காதலின் விதியம்மா 5

KV-60589a7c

மயிலாப்பூரில் புகழ்பெற்ற கபாலீஸ்வரர் ஆலயம் காலை பொழுதின்  அழகில் அனைவரும் தங்களை மறந்து இருக்க ஒருவர் முகத்தில் மட்டும் பயம் தாண்டவமாடியது. அவளின் முகத்தில் தோன்றிய உணர்வை  புரியாமல் பார்த்து கொண்டு இருந்தால் கௌசல்யா. 

“ஓய் அச்சுமா  இவ்வளவு டென்சன்…. எதுக்கு நேற்று ராத்திரி அப்படி கத்தின எதேதோ உளறின” என்று கௌசல்யா கேட்க, 

தேஜஸ்வினி “உனக்கு என்னோட பயம் சொன்னா புரியாது டி எதோ தப்பா நடக்கிற மாதிரி….. எனக்கு இந்த கனவு வரும் போது கண்டிப்பா எதோ நடக்கும்” என

“எப்படி என்ன கனவு டி” என  “எனக்கு சரியா நியாபகம் இல்லை. ஆனா என்னை ஒருத்தர் கத்தியால் குத்திட்டு என் பக்கத்தில் இருந்த வேற யாரையோ அதே கத்தியால் குத்தி்ட்டாங்க. எனக்கு குத்தனது யாரும்னு தெரியாது பக்கத்தில் இருந்தது யாருன்னு தெரியாது முகம் எதுமே சரியா தெரியலை” என

“கவலைப்படாத அச்சு… இந்த முறை பாரு எதுமே தப்பா நடக்காது. நீயே என் கிட்ட சொல்லுவ இதுக்கெல்லாம் பயப்படக்கூடாது.. பீ பிரேவ்” என்று இருவரும் பேசிக்கொண்டே செல்ல தேவேஷ் தேஜுவிற்கு கால் செய்து,

“தங்கக்கட்டி என்ன செய்து” என்று தூங்கி எழுந்தவுடன் பேசுவது தெரிய,

“அண்ணா நான் கோவில் வந்து இருக்கேன்” என்ற குரலில் சிறு நடுக்கம் தெரிந்தது.  “என்னடா தங்கம் இவ்வளவு சீக்கிரம் கோவில் போய் இருக்க எதாவது பிரச்சனையா…. இல்ல வேற எதாவது.. ம்ம்… கனவு எதாவது வந்துச்சா” என்று பதட்டமாக கேட்க,

பல கிலோமீட்டர் தொலையில் இருந்தாலும் தன் குரல் கொண்டே தன் நிலையை சரியாக சொல்லும் தமையனை எண்ணி மனம் பூரித்தது போனது. “ஐயோ… அப்படி எதுவும் இல்லனா நான் சும்மா என் ரூம்மட் கூட தான் வந்து இருக்கேன். வேலைக்கு சீக்கிரம் போகணும்ல அதான் காலையே வந்துட்டோம் வேற எதுவும் இல்லனா நீ ஏன் எதுக்கு எடுத்தாலும் பயப்பிடுற நான் பார்த்துகிறேன்” என்று தமையனுக்கு சொல்லுவது போல் தனக்கே சொல்லி கொண்டாள்.

“சரி டா தங்கம் என் செல்லக்குட்டி பெரிய பொண்ணு ஆகிட்டா தான். சரி பார்த்து இருந்துக்கோ நான் போன் வைக்கிறேன். நைட் கால் பண்ணு. பாய் டா” என்று போனை வைத்து விட்டு திரும்ப, 

கௌசல்யா “எதுக்கு டி அவங்க கிட்ட பொய் சொல்ற” என்கிறதுக்கு “அண்ணா பதறிடுவாங்க டி” என்று கூறி கொண்டே பிரகாரத்தை சுற்ற யாரோ தன்னை கூப்பிடுவது போல் இருக்க திரும்பினால் தேஜூ. 

பூமகள், பைரவின் தாய் இவர்களை நோக்கி வந்தார். “அடடே…. உன்னை இங்க பார்ப்பேன் னு நினைக்கவே இல்லை மா… என்ன இவ்வளவு காலையே கோவில் வந்திருக்க” என

“அது சும்மா தான் மா….  வீட்டில் இருக்கும் போதே பழக்கம் காலையே கோவில் வரது… நீங்களும் இவ்வளவு சீக்கிரமா தான் வந்திருக்கீங்க” என்று சிரித்து கொண்டே சொல்ல, 

“கரெக்ட் தான் மா..,. தம்பி இன்றையில் இருந்து கம்பெனி பொறுப்பை எடுத்துக் போறான்” என தெரிந்த விசயம் தான் இருந்தாலும் பதறியது அவள் மனம். 

“அவங்க கையில அடிப்பட்டி இருக்கு. அது சரியானதும் வரலாம்ல” என்று எந்த தைரியத்தில் அவள் இதை சொன்னாலோ சொன்ன அவளுக்கே தெரியவில்லை. சொல்லிவிட்டு முழிக்க, 

“நீ சொல்றது வாஸ்தவம் தான் மா இவ்வளவு வருசமா கூப்பிடு வராதவன் இப்ப அவனே வந்து நான் பொறுப்பை எற்றுக்கிறேன்னு சொல்லும் எனக்கு சந்தோசமா இருக்கு மா… நீ அங்க தானே இருப்ப கொஞ்சம் அவனை பார்த்துக்கோமா” என

‘என்ன நானா’  என்று மனது அலறியதை கட்டுப்படுத்திக் கொண்டு புன்னகைத்தாள்.  பின், “சரி மா நான் கிளம்புறேன் ஆபீஸ்ல பார்க்கலாம்” என்று கிளம்ப,

“ரொம்ப நல்லா பேசறாங்கல பணத்தோட திமிரு அவங்க பேச்சில் துளி கூட தெரியலை” என்ற  கௌசல்யா பார்த்து “ஆமா டி சரி வா நேரத்துக்கு நான் ஆபீஸ் போகணும்” என்று இருவரும் கோவிலை விட்டு கிளம்பினார்.

தங்கள் புதிய முதலாளியை வரவேற்க பல ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டு இருந்தது. பார்க்கிங் ஏரியாவே அலங்காரத்தில் மிக அழகாக இருந்தது. மேடை அதை சுற்றி பூக்கள் சூழ்ந்து இருக்க அதையே மெய் மறந்து பார்த்து கொண்டே ஒரு ஓரத்தில் செல்ல,

யாரோ ஒருவர் “சார் நீங்க சொன்னா மாதிரியே எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன். அவனோட சாவை இன்றைக்கு நீங்க கண்டிப்பா பார்ப்பீங்க. நான் செட் பண்ண ஆளு எதிர்ல இருக்கிற பில்டிங்ல இருக்கான் அவ பொறுப்பை அதுக்கின அடுத்த நிமிஷம் அவன் உலகத்தில இருக்க மாட்டான். நீங்க அவனோட சாவை சந்தோசமா எதிர் நோக்கி இருங்க” என்றான். 

அவன் முதலில் பேசியதை கேட்டு பயத்தில் நடுங்கியவள் அவன் கடைசியாக யாரை பற்றி பேசுகிறான் என்பதை அறிந்து கோபத்தில் கொதித்தாள்.

பைரவை இப்படி இவள் தனியாக காப்பாற்ற போகிறாள்??? 

விதிகள் தொடரும்…….