காதல்களம் 24

காதல்களம் 24

அவள் சென்ற இடமெல்லாம் அவன் பார்வையும் நகர்ந்து கொண்டிருந்தது. யாருமே இல்லாத வீட்டில் ஒன்றுமே இல்லாத வேலையை மாற்றி மாற்றி செய்து கொண்டிருந்தாள் அவளும்.

சென்னையில் ஒருவாரமாக நல்ல மழை, இரண்டு நாட்களாக மழை எச்சரிக்கை இருக்க, இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்ற அறிவிப்பு வந்திருந்தது. வேணிக்கு கல்லூரி இருக்கவே அவள் வேலைக்கு சென்றுவிட, கதிரின் அட்டகாசம் தான் வீடு முழுவதும்.

பாண்டி வேலையாக பண்ணைக்கு கிளம்ப, கதிரை தனியே விட மனதின்றி அவனையும் அழைத்துக்கொண்டான். கதிரை பார்த்துக்கொள்ளவென உடன் கௌரி, கோதண்டம் தாத்தாவையும் கூட்டி சென்று பண்ணை வீட்டில் விட்டிருந்தான்.

மாலையில் வேணியைக் கல்லூரியில் இருந்து அழைத்துக் கொண்டு வீடு வந்திருந்தான். வெளியே அடை மழை வேறு அடைக்காமல் கொட்டிக் கொண்டிருக்க, குளுகுளுவென்றிருந்த மந்தமான‌ காலநிலை அவனுக்குள்ளும் மந்தமான உணர்வை தந்திருந்தது.

வேணி மழையில் பாதி நனைந்தபடியே வந்து காரில் ஏறியிருக்க, அப்போதே அவளிடமிருந்து அவனால் பார்வையை விலக்க முடியாமல் திண்டாடினான். இப்போதோ வீட்டுக்குள் அவளும் அவனும் மட்டுமே‌ தனித்திருக்க, அவனுக்குள் தகித்துக் கொண்டிருந்தான்.

நேராக அறைக்குள் வந்து முகம் கழுவிவிட்டு, சமயலறை வந்தவளுக்கு சூடாக காபி அருந்த தோன்ற, பாலை சூடேற்றினாள். முதல்முறை வீட்டுக்குள் யாருமில்லாத இந்த தனிமை, ஓயாது அடிக்கும் அடைமழை சத்தம், கணவனின் தடுமாறும் பார்வை என, அவளும் சற்று தடுமாறிக் கொண்டிருந்தாள்.

இரண்டு கப்பில் காபி எடுத்து வந்து ஒன்றை அவனுக்கு தந்துவிட்டு, அவனெதிரில் அமர்ந்து தானும் ருசித்து பருகினாள். சூடும் சுவையுமாக தொண்டைக்குள் இறங்கிய மிடறு அத்தனை இதமாக இருந்தது அவளுக்கு.

அவள் ரசித்து ருசித்து ஒவ்வொரு மிடறாக பருக பருக, ஏறி இறங்கும் அவளது தொண்டைக்குழியில் எதிரிலிருப்பவனும் விழுங்கப்பட்டு கொண்டிருந்தான்.

இருவரிடமும் எந்த பேச்சும் இல்லை. அவள் காபியை பருகிமுடித்து எழுந்து கொள்ள, அவன் கப்பில் பருகப்படாமல் அப்படியே இருந்தது.

“நீங்க குடிக்கலையா? ஏன் நல்லா இல்லயா?” வேணி வினவ,

ஒரே வாயில் கிளாஸ் காபியை குடித்துவிட்டு கப்பை அவளிடம்‌ நீட்டியவனை, அவள் விசித்திரமாக பார்த்துவிட்டு நகர்ந்தாள்.

இரவுக்கு தங்கள் இருவருக்கு மட்டும்‌ என்ன சமைக்கலாம்? என்று யோசித்தப்படியே, காபி கப்புகளை கழுவி வைக்க, சமையலறை வாயிலில் பார்வையால் அவளை கொக்கியிட்டு நிற்பவனை கவனித்து, சற்று துணுக்குற்றாள்.

“எஎ… என்ன?”

அவள் வினாவுக்கு, அவன் தலை தன்னால் இடவலமாக அசைந்தது.

“நைட்டுக்கு என்ன செய்யட்டும், நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தான.” அவள் அவனிடமே கேட்க,

அதற்கும் இடவலமாக தலையசைத்தவன், “வெளியே ரெண்டு பசங்க இருக்கானுங்க, அவனுங்களுக்கும் சேத்து ஏதாது செய்யி.” என்றான்.

பிரிட்ஜை திறந்து என்ன செய்யலாம் என்று ஆராய்ந்துவிட்டு திரும்ப, அவன் மீது மோதி நின்றாள். பாண்டி தனக்கு அத்தனை பக்கத்தில் நிற்பான் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.

“இப்ப என்ன வேணும் உங்களுக்கு?” அவள் சற்று காட்டமாகவே கேட்க,

“முடிலடீ… மூச்சி முட்டிக்குது எனுக்கு… ஒருவாட்டி கட்டிக்கவாடீ?” பாண்டி அத்தனை பாவம் போல கேட்க, வேணி சற்றே கண்களை உயர்த்தி அவனை அசையாமல் பார்த்து நின்றாள்.

அவள்‌ பார்வை அவனுக்கு விளங்கவில்லை. “ஒரேயொரு ஹக்கு தான்டீ, வாணான்னு மட்டும் சொல்லிக்காத.” அவன் கெஞ்சி நிற்கவும், அவளிடம் எந்த மாற்றமும் இல்லை.

“ஏ… ராங்கி…” வழக்கத்திற்கு மாறாக அவன் குரல் அத்தனை குழைந்து ஒலிக்க, வேணி மிரண்டு விலகும் முன்னே, அவன் கைகள் அவளை தன்னோடு வளைத்து கட்டியிருந்தன.

அத்தனை நெருக்கத்தில், அவன் வாசம் அவள் நாசி முழுக்க நிறைய, மூச்சு முட்டியவளாக, மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டாள்.

“விவி… விடுங்க…” அவன் பிடியிலிந்து அவள் நழுவ முயல, அவளால் முயல மட்டுமே முடிந்தது. அவன் மீசை, தாடை முடிகள் அவள் கழுத்தடியில் உரசி, அவள் கன்னக்குழியில் அழுந்திப் புதைய, அவள் கால்கள் தள்ளாட தடுமாறியவளை, அவன் இன்னும் தன்னோடு இழுத்துக் கொண்டான்.

“இதென்ன இப்படி? முதல்ல விடுங்க என்னை…” இப்போது திக்காமல் வார்த்தைகளை கூட்டி சேர்த்து அவனை அதட்டினாள்.

“வெளில ஜில்லுனு கீதுடீ… எனுக்குள்ள நெருப்பாட்டமா கொதிச்சுக்கிது. கொஞ்சம் அணச்சிக்க வாயேன்டீ” அவன் குரல் கிறங்கி வழிய,

“இந்த கொஞ்சுற மிஞ்சுற வேலையெல்லாம் வேற எவகிட்டனா வச்சிக்கங்க. என்கிட்ட வேணா” என்று திமிறி விலகி அவனை முறைத்து நின்றாள் வேணி.

“கட்டிகினவ நீ இர்ந்துக்குறப்போ, நான் ஏன்டீ எவளாண்டயோ ஊர் மேய போறேன்?” அவள் பேச்சில், விலகலில் அவனும் காட்டமானான்.

“ஆமா, நீங்க உத்தம‌ மவராசன் பாரு. நான் நம்பனும் அதை” என்றாள் அவளும் இடக்காக.

“என்மேல டவுட் இர்ந்துக்குனா நேரா சொல்லிக்கடீ. நான் இதுவரைக்கும் ஒத்த புள்ளைக்கு மட்டும்தான் அப்பனா இர்க்கேன். அப்படி நான் இன்னொரு புள்ளக்கி அப்பனாயிக்கினா… அந்த புள்ளய நீதான் பெத்து தந்துக்கனும் சரியா.” நெருங்கி நின்று நிஜமாய் சொன்னவனை, முகம் கசங்கி பார்த்தாள்.

“அப்படி ஒன்னு கனவுல கூட நடக்காது… உன் ரௌடி நிழல்ல இருந்து கதிரை காப்பாத்தவே படாதபாடு பட்டுட்டு இருக்கேன், இதுல இன்னொரு குழந்தையும் பெத்துக்க நான் என்ன பைத்தியமா?” என்று ஆத்திரத்தில் கேட்டவளின் முடியை கொத்தாக பிடித்து அவளை அடிக்க கையோங்கி இருந்தான் பாண்டி.

அவனை நேர் நோக்கியவள், “நீ அடிச்சாலும் சரி, நான் உனக்கு குழந்தை பெத்து கொடுக்க மாட்டேன்… ஒரு ரௌடியோட புள்ளயா அவன் இந்த சமூகத்துல சீரழிஞ்சு போறதை என்னால பார்க்க முடியாது.” அவள் அத்தனை ஆவேசமாக சொன்னதும், பாண்டி தளர்ந்து போனான்.

“நான் அப்டி விட்ற மாட்டேன்டீ…” என்று சொன்னவன், அவள் முகத்தை அப்படியே தன் நெஞ்சோடு அழுத்திக் கொள்ள,

“நான் உன்ன நம்பமாட்டேன்… கிருஷ்ணாவ நீ அப்படித்தான விட்டுட்டு போன? அதனால தான அவ செத்துப் போனா?” அவள் கேட்டதில் அவன் உடைந்து போனான்.

அவளை நிமிர்த்தி அவள் கண்ணீர் முகத்தை கைகளில் ஏந்தியவன், “அவள மாறி உன்ன விட்ற மாட்டேன்டீ… அவளுக்கு அவசரம், நான் அத்தினி சொல்லியும் அவ கேட்டுக்கல. என்னை ஏமாத்திக்கினு போயிக்கினா… நீ என்ன ஏமாத்திக்காதடீ. என்ன நம்பு, உனுக்காக கதிருக்காக, பொறக்கப்போற புள்ளைக்காக நான் இருப்பேன்.” என்றவன் அவள் முகம் முழுவதும் ஆவேச முத்தங்களை இறைக்க, திணறிப் போனவள், அவன் கையைத் தட்டிவிட்டு, அவன் நெஞ்சோடு முகம் புதைத்துக் கொண்டாள்.

அவளின் முதல் அணைப்பு. அவனுக்குள் ஹார்மோன் சுரப்பிகளை வெடிக்க செய்தது. அவளை தன்னோடு சேர்த்து இன்னும் இன்னும் இறுக்கிக் கொண்டவன், “ராங்கி… உன்ன தாடீ… வாணான்னு மட்டும் சொல்லிக்காதடீ… இப்பவே உன்னுல பொதஞ்சு சாவ தோணிக்குதுடீ…”

அவன் குரலிலும் இந்த நெருக்கத்திலும் அவள் துணுக்குற்றாள். எங்கோ ஆரம்பித்த பேச்சு இங்கு வந்து நிற்பதை நினைத்து பார்க்க, அவளுக்குள் சொல்லவொண்ணாத நடுக்கம்.

“பயந்துக்காதடீ… நான் அன்னிக்குமாறி மொரடா பண்ணிக்க மாட்டேன்… ம்ம் சொல்லுடி…”

“ம்ஹூம்…” வேகமாக அவளிடமிருந்து மறுப்பு வர, அதே வேகத்தில் அவனது முரட்டு இதழ்கள் அவள் வாய்மூடி இருந்தன.

பூதம் பூதம் என்று பயந்து பதுங்கி நழுவிக்கொண்ட விசயத்தை, இன்று இப்போது அவன் வசத்தில் எடுத்துக் கொண்டான். அவள் மனதோரம் பதற, விழியோரம் கண்ணீர் சிதற, அவளை தனதாக கொள்ளையிட்டுக் கொண்டிருந்தான்.

முதலில் மறுத்தவளும் அடுத்தடுத்த அவன் ஆசைகளுக்கு தடைவிதிக்கவில்லை. அவளது தயக்கத்திலும் தவிப்புகளிலும் தத்தளித்தவன், கரையேற சிறிதும் மனமின்றி அவளுக்குள் மூழ்கி மூழ்கி மூர்ச்சையுறவே எத்தனித்தான்.

அவன் கற்றுத்தந்த மௌன பாடங்களின் அர்த்தத்தில், உணர்வு எழுச்சிகளின் தத்தளிப்பில், அவள் மெல்ல மெல்ல நினைவு தப்பி தன்வசம் இழந்துபோய் கிடந்தாள்.

சிறிதும் மறுப்பில்லா அவள் கொடையில், தடையில்லா சல்லாபத்தை சளிக்காமல் நடத்திக்கொண்டிருந்தான் அவன். வருட கணக்கில் விரதம் காத்து வந்தவன், அத்தனை நாள் பசிக்கும் சேர்த்து ஒரே பொழுதில் உண்டு தீர்க்க முயல்வதைப் போல, அவளோடு முயங்கலில் மூழ்கி திளைத்திருந்தான்.

அவன் காளியை மறந்து போனான்; அவனை சுற்றி இருக்கும் ஆபத்தை பற்றி மறந்து போனான்; அவனை சுற்றி இருப்பவர்களையும் மறந்து போனான்; முன்னால் காதல் மனைவியும் மறந்து போனான்; பெற்ற மகனையும் மறந்து,

அவளின் நெருக்கத்தில் அவனுக்கு எல்லாமே மறந்து போக, அவள் மட்டுமே அவன் நினைவிலும் நிஜத்திலும் கலந்திருந்தாள்.

 

***

 

வேணி முயன்று இமைகளை இழுத்து திறந்த போதும், பாண்டியின் புன்னகை முகமே அவள்முன் தெரிந்தது. இன்னும் இந்த இரவு முடியவில்லையா? அவளுக்குள் அந்த கேள்வி தான் எழுந்தது. அதற்கு மாறாக, விடிந்து வெகுநேரம் ஆனதற்கான அடையாளமாக, மழை மேகமும் தெளிந்து, நன்றாகவே வெளிச்சம் பரவி இருந்தது.

“சாரிடீ” அவள் நெற்றியில் முத்தமிட்டவன், “கதிர் வந்துகுனு கீறான். உன்ன கேட்டு அடம் பண்றானாம். அதான் எழுப்புனேன். இப்பிடி உன்ன பார்த்துக்குனா… அவன் கேள்வி கேட்டே உன்ன நச்சரிச்சிக்குவான். போய் சீக்ரம் குளிச்சிக்கினு வந்துகீறியா?”

அவன் பதமாய் சொல்ல, அவள் தன்னை ஒருமுறை பார்த்துவிட்டு போர்வையோடு எழுத்து சென்றாள். அவள் முகம் முழுவதும் யோசனையிலேயே சிக்கி தவித்திருந்தது.

‘நான் எப்படி அவனுக்குள் அடங்கி போனேன்? ஏதாவது மாயம் மந்திரம் செய்துவிட்டானா அவன்? தன்னால் எப்படி முடிந்தது?’ மறுபடி மறுபடி அவளுக்குள் படையெடுத்த கேள்விகள்.

அவள் உடலில் சுடுநீர் பட்டு எரிச்சல் மிக சுயநினைவுக்கு வந்தவள், வலித்த இடங்களை ஆராய, அங்கங்கே நகக்கீறலும் பல் தடங்களும், அவன்பிடி அழுத்திப்‌ பற்றியிருந்த இடங்கள் கண்ணி சிவந்து இரத்தம் கட்டியிருந்தது.

“ச்சீ மனுசனா அவன்? இப்படி மிருகம் மாதிரி கடிச்சு கொதறி இருக்கான்.” அவனை திட்டிக்கொண்டே குளித்து முடித்து வெளி வந்தாள்.

தன்னை முறைத்துக்கொண்டே வந்து சாப்பிட உட்கார்ந்தவளை, பாண்டி புரியாமல் நெற்றிச் சுருக்கி பார்த்தான்.

“வேணிமா ஜொரமா?” அவள் மடிமீது ஏறி அமர்ந்த கதிர் அவள் நெற்றியில் தன் பிஞ்சு கையை வைத்து சோதித்தபடி வினவ,

அவன் கரத்தை எடுத்து தன் கன்னத்தோடு அழுத்திக் கொண்டவள், “முன்ன இருந்துச்சு… கதிரு கை பட்டவுடன ஜுரம் போயே போச்சு.” என்று சொல்லி புன்னகைக்க, கதிரும் வெட்கம் மிளிர சிரித்து வைத்தான்.

அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் கதிர் பள்ளிக்கு கிளம்ப, வேணி தன்னால் கல்லூரி போக முடியுமா என்ற யோசனையில் தயங்கி நின்றிருந்தாள்.

“அம்மா வரல?” கதிர் காரில் ஏறும்போது கேட்க, வேணி பதிலின்றி நின்றாள்.

“அம்மாவ நான் வந்து கூட்டிக்கினு போவேன்டா, நீ வா” என்ற பாண்டி மகனை மட்டும் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு வந்தான்.

கௌரி மகளிடம் எதையும் கேட்கவில்லை. ஆனால் அவர் பார்வையில் மகளின் மாற்றம் தப்பவில்லை என்பது‌ வேணிக்கு நன்றாகவே புரிந்தது. ஏனோ உள்ளம் ஒடுங்கிக்கொள்ள, அறைக்குள் வந்து முடங்கிக் கொண்டாள்.

அவளால் எதையுமே தெளிவாக யோசிக்க முடியவில்லை, விழிகள் அப்பட்டமாக சோர்ந்துபோயிருக்க, மூளை மொத்தமாக முடங்கிப்‌ போயிருந்தது.

அவளது இடையோடு ஏதோ ஊர்ந்து அவளை இழுத்துக்கொள்ள, பதறி கண் விழித்தவள், பாண்டியின் கை அணைப்பில் இருந்தாள்.

எப்போதும் இருள் பூசி இருக்கும் அவனது முகம், இன்று உள்ளது காட்டும் நீரோடை போல அத்தனை தெளிந்திருக்க, அவனது இளகிய மந்தகாச புன்னகையும் சேர்ந்து அவனை புதிதாக, வசீகரனாக காட்டியது.

தன் பார்வை மாற்றத்தால் தத்தளித்து தலைகவிழ்ந்தவளை அள்ளிச் சேர்த்துக் கொண்டவன், வஞ்சனையற்ற முத்தங்களால் அவளை அரை மயக்க நிலையிலேயே வைத்திருந்தான்.

அந்த பரந்த அறையில் முத்த சத்தம், மூச்சு சத்தம் தவிர வேறு சத்தங்கள் எழவில்லை. பேதையவளின் பேதலித்த நிலையை அறிந்திருந்தவன் அர்த்தமாக சிரித்துக் கொண்டான்.

“ஏ ராங்கி… வீராப்பு வாய் பேச்சு தான்டீ உனுக்கு ஓவரு… மத்த மேட்டர்ல அல்லாம் மக்கா தான் இருந்துகீற.” அவனது முணுமுணுப்பு கூட அவளுக்கு தெளிவற்று தான் கேட்டது.

“ம்ம்?” என்றாள் எதுவும் புரியாதவள் போல.

“இப்பிடியே என்னாண்ட கிறங்கி கிடந்துகின… நைட்டு மாறி பகல்லயும் உன்ன வுடமாட்டேன். பாத்துக்க.” இம்முறை அவள் காதோடு அவன் கிசுகிசுக்க, முயன்று தலையைக் குலுக்கிக்கொண்டு அவனிடமிருந்து விலகி கொண்டாள்.

“ஏன் எனக்கு ஏதோ மாதிரி இருக்கு? பாவீ, எனக்கு ஏதாவது மருந்து கலக்கி கொடுத்துட்டியா? என்னால தெளிவா எதையும் யோசிக்க முடியல.” என்று அவள் புலம்ப, பாண்டி தாங்கமாட்டாமல் சத்தமாய் வாய்விட்டு சிரித்து விட்டான்.

“ஆமா… உனுக்கு அப்டியே மருந்து கலந்து கொட்த்துட்டாலும்… அடியே! உடம்புல கொஞ்சமாவது தெம்பு வச்சிக்கணும்டீ. ஒரு நைட்டுக்கே ஓஞ்சு போயிட்ட. இப்ப கூட உன்ன அப்டியே அள்ளிக்கனும் போல தவிச்சுக்குது எனுக்கு. நீ தாங்க மாட்டீயேன்னு கண்ட்ரோல் பண்ணிக்கீனு தள்ளி இர்ந்துக்கீறேன்.”

அவன் பேச்சில் அவன் தோளில் இரண்டடி அடித்தவள், “நீ கொஞ்சமாவது மனுச தன்மையா நடந்துகிட்டா தானடா என்னால தாங்கிக்க முடியும். மிருகம் மாதிரி என்னை பிச்சு பிராண்டி வச்சிருக்க? இப்படித்தான் கிருஷ்…” அவள் சொல்ல வந்த வார்த்தையோடு சேர்த்து, அவள் இதழ்களையும் தனக்குள் விழுங்கிக் கொள்ள முயன்றான்.

அவன் செய்வது அவளுக்கு புரிந்தது. அவளது உணர்வு நரம்புகள் எல்லாம் அவன் வசம் சாய்வதை அவளால் உணர முடிந்தது. அதை தவிர்த்து அவனை தடுக்கவோ, தன்னிலிருந்து விலக்கி தள்ளவோ கூட அவள் கைகள் சக்தியற்று துவண்டு கிடந்தன.

நொடிகள் நிமிடங்கள் கணக்கற்று இதழ் தழுவலில் திளைத்திருந்தவன், அப்போதும் போதாத மனநிலையில் மெல்ல விலக, அவள் மூர்ச்சையாகி அவன் மார்பிலேயே துவண்டிருந்தாள்.

உறவின் கிறக்கதிலிருந்து இன்னும் வெளிவர தெம்பின்றி மயங்கி கிடப்பவளை மீண்டும் மீண்டும் தனதாக்கிக் கொள்ள, அவன் இச்சை உள்ளுக்குள் பறையறைந்து கொண்டு தான் இருந்தது. ஆனாலும் கொண்டவளுக்கு பாவம் பார்த்து தனதாசையை நிறுத்திக் கொண்டான்.

இப்போதே தன்னை மிருகம் என்று நிந்திப்பவள், உணர்வு மீண்டால் எத்தனை சொல்லி சண்டைக்கு நிற்பாளோ என்று நினைக்க நினைக்க, அவனுக்கு இன்னும் இன்னும் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

“ராங்கி… அடி ராங்கி…” கொஞ்சலோடு அவள் நெற்றியோடு நெற்றி முட்டிக் கொள்ள, “என்னை தூங்க விடு பாண்டி” அவள் முணகினாள்.

அவள் காதோர மயிரிழைகளை விலக்கி விட்டவன், “நான் பக்கத்துல இர்ந்துகினா உன்னால தூங்கிக்க முடியாதுடீ, நான் கிளம்பிக்கீறேன் நீ ரெஸ்ட் எட்த்துக்கோ.” மிக மென்மையான குரலில் அவள் காதோடு சொன்னவன், அவள் மென் காது மடல்களில் மீசை உரச முத்தமிட்டு விலக, அவன் மனைவி அவனை விடாமல் பிடித்திருந்தாள்.

“நீயும் என்னோடவே தூங்கு” அரையளவு கண்ணை திறந்து சொன்னவள், அவன் மார்போடு தன் முகத்தை உரசிவிட்டு, அங்கேயே முகம் பதித்து படுத்துக்கொண்டாள்.

பாண்டியின் முகம் தாங்க மாட்டாத சங்கடத்தில் தவித்து போக, “கொன்னுகிறீயேடீ என்ன… ஏதாது சேதாரம் ஆயிகிச்சு, அப்பால என்ன கேட்டுக்க கூடாது சொல்லிக்கினே.” என்றவனும் அவளோடு படுத்து இமைகளை மூடிக்கொண்டான்.

அவன் இமைக்குள் உறக்கத்தை மீறி, இரவின் நெருக்கங்கள் விரிய, அவனால் அதற்கு மேலும் தாமதிக்க இயலவில்லை. அவளை வாரி சுருட்டி தனக்குள் ஒளித்துக்கொண்டு, தன்னை அவளில் தொலைத்துக் கொண்டிருந்தான்.

வெளுத்திருந்த வானத்தில் மீண்டும் மீண்டும் மேகக்கூட்டங்கள் கூடலில் சங்கமித்துக்கொள்ள, வெளியெங்கும் மங்கும் இருள் பூசிக்கொண்டு, வானமகன் மழைத்தாரை கரங்கள் நீட்டி பூமி காதலியை தன்னோடு அணைக்க முயன்று, காற்றில் எங்கும் குளிர பரவச் செய்திருந்தான்.

***

இருகைகளாலும் தன் தலையை தலையை அடித்துக்கொண்டிருந்தாள் வேணி. பாண்டி அவள் முன் பாவமாக உட்கார்ந்து இருந்தான்.

“கொஞ்சமாவது அறிவிருக்காடா உனக்கு? மனசாட்சியாவது இருக்கா? இப்படியா அநியாயம் பண்ணி வைப்ப?” சிவந்து தடித்திருந்த உதடுகள் எரிய எரிய அவன்மேல் எரிந்து விழுந்தாள்.

“இப்பதான் உனுக்கு முயுசா தெளிஞ்சிர்க்கு போல அம்சா?” அவன் அப்போதும் அடங்காமல் அவளிடம் வம்பிழுத்து, இரண்டடியை பெற்றுக் கொண்டான்.

தன்னிடம் அடியை வாங்கிக்கொண்டும் இளித்து கொண்டிருப்பவனைப் பார்த்து, அவள் மறுபடி தன் தலையில் தான் அடித்துக் கொள்ள வேண்டி இருந்தது. ‘ஆமாம் இதெல்லாம் அவள் தப்பு தான். அவள் கொடுத்த இடம்தான் அவனை இரவும் பகலும் அவளிடம் களவாட வைத்திருக்கிறது. தானா இப்படி?’ அவளுக்கு தன்மீதே கழிவிரக்கம் தோன்றியது.

“ஏ, இப்ப இன்னா நட்ந்து போச்சின்னு இப்பிடி ஒப்பாரி வச்சிக்கினு கீற? பர்ஸ்ட்டு டைம்னா இப்பிடியல்லாம் ஆகும்டீ வுடு.” பாண்டி அவளை சமாதானம் செய்கிறேன் பேர்வழி என்று உசுப்பேற்றிக் கொண்டிருந்தான்.

“எனக்கு தான பர்ஸ்ட் டைம், உனக்கு இல்லல்ல? இப்படியா வெறி நாய் கணக்கா உடம்பெல்லாம் காயப்படுத்தி வப்ப?” அவள் கோபமாக கேட்ட விதத்தில், அவன் முகமும் இறுகிப் போனது.

தனது மேல் சட்டையை கழற்றி கீழே வீசியவன், “நான் உனுக்கு செஞ்சது வெறிநாய்தனம்னா, நீ எனுக்கு செஞ்சிருக்க இதுக்கெல்லாம் என்னடீ பேரு?” அவன் கேட்ட விதத்தில், அவள் கண்கள் அதிர்ந்து விழித்தன.

அவனது நெஞ்சிலும் பக்கவாட்டிலும் நகக்கீறல்களும் பற்தடங்களும் வஞ்சமில்லாமல் தென்பட, வேணிக்கு மிகவும் அவமான உணர்வாகிப் போனது.

“என் முதுகையும் பாரு, புலி புராண்டிக்கின மாறி புராண்டி வச்சிகீற?” அவனுக்கு கோபம் தீராமல் மேலும் பேசிவிட, அவள் கண்கள் கலங்கி, உதடு பிதுங்கி தேம்பலாக அழுகை பொத்துக்கொண்டு வந்தது.

“இதெல்லாம்… நா… நான்… வேணும்னு செய்யல… எனக்கே தெரியல…” 

தேம்பலும் கண்ணீருமாக சொன்னவளை, பாவம் பார்த்து இழுத்து தன் மார்போடு போட்டுக் கொண்டவன்,

“ஏ ராட்சசி, பண்றதெல்லாம் பண்ணிக்கினு இப்ப எதுக்கு அயிது வடியற?” அவன் கேட்டதில் அவளுக்கு இன்னுமே அழுகை அதிகரித்து, அவன் நெஞ்சில் அவள் கண்ணீர் வெள்ளம் புரண்டது.

“சரியான இம்சடீ நீயி, நீ செஞ்சதல்லாம் ரொம்ப ரொம்ப புட்ச்சு இர்ந்துச்சுடீ எனுக்கு… நீ என்ன மொத்தமா கடிச்சு துன்னுக்க மாட்டியான்னு இர்ந்துகிச்சு தெர்யுமா… உனுக்கு அப்டி ஏதும் தோனிக்கலையா?” அவன் அவள் காதோடு ரகசியமாய் கிசுகிசுத்து சொல்ல சொல்ல,

அவன் நெஞ்சோடே தன் நெற்றியை முட்டி முட்டி தன்னையே நொந்து கொண்டாள் வேணி.

சற்று பொறுத்து, “ஏ ராங்கி… நெக்ஸ்ட் ரௌண்ட் போயிக்கலாமா?” பாண்டி ஹஸ்கி குரலில் கேட்டதும், வேணி மிரண்டவளாய் அவனை தன்னிலிருந்து வேகமாய் தள்ளிவிட்டு நிற்காமல் ஓடிப்போனாள்.

“ஏ… நில்லுடீ…” என்று கத்தியவன் முகம் கொள்ளா சிரிப்புடன் படுக்கையில் சாய்ந்தான். விட்ட தூக்கத்தை தொடர.

***

அன்று இரவு வெகுநேரமாக பாண்டி கதவை தட்டிக் கொண்டிருந்தான். வேணி கதவை திறக்காமல் முரண்டு பிடித்திருந்தாள்.

இரவில் யாருக்கும் கேட்காமல் கதவைத் தட்ட வேண்டும் வேறு. பொறுமை இழந்தவன், “அடீயே அம்சா… இப்ப மட்டும் நீ கதவ தொறந்துக்குல, உடச்சிக்குனு உள்ளுக்க வந்துக்குவேன்டீ” அவன் மிரட்டல் விட்டும் கதவு திறவாமல் இருக்க, ஆவேசமாக அவன் கையை ஓங்கவும், சட்டென கதவைத் திறந்தாள் வேணி.

உர்ரென்று தன்னை முறைத்து நின்றவளைப் பார்த்து, “இன்னாடீ உனுக்கு?” அவன் கேட்கவும்,

“உனக்கு என்ன இப்ப?” அதே கேள்வியை அவளும் திருப்பி கேட்டாள்.

“கதவை மூடிக்கினு அலும்பு பண்ணிக்கீற” அவன் குரல் உயர்த்த,

“வேற என்ன பண்ண சொல்ற என்னை?” அவனை விட மேலாக குரல் உயர்த்தினாள்.

“என்ன பார்த்துக்குனா பாவமா இல்லியாடீ?” பாண்டி தான் இறங்கி வரவேண்டியதாக இருந்தது.

“நான் தான் பாவம். இன்னைக்கு நைட்டாவது தூங்கினா தான் நாளைக்கு வேலைக்கு போக முடியும் என்னால.” அவளும் பாவமாக சொல்ல,

“எனுக்காக ரெண்டு நாள் லீவ் போட்டுக்க கூடாதா ராங்கி?” அவன் பார்வையால் கெஞ்சினான்.

“ரெண்டு நாளுக்கு அப்புறம் என்னை தூங்க விடுவியா?” அவள் வேகமாக கேட்க,

“ஆ… அது… அப்புறம் உனுக்கே பழக்கிக்கும்!” என்று வாய்க்குள் சிரித்தவனை கொலை காண்டோடு பார்த்து வைத்தாள்.

“மொதல்ல நீ கிளம்பு. எனக்கு தூக்கம் தான் முக்கியம் நான் தூங்க போறேன்” அவனை அறைக்குள் விடாது கதவை ஒருபக்கம் பிடித்துக்கொண்டுதான் அவனை விரட்டிக் கொண்டிருந்தாள். அவனை உள்ளே விட்டால் என்ன நடக்கும் என்றுதான் அவளுக்கு தெரியுமே.

“உன்ன நான் தூங்க வாணாம்னு எப்ப சொல்லிக்கினே, தூங்குடி, இங்க வந்து தூங்கு.” பாண்டி தன் நெஞ்சை தட்டி சொல்ல, பேச்சினூடே அறைக்குள் காலெடுத்து வைத்தவனை, விரல் நீட்டி தடுத்தாள்.

“கிழிஞ்சது அங்க வந்தா என்னை நீங்க தூங்க விட்ட மாதிரி தான், ஏதாவது சொல்லிட போறேன் போயிடுங்க.” அவனை தள்ளிவிட்டு கதவை சாற்ற முயன்றவளை, இழுத்துக்கொண்டு உள்ளே வந்து கதவை சாற்றி தாழிட்டிருந்தான் பாண்டி.

வேணி உர்ரென்று அவனை முறைத்து நிற்க, பாண்டி கெத்தான பார்வையோடு அவளது இடை வளைத்து தன்னிடம் இழுத்துக் கொண்டான்.

உம்மென்ற முகத்துடன் தன் இழுப்பில் தன்மேல் ஒட்டி நின்றவளின் உச்சியில் அழுத்த முத்தமிட, அவள் அசையாமல் நின்றிருந்தாள்.

“இப்ப எதுகாண்டி உம்முனு கீற?”

அவள் பதில் பேசவில்லை.

“ஏ ராங்கி, புதுசுல இப்ப தாண்டி இவ்ளோ ஏக்கம், இவ்ளோ வேகம், ஆசை, போதையல்லாம் இர்ந்துக்கும். போக போக இதுவும் துன்றது தூங்கறது மாறி நார்மலான மேட்டர் ஆயிக்கும். இப்ப இர்ந்துக்கிற இன்ரஸ்ட் அப்பதிக்கு உனுக்கும் இர்ந்துக்காது. எனுக்கும் இர்ந்துக்காது… அதான் சொல்லிக்கீறேன், இப்பவே போதும் போதும்னு அனுபவிச்சிக்கலாம்னு…” என்று விளக்கம் சொன்னவன், அவள் மூக்கின் நுனியில் முத்தமிட,

“நீ ரொம்ப மோசம், முரடு, ராட்சசன், அரக்கன், கொஞ்சமாவது என் பேச்சை கேக்குறீயா? எல்லா உன்‌ இஷ்டம்.”

“அடியே, அப்ப உனுக்கு இஷ்டம் இருக்கலையா?” அவன் கேட்டதும், அவள் உடனே இல்லையென்று தலையசைத்தாள். 

அதுவரை அவளை மூக்கை உரசி இருந்த அவன் மீசை உதடுகள், அவள் மறுப்பில் அவள் இதழ்களை உரசி கொடுக்க, அவள் உடல் சில்லிட்டு நடுக்கம் கொண்டு அடங்கவும், அவனிதழ்கள் அவளிதழில் ஆழ புதைந்து கொண்டது.

அவனது இன்ப முற்றுகையில் தாளாதவளாக, அவனை மேலும் தன்னை நோக்கி நெருக்கியது அவன் பின்னங்கழுத்தில் படிந்திருந்த அவள் விரல்கள். அதில் இன்னும் இன்னுமே அவன் முற்றுகையின் வேகம் கூடியது.

வாழ்க்கை 

ஒரேயொரு முறை தான்

மிச்ச சொச்சமின்றி வாழ்ந்து முடித்துவிடலாம் வா வா…

போதாத முத்தங்கள் 

போதும் போதும் மட்டும்

இதழ்களை வதைத்து 

தீர்க்கலாம் வா வா…

அவர்கள் விலகியபோது, மூச்சு வாங்க, சாத்திய கதவில் சாய்ந்து கொண்டாள் அவள். அவன் பார்வை அவளிலேயே நிலைத்திருப்பது வேறு, அவளது அவஸ்தையைக் கூட்டிக்கொண்டிருந்தது.

ஈரம் படிந்திருந்த தன் இதழ்களை புறங்கையால் அவள் அழுத்தி துடைத்துவிட்டு கொள்ள, அவளிதழில் ஒட்டிக்கொண்ட அவனது இரண்டு மீசை முடிகளும் அவளது புறங்கையில் ஒட்டி இருந்தது.

அவள், அவன் மீசை முடியையும் அவனையும் பார்க்க, அவன், அவளையும் அவன் மீசை முடியையும் பார்த்து கீழுதட்டை மடித்துவிட்டு, உள்ளே சென்றான்.

கட்டிலில் நல்ல உறக்கத்தில் இருந்த கதிரை வாஞ்சை மிக பார்த்தவன், அவனுக்கு இருபுறமும் தலையணையை எடுத்து வைத்தான். குழந்தையின் தலையை பாசமாக கோதிவிட்டு திரும்பி வர, வேணி கதவருகே நின்று அவன் செயலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அறையின் விளக்கணைத்து விட்டவன், தன்னவளை அப்படியே தூக்கி தோளில் போட்டு கொண்டு, தன்னறைக்கு வந்தான். அவன் செய்வதையெல்லாம் பார்த்து பார்த்து வேணி இதழ் கடித்து சிரித்து கொண்டிருந்தாள்.

அவளை தவிப்புடன் நெருங்கிவன், “உசுரோட கொன்னுக்கறது எப்பிடின்னு உன்னாண்ட தாண்டி கத்துக்கணும்…” அவள் இதழ் கடலில் விழுந்து தற்கொலை செய்ய துணிந்தவனை, அவள் விரல்கள் மரித்தன.

“ப்ச். இன்னியும் இன்னாடீ?”

“இங்க வேணா பாண்டி” அவள் சிணுங்க,

“ஏன்டீ?”

“இப்பவே லிப்ஸ் வலிக்குது… அப்புறம் இன்னும் அதிகமா வலிக்கும்.” வெட்க ததும்பலினூடே அவள் சொல்ல, அவன் வேட்கையாகி போனான்.

“வலிச்சிக்காம நான் கிஸ் பண்ணிக்கிறேன்டீ” அவன் சொல்ல,

“ம்ஹூம்…” அவள் மறுத்து தலையசைத்தாள்.

“நம்புடீ… வலிக்காம தான் தந்துக்குவேன்” என்றவன் உறுதி தந்து நெருங்க,

“ம்ஹும்… நீ தரும்போது வலி தெரியாது, அப்புறம் ரொம்ப வலிக்கும்.” என்ற அவளின் பாவமான சிணுங்கலில் பக்கென சிரித்துவிட்டான்.

“ஒரே நாள்ல தேறிட்டடீ ராட்சசி.” என்றவன் அவள் வேண்டாம் என்று மறுத்ததை தவிர்த்து, வேண்டும் என்றே செய்யவும், மறுத்து தடுத்தவளும் அவன் தந்த வலியில் சுகம் சுகமாய் சிதறிக் கொண்டிருந்தாள்.

***

காதல் களமாடும்…

(இது (18+) matured content மக்களே… மேலயே சொல்லிட்டேன். அதையும் மீறி குழந்த புள்ளைங்க யாராவது படிச்சிட்டு டெம்ட் ஆனா நிர்வாகம் பொறுப்பில்ல…🙏)

நாளைக்கு pre final…😍