கலியுக கல்கி – 14
கோவிலுக்கு நேந்தி விட்ட ஆடுகள் போல மூன்று குடும்பத்தாரும் பயந்து போய் இருந்தனர்.முத்துவிற்குப் பயம் இருந்தாலும் வெளியில் நானும் ரவுடி தான் என்பது போலக் கெத்தாக இருந்தாள்.பொன்னி மறந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை,பார்த்தால் என்ன ஆகும் என்பதை அறிந்தவள் ஆயிற்றே.
பாலாஜி பெற்றவர்களோடு அமர்ந்து இருக்க,ராகவன் விதுரனிடன் நின்று கொண்டு இருந்தான்.அங்கு இருந்த ராஜலுவின் குடும்பத்தைப் பார்த்து பயந்து நடுங்கி கொண்டு இருந்தனர் அந்த அப்பாவிகள்.
காலையில் ராஜலு அனைவரையும் விடயத்தைச் சொல்லி அழைக்க.விதுரன் கோபமாக இருந்தான் என்றால்,அலமேலு பயந்து கொண்டு இருந்தாள் அவளுக்குத் தான் பாலாஜியை பற்றி நன்கு தெரியுமே,இன்னும் அவன்விட்ட அரையை மறக்க முடியவில்லை.
கலவரத்துடன் தங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்த அப்பாவிகளைப் பார்த்த ராஜலுக்குக் கோபமாகவும்,எரிச்சலாகவும் இருந்தது.இருக்காதா பின்னே ராஜலுவின் வருங்காலச் சம்மந்திங்கள் இப்புடி நடுங்கி போயிருந்தால்,அவரும் என்னதான் செய்வார்.அந்த கோபம் தனது பிள்ளைகளிடம் தான் திரும்பியது.காதல் வந்து தொலைத்தது தான் தொலைத்தது, சூழ்நிலையை வெல்ல தைரியம் இல்லாத இவர்களிடமா வர வேண்டும்.
இப்போது குடும்பம் இருக்கும் நிலையில் இவர்கள் இப்படி இருந்தால் என்ன செய்வது.அவருக்குப் பெரும் கவலையாகி போனது.நடுத்தரக் குடும்ப மக்களால் அத்தனை சுலபமாகத் தன்னைக் காப்பற்றிக் கொள்ள முடியாது.இது ஒரு சாபக்கேடு என்ன செய்வது பணக் காரனாக இருந்தால் பணத்தைக் கொண்டு முடித்துவிடலாம்,வறுமை கொடுக்கு கீழ் இருந்தால் எதனையும் சகித்துக் கொண்டு போய்விடலாம்,
ஆனால் இந்த மத்திய குடும்பத்தாரின் நிலை மிகவும் மோசம். மேல் ஏறி செல்லவும் முடியாது,கீழ் நோக்கி செல்லவும் முடியாது. இடையில் மாட்டி கொண்டு தவிக்க வேண்டியது தான், அத்தகைய நிலையில் தான் இன்று இக்குடும்பங்கள்.
தொண்டையைச் செருமி கொண்டு பேச தொடங்கினார் ராஜலு.அவர் செருமாளுக்கே ராகவ்வின் தாய்க்குக் கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது.அதனை எல்லாம் அறியாமல் ராஜலு தொடங்கினார்.
“எல்லாருக்கும் வணக்கம்” என்றவர் தனது குடும்பத்தை அறிமுகம் செய்தார்.பின்பு தனது குடும்பத்தின் வரலாறு பற்றிச் சொன்னார்,தனது பிள்ளைகள் மற்றும் அவர்கள் பார்க்கும் வேலை,அவர்களுது சமூகப் பொறுப்பு,சொத்துக்கள் என்று அவர்களின் பதிலை எதிர் பார்க்காமல் அனைத்தையும் உணர்த்திவிடும் வேகத்தில் அவர்.
அவர் சொல்ல சொல்ல அந்தப் பெற்றோர்கள் பேச்சற்று இருந்தனர்.அவர்களது நிலையை எண்ணியவர் இன்றே பேசிவிட வேண்டும் என்னும் நோக்கத்தோடு மேல தொடர்ந்தார்.
“நான் ஏன் உங்கள வர சொன்னேனா உங்களுக்கே தெரியும் ரெங்கன் கல்யாணத்துல நடந்த விபத்தைப் பத்தி .நீங்க எங்களைச் சேர்ந்தவங்களா போனதுனால உங்களுக்குப் பிரச்னைகள் வர வாய்ப்புக்குள் அதிகம், அதான் உங்கள வர சொன்னேன்.இனி நீங்க இங்கதான் என்றவர்,
நம்பப் புள்ளைங்க ஆசை பட்ட மாதிரியே கல்யாணம் பண்ணிடலாம்.வீட்டுலையே கல்யாணம் முடுச்சுத் திருமணப் பதிவு பண்ணிடலாம்.சாதி மதம் அந்தஸ்த்துன்னு கண்டதையும் யோசிக்க வேண்டாம் ,
யோசிச்சு மறுக்கக் கூட அவகாசம் இல்ல, புரியும் நெனைக்கிறேன்” எதிரில் இருப்பவர்கள் மறுவாதம் செய்யாத அளவிற்குப் பேசி முடித்தார் மனிதர்.வாய்ப்புகள் கொடுத்தால் அவர்கள் மறுக்க மட்டுமே எண்ணுவர் என்பதை அறிந்து அழகாக அதனைத் தவிர்த்து விட்டார்.
அவரது தோரணையில் பயம் கொண்ட பொன்னியின் தந்தை “என்னம்மா இப்புடி சொல்லறாரு , மிரட்டுறாரா,சமாதானம் பேசுறாரா இல்ல சண்டைக்குப் பேசுறாரா ஒன்னும் விளங்க மாட்டேங்குது “.
“அப்பா இவராவது தேவலாம் நம்பக் கிட்ட ஒரு வார்த்தை சொல்லுறார்,உங்க மாப்பிள்ளை அதுவும் செய்ய மாட்டார்”.
“என்னது மாப்பிள்ளை….யா என்ன பொன்னி”.
“ஆமப்பா அவர்தான் உங்க மாப்பிள்ள,வேற வழி உங்களுக்கும் இல்ல எனக்கும் இல்ல. மகளே சம்மதம் சொல்ல அவருக்கென்ன நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்தார்.
ராஜலு,ஒரே முஹுர்த்தத்துல மூன்று ஜோடிகளுக்குக் கல்யாணம்.எல்லாம் எளிமையான முறையில என்ன கும்பகோணம் சரியா என்று முத்துவை பார்த்து மனிதர் கேட்டு வைக்க. பதிரினால் பெண் தலை தானாகச் சம்மதம் சொன்னது.ராகவ் அவளது பயம் கண்டு உதடு மடக்கி சிரித்தான்.
“முத்துவின் தந்தை ஐயா நீங்க எல்லாம் பெரிய இடம் உங்க வசதிக்கும் தகுதிக்கும்,எங்களால ஈடு கொடுக்க முடியாதுங்க,எங்களை விட்டுருங்க” என்று கை எடுத்து கும்பிட.அனைவரும் சற்று மௌனம் காத்தனர் பின் தெளிந்த ராஜலு.
“எனக்கு உங்க சங்கடம் புரியுது நம்ப நாலு குடும்பத்தோட உறவு கொஞ்சம் விசித்திரம் தான்,நம்பப் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை எல்லாம் பெரிய பேதம் தான்,ஆனா இப்போ அத பத்தி பேச நேரமில்லை,நம்ப எல்லாருக்கும் இக்கட்டான்னா சூழ்நிலை இருக்கு.எப்போ யார் உயிர் போகுமுன்னு தெரியாது,உங்கள தவிக்க விட்டு,ஒரு பாவமும் அறியாத உங்கள மாட்டிவிட எங்களுக்கு விருப்பமில்லை”.
மேலும் அவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது என்று யோசித்துக் கொண்டு இருந்தவரை கலைத்தது விதுரரின் குரல் “இன்னும் என்ன விளக்கம் சொல்லணும், உங்க உயிர் மேல பயம் இருந்தா இருங்க,இல்லாட்டி பார்த்துக்கலாம் என்றவனைக் பயந்து பார்த்தவர்கள்”அடங்கிப் போனார்கள்.
ராகவ்வின் குடும்பம் பேசும் திறனை இழந்தது போல் இருந்தனர்.அவர்களுக்கு மகன் செய்யும் வேலை மற்றும் பின் புலமும் தெரியும் ஆதலால் அவர்கள் சொன்னதுக்குத் தலையை மட்டும் ஆட்டினார்.முத்துவுக்குப் பேச்சே வரவில்லை உயிருக்கு உலை வைக்கப் போகிறார்கள் என்றதுமே அவள் பயந்துவிட்டாள்.பாலாஜிக்கு தங்களது நிலை புரிந்தது.
தப்பை தட்டி கேட்பவனுக்கு இந்தப் பூமியில் எந்த விதமான உறவுகளும் இல்லாமல் இருக்க வேண்டும் போலும்.உறவுகள் இருந்தால் அவர்களை வைத்து செய்யும் நன்மைகளைத் தடுப்பது,அதனாலே சிறு உதவி கூட நம்மால் செய்ய முடியவில்லை.
‘எடுத்துக்காட்டுக்கு ஒரு விபத்து நடந்தால் காப்பற்ற முடிகிறதா.காப்பற்றினால் போலீஸ் பயம் தங்களையும் ஒரு ஆதாரமாகக் கொண்டு தங்கள் குடும்ப நிலை பாதிக்கும் என்ற ஐய்யம்.அது மட்டுமா ஒருவன் குடித்து விட்டு தனது மனைவியை அடித்தால் அக்கம் பக்கத்தில் உள்ள ஒருவன் நியாயம் கேட்க வந்தால்.மறுநாள் அதே போல் குடித்து விட்டு நியாயம் கேட்டவன் மனைவிடம் வம்பு செய்கிறான். நமது சமுதாயம் தட்டி கேட்பவனைப் பலவீன படுத்தித் தட்டி வைப்பது தான் உன்னத நிலை’.
இதில் அந்தக் குடிகாரன் பேசும் நியாயம் தான் வியக்க வைக்கும் ‘என்னடா நீ என் பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டாலும் திட்ற,உன் பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டாலும் திட்ற’ நீ இவனது எதிர்த்து கேட்பான் ஹும்ஹ்ம்.
எதிலும் ஒதுங்கி வாழ்வோம் என்பதே இன்றைய மூலமந்திரம்.தான்,தன் குடும்பம்,தன் பிள்ளைகள்,தன் வேலை,தன் நியாயம் என்று அனைத்தும் சுயநலமாக மாறிவிட்டது (நான் மட்டும் என்ன அதே சமுதாயம் தான், எழுத்தில் புரட்சி பண்ணி என்ன சாதிக்கப் போகிறோம் என்று எண்ணினால் இது போல் உள்ள கதைகளை எழுதவே பிடிக்கவில்லை) .
எழுது கோலை ஆயுதமாகக் கொண்டு மிரட்டிய என் பாரதி போல் வாழ ஆசை கொண்டாலும் ,நடக்கும் கலியுக ஆட்டத்தில் அதனையும் தாண்டி களை எடுக்கும் அவதாரம் வேண்டும்,நமது கல்கி போல்.
ஒருவராகத் திருமணம் முடிவு செய்யப் பட்டு,தற்போது நிலையைப் பெரியவர்களுக்குப் பொறுமையாக எடுத்துரைத்தார் ராஜலு.ஒரு தந்தையாகத் தங்கள் குடும்பத்தை நம்பி வரும் பெண்ணைப் பெற்றவருக்கும்,தனது மகளைக் கொடுக்கப் போகும் பெற்றவருக்கும் உறுதி கொடுத்தார் நல்ல தந்தையாக.
அவரது பேச்சில் நிம்மதி பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக அனைத்தையும் ஏற்றுக் கொண்டனர்.
*********************************************
இதோ எளிய முறையில் மூன்று ஜோடிகளுக்குத் திருமணம்.யாரும் களிப்பில் இல்லை ஒரு வித உயிர் பயத்தில் தான் இருந்தனர்.அதுவும் மிருதுவின் நிலையை அறிந்த முத்துவும்,பொன்னியும் அழுதே விட்டனர். தாங்கள் இருக்கும் நிலையை எண்ணி உணவு கூடச் செல்ல மறுத்தது.
ஒரே வீட்டில் இருந்தாலும் காதல் கிளிகள் அனைத்தும் தங்களின் சிறகுகளை விரிக்க வில்லை.விதுரனை காணவே கூடாது என்ற வேண்டுதலோடு பொன்னியும்,முத்துவை பார்க்கவே கூடாது என்ற வேண்டுதலாடு ராகவ்வும் சுற்றிக் கொண்டு இருந்தனர்.அலமேலு ஸ்ரீ ராமஜெயம் எழுதாத குறைதான் காதல் என்று அடாவடி தனம் செய்தவள்,காதலனுடன் கல்யாணம் ஐயோ! என்ற வேண்டுதலோடு இருந்தாள்.
இவர்கள் வேண்டுதலை எல்லாம் உதறி தள்ளிய ஏழு குண்டலவளா இன்று வெகு சிரத்தையாக இவர்களைக் கோர்த்து வைத்தார்.அவருக்கும் பொழுது போகவேண்டும் அல்லவா.
எளிமையான முறையில் பூஜை செய்து,விருந்து செய்தனர் வேணியும்,கமலமும்,மிருது மேற் பார்வையில் இருக்க,சீதா அவர்களுக்கு உதவி கொண்டு இருந்தாள்.ரெங்கன்,பாலாஜி,விதுரன்,ராகவ் வெளியில் பேசி கொண்டு இருந்தனர்.இதில் பார்க்க வேண்டியது என்னவென்றால் உணவு முழுதும் சைவம் தான் ராகவ் குடும்பத்துக்காக.இந்த ஒரு செயலில் ராகவ்வின் தாயை வீழ்த்தி விட்டனர்.
அனைவரும் உண்டு முடிக்க மீண்டும் பெண்கள் வேலையில் ஈடுபட ஆண்கள் அனைவரும் ஒன்று கூடி பேசினர்.தங்கள் சமூகத்தில் திருமணம் செய்தால் கூட இத்தனை மரியாதையைக் கிட்டுமா என்பது சந்தேகம் தான்.ராஜலு வீட்டினர் அப்புடி பார்த்துக் கொண்டார்கள் ‘பணம் என்னடா பணம் குணமே இங்குப் பணமாக’.
என்ன என்ன பேதமோ அனைத்தும் மறந்து போனது பெற்றவர்களுக்கு.சொந்தம் கூடத் தூரமாக எண்ணினர்.
********************************************
மாலை இரவுக்குப் பாதை வகுத்து நிற்க பெண்களை அலங்கரித்து அவரவர் அறைக்கு அனுப்பி வைத்தனர்.கல்யாணம் நடந்ததே பெரும் கூத்து அதில் முதல் இரவு வேறு என்ற மனநிலையில் ஜோடிகள்.
முத்துவின் வரவுக்குக் காத்திருந்த ராகவ் அவள் மடிசாரில் வரவும் சிலிர்த்து போனான்.இங்கு தான் அவனுக்கு ஏழரை ஏணி போட்டு அழைத்தது “என்னடா இது மடிசாருக்கு வந்த சோதனை,ஏண்டி நோக்கு இந்த வேலை, உன்னை யார் மடிசார் கட்ட சொன்னது ” என்றவனைப் பார்த்துக் கையில் இருக்கும் சொம்பை குறி பார்த்து அடித்தாள் நம் முத்து.
“யோவ் ஐயரே என்ன அதப்பு உனக்கு.தெரியுதுல எனக்கு ஒத்து வரலைனு அப்புறம் எதுக்கு உனக்கு இந்தக் கல்யாணம்.உனக்கு சோத்துல விஷம் தாண்டி வா”.
“வாயில அடி வாயில அடி ஆம்படையான மரியாதை இல்லாம பேச கூடாதடி ரவுடி,அடக்கமா இருக்கணும் புரியுறாதா”.
“நன்னா புரியுதுனா” அவனை மாதிரி பேசி நக்கல் அடித்தவளை ஒரே எட்டில் எட்டி பிடித்தான் ராகவ்.
“யோவ் விடுய்யா எத்தே சொடு இருக்க, உன் வலு தாங்குமா எனக்கு” என்று வலியில் கத்தியவள் மேல் கருணை பிறப்பதற்குப் பதில் ,காதல் பிறந்தது.அதன் பின் நடந்தது யாவும் பெருமாளுக்கே வெளிச்சம். (கண் மூடிக்கோங்க நேக்கு ரொமான்ஸ் எழுத வரலை,நம்புங்கோ)
இவர்கள் அறைக்கு எதிர் அறையில் தான் அலமேலு,பாலாஜி ஜோடியினர் “அவனைப் பார்க்க கூடப் பயம் கொண்டு தலையைக் கவிழ்ந்து நிற்கும் அலமேலுவை,மேலும் பயம் கொள்ள செய்யாமல் ,எதுவும் பேசாமல் தங்களின் திருமண வாழ்க்கைக்கு முதல் படியை எடுத்து வைத்தான்.பேசி அவளிடம் காதலை புரியவைப்பதை விட,செயலில் சொன்னான் அவனது காதலன்,அதிர்ந்து மயங்கி போனாள் பெண்.
இன்னுமொரு ஜோடி, பொன்னியின் நிலை படு மோசம் அவள் அறைக்குள் வந்தது மட்டுமே தெரியும் அதன் பின் நடந்தது ஒன்றும் விளங்கவில்லை,இப்போது கூட அந்த அறை இருளாக தான் இருந்தது.
காலையில் எழுந்த இரு ஜோடிகளும் சிறு பயத்துடனும்,பெரும் சங்கடத்துடனும் வெளியில் வந்தனர்.விதுரன் அறை மட்டும் திறக்க படவில்லை.அதனை புறம் தள்ளி இரு பெண்களும் விளக்கேற்றி சாமி கும்பிட்டு,பெயர்வர்களுடன் கலந்து கொண்டனர்.
இரு மருமகளையும் ராகவ்வின் தாய் பயந்து தான் பார்த்தார். இரு பெண்களும் அவர் குடும்பத்திற்கு ஓத்து வரும் என்று தோன்றவில்லை,அதைவிடப் பெரிய கவலை அவர்கள் இருவரும் தனது ஊறுகாய்,வடாம் தொழிலுக்கு ஒத்துவரமாட்டார்களே என்பது தான்.
ஒருவள் கத்தி என்றால் இன்னொருவள் கடப்பாரை இரண்டையும் வைத்துக் கொண்டு தான் என்ன செய்வது என்ற கலக்கம் அவருக்கு. ‘போன ஜென்மத்துல … நீங்க ரொம்பப் பாவம் செஞ்சுட்டேள்’ நேற்று தனது கணவன் தங்கள் தனிமையில் வம்பு செய்து பேசியது நினைவு வந்தது.
அதை எண்ணி பல்லை கடித்தவர் எனக்கும் மட்டுமா மாட்டு பொண்ணு அவருக்கும் தானே,வரட்டும் அவரை நன்னா அந்த மீசைக்காரு (ராஜலு) கிட்ட மாட்டிவிடுறேன் மனதுக்குள் கருவி கொண்டார்.
பகலவனை நெட்டி தள்ளி மாலை மங்கும் வரை விதுரன் அறை திறக்கப்படவில்லை.சந்தேகம் கொண்ட பெரியவர்கள் சற்று பயத்துடன் கதவை தட்ட தாளிடாத கதவு திறந்து கொண்டது திறந்த அறையில்………………………