காதலில் கூத்து கட்டு 28(1)

IMG-20210202-WA0002-a538d7f4

 

காதலில் கூத்து கட்டு 28(1)

தன் மார்ப்புக்குள் பூனைக்குட்டியாக சுருண்டு கிடப்பவளை பார்க்க பார்க்க திகட்டவில்லை வசீகரனுக்கு. அத்தனை பிடித்திருந்தது அவனுக்கு, அவளின் துடுக்குததனங்களும் செல்ல சேட்டைகளும். வளவள பேச்சுக்களும் அவிழா மௌனங்களும். அவளுக்கான நெருக்கங்களும் ஏன் அவளின் தயக்கங்கள் கூட அவனை கட்டிப்போட்டு இருந்தது. இதுவரை அவன் அறிந்திருக்கவில்லை ஒரு பெண்ணுக்குள் இத்தனை இன்பங்கள் ஒளிந்திருக்கும் என்று. அறிந்த பொழுதுகளில் அவளிடம் அடிமையாகி தான் போனான். 

 

மிளிர்ந்த புன்னகையோடு தன்னவளின் முகம் நிமிர்த்தி அவளின்‌ உலர்ந்த உதடுகளில் அழுத்த முத்தமிட, அவன் மார்பில் ஓங்கி குத்திவிட்டு தள்ளி விட்டாள் ரம்யா கண்கள் திறக்காமல்.

 

“அவுச் வலிக்குதுடி” அவன் நெஞ்சை தேய்த்துக்கொள்ள,‌ “என்னை தூங்க விடுடா. இல்ல உன்ன கொன்னுடுவேன்” என்று முணுமுணுத்தவள் மறுபடி அவன் மார்பில் தன் முகத்தை தேய்த்துவிட்டு புதைத்துக்கொண்டு தூக்கத்தை தொடர,

 

“அப்படியே பூனைக்குட்டி மாதிரியே செய்யற புஷி நீ” சிரித்தவன் அவளை விலக்கி எழ முயல, அவள் மீண்டும் அவனுடனே ஒட்டிக் கொண்டாள்.

 

அதில் அலுத்து தலையசைத்தவன், “இதுபோல என்னை ஒட்டி உரசி உசுப்பேத்தறது, அப்புறம் நான் தூங்க விடல சாப்பிட விடலன்னு என்னையே குத்தம் சொல்றது முடியலடி உன்னோட” அவள் காதருகில் செல்லமாக கடிந்து கொண்டான்.

 

“என்னை டிஸ்டர்ப் பண்ணாதடா, இப்ப உனக்கு என்ன வேணும்?” அவள் அரை உறக்கத்தில் ஏதோ மேகமெத்தையில் மிதப்பது போன்ற‌ உணர்வில் இருந்தாள்.

 

“பசிக்குதுடி சாப்பிடனும்” வசீகரன் சொல்லவும், ரம்யா நிமிர்ந்து சொக்கிய இமைகளை முயன்று பாதி திறந்து பார்த்தாள். அறையின் வெளிச்சம் அவள் கண்களை கூச செய்தது. 

 

“டைம் என்னாச்சு மாமு?”

 

“மார்னிங் லெவன் தேர்ட்டி” வசீகரன் சொன்னதும் துள்ளி எழுத்தமர்ந்தாள்.

 

“நிஜமாவா?” அவள் கண்கள் விரிய கேட்க, அவளின் கலைந்த கூந்தலையும் வெளிரி கிடந்த முகத்தையும் அசையாது பார்வை இட்டவன் அவள் கூந்தல் இழைகளை விரல்களால் விலக்கி விட்டு, அவள் உச்சயில் இதழொற்றினான்.

 

“நோ டென்ஷன் புஷி. இன்னைக்கு சண்டே தான, நீ ரெஸ்ட் எடு நான் டிஃபன் செஞ்சுட்டு உன்ன எழுப்புறேன்” எனவும் சரியென்று சமத்தாக தலையசைத்து போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு விட்ட தூக்கத்தை தொடர்ந்தவளை பார்க்க அவனிடம் விரிந்த புன்னகை.

 

முதலில் தன் சோர்வு தீர ஒரு குளம்பியை கலக்கி பருகியவன், விரைவாக ருசியாக என்ன செய்யலாம் என்று யோசித்து சேமியா புலாவ் செய்யலானான்.

 

இருவரும் உண்டு முடிக்கும்போது மணி பன்னிரண்டரை கடந்து விட்டது. சாப்பிட்ட பிறகும் கூட ரம்யா முகம் தெளிந்திருக்கவில்லை. அப்படியே வசீகரனின் மடி சாய்ந்துக் கொண்டாள்.

 

“ஏய் புஷி, என்ன பண்ணுது?”

 

“ஒன்னுல்ல மாமு, டயர்ட்டா இருக்கு” அவள் பாவமாக முணுமுணுக்க,‌ இவனுக்கு கவலையானது.

 

கிளிக்கர்ஸ் நிறுவனம் முதன்‌ முதலில் பெரிய அளவு பட்ஜட்டில் விளம்பரப்படத்தை வெற்றிகரமாக தயாரித்து முடித்திருந்தது. அந்த மகிழ்ச்சியை இரவு பார்ட்டியில் கொண்டாடி தீர்த்தனர் விளம்பர குழுவினர். அங்கே ஆட்டம் போட்டுவிட்டு இரவு வீடு வந்து சேரவே நேரமாகி இருக்க, அதற்கு மேல் உறவின் களிப்பில் உறங்க இன்னும் தாமதமாகி இருந்தது அவர்களுக்கு.

 

“சாரிடி, உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறேனா?” சிறு குரலாக கேட்டான் அவன்.

 

வசீகரனும் ஒவ்வொரு முறையும் எண்ணிக் கொள்கிறான் தான், அவளிடம் இருந்து சற்றே விலகி இருக்க வேண்டும் என்று. தன் இச்சைக்காக அவளை கஷ்டபடுத்தக் கூடாது என்று. ஆனால், தனிமை போதுகளில் இளமையின் உரசல்களில் அவன் கட்டுப்பாடெல்லாம் கட்டவிழ்ந்து போகிறது. அவளிடம் சுகமாய் தோற்று போகிறான் அவன்.

 

இருந்தாலும் ரம்யா அதிகம் சோர்ந்து போவது அவனுக்கு கவலை தருவதாய். அவளின் உடல்நலம் எண்ணி மருத்துவரிடம் ஆலோசனை கேட்க, ‘உடலளவிலும் மனதளவிலும் மாற்றங்கள் நேரும்போது பெண்களுக்கு இவ்வித சோர்வு சாதாரணம் தான். இதில் கவலை கொள்ள ஏதுமில்லை’ என்று அவர் விளக்கிய பிறகே அவனுக்கு நிம்மதியானது.

 

அவன் கேள்வியில் ரம்யா நிமிர்ந்து, “அப்படியெல்லாம் இல்ல மாமு” என்று அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். என்னவோ அவளிடம் எல்லாமே மாறிவிட்டிருந்தது. அவளை மொத்தமாக மாற்றிவிட்டு இருந்தான் அவன். குழந்தையாக இருந்தவளை பெண்ணாக மாற்றி இருந்தான். முதலில் அவன் நெருக்கத்திற்கு பயந்தவளின் தயக்கத்தை மிச்சமில்லாமல் போக்கியவன், சின்ன முத்தங்களிலும் இளகிய அணைப்புகளிலும் அவளை நிறைத்து விட்டான்.

 

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பார்கள். பெண்ணும் கொண்டாடும் இடத்தில் தான் பொருந்தி போவாள். வசீகரன் அவள் பெண்மையைக் கொண்டாடி தீர்த்தான், சிலபோது மென்மையாய். சிலபோது வன்மையாய்.

 

ரம்யாவிற்கு பிடித்திருந்தது, அவனின் அடாவடிகளும் அசட்டுதனங்களும். அவளிடம் அவன் காட்டும் காதலும் தேடலும் அவளை எங்கோ தூக்கி சென்று சிம்மாசனம் இட்டது. அவள் மிச்சங்கள் இன்றி முழுமையாய் அவனுள் அடங்கி போனாள்.

 

அவன் கழுத்தை கட்டிக்கொண்டு சற்று உயர்த்தி மடித்த அவன் காலில் தலை வைத்து சாய்ந்திருந்தவள், “ஒரு டவுட் மாமு” என்றாள் தீவிரமாய்.

 

“என்ன?” என்றவனின் நீள விரல்கள் அவளின் மெல்லிய விரல்களோடு விளையாடிக் கொண்டிருந்தன.

 

“நீ சரக்கடிப்ப தான?”

 

“ம்ம் அடிச்சிருக்கேன் தான். இப்ப என்ன அதுக்கு?”

 

“அப்ப நேத்து நைட் பார்ட்டில நீ ஏன் தண்ணி அடிக்கல?”

 

“ரொம்ப முக்கியமான கவலை தான் உனக்கு”

 

“அதில்ல மாமு. நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீ டிரிங்க்ஸ் பண்ணதில்லயா, அதான் கேக்கனும்னு தோனுச்சு”

 

அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன், “உன்ன கல்யாணம் பண்ணிக்க முடிவெடுக்கும் போதே, இனி டிரிங்க்ஸ் எடுக்க கூடாதுன்னு நினைச்சுக்கிட்டேன்டீ” 

 

“நிஜமாவா?” அவனை நம்பாமல் கேட்க,

 

“பின்ன பொய்யாவா! நான் சொன்ன ஒத்த சொல்ல நம்பி என்கூட வர பொண்ண எந்தவிதத்திலயும் கஷ்டபடுத்தாம பார்த்துக்கனும் இல்லையா, குடிச்சா நான் எந்தளவுக்கு நார்மலா இருப்பேன்னு என்னால கேரன்ட்டி கொடுக்க முடியாது. அதான் விட்டுட்டேன்” அவன் சாதாரணமாக சொல்ல, இவள் எழுந்து அவன் கன்னத்தில் அழுத்தமான முத்தம் பதித்து, “யூ ஆர் சோ சுவீட் மாமு, உன் புஷி வெரி லக்கி” என்றாள் நெகிழ்ந்து.

 

“சரியான அல்பம் டீ நீ, வீடியோல பார்க்கறதெல்லாம் லிப்லாக் சீனு, புருசனுக்கு மட்டும் கன்னத்துல கிஸ் தந்து வைக்கிற” வசீகரன் கடுப்பாக சொல்லி முகம் சுருக்கியதில் ரம்யா வாய்விட்டு சிரித்து விட்டாள். அவளின் கிங்கினி சிரிப்பை தன் முரட்டு இதழ்களுக்குள் சிறைப்பிடித்து கொண்டான் அவன். நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் முடிப்பவன் போல.

 

அவன் தடாலடி அதிரடியில், “முரடா, உனக்கு என்னை பிடிக்காதுன்னு சொல்லிட்டு என்னென்ன செஞ்சு வைக்கிற” என்று மூச்சு வாங்க கேட்டாள்.‌ 

 

“ஆமாடீ உன்ன எனக்கு பிடிக்காது தான், என்னடி இப்போ” என்று குனிந்து அவளின் மூக்கோடு மூக்கு உரசினான். 

 

“அப்ப உனக்கு எந்த மாதிரி பொண்ணுங்களை பிடிக்கும்னு சொல்லு, இப்படி ஒரு பொண்ணைத்தான் ஃபீயூச்சர்ல கல்யாணம் பண்ணிக்கனும்னு உனக்கு ஆசை இருந்து இருக்கும் இல்ல” ரமி ஆர்வமாக கேட்க,

 

“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல” அவன் அசட்டையாக பதில் சொன்னான்.

 

“ஹலோ. சும்மா பொய் சொல்லாத, எதையும் மறைக்காம உன் டிரீம் கேர்ள் பத்தி சொல்லு பார்க்கலாம்”

 

அவள் மிரட்டலில் சிரித்தவன் சற்று யோசித்து, “ம்ம் என் டிரீம் கேர்ள் தான! ஒல்லியா, உயரமா, சுண்டுனா சிவந்துபோற வொயிட் ஸ்கினோட, பெரிய கண்களோட, பார்வைக்கு அசத்துற அழகு, தெளிவான பேச்சு. நேர் பார்வை, தைரியமான செயல்பாடு,  இப்படி இருக்க பெண்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்படி ஒரு பொண்ண தேடி கண்டு பிடிச்சு லைஃப் பார்னர் ஆக்கிக்கனும்னு எல்லாம் முன்ன ஆச இருந்தது. இப்ப எல்லாம் போச்சு” அவன் சோகம் போல சொல்லவும்,

 

“பொறுக்கி பொறுக்கி போடா, என்கிட்ட இல்லாததை எல்லாம் லிஸ்ட் எடுத்து சொல்ற நீ” அவனை மொத்தினாள்.

 

“நான் என்ன பண்றது, நான் நினச்சுது அது, எனக்கு அமைஞ்சது இது” அவன் அவளை சீண்ட, அவள் முகம் சுருங்கி போனது. ‘ஏன் இந்த கேள்வியை கேட்டு தொலைச்சேன்’ என்றானது அவளுக்கு.

 

“என்னை பிடிக்காம எப்படி இப்படியெல்லாம்…” அவள் தயக்கமாக முறைப்பாக இழுக்க, 

 

“பிடிக்கிறதுக்கும் இதுக்கும் என்னடி சம்பந்தம் இருக்கு?” கேட்டு அவன் குறும்புடன் கண்சிமிட்ட, ரம்யா முகம் திருப்பிக் கொண்டாள். அவன் விளையாடுகிறான் என்பது அவளுக்கு புரிந்தது தான் இருந்தாலும் மனதிற்குள் ஏதோ பிசைந்தது.

 

ஊடல் கொண்டவளை பின்னோடு சேர்த்துக் கொண்டவன், “ரமி, நிஜமா என்கூட நீ ஹேப்பீயா இருக்கியா? நான் உன்ன நல்லா பார்த்துக்கிறேனே?” வசீகரன் அவளிடம் ஆவலாக கேட்டதில், அவளின் சிறு ஊடலும் தகர்ந்து போவதாய்.

 

“ம்ம் நீ என்னை உன் பேபி மாதிரி வச்சு பார்த்துக்கிற, நான் ரொம்ப ஹேப்பீயா இருக்கேன்” என்று திரும்பி அவன் இரு கன்னங்களையும் கிள்ளி ஆட்டினாள்.

 

“ஏய் வலிக்குதுடி” அவள் கையை தட்டி விட்டவன், “பின்ன ஏன்டீ? நான் நெருங்கும்போது எல்லாம் இப்படியே கேக்குற? உன்ன பிடிக்கலையான்னு? ம்ம்?” அவன் கோபம் காட்ட,

 

“அது… அப்படியாவது என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிட மாட்டியான்ற நப்பாசை தான்” 

 

“அதெல்லாம் நடக்காது தூக்கத்தில எழுப்பி கேட்டா கூட அந்த வார்த்தைய சொல்ல மாட்டேனே” அவன் சீண்டலை விடுவதாக இல்லை.

 

இதழ் கோணியவள், “சொல்லலனா போடா, உனக்கு என்னை பிடிக்கனும்னு எந்த அவசியமும் இல்ல” விலகியவளை, பிடித்து இழுத்து கொண்டவன், “ஒதுங்கி எல்லாம் போககூடாது,‌ இப்படி ஒட்டிட்டே கோபபடு, சண்டைபோடு, அடி, கடி என்னவேணாலும் செய்” என்றவனை மேலும் முறைத்தவள்,

 

“உனக்கு நல்லா கிறுக்கு புடிச்சிருக்கு, லன்ச் சமைக்கனும் விடு” என்றாள்.

 

“எதுவும் சமைக்க வேணாம், வெளியே வாங்கிக்கலாம்” என்றவன், “சோப்பு, ஷேம்புனு சின்ன சின்ன ஆட் எடுத்தாலும் பெரிய பட்ஜட்ல ஆட் எடுக்கிற ஃபீலே தனி. இப்படி பெரிய ஆர்டர்ஸ் வந்தா சீக்கிரமே பேங்க் லோன் ஃபினிஷ் பண்ணிடலாம், இந்த ஓட்ட வீட்ட விட்டு பெரிய வசதியான வீட்டுக்கு போகலாம் ஏன் சொந்தமா கூட வீடு வாங்கலாம். கார் வாங்கலாம்” அவன் சொல்லிக்கொண்டே போக, “எல்லாம் நீ நினைச்ச மாதிரியே நடக்கும் மாமு” என்று நம்பிக்கை கூறினாள்.

 

“ம்ம் இனிமே கொஞ்சம் பிஸியா இருக்கும் புஷி, நைட் ஷூட்டிங் வைக்க வேண்டியது வரலாம்னு தோனுது. நீ சமாளிச்சுக்கவ இல்ல”

 

“நைட் கூடவா?” என்று முகம் சுருங்கியவள், “கொஞ்ச நாள் தான நான் பார்த்துக்கிறேன் மாமு” என்றாள். 

 

ஆனால், அடுத்தடுத்து வாய்ப்புகள் தொடர்ந்து வர, வசீகரன் வீட்டில் இருக்கும் நேரங்கள் கொஞ்ச கொஞ்சமாக குறைந்து போனது. சில வாரங்கள் ஏற்றுக் கொண்டவளால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை பேதையின் மனமும் உடலும் அவனை தேடி அல்லலுற்று தவிப்பதாய்.

 

வசீகரனுக்கு அவர்கள் எதிர்பார்த்த அடுத்தடுத்த வாய்ப்புகள் தொடர்ந்து வர, தொழில்முறையில் ஏற்பட்ட முன்னேற்றம் அவன் தொழில் வேகத்தை கூட்டியிருந்தது. வேலை பளு, நேரமின்மை என காதல் மனதை கட்டி வைத்து, இரவும் பகலும் ஓடிக் கொண்டிருந்தான் அவன். 

 

 ***

 

காதல் கூத்து கட்டும்…

(இன்னைக்கு சின்ன பதிவு தான் ஃப்ரண்ஸ். அடுத்த பதிவு புதன் அன்று. நன்றி ஃப்ரண்ஸ்)