அத்தியாயம்-9

ஜீவாவும் மதியும் கல்யாணம் முடிந்த கையோடு தேனிலவிற்கு ஏழு நாட்கள்
கிளம்ப எல்லோரும் அவரவர் வேலையில் மூழ்கினர்.

ஹனிமூனிற்குச் சென்ற ஜீவாவும் மதியும் அவர்கள் வேலையில் மூழ்கினர்
(ஹீஹீஹீ). சொல்லப்போனால்
வெளியில் சுற்றியதே கம்மி தான்.. மிச்ச நேரம் போக அறையிலேயே காதலில்
கட்டுண்டு இருந்தனர்.

“ஜீவா…” – மதி.

“ம்ம்” – அவளின் கூந்தலில் விளையாடிய படியே ஜீவா.

“உன்கிட்ட ஒன்னு சொல்லணும்..” – மதி.

“ம்ம்” – அவன் வேலையில் அவன் மும்முரமாக இருந்தான்.

“இப்படி பண்ணிட்டு இருந்தா நான் எப்படி சொல்ல முடியும்.. இரண்டு நிமிடம் கை காலை வச்சிட்டு சும்மா இருக்க
முடியாதா?” என்று அவனிடம் இருந்து தள்ளி உட்கார்ந்தபடிக் கேட்டாள்.

“ஏய்ய்ய்ய்… ஹனிமூன் வந்துட்டு இன்னும் பேசனும்-னு சொல்றியே டி.. லவ்
பண்ணப்போ பேசுனது எல்லாம் பத்தாதா .. அநியாயம் பண்ணாதடி” என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கெஞ்சினான் ஜீவா.

சிரிப்பை அடக்கிய மதி “சரிசரி இரண்டே நிமிடம் ஜீ… ப்ளீஸ்” என்று உதட்டைப் பிதுக்கிக் கேட்டாள்.

“சரி… சொல்லு.. சீக்கிரம்” என்று பரந்தான் ஜீவா.

“நம்ம கௌசியை நோட் பண்ணீங்களா இந்த ஒரு மாசமா?” என்று கேட்டாள் மதி.

“ஏன் அவளுக்கு என்ன டி” என்று புருவ முடிச்சுடன் ஜீவா எதிர்க்கேள்வி கேட்டான்.

“அவ ஒரு மாதிரி இருக்கா ஜீவா.. கொஞ்சம் டல்லா.. நான் அவள ஒன் மன்த்-ஆ நோட் பண்ணிட்டு தான் இருக்கேன்”
என்று சொன்ன மதியின் முகமுமே குழப்பத்தில் இருந்தது.

“அது நம்மலாம் கூட இல்லைல.. அதான் அப்படி இருந்திருப்பா..” என்றான்
அவளின் விரல்களைப் பற்றியபடி.

“இல்ல ஜீவா.. அவ அந்த அளவிற்கு சில்லி கேரக்டர் இல்ல.. அவளுக்குத் தெரியாதா நமக்கு எங்கேஜ்மேன்ட்
ஆயிருக்கு அதனால பிஸியா இருப்போம்-ன்னு” என்றாள்.

“சரி நீ என்ன தான் சொல்ல வர..” என்று சற்று பொறுமை இழந்தபடிக் கேட்டான் ஜீவா.

“எனக்கு என்னமோ கௌசி யாரையோ லவ் பண்றானு தோணுது ஜீவா” என்றுத்
தன் மனதில் நினைத்ததை மறைக்காமல் ஜீவாவிடம் சொன்னாள் மதி.

இந்த சந்தேகம் ரொம்ப நாளாக இருந்த ஒன்று மதிக்கு.. எதையும் மறைக்கும் பழக்கம் இல்லாத கௌசிகா.. தான்
எழுதும் கவிதையை மட்டும் மறைப்பாள் அனைவரிடமும்.. எவ்வளவு கெஞ்சிக் கேட்டாலும் காண்பிக்கவே மாட்டாள்.
அப்படி இருக்க ஒருநாள் மதி அவள் ஒரு துண்டுப் பேப்பரில் எழுதி வைத்த ஒரு
கவிதையைப் படித்துவிட்டாள்.
அதிலிருந்து இருந்த சந்தேகம் தான். அப்போதே சொல்லியிருந்தால் “பொசசிவ்னால கௌசிகாவைப் பிடிக்காமல் தான் இப்படி சொல்லுகிறாள்”
என்று ஜீவா எண்ணியிருப்பான் என்று
தான் கல்யாணத்திற்குப் பிறகு அதுவும் கௌசி மிகவும் டல்லாகத் திரியவே ஜீவாவிடம் கொண்டு சென்றாள்.

“எதை வச்சு சொல்ற அவ லவ் பண்றானு” என்று ஜீவா கேட்க “அது.. அது.. எனக்கு
அவ ஆக்டிவிட்டீஸ் பாத்தாலே தெரியுது ஜீவா” என்றாள்.. அவனிடம் அந்தக் கவிதையைப் பற்றி மூச்சு விடவில்லை.

“அவ அப்படி எல்லாம் இருந்திருந்தா எங்ககிட்ட சொல்லியிருப்பா டி.. எதையும் மறைக்க மாட்டாள்” என்றான்
அழுத்தமானக் குரலில்.

“ஆனா நீங்களும் விக்னேஷும் மட்டும் சிலதை மறைக்கறீங்க இல்ல?” என்று பட்டென்று கேட்டுவிட்டாள்.

“எதை சொல்ற நீ” – ஜீவா அவள்
கண்களைப் பார்க்காமல்
தலையணையை கையில் எடுத்தபடிக் கேட்டான்.

“போதும் ஜீவா… எனக்கு எல்லாம் தெரியும்.. கௌசிக்குத் தெரிந்தால் எப்படி
வருத்தப்படுவா தெரிமா? நானே ஒரு மாதிரி தான் ஆயிட்டேன்” என்று எண்ணையில் போட்ட கடுகு போலப் வெடித்தாள் மதி.

“மறைக்கணும் இல்ல மதி.. இப்போ உங்க எல்லாருக்கும் சொல்ல வேணாம்னு
இருந்தோம்” என்றான் ஜீவா.

“ஊருக்குப் போன அப்புறம் கௌசிக்கு ஆவது இப்போவே சொல்லிருங்க” என்றாள்.

“சரிடி.. “என்றான் ஜீவா தன் மனைவியை அணைத்தபடி.

“இதுல மட்டும் விவரமா இருங்க…” என்று சிரித்தவள் தன் கணவனின் அணைப்பை
ஏற்று அவனுடன் இணைந்தாள்.

கல்யாணத்திற்காக கௌசி எடுத்த லீவோடு சேர்த்து மதியின் வேலையும் அவள் தலையிலேயே விழுந்தது. மாலை வீடு வந்து சேரவே ஏழு மணி ஆனது. அலுப்பின் காரணமால் அவளால்
விக்னேஷிடம் பேசக் கூட முடியவில்லை.. பேசலாம் என்று நினைத்தவள் அவனிற்கும் லீவ் எடுத்திருந்ததால் அதே
வொர்க் ஸ்டெரஸ் இருக்கும் என்று விட்டுவிட்டாள்.

அன்று காலை ஆபிஸிற்கு கிளம்பிக் கொண்டு இருந்தவள் போன் அடிக்க
எடுத்து காதில் வைத்து “ஹலோ” என்று வாட்சைக் கட்டியபடியே பேசினாள்
கௌசி.

“ஐ லவ் யூ” என்று ஒருவனின் குரல் கேட்டது.. கூடவே ஒரு கேவலமான சிரிப்புடன்.

“எக்ஸ்க்யூஸ் மீ” – கௌசிகா.

“ஐ லவ் யூ பேபி” – என்றவன்
போனிலேயே கௌசிக்கு முத்தத்தைத் தந்தான்.

அவன் செய்கை அருவெறுப்பைத் தர “இனி போன் பண்ணினா செருப்பால
அடிப்பேன் டா நாயே” என்று கோபமாகச் சொன்னவள் போனைக் கட் செய்து அந்த
நம்பரை ப்ளாக் செய்தாள்.

வழக்கம் போல ஆபிஸிற்குச்
சென்றவளுக்கு ஏற்கனவே நிறைய வேலைகளை முடித்து வைத்திருந்ததால் கொஞ்சம் வேலை அன்று கம்மியாக
இருந்தது. ரொம்பவே போர் அடிக்க இயந்திரமாக வேலைகளைச் செய்து
கொண்டிருந்தாள். ஏதோ யோசனையில் கைகள் தானாக வேலை செய்ய
பதினொரு மணி அளவில் மதியிடம் இருந்து கால் வந்தது கௌசிகாவிற்கு.

போனை எடுத்துக் காதில் வைத்தவள் “அப்புறம் புதுப் பொண்ணே.. எப்படி இருக்க? ஒரு வாரமா போனே இல்ல..
ஒரே ஜாலி தான் போல” என்று
கேலியைக் கௌசி ஆரம்பித்தாள்.

“கலாய்க்காத கௌசி.. ப்ளீஸ்” என்று மதியின் வெட்கக் குரல் வந்தது.

“ஆஹாஹா.. வெட்கம்லா வருதே.. உன்ன வெட்கப்பட வச்ச ஜீ மாமா கிட்ட போனைக்
கொடு” என்றாள் கௌசி.

“ம்ம்” என்றவள் இரண்டு நொடிக்குப் பிறகு “கௌசி.. அவரு உன்கிட்ட பேச
மாட்டாராம்.. ஆள விடுறா சாமின்னு ஓடிட்டார்” என்று சிரித்தாள் மதி.

“இருக்கட்டும் இருக்கட்டும்” என்ற கௌசி.. “எப்போ சென்னை ரிடர்ன் மதி?” என்று
கேட்டாள்.

“நாங்க வந்துட்டோம் கௌசி.. இன்னிக்கு மார்னிங் 7க்கு..” என்றாள் மதி.

“ஹம்ம்.. அப்போ நாம ஈவ்னிங் மீட் பண்ணலாமா? உங்களோட அவர்கிட்ட கேட்டு சொல்லுங்க” என்று கௌசிகா மறுபடியும் ஆரம்பித்தாள்.

“உகூம்… வந்தால் நீ கலாய்ப்ப” என்று மதி சிணுங்க “அதுக்குன்னு நான் கிண்டல்
பண்ண மாட்டேன் வா-ன்னு லாம் சொல்ல மாட்டேன்.. நீங்க வரீங்க.. இல்லைனா நான் அங்க வந்துட்டு நைட் அங்கையே உன் கூடையே இருந்துப்பேன்” என்று கௌசி மிரட்டினாள்.

“எங்க கௌசி மீட் பண்ணலாம்?” என்று
பவ்யமானக் குரல் வந்தது மதியிடம் இருந்து.

“ஹாஹாஹா.. தட்ஸ் மை கைய்ஸ்” என்று கிளுகிளுத்தவள் “ஈவ்னிங் 5″00 க்ளாக்.. பெசன்ட் நகர் பீச் கே.எப்.சி” என்றாள் கௌசிகா.

“ஓகே டன்” என்று மதி சொல்ல இருவரும் போனை வைத்தனர்.

போன் காலை கட் செய்த கௌசிகா விக்னேஷிற்கு போனைப் போட்டாள். ரிங்
போக அவன் கட் செய்தான். மீண்டும் இரு முறை முயற்சி செய்ய கட் செய்து விட்டான். பிறகு லன்ச் டைமில் கால்
செய்ய போனை எடுத்தவன் “என்னடி” என்று எரிச்சலானக் குரலில் பேசினான்.

“இப்போ எதுக்கு சலிச்சுக்கற.. இப்போ உனக்கு லன்ச் டைம் தானே?” என்று கௌசிகா கேட்க விக்னேஷ் தடுமாறினான்.

“சரி என்ன விஷயம் சொல்லு..” என்று அவசர அவசரமாகப் பேசினான்.

“ஈவ்னிங் பெஸ்ஸி பீச் பக்கத்துல இருக்க கே.எப்.சி வந்திடு.. மதியும் ஜீயும்
வந்தாச்சு.. எல்லோரும் மீட் பண்ணலாம்” என்றவளிடம் “எப்போ பாரு சுத்திக்கிட்டே
இருப்பாயா டி.. வீட்டுல அடக்க ஒடுக்கமா இருக்க மாட்டியா?” என்று எரிச்சல் பட்டான்.

“அசிங்கமா திட்டிடுவேன்டா உன்ன.. பாத்து பத்து நாள் கிட்ட ஆகப் போது.. பாக்கலாம்னு கூப்ட சலிச்சுகற.. நீ ஒன்னும் வர வேண்டாம்.. நாங்க மூன்று
பேர் மட்டும் பாத்துக்கறோம்” போனைக் கட் செய்தவள் அரை சாப்பாட்டாலேயே எழுந்து விட்டாள்.

கையைக் கழுவிக்கொண்டு வந்து போனைப் பார்க்க அதற்குள் மூன்று மிஸ்டு கால் வந்திருந்தது விக்னேஷிடம்
இருந்து. அவனிற்கு திருப்பி போனைப் போட “ஹலோ” என்றான் விக்னேஷ்.

“ம்ம்” – கௌசிகா.

“கோவமா டி” – விக்னேஷ்
யோசனையானக் குரலில்.

“பின்ன வரதா.. ஏதோ நான் எப்போமே ஊர் சுத்தற மாதிரி பேசற.. அதுவும் நான் வெளில சுத்தறதே உங்க கூடத்தான்..
நான் என்னமோ டெய்லியும் சுத்தற மாதிரி பேசற நீ” என்று தன் மனதில் இருந்ததை அப்படியே சொல்லி முடித்தாள்.

“ஸாரி டி.. கொஞ்சம் டென்சன் அதான்” – விக்னேஷ்.

“ம்ம்” – கௌசிகா.

“சரி நான் ஈவ்னிங் வரேன்.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்-உம் வச்சிருக்கேன்” என்று
கௌசியின் ஆர்வத்தைத் தூண்டினான் விக்னேஷ்.

“என்ன சர்ப்ரைஸ் டா விக்கா” என்று ஆர்வமானக் குரலில் கேட்டாள்.

“அது நேர்ல தெரிஞ்சுப்ப நீ..” என்றவன் “பட் கௌசி நோ மட்டும் சொல்லிடாத டி”
என்றான் கெஞ்சும் குரலில்.

“……..” – கௌசிக்குப் பேசவே வரவில்லை.. ஏனோ 1000வாட்ஸ் மின்சாரம் தாக்கியது போல உணர்ந்தாள்.

“கௌசி இருக்கியா?” – விக்னேஷின் குரல்.

“ம்ம்.. என்னன்னு மட்டும் சொல்லேன்” – என்று அவளுக்கே எட்டாதக் குரலில்
கேட்டாள்.

“நம்ம கல்யாணத்தைப் பத்திதான் டி” – என்று விக்னேஷ் சொல்ல கௌசிக்கு
மயக்கம் போட்டு விழாதக் குறை தான். “என்னடி பேசவே மாட்டிற” என்று விக்னேஷின் குரல் வந்தது.

“இருக்கேன்டா.. சரி ஈவ்னிங் பேசலாம்” என்று போனை அணைத்துவிட்டாள்.

போனை அணைத்த கௌசிக்கு தன் இதயத் துடிப்பை நன்றாகவே உணர
முடிந்தது.. தன்னால் அரும்பும் சிரிப்பை அடக்கவே முடியவில்லை அவளால்.
இதமான காற்றில் பறக்கும் பஞ்சைப் போல அவளின் இதயம் பறந்து கொண்டிருந்தது.

சந்தோஷத்திலும் ஆவலிலும்
வேலைகளை எல்லாம் சீக்கிரமாக முடித்தவள் மணியைப் பார்த்தாள்.. மணி
மூன்றரை தான் ஆகி இருந்தது. பேசாமல் இப்போதே கிளம்பிப் போய் மதியிடமாவது பேசிக் கொண்டு இருப்போமா? என்று நினைத்து கொண்டு
கிளம்பியவள் அவளின் போன் என்னை எடு என்று சிணுங்க போனை எடுத்துப் பார்த்தாள்.. வரதராஜன் தான்
கூப்பிட்டிருந்தார்.

போனை எடுத்துக் காதில் வைத்தவள் “சொல்லுங்க அப்பா” என்றாள்.

“பாப்பா எப்போ வீட்டுக்கு வருவே?” எனக் கேட்டார் வரதராஜன்.

“ஏம்ப்பா… வேலை முடிஞ்சுச்சு.. எதாவது வாங்கிட்டு வரணுமா?” என்றாள் தன்
ஹேண்ட்பாக்கில் எல்லாவற்றையும் எடுத்து வைத்தபடி.

“இல்லமா.. ஒரு முக்கியமான விஷயம்.. வீட்டிற்கு வரையா?” என்றார் அவர். “இப்போவேவா அப்பா?” என்றாள் புருவ
முடிச்சுடன்.

“ஆமாண்டா” – வரதராஜன் சற்று அழுத்தமாக.

“சரி வரேன் பா” என்று போனை அணைத்தவள் தன் வேலைகளை எல்லாம் டீம் லீடரிடம் காண்பித்து விட்டு
ஹேண்ட்பாக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

போகும் வழியிலேயே மனதிற்குள் கணக்குப் போட்டபடி கௌசிகா
சென்றாள். அப்பாவிடம் பேசிவிட்டுக் கிளம்பினால் ஐந்து ஐந்தேகால்-க்கு எல்லாம் போய்விடலாம் என்று
நினைத்தபடியே வீடு வந்து சேர்ந்தாள்.

வீடு வந்து சேர்ந்தவள் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய “ஏன் பாப்பா ஸ்கூட்டியை உள்ள
நிறுத்தலையா?” என்று வெளியில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டியைப் பார்த்தபடிக் கேட்டார் வரதராஜன்.

“இல்லப்பா.. ஈவ்னிங் மதி, ஜீ, விக்கா எல்லாரையும் பாக்க போகணும்.. நீங்க
கூப்டிங்களா.. அதான் வந்தேன்” என்று பதில் அளித்தவள் ஃபேனிற்கு அடியில் சோபாவில் வந்து உட்கார்ந்தாள்.

அருகில் வந்து அமர்ந்த வரதராஜன் “பாப்பா உன்கிட்ட ஒன்னு சொல்லனும் டா” என்று அவளை பார்த்துச்
சொன்னவரின் கண்களில் ஏதோ ஆசை.

“சொல்லுங்கப்பா.. அதுக்குத்தானே வந்தேன்.. என்ன விஷயம்?” என்று
அவரின் கைகளைப் பற்றியபடிச் சொன்னாள் கௌசி.

“உனக்குக் கல்யாணம் பண்ணலாம்-ன்னு முடிவு பண்ணிட்டேன் டா.. நம்ம பேமிலி ப்ரண்ட் தான்.. நம்ம ஜீவா கல்யாணத்தில் பார்த்து கல்யாணம் செய்தால் உன்னை
தான் செய்வேன்ன்னு இருக்கிறாராம் அந்தப் பையன்” என்றார் வரதராஜன்
மெல்ல மெல்ல.

“முடிவே செஞ்சுட்டீங்களா அப்பா?” என்று அவரைப் பற்றிய இருந்த கைகளை
எடுத்தபடி கேட்டாள் கௌசிகா. அவளின் நினைப்பு எல்லாம் இப்போது மதியம் விக்காவுடன் பேசியதில் நின்றது.

“என்ன கௌசிமா… உன்னைக்
கேட்காமல் எப்படி முடிவு செய்வேன் சொல்லு.. உன்கிட்ட பேசிட்டு சொல்றேன்- ன்னு சொல்லிட்டேன்” என்று மகள் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டாளோ சற்று
வருத்தமானக் குரலில் கேட்க அப்போது தான் கௌசிக்கு மூச்சு விட முடிந்தது.

“…….” – எதுவும் பேசாமல்
உட்கார்ந்திருந்தாள்.

“உனக்கு விருப்பம் இல்லையா மா?” என்று கேட்டார் வரதராஜன்.

“நான் நைட் சொல்றனே ப்பா.
ப்ளீஸ்” என்று அவரின் முகத்தை நேராகப் பார்த்து கண்களை சுருக்கிக் கேட்டாள்
கௌசிகா.

“ப்ளீஸ் லாம் எதுக்கு பாப்பா அப்பாகிட்டா..நான் உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டேன். ஆனால் நீ உனக்கு நல்ல
முடிவை தான் எடுப்ப-ன்னு எனக்குத் தெரியும்” என்றார் கௌசியின் தலையை
வருடியபடி.

“ம்ம் ப்பா” என்று புன்னகை சிந்தியவள் “சரிப்பா நான் கிளம்பறேன்.. அவங்களப்
பாத்துட்டு வரேன்” என்றபடி எழுந்தவள் ஸ்கூட்டியை நோக்கிச் சென்றாள்.

ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு பெசன்ட்நகர் பீச்சை நோக்கி வண்டியை
செலுத்தியவள் தன் யோசனைகளிலேயே
இருந்தாள். இன்று விக்காவிடம்
சொல்லிவிடலாம் அவனும் அதே யோசனையில் தான் இருக்கான் போல. அவன்கிட்டு இன்னிக்குப் பேசிட்டு
இன்னிக்கே அப்பாக்கிட்ட சொல்லிடனும்” என்று நினைத்தவள் “எவனோ ஒருவன் என்னைத் தான் கல்யாணம் பண்ணுவேன் என்று சொன்னால் அவனைக் கல்யாணம் பண்ணுமா.. ஒரு
பெண்ணின் சம்மதம் இல்லாமல் எப்படி நடக்கும்” என்று மனதிற்குள் அந்த முகம்
தெரியாத ஒருவனை மனதினுள் திட்டிக் கொண்டு வந்தவள் கே.எப்.சி இல் வந்து
வண்டியை நிறுத்தினாள்.

வண்டியை நிறுத்திப் பூட்டிவிட்டு உள்ளே
நுழைந்தவள் தன் கூட்டம் வந்திருக்கிறதா என்று பார்த்தாள். எல்லா டேபிளிலும்
தேடியவள் கடைசியாக ஒரு மூலையில் இருந்த டேபிளில் ஜீவாவும் மதியும் உட்கார்ந்தது பேசிக் கொண்டிருப்பதைப்
பார்த்தாள். அவர்களின் முதுகு மட்டுமே தெரிந்தது.

“அட ராமா.. இதுக இன்னும் இந்தக் கடலை போடறத நிறுத்தலையா” என்று
தலையில் அடித்தவள் அவர்களை நோக்கிச் சென்றாள்.

அவர்களின் பின்னால் நின்றவள் தொண்டையைச் செருமி “ம்கூம்.. நான்
ஒருத்தி வந்துட்டேன் டா.. நான் வந்தது கூடத் தெரியாமல் நல்ல வருத்துட்டு இருக்கீங்க” என்று கௌசி குரல் கொடுக்க இருவரும் சுதாரித்து தங்கள்
உலகில் இருந்து வெளியே வந்தனர்.

“அப்புறம்… எங்கே அவன் இன்னும் வரலையா?” என்று கேட்டபடி தன் ஹேண்ட் பாக்கை கழற்றிவிட்டு மதியின்
அருகில் அமர்ந்தாள் கௌசிகா.

“அவன் வருவான் கௌசி.. நம்ம ஆர்டர் பண்ணலாம்.. அவன் வந்து ஜாயின்
பண்ணிப்பான்..” என்று ஜீவா சொல்ல “ஹே.. என்னடா.. அவனும் வரட்டுமே” என்று கௌசி சொல்ல மதி இடையில்
புகுந்தாள்.

“இல்ல கௌசி.. விக்னேஷ் வருவதற்கு 20 மினிட்ஸ் ஆகுமாம்.. நம்மல ஆர்டர்
பண்ண சொல்டாரு” என்று மதி சொல்ல “ம்ம் சரி ஓகே” என்றவள் தனக்கு என்ன
வேண்டும் என்று சொன்னாள்.

மதியிடமும் என்ன வேண்டும் என்று கேட்டுக்கொண்டு போனவன் ஆர்டர் செய்துவிட்டு வந்து அமர்ந்தான். சரியாக
5 நிமிடத்திற்குப் பிறகு விக்கா
வந்துட்டான் என்று பாதி திரும்பிய கழுத்தோடு ஜீவா entrance-ஐ பார்த்துச் சொல்ல மதியும் திரும்பி விக்னேஷைப்
பார்த்தாள். கௌசிகா திரும்பவில்லை..ஏனோ மதியம் பேசியதில் இருந்து
அவனைப் பார்க்க கூச்சமாக இருந்தது கௌசிக்கு. அவன் வரட்டும் என்று திரும்பாமல் உட்கார்ந்திருந்தாள்.

அவன் பக்கத்தில் வருவதை உணர உணர ஏனோ புன்னகை தழுவியது அவளது உதடுகளில். தலையைக்
குனிந்து கொண்டு அமர்ந்தவள் விக்னேஷின் கால்களோடு இன்னொரு
கால் வந்து எதிரில் விக்னேஷின் பக்கத்தில் அமர்வதையும் கவனித்தாள்.

புருவ முடிச்சுடன் நிமிர்ந்து பார்த்த கௌசிக்கு கண்கள் வெளியே வந்துவிடுமோ என்ற அளவிற்கு விரிந்தது.
காரணம் ஏழு வருடங்களுக்கு முன் பார்த்தவள் அவள் முன் அதுவும் விக்காவின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். ஏதோ நெருடலாக உணர்ந்தாள் கௌசிகா.

“இவங்க நான்சி தானே?” என்று வெளியே வராத குரலில் கேட்டாள் கௌசிகா.

ஆமாம் அது நான்சி தான். பள்ளியில் கௌசிகாவிடம் விக்னேஷிற்கு காதல் கடிதம் எழுதி தந்து வாங்கிக் கட்டியவள்.

“ஆமாம் கௌசி” – விக்னேஷ் நான்சியின் கைகளைப் பற்றியபடி. கௌசிக்கு
அதைப் பார்க்கப் பார்க்க இதயத் துடிப்பு தொட்டியில் இருந்து விழுந்த மீனைப்
போலத் துடித்தது.

கௌசியின் முகமாறுதலைக் கண்ட மதி ஜீவாவை முறைத்து “நான்தான் சொன்னேன்-ல” என்று முறைத்தாள். “வந்து கௌசி.. நம்ம விக்கியும்
நான்சியும் லவ் பண்றாங்க கொஞ்ச நாளா.. உன்கிட்ட சொல்லத் தான் கூட்டிட்டு வந்திருக்கான்” என்று ஜீவா
கௌசியிடம் உளறிக் கொட்ட கௌசிக்கு தன் தலையில் யாரோ தன் தலையில்
சம்மட்டியால் அடித்துக் கீழே தள்ளியது போல ஆனது.

கோபம்.. அழுகை என முகத்தில் எந்த வித
அதிர்ச்சியும் காட்டாமல்
உட்கார்ந்திருந்தாள் கௌசிகா.
விக்னேஷ் நான்சியின் கையைப் பிடித்தது வேறு அவளை குத்திக் கிழித்தது.

“கௌசி…” என்று விக்னேஷ் கூப்பிட அதை உணராமல் உட்கார்ந்திருந்தாள்
கௌசிகா.

மதி உலுக்க இயல்பிற்கு வந்தவள்.. “கௌசி உன்கிட்ட மறைக்கனும்-ன்னு இல்லடி.. அப்புறம் சொல்லிக்கலாம்-ன்னு விட்டுட்டோம்.. உன்கிட்ட எதுவும் மறச்சது இல்லைதான்.. ஆனா..” என்று விக்னேஷ்
பேசிக்கொண்டு இருக்க நான்சி நடுவில் புகுந்தாள் “சாரி கௌசிகா.. ஆக்சுவலி
இவரு இன்னிக்குக் கூட வேண்டாம்ன்னு தான் சொன்னார்.. அப்புறம் இவரு
இன்னிக்கு என் ப்ளாட்-ல இருந்தப்போ தான் உங்க அப்பா போன் பண்ணினார்.
உங்க கல்யாண விஷயம் பத்திப் பேச.. அதனால தான் நம்ம எல்லாரோட
கல்யாணத்தைப் பத்தி பேசலாம்-ன்னு இன்னிக்கே இவர்கிட்ய சொல்லிட்டேன்”
என்று நான்சி விக்னேஷின் தோளில் கையைப் வைத்தபடி சொல்ல கௌசிக்கு “என்னுடன் ப்ளாட்டில் இருந்தான்” என்று சொன்னது தான் காதில் நச்சூரம் போல
கேட்டுக்கொண்டே இருந்தது.

“அப்போ என்கிட்ட பொய் சொன்னையா விக்கா.. இவளுக்காகவா என்கிட்ட
எரிச்சலாப் பேசுன நீ” என்று
மனதினுள் நினைத்தவளுக்கு கண்ணீர் வரவா என்று எட்டிப்பார்த்தது. மேலும்
நான்சி உரிமை உள்ளவள் போல விக்னேஷின் தோளில் வைத்திருந்த கை
கௌசிகாவைக் கொன்றது. இதைத் தான் நம் கல்யாணம் என்று சேர்த்திச் சொன்னாயா? என்று நினைத்தவளுக்கு
தான் எவ்வளவு பெரிய பைத்தியம் என்று தோன்றியது..

எழுந்து நின்றவள் “எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு.. மறந்துட்டே வந்துட்டேன்..நான் கிளம்பறேன். நீங்க எல்லாரு என்ஜாய் பண்ணுங்க நான் நெக்ஸ்ட் டைம் ஜாயின்
பண்ணிக்கறேன்” என்றுத் தன் ஹேண்ட் பாக்கை எடுத்தபடிச் சொல்லியவள் நான்சியுடன் சேர்த்து அனைவருக்கும்
“பை” சொல்லிவிட்டுக் நடந்தாள்.

அவள் கடை என்ட்ரன்ஸ் வரைக்கும் செல்வதைப் பார்த்த விக்னேஷிற்கு அவள் முதுகு அழுகையில் குலுங்குவது மட்டும் தெரிந்தது. அவள் பொய் சொல்லிவிட்டுப் போகிறாள் என்றும்
தெரிந்தது. கௌசிகாவின் டீம் லீடர் அங்கு முதலில் வேலையில் இருந்த
போது பழக்கமான விக்னேஷின் ப்ரண்ட் தான். அவள் கிளம்பிவிட்டாளா என்று
கேட்டுக்கொண்டே நான்சி ப்ளாட்டில் இருந்து கிளம்பினான்.

அதற்குள் ஆர்டர் செய்த உணவு வர அவள் சாப்பிடாமல் செல்கிறாளே என்று இருந்தது. பசி தாங்காதவள் கௌசிகா.
எழுந்து மூவரையும் பார்த்து “நீங்க உட்காருங்க நான் டூ மினிட்ஸ் வந்திடறேன்..” என்று ஓடி வெளியே வந்து கௌசியை டூ வீலர் பார்க்கிங்கில் தேடினான். அதற்குள் அவள் வண்டியைக்
கிளப்பிக்கொண்டு செல்வது மட்டும் தெரிந்தது அவனுக்கு.

உள்ள வந்து தன் புருவ முடிச்சைத் தட்டியபடி உட்கார்ந்திருந்தான் விக்னேஷ். தன் தோளைத் தொட்ட நான்சியிடம் முழுக் கோபத்தையும் காட்டினான்.
“உன்னை யார் உன் வீட்டில் இருந்ததை எல்லாம் சொல்லச் சொன்னது” என்று அவளிடம் சீறினான்.

“ஏன் உண்மையைத் தானே சொன்னேன்” என்று முகத்தை அப்பாவி போல வைத்துச் சொன்னாள்.

“அதுக்கு-ன்னு இப்போ உன் அம்மா அப்பா கிட்டக் கூட சொல்லீருவியா உண்மை-ன்னு?” என்று விக்னேஷ் கேட்க
வாயை மூடிக்கொண்டாள் நான்சி.

“யாரு மேலையும் கோபப்பட முடியாது.. எல்லாம் முன்னாடியே அவகிட்ட
சொல்லிருக்கனும்.. மறைத்தது உங்க தப்பு” என்றாள் மதி.. கௌசி அழுது கொண்டு போனதில் மதிக்கு மிகவும்
வருத்தமாக இருந்தது. அதுவும் இந்த நான்சியின் கண்டதிலிருந்து அவளைப்
பிடிக்கவில்லை மதிக்கு.. அந்தக் கோபத்தில் விக்னேஷிடம் சொல்லியே
விட்டாள்.

ஒரு நிமிடம் யோசித்த விக்னேஷ் “சரி கிளம்பலாம்.. நான்சி நான் உனக்கு கேப்
புக் பண்றேன் நீ அதுல போ.. நான் கொஞ்சம் மாமா வீட்டு வரைக்கும் போகனும்” என்றவன் தன் மொபைலை
எடுத்து கேப்-ஐ புக் செய்தான்.
நான்சியை கேப்-இல் ஏற்றிவிட மழை பெய்யத் துவங்கியது.

“விக்கி பேசாம எங்க கூட கார்ல வந்திரு.. பைக் அப்புறம் வந்து எடுத்துக்கலாம்..மழை வேற வருது” என்று ஜீவா சொல்ல “இல்லடா வேணாம்.. அங்க போய் லேட் ஆயிருச்சுனா ரிஸ்க்..நான் இதுலையே வரேன்” என்று சொல்லியபடி அங்கு
நிறுத்தியிந்த தன் பைக்கில் ஏறி அமர்ந்தான்.

விக்னேஷ் பைக்கை எடுக்க ஜீவாயும் மதியும் காரில் கௌசியைப் பார்க்க
அடையாரை நோக்கிப் புறப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!