காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்

        காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்….

 

கையில் சூலாயுதம் இல்லாத குறையை தீர்த்து வைத்தது அவளின் கையில் முழங்கை அளவு இருந்த ஆக்கறுவா. அவள் கோவத்தை குறைக்க தெரிந்தவனுக்கு, கையில் உள்ள அறுவாவை எப்படி அகற்றுவது என தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தான் செல்வராசுவின் காதலி பூவரசி. அக்கா மகளின் நீராட்டு விழாவிற்க்கு சென்று வந்தவனிடம் காதலாக பேசாமல், அங்கு நடந்தை தெரிந்துகொண்ட பூவரசிக்கு கோவம். அதிலும், செல்வராசு அதை பற்றி ஒரு வார்த்தை இப்போது வரை வாய் திறக்காமல் இருப்பதை பார்த்து கோவம் கூடிக்கொண்டே போனது.

 

“ஏய்.. என்ன புள்ள இது ஆக்கறுவா கையில வச்சுட்டே இருக்க. கீழ போடு முதல்ல, அப்புறம் உன் கோவத்துக்கான காரணத்தை சொல்லு.” மனதில் பயம் இருந்தாலும் தன் காதலி வன்முறையில் இறங்கமாட்டாள் என்று அனுமானம்.

 

“போடுறேன்.. ஆனா உன் அக்கா வீட்டு விசேஷத்துல என்ன நடந்தது சொல்லு.” அவன் வாயில் இருந்து வார்த்தையை வாங்க நினைத்தாள்.

 

“பூவு, பெரியவங்கனு இருந்தா அக்கா மகள் இருக்கானு கல்யாணத்தை பத்தி பேசதான் செய்வாங்க. அதுக்குனு எல்லாம் உடனே நடந்திருமா. அதுவும் எனக்கு, குழலிக்கும் வயசு வித்தியாசம் அதிகம். எப்படியும், ஆனந்தனுக்கோ, இல்லை பெருமாளுக்கோ தான் கல்யாணம் பேசுவாங்க. என்னமோ நான் போய் பரிசம் போட்டு வந்த மாதிரி பேசுற. முதல்ல அறுவால கீழே போடேன் டி.” காதலியை சமாதானம் செய்துகொண்டே ஆயுதத்தை கீழே இறக்க சொன்னான்.

 

“பேசுவாங்க… அப்படியே நானும் வாழ்க வளமுடன்னு வாழ்த்திட்டு போவேனு நினைப்போ ஐயாவுக்கு. பேசுவரங்கே வாயை இந்தா ஆக்கறுவாவல அறுத்து புடுவேன். உன்னையும், கொன்னுட்டு, நானும் செத்துருவேன். என்னனு நினைச்சை இந்த பூவரசிய.. உயிரா காதலிச்சுட்டேன் உன்னை. குழலி மட்டுமில்லை, வேற எந்த பொண்ணு வந்தாலும் உன்னை யாருக்கும் நான் விட்டுகொடுக்க மாட்டேன்.” இறுதி வார்த்தையை சொல்லும் போது கையில் இருந்த ஆக்கறுவாவையை அவன் கழுத்தில் வைத்து உறுதியாய் உரிமையை நிலைநாட்டினாள் அந்த கிராமத்து ராக்கச்சி.

 

“அடியே… உன்னை காதலிக்குறவன் டி நான். இந்த அறுவாவ தூர வை டி.” கையை பிடித்து தள்ளி வைத்துவிட்டு, அவளை அருகில் அமர வைத்தான்.

 

“பூவு, உன்னளவுக்கு நான் காதலிக்கலானாலும், நீ என்னை காதலிக்குற மாதிரி வேற ஒருத்தி என்னை காதலிக்கவும் மாட்டா. அப்படியே கல்யாணம் வேற ஒருத்தி கூட நடக்குறதை என்னை நினைச்சு கூட பார்க்க முடியாதபடி நீ என்னை அவ்வளவு காதலிக்குற. எனக்கு அது போதும் டி, இப்போ கூட என்னை நீ சந்தேகம் படலை, ஆனா எங்க நான் உன்னைவிட்டு போயிடுவேனு பயம் தான் உன் கண்ணுல தெரியுது. இந்த பயம் வேண்டாம் பூவு, என்னைக்கு உன்னை என் மனசல ஏத்திக்கிட்டனோ அப்பவோ நீ என் பொண்டாட்டி டி.”

 

“எல்லாம் நல்லா தான் பேசுர, ஆனா.. விழாவுல நடந்த கதையை தான் ஊரே பேசுதே. அதான் மனசு தாங்க உன்னை பார்க்கனும் சொன்னேன். என் உயிரே போனாலும் நீ வேற எவளையும் கல்யாணம் செய்யாம இருக்கனும் சரியா. சத்தியம் பண்ணு உன் பூவு மேல.” காதல் பேதையின் மனதை அறிந்த செல்வராசு அவள் மீது சத்தியம் செய்தான்.

 

“என் பூவு மேல சத்தியம், என் பூவரசியை தவிர வேற எந்த பொண்ணையும் கண்ணால கூட நிமிர்ந்து பார்க்கமாட்டேன். அவ என்னை விட்டு எங்க போனாலும் நானும் அவ கூட வருவேன் சத்தியம்.” பூவரசியின் தலை மீது செய்த சத்தியத்தை கண்டு பூவரசிக்கு கண்ணீர் வடிந்து நின்றது.

 

பேச்சிற்க்கு கூட அக்காள் மகளுடன் இணைத்து பேசுவதை கண்டு பயந்து போன பூவரசியின் மனதை காதல் வார்த்தையிலும், பார்வையில் மாற்றிக்கொண்டிருந்தான் செல்வராசு.

 

தோட்டத்தில் அமர்ந்து கணக்கு வழக்குகளை பார்த்துகொண்டிருந்த சுந்தரத்திடம் வந்தார் போஸ். மகனின் வேலையை கவனித்துகொண்டே அவரின் எதிரே அமர்ந்தார். தந்தையின் வரவை உணர்ந்தார் போல நிமிர்ந்தார் சுந்தரம்.

 

”எப்போ ப்பா வந்தீங்க.. சாப்பிட்டாச்சா.”

 

“இப்போ தான் சுந்தரம் வந்தேன்.. ம்ம் சாப்பிட்டேன்.” மகனிடம் பேச வந்ததை பேசாமல் தயக்கமாய் அமர்ந்தார்.

 

தந்தையின் முகம் தயக்கத்தை காட்டியதை பார்த்து கணக்கு நோட்டை மூடி வைத்து, “சொல்லுங்க ப்பா என்ன தயக்கமா இருக்கீங்க. தங்கச்சி மகளுக்கு எல்லாமே சரியா செய்தாச்சே ப்பா. எதாவது விட்டு போயிருந்தா சொல்லுங்க,  கல்யாணத்துக்கு சரி செய்யலாம்.” மகள் பிள்ளையின் சீரியில் குறை வந்துவிட்டதோ என சுந்தரம் கேட்க.

 

”அதெல்லாம் இல்லப்பா.. உன் தங்கச்சி மக விசேஷத்துல ஒரு குறையும் இல்லை. நான் அதை பத்தி பேச வரலை சுந்தர். நான் பேச வந்தது என் பேரன பத்தி, வந்த உடனே கிளம்ப்ப என்ன காரணம்னு தான் கேட்க வந்தேன்.” தந்தையின் பேச்சில் சுந்தரம் அப்போது தான் புரிந்து கொண்டார்.

 

“வேலை இருக்குனு என்கிட்ட சொன்னான் ப்பா. ஆனா, உடனே கிளம்ப காரணமும் அதுவா இருக்கனும் நினைச்சு விட்டேன் ப்பா. ஏன் ப்பா.. திடீர்னு பேரன பத்தி கேட்குரீங்க.”

 

தான் அறிந்ததை மகனிடம் சொல்லலாம வேண்டாமா என போஸ் நினைக்க. தந்தையின் முகம் இன்னும் தயக்கத்தில் தான் இருந்தது.

 

“ப்பா.. இங்க இருக்கீங்களா… விதை நெல்லு வாங்க போகனும் வாங்க.” மூன்றாவது மகன் பெருமாள் அவர்களுக்கு இடையில் வர.

 

“போலாம் ப்பா.. சரி சுந்தர், நாங்க மதுரை வரை போயிட்டு வரோம்.” மனசில் பட்டத்தை மகனிடம் சொல்லவும் முடியாமல் அதை மறைக்கவும் முடியாமல் தவித்தவரின் முகம் சோர்ந்து போனது.

 

“சரிங்க ப்பா… பெருமாளு பார்த்து வண்டிய ஓட்டு.” தம்பியிடம் பத்திரம் சொல்லிவிட்டு வழியனுப்பி வைத்தார் சுந்தர்.

 

சுந்தரம் மனதில் விழாவின் போது சபையில் மூன்று தம்பிகளில் ஒருவருக்கு குழலியை மணமுடிப்பதை பத்திய பேச்சு சுந்தரத்திற்க்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. வயது வித்தியாசம் அதிகம் மூவருக்கும். பின் கூட அவர் மனதில் சட்டென ஒரு மின்னல் தோன்றியது, குழலியை, தன் மகனுக்கு முடிப்பது பற்றியான நினைப்பை அவர் நினைத்தார். ஆனால், அவர் நினைத்துகொண்டால் போதுமா, அதற்க்கான நேரமும், காலமும் கூடி வர வேண்டுமல்லவா. அதன் சிந்தனையில் இருந்தவரை கலைத்தது போனின் அழைப்பு.

 

“சொல்லு மோகனா..  ம்ம் வரேன்..” மனைவி சாப்பிட அழைப்பை ஏற்று வீட்டிற்கு புறப்பட்டார்.

******

 

”செல்வி.. ஏ புள்ள செல்வி.. எங்க இருக்க.” பேச்சியின் சத்தம் காதை கிழிக்க.

 

காதை பொத்திக்கொண்டு “ஆத்தா… ஏன் இப்படி கத்துற, அதான் வந்துட்டேன்ல. என்ன விஷயம் சொல்லுங்க.”

 

“இந்தா, இந்த ஜூசை என் பேத்திக்கு கொடுத்துட்டு வா.”

 

”சரி கொடுங்க ஆத்தா..” குழலிக்கு ஜூசை எடுத்துகொண்டு அவளின் அறைக்கு சென்றாள் செல்வி.

 

முகிலனின் வரவை எதிர்ப்பார்த்தவளின் ஆசை நிராசையானதை நினைத்து கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள். செல்வியிடம் முகிலனை விரும்புவதை அமைதியாக சொன்ன குழலி, அதன் பின் செல்வி தன்னை ஆறுதல் செய்ததை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை

 

“அடியாத்தி, உன் கதை மேலூர் தாண்டி போகும் போல. என்ன டி குழலி இப்படி முகிலன் அண்ணன விரும்புறேன் சத்தமில்லாம சொல்லுற. இந்த விஷயம் மட்டும் ஐயாவுக்கு தெரிஞ்சது முதல என் சங்கை தான் அறுப்பாரு. அடுத்து, பெத்த மக வேணுமா, வேணாமானு யோசிப்பாரு.”

 

“உனக்கு தெரியாத குழலி, தேனு அத்தை குடும்பத்துக்கும் நம்ம குடும்பத்துக்கும் ஆகாதே டி. இப்படி அவுக வீட்டு பையனை விரும்புரேனு தெரிஞ்சா. அய்யோ நினைச்சே பார்க்க முடியலை டி குழலி.”

 

“இப்படி எதையும் மனசுல நினைச்சு மருகாத டி. வயசுக்கு வந்தவ முகம் பொலிவா இருக்கனும் சொல்லுவாங்க. ஆனா நீ முகிலன் அண்ணன நினைச்சு இருளடைச்சு கிடக்கு. ஆத்தா பார்த்தா என்னை தான் கேள்வி கேட்க்கும்.  இப்படி கிடக்காத குழலி, ஆண்டவன் மேல பாரத்தை போட்டு நடக்குறதை பாரு சரியா.”

 

“குழலி, உன் வீட்டுல நான் சின்ன வயசுல என் அம்மாவோட வந்தேன். இப்போ என்னையும் உனக்கு அடுத்து ஒரு பிள்ளையா பார்க்குராங்க, அவங்க மனசுக்கு ஒரு கஷ்டத்தை கொடுக்க கூடாது. என்ன நடக்கதுனு, அப்புரம் பார்த்துகலாம் இப்போ அந்த சிந்தனைய விட்டுரு.” அவளுக்கு தெரிந்த மன பக்குவத்திற்க்கு குழலிக்கு அறிவுரை கூறினாள்.

 

இப்போது குழலியின் அறைக்குள் நுழைந்ததும்,

 

ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தானை சந்திக்கத்தான் ஆசை வச்சேன்
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே ஆசை வச்சேன்
கனகாம்பரம் எடுத்து கையால நீ தொடுத்து 
பின்னால வச்சிவிட ஆசை வச்சேன்
மரியாதை இல்லாம மச்சானே உன்னை பேசி 
மாரோட மல்லுக்கட்ட ஆசை வச்சேன்
அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா..”  பாடலில் குழலியின் மனதை முகிலனுக்கு பாடல் மூலமாய் செய்தி அனுப்பிக்கொண்டிருந்தாள்.

 

மெத்தையில் படுத்துக்கொண்டு, விட்டத்தை பார்த்துக்கொண்டே அதே பாடலை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தவளின் நிலையை பார்த்த செல்வி, குழலியின் காதல் எண்ணி சோர்வுற்றாள்.

 

“இந்த புள்ள, நான் சொன்னதை கேட்டுச்சோ இல்லையோ, ஆனா, மனசுல இருக்குற காதலை இந்த பாட்டு மூலமா இப்படி உருகி போய் கிடக்கே. இந்த நிலைமைய ஐயாவும், அம்மாவும் பார்த்தா என்ன செய்வாங்கனு கொஞ்சம் கூட பயம் இல்லாம இருக்கு இந்த புள்ள.” மனதில் எண்ணிக்கொண்டே குழலியின் அருகில் சென்றாள்.

 

“ஏய் புள்ள குழலி.. எழுந்திரு..”

 

செல்வியின் வரவில் எழுந்தமர்ந்தவளின் முகம் வாடி இருந்தது. “வயசு புள்ள இப்படி தலைவிரி கோலமா இருக்கலாமா.. இந்தா ஜூசை குடி, நான் தலை வாரி விடுரேன்.” குழலியின் கையில் ஜூஸ் டம்பளரை கொடுத்துவிட்டு, குழலியின் தலையை சீப்பை கொண்டு வாரிக்கொண்டிருந்தாள்.

 

“செல்வி, எனக்கு தேனு அத்தைய பார்க்கனும் கூப்பிட்டு போறீயா.” தலை சீவி கொண்டிருந்தவளிடம் கேட்க.

 

அதிர்ச்சியாய் குழலியின் முகத்தை பார்த்தாள். “என்ன சொன்னேனு உனக்கு தெரியுமா.”

 

“தெரியும், தேனு அத்தைய நான் பார்க்கனும். முகிலன் அத்தான எங்கனு கேட்க்கனும்.”

 

“என்னை பலிகிடாவா ஆக்காம விடமாட்ட போல. இந்த வம்பு, பேச்சுக்கு நான் வரலை. வீட்டுல வேலை கிடக்கு குழலி. ஜூஸ் குடிச்சுட்டேனா டம்பளர கொடு.”

 

“எனக்காக செய்யமாட்டியா செல்வி..” பாவமாய் கேட்க.

 

“உனக்காக எதை வேனாலும் செய்வேன், ஆனா எதிராளி வீட்டுக்கு கூப்பிட்டு போனு நீ சொல்லுரதை மட்டும் என்னால செய்ய முடியாது குழலி.”

 

“என்ன மாதிரி நீயும் ஒரு நாள் அவஸ்த்தை படும் போது தான் தெரியும் என் வலியும், வேதனையும்.”

 

“அடியாத்தி சாபம் விடுறியாக்கும்.. இங்காரு குழலி இப்படி உம்முனு இருக்கமாட்டேனு சத்தியம் பண்ணு நான் தேனு அத்தை வீட்டுக்கு கூப்பிட்டு போறேன்.”

 

“இருக்கமாட்டேன்.. சத்தியம்.”

 

“இன்னொரு விஷயம், அங்க என்ன நடந்த்தாலும் அதாவது உனக்கு சாதகாமாவும், பாதகமாவும் பதில் வந்தாலும் முகத்துல எந்த சலனமும் காட்ட கூடாது இதுக்கு சேர்த்தே சத்தியம் பண்ணு.”

 

“சத்தியம் செல்வி…”

 

செல்வியின் சத்தியம் காற்றாகி போகுமா? இல்லை குழலியின் மனதை மாற்றும் துருப்பு சீட்டாக இருக்குமா?

 

பருவம் அடைந்த கதையை அவன் அறிந்தானோ

இல்லையோ, அறிய வேண்டியவன் குழலியின்

மனதை நன்றாக அறிந்து கொண்டான்.

இனி குழலியின் மனம் இன்னொருவனுக்கு

சொந்தம் என உண்மையை ஏற்றுகொண்டவனின் மனம்,

பொறுத்திரு உன் காதல் குழலி வருவாள்…. கை சேருவாள்.

 

                                        தொடரும்………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!