காதலின் விதியம்மா 12

KV -e0a62f4d

 

கண் முன்னால் சில காட்சிகள் தோன்ற ‘அட என்ன ஒரு அதிசயம் முழிச்சிட்டு இருக்கும் போதே கனவு காண்கிறேன்’ என்று தன் நெற்றியில் தட்டி கொண்டே தேஜு சாப்பிடும் டேபிளுக்கு வந்தான். 

 

மதி “சரி டா நான் கிளம்பறேன் நாளைக்கு ஆபீஸ் ல பார்க்கலாம் வரேன் மா தங்கச்சி” என்று புக் செய்த கேபில் செல்ல, 

 

பைரவ் “வா” என்று கோபமாக தேஜு விடம் சொல்லி விட்டு முன்னே சென்றான். அவளோ அவனை பிடிக்க முடியாமல் ஓடிக்கொண்டே “சார் ஒரு நிமிஷம் நில்லுங்க நான் சொல்றதை கேளுங்க சார்” கார் வரை அவன் பின்னே ஓடினாள்.

 

பைரவ் “வாயை மூடிட்டு உள்ள ஏறு செம காண்டில் இருக்கேன் எதாவது சொல்லிட போறேன்” அவள் ஏறியதும் கார் சாலையை கிழித்து கொண்டு சென்றது. அதே நேரத்தில் தேஜுவின் கைப்பேசி அலற அது யாரென்று கூட பார்க்காமல் கட் செய்து டேஷ் போர்டில் வைத்து “சார் உண்மையா எனக்கு இங்க வர எண்ணம் இல்லை தான் ஆனா என் அண்ணா தான் போக சொன்னாங்க…… அவங்களோட பிரென்ட் தான் இவங்க… நான் சின்ன வயசில் பார்த்து இருக்கேன் ஆனா எனக்கு தான் நியாபகம் இல்ல” என்று அவன் கேட்கும் முன்னே சொல்ல,

 

“சும்மா இரு டி உன் நொண்ணனுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா நைட் நேரத்தில் நீ இதுவரைக்கும் பார்க்காத ஒருத்தனை எந்த தைரியத்தில் சந்திக்க சொல்லுவான்” என்று பட்டாசாக வெடிக்க,

 

முதலில் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க “என்னாடி முழிக்கிற எதாவது பேச டி என் கிட்ட பேச மாட்டேன்கிற இதுல யாருனே தெரியாதவன் கிட்ட பேச போய்ட்டு உங்க அண்ணாவை சொல்லணும் டி முட்டா பையன்” என அதுவரை அமைதியாக இருந்தவள்,

 

“என்ன நீங்க என் அண்ணாவை ரொம்ப தான் திட்டுறீங்க அவன் என்ன பண்ணான் உங்களை. ஒன்னும் இல்லாத விசயத்துக்கு நீங்க ரொம்ப தான் புளிப்பு காட்டுறிங்க” என்றவளை பார்த்து,

 

“உனக்கே தெரியும் டி என்னை சுத்தி எவ்வளவு ஆபத்து இருக்குனு என்னை மிரட்ட உன்னை யூஸ் பண்ணறாங்க” என

 

புரியாமல் “எதுக்கு என்னை வெச்சு உங்களை மிரட்டுறாங்க” என்றவளின் கேள்வியில், தலையில் அடித்து கொண்டு “உனக்கு சொன்னா புரியாது மூடிட்டு வா” என 

 

‘சொன்னா புரியாதாம் புரியற மாதிரி சொல்றது அதை விட என்ன வேலை இவருக்கு’ என்று முணுமுணுக்க    

 

“என்ன முணுமுணுப்பு சத்தமா பேசு இல்லை பேசாமல் வா”  என்று அவளை  ஹாஸ்டலில் விட்டு தன் வீட்டுக்கு செல்ல, தாய் தந்தை இருவரும் இவனின் வருகைக்காக தூங்காமல் காத்திருப்பதை பார்த்து, 

 

“நீங்க இரண்டு பேரும் தூங்க வேண்டியதுதானே” என இருவர் அருகில் அமர, 

 

நாராயணன் “எங்க தம்பி இந்த நேரத்துக்கு போன உங்க அம்மா உன்னை காணோம் னு பயந்துட்டா” என

 

தாய் முன்னால் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க,  அவன் சொல்ல தயங்குவதை புரிந்து “நீ போய் தூங்கு மா நாளைக்கு ஊருக்கு போகனும்ல போ” என்று மனைவியை அனுப்பி விட்டு மகனிடம், 

 

“என்ன டா எதாவது பிரச்சனையா யாருக்கும் எதுவும் இல்லைல” என பதட்டமாக கேட்க, 

 

“அதெல்லாம் இல்ல பா… நம்ம ஆபிஸில் வேலை பார்க்கிற தேஜஸ்வினி உயிருக்கு தான் ஆபத்து. என்னை காப்பாற்றியாதல் வந்த ஆபத்தா இல்லை என்னை பிடிக்க அவளை தூண்டிலா யூஸ் பண்றாங்களா தெரியாது பட் அவளை ஆபத்து சுற்றி இருக்கு” என

 

“என்ன பா சொல்ற அவ வேற பயந்த சுபாவமே நாளையில் இருந்து நாம வேற ஒரு வாரத்திற்கு இங்க இருக்க போறது இல்லையே” என்றவரை பார்த்து “ஏன்….. எங்க போக போறோம்” என்றவனை முறைத்து கொண்டே ” நீ தானே தம்பி ஊருக்கு வர சம்மதம் சொன்ன அதான் நாளைக்கு கிளம்ப ஏற்பாடு பண்ணேன்” என

 

“ஓ….” என்று யோசனையுடன் தனது அறைக்கு சென்றான். செல்லும் மகனை கவலையுடன் பார்த்து கொண்டு இருந்தார். 

 

‘இந்த கல்யாணம் சரியா இல்லையா ரொம்ப குழப்பமா இருக்கே’ என தன் மனதில் தோன்றிய கேள்வியுடன் ஆர்யா போராட அந்த நேரத்தில் தேவேஷ் போன் செய்தான். 

 

“மச்சா நீயே பேசுவ பேசுவனு நானும் பொறுமையா இருந்தா நீ என்னை கூப்பிடவே இல்ல…. சரி சொல்லு என் தங்கச்சியை பார்த்தியா பேசனியா எல்லாம் ஒகே தானே” என்று ஆர்வம் கலந்த சந்தோஷத்தில் கேட்க, 

 

தன் நண்பனின் சந்தோஷத்தில் பங்கு பெற முடியாமல் “டேய் உன் தங்கச்சிக்கு நான் உன் ஃப்ரெண்டை தவிர நான் அவங்களுக்கு யாருனு தெரியாதா? ” என்று கேள்வியாக கேட்க

 

“இன்னும் சொல்லலை டா. அவளுக்கு என்னடா தெரியும் வெளி உலகே இப்ப தான் பார்க்கிறா அதை விட நான் ஒன்று கேட்டா அதை கண்டிப்பா அவ பண்ணி கொடுப்பா” என்பவனுக்கு தெரியவில்லை அவன் கேட்க நினைக்கும் நேரம் அவள் மீது உள்ள உரிமையை தாம் மட்டும் அல்ல தன் குடும்பமே இழக்க போகிறது என்பதை. 

 

“சரிடா நா.. எனக்கு….  அப்புறமா பேசறேன் டா” குழப்பமான மனநிலையில் பேச வேண்டாம் என்று நினைத்து பேசியை அனைத்தான். 

 

ஹாஸ்டலில்,  “கௌசி  நீ பார்த்தியே அவங்க தான் பைரவ். செம கோபம் வரும் தெரியுமா நான் எல்லாம் பிறந்ததுல இருந்து இப்ப வரை கோபப்பட்டதே இல்லை டி. இந்த அண்ணா வேற எதுக்கு என்னை சமந்தமே இல்லாமல் அவங்களை பார்க்க போக சொன்னாங்க டி” என்ற தேஜூவை பார்த்து, 

 

“எனக்கு என்ன டி தெரியும் ஒரு வேலை உனக்கு மாப்பிள்ளை பார்த்த மாப்பிள்ளையா இருக்குமோ… சும்மா சொல்ல கூடாது பார்க்க ஹீரோ மாதிரி இருந்தாங்க” என்று ரசனையாக சொல்ல, 

 

“அப்ப நீயே கட்டிக்கோ டி எனக்கு வேண்டாம். எனக்கு எப்படி பட்ட புருஷன் வேண்டும்னு அண்ணா கண்டிப்பாக கேட்பாங்க டி அப்ப சொல்வேன் இந்த உலகத்தை வெல்ல ஒருத்தனால முடியும்னா அவனை கூப்பிட்டு வாங்கனு” என

 

அவளின் பிற்பகுதி பதிலை ஒதுக்கி விட்டு “பேச்சு மாற கூடாது நான் அப்புறம் அவனை கட்டிப்பேன் சொல்லிடேன்” என அழுத்தமாக சொல்ல “உன்னோட முடிவு சரி அதை விடு…. நாளையில் இருந்து பத்து நாட்கள் லீவே என்ன பண்ண போற” என

 

கௌசல்யா “அட போ தேஜூ ஏன் தான் ப்ரேக் விட்டாங்களோ வீட்டுக்கு போகனும் நினைச்சாலே கடுப்பா இருக்கு என்ன பண்றது நல்லா தூங்க வேண்டியதுதான்” என்று இருவரும் ௭ல கதைகள் பேசிக்கொண்டே இரவை நீடித்தனர். 

 

 

“நீவிர் பல முறை கூறினீர் கோபம் குலத்தை கெடுக்கும் நான் அதற்கு சேவி கொடுத்து கேட்காதால் விளைந்த விளைவு” என தன் கண் முன்னால் ரத்த வெள்ளத்தில் கடைசி மூச்சை எண்ணி கொண்டு இருக்கும் தன் மன்னவனிடம்  கண்ணீரில் கரைய, 

 

“எம்மால் நம் குலம் காத்த அபூர்வ பொருளை இழந்தாய், எம்மால் கிடைக்க இழையாத சாபத்தை அடைந்தாய், எம்மால் நம்பிக்கை துரோகத்தை அடைந்தாய், கடவுளுக்கு இணையான தாய் தந்தையை இழந்தாய்” என தலையில் அடித்து கொண்டு அழுக, 

 

“எம் தேவியை கண்ணீர் எம்மை மேலும் கொல்கிறதே….. உம்முடைய தவறு எதுவும் இல்லை ஞான் ஆராயாமல் நம்பியதை உம் தவறு என்று எண்ணாதே உன்னுள் வளரும் நம் உயிரை காத்துக் கொள் இவ்விடம் விட்டு மாயோன் இருக்கும் திசையில் செல்….. மாயோனை….. ஆட்சி… ” மேலே பேசும் முன் அவனின் உயிர் பிரிய அதுவரை அவன் பேசியதை கேட்டு கொண்டு இருந்தவள் “இல்லை” என்று அந்த காடே அதிர கத்தினாள். 

 

செங்கோல் கொண்டு அரியணையை அலங்கரிக்க வேண்டியவன் யாருமற்று  உயிரற்ற உடலாக கிடக்க, யாரோ வரும் அரவம் கேட்க பக்கத்தில் இருக்கும் மண்டபத்தில் தன் கைகளால் ஆரத்தழுவிய மன்னவனை மண் தோண்டி புதைத்து கணத்த மனதோடு மாயோனை தேடி செல்ல நினைக்க அவள் முன்பே வந்த சண்டியை பார்த்து கோபத்தில் அக்னியாக கொதித்தாள். 

 

மூச்சு விட முடியாமல் எழுந்து அமர்ந்த பைரவ் கனவின் தாக்கத்தில் இருந்து வெளியே வர முடியாமல் உடம்பில் இரத்தம் வருகிறதா என்றும் தனக்காக அழுத மங்கை முகமும் நியாபகம் வராமல் குழப்பத்திலே பால்கனி வந்தான்