காதலில் கூத்து கட்டு 24

காதலில் கூத்து கட்டு 24

காதலில் கூத்து கட்டு 24

 

‘கிளிக்கர்ஸ்’ன் ஸ்டூடியோ நேர்த்தியான வசதிகளுடன் தயாராகி இருக்க, வசீகரன், தேவாவிற்கு பெரிதாக ஏதோ சாதித்த உற்சாகம் பெருகியது. இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து குதித்து கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர். அவர்கள் மகிழ்ச்சியில் ரம்யாவிற்குள்ளும் உற்சாகம் ஊற்றெடுப்பதாய். 

 

ஒரு நன்னாளில் கிளிக்கர்ஸ் ஸ்டூடியோ திறப்பு விழாவை சிறிய அளவில் ஏற்பாடு செய்து இருந்தனர். ரம்யா குடும்பத்திற்கும் வசீகரன் குடும்பத்திற்கும் தேவா நேரடியாக சென்று, ஸ்டூடியோ திறப்பிற்கான அழைப்பு விடுத்தான். 

 

இன்னமும் வசீகரன் மீது உள்ளுக்குள் வன்மம் பாராட்டும் திவாகர், அந்த அழைப்பிதழை கிழித்து எறிந்து விட்டார்.

 

சசிதரன் வெளியில் கண்டுகொள்ளாமல் தவிர்த்தாலும், தனிமையில் அழைப்பிதழை எடுத்து பார்த்தவன் மனது கனத்து போனது. தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உடன் இருந்த தம்பியின் முக்கிய வளர்ச்சி நிலைகளில் தான் இப்படி ஒதுக்கி, ஒதுங்கி நிற்பது அவன் நெஞ்சை அறுப்பதாய். ஆனாலும் விழாவுக்கு போகவோ வசியிடம் பேசவோ சசிதரன் முயற்சிக்கவில்லை. வீட்டு பெண்கள் கூட கனத்த யோசனைகளுடன் தேங்கி விட்டனர்.

 

இரு குடும்பங்களில் இருந்தும் யாரும் பங்கேற்க வந்திருக்கவில்லை. இளங்கோவன் நேரில் வராத நிலையில் தொலைபேசியில் வாழ்த்துகளை தெரிவித்தார். பெற்றவர்களின் வரவை அத்தனை எதிர்பார்க்காத சிறியவர்களும் அதிகம் ஏமாற்றமாகவில்லை. தொழில்துறை நண்பர்களுடன் தங்கள் சொந்த ஸ்டூடியோவை கொண்டாட்டமாக தொடங்கி, தங்களின் வேலைகளை உற்சாகமாக தொடர்ந்தனர் வசீயும் தேவாவும்.

 

ரம்யாவின் செமஸ்டர் தேர்வுகள் முடிந்திருக்க, கிடைத்த ஒருவார விடுமுறையில், ஷூட்டிங், ஸ்டூடியோ என்று வசீகரனுடன் தொற்றிக் கொண்டு, சுற்றி கொண்டிருந்தாள். வெறும் இரண்டு, மூன்று நிமிட விளம்பரத்திற்கு பின்னால் இத்தனை வேலைகளா? என்று வியந்து கொண்டவள், வசீகரனின் ஒவ்வொரு செய்கையையும் தன் கைபேசியில் நிழல் படங்களாக சேகரிக்க ஆரம்பித்தாள்.

 

கேமரா பின்‌னிருந்து அவ்வப்போது தலையை மட்டும் உயர்த்தி படம்பிடிக்கும் வசீகரன்! 

 

நடிகர்களுக்கு‌ தீவிரமாக காட்சிகளை விவரிக்கும் வசீகரன்! 

 

காட்சிக்கான‌ ஏற்பாடுகளை கவனித்து ஒழுங்குப்படுத்தும் வசீகரன்! 

 

தானே நேர்த்தியாக நடித்து காட்டும் வசீகரன்! 

 

திரையின் முன் அமர்ந்து காட்சிகளை ஒன்றிணைத்து முழுமைப்படுத்தும் வசீகரன்! 

 

சோர்ந்து போய் தன் இருக்கையில் சரிந்து அமர்ந்து தூங்கி விழும் வசீகரன்… என அவள் மொபைல் கேலரி முழுவதும் வசீகரன் என்ற ஒருவனால் மட்டுமே நிரம்பி வழிவதாய். வசீகரனும் அதை கண்டும் காணாது சிரித்து கொண்டான். 

 

வசீகரன் வண்டியை நிறுத்தியதும் அவன் கைபேசி அலற தொடங்க, காய்கறி, மளிகை பைகள் இரண்டையும் சேர்த்து ஒற்றை கையில் பிடித்து கொண்டு, மறுகையில் கைபேசியை காதில் ஒற்றி பேசியபடியே படியேறி வந்தான்.

 

“சொல்லு தேவா”

 

“என்னத்த டா சொல்லனும், இப்ப எங்க டா இருக்க?” தேவா மறுமுனையில் காய்ந்தான்.

 

“மார்கெட் போயிட்டு கொஞ்சம் திங்க்ஸ் வாங்கிட்டு வீட்டுக்கு வந்து இருக்கேன் டா”

 

“ரொம்ப முக்கியம், இங்க வொர்க் எல்லாம் லைன் கட்டி நிக்குது, உனக்கு மார்கெட் போறது முக்கியமா போச்சா”

 

“கூல் மச்சி. எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற? இப்படி டென்ஷன் ஆகுறதால நார்மல் வொர்க்ஸ் கூட சொதப்பி வச்சிடும்”

 

“உன் வியாக்கியானம் எனக்கு தேவயில்ல மச்சி, ஈவ்னிங்குள்ள இதை முடிச்சு கொடுக்கனும், வர முடியுமா முடியாதா?”

 

“வந்திறேன் டா, டென்ஷன் இல்லாம ஜாலியா வொர்க் பண்ண தான் இந்த ஆட் ஃபீல்ட்ட இறங்கினேன், நீ இங்கேயும் டென்ஷனை இழுத்து விடாத தேவா” என்ற வசி வீட்டு வாசலில் நின்று அழைப்பு மணியை அழுத்தினான்.

 

“நீ இன்னும் டென்ஷன் ஏத்தாம சீக்கிரம் வந்து தொலை” தேவா உத்தரவிட்டு துண்டித்து விட, ‘சரியான டென்ஷன் பார்ட்டி’ என்று முணுமுணுத்து வசீகரன் தன் மொபைலை அணைத்து பாக்கெட்டில் வைத்தான்.

 

கதவு இன்னும் திறக்கவில்லை. மறுபடி அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்து நின்றான்.

 

ம்ஹும் கதவு திறக்கும் வழியைக் காணோம்.

 

‘டோர் ஓபன் பண்ணாம என்ன கிழிக்கிறா உள்ள’ பொறுமையிழந்து அவன் கதவில் கை வைக்க, உள் தாழிடாத கதவு திறந்து கொண்டது.

 

‘டோர் கூட லாக் பண்ணல! இவள’ பற்களை கடித்தபடி உள்ளே வந்தவனுக்கு ரம்யாவை அவ்விதம் பார்த்தும் கடுப்பு ஏகபோகமாக எகிறியது.

 

ஹாலின் நடுவே ஒரு சேரில் அமர்ந்து மறு சேரில் கால்களை நீட்டி, காதில் பொருத்திய ஹெட்செட் உடன், செல்போன் திரையை மிக சுவாரஸ்யமாக ரசித்து பார்த்து இருந்தாள். வசீகரன் வந்ததை கூட சிறிதும் கவனியாமல்.

 

கோபமாக அவளை திட்ட வாயெடுத்தவன், அவளின் முகம் காட்டிய அதீத ரசிப்பை கவனித்து நிதானித்தான். 

 

‘அப்படி என்ன பார்த்துட்டு இருக்கா இவ?’ சத்தமின்றி அவள் பின்னால் நின்று கவனிக்க, புருவங்கள் மேடேறி அவன் முகம் திகைப்பையும் சிரிப்பையும் ஒருங்கே காட்டியது.

 

நெருக்கமான முத்தக்காட்சி அந்த செல்போன் திரையில் ஓடிக் கொண்டிருந்ததால்!

 

அதில் லயித்து ரசித்து அவளின் பொன் முகம் குறுகுறுக்க பார்த்திருந்தவளை வசீகரன் வினோதமாக பார்த்து நின்றான். 

 

“அவ்வா… என்னடி இப்படி பார்த்துட்டு இருக்க?” திடீரென அருகில் கேட்ட வசீகரன் குரலில் அதிர்ந்து எழுந்து விட்டாள் ரம்யா.

 

புருவங்கள் நெளிய கூடை குறும்பை பார்வையில் தேக்கி, சிறு கண்டனத்தையும் முகத்தில் காட்டி தன்னவளை முறைத்து நின்றான் வசீகரன். 

 

“அது… அது சும்மா தான், போர் அடிச்சதுனு பார்த்திட்டு இருந்தேன்” ரம்யாவிற்கு வார்த்தைகள் திக்கின. அவன் வந்ததை கூட கவனியாமல் தான் வழிச்சலோடு செல்போனை பார்த்து வைத்ததை நினைக்க, அவளை வெட்கமும் கூச்சமும் பிடிங்கி தின்றது. அதேநேரம் தன்னை தவறாக எடுத்துக் கொள்வானோ என்றும் மனம் பதறியது.

 

தன் கையிலிருந்த பைகளை வைத்து விட்டு வசி அவளை நெருங்கி வர, ரம்யா தவறு செய்த குழந்தை போல தன்னை தானே நொந்து கொண்டு பின்வாங்கினாள்.

 

அவளை ஒரு நொடி ஆழ பார்த்தவன் பார்வையில் என்ன இருக்கிறது? இவளுக்குள் மூச்சடைத்த உணர்வு!

 

“லீவ்ல டைம்பாஸ்க்காக ஃபிரண்ட்ஸ் தான் இந்த சீரிஸ் பார்க்க சொன்னாங்க மாமு… ரொம்ப நல்லா இருக்கும்னு சொன்னாங்க. அதான் பார்த்தேன் வேற ஒன்னுமில்ல” என்று விளக்கம் தந்து அவனை சங்கடம பார்த்து வைக்க,

 

“நல்ல டைம்பாஸ் தான், அதென்ன அப்படி உத்து உத்து பார்த்திருந்த? என்ன தெரிஞ்சது அதுல உனக்கு?” அவனின் குதர்க்க கேள்வியில் ரம்யா இப்போது அவனை முறைத்து வைத்தாள்.

 

‘ஐயோ ரமி, அவன் உன்ன ஓட்டுறான். நீ கண்டுக்காத, பொறுமை பொறுமை’

 

அவள் தனக்கு தானே சொல்லி பொறுமை காக்க முயன்றாள். ஆனால் வசி அவளை விடவில்லை.

 

“உன்ன பாவம் சின்ன பொண்ணுனு நினச்சா, பார்க்கறதெல்லாம் கேடி வேலைடீயேய்” அவன் அதட்டலில்,

 

“இப்ப என்ன? ஒரு ரொமான்ஸ் சீன் பார்த்ததுக்கு என்னவோ ரொம்ப தான் என்னை ஓட்டற போ”  இவள் முறுக்கி கொள்ள,

 

“நீ பார்த்தது பிரச்சனை இல்ல, அப்படி வழிஞ்சிட்டு பார்த்தியே, அவ்வளோ பிடிச்சிருக்கா உனக்கு?” அவன் வம்பை விடுவதாக இல்லை.

 

“சும்மா வம்பு வளர்க்காத வசீ, நீ கேக்கறது உனக்கே ஓவரா தெரியல, உன் புஷி பாவமில்ல, விட்ரு” வடிவேல் பாணியில் கெத்து குறையாமல் கெஞ்சி கேட்க, வசீகரன் சிரித்து விட்டான்.

 

“உன்ன விடுற ஐடியா எல்லாம் எனக்கு இல்ல. உனக்கு கிஸ் இவ்வளோ பிடிக்கும்னு சொல்லி இருந்தா,‌ நானே கொடுத்து இருப்பேன் இல்ல புஷி” அவன் அலட்டாமல் நெருங்க, இவளுக்கு ஐயோ என்றானது.

 

“தப்பு தப்பா பேசாத மாமு, ஏதோ ஒரு சீன் பார்த்ததுக்கு நீ ஓவரா தான் பண்ற” 

இவள் வேகமாக மறுத்து தலையசைத்து தப்பித்து ஓட, அவனும் விடாமல் பிடிக்க முயன்றான். அந்த சிறிய ஹாலில் எவ்வளவு தூரம் தப்பித்து ஓட முடியும்? 

 

சில நிமிடங்கள் ஆட்டம் காட்டி அவளை பிடித்து சுவற்றோடு சாய்த்து, மூச்சு வாங்க நின்றான். இவனைவிட அவளுக்கு அதிகமாக மூச்சு வாங்கியது. 

 

“அது… சும்மா சினிமா… அதை பார்த்ததுக்கு போய் இப்படி வம்பிழுப்பியா?” அவள் மேல் மூச்சு வாங்க திக்கி திணறினாள். அவனின் நெருக்கமும் பார்வையும் பேச்சும் இன்று ஏனோ புதிதாய் அவளை கலவரப்படுத்தி பார்த்தது. 

 

“எதுவா இருந்தா என்ன? ஒரு முத்தத்துக்கு பொண்டாட்டிய ஏங்க வச்சா நானெல்லாம் என்ன புருசன்டீ” என்றவன் அவள் முகம் நோக்கி தாழ, இவள் பதறி முகத்தை திருப்பி கொண்டு மறுத்து தலையசைத்தாள். 

 

“விளையாடாத மாமு… ப்ளீஸ்ஸ்” அவள் திமிறவும், வசீகரன் அவள் கன்னங்களை அசையாது பற்றி அவளின் இதழணைத்து கொண்டான்!

 

ரம்யாவிற்கு திக்பிரமை பிடித்தது போலானது. அவன் விளையாடுவதாக தான் நினைத்திருந்தாள். அவன் நிஜமாய் களத்தில் இறங்கிவிட, இவளுக்குள் கலவரம் பேரிரிரைச்சலாக மூண்டது. மிரண்டு அவனிடமிருந்து விலக முயன்றாள். இரண்டு கைகளாலும் அவனின் தோளை அடித்து, குத்தி விலக்க முயன்றாள். 

 

அவள் அடியின் வலி தாங்காமல் விலகி கொண்டவன், “வலிக்கிதுடீ பிசாசு,‌ ஒத்த முத்ததுக்கு இவ்வளவா அலும்பு பண்ணுவ,‌ கொஞ்ச நேரம் அமைதியா இருடி, லைஃப்ல ஃப்ர்ஸ்ட் கிஸ்டி‌ அனுபவிக்க விடுடீ” அவனிடம் கடுப்பும் குழைவும் போட்டியிட,

 

“போடா, என்னை என்னனு நினச்ச” என்றவள் கண்கள் கலங்கியது. 

 

“நீ தான டீ காஞ்சு போனவ மாதிரி அந்த லிப்லாக்க பார்த்துட்டு இருந்த” 

 

“ஏதோ ஆசையில பார்த்தேன் அதுக்கு நீ இப்படி தான் பண்ணுவியா” கண்களில் தேங்கிய நீர் வழியவா என கேட்டு நிற்க, அவன் எச்சில் ஈரம் பட்ட தன் உதட்டை அழுத்தி துடைத்துக் கொண்டாள்.

 

“பொண்டாட்டி ஆசை பட்டதை நிறைவேத்தனும் இல்லடி” வசீகரன் குறும்பை விடாமல் சொல்ல,

 

“ஒன்னும் தேவையில்ல போடா” அவனை தள்ளிவிட்டு கண்களை துடைத்துக் கொண்டு அறைக்குள் சென்று மெத்தையில் அமர்ந்து காலில் முகம் புதைத்து தேம்பினாள். எதற்காக அழுகை வருகிறது என்பதற்கான பதில் தெரியாமல் அழுகை தான் வந்தது. சற்று பொறுத்து வந்த வசீகரன் அவளிடம் தண்ணீரை கொடுக்க, ரம்யாவும் மறுக்கவில்லை வாங்கி பருகினாள். சற்று ஆசுவாசமாக தோன்றியது.

 

அவளை ஆழ பார்த்து நின்றவன், “இப்ப எதுக்கு அழற, நான் உன்ன கிஸ் பண்ண கூடாதா? அந்த உரிமை எனக்கில்லையா?” அவன் கேட்க, 

 

திடுக்கிட்டு நிமிர்ந்தவள், “உரிமை இருந்தா என்ன வேணா பண்ணுவியா?” 

 

அவன் நெற்றி சுருங்க, “நான் கிஸ் பண்ணது உனக்கு பிடிக்கலையா? 

 

“தெரியல!” மூக்கு உறிஞ்சி கொண்டாள். 

 

“தெரியலனா என்ன அர்த்தம் நான் உன்ன கிஸ்‌ பண்ண கூடாதுன்னா?” அவன் கேள்வி எல்லாம் ஒரு மார்க்கமாக தான் தோன்றியது அவளுக்கு.

 

“நான் ஒன்னும் அப்படி சொல்லல, நீ இப்படி பண்ணி இருக்க கூடாதுன்னு தான்” ரம்யா திணறினாள்.

 

அவளெதிரில் அமர்ந்து கொண்டவன், “சரி சொல்லு நான் எப்படி கிஸ் பண்ணா உனக்கு‌ பிடிக்கும்?” இலகுவாய் கேட்க, இவள் திருதிருத்து விழித்தாள். 

 

அவளின் வெகுளி தனத்தில் புன்னகை விரிய நெருங்கியவன், அவளின் மென்பட்டு இதழில் பட்டும் படாமல் மென்மையாய் இதழொற்றி நிமிர்ந்தான். அவளின் மென்னுடல் மொத்தமாய் சிலிர்த்து அடங்கியது. 

 

“இப்படி கிஸ் பண்ணா உனக்கு ஓகேவா?” என்று வசீகரன் கேட்க, அவள் விழிகள் மிரட்சியாய் அகல விரிந்தன. 

 

அவளருகே நெருங்கி அமர்ந்தவன் இருகைளில் அவள் முகத்தை ஏந்தி, “நானும் காஞ்சு தான் கிடக்கேன்டீ, ப்ளீஸ் கொஞ்சநேரம்…” கண்களை சுருக்கி கொஞ்சலாக கெஞ்சியவன் மென்மையாய் அவளிதழோடு இதழ் பொருத்திக் கொண்டான். அவளுக்கு ஏதும் புரியவில்லை. எதையும் யோசிக்கும் திறத்தையும் இழந்து தவித்து போனாள். அவளின் இசைவில் இன்னும் இன்னும் அவளுக்குள் மூழ்கும் வேகம் இவனுக்குள். இதமாய் இசைவாய் பொறுமையாய் ரசித்து ருசித்து அந்த எச்சில் தருணத்தின் நீளத்தை கூட்டவே முயன்றிருந்தான். 

 

ஒரு நிலைக்கு மேல் தன்னுள் கிளர்ந்தெழும் உணர்ச்சி பெருக்கத்தை தாங்க முடியாமல் முனகினாள் பெண். மூச்சு முட்டி திணற, அவளிதழை விடுவித்தவன், அவள் மூச்சை எடுக்க சில நொடிகள் தந்து, “செமடீ, என்ன லிப்ஸ்டீ இது? இத்துனூன்டு இருக்கு! ம்ம் ஏதோ சொல்லுவாங்களே… ம்ம் முல்லைபூ அரும்பை ஒட்டிவச்ச போல இருக்குடீ உன் லிப்ஸ், அவ்ளோ சாஃப்டா, அதைவிட சுவீட்டா… இந்த உதட்டை வச்சுகிட்டாடீ இவ்வளவு வாயடிக்கிற” போதை தெளியாது அவளிடம் உளறி கிளறினான். 

 

எதற்கும் பதில் சொல்லும் நிலையில் இல்லை அவள், அவன் மார்பில் தோய்ந்து இமை மூடி கொண்டாள். கண்களில் கசிந்த ஈரம் அவன் சட்டையில் பட்டு நெஞ்சில் சில்லிட்டது. 

 

அவள் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் இதழொற்றல் தந்தவன், “ரிலாக்ஸ் புஷி” தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். 

 

முதல் முறை தங்களுக்கிடையேயான கண்ணிய கோட்டை தாண்டி விட்ட இருவரின் நிலையும் விளக்க இயலாததாய்.

 

அவன் கைப்பேசி இசைத்து அவர்களை கலைத்தது. அணைப்பை விலக்காமல் ஒருகையால் எடுத்து பார்த்துவிட்டு அதை அடக்கியவன், அவளை மென்மையாக அழைத்தான். 

 

“புஷி… நான் போகனும்டீ” என்றதும் அவனிடமிருந்து விலகி கொண்டாள். முதல் முறை அவள் முகத்தை ஆசையாக பார்த்தான் வசீகரன். அவள் முகம் இன்னும் தெளிந்திருக்கவில்லை. 

 

“ஹே ரிலாக்ஸ் புஷி… கிஸ் எல்லாம் ரொம்ப நார்மல், இதுக்கே இவ்வளோ டென்சனானா எப்படி? உனக்கு பிடிச்சதால தான கொடுத்தேன்” 

 

“நான் கேட்டேனா உன்ன கிஸ் பண்ண சொல்லி, அந்த சீன் பார்த்தது ஒரு குத்தமா?” கேட்டவளின் குரல் எழவே இல்லை. 

 

“ஆமாடீ குத்தம் தான், என் பொண்டாட்டி எவனோ எவளுக்கோ கொடுக்குற முத்தத்த பார்த்து வழிஞ்சா, நான் எல்லாம் வேஸ்ட்டுனு அர்த்தம்” 

 

“டேய் போயிடு இல்ல உன் மண்டைய உடைச்சிடுவேன்” அவள் அவனை முறைக்க, 

 

“இனிமே இப்படி ஏதாவது சீன் பார்த்தா என் ஞாபகம் மட்டும் தான் வரனும் சரியா” என்று குறும்போடு கண்ணடித்து வெளியேறினான். 

 

“ரமீ நான் கிளம்பிட்டேன். வந்து கதவை ஒழுங்கா லாக் பண்ணிக்கோ, பை” என்று குரல் கொடுத்து விட்டு உல்லாசமாக கிளம்பினான் வசீகரன். 

 

கதவடைத்து அமர்ந்தவளுக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது. ரம்யாவிற்கு அந்த நாள் அவஸ்தையாகவே கழிந்தது.

 

அன்று மாலை வீடு வந்தவனை ரம்யா

பதற்றமாக பார்த்திருக்க, வசீகரன் இயல்பாக தான் வலம் வந்தான். 

 

‘அவன் எப்பவும் போல நார்மலா தான் இருக்கான், எனக்கு மட்டும் ஏன் இவ்ளோ படபடப்பா இருக்குனு தெரியல, இதை போய் யார்கிட்ட கேக்கறது?’ அவள் மனம் குழம்பியது. 

 

‘அக்கா கிட்ட கேக்கலாம்! ஆனா, இப்ப அவளும் என்கூட பேசறதில்லை…’ தன் அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்ள உடன்பிறந்தவளை நாடி ஏங்கியது அவளின் பேதை‌ மனம்.

 

‘இப்ப இவனை விட்டா எனக்கு யாரும் இல்லல, அந்த தைரியத்தில தான் இப்படி செஞ்சானா? ச்சே ச்சே அப்படி எல்லாம் இருக்காது, என்னை எவ்ளோ கேர் எடுத்து பார்த்துக்கிறான். எனக்காக தான அவங்க குடும்பம் எல்லாத்தையும் விட்டு இங்க கஷ்டப்படுறான். இத்தனை நாள் குட் பாயா தான் நடந்துக்கிட்டான்… தப்பெல்லாம் என்மேல தான். அவன் முன்னாடி அப்படி வழிஞ்சிட்டு பார்த்திருக்கேன். ச்சே எனக்கெல்லாம் அறிவே இல்ல’ என்று தன்னைத்தானே தலையில் அடித்து கொண்டு, இரவுக்கு காய்கறி குர்மாவை தயார் செய்துவிட்டு, கோதுமை மாவையும் பிசைந்து வைத்து வசீகரனை எட்டி பார்த்தாள்.‌ 

 

மும்முரமாக மடிகணினியில் வேலைப் பார்த்து கொண்டிருந்தான். அவனை தொந்தரவு செய்ய மனமின்றி, தானே சப்பாத்தி தேய்த்து ரொட்டி சுட்டாள். இதுவும் அவன் சொல்லி கொடுத்தது தான். அவனுடன் வந்த பிறகு இவள் செய்யும் ஒவ்வொரு வேலையும் அவன் சொல்லி கொடுத்ததே. அதை நினைக்க அவளின் நெஞ்சம் இதமானது.

 

“ஏய், என்னை கூப்பிட்டு இருக்கலாம் இல்ல நீயே தனியா செஞ்சுட்டியா?” கேட்டபடி அருகில் வந்தான் வசீகரன். 

 

“நீ வேலை பார்த்துட்டு இருந்த அதான் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு செஞ்சுட்டேன்” ரமி பதில் சிறுகுரலாக வந்தது.

 

 “ஆமா இதுவரை நீ என்னை டிஸ்டர்ப் பண்ணதே இல்ல பாரு” வசீகரன் அவளை வம்பிழுக்க, ரம்யா பதில் பேசவில்லை. அவளின் அமைதி இவனுக்கு வித்தியாசமாய்.

 

அவளை தன்புறம் திருப்பி, “என்னாச்சு புஷி, ஏன் டல்லா இருக்க?” வசீகரன் பரிவாக வினவ,

 

“பண்றதையும் பண்ணிட்டு இப்ப ரீல் சுத்தறியா, போடா” ரம்யா முறைத்து வைத்தாள்.

 

அவனுக்கு புரிந்தது. இதழ் மடித்து சிரித்து கொண்டான். “இனி அதையெல்லாம் பார்ப்ப நீ?” பரிகாசமாக அவன் கேட்டு வைக்க, “ஜென்மத்துக்கும் அந்த கண்றாவிய பார்க்க மாட்டேன் போதுமா” ரம்யா சீறினாள்.

 

அவளை தன் அருகிழுத்தவன், “உன்ன பார்க்க வேணானு சொல்ல மாட்டேன், பட் இனிமே தனியே பார்க்காத, என்னோட சேர்ந்து பாரு, ஓகே வா” குறும்பாய் கண் சிமிட்டி வைத்தான்.

 

“இன்னைக்கு நீ ஒரு மார்க்கமாக தான் இருக்க, தள்ளி போ” அவள் விலக முயல, தன் பிடியை மேலும் இறுக்கியவன், “சும்மா இருந்தவனை உசுப்பி விட்டு பழியை தூக்கி என்மேல போடுறியா?” அவன் ஒற்றை புருவன் உயர்ந்து வளைந்து கேள்வியாக நின்றது.

 

“நான் ஒன்னும் உன்ன உசுப்பேத்தல” அவன் நெருக்கத்தில் அவள் குரல் காற்றாகி போனது. 

 

தன்னருகில் அவளின் தவிப்பை வெகுவாக ரசித்தவன், முகம் தாழ்த்தி மூக்கோடு மூக்குரசி, “இப்ப எனக்கு எந்த ஐடியாவும் இல்ல, பசிக்குது புஷி வா சாப்பிடலாம்” என்று வசீகரன் விலகிய பிறகுதான் ரம்யாவின் மூச்சு சீரானது.

 

அதற்கு மேல் வசீகரனும் அவளிடம் வம்பிழுக்கவில்லை. நல்ல பிள்ளையாக சாப்பிட்டு விரைவாகவே படுத்துக் கொண்டான். ரம்யாவிற்கு தான் உறக்கம் வருவேனா என்று ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது.

 

தன்னருகில் வெகு ஜாக்கிரதையாக இடைவெளி விட்டு புரண்டு புரண்டு படுத்து இருந்தவளை கவனித்தவனுக்கு அவள் நிலை பாவமாக, அவளை தன்னருகே இழுத்துக் கொண்டான். 

 

ரம்யா பதற்றமாக நிமிர, “நான் தான் உன்கிட்ட அன்வான்ட்டேஜ் எடுத்துக்கிட்டேன், ஏதோ வேகத்துல அவசரப்பட்டுட்டேன் தப்பு தான். நீ இப்படி டிஸ்டர்ப் ஆகாத புஷி, சும்மா குழப்பிக்காம நிம்மதியா தூங்கு, குட் நைட்” அவள் காதோடு சொல்லி, ஆறுதலாக அணைத்து கொண்டான். அவளுக்கும் அவன் ஆறுதல் தேவையாய் இருந்தது. மனதின் தவிப்புகள் அவன் அருகில் கரைந்து போக, அவனுக்குள் ஒடுங்கிக் கொண்டாள்.

 

அவள் வரும் வரும் வரை

என் சாலை எங்கும் மழை

அவள் வந்த பின்னே 

வானவில் வண்ணம் காட்டுதே!

***

காதல் கூத்து கட்டும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!