காதலில் கூத்து கட்டு 23(1)(2)

காதலில் கூத்து கட்டு 23(1)

 

ரம்யாவின் தாமதமான வருகைகள் தொடர்ந்தன. அதற்கும் மேலாக இப்போதெல்லாம் அவளின் சோர்ந்த முகமும் தளர்ந்த நடையும் வசீகரனை கவலைக் கொள்ள செய்வதாய்.

 

வசி அவளிடம் கேட்க, ரமி பெரிதாக காரணம் எதையும் சொல்லவில்லை. மழுப்பி விட்டாள். 

 

‘பழக்கமற்று தொடர் வீட்டு வேலைகள் செய்வதால் தான் இப்படி சோர்ந்து போகிறாளோ?’ படிக்க விரித்து வைத்த புத்தகத்தை பிடித்தபடியே உறங்கி விழுபவளை யோசனையாக பார்த்தான்.

 

அவளிடமிருந்த புத்தகத்தை வாங்கி வைத்தவன், “தூக்கம் வந்தா முதல்ல தூங்குடி, காலையில சீக்கிரம் எழுந்து படிச்சிக்கலாம்” என்றதும், ரம்யா சரியென்று தலையசைத்து படுத்ததும் உறங்கியும் போனாள்.

 

ரம்யாவின் மாதாந்திர மருத்துவ பரிசோதனையில் அவள் நலமாக இருப்பதாக மருத்துவர் கூறிய பின் தான் வசீகரனுக்கு நிம்மதியானது.

 

வசீகரனாலும் முன்பை போல, அதிக நேரம் வீட்டில் இருக்க இயலவில்லை. இரவும் பகலும் தொழில் அவனை இழுத்துக் கொண்டது. தன் துறையில் நிலையாக காலூன்ற முழு முயற்சியில் இருந்தான் அவன். 

 

இப்படியே சில பல வாரங்கள் கடக்க, ரம்யாவின் குட்டு உடைப்படும் நாளும் வந்தது.

 

வாடிக்கையாளர் சந்திப்பிற்காக வெளியே வந்திருந்தான் வசீகரன். அவனை அதிகம் காக்க வைக்காமல், “ஹாய் வசி, ஐ’ம் திலோத்தமா, நைஸ் டூ மீட் யூ” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவளை பார்த்து அவன் புருவங்கள் உயர்ந்தன.

 

“ஹாய் திலோ, ஆதரவற்ற பெண்களுக்கான இல்லம் நடத்தறதா சொன்னீங்கல்ல, ஓ மை காட் நான் உங்களை இவ்வளோ யங்கா எதிர்பார்க்கல” வசீகரன் வியந்த இளநகையோடு கைக்குலுக்க,  இருவரும் பேசியபடியே காஃபி ஷாப் உள்ளே வந்தனர்.

 

“எங்க பேரண்ட்ஸ் தான் இல்லம் நடத்திட்டு வராங்க, நானும் அங்க என் பார்ட் கொடுக்குறேன்” என்று சொன்ன திலோத்தமா ஒல்லியாக, சற்றே உயரமாய், ஒளிரும் முகத்துடன் மரியாதையான தோற்றத்துடன் இருந்தாள்.

 

“ஏய் ஏய் இந்த லவ் பேர்ட்ஸ் செமயா இருக்கு பாரேன் ரமி” உள்ளிருந்த ரித்திகாவின் கிசுகிசுப்பில் ரம்யா திரும்பி எட்டி பார்க்க, வசீகரன், ஒரு பெண்ணுடன் சிரித்து பேசியபடி உள்ளே வருவது தெரிந்தது.

 

‘அய்யோ இவனா போச்சு போ, இன்னைக்கு மாட்டினே’ என்று அவளின் ஒரு மனம் பதற, 

 

‘எங்க இருந்து தான் இந்த ஃபிகரை எல்லாம் கரேக்ட் பண்றானோ தெரியல, மச்சக்காரன் தான்’ ரம்யாவின் மறுமனம் கௌன்டர் வேறு விட்டது.

 

ரித்திகா, “அச்சோ அதுவும் அவன் லாங் ஹேரை கோதிவிட்டு சிரிக்கும் போது எப்படி இருக்கான் பாரேன்” வசீகரனிடம் பார்வையை விலக்காமல் ரசித்து அவள் சொல்ல, ரம்யாவும் அவனை தான்  கவனித்து கொண்டு இருந்தாள்.

 

திருமணம் முடிந்த இந்த மூன்று மாதங்களில் அவன் கேசம் நன்றாக வளர்ந்து வந்திருக்க, முகத்தில் வழியும் கேசத்தை விரல்களால் கோதிவிட்டபடி, அவன் அக்மார்க் புன்னகை வழிய, தலையசைத்து பேசிய சினேக பாவனையில் ஈர்த்துக் கொண்டிருந்தான்.

 

‘என்னவோ இருக்குடா உன்கிட்ட! எல்லாரையும் பேசி, சிரிச்சே கவுத்தறடா! நானும் அப்படித்தான் உன்கிட்ட சிக்கிட்டேன் போலடா மாமு’ அவனை தனக்குள் செல்லமாக வைது கொண்ட ரம்யா, 

 

ரித்திகாவிடம் திரும்பி, “ஆமா பனங்கொட்ட தலை மாதிரியே இருக்கான் நீ வேற போவியா” சலித்து சொல்லி வைத்தாள்.

 

“ஐய உனக்கு டேஸ்டே இல்ல” என்று முகம் சுளித்து கொண்ட ரித்திகா, “அந்த டேபிள் உனக்கு தான் போ போ” ரம்யாவை தள்ளி விட்டு நகர்ந்து கொண்டாள்.

 

சற்று தயங்கி, ஆழ மூச்செடுத்து கொண்ட ரம்யா அவர்கள் மேஜை அருகே வந்து நின்று, “வாட் யூ வான்ட் சர், மேம்” முகத்தில் ஒட்டி வைத்த விரிந்த புன்னகையுடன் கேட்டாள்.

 

ரம்யாவின் குரலில் நிமிர்ந்த வசீகரன், அவளை அங்கே, அதுவும் வெயிட்டர் உடையில் பார்த்து அவன் முகம் திகைத்து பின் ஆத்திரத்தில் இறுகியது.

 

“ட்டு கேப்பச்சீனோ ப்ளீஸ்” திலோ ஆர்டர் சொல்ல,

 

“ஷுர் மேம்” என்ற ரம்யா, அவன் கடுகடுத்த முகத்தை கண்டுக்கொள்ளாதது போல அதே விரிந்த சிரிப்புடன் நகர்ந்து கொண்டாள்.

 

‘இவ இங்க என்ன பண்றா? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல? பார்ட் டைம் ஜாப் பார்க்கற அளவுக்கா அவளை நான் வச்சிருக்கேன்’ இவனுக்குள் கொதிநிலை ஏறியது.

 

“எங்க இல்லத்து பெண்களுக்கு கைவினை பொருட்கள், பெயிட்டிங், ஸ்டிச்சிங் ல எல்லாம் பயிற்சி கொடுத்து, அதை ஊக்கப்படுத்திட்டு வரோம். அவங்க தயாரிக்கற பொருட்களை தனியா கலைக்கூடம் போல வச்சு விற்பனை செய்றோம், இப்பெல்லாம் முன்ன மாதிரி பொருட்கள் விற்பனை ஆகறதில்ல, இத்தனைக்கும் நாங்க தயாரிக்கிற பொருள் எல்லாமே பெஸ்ட் குவாலிட்டி, பார்க்கவும் அவ்வளவு அழகா இருக்கும்”  

 

“ஓகே குட்” வசீகரன் கவனம் ரம்யாவின் மீதிருக்க, திலோவின் பேச்சில் ஒன்றாமல் ஏதோ பதில் சொல்லி வைத்தான்.

 

“எங்க கலைக்கூடம் பத்தி விளம்பரப்படுத்தலாம்னு எனக்கு ஒரு ஐடியா, அப்பா, அம்மா அதெல்லாம் சரிவராதுனு சொல்றாங்க வசி, பட் எனக்கு நம்பிக்கை இருக்கு, உங்களால இந்த ஆட் பண்ண முடியுமா?” திலோத்தமா கேட்கவும் தன் கவனத்தை பேச்சில் திருப்பினான்.

 

“கண்டிப்பா பண்ணிடலாம். நல்ல விசயங்களை மக்களிடம் சேர்ப்பது தானே எங்க தொழில். உங்களுக்காக ஹாஃப் பட்ஜட்ல செஞ்சு தரோம், ஆட் எப்படி வரனும்னு எதிர்பார்க்கிறீங்க?” 

 

“பட்ஜெட் பத்தி கவலையில்ல, எல்லாரையும் திரும்பி பார்க்கற அளவுக்கு இருக்கனும் அவ்வளவு தான்” இருவரும் பேசி கொண்டு இருக்கும்போது ரம்யா அவர்களுக்கான ஆர்டரை பரிமாறினாள். 

 

“வேறெதுவும் ஆர்டர் மேம்” அவள் கேட்டு நிற்க,  

 

“போதும்” என்ற திலோதமா ஏதோ யோசனை வர, ரம்யாவை திரும்பி பார்த்து கவனித்தாள். 

 

“ரொம்ப சின்ன பொண்ணா தெரியுதில்ல வசி, காலேஜ் ஸ்டூடன்ட் போல” அவள் ரம்யாவை பற்றி பேச இவன் இறுகிய முகத்துடன் தலையசைத்துக் கொண்டான்.

 

‘ஏய் வீட்டுக்கு வாடி உனக்கு இருக்கு” தூர நின்றவளை முடிந்த மட்டும் முறைத்து வைத்தான்.

 

திலோ தாங்கள் எதிர்பார்க்கும் விளம்பரங்கள் பற்றிய விருப்பத்தையும் தேவைகளையும் விளக்க, வசீகரன் தன் கருத்துக்களையும் சாதக, பாதகங்களையும் பகிர்ந்து கொண்டான்.

 

அவர்களை பார்ப்பவருக்கு அது நிச்சயம் தொழில்முறை பேச்சு போல தோன்ற கூட இல்லை. வெகு சினேகமான சந்திப்பு போலவே தெரிந்தது.

 

“ஹே இன்னும் இந்த லவ் பேர்ட்ஸ் கிளம்பலையா?” ரித்திகா ஆர்வமாக வந்து கேட்க, “அவங்க ஒன்னும் லவ்வர்ஸ் இல்ல ரித்தி” ரம்யாவின் பதில் பொத்துக் கொண்டு வந்தது.

 

“அப்ப வேற யாரு?” ரித்திகா விடாமல் வினவ, “ஏதோ பிஸ்னஸ் பத்தி பேசுறாங்க போல” ரம்யாவின் பதிலை நம்பாதது போல பார்த்து வைத்தவளை கண்டு கொள்ளாமல் நகர்ந்து வந்தாள்.

 

ரம்யா பில்லை அவர்கள் டேபிளில் வைத்து விட்டு நிற்க, அவள் பெயரை கவனித்த திலோத்தமா, “ரம்யா, நைஸ் நேம், படிக்கிறியா?” என்று விசாரிக்க,

 

ரம்யா, “எஸ் மேம் யூஜி ஃபைனல் இயர் பண்றேன்” முகம் மாறாமல் பதில் தந்தாள்.

 

“படிச்சிட்டு இப்படி பார்ட் டைம் ஜாப் பண்றது கஷ்டமா இல்லையா, உங்க அப்பா, அம்மா என்ன செய்றாங்க?” திலோதமாவின் கேள்விகள் வரிசைக் கட்டி வந்தன.

 

தன் தாய், தந்தை பற்றிய கேள்வியை தவிர்த்தவள், “எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு மேம், எனக்கு எல்லாமே என் ஹஸ்பென்ட் மட்டும் தான்” ரம்யா பதில் இயல்பாக வந்தது.

 

“ஓ லவ் மேரேஜா?” 

 

“எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க மேம்”

 

“உன் ஹஸ்பென்ட் என்ன பண்றாங்க?”

 

“அவர் வொர்க் பண்றாங்க மேம், நான் ஃபிரீ டைம்ல தான் இங்க வொர்க் பண்றேன்”

 

“ஓஹ் சோ சுவீட், இந்த ஏஜ்ல பொண்ணுங்க ஃபிரீ டைம்ல என்ஜாய் பண்ணனும்னு நினைப்பாங்க, நீங்க உங்க ஹஸ்பென்ட்க்கு ஹெல்ப்புல்லா இருக்கனும் நினைக்கிறீங்க, இதுக்கே உங்கள பாராட்டலாம்” திலோவின் பாராட்டுக்கு, ரம்யா மாறா புன்னகை தந்தாள்.

 

“நீ எங்க ஆட்ல நடிக்கிறியா?” திலோ சட்டென கேட்டு விட, ரம்யாவின் குட்டி கண்கள் அகல விரிந்தன. திகைப்புடன் வசீகரனை பார்த்து வைத்தாள்.

 

“என்ன திலோ இதெல்லாம்?” வசீகரனும் திகைத்து கேட்க,

 

“எஸ் வசி, இந்த பொண்ணோட பப்பி ஃபேஸ், துறுதுறு கண்ணு, கியூட் ஸ்மைல் இம்பர்சிவ் இல்ல” திலோ ரசித்து சொல்லவும், 

 

‘அப்படியா!? அவ்வளவா இருக்கு நம்மாளு கிட்ட!?’ வசீகரனுக்கு சந்தேகம் தோன்றிவிட, ரம்யாவை ஆராய்ச்சியாக பார்த்து வைத்தான்.

 

“எஸ் நீங்க சொன்ன சீன்க்கு இவ செமயா ஆப்ட் ஆவானு தோனுது” ஆர்வமாக சொன்ன திலோ, “உனக்கு நடிக்க விருப்பமா ரம்யா” மறுபடி அவளிடம் கேட்டாள்.

 

வசீகரனுக்கு ஏதாவது சுவரில் முட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது. 

வசீகரனின் கடுகடுப்பை கவனித்த ரம்யா, ” சாரி மேம், எனக்கு நடிக்க வராது. நான் ஒரிஜினல்” என்று சொல்லி விட்டு அதே மாறா புன்னகையுடன் நகர்ந்து விட, இவர்கள் இருவரின் பார்வையும் அவளை தொடர்ந்தது.

 

“நல்ல பொண்ணு தான் போல வசி, பட் எனக்கு லவ் மேரேஜ் வேர்ட் கேட்டாலே பக்குனு இருக்கு. ஸ்கூல், காலேஜ் பாதியிலேயே விட்டுட்டு காதல் பின்னாடி ஓடிவந்து ஏமாந்து சீரழிஞ்ச பொண்ணுங்க ஸ்டோரி ஒவ்வொன்னும் கேட்டாலே அய்யோனு இருக்கும்!” திலோத்தமா தன் போக்கில் சொல்லிவிட்டு எழுந்து கொள்ள, வசீகரன் ரம்யாவை பார்வையில் அலசியபடி எழுந்துக் கொண்டான்.

 

திலோத்தமா, “எனிவே தேங்க்ஸ் வசி, நானும் ஒன் மந்த் ஆ ஆட் டைரக்டர்ஸ் கிட்ட கேட்டுட்டு இருக்கேன், யாரும் ஒத்துக்கல, இல்ல பட்ஜட் ரொம்ப அதிகமா கேக்குறாங்க, நீங்களாவது ஓகே சொன்னீங்களே தேங்க் காட்” என்றாள் நிம்மதியாய்.

 

“காசுக்காக நிறைய ஆட் பண்றோம், இதுமாதிரி நல்ல விசயத்துக்காகவும் ஒன்னு ரெண்டு பண்றதுல தப்பில்ல” என்று மேலும் தகவல்களை சொல்லிவிட்டு வசீகரன் விடைப்பெற்றான்.

 

அவர்கள் இருவரும் சென்ற சிறிது நேரத்தில் ரம்யாவின் கைபேசி இசைத்தது. வசீகரனின் அழைப்பு.

 

ரம்யா எதிர்பார்த்தது தான் என்றாலும் தயக்கமாக எடுத்து காதில் ஒற்றினாள். “பத்து நிமிசம் தான் உனக்கு டைம், அதுக்குள்ள நீ வெளியே வரல, மவளே… சீக்கிரம் வா” என்று மறுமுனையில் வார்த்தைகளை கடித்து துப்பி விட்டு வைத்தான்.

 

ரம்யா முகம் சுருங்கி போக அங்கே சொல்லிவிட்டு வெளிவரவும், வண்டியை முறுக்கியபடி அவள் முன் வந்து நின்றான் வசீகரன். அவனை போலவே அவன் வண்டியும் உருமி கொண்டிருந்தது.

 

‘டேய் மாமு, இதெல்லாம் ஓவர் சீனுடா உனக்கு’ வாய்க்குள் முணங்கியபடி ரம்யா ஏறி அமர்ந்து கொள்ள, வண்டி சீறி பறந்தது. அந்த வேகத்தில் பயந்து அவனை இறுக்கி பிடித்து கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். வண்டி நிற்கும் வரை அவன் வேகமும் குறையவில்லை. இவளின் பிடியும் தளரவில்லை.

 

“என்னடி பண்ணி வச்சிருக்க? உனக்கு என்ன தலையெழுத்து இப்படி வேலைக்கு போகனும்னு? நான் உன்ன அப்படித்தான் வச்சிருக்கேனா?” கடற்கரையில் ஆர்பரித்து மோதி சென்ற அலைகளின் சத்தத்திற்கு ஈடாக அவளிடம் கத்தினான் வசீகரன்.

 

“வச்சிருக்கனு எல்லாம் தப்பா பேசாதடா, நான் உன் பொண்டாட்டி” ரம்யா அவன் பேச்சை மாற்றிவிட,

 

“ஒன்னு விட்டேன்னா பல்லெல்லாம் கொட்டி போயிடும் ஒழுங்கா பதில் சொல்லுடி”

 

“உனக்கென்ன என் பல்லு மேல காண்டு, நீ முதல்ல இப்படி கொதிக்காம அடங்கு நான் சொல்றேன்” ரம்யா சொல்லவும், கைகளை உதறிக் கொண்டவன் மணலில் பொத்தென்று அமர்ந்தான்.

 

அவன் தவிப்பை பார்த்தபடி ரம்யாவும் அவனருகில் அமர்ந்தாள்.

 

“மாமு”

 

“பேசாதடி”

 

“அப்ப நான் பதிலும் சொல்ல வேணாமா”

 

“அப்படி என்ன தேவைடி உனக்கு, என்கிட்ட கேக்க முடியாம வேலைக்கு போய் சம்பாதிக்கனும்னு?”

 

“அது… பார்லர் போகனும் மாமு, உன்கிட்ட கேக்க கஷ்டமா இருந்துச்சு அதான்”

 

“பார்லர் போகவா?”

 

“ம்ம்” அவள் வேகமாக மேலும் கீழும் தலையசைக்க, வசீகரன் அவளை கேவலமாக ஒரு பார்வை பார்த்து வைத்தான்.

 

“லுக்க மாத்து, காலேஜ் போற பொண்ணுக்கு பார்லர் போறது எவ்வளோ முக்கியம்னு தெரியுமா உனக்கு? ஃபேஷியல், பிளீச்சிங், பெடிக்யூர், மெனிக்யூர், வாக்ஸிங், திரெட்டிங் இதெல்லாம் கன்டினீயுவா பண்ணனும் அது தெரியுமா உனக்கு?”

 

“இவ்வளோ பண்ணியும் நீ குரங்கு குட்டி மாதிரி தான் டீ இருக்க” வசீகரன் அவளை வாரியதும் அவன் முதுகில் இரண்டடி வைத்தாள்.

 

“வலிக்குது டீ, உன்ன பார்லர் போக வேணானு எப்ப டீ சொன்னேன்?” வலித்த முதுகை நெளித்துக் கொண்டே அவளிடம் எரிந்து விழுந்தான்.

 

“நீ வேணானு சொல்லல, ஆனாலும்…” என்று இழுத்தவள், “ஃப்ரண்ஸ் நாங்க எல்லாரும் ஒன்னா தான் போவோம், அந்த பார்லர் லேடிக்கும் எங்களை நல்லா தெரியுமா, ஒரே நேரத்துல பில்ல தீட்டி விட்டுடுவாங்க” அவள் முகம் சுருக்கியது.

 

“அதுக்கு பார்ட் டைம் ஜாப் போய் சம்பாரிச்சு பார்லர் போவியா, கேக்கவே கேவலமா இல்ல… நான் கொடுத்த அமௌன்ட் பத்தலன்னா என்கிட்ட கேக்க வேண்டியது தான?” அவன் கடிந்து கொண்டான்.

 

“அதெப்படி கேக்க முடியும்? ஒன் டைம் பார்லர் போனாவே டென் தௌசன்ட் கிட்ட ஆகிடும்” ரம்யா தலை கவிழ்ந்து சொல்லவும், ‘அவ்வளவா’ அவன் வாய் பிளந்தான்.

 

அவளை மேலும் கீழுமாக அளந்து பார்த்தவன், “அப்படி என்னடி மேக்கப் பண்ணுவீங்க?” என்று அங்கலாய்க்க, 

 

“அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது, பார்லர்க்குனு உன்கிட்ட காசு கேக்க சங்கடமா இருந்துச்சு, அதோட திரட்டிங், ஃபேஷியல் பண்ணாம, ஐப்ரோ அதிகமாகி, ஸ்கின் கூட டிரை ஆகிடுச்சுனு ஃபிரண்ட்ஸ் வேற கேக்க ஆரம்பிச்சுட்டாங்க… உன்ன ரொம்ப கஷ்டபடுத்தற மாதிரி எனக்கும் கில்டியா இருந்தது. அதான் வேலைக்கு போனேன். உன்கிட்ட சொன்னா நீ வேணானு சொல்லுவ அதான் சொல்லல” என்று பெரிதாக விளக்கம் சொன்னவளை அசையாது பார்த்து வைத்தான்.

 

தலையை வேகமாக குலுக்கிக் கொண்டவன், “என்மேல தான் தப்பு, நீ கொஞ்சம் அறிவா பேசவும் உன்ன மெச்சூர்ட்டான பொண்ணுனு நினச்சுகிட்டேன்… நீ இன்னும் வளரவே இல்லனு இப்ப தான் புரியுது” என்று சலித்து கொண்டான்.

 

“சாரி மாமு, என்மேல கோபமா உனக்கு” ரம்யா பாவமாக கேட்டு வைக்க,

 

“வர கோவத்துக்கு உன்ன அப்படியே மொத்து மொத்துனு மொத்தனும் போல தோனுதுடீ, ஆனா என்ன கர்மமோ புரியல, உன்மேல கோவத்தை இழுத்து வைக்க முடியல எனக்கு” என்று தன்னையே நொந்து எழுந்து கொண்டான்.

 

அவன் சொன்னதில் உள்ளம் குளிர்ந்து போனவள் ஆர்பரிக்கும் சிரிப்பை சிதறவிட்டு, அவனுடன் எழுந்து, “யூ ஆர் சோ சுவீட் மாமு” ரம்யா அவன் கன்னம் பற்றி கொஞ்சிட, அவள் கையை தட்டி விட்டவன், “ஐஸ் வைக்காதடீ, வேலைக்கு போறதுக்கு உனக்கு பார்லர் ஒரு சாக்கு இல்ல” அவன் முறைக்க, அவள் ‘ஈ’என்று இளித்து வைத்தாள்.

 

“இனிமே வேலைக்குனு போன உன் காலை உடச்சு வீட்டோட உக்கார வச்சுடுவேன், ஒழுங்கா காலேஜ் போய் படிக்கற வேலை மட்டும் பாரு” வசீகரன் அதிகாரமாக உத்தரவிட்டான்.

 

“அது… ஈவ்னிங் மட்டும் தான கொஞ்ச நாள் நான் போறேன் மாமு ப்ளீஸ்” ரம்யா கெஞ்ச,

 

“என்கிட்ட அடி வாங்கனும்னு ஆசையா உனக்கு?” அவன் சிறிதும் இறங்கவில்லை. அவளின் முகம் விழுந்து போனது.

 

மாலை கவிழ்ந்து கடற்கரை கொஞ்ச கொஞ்சமாய் இருள் பூசிக் கொண்டிருக்க, அவளை உம்மென்ற முகத்துடன் பார்க்க சகிக்கவில்லை அவனுக்கு.

 

“ஏய் புஷி”

 

“போடா, உன் பேச்சு கா” என்று முறுக்கி கொண்டு போனவளை இழுத்து பிடித்து தன் கை வளைவில் நிறுத்திக் கொண்டான்.

 

பொதுவிடத்தில் வசீகரனின் இந்த அடாவடி ரம்யாவை தவிக்க வைக்க, “விடு வசி, யாராவது பார்த்தா நம்மள என்ன நினைப்பாங்க” அவனிடமிருந்து விலக முயன்றாள்.

 

“அஹான், அப்ப யாரும் பார்க்கலனா, உனக்கு ஓகேவா புஷி” வசீகரன் குறும்பாக அவள் காதில் கிசுகிசுக்க,

அவன் கேள்வியில் ரம்யாவின் மூச்சு அடைத்துக் கொண்டது. நிமிர்ந்து அவன் முகத்தை பரிதாபமாக பார்த்து வைத்தாள். அவளின் முக பாவனையில் அவனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. 

 

“என்னடி இது பப்பி லுக்கு”

 

“நீ ஏன் வேற மாதிரி பேசுற?”

 

“என்ன வேற மாதிரி பேசினேன்?” வசி அவள் கேள்வியை திருப்பி கேட்க, ரம்யா முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள்.

 

“அதெப்படி டீ நிமிசத்துக்கு ஒரு ரியாக்ஷன் கொடுக்குற நீ?” என்று வம்பிழுத்தபடியே, அவளை தன் கைவளையில் இருந்து விலக்கி விட்டான். அவளை மேலும் கலவரப்படுத்த அவனுக்கு மனம் வரவில்லை.

 

அவன் தந்த விடுதலையில் சற்று ஆசுவாசமானவள், “போடா எல்லாம் உன்னால தான், என்னை பொம்ம மாதிரி நீ ஆட்டி வைக்கிற” என்று அவனை காரமாக முறைத்து, முகத்தை திருப்பி கொண்டாள்.

 

வசீகரன் சத்தமாக உரக்க சிரித்து வைத்தான். “ஆஹான், என் பொம்மைக்கு ஐஸ்கிரீம் வாங்கி தரவா?” வசீகரன் பாவனையாக கேட்கவும், ரம்யா மற்றதை எல்லாம் மறந்து வேகமாக தலையாட்டினாள்.

 

இருவரும் ஆளுக்கொரு ஐஸ்கிரீமை சுவைத்தபடி மணலில் கால் புதைய நடந்து வர, அந்த அரை இருட்டில் வசீகரன் பார்வை ஓரிடத்தில் நின்று நிலைத்தது. ரம்யாவிற்கு தன் ஐஸ்கிரீம் தவிர்த்து வேறு கவனம் இருக்கவில்லை போல.

 

“அமுதன்?”

 

***

 

காதலில் கூத்து கட்டு 23(2)

 

மறைவான இடம் பார்த்து ஓர் இளம் பெண்ணுடன் நெருக்கமாக உட்கார்ந்து இருந்த அமுதன், வசீகரன் அழைப்பில் மிரண்டு எழுந்து விட்டான்.

 

ரம்யாவும் அங்கே அமுதனை பார்த்து கொதித்து விட்டாள். “டேய் பொறுக்கி, உன்ன தான் டா தேடிட்டு இருந்தோம் உனக்கு எவ்வளோ கொழுப்பு இருந்தா என் அப்பாகிட்ட எங்களை பத்தி தப்பா பேசி இருப்ப, உன்னால எவ்வளோ பிரச்சனை தெரியுமா” அவனை கோபமாக ஏசினாள்.

 

‘இத்தனை பிரச்சனைக்கும் இவன் தானே காரணம்’

 

“யாரு அமுதன் இவங்க?” அவன் அருகில் இருந்த பெண் மிரண்டு கேட்கவும், “நோ பேபி, இவங்க என் ஃப்ரண்ஸ் தான் நீ பயப்படாத” அமுதன் அந்த பெண்ணை சமாதானம் செய்ய முயல,

 

“யாருக்கு யாருடா ஃபிரண்ட்ஸ்?” வசீகரன் முன்னே வரவும், அவர்கள் இருவரும் இருட்டை விட்டு வெளியில் வந்தனர்.

 

அமுதனுடன் நின்ற அந்த பெண்ணை பார்த்ததும் வசீ, ரமிக்கு திக்கென்று ஆனது. பள்ளி படிப்பை கூட முடித்திராத பால் மணம் மாறாத முகத்துடன் திருதிருவென விழித்து நின்றிருந்தாள் அவள். 

 

“ராஸ்கல் யாருடா இந்த பொண்ணு?” வசீகரன் பற்களைக் கடித்தபடி கேட்க,

 

“என் லவ்வர்” அமுதன் ரோஷமாக பதில் தர,

 

“லவ் பண்ற பொண்ணை இப்படி தான் இருட்டுக்குள்ள தள்ளிட்டு வருவியா, நாசமா போனவனே” வசீகரனின் ஆத்திரம் கூடியது.

 

அந்த பெண் வியர்த்து வழிய இருவரையும் பயத்துடன் பார்த்து நின்றாள்.

 

“அதான் லவ்வர்னு சொல்றேன் இல்ல, நாங்க எங்க இஷ்டபடி இருப்போம் உனக்கென்ன வந்தது?” என்று படபடத்த அமுதன், அந்த பெண்ணை கைப்பிடித்து அங்கிருந்து நகர முயன்றான்.

 

ரம்யா, “டேய், என் பின்னாடி நாய் மாதிரி சுத்திட்டு, இப்ப இவளை லவ்வர்னு சொல்றியா? பொறுக்கி, நீயென்ன மனுசனா இல்ல வேற ஜந்துவா? ஸ்கூல் படிக்கிற பொண்ணு கிட்ட போய் த்தூ” 

 

அமுதன், “ஏய், அதான் என்னை வேணானு அவன்கூட போன இல்ல, இப்ப எதுக்கு என்னை வந்து கேள்வி கேக்கிற” என்று எகிறினான்.

 

ரம்யா, “உனக்கு அறிவில்லயா, இப்படி ஒரு பொறுக்கி பின்னாடி வந்திருக்க, ஆட்டு ரத்ததுல ஐலவ்யூ எழுதி கொடுத்த சரியான ஃப்ராடு இவன், பொண்ணுங்களை ஃபிளர்ட் பண்ணுறதே தொழிலா வச்சிருக்கான்” மனம் பொறாமல் அந்த பெண்ணிடம் படபடத்தாள்.

 

“ஆட்டு ப்ளட்டா? அப்போ எனக்கும் ஆட்டு ப்ளட்ல தான் ஐ லவ் யூ எழுதி கொடுத்தியா?” அந்த பெண் முகம் வெளுத்து போய் அமுதனிடம் கேட்க,

 

“நோ பேபி, உனக்கு என்னோட ஓன் ப்ளட்ல தான் எழுதி தந்தேன்” அமுதன் கலவரமானான்.

 

“எந்த ப்ளட்டு ஓ பாஸிட்டிவ் ப்ளட்டா?” ரம்யா நக்கலாக கேட்கவும், “ஏய் நீ பேசாத” அமுதன் வேகமாக ரம்யா நோக்கி வர, அடுத்த நொடி வசீகரன் தந்த உதையில் கீழே விழுந்து கிடந்தான்.

 

அதற்குள் அவர்களை சுற்றி ஆட்கள் கூட, அங்கே காவலுக்கு இருந்த போலிஸ்காரர் ஒருவரும் வந்து நின்றார். 

 

“என்ன பிரச்சனை இங்க?” போலீஸ் கேட்கவும்,

 

“இந்த பொறுக்கி அந்த பொண்ணுக்கிட்ட மிஸ் பிஹேவ் பண்ணான் சர், அதான் அடிச்சேன்” வசீகரன் அசராமல் சொல்லவும்,

 

“ஐயோ இல்ல சார், அது என்னோட லவ்வர் சார், அந்த பொண்ணையே கேட்டு பாருங்க” அமுதன் அலற,

 

“ஏன் மா, இவன் சொல்றது நிஜமா?” அங்கே அழுது கொண்டிருந்த பெண்ணிடம் காவலர் கேட்கவும், முதலிலேயே பயந்து இருந்தவள், மேலும் நடுங்கி ‘இல்லை’யென்று தலையசைத்து விட்டாள்.

 

“அடியே, என்கூட தான வந்த? இப்ப மாத்தி சொல்ற, ஒழுங்கா உண்மைய சொல்லு இல்லனா?” அமுதன் கோபத்தில் அவளிடம் கத்த, அந்த பெண் மேலும் பயந்து ரம்யா பின்னோடு ஒடுங்கிக் கொண்டாள்.

 

“டேய், என் முன்னாடியே அந்த பொண்ண மிரட்டுறியா” என்று காவலரும் ஓரறை வைத்தார்.

 

“சார், சார் நிஜமா நானும் அவளும் லவ்வர்ஸ் தான் சார், நம்புங்க சார்” சட்டென மாறிவிட்ட சூழ்நிலையில், அடுத்தடுத்து வாங்கிய அறைகளின் வலியில் அமுதன் கெஞ்ச ஆரம்பிக்கவும்,

 

“ஏம்மா, நீ இவனை லவ்‌ பண்ணியா? வாய திறந்து பதில் சொல்லுமா?” போலீஸ்காரர் விட்ட அதட்டலில், “இல்ல… நான் யாரையும்… லவ் பண்ணல” என்று தெம்பினாள் அந்த பெண்.

 

“நீங்க உங்க வீட்டு பொண்ண அழைச்சிட்டு கிளம்புங்க, இவனை நாங்க பார்த்துக்கிறோம்” காவலர் வசீகரனை பார்த்து சொல்ல, “இவன பத்தி கொஞ்சம் விசாரிச்சு நடவடிக்கை எடுங்க சர், பொண்ணுங்க பின்னாடி சுத்தி டார்ச்சர் பண்றதையே பொழப்பா வச்சிருக்கான் போல” வசீகரன் மேலும் சொல்ல, அவர் ஆமோதிப்பாக தலையசைத்து அமுதனின் சட்டை காலரை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார்.

 

“நான் எந்த தப்பும் பண்ணல சார், என்னை விட்ருங்க, இனிமே எந்த வம்புக்கும் போக மாட்டேன், ஸ்டேஷன் எல்லாம் வேணா சார்” அமுதனின் கெஞ்சல் குரல் தூர தேய்ந்து போனது.

 

அந்த பெண் தேம்பி தெம்பி அழுதபடி நின்றிருந்தாள். ரம்யாவும் வசீகரனும் ஒருவரை ஒருவர் பார்த்து பெருமூச்செறிந்தனர்.

 

“உன் வீடு எங்க மா, அட்ரஸ் சொல்லு நாங்க ட்ராப் பண்றோம்” வசீகரன் கேட்க, அந்த பெண் கண்ணீரை துடைத்தப்படி வீட்டு முகவரியை சொன்னாள்.

 

அடுத்து நாற்பது நிமிடங்களில் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்தனர். நல்ல வசதியான குடும்பம் என்று அந்த பங்களாவை பார்க்கும் போதே தெரிந்தது.

 

கதவை திறந்த அந்த பெண்ணின் அம்மா வசீகரன், ரம்யாவை பார்த்து,  “தாரா, ஃப்ரண்ஸோட பீச் போறேன்னு தான சொன்ன, இவங்க கூட வந்திருக்க யாரு இவங்க” என்று கேட்க, தாரா முகம் வெளுக்க பயந்து நின்றாள். 

 

பீச்சில் நடந்ததை வசீகரன் அவரிடம் பொறுமையாக சொல்லவும், அந்த அம்மா தாராவை கோபமாக அறைந்து தள்ளினார். “என்ன பண்ணி வச்சிருக்க, உன்மேல வச்ச நம்பிக்கைய குழி தோண்டி புதைச்சிட்டியே பாவி, குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வச்சுட்டியே” அவர் கத்தி கதறி, மகளையும் வெளுத்து வாங்க, ரம்யா, வசீகரன் தான் முயன்று அவரை விலக்க வேண்டியதானது.

 

“ஏங்க, பொண்ண சரியா கவனிக்காம‌ விட்டுட்டு இப்ப வந்து குய்யோ முய்யோனு கத்தி அடிச்சா சரியா போச்சா? கொஞ்சமாவது நிதானமா இருங்க, இது உங்க பொண்ணோட லைஃப், படிச்சவங்க தான நீங்க” வசீகரன் மூச்சு வாங்க அவரிடம் கத்தி விட்டான்.

 

அதில் அதிர்ச்சியில் இருந்து நிதானத்திற்கு வந்தவர், அழுதிருந்த மகளை பரிதவிப்புடன் அணைத்துக் கொண்டார்.

 

“தப்பு உங்க பொண்ணு மேல மட்டும் இல்ல மேடம், உங்க மேலயும் தான் இருக்கு. யாருகிட்ட எப்படி பழகனும், யாரை நம்பனும், யாரை நம்ப கூடாதுன்னு நீங்க சொல்லி கொடுத்து இருக்கனும்… இந்த வயசை கடந்து தான நீங்க வந்து இருக்கீங்க, வயசு கோளாறுல ஏற்படற சாதக, பாதகங்களை உங்க பொண்ணுக்கு தெளிவு படுத்துங்க மேடம். டிவி, மொபைல், சினிமா, கதைனு நம்மளை சுத்தி இருக்க எல்லாம் காதலையும் மயக்கத்தையும் தான் சொல்லுது. அதை தவிர்த்து நிதர்சனம் என்னனு நீங்க சொல்லி புரிய வைங்க மேடம்” என்று பெரிய மனித தனமாக பேசிய ரம்யா, 

 

 “உங்க பசங்க மேல அம்மா‍, அப்பான்ற அதிகாரத்தையும் கோபத்தையும் மட்டும் காட்டாதீங்க. அன்பையும் நம்பிக்கையும் வைங்க, அவளுக்கான ஆலோசனை சொல்லுங்க” மேலும் நிதானமாக சொன்னாள். அவளை மறுத்து பேச ஏதும் இருக்கவில்லை.

 

சற்று முன் வெகுளி பெண்ணாக தன்னிடம் சிணுங்கிக் கொண்டிருந்தவள், இப்போது‌ அறிவாளிதனமாக பேசுவதை சற்றே திகைத்து பார்த்த வசீகரன், ‘இவள் எதிலும் சேர்த்தி இல்லை’ என்று தலையசைத்துக் கொண்டான்.

 

“உங்களுக்கு என்னனு போகாம, இவ்வளவு தூரம் எங்க பொண்ண கூட்டிட்டு வந்து விட்டீங்களே ரொம்ப தேங்க்ஸ், நான் இனிமே பத்திரமா பார்த்துக்கிறேன்” அவரின் நன்றிக்கு தலையசைத்து இருவரும் வெளி வந்தனர்.

 

அவர்களின் பின்னோடு வந்த தாரா, “அக்கா, நீங்களும் அமுதனை நம்பி ஏமாந்துட்டீங்களா?” என்று ரம்யாவை நிறுத்தி கலக்கமாக கேட்க, 

 

ரம்யா பதில் தரும் முன், “அவன்கிட்ட ஏமாந்து போக, உன் அக்கா என்ன உன்னமாதிரி முட்டாளா? அவன அப்பவே நடு ரோட்ல லெஃப்ட் அன் ரைட் வாங்கி விட்டுட்டா” என்று சிரிப்புடன் சொன்ன வசீகரன்,‌ “நீயும் இனிமே ஸ்டாராங் கேர்ள்லா இருக்கனும், வழியறவன் கிட்ட எல்லாம் வளைஞ்சு போக கூடாது சரியா” என்க. சங்கடமாக தலையசைத்த தாரா, “தேங்க்ஸ் அண்ணா” என்று நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்குள் ஓடி விட்டாள்.

 

அவர்கள் இருவரையும் சுமந்தபடி வண்டி இரவு சாலையில் ஊர்ந்து கொண்டிருந்தது. இருவருக்குமே மனது லேசான ஏதோ உணர்வு. 

 

ரம்யாவிற்கு அதற்கும் மேல் குதித்து குத்தாட்டம் போட வேண்டும் போலொரு பரவசம் எழ, “மாமு ஐ லவ் யூ” என்றாள் துள்ளல் வெளிப்பட்ட குரலில்.

 

“ஆஹான், இது எப்ப இருந்து?” வசீகரன் வியந்தபடி கேட்க,

 

“எப்ப இருந்துனு எல்லாம் சொல்ல தெரியல, ஆனா இப்ப உன்கிட்ட சொல்லியே ஆகனும்னு தோனுச்சு” ரம்யா பரவசமாக மொழிந்தாள்.

 

“வில்லனுக்கு ஒரு குத்து விட்டதும் ஹீரோக்கு ப்ரோபோஸ் பண்றதெல்லாம் செம ஓல்டு டீ” வசீகரன் சளைக்காமல் அவளை ஓட்டினான்.

 

“போனா போகுது புருசனாச்சேனு ஒரு ஐ லவ் யூ சொன்னேன் பாரு போடா போடா, உனக்கு ஐ லவ் யூ எல்லாம் இல்ல நான் வாபஸ் வாங்கிக்கிறேன்” ரம்யா சிடுசிடுப்பாக சொல்லவும், வசீகரன் வாய்விட்டு சத்தமாக சிரித்து வைத்தான்.

 

“சிரிச்சு தொலைக்காத டா, வேலை பார்க்குறேன் பேர்வழினு பொண்ணுங்க கூட காஃபி ஷாப்ல சுத்துற உன்கிட்ட ப்ரோபோஸ் பண்ணேன் பாரு என் புத்திய சொல்லனும்” ரம்யா தன் நெற்றியில் அடித்து கொள்ளவும்,

 

“அடிப்பாவி, என் மேல உனக்கு எவ்வளவு நம்பிக்கை டீ” என்று அலுத்தபடி வண்டியை செலுத்தியவன் முகத்தின் புன்னகை சிறிதும் வாடவில்லை. மேலும் விரிய தான் செய்தது. 

 

வண்டியை செலுத்தியபடி மிளிர்ந்த புன்னகையோடு வசீகரன் தன் நீள கேசத்தை ஒற்றை கையால் கோதிவிட்ட தோரணையில், ரம்யா அவனுக்கு ரசிகையாகி தான் போனாள்.

 

ஒருவழி பாதை

இருவர் பயணம்

கைகள் கோர்க்கையில்

இதம் சேர்க்குதே…

 

***

 

காதல் கூத்து கட்டும்…