காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்

      காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்…

 

மோகனா சொன்னதில் இருந்து சுந்தரத்திர்க்கு குழலியை நம் வீட்டுக்கு எப்படியாவது மருமகளாக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக தான் உள்ளது. ஆனால், அகிலனுக்கு குழலியை மணப்பதில் விருப்பம் இருக்குமா? என்பதில் தான் அவரின் யோசனை பலமானது. அதுமட்டுமில்லாமல், தாய், தந்தையின் மனதில் தன் தம்பிகளில் மூவரில் ஒருவருக்கு குழலியை மணப்பதில் விருப்பம் இருந்தால் என்ன செய்வது என அவர் யோசித்துகொண்டிருந்தார்.

“என்னடா வயலுக்கு போகமா இங்க இருக்க.” சுந்தரத்தின் தாய் கயல்விழி வந்தார்

“போகனும் ம்மா… அப்பா எங்க”

“அவர் எங்க போயிருக்க போராரு..” என சொல்லிகொண்டிருக்கும் போதே போஸ் உள்ளே வந்தார்.

“என்ன ப்பா விஷயம் என் பேரு அடிபடுது.” அவர்களின் அருகில் அமர்ந்தார்.

“எல்லாம் நல்ல விஷ்யம் தான் ப்பா..  குழலி விஷ்யம் தான் ப்பா.”

இருவரும், சுந்தரத்தின் அடுத்த வார்த்தைக்காக காத்திருக்க. “என்ன சொல்லுப்பா.. சுந்தர்” போஸ் பேச சொல்ல.

“குழலியை நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு வர ஆசை எனக்கு. தங்கச்சி, மக நம்ம வீட்டுக்கு வந்தா எனக்கு மட்டுமில்ல, நம்ம குடும்பத்துக்கோ சந்தோஷம் தானே ப்பா. உங்க மனசுல என்ன இருக்குனு நான் தெரிஞ்சுக்கனும்.”

“ரொம்ப நல்ல விஷயம் தன் சுந்தர்.. ஆனா, உன் தம்பிகளூக்கும், குழலிக்கும் வயசு ரொம்ப அதிகமாச்சே.” கயல் கவலையுற.

“கயலு, நமக்கு பிள்ளைக மட்டுமில்ல, பேரனும் இருக்கான் அதை மறந்துட்ட.” போஸ், சுந்தரம் மனதில் என்ன இருக்கும் என சரியாக கண்டறிந்தார்.

“ஆமால.. பேசமா என் பேரன் அகிலனுக்கு குழலியை பேசலாம்.”

“நம்ம பேசுனா எல்லாம் உடனே நடந்துருமா.. மீனா, சிவா மனசுல என்ன இருக்குனு நாம தெரிஞ்சுக்கனும்.”

“அதை பத்தி நாமா ஒரு நல்ல நாள் பார்த்து பேச போகலாம் ப்பா என்ன சொல்லுறீங்கம்மா.”

“இதுல நான் சொல்லுறதுக்கு என்ன இருக்கு.. குழலி என் பேரனுக்கு மனைவியா வந்தா மீனாவே வந்தமாதிரி எனக்கு சந்தோஷம் .”

இப்படியாக மூவரும் பேசிக்கொண்டிருக்க, குழலியை யாருக்கு கட்டி வைக்க போகிறார்களோ என பயத்தில் மூவரும் இருந்தனர்.

*****

”நேத்து யாருகூட பைக்ல போன நீ.”

“என் மாமா பையன் கூட அத்தான்.” அவள் வாய்மொழி சொல்லியை கேட்டவன் முகம் கோவத்தில் இருந்தது.

“எவ்வளவு முறை சொல்லிருப்பேன் , நீ என்னை தவிர வேற எந்த பையன் பைக்குலையும் போக கூடாதுனு. அப்போ என் பேச்சுக்கு மதிப்பில்லை உனக்கு.”

“ஏன், அதே குழலியை உங்களுக்கு கல்யாணம் செய்து வைக்கனும் சொல்லுறப்போ நான் கோவப்பட்டேனா? இல்லை விஷேசம் முடிஞ்சு வந்த அடுத்த நாளே சட்டையை பிடிச்சு சண்டை தான் போட்டேனா.? இல்லையே.. ஏன்னா, எனக்கு தெரியும், உங்க மனசுல என்னை தவிர குழலி என்ன, வேற எந்த பொண்ணும் இருக்கமாட்டானு. ஆனா நான் ஒரு நாள் அதுவும் பஸ் வரலைனு என் மாமா பையன், அவனா வந்து தான் அழைச்சிட்டு போனான். நானா கூப்பிடவும் இல்லை, போகவும் இல்லை.”

அவள் சொல்லில் நியாயம் இருந்தாலும், தான் கட்டிக்க போறவளை அடுத்தவன் பைக்கில் அழைத்து சென்றால் கோவமும், ஆத்திரமும் வரத்தானே செய்யும்.

“இருந்தாலும் நான் உன்னை கட்டிக்க போறவன் . தன் பொண்டாட்டிய அடுத்தவன் பைக்ல ஏத்திட்டு போனா கோவம் வரத்தானே செய்யும்.”

“ஹலோ … ஹலோ.. வெயிட் இன்னும் நம்ம விஷய்த்தை வீட்டுல சொல்லலை நீங்க. அது வரைக்கும் நான் உங்க அண்ணியோட தங்கச்சி தான். என் அக்காக்கிட்ட பேசரேனு நீங்க சொன்னீங்க.. சொன்னீங்க.. சொல்லிட்டே இருக்கீங்க. ஆனா அதுக்கான எந்த பலனும் இல்லை.”

“என்ன டி, இவன் பேசமாட்டான், அதுனால நம்ம வேற ஆளை பார்த்துட்டு போகலாம்னு நினைச்சுட்டயோ. இங்க பாருடி, நீ செத்தாலும், நான் செத்தாலும் உன் கழுத்துல தாலி கட்டிட்டு தான் சாவேன், சாகனும். அப்படியே வேற ஒருத்தன், உன் மாமானா இருந்தாலும் உன்னை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன். விட்டு போகவும் மாட்டேன்.”

“இதே கோவத்தோட என் அக்கா அதான் உங்க அண்ணிக்கிட்ட பேசுங்கனு தான் சொல்லுரேன். அப்படியே வேற ஒருத்தன் என் கிட்டக்க வந்துட்டாலும் அதை பார்த்துட்டு தான் நீங்க மறு வேலை பார்ப்பீங்க பாரு. என் மனசுலயும் நீங்க தான் இருக்கீங்க, அன்னைக்கு நேத்து நடந்ததை பார்த்து இப்போ கோவம் வருது.”

“அப்படி பார்த்தா கோவப்பட வேண்டியது நானு . உங்க அக்கா பொண்ணை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சா நான் எங்க போறது. இத்தனைக்கு குழலியை எனக்கு ரொம்ப பிடிக்கும். விசேஷத்துக்கு வரலை தவிர என் நினைப்பெல்லா அவ தான். கோவபட வேண்டிய நானே அமைதிய சாந்த சொருபினிய உங்க முன்னாடி இருக்கேன், நீங்க என்னடானா மாமா பையன் , அத்தை பையனு சொல்லி கோவபட்டுட்டு இருக்கீங்க. கமான் மாம்ஸ்.. லவ் பண்ணலாமா..” தூர அமர்ந்திருந்தவன் அருகில் சென்று இடுப்பில் கையணைப்பது போல் வைத்து அவனின் மனநிலையை மாற்றினாள் மோகனாவின் சித்தி மகள் லட்சுமிப்ரியா.

“முதல இப்படி கட்டிபிடிக்குரதை நிறுத்தி ப்ரியா.. பார்க்குரவங்க என்ன நினைப்பாங்க நம்மளை.”

“பாரு டா… நாமா இருக்குறது வைகை டேம்ல, இங்க யாரு வரபோற. அப்படி பார்த்தா நான் தான் பயப்படனும், என் அப்பா, அண்ணா யாராவது வந்திருவாங்களோனு, ஆனா நானே பயப்படாம உங்க பக்கதுல இருக்கேனா என்ன அர்த்தம்.”

‘என்ன அர்த்தம்..”

“என்ன கட்டிக்க போறவன் பக்கத்துல இருக்கானு அர்த்தம், அந்த தைரியத்துல தான் சட்டமா பேச்சுரேன் அத்தான்.” ப்ரியாவுக்கு கோவம் வந்தாள் நியாயமாக தான் வரும் ஆனால் அதை பெருமாளிடம் கொஞ்சம் நேரம் மட்டுமே காட்டுவாள். அந்த கோவம் போனது போல் அவளே அவனை உருகி உருகி காதல் காமெடி பேச்சில் அவனை இணைத்துக்கொள்வாள். அதனாலே பெருமாள் ப்ரியவிடம் கோவத்தை அதிகமாக காட்டமாட்டான்.

அவனுக்கு தெரியும், குழலியை இணைத்து ஊரில் அனைவரும் பேசினாலும் ப்ரியா எதுவும் காதில் வாங்கமாட்டாள். அப்ப்டியே இருந்தாலும் அது பெருமாளின் வாயில் இருந்து வந்தா மட்டுமே அவள் நம்புவாள். ஆனால் காதல் விஷயத்தில்  இவர்கள் இருவர் மட்டும் இல்லை. இவனின் மூத்த சகோதர்கள் இருவருமே உறுதியாய் இருந்தார்கள்.

*****

“என்ன அகில் பேசுனியா.. முகிலன்கிட்ட என்ன சொன்னான்.”

“இல்லை சேரா.. போன் போகலை.. இன்னைக்கு ஒரு முறை போன் பண்ணி பார்க்கலாம்னு நினைச்சுருக்கேன்.”

“அகில் எதுக்கு இன்னொரு முறை யோசிக்கோ. குழலினா உனக்கு ரொம்ப பிடிக்கும்ன்றதை விட, அவ உன்னோட வாழ்க்கைனு நினைச்சு வாழ்ந்துட்டு வந்திட்டு இருக்க.”

சேரன் முழுமையாக பேசி முடிக்கவில்லை.

“சேரா, நான் காதலிக்க குழலி என்னை காதலிக்கலை சேரா. எப்படி கல்யாணம் செய்துக்க முடியும், அப்படி செஞ்சுகிட்டா அது ரொம்ப பாவம். அதைவிட அவள் யாரை விரும்புறானு நான் தெரிஞ்சிக்கிட்ட கல்யாணம் செய்தேன் வை, இதைவிட துரோகமும் உலகத்துல செய்திருக்கமாட்டாங்க.”

“புரியுது அகில். ஆனா” சேரனை பேசவிடாமல்,

“புரியதுல, புரிஞ்சுருச்சு, ஆனா உன்னால ஏத்துக்க முடியலை. தன் நண்பனோட காதல் சேராம போகுதேனு உனக்கு வருத்தம். ஆனா எனக்கு, என் காதலியோட காதலை நான் சேர்த்து வச்சுட்டேனு ஒரு நிம்மதி கிடைக்கும்.” அகிலன் சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.

அப்போது சுந்த்ரம் போனில் அகிலனை அழைக்க. அதை பார்த்த சேரன், அட்டென் செய்து பேசினான்.

“அப்பா, நல்லா இருக்கீங்களா..”

“நல்லா இருக்கேன் சேரா.. நீ எப்படி இருக்க.. ஏன் ஊரு பக்கம் வர்ரது இல்லை.”

“வேலை அதிகம் ப்பா.. அதான்.”

“நேரத்துக்கு ஒழுங்கா சாப்பிடுப்பா சேரா.. வேலை எல்லாம் அப்புரம் பார்த்துகலாம் சரியா.”

“சரிங்க ப்பா. என்ன விஷயம் ப்பா.”

“அகிலுக்கு குழலியை பேசலாம்னு ஒரு எண்ணம். அதான் அவன்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கலாம் போன் பண்ணேன். அவன் எங்க சேரா இருக்கான்.”

என்ன, அகில்க்கும், குழலியை மணம் பேச போராங்களா? இது நல்லா இருக்கே.. பையன் காதலியை காதலச்சவனோட சேர்த்து வைக்க முயற்சி செய்யுறான். அப்பா, பையனுக்கு பிடிச்ச பொண்ணவே பொண்ணு கேட்க்க போறாரு. டிஷைனா இருக்காங்க இவங்க குடும்பம். மனதில் சேரன் நினைத்துகொண்டிருக்க.

“சேரா இருக்கியப்பா.. அகில் இருந்தா அவன்கிட்ட கொடுப்பா.”

அகில்கிட்ட போனை கொடுத்து, அவரும் குழலியை அவனுக்கு பொண்ணு கேட்க்க போறது தெரிஞ்சா அவன் வேண்டாம்னு சொல்லிருவான். அதனால பேசவிடக்கூடாது, அப்போ என்ன செய்யனும் சேரா.. அவனுக்கு அவனே பேசிக்கொண்டிருக்க. அகிலன் சேரனை நோக்கி வந்தான்.

“யாரு டா போன்ல..”

“அகில் நம்ம அப்பா தான்.. உங்க சித்தப்பாவுக்க்கு பொண்ணு பார்த்துருக்காங்களாம். பொண்ணு பார்க்க போகலாமானு உன்கிட்டயும் கேட்க்குராங்க.”

“அப்படியா எங்க கொடு நான் பேசுரேன்.”

”அப்பா, பொண்ணு பார்க்க போறீங்களா..”

“ஆமா அகில், அதான் உன்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்க்கலாம்னு. உனக்கு சம்மதம் தானே அகில்..” அவர் குழலியை நினைத்து பேச.

“நான் இதுல சொல்லுறதுக்கு என்ன இருக்க ப்பா. நீங்க செய்தா எல்லாமே நல்லா தான் இருக்கும் , என் சம்மதம் முக்கியம் இல்லை, உங்க மனசுக்கு சரினு பட்டா எனக்கு சம்மதம் தான் ப்பா.” அவன் மூன்றூ சித்தப்பாக்களின் ஒருவரை நினைத்து சம்மதம் சொல்ல.

“அப்போ சரி அகில் எல்லாம் பேசிட்டு உனக்கு தகவல் தரோம்.”

”சரிங்க ப்பா..” தந்தையும், மகனும் என்ன பேசிக்கொண்டார்கள் என சேரனுக்கு பயம் இருந்தாலும். அகிலனின் தந்தை குழலியை தான் பொண்ணு கேட்க போகிறோம் என சொல்லவும் இல்லை. யார் பெண் என்பதை அகிலனும் கேட்க்கவும் இல்லை. இதில் இருந்தே சேரன் புரிந்துகொண்டான் அவர்கள் என்ன பேசியிருக்க கூடும் என்று.

 

                                       தொடரும்……………..