.
அதாவது அவங்களுக்கு ஒரு கன்ட்ரோல்.. கட்டுப்பாடு இருக்கும். ஆனால் பாவம்
உன்னை மாதிரி வாயில் விரல்
வச்சா கூடக் கடிக்கத் தெரியாத
உண்மையான அப்பாவி தான் சீக்கிரம் மயக்கத்தில் விழுந்து விடுவாங்க சௌமி” என்று சொல்ல அவளின் முகம்
கறுத்து சிறுத்துவிட்டது. “பாத்து இரு சௌமியா.. நீ ஏற்கனவே பத்து பேருடன்
பேசுவதாகப் பரவுகிறது” என்று
உன்னைப் பற்றி எனக்குத் தெரியும் என்று சொல்லாமல் சொல்ல அவள் முகத்தில் ரத்த ஓட்டமே நின்றுவிட்டது.

அதற்குள் ஜீவா இவர்களைத் தேடி கேன்டீன் வர இருவரும் எழுந்தனர். “பை சௌமியா .. Have a nice day” என்று
கௌசி சொல்ல அதைக் கேட்கும் உணர்வில கூட அவளில்லை.

பின் ஜீவாவுடன் இறங்கி கீழே வர “ஜீ எங்க போறோம்” என்று கௌசிகா கேட்க “நாம எப்பவும் போகும் கஃபே காபி டே
தான்” என்று ஜீவா சொன்னான்.

“சரி நீ மதியைக் கூட்டிக்கொண்டு போ..நான் ஸ்கூட்டியில் வரேன்.. ஈவ்னிங்
அப்படியே போயிடுவேன்” என்று நாகரிகமாக அவர்களுக்குத் தனிமை
அளித்து ஸ்கூட்டியை எடுக்கப் போனாள் கௌசி.

யாரோ தன்னைக கண்காணிப்பதைப்
போல உணர்ந்தவள் திரும்பிப் பார்த்தாள். சுற்றியும் கண்களைச் சுழல விட்டவள்
‘ஏதோ ப்ரம்மை’ என்று நினைத்துவிட்டுத் திரும்பி ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து காபி ஷாப்பை அடைந்து உள்ளே போக ஜீவா மதியுடன் விக்னேஷும் அமர்ந்திருந்தான்.
சென்று விக்னேஷின் பக்கத்தில் அமர்ந்தவள் எதுவும் பேசவில்லை.

“பேசாம நீ இப்போ உன் அம்மா கூட ஊருக்குப் போ மதி. நான் நாளைக்கே வந்து பேசறேன்” என்று ஜீவா பொறுமையாகப் பேச ஆரம்பித்தான்.

“இல்ல ஜீவா.. இல்ல.. நான்
போகமாட்டேன். போனா என் அம்மா ஏதாவது பண்ணி நம்மளபிரிச்சுவிடுவாங்க.. எனக்கு அவங்களப் பத்தி நல்லாத் தெரியும்.. ப்ளீஸ்
புரிஞ்சிக்கோங்க.. என்னை போக மட்டும் சொல்லாதீங்க” என்று ஜீவாவின் தோளில் சாய்ந்து அழ அவனால் எதுவும்
பேசமுடியவில்லை.

கௌசிக்கு மதி அழுவதைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. விக்னேஷும் ஏதோ
யோசனையில் இருந்தான்.

“சரி மதி.. நீ போக வேண்டாம் விடு.. தயவு செஞ்சு அழதே” என்று சமாதானம்
செய்துகொண்டிருந்தான் ஜீவா.

“ஜீ.. ஒரு டவுட்” – விக்னேஷ் ஜீவாவை அழைத்தான்.

“என்ன விக்கி” – ஜீவா.

“மதி அப்பா.. இந்நேரம் வந்திருப்பார் இல்ல” என்று கேட்டான் விக்னேஷ்.

“ம்ம் வந்திருப்பார்” என்றான் ஜீவா.

“மதி.. உன் அப்பா நீ சொன்னா
கேட்பாரா?” என்று மதியைப் பார்த்துக் கேட்டான் விக்னேஷ்.

“ம்ம் கேட்பார்.. ஆனா அம்மா இருந்தா அப்பா கூட பேசவே விடமாட்டார்” என்றாள் மதி கண்ணைத் துடைத்தபடியே.

“ஓகே.. ஜீ இங்க பாரு.. மதி சொல்றதப் பாத்தா மதியோட அம்மா கொஞ்சம் டாமினன்ட் கேரக்டர் மாதிரி தெரியுது..
அவங்க முன்னாடி மதி அப்பாகிட்ட பேசுனா நம்மையும் பேசவிடாம அவரையும் குழப்பிடுவாங்க.. ஸோ நாம
அவருகிட்டத் தனியாதான் பேசணும்.. அவர்கிட்ட நம்மள பேச முடியாம தடுக்கத்தான் முடியுமே தவிர அவரு
முடிவாகச் சொன்னல் மதி அம்மாவால் எதுவும் பேச முடியாது” என்ற விக்னேஷ்
“மதி உன் அப்பா நம்பரைத் தா.. அவர் பெயர் என்ன?” என்று கேட்டு வாங்கி அவரின் எண்ணிற்கு டயல் செய்தான்.

அவர் போனை எடுத்து “ஹலோ” என்ன சொன்னார்.

“ஹலோ.. இது முருகானந்தம் சார் தானே?” என்று கேட்டான் விக்னேஷ்.

“ஆமாம்.. நீங்க?” -முருகானந்தம்.

“சார்.. நாங்க கொரியர்-ல இருந்து பேசறோம்.. மதி முருகானந்தம் பெயரில்
ஒரு பார்சல் வந்திருக்கு.. அவங்களுக்கு போன் பண்ணோம்.. ஏதோ வேலையாக இருப்பதால் அவங்க ஹாஸ்டல் அட்ரஸ்
தந்து உங்ககிட்ட தர சொல்லீருக்காங்க..
நான் ஒரு பத்து நிமிடத்தில் அங்க வந்துவிடுவேன்.. நீங்க வந்து வாங்கிக்கோங்க சார்” என்று தன் தாடையில் ஒரு கையை வைத்தபடி பேசியவன் அவர் சொல்லும் பதிலிற்காக
காத்திருந்தான்.

“சரிப்பா.. வா” என்று வைத்துவிட்டார்.

சரியாக பத்து நிமிடத்தில் கொஞ்சம் தூரம் தள்ளி ஹாஸ்டலின் முன்னால்
ஜீவாவின் கார் நின்றிருந்தது. விக்னேஷ்காரின் முன் சீட்டில் அமர்ந்திருக்க ஜீவா, மதி, கௌசி எல்லாம் பின் சீட்டில்
உட்கார்ந்திருந்தனர்.

எல்லோருக்குமே கொஞ்சம் பயம் தான்.. மதியின் அப்பாவிற்கு பதில் மதியின்
அம்மா வந்துவிட்டால்?

ஆனால் நல்லவேளையாக
முருகானந்தமே வந்தார். மதி அவரைக் கைகாட்ட போனை எடுத்து அவருக்குப் போன் செய்த விக்னேஷ் “சார்
வந்துட்டேன்.. நீங்க எங்க இருக்கீங்க? என்ன கலர் ட்ரெஸ்” என்று கேட்டான்.

“நான் வெள்ளை சட்டை.. ப்ரௌன் பாண்ட்.. கண்ணாடி போட்டிருக்கேன்” என்று விவரம் சொன்னார் அவர்.

“சார் நான் உங்களைப் பார்த்துட்டேன்.. உங்க ரைட் சைட் ஒரு வைட் காருக்கு
பின்னாடி தான் நிற்கிறேன்.. வந்து பார்சலை வாங்கிக்கங்க” என்று சொல்லிக் கட் செய்து விட்டான்.

முருகானந்தம் பக்கத்தில் வரவர காரில் இருந்து இறங்கிய ஐந்து பேரும் அவரைப் பார்க்க.. தன் மகளைப் பார்த்த
முருகானந்தம் அவளிடம் ஏதோ பேச வர.. அவர்கள் அதற்குக் கூட விடவில்லை.

அவரைப் பின் சீட்டில் போட்டு உள்ளே தள்ளி வலது பக்கம் மதி இடது பக்கம் ஜீவா உட்கார.. விக்னேஷும் கௌசிகாவும் முன் உட்கார விக்னேஷ்
காரை எடுத்தான்.

அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. தன் மகளைப் பார்த்து “என்னமா நடக்குது?”
என்று கேட்க “ஒரு நிமிசம் பா” என்றாள் மதி. பின் கொஞ்ச தூரம் சென்ற பின் ஒரு
அமைதியான இடத்தில் காரை
நிறுத்தினான் விக்னேஷ்.

பின் விக்னேஷும் கௌசியும் பாதி திரும்பிப் பின்னால் பார்த்தபடி உட்கார்ந்தனர்.

“அப்பா.. நான் இவரைத் தான் லவ் பண்றேன்பா.. ரொம்ப நல்லவர் பா.. என்ன இவருக்கே கல்யாணம் பண்ணி
வச்சிருங்க பா” என்று கண்ணீருடன் ஜீவாவைக் கைகாட்ட “ஹாய்… மாம… சார்” என்றான் ஜீவா.

“சார்.. நான் உங்க பொண்ண ரொம்ப லவ் பண்றேன். அவளும் தான். உங்க பொண்ண நல்லா பாத்துப்பேன் சார்.. நீங்க நம்பி உங்க பொண்ணை எனக்குக்
கல்யாணம் பண்ணித் தரலாம்” என்று ஜீவா அவர் திட்டுவதற்கு முன் அவசர அவசரமாகப் பேசி முடித்தான். அவர் ஏதோ பேச ஆரம்பிக்கும் முன் விக்னேஷ்
உள்ளே புகுந்தான்.

“ஆமாம் அங்கிள்.. எங்க ஃபேமிலில எல்லாருக்குமே முன்னாடியே தெரியும்.. நீங்க ஒத்துக்கிட்டா அடுத்த
முகூர்த்தத்தில் கல்யாணத்தை
முடித்துவிடலாம். ஜீவாவும் நல்ல பையன்தான்..” விக்னேஷும் அவசர
அவசரமாகப் பேசிமுடித்தான்.

“அய்யோ நாம மட்டும் என்ன ஏதும் சொல்லாம இருக்கோம்” என்று நினைத்த கௌசி “ஆமாம் பெரியப்பா எங்க அத்தை மாமா எல்லாம் மதியை நல்லாப் பாத்துப்பாங்க.. நீங்க எதுக்கும் கவலைப்பட வேண்டாம்.. மதியை கட்டின
புடவையோடு அனுப்பினால் போதும்” என்று முடிக்க.. எல்லோரும் மதி உட்பட “ஏய் இது ஓவர் டயலாக் கம்மி பண்ணு” என்ற பார்வைப் பார்க்க “அதில்ல பெரியப்பா.. எங்க ஜீவா ரொம்ப நல்ல
பையன்.. எந்தப் பிரச்னையும் வராது.. அன்ட் நீங்க மதி ஆசைப்பட்ட எல்லாவற்றையும்
நிறைவேத்துவீங்களாமே…
பெரியம்மாக்கு இதுல சுத்தமா விருப்பம் இல்லையாம். நீங்க தான் அவரை சமாதானம் செஞ்சு கல்யாணத்திற்கு
சம்மதிக்க வைக்க வேண்டும். நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக முடியும் பெரியப்பா.. நீங்க சொல்லி பெரியம்மா கேட்காம இருப்பாங்களா.. உங்க பெரிய
மீசையை வைத்து கொஞ்சம்
மிரட்டுனாவே பயந்திருவாங்க… ப்ளீஸ்
பெரியப்பா” என்று தன் பாதி திரும்பிய உடம்பையும் தலையையும் சீட்டில் சாய்த்த
வண்ணம் பேசியவளைக் கண்டு முறுவலித்தார் முருகானந்தம்.

ஏனோ ஜீவா விக்னேஷின் சார்,
அங்கிளுக்கு நடுவில் இந்த பெரியப்பா முருகானந்தத்தை ஈர்த்துவிட்டது. நேற்று
மனைவி போன் செய்து ஒப்பாரி வைத்த போது “சரி பையன் நல்லவன் என்றால்
கல்யாணம் செய்து வைத்துவிடலாம்” என்று நினைத்து தான் சென்னை வந்தது அவர். ஆனால் இவர்கள் செய்த இந்த
சந்திப்பும் பேச்சும் அவருக்கு சிரிப்புடன் அவர்களின் மேல் நல்ல எண்ணம் தான்
வந்தது.

“உன் பெயர் என்னமா?” என்று
கௌசியைப் பார்த்துக் கேட்டார் முருகானந்தம்.

“கௌசிகா பெரியப்பா” என்றாள்.

“சரி என் பெண்ணின்
விருப்பத்திற்காகவும் நீ பேசியதற்காகவும் நான் உன் பெரியம்மாவிடம் கேட்கிறேன்”
என்று அவர் சொல்ல “அப்படினா உங்களுக்குச் சம்மதமா?” என்று நான்கு
பேரும் ஒரு சேர வினவ “ஆமாம்” என்றார்
முருகானந்தம்.

விக்னேஷும் ஜீவாவும் “என்னடா நம்ம பேசுனதுக்கு ஒரு ரியாக்ஷனும் இல்ல”
என்பதைப் போலப் பார்த்துக்
கொண்டனர்.

“தாங்க்ஸ் பா” என்று தன் தந்தையை மதி
கட்டிக்கொள்ள ஜீவா, விக்னேஷ், கௌசி மூவரும் ஹைபை அடித்துக் கொண்டனர்.

பின் பரமேஸ்விரயைத் திருமணத்திற்கு ஒத்துக்க வைத்து நிச்சயதார்த்தத்தை ஒரு கோயிலில் எளிமையான முறையில் முடித்தனர். இரண்டு மாதத்தில் கல்யாணம் என்பதால் எல்லோரும்
கல்யாண வேலையில் மூழ்கிவிட கௌசி  தனிமையாக உணர்ந்தாள்.

அவ்வப்போது விக்னேஷிற்கு கால் செய்தாலும் பிசி என்று வந்தது. ஜீவாவையும் மதியையும் டிஸ்டர்ப் செய்யவும் கௌசிக்கு மனமில்லை.
அவ்வப்போது ஆபிஸில் பேசுவதோடு சரி. அடுத்து ஒருவாரம் கழித்து ஆபிஸ்
முடிந்து கிளம்பியவள் விக்னேஷ் வேலை செய்யும் கம்பெனி அருகில் வண்டியை
நிறுத்தி தன் தந்தைக்கு சுகர் டாப்ளட்ஸ் வாங்கிக் கொண்டு இருந்தாள். திடீரென ஏதோ தோன்றத் திரும்பிப்
பார்த்தவள் விக்னேஷ் போலவே ஒருவன் ஒரு பெண்ணோடு போவது போல
இருந்தது. சீக்கிரம் பணத்தைக் கொடுத்து விட்டு மாத்திரையை வாங்கிக் கொண்டு பணத்தின் மிச்சத்தைக் கூட வாங்காமல்
ஓடியவளால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

விக்னேஷிற்கு போனைப் போட்டவள் “விக்கா எங்க இருக்க?” என்று கேட்டாள்
கௌசிகா.

“நான் இந்த நேரத்தில் எங்கு இருப்பேன்.. ஆபிஸ் தான் டி.. ஏன் என்ன விஷயம்?” என்று அவன் வினவ “ஒன்னுமில்ல.. நீ வேலையை முடிச்சிட்டு கால் செய்” என்று வேலை நேரத்தில் டிஸ்டர்ப் செய்யப்
பிடிக்காதவள் போனை வைத்துவிட்டாள். அப்புறம் இரவு ஆகியும் அவன்
கூப்பிடவில்லை. கௌசியைத் தனிமை மிகவும் வாட்டி எடுத்தது.

அன்று இரவு டைரியை எடுத்தவள் ஒரு கவிதையை எழுதினாள்.
‘என் தேடல் நீ
என் காதல் நீ
என் மௌனத்தின் பின் உள்ள
காரணம் நீ
என் கவிதையில் மறைந்துள்ள
பொருள் நீ
என்று நான் அறிவேன்
நீ எப்போது அறிவாய்?’
என்று எழுதியவள் அந்த எழுத்துகளை பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாள்
கௌசிகா. அவனிடம் தன் காதலை சொல்லிவிடலாமா என்று இருந்தது அவளுக்கு.. “ஆனா எப்போ?” என்று
நினைத்தவள் “சரி ஜீவா கல்யாணம் முடியட்டும்” என்று விட்டுவிட்டாள். டேபிளில் தலை வைத்து யோசித்துக்
கொண்டு இருந்தவள் டைரியின் பக்கத்திலேயே படுத்து உறங்கிவிட்டாள்.

அடுத்த நாள் ஞாயிறு என்பதால் காலையில் எட்டு மணிக்கு எழுந்தவள்
ப்ரௌனிக்கு ஆர்டர் செய்த மரத்தில் ஆன ஒரு பெரிய வீடு முந்தைய நாள் பார்சலில்
வந்ததைப் பிரித்தாள். ப்ரௌனி பெரிதானாலும் அது யூஸ் ஆகும் என்று
நினைத்தவள் அதை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவள் தன் வீட்டின் முன்னால் உள்ள சிறிய குளிர் மண் இடத்தில் அதை வைத்துவிட்டு
ப்ரௌனிக்குத் தேவையான
எல்லாவற்றையும் அதில் உள்ளேயும் வெளியேயும் வைத்துக் கொண்டிருந்தாள்.

கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டுத் திரும்பியவள் ‘விக்கா’ நின்றிருப்பதைப் பார்த்தாள். ஒரு உணர்ச்சியற்ற பார்வையை அவன் மேல் வீசியவள் மீண்டும் திரும்பித் தன் வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டாள்.

ஸ்கை ப்ளூ டீ சர்ட் 3/4th மஞ்சள் நைட் பாண்ட் போட்டு தூக்கிக் கட்டியிருந்த கொண்டையுடன் மண் எல்லாம் கை காலில் அப்ப வேலை செய்து
கொண்டிருந்தவளைப் பார்க்கையில் அவனுக்குச் சிரிப்பு வந்தது. “கௌசி”
என்று அழைத்தான். இருமுறை
அழைத்தும் பலன் இல்லாமல் போனது.

“கௌசிக்” என்று கடைசியாக அவன் கௌசியை அழைக்க கையில் கிடைத்த கல் ஒன்றை அவன் மேல் எறிய அது
நூல்அளவில் அவன் மண்டையை பதம் பார்க்காமல் மிஸ் ஆனாது. நேராக
எந்திரித்து வந்தவள் அவனது உச்சி முடியைப் பிடித்துவிட்டாள்.

“உனக்கு என்னலாம் நியாபகம் இருக்கா?..என்கிட்ட நீங்க எல்லாரும் பேசி எவ்வளவு
நாள் ஆச்சுத் தெரியுமா? நீ என் போன் கூட இப்போலாம் அட்டண்ட் பண்றது இல்ல” என்று தலையைப் பிடித்து ஆட்டி அவனைக் கேட்டவளின் குரல் உடைந்தது.

“ஹே.. ஸாரி ஸாரி… ஆஆ வலிக்குது டி..” என்று அலறியவன் “அதுக்கு தான் உன்ன வெளில கூட்டிட்டு போலாம்-ன்னு வந்திருக்கேன் டி. ஜீவாவும் மதியும் அங்க
நம்ம கூட ஜாயின் ஆயிருவாங்க” என்று
சொல்லியபடியே அவளின் கையை தன் தலையில் இருந்து எடுத்தவன் அவளைப்
பார்க்க “நீங்க கூப்ட உடனே மட்டும் நான் வரணுமா.. முடியாது போடா” என்று
முறைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்கௌசிகா.

கௌசியைக் கெஞ்சிக் கூத்தாடி சமாதானம் செய்து எக்ஸ்பிரஸ் அவென்யூ
-விற்கு எப்படியோ தன்னடைய பைக்கில் கூட்டிவந்தான் விக்னேஷ்.

மேலே அவர்கள் ஃபுட் கோட்டிற்குச் செல்ல
ஜீவாவும் மதியும் முன்னாடியே வந்து அமர்ந்திருந்தனர். அவர்களுடன் சென்று
விக்னேஷும் கௌசியும் அமர கௌசி ‘உர்’ என்ற முகத்துடன் அமர்ந்திருந்தாள். பின் ஜீவாவும் மதியும் காரணம் கேட்க எச்சாக சிலுப்பிக் கொண்டவள் பதில் பேசவில்லை.

“அது ஒன்னுமில்ல.. கௌசிக்கு கோபம் வந்திருச்சு நம்ம மேல” என்று இன்று காலை வீட்டில் நடந்ததை எல்லாம்
சொன்னான் விக்னேஷ்.

“அட அவ்வளவு தானா?” என்று கேட்ட ஜீவா “என்னடா விக்கி கௌசியை எப்படி சமாதானம் செய்யறதுன்னு மறந்துட்டாயா?” என்று கேட்டு ஜீவா எழ மதியும் ஜீவாவுடன் எழுந்து தன் அருகில்
வர விக்னேஷ் எழுந்தான். மூவரும் தன்னைச் சுற்றி நிற்கு அவர்கள் என்னப்
பண்ணப்போறார்கள் என்று
புரிந்துவிட்டது.

நொடியும் தாமதிக்காமல் மூவரும் ‘கிச்சுகிச்சு’ மூட்ட கௌசியால் சிரிப்பைக்
கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த ஃபுட் கோர்ட்டில் இருந்த எவரையும் கண்டுகொள்ளவில்லை நான்கு பேரும். பின் கௌசி சமாதானம் ஆக ஃபுட்
கோர்ட்டில் நான்கு பேரும்
கொறித்துவிட்டு ஷாப்பிங்கை
ஆரம்பித்தனர். கல்யாணத்திற்குப் பிறகு
சும்மா எங்காவது சொந்தக்காரங்க வீட்டுக்குச் சென்றால் வேண்டும் என சில
சேலைகளைப் பார்த்தாள் மதி.

“ஏண்டி கௌசிக்.. நீ இந்த சேலை எல்லாம் ட்ரைப் பண்ணி பொண்ணா மாற ட்ரைப் பண்ணலாம்ல” என்று அங்கிருந்த சேரில்
உட்கார்ந்தபடி விக்னேஷ் கிண்டல் செய்ய “அய்யயோ போடா.. என் சீர் அன்னிக்கு
நான் கட்டியதே போதும். தட்டி தட்டி விடும். நடக்கவும் தெரியாது எனக்கு” என்றாள்
கௌசி.

“அட இப்போ பழகுனா தான புருஷன் வீட்டுக்குப் போன அப்புறம் கட்ட முடியும்”
என்று விக்னேஷ் சிரிக்க “கல்யாணம் ஆன சேலை கட்டணுமா.. அதெல்லாம்
முடியாது” என்று பதில் கொடுத்தாள் கௌசிகா.

“கல்யாணம் ஆன அப்புறம் இதை உன் புருஷன் கிட்ட சொல்லு பார்ப்போம்” என்று சவால் போல சொல்ல “அதானே பண்றேன்” என்று மனதிற்குள் நினைத்தபடி நின்றாள்.

“சரி வா.. நான் உனக்கு சாரி வாங்கித் தரேன்” என்று டிசைனர் சாரீஸ் இருந்த
பக்கம் அவளை இழுத்துக் கொண்டு சென்றான் விக்னேஷ்.

கௌசிக்கு சாரி எடுத்தே பழக்கம் இல்லை.. விக்னேஷே அவளது தங்க நிறத்திற்குப் பொருத்தமான ஆரஞ்ச்
மஞ்சள் கலந்த ஒரு டிசைனர் சில்க் சாரியை எடுத்துத் தந்தான். எல்லாம் முடிந்து நான்கு பேரும் வெளியே
வரும்போது ஏதோ உறுத்த கௌசி திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே வந்தாள்.

ஜீவாவும் மதியும் ஒரு ஜீவாவிற்கு ஷூ வாங்க ஒரு கடைக்குள் போக.. அதேசமயம் விக்னேஷிற்கும் போன் வர
அவன் “ஆபிஸ்போன்” என்று ஒரு ஓரத்தில் போய் நின்று பேச ஆரம்பித்தான். ‘கௌசியும் நீங்க போங்க நாங்க வரோம்’ என்று 2nd ப்ளோரில் நின்று வேடிக்கை பார்த்தபடி
நின்றிருந்தாள் கௌசி.

‘ஏன் கொஞ்ச நாளாக யாரோ பாலோ பண்ற மாதிரியே இருக்கு’ என்று யோசித்துக் கொண்டு நின்றிருந்தவள்
“ஹாய் கௌசிகா” என்ற குரலில் திரும்பினாள்.

யார் எனத் திரும்பிப பார்த்தவள் அவள் பின் நின்றிருந்தவனை அவளுக்கு யார் எனத் தெரியவில்லை.

“யார் நீங்க..?” – கௌசிகா.

“உங்களுக்கு என்னைத் தெரியாது.. ஆனால் எனக்கு உங்களைத் தெரியும்” என்று அவன் பேச “சரி தெரிஞ்சிக்கோங்க
பை” என்று நகரப் பார்த்தவளை அவன் குரல் தடுத்தது.

“ப்ளீஸ் கௌசிகா நில்லுங்க.. நான் சொல்றத ஒரு நிமிடம் கேளுங்களேன்” என்று அவன் கெஞ்ச கௌசிகா நின்றாள்.
“என்ன சொல்லுங்க.. எனக்கு டைம் ஆச்சு?” என்று கடுமையாக குரலில்
சொன்னாள் கௌசிகா.

“கௌசிகா எனக்கு.. நான் உங்களை இரண்டு மாசமா லவ் பண்றேன்.. நான் உங்க ஆபிஸ் கீழ இருக்க பர்ஸட் ப்ளோர்
தான் இருக்கேன்” என்று சொல்ல கௌசிகா அவனது பேச்சில் குறுக்கே புகுந்தாள்.

“ஸீ.. நீங்க யாருனே எனக்குத் தெரியாது. எனக்கு லவ்ல லாம் இன்ட்ரஸட் இல்ல.. Don’t waste your time.. இனி என் பின்னாடி நீங்க வராதீங்க” என்று
சொல்லிவிட்டு கௌசிகா நகரப் பார்க்க அவன் கௌசிகாவின் கையைப்
பிடித்துவிட்டான்.

“கௌசிகா. ப்ளீஸ்.. ப்ளீஸ்” என்று அவன் கெஞ்ச “இப்போ நீங்க கைய விடலைன்னா அவ்வளவு தான்.. Please
take off your hands” என்று சொல்லச் சொல்ல விக்னேஷ் வந்துவிட்டான்.

முதலில் பிரண்டிடம் பேசுகிறாள் என்று நினைத்த விக்னேஷ் அவன் கையைப்
பிடிப்பதைக் கண்டதும் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றான். வேக நடையுடன்
வந்தவன் கௌசிகாவின் கரத்தைப் பற்றியிருந்த அவனின் கையை எடுத்து
முறுக்க கௌசிகா பயந்துவிட்டாள்.

“டேய் விக்கா.. என்ன பண்ற நீ..
தயவுசெஞ்சு அவன விடு.. எல்லாரும் பாக்கறாங்க” என்று கௌசிகா விக்னேஷின் தோளைப் பிடித்து இழுத்தாள். ஆனால் விக்னேஷின்
கையோ இரும்பென அவனின் கையைப் பிடித்திருந்தது.

“விக்கா” என்று அவனைப் பிடித்து உலுக்க “வாயமூடு கௌசி” என்று அடிக்குரளில்
உறுமினான்.

அதற்குள் ஷூ கடையில் இருந்து வெளியே வந்த ஜீவாவும் மதியும் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்து கௌசியுடன் சேர்ந்து விக்னேஷைப் பிடித்து இழுத்தனர். ஆனால் ஆடாமல்
அசையாமல் அவனின் கையை
பிடித்திருக்க அவன் வலி தாங்க முடியாமல் நின்றிருந்தான்.

இரண்டு நிமிடப் போரட்டத்திற்குப் பிறகு
அவனின் கையை விட்ட விக்னேஷ் “இனி உன்ன கௌசி பின்னால் பார்த்தேன்..
நீ அவ்வளவு தான்” என்று கர்ஜித்தான். அவனை அந்த இடத்தில் இருந்து இழுத்து
வர போதும்போதும் என்று ஆகிவிட்டது மூவருக்கும்.

“டேய் என்னடா ஆச்சு?” என்று ஜீவா கேட்க “என்னைக் கேட்காதே.. இவளைக் கேள்”
என்று கோபத்தைக் காட்டினான். கௌசி தலை குனிந்தபடியே நடந்ததைச் சொல்லி முடித்தாள்.

“அறிவிருக்கா டி.. எவனே தெரியாதவன் கூட பேசிட்டு நிப்பையா?” என்று விக்னேஷ் திட்ட “ஏய் சும்மா சும்மா
என்னத் திட்டாதே.. அவன் பர்ஸ்ட் டீசன்ட்-ஆ தான் பேசிட்டு இருந்தான்.. அவன் கையைப் பிடிப்பான் என்று எனக்குத்
தெரியுமா சொல்லு.. அவன் நம்ம கம்பெனி பர்ஸ்ட ப்ளோரில் இருப்பதாகச்
சொன்னதால் தான் மரியாதைக்காக நின்றேன்” என்று சண்டையிட்டாள்.

“டேய் இரண்டு பேரும் நிறுத்துங்க” என்று ஜீவா சொல்ல ஒரு இடத்தில்
உட்காருவதற்கான போடப்பட்ட பெஞ்சில் நால்வரும் உட்கார்ந்தனர்.

பிறகு இரண்டு பேருக்கும் கொஞ்சம் கோபம் அடங்க “என்ன விக்னேஷ் இதுக்கே இப்படி டென்ஷன் ஆகிடீங்க..
ஆபிஸ்-ல டெய்லியும் இரண்டு ப்ரபோசல் வந்துட்டு இருக்கு நம்ம கௌசிக்கு” என்று
சிரித்தாள்.

“எது நம்ம் கௌசிக்-கு அவ்வளவு ப்ரபோசல் ஆஆஆ” என்று கௌசியின் தோளில் கையைப் போட்டவன் “என்னடா கௌசிக் அவ்வளவு அழகா நீ” என்று கேட்டான் விக்னேஷ்.

“உன்ன மாதிரி ஆள் கண்களுக்கு என் அழகெல்லாம் தெரியாது” என்று கண்களைச் படத்தில் வருவதைப் போலச்
சிமிட்டிக் காண்பிக்க அவளை ஜீவாவும் விக்னேஷும் ஒருசேரக் கொட்டினர்.

பிறகு ஜீவாவும் மதியும் கிளம்ப
விக்னேஷும் கௌசியும் பைக்
பார்க்கிற்கு வந்து சேர்ந்தனர். விக்னேஷ் பைக்கை எடுக்கப் போக ‘இவன் இத்தனை நாள் பின்னாடி சுற்றியது தான்
உறுத்தியது போல’ என்று நினைத்துக் கொண்டவள் பைக்கை எடுத்துக் கொண்டு விக்னேஷ் வர அவனுடன் ஏறி
வீட்டிற்குப் புறப்பட்டாள்.

ஆனால் அவளது யூகம் சரிதானா?

இன்றும் தன்னை நோட்டம் விட்டக் கண்களை ஏன் கௌசியால் கண்டுகொள்ள முடியவில்லை? விதியா?

விதிதான்.

நாட்கள் செல்லச் செல்ல ஜீவா மதியின் திருமண நாளும் வந்தது. ஜீவா மதியின்
கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தாலியைக் கட்டி சுற்றி இருப்போரின் ஆசிர்வாதத்தோடு ஆஃபிசியலாக மதியைத் தன் மனைவி ஆக்கிக் கொண்டான் ஜீவா. காதலித்தவர்களையே கைபிடித்த பெருமிதம் இருவரின் முகத்திலும்
நன்றாகத் தெரிந்தது.

கல்யாணத்திற்கு வந்த யாரோ ஒருவர் வரதராஜன் “அடுத்த கல்யாணம் உங்கள் வீட்டில் தானா?” என்று கேட்க தன் தந்தை தலை ஆட்டுவதைப் பார்த்தாள்.

ஆனால் கௌசிக்கு தான் முகம்
வாடிவிட்டது. ‘விக்னேஷ் இப்போது எல்லாம் வேலை வேலை என்று தனக்கு நேரம் ஒதுக்குவதில்லை.. போன்
பண்ணாலும் எடுப்பதில்லை என்று. நேரில் பார்க்கும் போதும் லேப்டாப் போனுடன் உட்கார்ந்திருக்கிறான்.
இவனிடம் எப்போது சொல்லுவது?’ என்று கௌசியின் மனம் பரபரத்தது.

‘போதாக்குறைக்கு இந்த மதியின் அண்ணன் சுதாகரன் வேறு பின்னால் ஜொள் விட்டுக் கொண்டு சுத்துகிறான். அவன் விடும் ஜொள்ளில் எல்லாரும்
கல்யாண மண்டபத்தில் இருந்து நீந்திக் கொண்டுதான் போக வேண்டும் போல.
ஜீவா மதி முகத்திற்காகப் பொறுத்துக் கொண்டு இருந்தாள் கௌசிகா. இல்லை
என்றால் மண்டையை உடைத்திருப்பாள்” என்று எரிச்சலை எல்லாம் அடக்கிக்
கொண்டு இருந்தவள் “நடுவில் இந்த விக்கா வேறு இப்படி பண்றான்’ என்று நொந்து கொண்டாள்.

போகட்டும் இந்த வாரம் அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்று மனதிற்குள் நினைத்தாள்.

ஆனால் எல்லாம் மாறி தன் வாழ்வே தலைகீழாகப் போய் எல்லோரின் நிம்மதியும் அழியப் போவதை அன்று
கௌசிகா மட்டும் இல்லை எவரும் அறியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!