கல்யாணம்.. கச்சேரி..(8)

கச்சேரி-8

 

மங்கலான தெருவிலக்கின் ஒளியில் நிம்மதி பிறந்திட அந்த மெயின்ரோட்டை நெருங்கியிருந்தனர் இருவரும்.

 

‘அப்பாடா!!!’என்று நிம்மதி பெருமூச்சொன்றை  அவர்கள் இழுத்து விடுமுன்னே அதற்கு எண்டுகார்ட் போட்டிருந்தது அவர்கள் கண்டகாட்சி!!

 

பேருக்குதான் மெயின்ரோட்! மற்றபடி இத்தனை நேரம் நடந்து வந்த பாதைக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை…  அகலமான சாலையும் தெரு விலக்கையும் தவிர்த்து.

 

‘மறுபடியும் மொதல்ல இருந்தா..??!!’ என்ற மகியின் மனக்குரல் கேட்டோ என்னவோ தூரத்தில் மஞ்சள் நிறத்தில் விளக்கொன்று கண்சிமிட்டிச் சென்றது.

 

“அகன்!” என்றழைத்தவளிடம் அவன் தன் கவனத்தை திருப்ப அவளோ தூரத்தில் எதையோ வெறித்தவளாய்… பார்வையை அங்கு பதித்து… இவனை அழைத்திருந்தாள்.

 

“அகன்! அங்க பாரு!” என்க அவன் பார்வையையும் அவளதை தொடர்ந்தன.

 

“அந்த பக்கம் ரோட்டுக்கு போயிட்டா வண்டி எதாவது கெடைக்கும். வா” என்று நடக்கத் தொடங்கியவளின் கையை முதல் முறையாக பிடித்து நிறுத்தியிருந்தான்.

 

முதல் ஸ்பரிசம்… பூக்கள் பூக்கும் தருணம் பாடும் நிலையில் அவர்களில்லை என்றாலும்… அதிரவுமில்லை!

திரும்பியவளின் நெறிந்திருந்த புருவமத்தியின் கேள்வியில்  ஒரு நொடி ஒன்றும் புரியாமல் போனது அவனுக்கு! மாறாக,

 

“உனக்கென்ன லூசா?? நீ பாட்டுக்கு வண்டிய நிறுத்தி கேப்போம்ன்ற! இந்த நடுராத்திரில… எல்லாரும் ஒரேபோல இருக்க மாட்டாங்க!” என்று படபடவென அவன் பொரிந்து தள்ள பொறுமையாய் அவன்புறம் திரும்பியவளோ,

 

“யெஸ்!! எல்லாரும் ஒரேபோல இருக்கமாட்டாங்க அகன்!”என்றவள் அதே வாக்கியத்தை திருப்பிச் சொல்ல அது வேறுவிதமாய் ஒலித்து தொலைத்தது மகிழனுக்கு.

 

‘இதுக்கொன்னும் கொறச்சல் இல்ல!’ என்றவனின் உள்ளம் உரைக்க அவன் முகம் பார்த்து நின்றவளோ

 

“எனக்கு என்மேல நம்பிக்க அதிகம் அகன்! நமக்கு இப்ப வேற ஆப்ஷன் எதாவது இருக்கா??” என்றவளின் கேள்வியில் உணர்ந்தவனாய் ‘இல்லை’ என தலையசைத்தான்.

 

‘அப்பறமென்ன??’ என்பதாய் அவள் அவன் இன்னும் பற்றியிருந்த அவள் கரத்தில் பார்வை பதிக்க அவள் பார்வையை தொடர்ந்த அவன் பார்வையில்… அப்பொழுதே தான் அவள் கைபற்றி நிறுத்தியிருப்பதை உணர்ந்தான்.

 

ஒரு ‘ஸாரி’ உடன் விலகிய அவன் கரத்தை பற்றி உலுக்கினாள் திடீரென…

 

“அகன்!! அங்க பாரு லாரினு நெனைக்கறேன்… வா வா!!” என்றவள் விரைய அவனும் அவளுடன் இணைந்துக்கொண்டான்.

 

லாரி ஒன்றை தொலைவில் அது வரும்பொழுதே அவள் கவனித்துவிட  நிறுத்துவது ஒன்றும் அத்தனை கடினமாய் இல்லை அவர்களுக்கு!!

 

வண்டி நின்றுவிட… எட்டிப்பார்த்த ஓட்டுனரிடம் விரைந்தவள்,

 

“அண்ணா! ரொம்ப அர்ஜண்ட்!! ஆஸ்பத்திரி போனும்! வண்டிவேற பஞ்சராகிடுச்சு!” என்றவளின் வாக்கியத்தில் அவர் யோசிக்க மகிழனோ அதிர்ந்தான்.

 

‘ஹாஸ்பிட்டல்லா??!! யாருக்கு??!! என்ன??!!’ என்று போன எண்ணத்தை இடைவெட்டினார் அந்த ஓட்டுனர்.

 

“சரிம்மா! ஏறிக்கோங்க!!” என்றுவிட வண்டியிலிருந்த மற்றவரும் இறங்கி பின்னாடி ஏறிக்கொள்ள… இருவரும் ஏறியிருந்தனர் அந்த லாரியில்.

 

யாருக்கு..என்ன?? என்று பல வினாக்கள் அவனுள் எழுந்தன..

லாரியின் விளக்கொளியில் கண்ணெதிரே ராட்ச்சதனாய் மரங்கள் காட்சியளித்தன..

அத்தனை அருகில் அவளிருக்க முடிந்தளவு சுற்றத்தில் கவனம்பதிக்க முயன்றான். செல்லும் பாதையென அவன் அலர்ட் ஆறுமுகமாகவே இருக்க அவளோ அமைதியே உருவாய்..!!

 

சற்று மனித நடமாட்டம் இருக்கும் இடத்திற்குள் லாரி நுழைந்திருக்க…

“இங்கயே நிறுத்திக்கோங்கண்ணா!!” என்றவள் பேண்ட் பாக்கெட்டில் இருந்து  தாள்களை எடுத்து நீட்ட அதை சிரித்து மறுத்தவரோ,

 

“நீயே ஏதோ அவசரம்னு சொன்னே! மொதல அத பாருமா!” என்றவரின் சிறு இதழ் வளைவுடன் அந்த லாரி கிளம்பியிருக்க அவளுரைத்த ‘எல்லாரும் ஒரேபோல இருக்கமாட்டாங்க அகன்!’ ஞாபகத்தில் ஆடின அவனுக்கு.

 

அவளுடன் இணைந்து நடந்தவன் நினைவு வந்தவனாய்..

 

“யாருக்கு என்ன முகில்??” என்றான் பதற்றம் எட்டிப்பார்க்கும் குரலில். அதற்குள் அந்த மருத்துவமனை வாயிலுக்கே அவர்கள் வந்திருக்க அவனிடம்  கண்ணசைத்தவளாய் முகப்பில் இருந்த பெண்மணியிடம்.. விசாரிக்க அவள் விசாரித்த விசயத்தில் அவனுள்ளம் பதறியது!!

 

வெள்ளைச் சீருடையிலிருந்தவர் உரைத்த அறையை நோக்கி விரைந்தனர் இருவரும்.

வலது காலில் பெரிய கட்டும்… முழங்கை.. நெற்றி என ஆங்காங்கே சில ப்ளாஸ்த்திரிகளுமாய்… அந்த படுக்கையில் கிடந்த யுக்தாவைக் காண காண அவளுக்கு நாலு அப்பாவது அப்பிவிடவேணும் என்ற ஆவேசமே எழுந்தது முகியினுள்! ஆனால் ஏனோ எல்லாம்  ஓர் நொடியே அவளை அப்படி பார்த்த மறுகணம் கால்கள் இரண்டும் அவளிடம் விரைந்திருந்தது. கண்களில் கண்ணீர் குளம்கட்டியிருக்க.

 

அவளையே ஆறுதலாய் பார்த்திருந்த யுக்தாவோ அவளுக்கு பின்னால் தன்னையே அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மகிழனைக் கண்டு அதிர்ந்தாள்.

 

அவள் அவனை பார்க்க அவளிடம் விரைந்தவனோ…”என்னாச்சு யுகி??!! எப்படி??!!…” என்றவனுக்கு வார்த்தை பஞ்சமானது அவள் கிடந்த கோலம் கண்டு.

 

அவன் கேள்வி எதுவும் அவள் கருத்தில் பதியவில்லை! ஏன் அவள் நிலைக்கூட மறந்துவிட அவர்கள் இருவரையும் மாறிமாறி பார்த்தவளோ,

 

“என்ன பண்ணி வச்சிக்கீங்க ரெண்டு பேரும்??!!” என்றவளின் குரல் நிதர்சனத்தை உணர்ந்தவளாய் அதிர

 

முகியோ “நீ என்ன பண்ணி வச்சுருக்க யுகா??!!” என்றாள் அதட்டலாய். அதை கவனியாதவளாய்… “நாளைக்கு காலைல கல்யாணத்த வச்சுட்டு..  ரெண்டு பேரும் என்ன விளையாடறீங்களா?? நீங்க மண்டபத்துல இல்லன்னு மட்டும் தெரிஞ்சுதுனா…” என்றவளை இடைவெட்டினாள் முகி

 

“எந்த கல்யாண வீட்டுலயாவது… பொண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து ஓடிப்போவாங்களா??…”என்றுவிட யுகாவோ

 

“சீரியஸ்னஸ் தெரியாம பேசாத முகி!” என்று அதட்டினாள் மற்றவள்.

 

“நீதான் சீரியஸ்னஸ் புரியாம பேசற யுகி! எனக்கு இங்கதான் வர்றோம்னு தெரியாது! அதுவும் உனக்கு… உனக்கு இப்படினு தெரிஞ்சிருந்தா இவ்வளோ லேட்டாகிருக்காது நாங்க வர்றதுக்கு!!” என்றது நம் அகமகிழனே!!

 

இந்த மூன்று மாத இடைவேளையில் முகியிடம் பேசினானோ இல்லையோ அவளை தவிர அவளைச் சேர்ந்த மற்ற எல்லோருடனும் நெருக்கமாகியிருந்தான்.

 

“என்ன ண்ணா??! நீங்களுமா? இதுக்குதான் நான் கால் பண்ணவே கூடாதுனு நெனச்சேன்! ஆனா யாருக்காவது இன்ஃபார்ம் பண்ணனும்னுதான் இவளுக்கு கூப்டேன்.. ஆனா இப்படி…” என்றவள் இழுக்க மகிழனோ..

“அண்ணானுதானே கூப்பிடற?? அப்போ நான் வராம யார் வருவா??!” என்றுவிட

அவனுரைத்த வார்த்தைகள் அவனுக்கு எப்படியோ ஆனால் அது யுக்தாவின் உள்ளத்தின் ஆழத்தை தொட்டு மீண்டன..

 

கண்கள் கலங்கிவிட அதை மறைத்தவளாய்…” தாத்தாக்கு ஒடம்பு சரியில்ல… காய்ச்சல் திடீர்னு ரொம்ப அனத்த ஆரம்பிச்சிட்டாங்க… பக்கத்துவீட்லயும் யாருமில்ல…எல்லாரும் திருப்பதி போயிருக்காங்க… எதித்த வீட்டுல ஒரு அக்காவும் அவங்க அம்மாவும் மட்டும்தான். அவங்கள பாட்டிக்கு துணைக்கு வச்சிட்டு  பக்கத்துல… மெடிக்கல் எதுவுமே ஓபன்ல இல்ல… கொஞ்சம் தள்ளி மெயின்ரோட்டுகிட்ட வண்டிய திருப்பும்போதுதான் கீழ கெடந்த கல்ல கவனிக்கல… வண்டி ஸ்கிட் ஆகிருச்சு….. யாருமேயில்லாத ரோடு வேற… ஓரளவு கான்ஷியஸ்னஸ் இருக்கும்போதே ஆம்புலன்ஸ்க்கு கூப்ட்டுட்டேன் முகி… அப்புறம் இங்க வந்து ட்ரீட்மெண்ட் எடுத்துட்டுதான் உனக்கு கூப்டு சொன்னேன். பாட்டிட்ட சொன்னா ரொம்ப பயந்துருவாங்கண்ணா… அதான் இவகிட்ட சொல்லி யாரையாவது அனுப்ப சொல்லலாம்னு நெனச்சேன்… ஆனா இப்படி இவளே கெளம்பி வருவான்னு நினைக்கல…”

 

“என்ன.யுகா நீ??!!  உன்ன எவன் வண்டியெடுத்துட்டு அந்த நேரத்துல தனியா போக சொன்னது?? இதோட போச்சு… பெருசா எதாவது ஆகிருந்தா என்ன பண்ணிருப்பேன்?? கொஞ்சமாச்சும் அறிவிருக்கா உனக்கு?? மத்த விஷயத்துலலாம் பொறுமையா எருமைங்கறரல! ஒரு வார்த்தை சொல்லிருந்தா வேற எதாவது ஏற்பாடு பண்ணிருப்பேன்ல??!!” என்று பொரிந்தவளினுள்ளோ

 

இன்னுமே நடுக்கம்தான்! ஆளில்லாத சாலையில்… கிட்டத்தட்ட சுயநினைவில்லாமல் இருந்திருக்கிறாள். எப்படியோ ஆம்புலன்ஸுக்கு அழைத்துவிட்டாள்…இருந்தும்… எத்தனை எத்தனை செய்திகளை ஒருநாளில் அவள் கடக்கிறாள்..??! நினைக்க நினைக்க உள்ளம் உதறியது முகிலினிக்கு!

 

ஏனோ…அந்த ‘எல்லாரும் ஒரேபோல கிடையாது!’ அவளுக்கு தோன்றவேயில்லை!

 

“என்ன  என்ன பண்ண சொல்ற முகி.  ராஜன் அங்கிள் ஊர்ல இல்ல… இல்லாட்டி அவங்களே வந்து பாத்துட்டு போயிருப்பாங்க. எனக்கு அந்த நேரத்துல வேறெதுவுமே தோணல முகி! எனக்குனு இருக்கறது நீங்கல்லாம்தான்! தாத்தாக்கு ஒடம்புக்கு முடியல… நீயும் என்கூட இல்ல… உண்மைலயே ரொம்ப டென்ஷனாகிட்டேன் முகி! எனக்கு உன்ன தொந்தரவு பண்ணவும் மனசு வரல… ஆனா  தாத்தா பாட்டிக்கு அடுத்து எனக்குனு நீதானே இருக்க… அதான் உனக்கு கூப்பிட்டேன்!” என்று கண்ணில் நீர்வழிய உரைத்தவளை கண்ட முகிலினியின் முகமும் அதையே பிரதிபலிக்க அவளோ,

 

“ஆஸ்பத்திரி அடிவிழாதுங்கற திமிருல பேசறீயா??!! சப்பு சப்புனு வச்சுருவேன்!! இனி இப்படி பேசினா!! ஒழுங்கு மரியாதையா வாய மூடிட்டு இருந்துரு!! இல்ல பேஷன்ட்டுனுகூட பாக்கமாட்டேன்!! வெளுத்துருவேன்!!” என்று வீம்பாய் வாய் மிரட்டினாவனலும் கண்கள் ஏனோ கசிந்தன அவளுக்கு…

 

அதை கண்டுக்கொண்டவனாய்… இருவருக்கும் தனிமையளித்து டாக்டரை பார்த்துவிட்டு வருவதாக அங்கிருந்து அகன்றான் மகிழன்.

 

“ஸாரி முகி…”

 

“வெளக்குமாறு!!”

 

“ஏற்கனவே ஒடம்பு சரியில்லாத புள்ளைய ஏன் திட்டற!” என்றவள் பாவமாய் கேட்க மற்றவளோ

 

“ஹே! என்னாச்சு?? வலிக்குதா?? என்ன பண்ணுது??” என்று பதறினாள்.

 

“அதெல்லாம் ஒன்னுமில்ல….” என்றவள்

 

“உனக்கு மகி அண்ணாவ ரொம்ப பிடிக்கும்ல முகி??” திடீர் கேள்வியில் அதிர்ந்தவளாய் முகிலினி இருக்க யுக்தாவோ… “நான் கவனிச்சேன்! மொத தடவ எங்கேஜ்மெண்ட் ஃபிக்ஸ் ஆனப்போ நீ நீயாவே இல்ல! ரொம்ப அமையாகிட்ட… ஆனா மகிண்ணாவோட கல்யாணம் ஃபிக்ஸ் ஆனதுக்கு அப்புறம்… நீ நீயாதான் இருக்க!…” என்க

 

“இப்போ இது ரொம்ப முக்கியம்! தாத்தா  இப்போ எப்படியிருக்காங்க??” என்று அவள் பேச்சை மாற்றினாள் அதை உணர்ந்தும்… “நான் சொன்னேன்ல அந்த அக்காவோட அம்மா… கஷாயம் வச்சு குடுத்தாங்களாம்…இப்போ பரவால்லனுதான் சொல்றாங்க… நான் எதையும் அவங்கட்ட முழுசா சொல்லல்ல” என்றவள் கட்டை சுட்டிக்காட்டியவளாய்.

 

“பயப்படுவாங்க முகி” என்றாள்.

 

ஒரு ‘எக்ஸ்க்யூஸ் மீ’உடன் உள்ளே நுழைந்தான் மகிழன்.

“டாக்டர்ட்ட பேசிட்டேன்! நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போயிரலாம்னு சொல்லிட்டாங்க…ஆனா கால் எலும்பு  சேருற வரைக்கும் அசையக்கூடாதுனு சொல்லிருக்காங்க!” என்றுவிட  யுக்தாவின்.முகம் சுருங்கிவிட்டது.

 

“பாத்துக்கலாம் யுகா!” என்றவளிடம்… “அப்போ உங்க கல்யாணத்துக்கு வர முடியாதுல…” என்க முகிலினிக்கும் ஒருமாதிரி ஆகிப் போனது!

 

அவளுக்கு இருக்கும்.ஒரே தோழி…உயிர்நட்பு!! என்றுப்போன மனதை பிடித்திழுத்தவளோ நிலமையை சரிசெய்யும்பொருட்டு…

 

“இப்போ கிளம்புனாதான் நாங்களே எங்க கல்யாணத்து போக முடியும்!! ஸோ நீ லா லா லா பாடாமா குடுத்த மாத்தரைய முழுங்கிட்டு கவுந்து படுத்துரு!! “ என்றிட அவள் சொல்லிய விதத்தில் முதலில் சிரித்துவிட்டவள் பின் அதுதான் உண்மை என்று உறைக்க அவளை கிளப்பும் முயற்சியில்…

 

அவளுக்கு வேண்டியவை எல்லாம் வாங்கி வைத்தவர்கள் அவளிடம் சொல்லிக் கொண்டு வெளியேறினர்.

அப்பொழுதே மணி மூன்றை தொடவிருக்க… “தாத்தாக்கு…” என்று தொடங்கியவளை தடுத்தவன்

 

“என் ஃப்ரெண்ட் டாக்டர்தான்! அவன் அப்போவே போய் பார்த்துட்டான் முகில்!! தாத்தாக்கு ஒன்னுமில்ல! அவங்க பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்!” என்றவனின் முகத்தில் ஆறுதலாய் சிறு புன்னகை.

 

“தா…” என்றவள் வாய்த்திறக்க அதை தடுத்து நிறுத்தியது அவள் வாட்சில் இருந்து வந்த அந்த பீப் சத்தம்! மணி மூன்றை தொட்டிருந்தது!

 

இன்னும் ஒரு மணிநேரம்கூட இல்லை அவர்களுக்கு!  

 

“லேட்டாச்சு முகில்!! நடக்க ஆரம்பிச்சரலாம்! ராஜேஷ வண்டி எடுத்துட்டு வர சொல்லிருக்கேன்… “ என்றிட இருவரும் நடக்கத் தொடங்கினர்.

 

நினைவு வந்தவனாய் பையிலிருந்த சாக்லெட் பாரை எடுத்து அவளிடம் நீட்டினான் மகிழன். அவள் புரியாமல் பார்க்க,” இவ்வளோ நேரம் முழிச்சிருந்தா பசிக்கும்! எப்படியும் மண்டபத்துக்கு போன ஒடனே சாப்பிட நேரமிருக்காது!….டென்ஷன் வேற!” என்றவனின் வார்த்தைகளில்  ஏனோ உள்ளம் முழுமையிலும் குளுமையாய்!!

 

“தாங்க்ஸ்ஸ்!!” என்று பெற்றுக் கொண்டவள் அவனைப் பார்க்க, “இங்க இதுதான் கெடச்சது முகில்” என்றான் சாதாரணமாய்.

 

ராப்பரை பிரித்தவள் பாரை சரிபங்காயா பிரித்து அவனுக்கு பாதியை கொடுக்க மறுக்காமல் வாங்கிக் கொண்டான் மகிழன்.

 

அவனுக்கும்தானே பசிக்கும்? அவனுக்கு பசிக்கபோய்தானே அவளுக்கும் பசிக்கும்னு நினைச்சுருக்கான்! என்றுதான் தோன்றியது அவளுக்கு.

 

சில்லென காற்றும்..

விடியாத வேளையும்…

சின்ன நடையுமென..

சில்லிடும் அனுபவமொன்றை

இருவரும் அனுபவித்தும்..அனுபவிக்காத நிலையில்…!!!

 

 

சற்றும் தூரம் நடந்தவர்கள் ராஜேஷ் அவனது பைக்கில் வந்துவிட இருவரும் ஏறிக் கொண்டனர்.

 

வண்டியோட்டிக் கொண்டிருந்த ராஜேஷோ “என்னாச்சு மகி??” என்க

 

“ஒன்னுமில்ல ராஜி சின்ன ப்ரச்சனைதான்…சரியாகிடுச்சு!!”என்றான்.

 

“என்னதான் இருந்தாலும்…இப்படி கல்யாணத்துல இருந்து ஓடிப்போறது…எனக்கென்னமோ சரியாபடல மகி!” என்றதுதான் தாமதம். இருவேரும் இருவேறு பாவனையில்!!

 

முகிலினி வரத்துடித்த சிரிப்பை அடக்கியபடி இருக்க மகிழனோ தலையிலடித்துக் கொள்ளாத  குறையாக , “நான் எப்போடா ஓடினேன??” என்றான்

 

“அப்போ…” என்ற ராஜேஷின் குழப்பத்தை கண்டவனோ வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டான்.

 

“எந்த மாப்பிள்ளையாவது கல்யாணப்பொண்ணோட ஓடுவானாடா??” என்று காய பட்டென ரியர்வ்யூ மிரரில் முகிலினியின் முகத்தை உற்று நோக்கினான் ராஜேஷ்.

 

“ஹோ….. அதிகமா பாத்ததில்லலியா… ஸாரி சிஸ்டர்!” என்றான் அசடுவழிய.

 

‘எங்க நானே அவள அதிகம் பாத்ததில்ல…’என்ற மகிழனின் மைன்ட் வாய்ஸ் வெளியே கேட்டிருக்க வாய்ப்பில்லைதான்.

 

“அப்பறம் என்னதான் மகி ப்ரச்சனை??” என்ற நண்பனிடம் பிறகு சொல்வதாக  சொல்லியவன் மூச்சுவிட அதற்குள் அடுத்த கேள்வியுடன் ராஜேஷ்!

 

“மகி! எந்த வழியா போனும்??” என்று வினவியவன் பின் அமைதியாகினான்.

 

மெயின்ரோட்டில் இருந்து பிரிந்துச் சென்ற சாலையில் வண்டி திரும்பிய கணத்தில் நின்றுவிட… மகிழனுக்கோ…’யாரோ நமக்கு சூனியம் வச்சுட்டானுங்க போல!’ என்றுதானிருந்தது.

 

என்ன ப்ரச்சனை?? என்று புரியாமல் முகிலினியும் மகிழனும் கீழிறங்கிவிட… வண்டியில் அமர்ந்தபடியே எதையோ தீவிரமாய் யோசித்திருந்த ராஜேஷ் பெட்ரோல் டாங்கை பார்த்துவிட்டு…

 

“பெட்ரோல் இல்ல மகி…” என்று அடுத்த குண்டை தூக்கிப் போட்டிருந்தான்.

 

 

 

“என்ன சஞ்சு குண்ட தூக்கிபோடற???!!!” என்ற ஜீவனின் வாயில் கைவைத்து மூடியவனோ..

 

“ஷ்! ஜீவா இன்னும் போகல… ஆனா முகிய எழுப்பனும்னு அம்மா அத்தைட்ட சொல்லிட்டிருந்தாங்க!… பத்து நிமிஷமாவது ஆகும் அவங்க போய் கதவ தட்ட!” என்க ஜீவனோ…

 

“தட்டிட்டா??” என்றான் திகிலாய்

 

“நம்மள தட்டிருவாங்க!” என்ற சஞ்சயனைக் கண்டவனோ… “ச்சே ச்சே! அப்படியெல்லாம் ஒன்னுமாவாது!  அண்ணி வந்துருவாங்க சீக்கிரம்!! பீ பாஸிட்டிவ்!!” என்க மற்றவனோ

 

“வந்தாத்தாண்டா அண்ணி!!!…  பாஸிட்டிவ்வா?? எல்லாம் அந்த தூங்குமூஞ்சி வித்யா எழுந்துக்கற வரைக்கும்தான்! அவ மட்டும் எழுந்திரிச்சு முகி ரூம்ல இல்லன்னு சொல்லிட்டா…”

 

“அதெல்லாம் ஒன்னுமாகாது! பாத்துக்கலாம் சஞ்சு!!” என்றவனின் தாடையை பிடித்து திருப்பி “அங்க பாரு!” என்றான் சஞ்சயன்.

 

அவன் சொன்னது போலவே வித்யா கண்களிரண்டையும் கசக்கி தூக்கம் கலைந்தவளாய்  வந்துக் கொண்டிருந்தாள்.

 

அவளைக் கண்டவர்களுக்கோ பகீரென்றானது!

 

கடகடவென கணக்கிட்ட ஜீவன் சஞ்சயனிடம், “பங்கு அவள அமுக்கிரு!!” என்க மற்றவனோ…

“டேய் அது என் அத்த பொண்ணுடா!!” என்று அலறினான்.

 

“அத்தையா இருந்தாலும் நமக்கு வேற வழி இல்லடா!”  என்று கை விரித்தவனைக் கண்ட சஞ்சுவோ

 

“டேய்! ஏற்கனவே அவளுக்கு நான் அவ  பின்னாடி  ஒத்தையடி பாதையில பாடறதா நெனப்பு!! நீ வேற ஏண்டா…” என்று அலுத்துக்கொள்ள ஜீவனோ…

 

“வசதியா போச்சு!  வெளில கூட்டிட்டு போய் ப்ரபோஸாவது பண்ணித் தொலைடா! “ என்றான் அவனை விரட்டும் எண்ணத்தில்.

 

“டேய்ய்ய்!!” என்ற மற்றவனின் அலறிலிலேயே தான் என்ன கூறினோம் என்று உறைக்க…

 

“பக்கத்துல வந்துட்டாடா! சீக்கிரம் சீக்கிரம்!!” என்க இவன் எப்படி அழைத்து பேசுவது என்று எண்ண அவளோ அவனிடமே வந்து நின்றாள்.

 

“சஞ்சு! முகிக்கா எங்க??” என்று வினவ பக்கத்தில் நின்ற ஜீவனுக்கு பொறையேறாத குறை!!

 

“….முகி…முகி அவ ஃப்ரெண்டோட பேசிட்டிருக்கா வித்யா!”  என்றான் சமாளிப்பாய்.

 

ஜிவனோ கண்களாலேயே அவனுக்கு ஆயிரம் அவார்டுகளை அள்ளி வீசியிருக்க அடுத்த கேள்வியை இறக்கியிருந்தாள் வித்யா.

 

“எங்க இருக்காங்க??” என்றவளிடம் இம்முறை சற்று நிதானமாகவே… “பின்வாசல்ல இருக்கா வித்யா” என்றான்.கேஷுவலாய்…அப்படிதான் காட்டிக்கொண்டதாக நினைத்தான்.

 

ஆனால் எல்லாம் அவள் பின்வாசலை நோக்கி ஓரெட்டு எடுத்து வைக்கும்வரைதான்.

 

“எங்க போற நீ??” என்றவனையே வினோதமாய் பார்த்தவள்

 

“அக்கா பின்னாடிதானே இருக்காங்க?!” என்றாள் கேள்வியாய்.

 

“ஆமா!…ஆமா!! பின்னாடிதான் இருக்கா!”

 

“அதான் பாக்கபோறேன்” என்று அவள் நிற்க

 

“நான்தான் சொல்றேன்ல அவ ஃப்ரெண்டோட பேசிட்டிருக்கானு! ஏற்கனவே அவ ஃப்ரெண்ட் வெளியூர்ல இருந்து வர முடியலங்கற கோவத்துல பேசிட்டிருக்கா! இதுல நீ வேற போனா…. “என்றிழுத்தவன் வித்யா குழம்புவதை கண்டுக்கொண்டவனாய்…

 

“டீ குடிச்சியா வித்யா???” என்றவன் அவள் இல்லையென தலையசைக்கவும்.

 

“என்ன வித்யா?! அத்தை உனக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க!” என்க

 

அவனிடம் “ம்ம்ம்” என்று தலையசைத்தவள் இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டே அகன்றாள்.

 

“கலக்கிட்ட சஞ்சு!!!” என்ற ஜீவனின் தலையில் எதை தூக்கி வீசலாம் என்று பார்த்தான் சஞ்சயன்.

 

 

“உன்னையெல்லாம் நம்பி கூப்பிட்டேன் பாத்தீயா!!! எம்புத்திய செருப்பாலேயே.அடிச்சுக்கனும்!!” என்று வெட்டவா குத்தவா என்று பார்த்து நின்ற மகிழனிடம்.

 

“கல்யாண மாப்பிள்ளை செருப்பாலலாம் அடிச்சிக்க கூடாதுடா!” என்க மகிழனோ பார்வையாலே அவனை அடித்து வெளுத்திருந்தான்.

 

“வா முகில்!” என்று முகிலினியின் கைபற்றியவன் இரண்டெட்டு எடுத்து வைக்க

ராஜேஷோ “மகி பைக்கு??” என்றான் சந்தேகமாய்.

 

“ம்ம்ம்…உருட்டிட்டு வா!!! முஹூர்த்ததுக்குள்ள நீ மண்டபத்துல இருக்கற!!!” என்றவன் அவளையும் அழைத்துக்கொண்டு விறுவிறுவென நடக்க

 

பின்னால் தலையை திருப்பிய முகிலினியோ ராஜேஷைப் பார்த்து புன்னகைத்தவளாய் திரும்பியிருந்தாள்.

 

பாதி தூரம் கடந்திருந்தவர்கள் நின்றுவிட அடக்கமாட்டாமல் சிரித்தாள் முகிலினி.. “அய்யோ பாவம்! நீ கூப்பிட்ட ஒடனே வந்தாங்க! இப்படியா திட்டுவ??” என்றுரைத்தவள் பின் “ஆனா அகன் நீ கோவப்பட்டா செம காமெடியா பேசற!!” என்றுவிட அவனோ முறைக்க முயன்று தோல்வியைத் தழுவியவனாய் சிரித்துவிட்டான்.

 

அவனுக்கு இந்த முகிலினியும்  புதியவள்!!  ஒவ்வொரு சந்திப்பிலும் ஒவ்வொரு அவதாரமாய் எடுக்கிறாளே என்று முன்பு அவன் யோசித்ததுண்டு… ஆனால் இன்று…  முதலில் வேண்டவே வேண்டாம் என்று நினைத்தது  இப்பொழுது பிடித்துவிடுவதுபோல்…  தன் கல்யாணத்தைவிட தன் தோழியின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து…  அவள் கிளம்பியதாகட்டும்… ஆஸ்பத்திரில்… சப்பு சப்புனு வச்சுருவேன்.. என்று யுக்தாவை மிரட்டியதாகட்டும்…

 

விறுவிறுவென ஓட்டமும் நடையுமாய் வந்தவர்கள் அந்த க்ரில் கேட்டை பார்க்க அதுவோ பூட்டப்பட்டிருந்தது!

 

சுற்றுமுற்றும் தன் பார்வையை சுழலவிட்டவனின் பார்வையில் கட்டைசுவரொன்று விழ  அங்கு விரைந்தான்.

 

முதலில் ஏறியவன் ஒரு காலை உள்ளேயும் மற்றொன்றையும் வெளியேயுமாய் போட்டுக்கொண்டு அவளுக்காக கை நீட்ட  நீண்டிருந்தவனின் கரம் பற்றியவளாய்  ஒரு காலை அழுத்தி ஏறிவிட அந்தப்பக்கம்  உயரம் சற்று அதிகமாய் இருக்க  முதலில் கீழே குதித்து இறங்கியவன் அவள் இறங்குவதற்காய் நின்றபடியே சுற்றுமுற்றும் பார்வையிட்டான்.

 

முதலில் தன் செருப்பை கழட்டி.கீழே போட்டவள் குதிப்பதற்கு வாகாய் திரும்பி அமர முயல அதற்குள்  சமயல்கட்டின் பின்புறமாய் முல்லையின் தலை தெரிய… அவர் வருவதை கவனித்துவிட்டவனாய்…

 

“முகில் சீக்கிரம்!! அத்த வர்றாங்க!!!” என்று மகிழனும் அவசரப்படுத்த. ஏற்கனவே  குதிக்கத் தயாராய் இல்லாமல் அமர்ந்திருந்தவள் இவன் பதறிய விதத்தில் குதித்துவிட தொப்பென அவன் காலிலேயே குதித்து தடுமாறி விழுந்திருந்தனர்.

 

“”ஸ்ஆ!!!” என்று பொறுக்க முடியாத வலியில் அவன் கத்த முற்பட அவன் வாயில் கை வைத்து தடுத்தவளாய் அவள் இதழில் ஒற்றை விரல் வைத்து ‘ஷ்!!’ என்றிருந்தாள்.

 

முல்லை அடுக்களைக்குள் நுழைந்துவிட அப்பொழுதுதான் அவளுக்கு மூச்சே வந்தது!

ஆசுவாசமாய் அவளிருக்க அவனோ…”ராட்சசி!! காலுல மிதிச்சது மட்டுமில்லாம இப்போ சங்குல கைய வச்சு அமுத்தி என்ன கொல்ல பாக்கறா!!!” என்று மைன்ட் வாயிஸ்  இம்முறை சத்தமாய் வெளிவந்துவிட..  

 

முதலில் கோபமெழப்பார்த்தவள் பின்பே தான் உண்மையிலேயே அவன் கழுத்தில் கைவைத்து அழுத்தியபடி இருப்பது புரிய… உருண்டு விலகியவள் எழுந்துக் கொண்டு அவனெழுவதற்காக கை நீட்டினாள்.

 

இடது கால் விண்ணென்று வலிக்க ஒருவாறு சமாளித்தவனாய் எழுந்தான்.

 

அவனை கைதாங்கலாக பிடித்தவள் இரண்டெட்டு எடுத்து வைக்க… அத்தனை நேரமும் மண்டபத்தின் நாலாபுறமும் கண்காணித்துக் கொண்டிருந்த ஜீவனும் சஞ்சயனும் இவர்களை கண்ட நொடி… மனதுக்குள் ஊ…ல…ல..{லா..பாட  ஓடிவந்திருந்தனர்.

 

“எங்க முகி போன?? ஃபோன் எடுக்கறதுக்கு என்ன??” என்று கேள்விகளை அடுக்கிய  சஞ்சுவிடம் “அப்புறம் சொல்றேன் சஞ்சு!! யாரும் தேடலையே??” என்க அவனோ “நீ வேற! உனக்கு வேற ஆளே கெடைக்கலையா?? கூட தங்க வச்சுக்க… அம்மாவ கூட சமாளிச்சிருவேன்…ஆனா இந்த வித்யாவ… ஹைலி இம்போஸிபிள்!! இப்பதான் அம்மாட்ட நீ ஃப்ரெட்டுட்ட பேசிட்டிருக்கதா சொன்னேன்!…”

 

“மகி யாரும் வர்றதுக்கு முன்னாடி ரூமுக்கு போயிருவோம்! இல்ல ப்ரச்சனையாகும்!” என்ற ஜீவனிடம் தலையசைத்தவன் அவனுடன் இணைந்து நடந்தான்.

 

“ஏன் ஒரு மாதிரி நடக்கற!??” என்ற ஜீவனிடம்

 

“அம்பது கிலோ அரிசி மூட்டை ஒன்னு காலுல லாண்டாகிடுச்சு! “ என்று புலம்பியவனாய் முன்னேற…

 

“அதான் அண்ணி கைக்தாங்கலா பிடிச்சிருந்தாங்களா??” என்றான் ஜீவன்

‘கால ஒடச்சதே அவதானே!!’ என்ற எண்ணமெழ அதை அப்படியே அமிழ்த்தியவனாய் அறையை நோக்கி நடந்தான்.

 

“உன்னைய எங்கெல்லாம் தேடறது??” என்று வந்த முல்லையிடம்…

 

“இல்லம்மா…ஃபோன்..” என்றவள் தொடங்க… அவரோ “சஞ்சு சொன்னான்! சரியா தூங்கலையாடா?? ரொம்ப டயர்டா தெரியறா… காபி குடிச்சியா?? இரு கொண்டாறேன்!!” என்று கேள்வியும் நானே பதிலும் நானே ரேஞ்சிற்கு அவளுக்கு சிரமமின்றி அவரே கேள்வியும் கேட்டு அதற்கு அவரே பதிலும் சொல்லிவிட… சிக்கலின்றி போனது அவளுக்கு!!

 

படியேறியவளின் மனதுக்குள் இருந்ததெல்லாம் ஒன்றே! “கல்யாணமே வேண்டாம் என்று இருந்த தானா இன்று இந்த கல்யாணத்தை காப்பாற்ற ஓடிவந்தது!??”

 

 

“புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா…

அந்த மணமகள்தான்

வந்த நேரமடா…” என்ற பாடல் வரிகள் அந்த மண்டபத்தை நிரப்பியிருக்க

 

‘எல்லாம் என் நேரமடா!!!’ என்று புலம்பியபடி அவனருகில் மணக்கோலத்தில் அமர்ந்திருந்தவளை பார்த்தான் அவன்.. அகமகிழன்..!!

 

அத்தனை நேரம் அவன் இடது காலின் வலியினால் ஏற்பட்ட எரிச்சலில் இருந்தவன் பக்கத்தில் மணக்கோலத்தில் அமர்ந்திருந்தவளைக்காண… அவளும் அவனைதான் பார்த்திருந்தாள்.

 

ஒருவொருவரை ஒருவர் பார்த்திருந்த இருவருள்ளும் இனம்புரியாத நிம்மதியுணர்வொன்று எழ எங்கிருந்தோ வந்து எதிர்பாராமல் உரசிய தென்றலாய் இதழ்களில் சிறு கள்ளச்சிரிப்பொன்று தாமாய் மலர்ந்திருந்தது இருவரிலும்!!

மணவாழ்வின் தொடக்கமான அந்நிகழ்வின் ஒவ்வொரு நொடியும்… மகிழ்ச்சியில் தொய்த்த ஆனந்த அனுபவமாய்….. அவர்களே அறிந்திரா தருணம் கதவை தட்டிய குதூகலத்தை கையில்பிடித்தவர்களாய்… அத்தனை மகிழ்வும்… பெற்றோர்களின் நெகிழ்வுமாய்…

 ஆர்ப்பாட்டமாய் நடந்தேறியது அவர்களின் கல்யாண கச்சேரி….

 

இரவு நேரத்திற்கே உரித்தான குளுமையும்… வானில் ஆங்காங்கே கண்சிமிட்டும் நட்ச்சத்திரங்களும்… வெள்ளி தகடாய் மின்னும் நிலாவும்… தனிமையின் இனிமையுமென அந்த அறையின் பால்கனியில் நின்று விட்டத்தை வெறித்திருந்தான் மகிழன்..!!

 

இன்னுமே அவனால் நம்ப இயலவில்லை அவனுக்கும் முகிலினிக்கும் கல்யாணமாகிவிட்டதென… நேற்றைய இரவிலிருந்து நடந்தவை எதையும் அத்தனை சுலபமாக எடுத்துக் கொள்ள கூடியவை அல்லவே!?

இன்னும் அவனுக்கு ஆச்சர்யமே!!

ஃப்ரெண்ட்டுக்கு ஒன்னுன்ன ஒடனே… எவ்வளோ பெரிய ரிஸ்க் அது?!! அதுவும் அந்த நேரத்துல… நான் பாக்கலன்னா…???? என்றோடிய எண்ணமே அவனை உலுக்கியது!! மனமோ அதன் போக்கில் போய்க்கொண்டிருக்க ஏனோ பாதி வழியில் கைப்பிடித்து ஓடிவந்தவள் நின்று கடகடவென சிரித்த அவளின் முகமே நினைவில் வந்து அவன் இதழை சிறிதாய் வளைத்திருந்தது!!

 

அவன் எண்ணத்தில் நிறைந்தவளே அந்த அறையினுள் நுழைந்தாள்.

கதவை தாழிட்டவளாக அழகாய் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் வந்தமர்ந்தவளைக் கண்டவனோ.. பால்கனியிலிருந்து அறையினுள் வந்திருந்தான்.

 

அமைதியாய் வந்தமர்ந்தவளிடம் “என்ன முகில்??” என்று வினவியவாறே அவளுக்கு எதிரில் அமர்ந்துக் கொண்டான் மகிழன்.

 

“ஒன்னுமில்ல!” என்றவள் அமைதியாகிட அவனுக்குமே அதற்குபின் என்ன பேசுவதென்று தெரியவில்லை….

பொருத்து பொருத்து பார்த்தவனால் அதற்குமேலும் அமைதி காக்கமுடியவில்லை! எவ்வளவு நேரம்தான் விட்டத்தையே வெறித்திருப்பது??!! அவன் ஃபோனை வேறு கீழே வைத்துவிட்டிருந்தான். இல்லையெனில் அதையாவது நோண்டிக்கொண்டு நேரத்தை கடத்தியிருப்பான். மறுபடியும் பேச்சை தொடங்கினான் அவன்…

 

“ரொம்ப போரடிக்குதுல…??” என்றவனையே பார்த்தவளோ

 

“சரி….அப்போ பாடு!” என்றருந்தாள் எந்தவித உணர்ச்சியையும் பிரதிபலிக்காது. அவளையே பார்த்திருந்தவனுக்கும் உள்ளுக்குள் ஆசைதான்…அவளை பார்த்து

 

‘ஏ!!! சண்டிக் குதிரை…வாயேண்டி எதிரே’னு பாட… ஆனால் எங்கு தான் பாடி அவள் அதை கேட்டப் பிறகு,

 

‘திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா’னு வந்துட்டா…என்ன பண்ணறது??? என்றெண்ணியவனோ

சமாளிப்பாய் சிரித்தான்,தப்ப வேண்டுமே?!

ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில்தான் அவளில்லையே..

 

இயல்பிலிருந்து கிஞ்சித்தும் மாறாமல்..தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவளை பார்த்திருந்தவன் அவள் முகத்தை அப்பொழுதே கூர்ந்து கவனித்தான்…

 

அவள் எதையோ மனதுக்குள் போட்டு குழப்பிக்கொண்டிருக்கிறாள் என்பது அவள் முகத்திலேயே தெரிய அவனுக்கோ… ‘சாந்திரம் வரைக்கும் நல்லாதானே இருந்தா?? இப்போ என்னாச்சு இவளுக்கு??’ என்றுதானிருந்தது.

 

அத்தனை நேரம் சிரித்த முகமாய் இருந்தவளுக்கு திடீரென என்னவாயிற்று?? என்ற கேள்வியே எழ…

 

“ஹே! என்ன முகில் இதெல்லாம்???”… என்றவனின் குரல் என்ன சிம்ரன் இதெல்லாம் டோனில் ஒலிக்க அவளோ

“என்ன??” என்றாள் எதையும் பிரதிபலிக்காமல். முகிலினிக்கோ அவளிடமே…அவளுக்கு அவளே கேட்க வேண்டிய பல கேள்விகள் இருந்தன… இது இன்று நேற்றல்ல மகிழனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதிலிருந்து…ஏன் அதற்கு முன் அவள் சரியென்று சம்மதம் தெரிவித்ததிலிருந்தே இதே கேள்விதான் அவளுள்!! எதற்காக சம்மதித்தோம்?? என்ற வினா முளைக்கும்பொழுதெல்லாம் அதை அமிழ்த்தியிருந்தவளால் காலையில் யுக்தாவும் அதையே கேட்டுவிட… அது அப்பொழுது உறைக்காவிட்டாலும்… இப்பொழுது அவளை குழப்பியது.

 

‘ஏன்??’ என்று எழுந்த கேள்விக்கு. பதில்தான் அவளுக்கு கிடைக்காமல்போனது… இருந்தும்…

ஏன்?? எதுக்குனே கேக்காம அவனால எப்படி வர்ற முடிஞ்சது??…

 

 

சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளைக் கண்டவனுக்கோ, என்ன இவ? என்றிருந்தாலும் அவன் மனம் வேறொன்றில் வேரூன்றிப்போக…

“நீ இந்த படமெல்லாம் பாக்கமாட்டீயா??” என்றான் சம்பந்தமேயில்லாமல்.

அவனது திடீர் கேள்வியில் தன்னை மீட்டெடுத்தவளோ “ஏன்??” என்றாள் கேள்வியாய்.

 

“என்ன முகிலு!” என்று போலியாய் அலுத்துக்கொண்டவன் ஃப்ளாஸ்க்கை தூக்கிக்கொண்டு அறைவாயில்வரைச் சென்றான்.

 

‘என்னாச்சு இவனுக்கு??’ என்றவள் பார்த்திருக்க அவனோ பூட்டப்பட்டிருந்த கதவில் சாய்ந்து நின்றவனாக,

“நீ இந்த ஃப்ர்ஸ்ட் நைட் ஸீன்லாம் பார்த்ததில்லையா?? சாஸ்த்திர சம்பிரதாயமே தெரியல!! நீ பாட்டுக்கு தேமேன்னு வந்து உக்காந்துட்ட!” என்க முதலில் என்ன பேசறான் இவன்?? என்று விழித்தவள் பிறகு புரிந்துவிட.. லேசாக விரிந்த சிரிப்பை அடக்கியவளாய் எழுந்து நின்று ‘அச்சோ’ என்று ஒரு கையை தலையில் வைத்து இன்னொரு கையை உதறியவளாய்..

 

“எனக்கு தெரியாதுங்களே!!” என்றாள் பேந்த பேந்த விழித்து.

அவளது பாவனையில் ‘பரவால்லயே!!’ என்று மெச்சிக் கொண்டவனோ,

 

“சரி சரி! நான் சொல்லித் தர்றேன்! அத அப்படியே ரிபீட் பண்ணு! ஒருவாட்டி மன்னிக்கறேன்!” என்றான் பெரிய மனதுபண்ணி.

 

அடங்கப்பா!! என்று கமெண்ட் அடித்த மனதை அடக்கியவளாய் கண்களில் குறும்பு மின்ன… “சரிங்க” என்றாள் அப்பாவியாய்.

 

“ம்ம் ம்ம்!” என்றவன் பின் பொறுமையாய் அந்த ஃப்ளாஸ்க்கை கையில் எந்தியவனாக.. பொறுமையாய் அடிமேல் அடிவைத்து… குனிந்த தலை நிமிராமல் என… 50ஸ் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்தான்.

 

கண்கள் விரிய அவனையே பார்த்திருந்தவளோ வாயைப்பொத்தி சிரிக்க… அவளிடம் வந்தவனோ “என்ன சிரிப்பு??!! போ போ!!” என்று அமர்ந்துவிட

 

ஏதோ ஒலிம்பிக் தீபத்தை பிடிப்பதுபோல் அந்த ஃப்ளாஸ்க்கை வாங்கியவளோ வாயில்வரை சென்றாள்.. அவன் செய்ததுபோலவே அடிமேல் அடிவைத்து நடந்து வந்தவளோ… அந்த ஃப்ளாஸ்க்கை டேபிளில் வைத்துவிட்டு கட்டிலின் மறுபுறம்  நுனியில் அமர்ந்து அவன் முகம் கண்டவள்..

 

“ப்ராணநாதா!!” என்று மூக்கால் பேச… கேட்டிருந்தவனுக்கு மட்டுமின்றி சொல்லிய அவளுக்கே அதற்குமேல் அடக்கமுடியாமல் வெடித்துச் சிதறியது சிரிப்பு!!

 

அடக்கமாட்டாமல் சிரித்தவளிலேயே  சில கணங்கள் அவன் விழிப்பார்வை இரசனையாய் படிந்தாலும் சுற்றத்தை உணர்ந்தவனாய் ஓடிச்சென்று அவள் வாயில் கைவைத்து அவளது சிலீர் சிரிப்பை அடக்கினான். அதுதான் அவனும் எதிர்ப்பார்த்தது.. அவளது அமைதியைக் கண்டுதான் அவன் தொடங்கி வைத்தான்… இருந்தும் அந்த நேரத்தில்… சிரிப்பு சத்தம் வெளியே கேட்டால்?? என்று தோன்றிவிட  அடக்க முயற்சித்தான்.

 

ஓர் நொடி அதிர்ந்தவள்… அவன் செயலின் காரணம் புரிய இன்னுமின்னும் சீறிக்கொண்டுவந்த சிரிப்பில் அவனையே கேலியாய் பார்த்தவளின் உடல் மௌனச்சிரிப்பில் குலுங்க… விழிகளிரண்டின் விளிம்புகளோ கண்மையின் கடைசித் துளிகளாய் கசிந்தன..

 

“உஷ்!! முகில்! வெளில சத்தம் கேக்கப்போவுது!! மெதுவா!” என்றான்.

 

சற்று நிதானித்த முகியோ “நீ எப்பவுமே இப்படிதானா??!!” என்றாள் கிண்டலாய்.

 

அவள் கேள்வியின் அர்த்தம் உணர்ந்தவனோ “ப்ச் ப்ச்!! அப்பப்போ நார்மலாவும் இருப்பேன்!” என்றுவிட மறுபடியும் அங்கொரு சிரிப்பலை!!

 

“ஏன் அகன்… நீ என்ன எத்தன தடவ பாத்திருக்க??” என்றவளின் கேள்வியில் அவள்புறம் முழுதாய் திரும்பி அமர்ந்தவனோ “மொத தடவ ஜீவா காலேஜ் வாசல்ல பாத்தேன்…” என்று அன்றைய தினத்தை விவரித்தவன் ஒவ்வொன்றாய் உரைத்தான்.

 

“அனா எனக்கு மட்டும் உன்ன ஏன் ஞாபகமில்ல??” என்றவனின் கேள்வியில் புன்னகைத்தவள்.

 

“அது… நான் அவ்வளவா எந்த ஃபங்ஷனுக்கும் வந்ததில்ல… அதுனாலக்கூட இருக்கலாம்”

 

“ஓ…” என்று கேட்டிருந்தவனின் காலில் இவள் தட்டிவிட ஸ்ஸ் என்று அவன் லேசாக முனங்கவே அவளுக்கும் நினைவு வந்ததுபோலும்..

 

இருவரும் எதிரெதிரில் கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருக்க “ஹே! என்னாச்சு?? “ என்று அவன் காலை கவனித்தாள்.

 

நன்றாக வீங்கியிருந்தது. அதை மெதுவாக தொட்டவளோ “வலிக்குதா??” என்க அவனோ “உயிரே போயிருச்சு!!” என்றான் வசனமாய்.

 

அவனை முறைத்து பார்த்தவளோ “அலைபாயுதே மாதவனாக்கும்??!! உனக்கெல்லாம் காலுல குண்டான தூக்கி போட்றுக்கனும்!!” என்றவாறு ஃப்ளாஸ்க்கில் இருந்த பாலை ஒரு க்ளாஸில் ஊற்றினாள்.

 

“அதான்.நீ விழுந்திட்டியே!!” என்றவனை முறைத்தவள் பெட்ஷீட்டை உருவி அதால் அந்த க்ளாஸை சுற்றி அதை அவன் இடது காலில் வைத்து ஒத்தடம் கொடுத்தாள்.

 அவர்களது பேச்சும் கால்வாரல்களும் நீண்டுக்கொண்டே போக… ஒருகட்டத்தில்  பேசிக்கொண்டே இருந்த முகி அப்படியே அந்த மெத்தையில் குறுக்காக படுத்து உறங்கிவிட… போர்வை ஒன்றை எடுத்து அவளுக்கு போர்த்தியவனாய் அவனும் உறங்கிப்போனான்…

 

மனதின் சஞ்சலங்கள் நீங்கியிருக்க…

கவலையற்று கண்ணயர்ந்திருந்தனர் இருவரும்…

 

கச்சேரி களைகட்டும்!!!!!!