காதலின் விதியம்மா 18

Kv 2-cb271507

 

 

தேஜஸ்வினி முயன்று கோபத்தை கட்டுப்படுத்த, தேவேஷ், பொன்னி மற்றும் ரகுபதி மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க சென்றனர். 

 

அவர்கள் எதிர்பார்த்தது மாப்பிள்ளை அவனின் பெற்றோர் மற்றும் அவரின் உறவினர்கள் சிலர், ஆனால் வந்ததோ கோட் சூட் போட்ட பக்க பிஸ்னஸ் மேன் ஒருவன் அவனை சூழ்ந்து நான்கு ஹை டெக் அடியாட்கள். 

 

தேவேஷ் இதை சற்றும் எதிர்பார்க்க வில்லை. ரகுபதி “தம்பி என்ன பா இது” என்று கவலையாக கேட்க, அவனோ “தெரியலை பா… இருங்க பார்க்கலாம்” என

 

“வாங்க” என்று வந்தவர்களை உள்ளே அழைக்க, உள்ளே வந்த மந்தீப் அவர்களை கண்டுக்கொள்ளாமல் நேராக சென்று கால் மேல் கால் போட்டு திமிராக அமர்ந்தான். அவனுடன் வந்த ஆட்கள் அவன் பின் நிற்க, இதை தன் அறையில் இருந்து பார்த்த தேஜூ ‘இவனை கொண்டு வந்த அண்ணாவை சொல்லனும் பைத்தியக்காரன்’ என்று தலையில் அடித்து கொண்டாள். 

 

தேவேஷ் “தனியா வந்திருக்கீங்க…. பெரியவங்க யாரும் வரலையா” என்றதும், 

 

கோணல் சிரிப்புடன் “பொண்ண வர சொல்றீங்களா” என்ற குரலில் அதிகமாக வெளிவந்தது கர்வம் ஆணவம் தான் என்ற அகங்காரம் அனைத்தும் நிறைந்து கிடந்தது. 

 

அவன் முன்னே தன் மகளை காட்ட விருப்பம் இல்லாமல் ரகுபதி “மன்னிச்சுடுங்க தம்பி இப்ப நான் என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ற ஐடியா இல்ல….. தம்பி தெரியாமல் உங்க கிட்ட சொல்லிடுச்சு” என

 

மந்தீப் “அங்கிள் நான் ஒன்று நினைச்சு அது நடக்காமல் இருக்காது நீங்க இப்படி வந்து அமைதியா உட்காருங்க என்ன ஆன்ட்டி இன்னுமா பொண்ண கூப்பிட்டு வரலை போங்க போங்க” என்று நக்கலாக சொல்ல, 

 

தன் அவசரத்தால் வந்த வினையை எண்ணி நொந்த தேவ் கோபமாக “அதெல்லாம் என் தங்கையை கூப்பிட முடியாது” என

 

மந்தீப்போ தன் பின்னால் இருக்கும் ஆட்களை ஒரு அர்த்த பார்வை பார்க்க அடுத்த நொடி தேவை ஒருவனும் ரகுபதியை ஒருவனும் பிடித்து கொள்ள, பொன்னி பதறி போனாள். 

 

இதை பார்த்து தன் அறையில் இருந்து வெளியே வந்த தேஜூ அப்போது தான் அவனின் முகத்தை முழுவதுமாக பார்த்தாள். 

 

தேஜூ “ஓ…. இந்த சாரை தான் பார்க்க வர சொன்னியா ப்ரோ…. என்ன சார் பார்த்தாச்சா கிளம்புங்க இல்ல எனக்கு வர கோபத்துக்கு என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று நிதானமாக அழுத்தமாக சொல்ல, 

 

மந்தீப் “வாவ்…. முன்ன பார்த்த போது பயத்தை கொட்டிய கண்கள் இப்ப ஆளுமை நிறைந்து இருக்கே….. உன்னோட இந்த மாற்றம் நல்லா இருக்கே இங்க பாரு பேப் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்” என

 

அவ்வளவு தான் தேஜூவின் நிதானம் பொறுமை மொத்தமாக தொலைந்து “என்னடா சொன்ன என்னை கல்யாணம் பண்ண போறியா…. ஹா ஹா ஹா எத்தனையாவது கல்யாணம் உன்னை பற்றி தெரியாதுனு நினைச்சியா…… ஒழுங்காக என் அப்பா அண்ணாவ விட சொல்லு இல்ல உயிரோட இங்க இருந்து போக மாட்ட” என்றதும் மந்தீப்

 

“ஓ.. என்னை பற்றி தெரியுமா யார் அந்த பைரவ் சொன்னானா…. சொல்லியிருப்பான் சொல்லி இருப்பான்… அவனை கொல்ல எத்தனை முறை தான் ஆளை அனுப்பறது…. இப்ப கூட அவனை முடிக்க சொல்லி என்னோட ஆளை அனுப்பி வைச்சிட்டு தான் இங்க வந்தேன்” என 

 

“டேய்…. என் பைரவ் க்கு எதுவும் ஆகாது ஆகவும் நான் விட மாட்டேன்….. எவ்வளவு தைரியம் இருந்தா என் கிட்டவே அவனை கொல்ல ஆள் அனுப்பியதை சொல்லுவ” என்று யாரும் எதிர் பார்க்கா நேரத்தில் பக்கத்தில் இருந்த பூ ஜாடியை கையில் எடுத்து மந்தீப்பின் மண்டையில் அடித்தாள். 

 

‘என் தங்கைச்சியா இது’ ‘என் பொண்ணா இது’ என இவளின் குடும்பத்தார் திகைத்து பார்க்க அவளோ “சாதாரண பொண்ணு தானே என்ன பண்ணுவானு நினைச்சியா…. கொன்னுடுவேன் ஜாக்கிரதை” என

 

மந்தீப்பின் தலையில் இரத்தம் வழிய இதை கருத்தில் கொள்ளாமல் அவள் தன் அடித்து விட்டால் என்ற கோபத்தில் ” என்ன தைரியம் இருந்தா என்னை அடிச்சிருப்ப…… நானா உன்னை தேடி வரலை இதோ நிற்கிறானே இவன் தான் உன்னை கல்யாணம் பண்ணி கொடுக்கிறதா சொன்னான். அப்ப கூட நான் கேட்டேன் உன்னை ஒரு வார்த்தை கூட கேட்காமல் எனக்கு வாக்கு கொடுக்கிறீங்க…. அதுக்கு அவன் தான் சொன்னான் அவள் மேல எனக்கு எல்லா உரிமையும் இருக்குனு…” என்று தேவேஷை பார்க்க தலையை குனிந்தான் அவன். 

 

தேஜூ “உன்னை யாரும் விளக்கம் சொல்ல சொல்லலை…. போட வெளியே” என்று அவனை தள்ள, கோபத்தில் மந்தீப் தேஜூவை ஓங்கி கன்னத்தில் அறைய வேகமாக பக்கத்தில் இருந்த மேஜையில் மோதி கீழே விழுந்தாள்.  

 

“அச்சு” என்று மூவரும் கத்த, தேஜூ “ஒன்றும் இல்ல பதறாதீங்க” என்று தடுமாறி எழுந்தாள். 

 

மந்தீப் “என்னோட ஈகோவை நீ டச் பண்ணிட்ட…. அதுக்கு சின்னதா பழிவாங்காமல் போனா என் கெத்து என்ன ஆகிறது… அதனால நீ என் ஈகோவா டச் பண்ண ஸோ நான் உன்னை டச் பண்ண போறேன்…. எப்படி கணக்கு சரியா போச்சா” என

 

தேவேஷ் “டேய் நாயே விடுடா…… டேய் உன்னை….. என் தங்கச்சி மேல கை வெச்ச செத்தடா” என்று கத்த, ரகுபதி “தம்பி பாப்பா தெரியாமல் ஏதோ பேசிட்டா…. அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டு்க்கிறேன்” என

 

அவன் சொன்னதை கொஞ்சமும் பயம் இல்லாமல் கேட்ட தேஜூ சிறு சிரிப்புடன் “அன்றைக்கு என் கிட்ட தப்பா நடக்க பார்த்தியே என்ன அப்ப என்ன நடந்துச்சுனு நியாபகம் இருக்கா” என்று நக்கல் வழிய கேட்க, 

 

 

சில வாரங்கள் முன் சென்னையின் முக்கிய ஹோட்டல், 

 

பைரவ் “இந்த மீட்டிங் ரொம்ப முக்கியம்…. பட் நீ உள்ள வர வேண்டாம் இங்கவே இரு” என்று தேஜூவை ஒரு அறையில் தனியாக விட்டுவிட்டு பைரவ் செல்ல, தேஜூவும் அவளின் வேலையை பார்த்து கொண்டு இருந்தாள். 

 

தனது நண்பர்களுடன் வந்த மந்தீப் போன் பேசிக்கொண்டே நடக்கும் போது திறந்த கதவின் வழியே தேஜூவை பார்த்து பூனை நடையுடன் அந்த அறைக்குள் சென்று தள்ளிட்டு கொண்டான். 

 

தேஜூ “யார் நீங்க எதுக்கு உள்ள வந்திங்க……. ஹெல்ப்” என்று கத்த, அவளின் குரல் யாருக்கும் கேட்கவில்லை. அவன் நெருங்க நெருங்க தன் மானத்தை காத்து கொள்ள சாவதே மேல் என்று நினைத்து பக்கத்தில் இருந்த பழம் வெட்டும் கத்தியை எடுத்த சமயம் பைரவ் தடார் என்று உள்ளே நுழைந்தான். 

 

அவனை பார்த்த பின் தான் தேஜூவிற்கு உயிரே வந்தது. “சார்!!” என்று அவன் அருகே நின்று கொள்ள, பைரவ் அவனை அடி பொலந்து விட்டான். 

 

கடைசியாக பைரவ் “உன்னோட நிழல் கூட இவ மேல பட கூடாது. அடுத்த முறை உன் பார்த்தேன் அது தான் ஸஉன் கடைசி நாள்” என்று எச்சரித்தே அனுப்பினான். இருந்தும் இன்று, 

 

“அது எப்படி தேஜ் சாருக்கு நியாபகம் இருக்கும்….. சார் தான் தினமும் பல பேரை சந்திந்தவரே” என்றது நம் பைரவ்வே தான். 

 

பைரவை அங்கே பார்த்ததும் சற்று பதறினாலும் நிதானித்து கொண்டு, “அது எப்படி டா இவளுக்கு ஒன்னுனா கரெக்டா அங்க வந்திடுற….. உனக்கும் இவளுக்கும் என்ன சம்மந்தம்” என

 

“எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் அது எதுக்கு உனக்கு…… கிளம்பு முதல நிறைய வேலை இருக்கு” என்று பைரவ் தன் ஆட்களை பார்க்க அவர்கள் மந்தீப் மற்றும் அவனது ஆட்களை அழைத்து சென்றனர். 

 

ரகுபதி “ரொம்ப நன்றி தம்பி…. என் பெண்ணை காப்பாற்றி இருக்கிங்க…. எங்க வீட்டோட சந்தோசமே இவ தான்” என்று உணர்ச்சி மிகுந்து சொல்ல, 

 

பைரவ் “நான் காப்பாற்றியது உங்க வீட்டு சந்தோசத்தை இல்ல எங்க வீட்டு இளவரசியை” என எல்லாரும் புரியாமல் அவனை பார்க்க, 

 

“என்ன சொல்றீங்க எங்களுக்கு புரியலை” என்ற பொன்னியிடம் பதில் பேசாமல் தேஜூவை பார்த்து “கிளம்பு பேபிமா நம்ம வீட்டுக்கு போகலாம்” என

 

தேவேஷ் “யாருங்க நீங்க…. உரிமையா என் தங்கையை கூப்பறீங்க” என்றதும்

 

“உங்க யாருக்கும் இல்லாத உரிமை எனக்கு இருக்கு….. உரிமையை பற்றி பேச உங்க யாருக்கும் தகுதி இல்ல…. கிடைச்ச பொருளை உரியவங்க கிட்ட கொடுக்க தெரியாத மனிதர்கள் தானே நீங்க எல்லாம்” என

 

அவனின் வார்த்தை ரகுபதி மற்றும் பொன்னி தம்பதியரை அதிர வைத்தது. தேஜூ “என்ன சார் சொல்றீங்க எனக்கு எதுவும் புரியலை….. புரியும் படி சொல்லுங்க” என

 

தேவ் தன் தாய் தந்தை முகத்தில் வந்த கன நேர மாற்றத்தை பார்த்து ‘என்னயா நடக்குது இங்க’ என்று கேள்வியாக பார்க்க, 

 

பைரவ் “இதோ இங்க நிற்கிறாளே தேஜ் இவ தான் சதிகா என் அத்தை பெண்” என்று கையில் இருக்கும் டி என் ஏ ரிப்போர்டை காட்ட, “என்ன!!!!” என்று அதிர்ச்சியில் அவன் கொடுத்த பேப்பரை பார்த்தால் தேஜஸ்வினி என்ற சதிகா தேவி. 

 

அன்று பைரவ் நடு ராத்திரி தேஜூ வீட்டிற்கு வந்த சமயம் சுவற்றில் குழந்தை புகைப்படமாக இருந்த தேஜூவை ரசித்து பார்த்தவன் “என் தங்கம் எவ்வளவு அழகா இருக்கா குழந்தையில்…. நம்ம போனில் ஒரு போட்டோ எடுத்து வைப்போம்” என்று பல ஆங்கிளில் புகைப்படம் எடுக்கும் சமயம் அவன் மனதில் வந்த புகைப்படம் தன் அத்தை வீட்டில் நடு வீட்டில் மாட்டி இருந்த சதிகா தேவியின் 6 மாதம் குழந்தை சித்திரம். 

 

‘இது சதி மாதிரி இருக்கே எப்படி…. அதே கண்ணு அதே சிரிப்பு….. நான் கரெக்டா பார்க்கிறேனா இல்ல’ என்னும் போதே சாப்பாட்டுடன் தேஜூ வர, அவளிடம் இதை சொல்லாமல் மறைத்தான். 

 

கிளம்பும் போது அவளை இறுக்கி அணைத்த சமயம் அவளே அறியாத வாறு அவளின் ஒரு முடியை பற்றி இழுத்து சேகரித்து வைத்தான். 

 

மறுநாள் காலை தன் அத்தையின் தலை முடியை அவர் பயன்படுத்திய சிப்பில் இருந்து எடுத்து கொண்டு பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடல் சென்றான். தன் காயத்திற்கு மருந்திட்டு கொண்டு இருவரின் தலை முடியை கொடுத்து டி என் ஏ டேஸ்ட் எடுக்க சொன்னான். 

 

அதன் முடிவு எவ்வாறு இருக்கும் என்று யோசித்து கொண்டே இருந்ததால் தேஜூ இன்று வேலைக்கு வராததை கூட கவனிக்க வில்லை. அதன் முடிவு தேஜூ தங்கள் வீட்டு பெண் என இருந்ததும் சந்தோசமாக அவளின் வீட்டிற்கு வந்தவனின் சந்தோசம் மந்தீப்பை பார்த்ததும் மறைந்து போனது. 

 

தற்போது, தேஜூ கலங்கிய கண்ணுடன் “அம்மா நான் உன்னோட பொண்ணு இல்லையா இவங்க என் அப்பா இல்லையா இது என் அண்ணா இல்லையை…… நான் உங்க யாருக்கு சொந்தம் இல்லையா” என்று குரல் உடைந்து கேட்க, 

 

“அய்யோ…… என் பொண்ணுக்கு எது தெரிய கூடாதுனு இத்தனை நாள் நினைச்சேனோ அது தெரிச்சு போச்சே…….. உன்னை பத்து மாதம் என் வயிற்றில் சுமக்கும் பாக்கியத்தை அந்த கடவுள் எனக்கு கொடுக்கலையே தாயி…….. பத்து மாசம் கருவில் சுமக்கிறதுக்கு பதிலா என்னை இருபத்து மூன்று வருசமா நெஞ்சில் சுமக்கிறேனே” என்று தலையில் அடித்து கொண்டு கதறினார் பொன்னி. 

 

தேவ் “என்ன ம்மா சொல்றீங்க……. ஏன் மா என் கிட்ட இதை சொல்லலை… அழாதிங்க மா” என்று தாயை தேற்ற, ரகுபதி என்ன செய்வது என்றே புரியாமல் தோய்ந்த நிலையில் இருந்தார். 

 

பைரவ் “உங்க மனநிலை எனக்கு புரியது இல்லனு சொல்லலை பட் என் அத்தை மாமாவை கொஞ்சம் நினைச்சு பாருங்க…… ஒத்த பிள்ளையை கை குழந்தையா தொலைச்சிட்டு இப்ப வரை என் மகளோட முகத்தை பார்த்திட மாட்டோமானு ஏங்கிட்டு இருக்காங்க. இன்றைக்கு அவங்க கல்யாண நாள். அவங்களுக்கு கல்யாண நாள் பரிசா தொலைச்ச அவங்க பெண்ணை கொடுக்க போறேன் ப்ளீஸ் அவளை கூப்பிட்டு போறேன்” என

 

பொன்னி ஒரு தாயாக அவரின் நிலையை புரிந்து கொண்டு தன் வேதனையை மறைத்து கொண்டு “அழைச்சு போங்க பா…… இவ எங்க பொக்கிஷம் பா பத்திரமாக பார்த்துக்கோ” என்றதும் பைரவ் அவளை அழைத்து சென்றான். 

 

தன்னை சுற்றி நடப்பது எதுவும் புரியாமல் அன்று அவர்களை பார்த்ததும் தோன்றிய உணர்வுக்கு காரணம் தொப்பில் கொடி உறவா என்று சொல்ல முடியாத ஒர் உணர்வில் சிக்கி தவித்தாள். 

 

அவளின் நிலையை புரிந்து கொண்டு பக்கத்தில் இருக்கும் ஒரு கடையில் நிறுத்தி “சதி!!!!” என்று மென்மையாக அழைக்க, 

 

இதுவரை இருந்த பெயர், தன் அடையாளம், தன் உறவு, தன் தலை எழுத்து, தன் வாழ்க்கை அனைத்தும் ஒரே நாளில் மாறியதை எண்ணி அழைத்த பைரவை பார்த்து கசந்த புன்னகை ஒன்றை உதிர்தாள். 

 

“ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் யூவர் ஃபிலீங்….. பட் தே….. சதி நீ தான் நம்ம குடும்பத்தோட புதையல். நாங்க தொலைச்ச சந்தோசம் நிம்மதி…… என் அப்பா அம்மா குற்ற உணர்வுடன் சொந்த ஊரை விட்டு போக காரணம் எல்லாமே நீ தான் சதி….. இப்ப நீ தான் எங்க சதி தேவினு தெரிஞ்சா எல்லாருமே ரொம்ப சந்தோச படுவாங்க…… உன்னை முதல் முறையாக பார்க்கும் போதே எனக்கு நெருங்கிய உறவா தான் நீ தெரிஞ்ச அதான் உன் கிட்ட நெருங்கி பழகினேன். யாருக்கும் கொடுக்காத பல சலுகை உனக்கு கொடுத்தேன். 

 

உன்னோட ஆறு மாசம் வரை நீ என் கையில் தான் இருப்ப……. என்னோட சதி குட்டி டி நீ……. அந்த ஈசனும் அவரோட சதியை தொலச்சிட்டு பித்து பிடிச்சா மாதிரி தேடினார்….. நானும் என் சதியை தொலைச்சிட்டு அந்த வயசில் என்ன பண்றதுனு கூட தெரியாமல் தவிச்சேன்” என

 

அவன் பேசியதை கேட்டுக் கொண்டே கண்ணாடியை பார்க்க திகைத்து போனாள். ஒரு தண்ணீர் லாரி மிக வேகமாக அவர்களின் காரை நோக்கி வருவதை பார்த்தவள், பைரவை பார்க்க அவன் கார் நிறுத்தியதும் சீட் பேல்டை கிழட்டி வைத்து காரணத்தால் வேகமாக கதவை திறந்து அவனை தள்ளி விட்டு “லவ் யூ மாமா” என்றதும் அந்த லாரி அந்த காரை மோதி துக்கி எரிந்தது. 

 

அவள் தள்ளியதில் கோபம் கோபம் கொண்டு, அடுத்து அவள் கூறிய அவளின் காதலில் இன்பமாக அதிர்ந்து அடுத்து நிகழ்ந்த நிகழ்வில் மொத்தமாக உடைந்து போனான் பைரவ் வர்மா. 

 

“தேவி!!!!!!” என்று அவளை நோக்கி ஓடினான். அதற்குள் அங்கு இருந்த ஒருவர் அம்புலன்ஸை அழைத்து இருக்க, வழி எங்கும் “தேவி….. என்னை பாரு டி….. சதி குட்டி என்னை பாருமா” என்ற பைரவின் குரல் சதிகா தேவிக்கு கேட்கவில்லை. 

 

அவள் காதில் கேட்கும் குரலோ “நம் விவாகம் அதி விரைவில் நிகழ உள்ளது என் கடற்கன்னியே” என்ற சொல்லில் சதிகா தேவி காலம் கடந்து சென்று கொண்டு இருந்தாள். 

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

 

இதில் வரும் ஊர் பெயர்கள் யாவும் கற்பனையே…… 

 

பல நூறு நூற்றாண்டுகளுக்கு முன், 

 

மூன்று பக்கம் மதில் போன்ற பெரிய மலைகளையும் ஒரு பக்கம் கடல் சூழ்ந்து இயற்கையான நான்கு பக்க அரன் கொண்ட மிக பெரிய பேரரசை கொண்ட பவள தேசம். 

 

இடி, மின்னலுடன் மழை என்று மாறி மாறி பொழிந்து கொண்டு இருக்க, அந்த சத்தத்தை தவிர வீதியில் வேறு சத்தமே இல்லாமல் மக்கள் அனைவரும் துயில் கொண்டு இருந்த இரவு, அதற்கு நேர்மாறாக அரண்மனை பரபரப்புடன் காணப்பட்டது. 

 

பேரரசர் விஸ்வகர்மா அவரின் தங்கையும் மற்றும் அண்டை நட்பு தேச சிற்றரசர் ஆத்ரேயனின் காதல் துணைவி சந்திரிகா வின் அலறல் ஓசை அந்த அரண்மனை முழுவதும் எதிரோலிக்க,

 

ஆத்ரேயன் “நன்பா…. அவளின் அழுகுரல் கேட்க என்னால் இயலாது. நான்….. நான்….. வெளியேறிடவா” என

 

“மடத்தனமாக பேசாதீர்….. சற்று நேரத்தில் உன் வாரிசை வரவேற்க நீர் இவ்விடம் இருக்க வேண்டாமா??” என்று போரில் ஆயிரம் பேர் கண்களுக்கு புலப்படாத வகையில் இருந்தாலும் அசாதாரணமாக அனைவரையும் வீழ்த்தும் ஆத்ரேயன் கண்களில் கண்ணீர். காதல் மனைவியின் துயரை தன்னால் வாங்கி கொள்ள இயலாத நிலையில், இனி அடுத்த மகவை பற்றி எண்ணவே கூடாது என்று முடிவு செய்து கண்களை இறுக்க முடி காத்திருக்க ‘வீல்’ என்ற சந்திரிகாவின் சத்தத்தில் ஜனனித்தால் அவரின் இளவரசி. 

 

அவர்களின் சந்தோசம் அடுத்து நடந்த துயர் நிகழ்வால் காணாமல் போனது. அப்படி என்ன நடந்ததது??