காதலின் விதியம்மா 7

KV -47eb358f

“என் கிட்ட நீ என்ன சொன்ன ஆனால் இப்ப என்ன நடந்து இருக்கு. அவனோட உயிரை எடுக்க சொன்னேன். நீ தானே என்னால தனியாவே செய்ய முடியும் எனக்கு யார் ஹெல்பும் வேண்டாம் இன்றைக்கு அவனோட சாவை பார்ப்ப, அப்படி இப்படி எல்லாம் சொன்ன ஆனா இப்ப என்ன நடந்துச்சு எல்லாமே வெறும்  வாய் வார்த்தை தான் செயலில் ஒன்றுமே இல்ல இனி நீ ஒன்றும் செய்ய வேண்டாம் நானே பார்த்துகிறேன் நீ வேடிக்கை மட்டும் பாரு” என்று சண்டி தன் தம்பியிடம் கத்தி விட்டு கோபமாக தனது அறைக்கு சென்று,

 

“விட மாட்டேன் இம்முறையும் வெற்றி எமக்கே…. நீ உன் பலத்தை நெருக்கும் முன்பே உன் விதியை முடித்து காட்டுகிறேன். உன்னை நோக்கி வருகிறேன் எனக்காக காத்திரு” என்று தன் கோபத்தை கட்டு படுத்தி கொண்டான்.

 

வர்மா ரெசிடன்சி, இரவின் இருளில் அந்த மாளிகையே வண்ண விளக்குகளால் அலங்கரித்து இருக்க, நாராயணனின் மனது மட்டும் வேதனையால் சூழ்ந்து இருந்தது.

 

‘மகமாயி….. நான் என்ன பாவம் பண்ணேன் எதுக்கு என் மகனுக்கு மட்டும் இது மாதிரி எல்லாம் நடக்கணும். எனக்கு தொழிலில் கூட யாருமே எதிரிங்க கிடையாது இருந்தும் யாரு இவனை அழிக்க நினைப்பா…. இன்றைக்கு மட்டும் அந்த அஸ்வினி பொண்ணு வரலைனா இந்நேரத்திற்கு என் பையனை  இப்ப அய்யோ நினைச்சு பார்க்க கூட முடியல’ என்று முகத்தில் கலக்கத்துடன் நின்று கொண்டு இருக்க அவரை 

 

பூமகள், “இங்க நின்னு என்ன பண்றீங்க உள்ள வாங்க எப்படி காற்று அடிக்குது உடம்புக்கு முடியாமல் போக போது” என்று பால்கனியில் நின்று கொண்டு இருந்த கணவனை உள்ளே அழைத்து வந்து “எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குங்க. இனி நம்ப பையன் நம்ப கூடவே இருக்க போறான். நினைக்கும் போதே அப்படியே பறக்கிற மாதிரி இருக்கு. நாளைக்கு நம்ப ஜோசியரை போய் பார்த்துவிட்டு வந்துருவோம் வேலையோட வேலையா அவனோட கல்யாணதையும் முடிச்சிட்டா நம்ப கடமை முடிஞ்ச மாதிரி” என்ற மனையாளிடம் தன் மனதில் இருப்பதை சொல்ல முடியாமல் தவிக்க,

 

பின் “இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம் இப்ப தான் அவன் கம்பெனி பொறுப்பை எடுத்து இருக்கான். அதுக்குள்ள கல்யாணம்னா அவன் சம்மதிக்க மாட்டான்” என்ற கணவரை தன்னால் முடிந்த அளவு முறைத்து கொண்டே,

 

“அவனே சம்மதிச்சாலும் நீங்க வேண்டாம் சொல்லிடுவீங்க போல. போங்க அவன் வயசு பசங்க எல்லாம்  மனைவி புள்ள குட்டின்னு இருக்க என் பையன் மட்டும் தனியா இருக்கிறதா நாளைக்கு நான் கண்டிப்பா போறேன் நீங்க வரத்தும் வராததும் உங்க இஷ்டம்” தன் வாதம் முடிந்தது என்று படுத்துக்கொள்ள வேறு வழி இல்லாமல் அவரும் கடவுளின் மேல் பாரத்தை போடு தூங்கி விட்டார்.

 

 

கௌசல்யா “இன்றைக்கு எப்படி போச்சுன்னு நானும் வந்ததில் இருந்து கேட்டுட்டே இருக்கேன் ஒரு பதிலும் சொல்லாமல் நீ பாட்டுக்கு அந்த லாப் டாப்பை டப்பு டப்பு னு தட்டிட்டு இருக்க எதுக்கு முகத்தை தூக்கி வெச்சிட்டு இருக்க சொன்னா தானே தெரியும்” என்று பல முறை கேட்ட பின், கடைசியாக தூங்கும் நேரம்    

 

“இன்றைக்கு நடந்ததை சொன்ன நீ நம்பவே மாட்ட. இப்ப புதுசா வந்து இருக்காரே எம்.டி. சார் அவரை யாரோ கொல்ல பார்க்கிறாங்க. நான் கண்டிப்பா சொல்றேன் கொல்லனும் னு நினைக்கிறவன் அங்க தான் ஒர்க் பன்றான் இல்லனா இவ்வளவு பாதுகாப்பை தாண்டி உள்ள வந்து உள்ள இருக்கிற நிலைமையை யாருக்கோ சொல்ல முடியாதே. அதை தான் எப்படி கண்டு பிடிக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன்” என்ற தேஜஸ்வினியை வியப்பாக பார்த்தாள்.

 

“என்ன ஆச்சு அதுக்கு அப்படி பார்க்கிற” என்றதும்  கௌசல்யா “நேற்று ஒருத்தர் கனவை பார்த்தே பயந்துட்டாங்க ஆனா இன்றைக்கு கொலைக்காரனை கண்டு பிடிக்க பிளானிங் பண்ணிட்டு இருக்காங்க” என்று சிரிக்க 

 

“கௌசி… நான் சீரியஸ்சா பேசிட்டு இருக்கேன் நீ கொஞ்சம் சிரிக்கிறதை நிறுத்திட்டு எதாவது ஐடியா குடு” என 

 

“ஏய் என்னடி எதோ புருஷனை காப்பாற்ற ஐடியா கேட்கிற மாதிரி கேக்குற. அவரை அவரே பார்த்துப்பார் உன்னோட அசட்டு தனமான தைரியத்தை விட்டு வெளியே வந்து நிதர்சனத்தை மட்டும் பாரு” என்ற கௌசல்யா விடம் “யாரோ ஒருத்தர் உயிர் தானேனு என்னால நினைக்க முடியலை. அது முடியவும் முடியாது. எனக்கு அவங்க உயிரை காப்பாற்றணம்னு தோணுது டி. இவ்வளவு நேரத்தில் எனக்கு ஒரு ஐடியா கூட கிடைக்கல” என்று பாவமாக சொல்ல 

 

“ஏதாவது கிடைக்கும் இப்ப வா தூங்கலாம் நேரம் ஆகுது” என்று இருவரும் தூங்க சென்றனர்.        

 

“செதுக்கி வைற்ற சிலை போல் இருக்கும் பெண்ணே நீர் யார்” என்ற கேள்விற்கு “நான் அடக்க முடியாத சமுத்திரத்தை அடக்கி ஆளும் சமுத்திர ராஜாவின் ஒரே புத்திரி” சிரித்து கொண்டே சொல்ல  

 

அதுவரை கவலையே இல்லாமல் நிம்மதியாக தூங்கி கொண்டு இருந்த பைரவ் எழுந்து அமர்ந்தான்.

 

‘என்ன இது எனக்கு எதுக்கு இது மாதிரி கனவு எல்லாம் வருது. ஆனா அந்த பொண்ணோட முகத்தை பார்க்காமல் மிஸ் பண்ணிட்டேன். அடுத்த முறை வந்த பார்த்துக்கலாம்” என்று விட்ட தூக்கத்தை தொடர்ந்தான். 

 

காலை, பூமகள் மற்றும் நாராயணன் இருவரும் காலை உணவு சாப்பிட தங்கள் மகன் பைரவ்விற்காக காத்திருக்க, அதே நேரம் மேல் இருந்து கீழே வந்தான் அவர்களின் தவ புதல்வன்.

 

“வாடா உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் வா சாப்பிடலாம்” என்று நாராயணன் கூப்பிட  “நான் வர நேரம் ஆச்சுன்னா சாப்பிட வேண்டியது தானே அப்பா எதுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க நேரத்துக்கு மாத்திரை சாப்பிட வேண்டாமா ” என்று கடிந்து கொள்ள,  

 

“இருக்கட்டும் டா உன் கூட சாப்பிடணும் போல இருந்தது அதான்” என்று மழுப்ப, “ஏதோ சொல்லி சமாளிக்க வேண்டியது சரி வாங்க சாப்பிடலாம்” என்று சாப்பிட செல்ல,

 

பூமகள் “தம்பி நாங்க இரண்டு பெரும் ஜோசியரை பார்க்க போறோம் நீயும் வரியா” என “இல்ல அம்மா எனக்கு வேலை இருக்கு நீங்களே போயிட்டு வாங்க. உலகம் எவ்வளவு வேகமா போகுது இப்ப போய் யாரவது ஜாதகம் ஜோசியம் எல்லாம் நம்புவாங்களா” என்று பேசி கொண்டே சாப்பிட்டு முடித்தவன்  “ஒகே நான் கிளம்புறேன்” என்று இருவரிடமும் விடை பெற்று சென்றான். 

 

வேகமாக கிளம்பி கொண்டு இருந்த தேஜுவை பார்த்து “என்ன அச்சுமா எதாவது ஐடியா கிடைச்சுதா” என 

 

“அதை ஏன் கேக்கிற ஒன்றுமே தோன்ற மாட்டேன்து நான் அந்த கொலைக்காரனை கண்டு பிடிக்கிறதுக்கு  பதிலா நான் பேசாமல் சார் கூடவே அவருக்கு ஷடோவா இருக்க போறேன்” என்று தீவிரமாக சொல்ல, 

 

“சரி தான் போ… வீர மங்கையே எனக்கு நேரம் ஆகுது ஈவினிங் பார்க்கலாம்” என்று அவள் கிளம்பிய சில நிமிடங்களில் அவளும் கிளம்பி சென்றாள்.

 

நேரம் ஆகி விட்ட காரணத்தில் வேகா வேகமாக உள்ளே நுழைய அவளையே அனைவரும் விசித்திரமாக பார்க்க,  தேஜு ‘என்ன…. எதுக்கு எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறாங்க டிரஸ் எதாவது கிழிஞ்சி போச்சா இல்லையே நல்லாத்தானே இருக்கு வேற எதுக்கு என்னை இப்படி பார்க்கிறாங்க’ என்று யோசித்து கொண்டே உள்ளே செல்ல அவள் டீம்மிடன் நேற்று அவள் முடித்த வேலையை கொடுக்க அவர்கள் சொன்ன விசயத்தை கேட்டு அதிர்ந்து நின்று விட்டாள்.

 

  

 

 பூமகளும் நாராயணனும் இருவரும் புகழ் பெற்ற ஜோசியர் முன் அமர்ந்து கொண்டு தங்கள் முகத்தையே மாற்றி மாற்றி பார்த்து கொள்ள, அவர்களின் எதிரே அந்த ஜோசியர் ஜாதகத்தை பார்த்து கொண்டு இருந்தார்.

 

சில பல நிமிடங்கள் கழித்து ஜாதகத்தை கீழே வைத்து விட்டு “உங்க மகனுக்கு முப்பது முடிய இன்னும் எவ்வளவு நாள் இருக்கு” என்ற கேள்விக்கு “இன்னும் சரியாய் ஆறு மாசம் இருக்கு” என 

 

ஜோசியர் “நல்லது மா கல்யாணத்தை பற்றி கேட்டா அது அந்த பரம்பொருளுக்கு தான் தெரியும். இப்ப வரை இந்த ஜாதக காரருக்கு கல்யாண யோகம் வரலை மா. அது தான் உண்மையும் கூட. இப்ப நீங்க கல்யாணம் பண்ணா கூட அது நடக்காது நடந்தாலும் அது நிலைக்காது. இன்னும் ஆறு மாதத்திற்கு அவருக்கு மரண கண்டம் இருக்கு எதையும் ஆறு மாதம் கழித்து பார்த்து கொள்ளுங்க மா” என 

 

“என்ன சாமி இப்படி சொல்றிங்க. இதுக்கு எதாவது பரிகாரம் இருக்க இல்ல வேற எதாவது பண்ணனும் னா சொல்லுங்க பண்ணலாம் ஒத்த பிள்ளைங்க” என்று கண்களில் வழியும் கண்ணீரை துடைத்து கொண்டே கேட்க,

 

“கவலை படாதீங்க மா நல்லதே நினைங்க நல்லதே நடக்கும். நீங்க உங்க முன்னோர்கள் பூஜையை ரொம்ப காலமா செய்யாமல் இருக்கீங்க அதை செய்தால் நல்லது நடக்கும்னு நம்புவோம். உங்க மகனோட ஜாதகம் ரொம்ப சிறப்பான ஜாதகம் யாராலும் வெல்ல முடியாத சிவனோட அம்சம். சரி பாதி இருந்தால் தான் சிவனும் முழுமை அடைவார்” என 

 

“ஒன்றும் புரியல சாமி” என “நேரமும் காலமும் கூடி வந்தால் அனைத்தும் புரியும். ஒன்றில் மட்டும்  கவனம் தேவை உன் மகனது உயிர் அந்திரத்தில் தொங்கி கொண்டு இருக்கு” என

 

இருவரும் வெளியே வர பூமகள் “என்னங்க இப்படி சொல்லிட்டாங்க” என 

 

“அவன் உயிருக்கு ஆபத்து இருப்பது எனக்கு முன்னே தெரியும் மா அதான் அவனை கிளம்ப சொன்னேன் ஆனா விதி மா. விதி யாரை விட்டது” என்று நாராயணன் கவலையுடன் கூற அதை கேட்டு அவரும் கவலை கொண்டார்   

 

விதிகள் தொடரும்

நிலா 

 

 

 

 

  

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!