காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்

      காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்…

 

”குட் மார்னிங் மச்சான், இன்னைக்கு என்ன சீக்கிரம் ஆபீஸ்க்கு வந்துட்ட. நீ ஊருல இருப்பேனு நான் நினைச்சேன், பங்க்‌ஷன் நல்லபடியா முடிஞ்சதா.. ஊருல எல்லாரும் நல்லாரும் நல்லா இருக்காங்களா மச்சான். என்ன டா நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் ஒரு ரியாஷனும் காட்டமாட்ற.  டேய் மச்சான்”. அகிலன் கையில் வைத்திருந்த பைலை பிடுங்கி இழுத்தான் சேரன். அகிலனின் உயிர் தோழன்.

 

“விளையாடத சேரா.. ஃபைல்ல கொடு, எனக்கு இன்னைக்கு மீட்டிங்க் இருக்கு.” நண்பனிடம் நடந்த எதையும் முகம் காட்டி கொடுத்துவிட கூடாது என தெளிவாய் இருந்தான்.

 

“முதல்ல என்னாச்சுனு சொல்லு, ஏன் ஒரு மாதிரி இருக்க.”

 

“ட்ராவெல் பண்ணதால டயர்டா இருக்கேன் சேரா, வேற ஒன்னுமில்லை.”

 

“அப்படியா… ஆனா, உன் முகம்  வேற சொல்லுதே மச்சான். என்ன அப்பாவுக்கும், உனக்கும் சண்டையா? இருக்காதே அவரு பாண்டவர் பூமி ராஜ்கிரண் மாதிரி சைலன்ட் ஆள் ஆச்சே.”

 

“டேய்… தேவையில்லாம எதுக்கு டா, என் அப்பாவ இழுக்குற.”

 

“என்ன பிரச்சனைனு சொல்லு மச்சான்.”

 

“பிரச்சனை எதுவும் இல்லை, ட்ராவெல் பண்ணதால தான் டயர்டா இருக்கேன்.” சொன்னதே திரும்ப சொல்ல, சேரனுக்கு இதுக்கு மேல் கேட்டால் அவன் மனம் மீண்டும் அதையே நினைக்க கூடும் என்பதை நினைத்துக்கொண்டு அகிலனிடம் ஃபைலை கொடுத்துவிட்டு அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

 

ஃபைலிலும் அகிலனால் கவனத்தை செலுத்த முடியவில்லை. இது வரை சேரனிடம், எதையும் மறைத்து பழக்கமில்லாத அகிலனுக்கு இன்று சேரனிடம் சொல்ல முடியாத வலியை கொடுத்தது. அதனால் தான் சேரனின் முகம் பார்த்து அகிலனால் பேச முடியவில்லை. ஓரளவிர்க்கு மேல் அகிலனால் அமர்ந்திருக்க முடியவில்லை சேரனிடமே மீண்டும் சென்றான்.

 

கணினியில் முக்கிய மெயில்களை செக் செய்துகொண்டிருந்தவனின் முன் அகிலன் நிற்பத்தை அறிந்து, எழுந்து நின்று அகிலனுக்கு சேரை கொடுத்துவிட்டு சேரன் டேபிலில் அமர்ந்துகொண்டு அகிலனையே பார்த்துகொண்டிருந்தான்.

 

“அகில், உன் மனசு எதையோ நினைச்சு ஏங்குது ஆனா அது உனக்கு சொந்த மில்லைனு நீயே சொல்லிக்கிற. என்னனு வெளிப்படையா சொல்லு உனக்கு நான் இருக்கேன்.” அகிலனின் தோள் மீது கை வைத்து அவன் மன காயங்கள் என்னவென்று அறிந்துகொள்ள முற்ப்பட்டான் சேரன்.

 

சொந்த அத்தை மகளின் விழாவிர்க்கு ஆர்வமாக சென்றவன். அனைவரும் கிளம்பி மீனாவின் ஊரை சேர்ந்ததும், அகிலன் மட்டும் தாமதமாக வந்து விழாவில் கலந்துகொண்டான். ஆனால் அவனுக்கு முன்னே அவனது அப்பா, சித்தப்பா என நால்வரும் குழலிக்கு சடங்கு வைத்து முடிக்க, அகிலன் சடங்கு முடிந்த பின் வந்தான். அனைவரையும் பார்த்து ஒரு வார்த்தை பேசிவிட்டு நகர்ந்து வீட்டினுள் நுழைய சரியாக குழலியும், செல்வியும் அறைக்கு சென்றிருந்தனர்.

 

வழியில் வந்த பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு அவரிடம் பேசிவிட்டு, அடுத்து அவனின் அத்தையிடமும் ஓரிரு வார்த்தை பேசி நகர்ந்தவன் குழலியின் அறையின் முன் வந்து கதவை தட்ட முற்பட, குழலி சொல்லிய வார்த்தையில் அகிலன் அதிர்ந்து நின்றான். அதுவும் சிவநாதம் மாமாவின் தங்கை மகனான முகிலனை குழலி விரும்புகிறாள் என கேட்டதும் அவனால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை.

 

குழலியை ஆசை ஆசையாக பார்க்க வந்தவன் மனம் கணத்து போனது. அகிலனுக்கு பத்து வயது இருக்கு போது குழலியை அவன் மடியில் வைத்து காது குத்தியதும், குழலியை கட்டிக்க போறவனே நீ தானா ராசா என  அவனிடம் சொல்லி, மனதில் ஆசையை உருவாக்கிவிட்டு சென்றனர். அன்று முதல் அகிலனின் நினைவில் இருந்தெல்லாம் குழலி தான்.

 

விழா முடிந்து வீட்டிர்க்கு வந்தவனித்தில் கூட தாத்தா பாட்டியிடம் பேசாமல் அறைக்குள் நுழைந்து கொண்டது தான் பின் இரவு ஊருக்கு செல்வதாக சொல்லிவிட்டு விடைபெற்றான்.

 

அனைத்தையும் கேட்ட சேரனின் மனம் நண்பனுக்காக வருந்தியது. “அகில என்னமோ அந்த பொண்ணு நாளைக்கே முகிலன கல்யாணம் பண்ணிக்க போறது போல சொல்லுர. உன் காதல் உண்மையா இருந்தா குழலி உனக்கு தான் அகில். நீ குழலிகிட்ட மனசுவிட்டு முதலே பேசிருந்தா இந்த வேதனை தேவையா?”

 

“இல்லை சேரா, குழலி இப்போ தான் வயசுக்கு வந்திருக்கா. எடுத்த உடனே என் மனசை அவகிட்ட சொல்ல மனசு வரலை. அதுவுமில்லா, முகிலன் குடும்பத்துக்கு, குழலி குடும்பத்துக்கு ஆகாது. ஆனாலும் முகிலனை குழலி விரும்புவானும் எனக்கு தெரியாது.”

 

“போட .. எந்த காலத்துல இருக்க, இப்போ எல்லாம் மாறிடுச்சு. பார்த்தோமோ பிடிச்சிருக்குனு சொன்னோமானு லவ் ஏரோப்ளைன் மாதிரி வேகமா போயிட்டு இருக்கு. இவரு, பொறுமையா குழலிக்கிட்ட சொல்லுவாராம். அது வரைக்கும் நீ வெயிட் பண்ணா, குழலிக்கும், முகிலனுக்கு கல்யாணம் முடிஞ்சு ஹனிமூன் போயிருவாங்க.”

 

“சேரா.. முகிலனும் ஒன்னும் கெட்டவன் இல்லை. அவன் என்னைவிட ரொம்ப நல்லவன், மிலிட்ரில இருக்கான். குடும்பத்துகுள்ள தான் ஆகாதே தவிர, நானும் அவனும் பேசிப்போம். ஆன அவன் கூட என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லைலனு வருத்தம்.”

 

“டேய் என்ன டா நீ இப்படி மாறிட்ட, குழலி முகிலனை விரும்புறா. ஆனா நீ, அவங்களை சேர்த்து வைக்குர மாதிரி முகிலனுக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருக்க.”

 

“சேர்த்து வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் சேரா. என் காதல் உண்மை தான், அதுக்காக நான் மட்டும் காதலிச்சா போதாது, குழலியும் என்னை காதலிக்கனும். முகிலனை விரும்புற குழலியை எப்படி கட்டிக்க்க முடியும், அது மிகபெரிய சுயநலம்.”

 

“அதுக்கு என்ன செய்ய போற அகில்.”

 

“முகிலனையும், குழலியையும் சேர்த்து வைக்க போறேன்.”

 

அகிலன் இங்கே அவன் காதலை மறந்து, மறைத்து குழலியின் காதலை சேர்த்து வைக்க முயற்சியை எடுக்க போகிறான்.

******

 

”அத்தை, அத்தானும், நீங்களும் ஏன் குடும்பத்தோட என்னோட சடங்குக்கு வரலை. நீங்களும் என்னை மறந்துட்டேங்களா. இல்லை, அண்ணன்  மக வேண்டாம்னு முடிவு பண்ணிட்டீங்களா. விழாவுல எல்லாரும் வந்திருந்தாங்க, ஆனா என்னோட எதிர்ப்பார்ப்பு நீங்களும், அத்தானும் தான்.”

 

“எல்லாரையும் குடும்பத்தோட அழைச்சு விருந்து வைச்ச என் அண்ணனுக்கு நான் கண்ணுக்கு தெரியாம போயிட்டேன் குழலி. நான் செய்ஞ்ச ஒரு தப்புனால என்னோட மொத்த குடும்பத்தையும் எதிரியா நினைச்சு ஒதுக்கு வச்சுட்டாங்க பின்ன எப்படி நான் வர முடியும் உன்னோட விழாவுக்கு.”

 

“அத்தை, ஏன் இப்படி சொல்லுரீங்க, என்னை பார்க்கும் போதெல்லாம் உங்க வீட்டு மருமகனு தான் சொல்லுவீங்க. இப்போ, என்னோட பேரை சொல்லி கூப்பிடுரீங்க. அப்போ நான் கூட உங்களூக்கு பிடிக்கலையா?”

 

“பிடிக்கும் குழலி, ஆனா உன்னை என் வீட்டுக்கு மருமகளா அழைச்சுட்டு வரமுடியலைனு தான் கவலை.”

 

“அத்த நீங்களா இப்படி பேசுறது..” அதிர்ந்து நின்றாள் குழலி.

 

”செல்வி, குழலியை அழைச்சுட்டு போ.. யாரவது என்கூட நின்னு பேசனது குழலினு கண்டுபிடிச்சா அவ்வளவு தான்.” குழலிக்கு பதில் சொல்லாமல் தேன்மொழி சென்றுவிட்டார்.

*****

 

”ஏங்க, நம்ம குழலி தான் வயசுக்கு வந்திருச்சுல அப்புரம் என்ன யோசனை, நம்ம பையனுக்கு குழலியை பொண்ணு கேட்க்கலம்ல.” மனதில் இருந்த ஆசையை வாய்விட்டு கேட்டார் மோகனா.

 

“எனக்கும் ஆசையா தான் இருக்கு, ஆன வீடுல இன்னும் என் மூனு தம்பிக்கு கல்யாணம் முடியலை. அதுக்கு முன்னாடி என் மகனுக்கு கல்யாணம் செஞ்சா தப்பா தோனிரும் ஊர் மக்களுக்கு.”

 

“குழலியை மூனு கொழுந்தனுங்கள்ல ஒருத்தருக்கு முடிக்கனும்னு அத்தை, மாமாவுக்கு ஆசை இருக்கானு கேளுங்க. நாம ஒன்னு நினைக்க, அவங்க ஒன்னு நினைச்சுட்டு இருக்க போறாங்க.” கணவரிடம் அவள் யோசனையை சொல்ல, சுந்தரமும் மனைவி யோசித்ததை நினைக்க ஆரம்பித்தார்.

 

“ஆனா, மோகனா அகிலனுக்கு குழலியை பிடிக்காம போச்சுனா, நாம ஒன்னு நினைச்சு பரிசம் போட்டு, பின்னாடி அகிலுக்கு பிடிக்காம இருந்தா என்ன செய்ய.” சுந்தரம் மகனின் மனநிலையை நினைக்க.

 

“என் மகனுக்கு என்ன பிடிக்கும்னு பெத்த எனக்கு தெரியாதங்க. அவனுக்கு குழலியை பிடிக்கும், அதனால தான் உங்ககிட்ட அகில், குழலியை பத்தி பேச்சு எடுத்தேன்.”

 

“ம்ம் சரி அம்மா, அப்பாகிட்ட பேசிட்டு என்னனு முடிவெடுக்கலாம். இப்போதைக்கு அகில்கிட்ட இதைபத்தி பேசவேண்டாம் மோகனா.” சுந்தரம் மோகனாவிடம் சொல்லிவிட்டு வெளியேறி சென்றார்.

****

 

”அண்ணா, செக்கானூர் வர போயிட்டு வரேன்.” செல்வராசுவிடம் சொல்லவிட்டு பைக்கை எடுக்க.

 

“அப்ப்டியே என்னையும் கருமாத்தூர்ல இறக்கிவிடு ஆனந்து.”

 

’அய்யோ நாம போறதே நந்தினிய பார்க்க, அவளே எனக்காக இவ்வளவு நேரம் காத்திட்டு இருக்குரதுக்கு கோவத்துல என்ன திட்டிட்டு இருப்பா. அண்ணே வேர அவரை இறக்கிவிட சொல்லுறாரே. என்ன செய்ய,’ ஆனந்தன் மனதில் இரண்டு வாரம் கழித்து பார்க்க போகும் காதலியை நினைத்துக்கொண்டிருந்தான்.

 

“டேய், என்ன டா யோசனை..”

 

“அண்ணே, நீ வேணா பெருமாள் கூட போவேன். என் ஃப்ர்ண்ட் வேர எனக்காக காத்திருகான், அவனையும் என்கூட தான் அழைச்சிட்டு போகனும்.”

 

“அப்படியா.. சரி நீ போ..” செல்வராசு , ஆனந்தை போக சொல்லிவிட்டு பெருமாளிடம் காரை கொண்டு வரசொல்லிவிட்டு காத்திருந்தான்.

 

”சாரி.. சாரி.. நந்து, கொஞ்ச வேலை.”

 

ஆனந்தனுக்காக காத்திருந்த நந்தினியின் முகம் கோவத்தில் இல்லாமல் சந்தோஷத்தில் இருந்ததை உணர்ந்தான்.

 

“என்ன உன்னோட முகம் ஜொலிப்பா இருக்கு..”

 

“கெஸ் பண்ணுங்க..”

 

“ம்ம் உன் வீட்டு மாடு கண்ணுக்குட்டி போட்டுருச்சு சரியா.”

 

“ம்ம்… அது இல்லை.”

 

“வேற என்ன, ஹே உன் அக்காவ பொண்ணு பார்த்து, மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க சரியா.”

 

“அதுவும் இல்லை..”

 

“வேர என்ன தான் இருக்கும்.. ஹே, காலேஜ் டாப்பர் ஆகிட்டயா.”

 

“ஹ்ம்ம்… எக்‌ஷாம் முடிச்சு, ரிசல்ட்டும் வந்து, நான் டாப்பர் ஆகி ரொம்ப நாள் ஆச்சு. இது வேறங்க..”

 

“சரி நீயே சொல்லும்மா என்னனு.”

 

“என் அப்பாக்கிட்ட நம்ம காதல் பத்தி சொல்லி சம்மதமும் வாங்கிட்டேன்.”

 

“ஹே… நிஜமாவா.. உண்மையா சம்மதமும் சொல்லிட்டாங்களா. ஆனா உன் அக்கா இருக்காங்களே.. அவங்க மேரேஜ் முடிச்ச பின்னாடி தானே நம்மளோடது.”

 

“ஆமா, உண்மையாவே அப்பா சம்மதம் சொல்லிட்டாங்க. அக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாச்சு, அவ கல்யாணம் முடிஞ்ச பின்னாடி தான் நம்மது. அது வரை என்னோட படிப்பு முடிய சரியா இருக்கும்.” காதல் வெற்றி பெற போகிறது என சந்தோஷத்தில் இருவரும் பேருந்து நிழர்கூடம் என பாராமல் தோளோடு தோள் ஆனந்தன், நந்தினையை அணைத்திருந்தான்.

 

மகிழச்சியில் சுற்று புறம் மறந்து அவர்கள் திளைத்திருக்க, அவர்கள் இருவரையும் ஒரு ஜோடி கண்கள் பார்த்து அதிர்ந்து நின்றது.

 

                                      தொடரும்……………

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!