கலியுக கல்கி – 1

கலியுக கல்கி – 1

கலியுக கல்கி – 1

அழகான இயற்க்கை சூழல் நிறைந்த பாலகாவில் புயல் மழை அடித்து கொண்டு இருந்தது,மதியம் இரண்டு மணி என்பதே மறந்து போகும் அளவிற்கு இருள் சூழ்ந்து இருந்தது,எங்கும் மழையின் இரைச்சல் காதை கிழிக்க,குளுமை உடலை துளைத்தது,இதற்கு சற்றும் குறையாத அனல் மழை அந்த அரசு மருத்துவ மனையில் அடித்து கொண்டு இருந்தது.

விதுரன் ராஜலு அப்ப்ப்பா…..என்ன ஒரு கம்பீரம்,முகத்தில் உள்ள அழுத்தமான மீசையும் சிவக்கும் கண்களும் ,பத்தடி தூரம் அனைவரையும் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட விடும்,அதிலும் அந்த வலது கண் சற்று சிறுத்து இருக்கும்,கையவன் ஒருவனை வதம் செய்யும் போதும் வலது தோளில் குண்டடி பட்டு விட்டது,கண்களில் சிறிய காயம் கொண்டு அந்தக் கண் சிறுத்து விட்டது, அதுவே பயத்தைத் தூண்டும்.

என்ன முயற்சி செய்தும் கோபம் குறையவில்லை,அதிலும் தனது முன் துடித்துக் கொண்டு இருக்கும் அந்தப் பிஞ்சை பார்க்க பார்க்க முடியவே இல்லை,”ராகவ் இக்கடரா” (தெலுங்கு வாடை அவ்வப்போது வீசும் ) எச்சிலை விழுங்கி கொண்டு வந்தான் ராகவன் தமிழ்நாட்டில் ப்ராமணக் குடும்பத்தில் பிறந்து,ஆந்திராவில் வந்து வித்ரனுக்குப் பி. ஏவாகக் குப்பை கொட்டும் அவனது தலை எழுத்தை என்னவென்று சொல்லுவது,அவன் வந்த சேர்ந்தது தனிக் கதை.

என்னண்ணா “பாபிக்கு போன் பண்ற,இன்னும் ஒரு மணி நேரத்தில் ரெங்கா அண்ணா இங்க இருக்கணும் சூஸ்தவா”.

ஜூஸ்தாவா இப்போதானே நன்னா மொக்கிட்டு வந்தார்,(பாவம் ,அவனும் இந்தச் சுந்தரத் தெலுங்கை கற்றுக் கொள்ள வேண்டுமென்று தான் நினைக்கிறான் அது அவனுக்கு ஆட்டம் காட்டி ஓட விடுகிறது) ராகவன் எண்ணி கொண்டு இருக்கும் போதே,விதுரரின் கர்ஜனையில் அந்த மருத்துவ மனையே அதிர்ந்தது.
“என்ன நடக்குது டாக்டர் அவன் எப்புடி வலில துடிக்குறான் பாருங்க எதாவது பண்ணுங்க”, தன் முன் படுத்து இருக்கும் அந்த நான்கு வயது சிறிய பாலகனை காட்டி கோபமாகக் கேட்டுக் கொண்டு இருந்தான் விதுரன்,அவனது கோபமும் நியாயமான ஒன்றுதான் நான்கு வயது பாலகனின் ஆண் உறுப்பில் சீல் பிடித்து இரத்தம் வழிந்தது,சுத்தம் செய்யச் செய்ய வலியில் துடித்தான் அந்தச் சிறுவன்.

அவன் துடிப்பதை பார்க்க முடியாத அவனது தாய் “ஏமி,பங்காரம் நானு பிட்டா” என்று கதறி அழுக அவனால் அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை,உடனே ரெங்கனை அழைத்து ஆணைகளைப் பிரபத்தவன் தனது வீட்டை நோக்கி சென்றான், ரெங்கன் வரும்வரை கூட அவனிடம் பொறுமையில்லை.

காரில் கண்மூடி அமர்ந்தவனுக்கு அத்தனை கோபம்,பெண்களைத் தான் பாலியில் கொடுமையில் வதைக்கிறார்கள் என்றால்,ஆண் குழந்தைகளையும் விட்டு வைப்பது இல்லையா,மூன்று மாதம் கரு தாங்கி,ஐந்து மாதம் உணவற்று, ஆறாம் மாதம் மசக்கையில் வேதனை உற்று,ஏழாம் மாதத்தில் வளையல் பூட்டி,அதன் ஒலியில் கனவுகள் கொண்டு,அவள் உயிர் கொடுத்து ஓர் உயிர் ஈன்றாள்,அதனை காம நாய்கள் நொடி பொழுதில் குதறி விடுக்கின்றது.

பள்ளிக்கு சென்ற சிறுவன் காணவில்லை என்று பெற்றவர்கள் தேட,ஒரு காட்டுப் பகுதில் பால் மனம் மாறாத அந்தப் பாலகனை காம நாய் குதறி வைத்து விட்டது,சுமார் மூன்று நாட்கள் நடந்த ஓர் இன சேர்கையில் கந்தல் ஆகிவிட்டான் அந்தச் சிறுவன்,அவன் மட்டும் விதுரன் கையில் கிடைத்தான்,வாழ்க்கையில் அவனது மரணத்தைக் கனவில் கூட எண்ணியிருக்க மாட்டான்,சட்டம் கடமையைச் செய்தாலும் இவனைப் போன்றவர்களுக்கு அந்தப் பெருமாளே கல்கி அவதாரம் எடுத்து வதம் செய்தால் தான் உண்டு,அவர் வரும்வரை நாம் என்ன செய்வது என்று எண்ணாமல் விதுரன் வாள் எடுத்துவிட்டான், வாள் யாரு வீசினாலும் வீசும் அல்லவா.
—————————————————————————————–
வீட்டிற்குள் அடி எடுத்து வைத்ததும் அவனது முகம் மாறி விட்டது,பருத்த உடலை தூக்கி கொண்டு வந்தார் அவரது தாய் வேணி,முகத்தில் வட்ட குங்கும போட்டு “நா பிட்டா,கூச்சண்டி”,அவனை அமர வைத்து உணவை பரிமாறினார்,ராகவனை உண்ண சொல்ல,மனதுக்குள் அழுது கொண்டே உட்காந்தான் ராகவன்,பின்ன காரத்தில் குழம்பா குழம்பில் காரமா என்று தெரியாத அளவிற்குக் காரம் உச்சி மூடியை நிற்க வைக்கும்.

காரத்திற்குப் பேர் போன ஆந்திரா மாநிலத்தில் காரம் இல்லயென்றால் தான் ஆச்சிரியம்,தனது முன் வைக்கப் பட்ட தயிர் சாதத்தைப் பார்த்து தான் மூச்சு வந்தது,விதரனும், வேணியும் அவனைப் பார்த்து சிரித்தனர்.
பலா பழம் போலக் கரடுமுரடாக இருந்தாலும், அவர்களுது உள்ளத்துப் பாசம் அவனுக்குப் பலா சோலையாகத் தித்தது,கண்கள் கலங்க உணவை உண்டான் நிறைவாக.

பொள்ளாச்சி நேரம் மாலை ஐந்து மணி.
ஏஞ்சாமி…நீ போய்த்தான் ஆகணுமா,ஏக்கம் வழிந்தது அவரது குரலில் பொன்னி ஒரே செல்ல மகள்,மருத்துவம் படிக்க வேண்டுமென்று ஆசை,ஆனால் பன்னிரெண்டாம் வகுப்போடு அதற்கு மூடு விழா,ஒரே உறவான தகப்பன் பொன்னுசாமியை காப்பற்ற வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம்,அது என்னவோ வசதி அற்றவர்களுக்குத் தான் வித விதமாக நோய்கள் வருகின்றது,அவருக்கு அடிக்கடி இருதயத்தில் தண்ணீர் கோர்த்துக் கொண்டு மூச்சு விடச் சிரம பட்டு,அவசர சிகிச்சை அளித்துக் காப்பாற்றினார்,அதன் பின் எங்கு இருந்து படிப்பது.

“என்ன பயம் அதான் முத்து புள்ள வருதுல,அட்ரஸ் எல்லாம் கரெக்டா இருக்குதாம் அவுக விசாரிச்சுட்டாங்க கவலை படுத்தீங்க”.

“அதில்ல சாமி இங்கன்னா பரவாயில்லை,நீ ஆந்திரகுல போற,வயசு பொண்ண அங்கன விட்டுட்டு எப்புடி சாமி நான்”,என்னதான் பிரைவேட் நிர்வாகம் மூலம் வேலைக்கு அனுப்பினாலும்,வயது பெண் என்பதால் பயம் அப்பிக் கொண்டது,அவருக்கு முத்துவும் கூடச் செல்வது தான் ஒரே ஆறுதல்,அரைமனதாகச் சம்மதித்தார்.

அவரது கவலையைப் பார்த்த பொன்னியும் மருகி நிற்க அங்கே வந்தாள் முத்து,”என்ன புள்ள பொன்னி கிளம்பிட்டியா,மாமா என்ன சோகமா இருக்கீங்க,உங்க பொண்ண பத்திரமா பாத்துக்குறேன் கவலைய விடுங்க,வா புள்ள நீ”,படப் படவென வெடித்துப் பொன்னியை கூட்டி சென்றுவிட்டாள்,போகும் மகளை மனதில் பாரம் ஏற பார்த்துக் கொண்டு இருந்தார் பொன்னுசாமி.

இருவரும் கோவை காந்திபுரம் நோக்கி சென்றனர்,அங்கு தான் அந்தத் தனியார் நிறுவனம் உள்ளது,வீட்டு வேலை செய்ய ஆட்கள் அனுப்பும் நம்பகமான நிறுவனம்,அவர்களே வேலை செய்பவருக்கும் பொறுப்பு என்பதால் பயமில்லை,”ஏன் புள்ள சோகமா இருக்க,அப்பா பத்திரமா இருப்பாரு,நான் அம்மாகிட்ட சொல்லிப்புட்டு தான் வந்தேன் பொன்னி”,

“கொஞ்சம் பயமாத்தான் இருக்கு முத்து போர இடம் எப்புடின்னு தெரியல,அப்பாவை உங்க அம்மா நல்ல பத்துக்குவாங்க அத நம்பி தானே இந்த முடிவை எடுத்தேன்”,இருவரும் பேசியவாரே நிறுவனத்திற்குள் நுழைய,அவர்களை அழைத்துச் செல்ல வந்து இருந்தான் ராகவன்,ஆம் விதுரன் ராஜலு வீட்டுக்கு தான் பணி பெண்களாகச் செல்கின்றனர் இருவரும்.

இருவரையும் அறிமுகம் படுத்தி வைக்கச் சின் சிரிப்புடன் ,அவர்களை அழைத்துக் கொண்டு ஆந்திரா நகரை நோக்கி சென்றது அந்தக் கப்பல் போன்ற கார்.

“ஏனுங்க ஐயரே,இன்னும் எம்புட்டுத் தூரம் போணுமுங்க கால் கடுக்குது”,ரெத்த ஓட்டம் சீராக இல்லாத வலது கால்லை தேய்த்தவரே கேட்டாள் முத்து.

அவளது விழிப்பில் அவளை முறைத்து பார்த்தவன் ,”என் பெயர் ராகவனாக்கும்”,ரோஷமாக அவன் முறைக்க.

இது ரொம்ப முக்கியம் மனதுக்குள் எண்ணியவள் வெளியில் சிரித்தவரே ,ஓ ……….. போடா,இன்னும் அவளை முறைதான்.

பொன்னி தான் அவளைத் திட்டித்தீர்த்தாள் “என்ன புள்ள நீ,அவருகிட்ட என்ன வம்பு பண்ணிக்கிட்டு இருக்க,பேசாம வா”,அவள் போட்ட அதட்டலில் நல்ல பிள்ளையாக வாயை மூடி கொண்டாள் முத்து.

மூவரும் விடியும் தருவாயில் பாலகா அடைய புலரும் புலராத காலை வேளையில் கையில் ரத்தத்துடன் வாயிலில் நின்று கொண்டு இருந்தான் விதுரன்.

காரில் இருந்து இறங்கிய பொன்னியும்,முத்துவும் இக்காட்சியைப் பார்த்து ஒரு சேர மயங்கி சரிந்தனர்,ராகவன் அருகில் முத்து இருந்ததால் அவன் முத்துவை தாங்க,ஒற்றைக் கையில் விதுரன் பொன்னியை உடல் உரசாத வண்ணம் தாங்கி நின்றான்.
—————————————————————————————————
தங்களுக்கென்று கொடுக்கப் பட்ட அறையில் பயந்து நடுங்கி கொண்டு இருந்தனர் பெண்கள்,சத்தியமாகக் கனவிலும் இப்புடி பட்ட வரவேற்பை அவர்கள் எண்ணி இருக்கவில்லை அதுவும் விதுரரின் தோற்றம்,கண்ணை மூடி மூடி திறந்தாள் பொன்னி,அவள் அல்லவா அவனை அருகில் பார்த்தது,இத்தனைக்கும் கையை எட்டி பிடித்து நிறுத்தி இருந்தாலும் அவனது அசைக்க முடியாத தோற்றமும் அவனது கண்களும் அவளை மிரட்டி எடுத்தது.
மத்திய உணவை கூட உண்ண மறந்து இருவரும் அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை,ராகவனுக்கு ‘நாமும் இதுபோலத் தானே இருந்தோம் வந்த புதிதில்’,அவன் பட்ட பாடு அவனுக்குத் தான் தெரியும்,அதுவும் இவர்கள் பெண்கள் என்று எண்ணியவன் ஒரு பெருமூச்சுடன் தனது அலுவலை பார்க்க சென்றான்.

“ஏப்புள்ள பொன்னி என் அப்பனுக்குப் போன் போட்டு நம்ம கூட்டிக்கச் சொல்லவா”, நடுங்கியவரே முத்துக் கண்களை உருட்டிய படியே கேட்க,பொன்னி சிந்தனை வையப்பட்டால்.

எங்குச் சென்றாலும் இதை விடச் சம்பளம் கிடைக்காது,தங்குமிடம்,சாப்பாடு அத்தனையும் இவர்களே பார்த்து கொள்வார்கள்,தந்தையின் உடல் நிலை அவளது பயத்தை விரட்டியது என்பதே உண்மை.

“இல்லப்புள்ள நான் வரல,உனக்கு பயமா இருந்தா நீ கிளம்பு,மாமாகிட்ட சொல்லி கூட்டிக்கச் சொல்லுறேன்,உடம்பு சுகமில்லன்னு சொல்லு,இல்லாட்டி எங்க அப்பன் உடாது”,அவளை முறைத்த முத்து ,”நீ இல்லாம நான் எப்புடி போகுறது,நானும் எங்கனையே இருக்கேன்”.

தோழியின் பாசத்தை எண்ணி நிகழ்ந்தவள் அவளை அனைத்து கொண்டாள்.
இரவும் இருவரும் அறையை விட்டு வராமல் இருக்க,விதுரன் அவர்களை அழைத்து வர சொன்னான்.

ராகவனும்,விதுரனும் உணவு உண்ண இருவரும் நடுங்கிய வாரே வந்து நின்றனர்,”அவர்களை நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் உண்ண துவங்க,அவன் பார்வையில் முத்துப் பொன்னியிடம் ஒண்டி கொண்டாள்.

“இக்கட சூடு பொம்மி”.

‘யாருடா அது பொம்மி’என்று இருவரும் முழிக்கத் தலையில் தட்டி கொண்டவன் “இங்க பாருங்க ராகவனுக்கு இந்த ஊர் சாப்பாடு ஒத்துக்கள அதான் தமிழ்நாட்டிலே இருந்து உங்கள வரவச்சது,மேல் வேலைக்கும் ஆள் வேணும் இந்த ஊர்ல இருக்குறவங்கல வைக்க முடியாத சூழ்நிலை அதான் உங்கள வர வச்சது,உங்க பாதுகாப்புக்கு நான் பொறுப்பு,வேலைய மட்டும் நீங்க பார்த்த போதும்,சம்பளம் கரெக்டா வந்துடும்,அத்துடன் பேச்சும் முடிந்தது,அவனது சாப்பாடும் முடிந்தது.

போகும் விதுரனை வாய்க் கொள்ளப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தான் ராகவன், அவனுக்காக விதுரன் அவர்களை வர வைத்தான் என்பதை எண்ணி எண்ணி பூரித்துப் போனான்.
சிரிப்புடன் தலையை உலுக்கி கொண்டு திரும்பியவன் கண்ணில் பட்டது முத்துவின் முறைப்பு,அதனைப் பார்த்து துணுக்குற்றவன் “ஏய்,என்ன அப்புடி பாக்குற,ஒரு ஆம்பளையா இப்புடி வெறிச்சு பார்க்க பிடாது தெரியுமோ நோ”,அவன் சொல்லவே இன்னும் காண்டனவள்.

“யோவ்,ஐயரே உனக்கு வடிச்சு கொட்ட தான் நாங்க பொள்ளாச்சில இருந்து வந்தோமா,இருய்யா வத்த குழம்புல விஷத்த வச்சு போடுறேன்”, கையை நீட்டி எச்சரித்துச் செல்ல ,”அடி பாவி சண்டாளி வத்த குழம்புல விஷமா”, போகும் அவளை வாய் பிளந்து பார்த்துக் கொண்டு இருந்தான் ராகவன்.

“பெருமாளே நோக்கு கருணையே இல்லையா,வாய்க்கு ருசியா பொங்குவானு பார்த்த,வாக்கரிசி போட்டுருவ போலையே,பொம்மனாட்டி பேசுற பேச்ச பாரு,எல்லாம் இந்த வீட்டோட ராசி என்னத்த சொல்ல”,தனுக்குள் புலம்பியவரே உண்டு முடித்தான்.

அன்று முழுதும் தோழிகள் இருவரும் ஒரு கவளம் கூட உணவு உண்ணவில்லை,ஏனோ மனம் கடந்து அடித்துக் கொண்டது,காலையில் தெலுங்கில் பேசி கொண்டதால்,என்ன நடந்தது என்று புரியவில்லை, ஆனால் உயிரே போகும் அளவிற்கு ஓர் ஆண் குரல் கேட்க சர்வமும் ஒடுங்கி தான் போனது,அதனை எல்லாம் எண்ணி இருவரின் இமையும் மூட மறுத்தது.
அதிகாலையில் குயில் கூவ துயில் கலைந்தனர் தோழிகள்,ஏய் முத்து எழுந்திரிப்புள்ள அவளை உலுக்கி எழுப்பிக் கொண்டு கொல்லைக்குச் சென்றாள் பொன்னி,சிணுங்கி கொண்டே வந்த தோழியின் முகத்தில் தண்ணீர் தெளித்துத் தூக்கத்தை விரட்டினாள்.

தனது மீது குளிர் நீர் படவும் துள்ளி எழுந்த தோழி,”ய்யேன்புள்ள ரவைக்கெல்லாம் சொல்லி (கொசு ) தொல்லை தாங்க முடியல,சரியாய் தூங்காம கருக்கல்ல தூங்குனா இப்புடி உசுப்பி உடுற”,

“அம்முனி இது பொள்ளாச்சி இல்லங்க,நீங்க சாவுகாசமா முழிக்க ஆந்திர ஊராகப் போட்டுருவாங்க, பாத்திங்கள நேத்து”,பொன்னி புருவம் உயர்த்திக் கேட்க அப்போதுதான் தான் இருக்கும் இடமே பிடி பட்டது,அதற்குப் பின் நல்ல பிள்ளையாக வேலையைச் செய்தாள்.

வேணி அவரது கணவனைப் பார்க்க பூர்விக வீடிற்குச் சென்றதால்,இரு ஆண்கள் மட்டுமே வீட்டில், அதனால் எளிமையாக இட்டிலி அவித்துத் தேங்காய் சட்னி,மிளகாய் சட்னி,சாம்பார் வைத்தனர்,சாம்பாரின் வாசனையில் தான் ராகவன் கண் விழித்தான்,வெகு வருடங்கள் கழித்துத் தமிழ்நாட்டின் மனம் மனதை நிறைக்க,குளியலை மறந்து உணவு மேஜையில் அமர்ந்தான்,இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் விதுரனும் வந்து அமர்ந்து கொண்டான்.
முதலில் மணக்க மணக்க கோப்பி வந்தது,அதனை சப்ப கொட்டி ராகவன் குடிக்க,முத்து அவனுக்கு எதிரில் விதுரனுக்குப் பின் வந்து நின்று விரலை நீட்டி மிரட்டி கொண்டு இருந்தாள்,”முத்து” ….

விதுரன் அழைக்கவே கையில் வைத்திருந்த துணி நழுவி கிழே விழுந்தது,எச்சில் விழுங்கி அவன் முன் வந்து நின்றாள்,அவளிடம் தமிழில் பேச எண்ணியவன் ராகவனின் துணையை நாட அவன் எண்ணம் புரிந்து அவளுக்கு அவன் சொன்ன வற்றைச் சிறுது கூடுதலாகச் சேர்த்துச் சொன்னான்.

இங்க பாரும்மா சமையல் பொன்னியே செய்யட்டும்,நீ மேல் வேல பார்பியாம்,என் அனுமதி இல்லாம எங்கையும் போகக் கூடாது,நாங்க இல்லாத நேரம் யாருக்குடையும் பேச கூடாது,யாரையும் வீட்டுக்குள்ள விடக்கூடாது,வெளில உள்ள செக்யூரிட்டி கிட்ட எதுனாலும் கேளு அவர் கடைக்குப் போய் வருவாரு,யாரு வந்தாலும்,கதவை திறக்க கூடாது,பெரியம்மா பெரிய வீட்டுக்கு போய் இருக்காங்க வர ஒரு மாசம் ஆகும்,அவுங்க வர வரைக்கும் நீங்க தான் பார்த்துக்கணும்,எதுனாலும் இந்த ராகவன் கிட்ட கேளு.

எல்லாம் சரி ஐயரே,அவுங்க கொஞ்சமா தானே பேசுனாக,நீங்க இம்புட்டு நீளமா சொல்லுறீங்க,அதுவும் உங்க பேரே அவர் சொல்லி கேக்கலன்களே
என்ன விவரமா கேக்குறா பாரு,இவலாண்டா பார்த்து தான் இருக்கணும் ராகவா,சமாளி.

இ ப்போ என்ன நான் சொன்னதெல்லாம் உண்மையா தெரியணும் அதானே,வா அவராண்டையே கேட்கலாம்,அவளது கையைப் பற்ற போக ஓடியே போய்விட்டாள் முத்து”,அவள் செய்கை சிரிப்பை தர,பொள்ளாச்சி ரவுடி என்று அவளை எண்ணி சிரித்துக் கொண்டே சென்றான்.
—————————————————————————————————-
கொல்லையில் ரெத்த வாடை குடலைப் புரட்ட சுத்தம் செய்து கொண்டு இருந்தனர் வேலை ஆட்கள்,ரெங்கனும்,விதுரனும் மேற் பார்வை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

என்ன ஆச்சு விதுரா உடம்பு சரில்லையா என்ன,இல்லையென்று தலை அசைத்தவன் நிறைவாகப் புன்னகைத்தான்,அவன் புன்னகையில் மகிழ்ச்சி கொண்டவன்,அவன் முதுகில் தட்டி விடை பெற்றான்.

விதுரரின் கண் அசைவில் செய்து முடிப்பவன் ரெங்கன்,மூளைக்கு ராகவன் என்றால்,முடிவுக்கு ரெங்கன் தனது அண்ணன் ,விதுரரின் தந்தைக்கு இரு தாரங்கள்,வேணி மற்றும் கமலம் சகோதிரிகளை மணந்தவர்,ஏனோ விவரம் தெரிந்த பிறகு தனது தாயைக் கூட்டி கொண்டு தனியாக வந்து விட்டான்,தனது தந்தையிடமும் பேச்சு குறைந்து விட்டது, காரணம் குடும்ப ரகசியம்.

சுந்தர ராஜலு பார்க்கவே தெலுங்கை பட வில்லனை போலத் தான் இருப்பார்,செல்வாக்கு நிறைந்த மனிதர்,அவரது மனதை கொள்ளை கொண்ட வேணிக்கும்,கமலத்துக்குமே தெரியும் காதல் மன்னன் என்று,ஒருநாளும் அவரை விட்டு கொடுக்க மாட்டார்கள் அது தனது பிள்ளைகளிடமாக இருந்தாலும்.

நீண்ட யோசனைக்குப் பின் வீட்டினுள் வந்தவன் கண்ணில் பட்டது பொன்னியின் கண்ணீர்,அவளது நிலைமை ஒருவாறு அறிந்து கொண்டு தான் நம்பிக்கையின் அடிப்படையில் இந்த வேலையைக் கொடுத்தான்,இருந்தாலும் அவளுக்கு மேலும் எதையாவது செய்ய வேண்டும் என்று உள்ளம் அடித்துக் கொண்டது.

போன் சிலை போல் இருக்கும் பொன்னியின் மீது அக்கறை வராமல் இருந்தால் தான் தவறு,ஒருவரை பார்த்ததும் பிடித்து விடும் காரணம் இல்லாமல் அவர்களுக்கு உதவத் தோணும்,அது போலத் தான் பொன்னியை புகை படத்தில் பார்த்ததில் இருந்து அவனுக்கு உள்ளுக்குள் என்னவோ…………..
இந்த என்னவோ என்ன என்பதை அவன் அறியாமல் இருப்பதே நல்லது,அறிந்தால்.

வதம் தொடரும்…

error: Content is protected !!