காதலில் கூத்து கட்டு 10(2)

images (23)-b37ba280

காதலில் கூத்து கட்டு 10(2)

காதலில் கூத்து கட்டு 10(2)

வேலைக்களுக்கு குறுக்கே கைப்பேசி ஒலிக்க, வேண்டா வெறுப்பாக தான் எடுத்து காதில் ஒற்றினார் திவாகரன்.

 

“எஸ் திவாகர் ஸ்பீக்கிங்”

 

“நான் இளங்கோவன் பேசறேன், மிஸ்டர் திவாகர்” 

 

மறுமுனை பதிலை யோசிக்க கூட தோன்றாமல், “எந்த இளங்கோவன்?” என்று கேட்டிருந்தார். 

 

திவாகர், முன்னணி தணிக்கையாளர். (leading auditor) பல நிறுவனங்கள், அமைப்புகளின் கணக்கு வழக்கு தணிக்கையில்  எப்போதும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிப்பவர். இப்போதும் பெரு நிறுவனம் ஒன்றின் ஆடிட்டிங் வேலைகளில் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருந்தது அவரின் அலுவலகம். 

 

அவரின் கேள்வி இளங்கோவனை சீண்டிவிட, “உங்க சம்பந்தி, உங்க பொண்ணோட மாமனார், இப்பவாவது ஞாபகம் வந்ததா?” இளங்கோ அழுத்திய பற்களுக்கிடையே கேட்க,

 

“ஓ யா, சாரி டக்குனு ஞாபகம் வரல, சொல்லுங்க என்ன விசயம்?” நேரடியாக பேச்சை தொடர்ந்தார்.

 

“என்ன, இவ்வளோ ஈஸியா என்ன விசயம்னு கேக்குறீங்க? உங்களுக்கு தெரியாதா? நம்ம பசங்க திசைக்கொன்னா நிக்கிறாங்க, அவங்களை அப்படியே விட்டுட முடியுமா?” இளங்கோ படபடவென ஆதங்கமாக கேள்விகளை அடுக்கினார்.

 

திவாகர் தன் இடத்திலிருந்து எழுந்து தனியே வந்து நின்று பேசினார். “நம்ம கேட்டா அவங்க சேர்ந்தாங்க? இல்ல, நம்ம கேட்டு அவங்க பிரிஞ்சாங்களா? இதுல நாம செய்ய வேண்டியது என்ன இருக்கு?” அவரின் பதில் கேள்வியும் ஆதங்கமாக வந்தது.

 

“கொஞ்சமாவது பொறுப்போட பேசுங்க, என் பேச்ச மீறிட்டாங்கனு எனக்கும் அவங்க மேல வருத்தம் இருக்கு தான். அதுக்காக அவங்க எப்படியும் போகட்டும்னு விட மனசு வரல, இப்ப நம்ம வீம்பை விட பசங்க வாழ்க்கை தான் முக்கியம்” இளங்கோ பேச பேச,

 

“அவங்க கல்யாண முடிவெடுத்தப்பவும் இதை தான் சொன்னீங்க இளங்கோ. இப்பவும் சேம் டையலாக் ச்ச, எனக்கு வெறுத்து போச்சு. இப்போ என்னை என்ன செய்ய சொல்றீங்க?”

 

“நாம ரெண்டு குடும்பமும் சேர்ந்து உக்கார்ந்து பேசலாம். அவங்க பிரச்சனை என்னனு கேட்டு சமாதானம் சொல்லி சேர்த்து வைக்கலாம்”

 

“ப்ச் நம்ம சொல் பேச்சு கேக்கற வகையிலயா பசங்களை வளர்த்து வச்சிருக்கோம்?” திவாகர் கசந்து கேட்டார்.

 

“நாம சொல்ற மாதிரி சொன்னா கேட்டுக்குவாங்க, அவங்களுக்கு நடுவே நீ, நான்னு ஈகோ தான் பிரச்சனை போல. சரியான வழிக்காட்டுதல் இல்லாம தான் இப்படி முட்டிட்டு நிக்கிறாங்க, நாம பொறுமையா புரிய வைப்போம். அது நம்ம கடமையும் கூட” இளங்கோவன் எடுத்துச் சொல்ல,

 

“சரி பேசி பார்க்கலாம், பட் வீக் டேஸ்ல எனக்கு டைம் இல்ல, வீக் என்ட் மீட்டிங் வச்சுக்கலாம் ஓகே?” திவாகரன் வழக்கமான அரை மனதுடன் சம்மதம் சொன்னார்.

 

“ஓகே, சசி, திவ்யாவுக்கும் ஆஃபிஸ் இருக்குமில்ல, சோ வீக் என்ட் மீட் பண்ணலாம். இன்னும் மூனு நாள் தான இருக்கு” இளங்கோவனும் யோசித்து சரியென்று சொன்னதும், “ம்ம்” என்ற தலையசைப்புடன் இணைப்பை துண்டித்த திவாகர் நினைவில் வசீகரனின் முகம் தான் வந்து போனது. 

 

எரிச்சலுடன் தலையை குலுக்கிவிட்டு தன் இருக்கைக்கு வந்தமர்ந்தார். இருந்தும் தன் மகள் திருமணம் தன் விருப்பமின்றி நடந்தேறிய நிகழ்வு நினைவில் வந்து வந்து போக அவரின் கவனமும் சிதறி சிதறி மீண்டது.

 

***

 

வசீகரனின் பிறந்தநாள் குடும்பத்தினர், நண்பர்களுடன் கொண்டாட்டமாக நடந்தேறி இருந்தது. கேக் வெட்டி ஒவ்வொருவருக்காக ஊட்டி, முகத்தில் பூசி என அட்டகாசம் செய்து விருந்து நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.

 

அதுவரை பொறுத்திருந்த தேவா, வசீகரனின் கையை சுரண்டினான். “என்ன டா” கேட்க,

 

“கேக்கும் சோறும் போதும்டா, நம்ம பார்ட்டி எப்போ டா, நம்ம ஃபிரண்ட்ஸ் வேற வெய்ட் பண்றாங்கடா” என்றான்.

 

அவனின் கேள்வியை சசிதரன் முகமும் தாங்கி நிற்க, அதை உணர்ந்தவன், “ப்பா, சாப்பிட்டு நீங்க வீட்டுக்கு போயிடுவீங்க இல்ல, நான் ஃப்ரண்ஸோட இன்னும் கொஞ்சம் நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வந்திடுவேன்” என்று கேட்டான்.

 

“என்னடா தண்ணீ பார்ட்டியா? அதுவும் உனக்காக வந்திருக்காக என்னை விட்டுட்டு” என்று மகனை முறைத்தார் இளங்கோவன்.

 

“நீங்களும் தாராளமா ஜாய்ன் பண்ணிக்கலாம், பட் அதுக்கு மிஸஸ் இளங்கோவன் பர்மிஷன் வாங்கனுமே, நான் வேணா வாங்கி தரவா?” வசீகரன் அவன் அம்மா புறம் திரும்பவும்,

 

“நீ ஆணியே புடுங்க வேணாம் போடா” என்று இளங்கோவன் முறைத்து வைக்க, சிரிப்புடன் அம்மா, பாட்டியிடம் மழுப்பி சொல்லி விட்டு, வசீகரன், சசிதரன், தேவா கிளம்பி விட்டனர்.

 

முழு ஏற்பாட்டோடு அவன் நண்பர்கள் காத்திருக்க, அவர்களுக்கான தனி கொண்டாட்டம் மது கோப்பைகளோடு ஆரம்பமானது.

 

அதேவேளையில்,

 

வேறொரு இடத்தில், 

 

துக்கமும் துயரமும் ஏமாற்றமும் தொண்டை அடைக்க, மது போதையில் தன்னை மறக்க முயன்று இருந்தான் அமுதன்.

 

“எப்படி டா, கண்டிப்பா அந்த ஃபிகரு உனக்கு மடிஞ்சுடும்னு சொன்னியே மச்சீ. கடைசியில இத்தன நாள் அவ பின்னாடி சுத்தனதெல்லாம் வீணா போச்சே மச்சீ” அவனுடைய நண்பனும் துக்கத்தில் தாராளமாக பங்கு கொண்டான்.

 

“ஒரு நாளு ரெண்டு நாளு இல்ல மச்சீ, ஒன்ற மாசம், அவ ஃபேமிலி பத்தி அலைஞ்சு கண்டுபிடிச்சி, அவள ஃபாலோ பண்ணி, பர்ஃபார்மன்ஸ் பண்ணி, ப்ரோபோஸ் பண்ணி… எல்லாம் போச்சு மச்சீ” ஒவென்று ஒப்பாரி வைத்தான் அமுதன்.

 

“அவ வெல் செட்டில் ஃபேமிலி மச்சி, பங்களா, காரு, ஆஃபிஸ்னு, ரெண்டும் பொண்ணுங்க, அதுலயும் இந்த டன்டனக்கா இருக்காளே சரியான அரை லூசு, அசால்டா அமுக்கி, மாமனார் வீட்டு வாரிசாகலாம்னு என்னமா பிளான் பண்ணேன் தெரியுமா, எல்லாம் போச்சு” தன் எதிர்கால திட்டம் பாழானதில் எரிச்சலாக தரையை குத்திக் கொண்டான்.

 

“நீ உஷார் ஆச்சே மச்சி, எப்படி டா சொதப்புச்சு” மற்றொருவன் விசாரிக்க,

 

“அவனால தான் டா, அவன் ஒருத்தனால தான் டா, அவ என் கைய விட்டு போனா, குறுக்க வந்து ஆட்டய முழுசா கலைச்சிட்டு போயிட்டான்”

 

“விடு மச்சீ, வேற ஃபிகர் பார்க்கலாம் உனக்கு விழாமயா போகும்?” மற்றவன் ஏத்தி விட,

 

“லூசு தனமா உளறாத, இப்படி ஒரு பொண்ண தேடி பிடிக்கிறது அவ்வளோ ஈஸி இல்ல, வத்தலு சொத்தலு ஃபிகர மடக்கினா தம்முக்கு கூட பெறாது. சுத்த வேஸ்ட்” அமுதன் எரிந்து விழுந்தான்.

 

“அப்ப அந்த பொண்ண தூக்கிடலாம் மச்சீ, நம்ம பசங்க சுலுவா முடிச்சிடுவாங்க”

 

“டேய், அவள தூக்கி வச்சுகிட்டு நான் என்னடா பண்றது. அம்மஞ்சல்லி பெறாது. அவள என்மேல பைத்தியமாக்க வச்சு, எப்படியோ அவ அப்பங்கிட்ட சம்மதம் வாங்கி, மாப்பிளாகி செட்டில் ஆகறது தான் பிளானே”

 

“அதான் ஊத்திக்கிச்சே மச்சீ விட்டு தள்ளு”

 

“வேற வழி, ஆனா, என்மேல கைய வச்சுட்டான்டா அவன், அந்த வளர்ந்து கெட்டவனை ஏதாவது செய்யனும் மச்சீ, செஞ்சுடுவேன்” 

 

வசீகரனை கவிழ்க்க, பரபரவென திட்டம் தீட்டியது அமுதனின் குறுக்கு மூளை.

 

***

 

காதல் கூத்து கட்டும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!