காதல்களம் 22

காதல்களம் 22

வேணியின் செயலால் பாண்டியின் மனது வெகுவாக ரணப்பட்டு போயிருந்தது. அந்த ரணத்தை ஆற்றுபவன் போல, மது போதையை உள்ளுக்குள் இறக்கிக் கொண்டிருந்தான்.

தங்கள் திருமணத்திற்கு முன்பு அவள் அவனை எதிரியாக நினைத்து ஏதேதோ செய்தபோதே பொறுக்க முடியாமல் அவளை தூக்கி வந்தவன், இப்போது திருமணமாகிய பிறகும் அவள் அதே மனநிலையில் இருப்பது அவன் ஆத்திரத்தை அதிமாக்கிக் கொண்டே போனது.

போதையும் கோபமும் அவன் கண்ணை மறைக்க, வேணியும் கதிரும் உறங்கியிருந்த அறைக்குள் தள்ளாடியபடியே நுழைந்தான் பாண்டி.

அசைவற்ற உறக்கத்தில் இருந்த இருவரையும் கவனித்தவன், கதிரின் கேசத்தை பட்டும் படாமல் வாஞ்சையாக வருடி கொடுத்துவிட்டு, அருகிருந்த வேணியைப் பார்த்தவன் முகம் இறுகியது.

கட்டிலை சுற்றிக்கொண்டு அவளருக்கே வந்தவன், போதையில் மங்கலாக தெரிந்த கண்களை மூடி‌‌ மூடி திறந்து, அவளது சாந்தமான முகத்தை உற்று பார்த்தவன், அப்படியே சரிந்து அவள்மேல் விழுந்தான்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேணி, பாண்டி போதையில் அவள் மேல் விழுந்து, அவளிதழில் அழுத்தமான முத்தம் பதித்ததில் திணறிப்போனாள். முதலில் கனவென்று நினைத்தவள், அவன் நெருக்கத்தில் மிரண்டு விழித்துக்கொள்ள, அவனோ அவளிதழில் ஆழ ஆழ புதைந்து கொண்டிருந்தான்.

இவள் அதிர்ந்து அவனை தன்னிடமிருந்து விலக்க முயன்றாள். முடியவில்லை. அவன் குடித்திருப்பதை உணர்ந்தவள், கோபத்தில் அவனை அடிக்க தொடங்க, அவளிதழை விடுவித்தவன், தன் வாய்மேல் கைவைத்து, “உஷ்… சவுண்ட் உடாத” என்று, அவளருகில் படுத்திருந்த கதிரை பார்த்து வாஞ்சையாக சிரித்துவிட்டு, அவனை முறைத்தபடி படுத்திருந்தவளை அலேக்காக தூக்கிக் கொண்டான்.

“ஏய், விடு என்னை, உன்னால நேராவே நிக்க முடியல இதுல என்னை வேற தூக்கற. விடு…” அவள் பற்களை கடித்தபடி திட்ட,

“எவ்ளோ குட்ச்சாலும் இந்த கிங்கு ஸ்டெடிடீ.” என்று கெத்து காட்டி நடந்தவன் வடக்கும் தெற்குமாக தள்ளாடி நடக்க, எங்கே அவன் தன்னை கீழே போட்டு விடுவானோ என்ற பயத்தில், வேணி அவனை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

அதை அவளின் நெருக்கமாக உணர்ந்தவன், அவள் முகம் பார்த்து ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு, தங்கள் அறை கட்டிலில், அவளை பொத்தென்று போட்டான்.

மெத்தை மேல் வீசப்பட்ட வலியில் முகத்தைச் சுருக்கிக் கொண்டு அங்கிருந்து எழுந்து போக முயன்றவளுக்கு வாய்ப்பளிக்காதவன், அவளை ஆக்கிரமித்து கொண்டான்.

“ச்சீ… என்னைவிடு. குடிகாரா, குடிச்சிட்டு வராதனு சொன்னா கேக்குறியா…” என்று குரலுயர்த்தி திமிறியவளை, அதற்கு மேல் பாண்டி பேசவிடவில்லை.

அவனது வேகத்திலும் வலிமையிலும் வேணி தான் திண்டாடிப்போனாள். அவனது அத்துமீறலை முடிந்தவரை தடுத்து, விலக முயன்றவளால் அவனிடம் போராட மட்டுமே முடிந்தது. அவனை தடுக்க முடியவில்லை.

இத்தனை நாட்களில் பாண்டியைப் பற்றி ஓரளவு நல்லெண்ணம் வந்திருந்தது அவளுக்கு. அவனது தோற்றமும் பேச்சும் கரடுமுரடாக இருந்தாலும், பதமாக அவனிடம் எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வான் என்பதை அறிந்து வைத்திருந்தாள். அதனாலேயே முன்பு போல் அவனிடம் ஏட்டிக்குப்போட்டி எதிர்த்து பேசாமல் நிதானமாக பேசி தன் நிலையையும் புரிய வைத்திருந்தாள்.

இதுவரை ஒழுங்காக ஒதுங்கி இருந்தவனுக்கு இன்று ஏன் இத்தனை ஆவேசம் என்பது அவளுக்கு புரியவில்லை. அவனிடம் கேட்கும் சந்தர்ப்பத்தை கூட அவன் தரவில்லை.

பூவுக்கும் தெரியாமல், பூவிதழுக்கும் நோகாமல் தேனை களவாடும் வண்டாய் புணரும் சங்கமத்தின் நுணுக்கங்களை மறந்தவன் போல, பூவோடு சேர்த்து செடியையும் கொய்தெடுக்கும் புயல் காற்றாய் அவளை சுழற்றி எடுத்துக் கொண்டிருந்தான் பாண்டி.

ஒருநிலைக்கு மேல் வேணியால் போராட இயலாது, அவள் மென்கரங்கள் வலியில் துவண்டு விழுந்தன. ‘இவ்வளவே தானா… இன்றோடு எல்லாமே முடிந்ததா? அவளுக்கான ஆசை, விருப்பம், போராட்டம், வாழ்க்கை… எல்லாமே, எல்லாமே இத்தோடு அழிந்து போனதா?’ அவளுள்ளம் கலங்கி கதறியது.

அவளின் மறுப்புகளும் எதிர்ப்புக்களும் அடங்கிப்போக, பாண்டியின் முரட்டுத்தனங்களும் மெல்ல மெல்ல குறைந்து, புயலானவன் பூந்தென்றலாய் தணிந்து, பூவானவளை இதமாய் ஆட்கொள்ளத் தொடங்கினான்.

தேவை தீர்ந்து களைத்து கண் மூடியவனின் அணைப்பில் இருந்து வேணி விடுபட்டு விலக, அவள் விலகலில் அவன் அணைப்பு மேலும் அவளை தன்னோடு சேர்த்து இறுக்கியது.

இயலாமையின் வெதும்பலில், இமைகளை அழுத்தி மூடி அவன் நெஞ்சோடு சாய்ந்து கொண்டவளின் கண்ணீர், அவனது கல்லான நெஞ்சத்தை ஈரமாக்கி வழிந்தது.

“இப்ப இன்னா தப்பாயி போச்சினு அயிது என்ன அசிங்கப்படுத்திக்கீற நீ?” பாண்டி கண்களை திறக்காமல் அவளிடம் கேட்க,

“ச்சீ நீயெல்லாம் மனுசனே இல்ல” வேணி அவன் நெஞ்சில் மீது கோபமாக குத்தி, தேம்பலோடு அவனை ஏசினாள்.

“நான் மனுசனோ இல்லியோ உன் புருஷன்னு ஒத்துக்கிற இல்ல?” என்றவன் அவளை தன்னிடமிருந்து விலக்கி நிமிர்த்தி, சீற்றமாக அவள் முகம் பார்த்தான்.

வியர்வையிலும் கண்ணீரிலும் களைத்து ஒளிமங்கி கிடந்த அவள் முகத்தைப் பார்க்க, அவனுக்கே பாவமாக இருந்தது. அவன் பார்வையில் சினந்தவளாய் தன் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

“ஓவரா திருப்பிக்காதடீ இதுக்கல்லாம் நீயும் தான் காரணம்.” என்றவன் அவள் முகத்தில் முகாமிட்டிருந்த மயிரிழைகளை விரலால் விலக்கி விட,

அவன் கையைத் தட்டி விட்டவள், “நான் என்ன பண்ணேன்? எனக்கு கொஞ்சம் டைம் கொடுன்னு தான கேட்டேன்…” என்றவளின் விழிகளில் கண்ணீர் குளங்கட்டியது.

“டைம் உனுக்குன்னு கேட்டுக்கினியா இல்ல என்ன ஜெயில்ல தள்ற வரீக்கும் என்னாண்ட இர்ந்து தள்ளி இர்ந்துக்க கேட்டுக்கினியா?” அவன் கேட்ட கேள்வியில் வேணியின் கண்கள் அதிர்ந்து விரிந்தன.

அவளின் அதிர்ந்த முகத்தை நெருங்கி வந்தவன், “என்ன புருஷனா நென்ச்சி இர்ந்தீனா, என்ன ஜெயிலுக்கு அனுப்ப துணிஞ்சிக்கிவியாடீ? இனிமே நெனப்பு இர்ந்துக்குல்ல… நான் உனுக்கு என்னனு…” என்றவன் வலக்கரம் அவளின் இடக்கன்னத்தை வருடி கழுத்தில் இறங்க,

அத்தோடு அவன் கரத்தை தடுத்து பற்றிக்கொண்டவள், “ஆமா, நீ இதுவரைக்கும் செஞ்ச தப்புக்கெல்லாம் தண்டனை அனுபவிக்கனும்னு நினச்சேன். அப்பவாவது நீ மத்தவங்களுக்கு செஞ்ச பாவத்துல கொஞ்சமாவது குறையுமேன்ற நப்பாசை எனக்கு…

கதிருக்காக உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன் தான், ஆனாலும் உன்னப்போல கொலைக்கார ரௌடி கூட என்னால எப்படி குடும்பம் நடத்த முடியும்? ஜெயிலுக்கு போயிட்டு வந்தாலாவது இந்த ரௌடி தொழிலெல்லாம் விட்டுட்டு சாதாரண மனுசனா எங்க கூட இருப்பன்னு நினச்சி தான் இதெல்லாம் செஞ்சேன் போதுமா?” என்றவளுக்கு தொண்டை அடைத்து, மேலும் அழுகை தான் வந்தது.

மாறாக, அவள் சொன்னதில் பாண்டியின் இறுக்கமான முகம் இளகிட, அவன் இதழில் புன்னகை கூட நெளிந்தது.

அவளை அப்படியே அள்ளி தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், “அடீ ராங்கி, இந்த ஓட்ட பிளான என்னாண்ட முதல்லயே சொல்லிகிலாம் இல்ல. இப்பிடி உன்ன கஷ்டப்பட்த்தி இர்க்க மாட்னே.” அவளிடம் சலுகையாக சொன்னான்.

“உனக்கு எல்லாரையும் கஷ்டப்படுத்த மட்டும் தான தெரியும். விடு என்னை” ஆத்திரமாக விலக திமிறியவளை, இடையோடு சேர்த்து இன்னும் இழுத்துக் கொண்டவன் பிடியில், அவள் தளர்ந்து போனாள்.

“ரொம்ப வலிக்குது பாண்டி, என்னை விடேன் ப்ளீஸ்” வேணியின் கெஞ்சலில், அவன் கரங்கள் தன்னால் விலகிக் கொண்டன.

கண்ணீரை துடைத்தபடி எழுந்து குளியலறைக்குள் புகுந்தவள், அரை மணி நேரம் கழித்து, குளித்து, உடலில் சுற்றிய துண்டோடு வெளிவந்தாள்.

“ஏ ராங்கிகாரி, இப்ப எதுக்காண்டி குளிச்சிக்கின?”

பாண்டியின் அதட்டலை கேட்டுக் கொள்ளாதவள், கப்போர்ட்டை திறக்க அதில் பாண்டியின் உடைகள் மட்டும் தான் இருந்தது. அதில் ஒரு சட்டை, லுங்கியை எடுத்து துண்டின் மேலேயே அணிந்து கொண்டவளை பார்த்திருந்த அவன் கண்களோடு சேர்த்து முகமும் சிரித்தது.

அவள் அப்படியே அந்த அறையை விட்டு வெளியேறப் போக, “இப்ப எங்கடீ போயிக்கிற?” பாண்டியின் அதட்டலில் நின்று கோபமாக திரும்பியவள், “கதிர் என்னை தேடுவான். நான் குழந்தை கூட தூங்கிக்கிறேன்.” என்றவளை,

“அவன விட நான்தான்டீ உன்ன ரொம்ப தேடிக்கிறேன். இங்க வா.” என்றழைத்தான்.

முடியாது என்பதைப் போல அவள் அசையாமல் நின்றிருக்க, “இப்ப நீ என்னாண்ட வந்துக்கல, நான் எயிந்து உன்னாண்ட வந்துக்குவேன்.” அவனது வம்படியான மிரட்டலில் முகத்தை சுளித்தவள், வேண்டாவெறுப்பாய் வந்து, கட்டிலின் மறுமுனையில் திரும்பி படுத்துக் கொண்டாள்.

தனக்கு முதுகை காட்டி படுத்திருந்தவளுக்கு போர்வையைக் கொடுத்தவன், இரு கைகளையும் உயர்த்தி சோம்பல் முறித்துவிட்டு படுக்கையில் சரிந்தான்.

அவள் உடலும் மனமும் அத்தனை சோர்ந்து கிடந்தும் அவளுக்கு உறக்கம் வருமென்று தோன்றவில்லை. குளித்து வந்ததால் கண்ணீரும் மட்டுப்பட்டிருந்தது. ஆனால் உள்ளுக்குள் தாளாத வேதனையின் அழுத்தம் அவளை உயிரோடு வதைத்துக் கொண்டிருந்தது.

“எனுக்கு என் அப்பன்னா ரொம்ப புடிக்கும்…” பாண்டியின் குரலில் அவள் திரும்பி பார்க்க,

மல்லாந்து படுத்திருந்தவனின் பார்வை விட்டத்தில் படிந்திருக்க, அவன் வாய்மொழி அவளிடம் எதையோ ஒப்பித்துக் கொண்டிருந்தது.

“என் அப்பா பேரு வேல்பாண்டி. பால்காரன் வேலுன்னு தான் அல்லாரும் அவர கூப்புட்டுக்குவாங்க. பெருசா ஓட்டு வூடு எங்குளுது. சுத்தி வூடு இருக்கும் நடுவுல கம்பி வச்சு தாவாரம் அகலமா இருக்கும். மய(மழை) வந்துகினா நான் அங்க நின்னு ஆட்டம் போட்டுக்கினது, அம்மா என்ன துரத்தி விரட்டிகினது அல்லாம் இப்பவும் கொஞ்சூண்டு நாபகம் இர்ந்துகீது.”

அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்தும் புரியாத நிலையில், வேணி எழுந்தமர்ந்து அவன் பேச்சை கவனித்தாள்.

“என் அம்மா பேரு கலைவாணி, பாக்க அம்சமா இர்ந்துக்கும். ரொம்ப சாது என் அம்மா. எங்களுக்கு அப்பவே பத்து மாடு இர்ந்துது. அதுல பால் கறந்துக்குனு, ஊருல மாடு இர்க்க வூட்டுலயும் பால கறந்துகுனு வந்து, டவுன்ல போய் பால ஊத்திக்கினு வருவாரு அப்பா.

டெய்லியும் மார்னிங்கும் ஈவ்னிங்கும் பழைய டிவிஎஸ் பிப்டி ஸ்கூட்டர்ல பால் டின்ன கட்டிக்கினு அப்பா வண்டி ஓட்டறதை பாத்துக்குனா எனுக்கு அப்பிடி இர்ந்துக்கும். ஸ்கூல் லீவ் வுட்டுக்குனா அப்பா கூட தான் ஸ்கூட்டர்ல சுத்துவேன். ஸ்கூட்டர் பின்னால பால் டின்னு கட்டிவச்சி இர்ந்துக்கும். அதால முன்னால தான் குந்திகினு போவேன்…

அப்பிடி தான் அன்னிக்கி சாங்காலம் அப்பா கூட நானும் பால் ஊத்த டவுனுக்கு போயிர்ந்துக்கினே… என் சித்தப்பா நடு வழியில வண்டிய நிற்த்தி ஏதோ பேசுனாரு. அப்பாவும் ஏதோ கோவமா கத்துனாரு. ஏன் அவுங்க சண்ட போட்டுக்கீனாங்கனு எனுக்கு அப்ப தெர்ல. நான் வேடிக்க பார்த்துக்குனு நின்னேன்.

தபான்னு என் சித்தப்பா கத்திய எட்த்து என் அப்பாவ குத்திட்டாரு. அப்பா அப்பிடியே ஸ்கூட்டர் மேல சாஞ்சிட்டாரு. கீழ விழுந்துகின டின்னு பாலோட சேந்து என் அப்பாவோட ரத்தமும் கலந்து ரோட்டுல ஓடுச்சு… அத்த பாத்து நா பதறிக்கினேன். அப்பா அப்பான்னு கத்திக்கினேன். அப்பா எத்திரிக்கல.

திரும்பி பாத்தா, சித்தப்பா கத்திய வேலில வீசிட்டு அவரு பாட்டுக்கு நட்ந்து போயினுகீறாரு.

அப்ப எங்கிருந்து தான் எனுக்கு அத்தினி ஆத்தரம் வந்துகிச்சுன்னு தெரில… ஓடிப்போயி வேலி அடியில கிடந்த கத்திய எட்த்து, என் சித்தப்பாவ குத்திட்டேன்…

என் அப்பா செத்துட்டாரு. இனிமே என் அப்பா எந்திக்க மாட்டாரு. என்னாண்ட பேச மாட்டாரு. அவன் என் அப்பாவ கொன்னுட்டான், அப்ப அது மட்டுந்தான் என் மன்சுல இர்ந்துகிச்சு. 

நா அவன என் கையால குத்தி கொன்னுட்டேன்னு அப்பறம் தான் எனுக்கு உறைச்சிக்கிச்சு… கத்தினே… கதறி அயிதுகினே… என் கையல்லாம் ரத்தம்… என் வெள்ள யூனிபார்ம் சட்டையெல்லாம் ரத்தம், என் மூஞ்சி அல்லாம் ரத்தம்…”

“பாண்டி… போதும் விடு…” வேணி மிரண்டு அவன் தோளை தொட்டு அசைத்தாள்.

பாண்டியின் வெற்று பார்வை விட்டத்திலிருந்து அவளிடம் திரும்பியது. “அல்லாத்தையும் இப்பவே உன்னாண்ட சொல்லிக்கனும்னு தோணிக்கிதுடீ… அப்பால நீயா கேட்டுக்கினாலும் சொல்லிக்க மாட்டேன்” என்றவன் பார்வை மறுபடி விட்டத்தை வெறித்தது.

“ஏன் உன் சித்தப்பாவே உன் அப்பாவ…” வேணி தயங்கி கேட்டு நிறுத்தினாள்.

பாண்டியிடமிருந்து ஒற்றை பெருமூச்சு வெளிவந்தது.

“ஏதோ சொத்து தகராறுன்னு சொல்லிக்கினாங்க” விரக்தியாக சொன்னவன்,

“எட்டாங் கிளாஸ் பையன் கொலைகாரன்னு அப்ப பேப்பர்ல அல்லாம் என் பேர் வந்துகிச்சு தெரிமா? நான் மைனருன்னு சிறுவர் சீர்திருத்த ஸ்கூல்ல அஞ்சு வருசம் இருந்துக்கனும்னு தீர்ப்பு வந்துகிச்சு.

அடுத்த அஞ்சு வர்ஷம் தண்டனைய அனுபவிச்சிக்கினு, அப்பால அம்மாவாண்ட போய் ஜாலியா இர்ந்தக்கலாம்னு கனவல்லாம் கண்டுனு கிடந்தேன். அதுக்கு என் அம்மா சக்கையா ஆப்பு வச்சிகிச்சு.” என்றதும் வேணி அவனை கேள்வியாக பார்த்தாள்.

“புருசன் செத்து போயிக்கினா, புள்ள கொலை பண்ணிக்கினு ஜெயிலுக்கு போயிக்கினா, ஊரெல்லாம் அவமானமா போச்சு, மானங்கெட்டு வாய்ந்து இன்னா புண்ணியம்னு வூட்டு முத்தத்துல தொங்கிகிச்சு…”

“அய்யோ! முருகா!” வேணியின் நெஞ்சம் பதறியது. பாண்டி பதறாமல் விரக்தியாக சொல்லிக் கொண்டே போனான்.

“என் அப்பன் செத்தத பாத்து அம்மாம் அயிதுகின எனுக்கு, என் அம்மா போணத்த பாத்து ஒரு சொட்டு தண்ணீ வந்துகல என் கண்ணுல இர்ந்து… எனுக்காக இனிமே என் அம்மா இர்க்கும்னு ரொம்ப நம்பிக்கினு இர்ந்தேனா, அந்த நம்பிக்கை அங்க ஒடஞ்சி போயிகிச்சு. அன்னிக்கு அம்மாக்கு கொள்ளி வச்சிட்டு வந்துகினது தான் இன்னிவரீக்கும் அந்த ஊர் பக்கம் தல வச்சி படுக்கல.” என்றான். சிறு வயதில் பட்ட வேதனையின் சாயல் அவன் முகமெங்கும்.

வேணி மனமிறங்கி அவனிடம் பேசினாள். “உங்க குடும்பத்துல சொத்து தகராறு இருந்துச்சின்னு சொன்னல்ல, அவங்க எல்லாம் தனியா இருக்க உங்க அம்மாவ மிரட்டி இருக்கலாம்… இல்ல யாராவது தப்பா கூட நடந்து இருக்கலாம்… தனியா இருக்கிற பொண்ணுங்களுக்கு இந்த உலகத்துல பாதுகாப்பு இருக்கறதில்லயே…

அதுவும் ஒரே நாள்ல புருசனை இழந்து, பெத்த மகனும் கொலக்காரனா ஜெயிலுக்கு போறது, அவங்கள எவ்வளோ தூரம் பாதிச்சு இருக்கும், அதையும் நாம யோசிக்கனும் பாண்டி.

உங்க அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டதை நான் சரின்னு சொல்லல, அதேநேரம், யாரும் அவ்வளோ சுலபமா உயிரை மாய்ச்சிக்க துணிய மாட்டாங்க.”

வேணி ஆறுதலாக சொல்லவும் தலையை அசைத்தவன், “என்னவோ ஒன்னு, ஜெயில்ல இர்ந்து வெளிய வந்து நான் அனாதையா நின்னேன். எங்க போவனும், என்ன செய்யனும் ஒன்னுமே தெரியாம, சுத்திக்கினு கிடந்தேன். பசி… யாராண்ட கேக்கறதுன்னு தெரியில.

ஒருநாளு, ரெண்டு நாளு, மூணு நாளு கொல பட்டினி… கண்ணு இருண்டு போயிக்கிச்சி… காது ரெண்டும் அடஞ்சி போயிகிச்சி… ஒவ்வொரு கடையா ஏறி இறங்கி வேல கேட்டுக்கினே… வெக்கத்த வுட்டு பசின்னு சொல்லியே வேல கேட்டேன். எவனும் கொடுக்கல… ஒருத்தன் என் மூஞ்சி மேல எச்சி தண்ணீய ஊத்திக்கினா… வந்தூச்சி பாரு எனுக்கு கோபம்… அந்த கடையில இருந்த ஒவ்வொருத்தனையும் அட்ச்சி போட்டு, அங்கிருந்த குஸ்கா பொட்டலத்த திருடிகினே…” என்றவன்,

அவளிடம் திரும்பி, “உனுக்கு தெரிமா? அதான் நான் மொதலும் கட்ச்சீயுமா திருடுன திருட்டு.” என்றான்.

வேணிக்கு எதுவும் பேச வார்த்தை வரவில்லை. அவன் வாழ்க்கையில் மிகவும் அடிபட்டு வந்திருக்கிறான் என்பது மட்டும் நன்றாகவே புரிந்தது. அங்கேயே பிறந்து வளர்ந்து ரௌடியாக மாறுவது வேறு, நல்ல குடும்பத்தில் நல்ல முறையில் வளர்ந்து, திடீரென எல்லாம் மாறிப்போவது, நினைக்கும்போதே அவள் நெஞ்சம் நடுங்கியது.

“அன்னிக்கு தான் காளிண்ணே என்ன அது கூட சேர்த்துக்கிச்சு… அப்பால…” என்று மேலும் பேச போனவன் வாயை அவள் கரங்கொண்டு மூடி இருந்தாள் வேணி.

“போதும்… நான் தூங்கனும்” என்றாள் மேலும் அவன் சொல்வதை கேட்டுக்கொள்ள சக்தி அற்றவளாய்.

“சரி, நீ தூங்கு, உன்னால என் போதல்லாம் எறங்கி போயிகிச்சு. இனிமே எனுக்கு தூக்கம் வந்த மாறி தான்.” என்றவனை வேணி வஞ்சனையின்றி முறைத்து வைத்தாள்.

“என் அம்மா மாறி தான் உன் அக்காளும், கிங்கு நீ பெரிய ரௌடி ஆயிக்கினும் ஊரே உன்ன கண்டா மிரண்டுக்கனும்னு வாய் கிழிய கிழிய பேசிக்கினா… கட்ச்சீல, நான் ஜெயிலுக்கு போன மூணே நாள்ல தூக்குல தொங்கிட்டா. ரெண்டு பேருமே என்னபத்தி நெனக்காம அவங்க கஷ்டம் தான் பெர்சுன்னு போயிக்கினாங்க.” விரக்தியாக சொன்னவனை அவள் பரிதாபமாக பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

பாண்டி அவளை பார்த்து, “ஏன் உக்கார்ந்துனு கீற தூங்குடி” எனவும், அவள் மறுப்பாய் தலையசைக்க, அவனும் எழுந்து அவளை நெருங்கி வந்தவன், அவள் கன்னத்தில் கைகொடுத்து அவள் நெற்றியோடு நெற்றி முட்டி கண்மூடிக் கொண்டான்.

“எனுக்கு அப்பத்துல இர்ந்து ஓரே ஆசை தான்டீ… எனுக்குனு என் குடும்பம் வோணும்… எனுக்குன்னு ஒருத்தி என்ன தாங்கிக்கனும், என்ன மடியேந்திக்கினும்… நான் பட்ட கஷ்டத்துக்கு அல்லாம் சேத்து அவ கூட சந்தோஷமா வாழ்ந்துக்கணும்…

அந்த ஒருத்தியா உன் அக்கா இல்லாம என்ன பாதியில வுட்டு போயிக்கினா… நீ இருப்பியா என்கூட… நான் செத்துப்போற வரீக்கும்… இப்பிடியே என்னாண்ட மொறச்சிக்கினு, என்னாண்ட உரசிக்கினு, என்ன திட்டிக்குனு, என்ன விரட்டிக்கினு…” அவன் நெற்றியோடு நெற்றி உரசி கேட்க, அவனது பரிதவிப்பில் முதல்முறை அவனிடம் உருகி கொண்டிருந்தாள் அவள்.

“ம்ம்…” என்றவள் விழி நிமிர்த்தி அவன் முகம் பார்க்க, அவன் கண்ணோரங்கள் கண்ணீரில் நனைந்திருந்தன.

அதற்குமேல் பாண்டி ஏதும் பேசவில்லை. அவள் மடியில் தலைசாய்த்து கண்கள் மூடிக்கொண்டான்.

வேணிக்கு நெஞ்சம் அடைப்பது போல் இருந்தது. இதையெல்லாம் அவன் தன்னிடம் சொல்லாமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

கிருஷ்ணவேணி தவிக்கவிட்டு போனது கதிரை மட்டுமல்ல, இந்த வளர்ந்து கெட்டவனையும் தான் என்றெண்ணம் தோன்ற, அவன் கற்றை கேசத்தில் தயக்கமாக விரல் கொடுத்து மெதுவாக வருடித் தந்தாள்.

அவளின் மென்விரல் ஸ்பரிசத்தில், தன் முகத்தை அவள் மடிக்குள் இன்னும் புதைத்துக் கொண்டவன், இதுவரை எட்டாத உறக்கத்தை இன்று எட்டி இருந்தான்.

சற்றுமுன் அவன் தந்த உடல் வலியையும் பொறுத்துக் கொண்டவள், விடியும் மட்டும் அவனை விலக்காமல் தன் மடியேந்தி கொண்டிருந்தாள்.

***

காதல் களமாடும்…