காதலின் விதியம்மா 8

KV -980e441d

காதலின் விதியம்மா 8

நேற்று தான் முடித்த வேலையை தன் சக டீம் மேட்ஸ் இடம் காட்ட அவர்களோ அதனை கவனிக்காமல்  அவளிடம்,

 

“பெரிய ஆளு தான் நீங்க வந்த இரண்டே நாளில் பெரிய இடத்தை பிடிச்சிட்டீங்க. இந்த இடத்துக்காக நாங்க பல வருஷமா காத்திருக்கோம் ஆனா நீங்க எல்லாம் வேற லெவல்” என்ற ப்ரியாவை புரியாமல் பார்க்க,

 

“நீங்க என்ன சொல்றிங்க எனக்கு ஒன்றுமே புரியலை” என்றவளிடம்  சாய் “உன்னை பைரவ் சாரோட பி.ஏ. வா அப்பொய்ண்ட் பண்ணி இருக்காங்க” என

 

“எனது பி.ஏ.வா நானா” என்று பதற பிரியா “தெரியாத மாதிரி நடிக்காத. எவ்வளவு டேலேண்டான பழைய ஸ்டாப் எல்லாம் இருக்கும் போதும் மோகன் சார் பி.ஏ.க்கு இன்டெர்வியூ வைக்கலாம்னு கேட்டார் ஆனால் அதுக்கு பைரவ் சார் வேண்டாம்னு சொல்லிட்டு உன்னை தான் அவர் பி.ஏ. வா போடா சொல்லி இருக்கார். உனக்கு இது தெரியாதா” என

 

ஒரு பக்கம் சந்தோசத்தில் சிறக்கில்லாமல் வானத்தில் பறந்த மனதை அடக்கி “உண்மையாவே எனக்கு தெரியாது இப்ப நீங்க எல்லாம் சொல்லி தான் தெரியுது” என்றவளின் மனதில் ‘நம்மளே சார் கூட எப்படி 24*7 இருக்கிறதுனு யோசிச்சோம் அதுக்கு கடவுளே ஒரு வாய்ப்பு தந்து இருக்காரு ஆனா பைரவ் சாரை பார்த்தாலே பயம் தான் வருது பேச வரவே மாட்டேன்து என்ன செய்ய” என்று யோசிக்கும் போதே அங்கு வந்த ஜெயராஜ் பழைய பி.ஏ. “அஸ்வினி நான் உங்க  கூட இருந்து கொஞ்ச நாள் ஹெல்ப் பண்றதா பைரவ் தம்பி கிட்ட கேட்டேன். ஆனா அதுக்கு அவரே உங்களுக்கு சொல்லி தருவதா சொல்லிட்டார்” என

 

‘அய்யோ இது வேறயா’ என்று நொந்து கொண்டே “இட்ஸ் ஒகே சார் நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்” என்று நேராக பைரவ் அறைக்கு செல்ல

 

அங்கே ” ஜஸ்ட் ஸ்டாப் யுவர் நான் சென்ஸ். உங்க டீம்க்கு டெட் லைன் முடிஞ்சு போச்சுன்னு தெரியாத யாருமே வந்து ரிப்போர்ட் பண்ணல. நீங்க டீம் லீட் தானே உங்களுக்கும் பொறுப்பு இல்லை. இது தான் நான் வந்த முதல் நாள் அந்த காரணத்தால் மட்டும் தான் உங்களுக்கு எஸ்க்யூஸ் தரேன். டோன்ட் ரிபீட் இட் அகைன். நெஸ்ட் டைம் வார்ன் பண்ண மாட்டேன் டிஸ்மிஸ் தான்” என்று கோபத்தில் கத்தி கொண்டு இருக்க 

 

‘அச்சோ தப்பான டைமிங்ல வந்துட்டோம் போல இவர் சாதாரணமா பேசினாலே கோபத்தில் பேசற மாதிரி தான் இருக்கும் இப்ப மனுஷன் கோபத்தில் வேற இருக்கார் நம்ம போன கண்டிப்பா கைம்மா தான் பேசாம போயிடுவோம்’ என்று தனக்கு தானே பேசி ஒரு முடிவுக்கு வர,

 

அது வரை உள்ளே பாவமாக திட்டு வாங்கி கொண்டு இருந்த சீனு கதவை திறந்து கொண்டு வெளியேற, கடவு திறந்தலில் தேஜுவை பார்த்த பைரவ்,

 

“தேஜ் கம் இன்” என திரும்பி செல்ல நினைக்கும் போது கூப்பிட “அச்சோ பார்த்துட்டார் ஒண்ணுமே பண்ணாம திட்டு வாங்க போறோம்’ என்று கதறும் மனதை கணக்கில் கொள்ளாமல் பைரவ் முன் நின்றாள்.

 

 

“ஆர்டர் வந்துச்சா இனிமே நீ தான் என்னோட பி.ஏ. காட் இட்” என்று கணீர் குரலில் சொல்ல,

 

“நான்….. எனக்கு மேனேஜ்மென்ட் பற்றி எல்லாம் ஒன்றுமே தெரியாது நான் எப்படி…. என்ன செய்றது கூட தெரியாது நீங்க வேற யாரையாவது உங்க பி.ஏ.வா வெச்சுக்கோங்க” அவள் எடுத்த முடிவை பயத்தில் மறந்து உதடு நடுங்க சொன்னாள்.

 

அதுவரை இருந்த கோபம் மறைந்து சுவாரசியமாக அவளை பார்த்து கொண்டே “இங்க நீ பாஸ் இல்ல நான் தான் பாஸ் சோ நான் சொல்றதை தான் எல்லாரும் கேட்கணும். ஐ நீட் யு டு பீ மைன் பார்எவர். பிறக்கும் போதே எல்லாரும் எல்லாத்தையும் கத்துகிறது இல்ல. பீ ரெடி போர் யுவர் நியூ ஒர்க்” என 

 

‘இந்த மனுஷன் என்ன ரகம்னே தெரியலை புரிஞ்சிக்க சுத்தமா முடியலை இப்ப தான் சீனுவை அப்படி திட்டனார் இப்ப என்னனா எனக்கு தெரியத்தை குடுத்து சொல்லி தரா மாதிரியே பேசறாரு விட்டா கூடவே வீட்டுக்கும் வந்திருனு சொல்லுவார் போல” என்று சிந்திக்க,

 

“வரியா” என்று அவனது குரல் மிக அருகில் கேட்க அதிர்ந்து திரும்பி பார்க்க, அவனோ எந்த கேப்பில் வந்தானோ அவளை நெருங்கி கேட்க,

 

அருகில் பார்த்த காரணத்தால் எச்சில் விழுங்கி கொண்டு “எங்க சார்” என அவனோ இன்னும் அவளை நெருங்கி அவன் இதழ் அவளின் கன்னத்தில் உரசி அவளின் காதை அடைந்து “டைரக்டர் மீட்டிங் இருக்கு அதுக்கு தான் கூப்பிட்டேன் வேற எதுவும் இல்ல” என்று மீண்டும் அவள் கன்னத்தை இதழால் உரசி கொண்டே நகர்ந்தான்.

 

அவனின் இதழ் கன்னத்தில் பட்டதும் மின்சாரம் பாய்ந்தது போல உறைந்து நின்றவள் அப்படியே சிலை ஆகிவிட்டாள்.

 

பைரவ் “மேடம் மீட்டிங் க்கு லேட் ஆகுது கிளம்புவோமா” கதவின் அருகே நின்று கொண்டு அவளை கூப்பிட, என்ன நடந்தது என்று ஒன்றும் புரியாமல் முழித்து கொண்டே செல்லும் அவன் பின்னே சென்றாள். முன்னே சென்ற அவனது அழுத்த இதழிலோ சிறு புன்னகை பூத்தது.      

 

தஞ்சாவூர் தேஜஸ்வினி இல்லம்,

 

“அம்மா என் பிரெண்ட் ஆர்யாவை பற்றி தான் உனக்கே நல்ல தெரியுமே அவனை சின்ன வயசில் இருந்து பார்க்கிறேன் மா. நம்ம அச்சுவை கட்டி கொடுத்தா நல்ல பார்த்துப்பான் மா. அச்சுவும் நம்ப கண்ணு முன்னாடியே இருந்தா மாதிரியும் இருக்கும்” என்று தேவேஷ் அவனின் தாயிடமும் தந்தையிடமும் தன் நண்பனுக்காக பேச,

 

ஊர்வசி ஆர்யாவின் தாய் “எனக்கு பெண் பிள்ளை இல்லங்க உங்க மகளை கட்டி கொடுங்க மருமகளா இல்லங்க மகளா பார்த்துப்பேன். அதே மாதிரி என் மகனும் அவளை ராணி மாதிரி பார்த்துப்பான்” என்றார்.

 

ஊர்வசி சில காலங்கள் முன்பு தான் கணவனை இழந்தார். இரண்டு மகன். மூத்தவன் தான் ஆர்யா. பொறுப்பானவன் பல தொழில் அப்பா அவனுக்காக வைத்தாலும் நண்பனுக்காக அவன் தொழிலிலும் ஒரு பங்கு இவனுடையது. சிறியவன் சரண்,  சிறுவயதில் இருந்தே ஹாஸ்டலில் தான் படிக்கிறான். தற்பொழுது தன் திறமையை வளர்த்துக்குள்ள தனியாக வேலை பார்க்கிறான்.

 

ரகுபதி “நீங்களே எங்க வீடு தேடி வந்து பொண்ணு கேட்கறீங்க சந்தோஷமா இருக்கு மா எனக்கு சம்மதம் தான் ஆனா பாப்பா இப்ப தான் வேலைக்கு போற அதுக்குள்ள கல்யாணம்னா சம்மதிப்பாளான்னு தான் தெரியலை” என 

 

தேவேஷ் “அப்பா என் தங்கச்சி என்னோட பேச்சை கண்டிப்பா கேட்பாள். நீங்க அதை எல்லாம் நினைக்காமல் மேற்கொண்டு நடக்க வேண்டியதை பாருங்க” என 

 

ஊர்வசி “அப்ப என்னங்க அஸ்வினி ஜாதகத்தை கொடுங்க இரண்டு பேருக்கும் பொருத்தம் பார்த்து மேற்கொண்டு வேலையை பார்க்கலாம்” என

 

பொன்னி “தப்பா நினைக்காதீங்க நாங்க அஸ்ஹவினிக்கு ஜாதகம் எழுதல. இப்ப வரைக்கும் ஜாதகத்துக்கு அவசியம் வந்தது இல்ல அதான் ஜாதகமே எழுதல” என்று மெதுவாக சொல்ல,

 

“அட அதுக்கு என்னங்க. சிலர் அதை நம்புறாங்க சிலர் அதை நம்பறது இல்ல. ஆனா இரண்டு பேருமே நல்லா தானே இருக்காங்க நம்ம அவங்களுக்கு பெயர் பொருத்தம் பார்க்கலாம்” என 

 

“நீங்க சொல்றதும் சரி தாங்க. பொருத்தம் பார்த்த பிறகு நான் இதை அச்சு கிட்ட சொல்லலாம். எப்ப பொருத்தம் பார்க்கலாம்” என 

 

“நல்ல விசயத்தை எதுக்கு தள்ளி போட்டுக்கிட்டு இப்பவே பார்க்க போகலாம் நாங்க எப்பவும் பார்க்கிற சாஸ்த்ரி கிட்டவே போயிடலாம்” என்று விட்டு தேவேஷை பார்த்து,

 

“உன் நண்பனை இப்பவாச்சு வர சொல்லு டா எப்ப பார்த்தாலும் வேலை வேலைனு. அவன் கிட்ட எங்க நடந்ததை சொல்லு” என்று விட்டு மற்ற மூவரும் சாஸ்த்ரியை பார்க்க கிளம்பினார்கள்.

 

சில நேரங்கள் கழித்து பக்கத்தில்  இருந்த கோவிலுக்கு சென்று அங்கு இருந்த அம்மனை வணங்கி விட்டு, பிரகாரத்தில் சுற்ற அங்கே இருந்த ஒரு சித்தர்,

 

“மனிதன் பல கணக்கு போடுவான் ஆனால் வெல்வது இறைவனின் கணக்கே. சிவனின் பிரசாதம் கிடைச்சிருக்கு உனக்கு. ஆனால் கிடைச்ச பொக்கிஷத்தை இழக்க போற. சொந்தம் கொண்டாட வராங்க. மாற்ற முடியாத விதியை மாற்ற, இழக்க போவது பல. மனசை கல்லாகிக்கோ” என்று பொன்னியை பார்த்து சொல்ல,

 

அவர் சொன்னது பாதி புரிந்தும் பாதிக்கு மேல் புரியாமலும் முழித்து பார்த்தனர்.

 

அவர் சொன்னது எதை பற்றி தெரிந்தால் கமெண்ட் ல சொல்லுங்க.

 

விதிகள் தொடரும்…….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!