காதலின் விதியம்மா 4

KV-08c95147

நேற்றை போல் இன்றும் தனது டீம் ப்ராஜெக்டை படித்து கொண்டு இருந்த தேஜூவை பியூன் மேனேஜர் கூப்பிடுவதாக அழைக்க அங்கே சென்றாள். 

“சர்” என கதவை தட்ட அவர் “கம் இன்” என்றதும் உள்ளே செல்ல, 

“அஸ்வினி ஒரு ஆடரை இன்றைகே அனுப்பனும் ஆனா அதுக்கு எம். டி சார் கையெழுத்து வேண்டும் அவரோட பி ஏ ஆவட் ஆப் சிட்டி நானும் ஃபாரின் டேலிக்கேட்ஸ் கூட ஒரு மீட்டிங் இருக்கு. ஸோ கொஞ்ச சர் வீடு வரைக்கும் போய்ட்டு வர முடியுமா” என

“சர் போகிறதில் பிரச்சனை இல்ல நான் சென்னைக்கு புதுசு வழி தெரியாது” என்று பாவமாக சொல்ல

“கம்பெனி கார் இருக்கு அதில போய்ட்டு வாமா… இது கொஞ்சம் முக்கியமான ஃபயில் அதான்.. நீ தான் வரனு சொல்லிட்டேன்” என அவளும் கிளம்பி அவர்கள் வீட்டுக்கு செல்ல தயாரானாள். 

பைரவ்,  “ம்மா நான் என்னோட ரூமிற்கு போறேன்” என முதல் தளத்தில் இருக்கும் தன் அறைக்கு சென்றான். 

நாராயணன் தன் அலுவல் அறையில் இருக்க,  தேஜஸ்வினி அந்த வீட்டுக்குள் நுழைந்தாள். 

“யூ…. ஃபூல் நான் சொன்னதை மட்டும் செய் அத விட்டுட்டு நீயா ஒன்று பண்ணாத” என கத்தும் சத்தமும் கூடவே கண்ணாடி உடையும் சத்தமும் கேட்க, சத்தம் கேட்க  திசையை உடல் நடுங்க பயத்துடன் நோக்கினாள். 

‘மேல இருக்கிற ரூமில் தான் சத்தம் வருது தேஜூகுட்டி அந்த பக்கம் மட்டும் போகவே கூடாது முதல சாரை பார்த்து சையின் வாங்கிட்டு போகனும்’ என்னும் போதே அங்க வந்த பூமகள், 

“யாரை மா பார்க்கணும்” என்று சாந்தமாக கேட்க, 

“சர்…. கையெழுத்து….. ஆபீஸ்.. ” என்று பதட்டத்தில் வாய் குளற, பின் தன்னை சமன் செய்து கொண்டு “அம்மா ஆபிஸில் இருந்து வரேன். சார் கிட்ட முக்கியமான பையிலில் சையின் வாங்கனும்” என

அவரும் இவளை பார்த்து மெலிதாக புன்னைத்து கொண்டு “அவரு மேல தான் இருக்காரு போமா”  என அவரும் எந்த ரூம் என்று சொல்லவில்லை இவளும் கேட்கவில்லை. 

‘ஐய்யோ… இதுல எந்த ரூம்னு அவங்க சொல்லவே இல்லையே எதுவா இருக்கும் இதுவா….. இல்லை அதுவா…… ம்ம்ம் இதுல தான் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி சத்தம் வந்துச்சு கண்டிப்பா இதுல தான் இருப்பாங்க” என

அந்த கதவை தட்டி “சர்” என்று அழைக்க  ‘என்ன எதுமே சொல்லாம அமைதியா இருக்கு… சரி நம்ம உள்ள போகுவோம் சாரை பார்த்த அவ்வளவு கடுமை மாதிரி எல்லாம் தெரியலை’ என குருட்டு தைரியத்தில் உள்ளே சென்று, 

“சார்” என்று அழைத்து கொண்டே அவரை தேட ‘என்ன யாரையும் காணோம்’ என்று திரும்ப பக்கத்து மேஜையில் இருந்த போனை கவனிக்காமல் கையை உதற அந்தோ பாவம் கைபேசி சுக்கு நூறாக உடைந்து. 

சரியாக அந்த நேரம் ரெஸ்ட் ரூமில் இருந்து பைரவ் வர, வந்ததும் அவன் கண்ணில் பட்டது உடைந்த அவனின் போன் தான். 

“டாம் இட் கொஞ்சமாச்சு மூளை இருக்கா எவ்வளவு காஸ்லி போன் அதை விட முக்கியமான கால் வேற வரும் ச்சை…. எனக்கு வர கோபத்துக்கு” என எதிரே இருந்தவரை அறைய கை ஓங்க

“சர்… சர்…. சாரி சர் தெரியா பண்ணிட்டேன் சர் நான் வேண்டுமே பண்ணல அடிச்சிடாதிங்க” என பதறிய குரலில் கூற

கோபத்துடன் வேகமாக கையை ஓங்கியவன் அவளின் படப்பட பேச்சில் அவளை நோக்க, 

பயத்தில் நடுங்கும் அவளின் செவ்விதழ்யில் அவனின் பார்வை சென்றது.  மெதுவாக பார்வையை விலக்க பயத்தில் இறுகி முடிய விழிகள்,  வெளுத்த முகம் என பயத்திலும் ரதியாக இருந்தவளை கண்டு தடுமாறிய மனதை கட்டுப்படுத்த முடியாமல் தன் கேசத்தை கோதி பின், 

“யாரு நி.. நீங்க எதுக்கு என்னோட ரூமிற்கு வந்த” என்று பொறுமையாக கேட்க நினைத்தாலும் வாயில் இருந்து அதிகாரமாகவே வந்தது. 

“சர் சர் ஆபீஸ்ல  இருந்து கையெழுத்து வாங்க வந்தேன் சர்…… எம் டி சர் ரூம்னு  நினைச்சு வந்துட்டேன் மன்னிச்சிடுங்க சர் உங்க போனை உடைச்சிட்டேன் நானே புது போன் வாங்கி தரேன்” என கண்ணில் இருந்து வடிந்த கண்ணீரை துடைத்து கொண்டே கூற

“ஏய் டேம்  இட் முதல டியர்ஸ்சை வைப் பண்ணு சும்மா அழுதா எனக்கு சுத்தமா பிடிக்காது தென் தப்பே பண்ணாலும் தலை குனிந்து பேச கூடாது எதிரில நிற்கிறவங்க முகத்தை பார்த்து பேசு தென்  அப்பாவோட ரூம் கடைசியா இருக்கும் போ”  என தலையை ஆட்டிக் கொண்டு, 

“கண்டிப்பா முதல் மாசம் சம்பளம் வந்ததும் போன் வாங்கி தந்துடுவேன் சர்… எம் டி சர் கிட்ட சொல்லாதிங்க” என்று கூறி விட்டு வேகமாக திரும்பி ஓட , 

“சில்லி கேள்” என உடைந்த ஐ போனை எடுத்து ‘பெயரை கேட்காமல் விட்டுட்டோமே’ என்று யோசித்து கொண்டே  தன் வேலையை கவனித்தான். 

‘தூர்காமா இந்த தடவையாவது சரியான ரூமிற்கு போகனும்’ என்று வேண்டிக் கொண்டே கதவை தட்டி விட்டு உள்ளே செல்ல, 

“வா மா அஸ்வினி உனக்கு தான் வெயிட்டிங் கொடு கொடு…. அப்பறம் முதல் நாள் எப்படி போச்சு….. உன்னோட  டீம் லீட் யாரு” என

“டீம் லீட் சாய் சர்….. நல்லா போச்சு சார்… இப்ப ஒரு பெரிய ப்ராஜெக்ட் அசையின் பண்ணி  இருக்கு சார்” என

“குட் சாய் நல்ல திறமையான பையன் அவன் கிட்ட  இருந்து எவ்வளவு கத்துக்க முடியுமோ எவ்வளவு கத்துக்கோ” என்னும் போதே அந்த அறைக்கு பைரவ் வர, 

“வாடா….. அஸ்வினி இவன் தான் என்னோட சன் பைரவ் அண்ட் இவங்க நம்ம கம்பெனியோட நீயூ ஜாயினி தேஜஸ்வினி” என

‘ஓ… இவ தான் தேஜஸ்வினியா குட் வேரி குட்’ என நினைத்து “டேட் நீங்க ஆசைப்பட்ட மாதிரி நான் நாளையில் இருந்தே நம்ம கம்பெனி பொறுப்புகளை ஏற்றுகிறேன்” என

“அட ரொம்ப சந்தோசம் பா…  பார்த்தியா அஸ்வினி நீ வந்த நேரம் எனக்கு ரெஸ்ட் கிடைச்சிடுச்சு” என

‘நான் என்ன பண்ணேன்’ என்று புரியாமல் அவரை பார்த்து மெலிதாக சிரிக்க, 

‘கரெக்ட் தான் தேஜ் வந்த நேரம் எனக்கு ஆபிஸ்க்கு வரனும்லாம் தோனுது’ என நினைத்து “அப்பா பட் ஒன் கன்டிசன்” என

“என்ன குண்டு டா வெச்சியிருக்க” என்று அதிர்ந்து கேட்க, 

“முதல் விசயம் நான் எடுக்கிற எந்த முடிவிலும் நீங்க தலையிட கூடாது… ஒன்ஸ் என் கிட்ட  கம்பெனி வந்து விட்டா உங்களுக்கும் கம்பெனிக்கும் நோ  ரிலேஷன்.  தென்  நெக்ஸ்ட் என்னோட பிஏ வை நான் தான் செலக்ட் பண்ணுவேன்” என

“முதல சொன்னது ஓகே டா ஆனா என்னோட பிஏ ஜெயராஜை என்ன பண்றது” என

“அதை நான் பார்த்துக்க்றேன்” என்று வந்த வேலையை முடித்து வெளியேறினான். 

தேஜூ “சர் நான் கிளம்பறேன்” என  “சரிமா மேனேஜர் கிட்ட சொல்லிடு நாளைக்கு சின்னதா ஒரு ஃபன்ஷன் வைக்க சொல்லு நானும் அவர் கிட்ட சொல்றேன்” என்றதும் இவள் கீழே வந்து சமையலறை சென்று, 

“அம்மா நான் கிளம்புறேன்” என  “என்னடா அதுக்குள்ள கிளம்பிட்ட சாப்பிட்டு போகலாம்ல” என்ற பூமகளிடம், 

“பரவாலை ஆண்ட்டி” என்று  கிளம்பி வாசல் வர, 

“தேஜ்” என்ற கம்பீர குரலில் திரும்பி பார்த்தால், 

‘ஐய்யோ இந்த சர் இப்ப எதுக்கு கூப்பிடுறாரு’ என்ற பீதியில் திரும்ப, 

“என்ன சார்” என்று நடுங்கும் குரலில் கேட்க, 

‘நம்ம என்ன பண்ணிட்டோம்னு இவ இப்படி பயப்படுறா’ என்று நினைத்து அவளிடம் “லுக் இன்னொரு முறை கவனத்தோடு இருக்கனும்ல ஸோ உன் கையில் இருக்கிற மோதிரத்தை தா” என்று அவனுடையது போல் கேட்க, 

அவன் சொன்னதை கேட்டு பதறி “சர் நான் தெரியாம பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க…. ஆனா இந்த மோதிரத்தை மட்டும் கேட்காதிங்க இது எனக்கு என் அப்பா கொடுத்து” என

“சாரி டாலி என் கிட்ட தெய்யாதனு சொன்னா தான் செய்யனும்னு தோனும் ஸோ நீயா கொடுத்திரு” என்று பிடிவாதமாக கேட்க, 

‘நான் என்ன பண்ணுவேன்… இதை அப்பா கிழட்டவே கூடாதுனு சின்ன வயசில் இருந்தே நூல் சுத்தி எல்லாம் போட்டு விட்டார் ஆனா இந்த சாருக்கு இது தான் வேண்டும்னு பிடிவாதம் பிடிச்சா  என்ன செய்ய’ என தனக்குள் பேச, 

“மேடம் கொஞ்சம் மையின்ட் வாய்ஸ்சை மீயுட் போட்டுட்டு மோதிரத்தை கொடுத்தா நான் கிளம்பிட்டே இருப்பேன்” என்று அவளை நெருங்கி வந்து கேட்க, 

மந்திரித்து விட்டது போல் தானாக கிழட்டி கொடுத்துவிட்டு வேகமாக காருக்குள் அமர்ந்து “அண்ணா வண்டியை எடுங்க சீக்கிரமா வேகமா போங்க” என்று தெறித்து ஓடியவளை கண்டு அந்த அழுத்தமான இதழில் சிறு புன்னகை. 

காரிருள் மேகம் நிலாவை மறைத்து அந்த காட்டு பங்களாவை இன்னும் பயங்கரமாக காட்ட,  இருளில் ஒருவன் கண்கள் சிவப்பாக “வந்துவிட்டாயா…. ஹா ஹா ஹா உன் சாவை தேடி தாயகம் வந்துவிட்டாய் பைரவ்…..  உனக்கு சொந்தமான இடத்தில் என் வெறி தீர உன்னை கொல்ல காத்திருக்கிறேன் பல ஆண்டு காலமாக……  இனிமேல் பார்ப்பாய் என் விளையாட்டை இந்த சண்டியின் விளையாட்டை…..  விதி முடிந்த இடத்திலே தொடங்கும் உன் மரண ஓலம்….. இந்த ஜென்மத்திலும் சேர மாட்டாய்… ஹா ஹா ஹா” என்று அந்த இடமே அதிர சிரித்தான். 

“அம்மா…. ” என்ற அலறலில் அடித்து பிடித்து கௌசல்யா எழுந்து பார்க்க, தூக்கத்தில் தேஜூ “விட மாட்டேன் நான் உள்ள வரை உன்னால் எதுவும் செய்ய முடியாது…. ஐயனே…. ” என்று கத்த

தன் படுக்கையில் இருந்த பைரவ் வேகமாக எழுந்து அமர்ந்தான். 

யார் இந்த சண்டி?  இந்த முறை விதி இவர்களுக்கு என்ன வைத்துள்ளது. 

விதிகள் தொடரும்

நிலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!