காதல்போதை 29?

    “கம் ஆன் காய்ஸ, எதுக்கு இப்படி சண்டை போட்டுக்கிறீங்க? தங்கச்சிமா அவன் அக்கறையில தான் அப்படி சொல்லியிருப்பான். உனக்கே தெரியும் உங்க ஊர்ல மட்டுமில்ல இங்க கூட உனக்கு பாதுகாப்பு இல்லைன்னு, உன் பிஸ்னஸ் எனிமீஸ் யாராச்சும் ஒருத்தருக்கு தெரிஞ்சா கூட உனக்கு தான் ஆபத்து, உனக்கு புரியும்னு நினைக்கிறேன்” என்று சஞ்சய் நிதானமாக புரிய வைக்க,

    “ஐ க்னோ பட் என்னால முடியல, நமக்கு பின்னாடி யாராச்சும் ஃபோலோ பண்ணிகிட்டு, நம்மளையே பார்த்துகிட்டு ஓ கோட்! இட்ஸ் இர்ரிடேட்டிங். அதான்
அவங்கள டைவர்ட் பண்ணி நா தனியா வந்துட்டேன்.” என்று மாயா சொல்ல,

ரோஹனோ உச்சகட்ட கோபத்தில்,
     “அறிவில்லை உனக்கு?” என்று தன்னை மீறி கத்த, அவளோ அவனை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாக பார்த்தவாறு சஞ்சய்யின் புறம் திரும்பி, “அண்ணா…” என்று முறைக்க,

“இப்போ எதுக்கு அவன…” என்று பேச வந்த ரோஹனை தடுத்த சஞ்சய், “ப்ளீஸ்டா” என்று கெஞ்ச, மாயாவை எரிப்பது போல் பார்த்தவன், “டெவில்” என்று திட்டிவிட்டு நகர்ந்தான்.

அதுவும் மாயாவின் காதில் விழ,
     “திஸ் இஸ் டூ மச்” என்று சஞ்சய்யிடம் கத்த,
     “சோரி மாயா. அவன தப்பா எடுத்துக்காத, அவன் யாருக்கிட்டேயும் இப்படி பேச மாட்டான். ஆனா என்னன்னு தெரியல, உன்கிட்ட மட்டும் இப்படி நடந்துக்குறான்.” என்று தயக்கமாக சஞ்சய்  சொல்ல,

    “தட்ஸ் ஓகே, இதுவரைக்கும் என்னை யாருமே திட்டினது இல்லை. முதல் தடவை மிஸ்டர்.ரோஹன் தான் என்னை திட்டியிருக்காரு. இன்ஃபேக்ட் அலைஸ்ஸோட சேர்த்து என்கூட இவ்வளவு க்ளோஸ் ஆ பேசுறது நீங்க தான். அதனால அவர் திட்டினது கூட பிடிச்சிருக்கு. ” என்று மாயா கூறியவாறு தலையை சரித்து, அங்கு ச்சீஃப் இன்ஜினியரிடம் பேசிக் கொண்டிருந்த ரோஹனை பார்க்க, அவனுடைய பார்வையும் கோபமாக அடிக்கடி அவள் மீது படிந்து மீண்டது.

மாயாவுக்கோ அவனின் கோபப்பார்வையில் உள்ளுக்குள் குஷியாக இருக்க, ரோஹனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தவளுக்கு தன்னை மீறி புன்னகையில் இதழ் விரிந்தது. அவளை கடுப்பாக பார்த்த ரோஹன், “இதெல்லாம் திருந்தாத ஜென்மம்” என்று முணுமுணுத்தவாறு, அவளை ஏகத்துக்கும் முறைத்து தள்ளினான்.

மாயா சிறிது நேரம் சஞ்சய்யிடம் பேசிவிட்டு, அலைஸ் விடாது அழைத்ததும் அங்கிருந்து செல்ல, கொஞ்ச தூரத்திலேயே கார் சட்டென அப்படியே நின்று விடவும், மாயாவுக்கோ ஒன்றுமே புரியவில்லை. அவளும் ஏதேதோ முயற்சி செய்ய அந்த கார் இயங்கினால் தானே! ‘ச்சே!’ என்று சலித்தவளுக்கு வண்டியிலிருந்து இறங்கினால் எங்கு தன்னை அடையாளம் கண்டு விடுவார்களோ என்று பதட்டம் வேறு தொற்றிக் கொண்டது. அலைஸ்ஸிடம் சொல்வதை விட இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் தானே ஏதாவது செய்வது மேல் என யோசித்தவள் அடுத்தநிமிடம் கேப்பிற்கு அழைக்க போக, சரியாக அவளுடைய கார் கண்ணாடி தட்டப்பட்டதில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

கார் கண்ணாடியை இறக்கியவள் எதிரே இருந்தவரை புரியாது பார்க்க, அவரோ,
    “அம்மா கார்ல ஏதாச்சும் பிரச்சினையா? நா என்னன்னு பார்க்கவா?” என்று கேட்க, மாயாவோ அவரை புருவத்தை நெறித்து பார்த்தாள்.

    “அய்யா தான்மா உதவி பண்ண சொன்னாங்க” என்றவாறு அவர் ஒரு திசையை காட்ட, அங்கு காரில் ஒற்றை காலை மடக்கி சாய்ந்து நின்றிருந்தான் ரோஹன்.

அவனை பார்த்தவள் காரிலிருந்து இறங்கி அவனை நோக்கி வேகமாக செல்ல, அவனோ தன்னை நோக்கி வரும் மாயாவையே கேலிப் புன்னகையுடன் பார்த்திருந்தான்.

அவனை நெருங்கியவள், 
   “நா உங்ககிட்ட ஹெல்ப் கேட்டேனா?” என்று காட்டமாக கேட்க,
    “உதவி பண்ண பர்மிஷன் கேக்கனும்னு அவசியம் இல்லை, என் கண்ணு முன்னாடி தெரிஞ்து உதவி பண்ண வந்தேன் தட்ஸ் இட். ஆனாலும் இவ்வளவு திமிர் ஆகாது” ரோஹன் கடைசி வசனத்தை முணுமுணுப்பாக சொன்னாலும், அவள் காதில் தெளிவாகவே விழுந்தது.

      “ஹவ் டேர் யூ என்னை எப்படி நீங்க திமிர்னு சொல்லலாம்! நீங்க தான் திமிர்,  உங்களுக்கு தான் ஆணவம், எல்லா உங்ககிட்ட தான் இருக்கு” என்று மாயா கோபத்தில் கத்த,

அவளை அழுத்தமாக பார்த்த ரோஹன்,
      “அண்ணா வந்து வண்டிய எடுங்க. அம்மணி தனியா தவிக்கட்டும் அப்போ தான் புத்தி வரும்” என்றுவிட்டு மாயாவிடம்,
     “நீ கேப்ல போறது சேஃப் கிடையாது.” என்று அழுத்தமாக உறைத்துவிட்டு வண்டியில் ஏற போக,  அவனை தள்ளிவிட்டு காரில் மாயா ஏறிக்கொண்டாள்.

அவளின் செய்கையில் அவளை உக்கிரமாக பார்த்தவன்,
      “வட் த ஹெல் ஒரு பிஸ்னஸ் வூமன் போலவா நடந்துக்குற! கொஞ்சம் கூட சென்ஸ்ஸே இல்லை. மொதல்ல என் கார்ல இருந்து இறங்கு” என்று ரோஹன் கத்த,
 
“அதெல்லாம் முடியாது நீங்க வேணா என் பக்கத்துல இருங்க” என்று  தெனாவெட்டாக சொல்லி, வண்டி ஓட்டுனரிடம்,
    “அண்ணா ***** ஹோட்டலுக்கு போங்க” என்றுவிட்டு மாயா முகத்தை திருப்பிக்கொள்ள,  வெளியில் நின்றவாறு இடுப்பில் கை குற்றி, “டெவில்” என்று அவளை ஏகத்துக்கும் முறைத்த ரோஹன் திருதிருவென முழித்துக் கொண்டிருந்தவரிடம் காரை எடுக்குமாறு கண்களால் சைகை செய்து, பின்னால் மாயாவின் அருகில் அமர்ந்துக் கொண்டான்.

மாயாவோ திரும்பி அவனை எகத்தாளமாக ஒரு பார்வை பார்க்க, பக்கவாட்டாக திரும்பி, ‘என்ன?’ என்ற ரீயியில் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கியவனை பார்த்ததும் அவள் மனமோ அவளை மீறி அவனை ரசிக்க ஆரம்பித்தது. அவன் பால் சாயும் மனதை அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

   “யூ லுக் ஸ்மார்ட், பட் ஏன் சிரிக்கவே மாட்டிக்கிறீங்க?”  என்று குறும்பாக மாயா கேட்டதில், திரும்பி அவளை விசித்திரப் பார்வை பார்த்த ரோஹன் எதுவும் பேசாது வெளியே வேடிக்கை பார்ப்பது போல் பாவனை செய்ய, ஒரு பெருமூச்சுவிட்டவள்,
     “ரோஹன் ஜீ…” என்று அழைக்க,  சட்டென திரும்பிய ரோஹன் புருவத்தை சுருக்கியவாறு அவளையே ஆழ்ந்து நோக்கினான்.

மாயாவோ அவனின் பார்வையில் தடுமாறினாலும் தன்னை கட்டுப்படுத்தி, சுதாகரித்துக் கொண்டு,
      “நீங்க ஏன் எப்போ பாரு கஞ்சி போட்ட சட்டையாட்டம் விறைப்பா இருக்கீங்க? நிஜமாவே நீங்க தருண் என்ட் அண்ணாவோட ஃப்ரென்ட் தானா?” என்று மாயா சந்தேகமாக கேட்க,

அவளை முறைக்க முயன்ற ரோஹன் பின் தன்னை மீறி சிரித்துவிட, அதை கவனித்தவள்,
     “வாவ்வ்! யூ ஆர் ஸ்மைலிங். நொட் பேட்” என்று சிரித்தவாறு சொல்ல,

    “உனக்கு இப்போ என்ன வேணும்?” என்று ரோஹன் மாயாவை கூர்மையாக பார்த்தவாறு கேட்க,
     “என்ன கேட்டாலும் கிடைக்குமா?” என்ற மாயாவின் புதிரான கேள்வியில், அவளை சந்தேகமாக பார்த்தவன்,
      “த க்ரேட் மிஸ்.மாயா மஹேஷ்வரிக்கு என்கிட்ட அப்படி என்ன எதிர்ப்பார்ப்பு இருந்திட போகுது?” என்று கேலிக் குரலில் கேட்டான்.

அவன் முன் கை நீட்டியவள், “ஃப்ரென்ட்ஸ்…?” என்று கேட்க,
      “என்னை பத்தி உனக்கு என்ன தெரியும்னு என்னை நெருங்க நினைக்கிற…?” என்று முறைப்புடன் ரோஹன் கேட்க,

     “நா என்ன என்னை கல்யாணம் கட்டிக்கோங்கன்னா கேட்டேன்! ஃப்ரென்ட்ஸ் ஆகலாமான்னு தானே கேட்டேன். இருந்தாலும் இவ்வளவு அட்டிட்யூட் ரொம்ப டூ மச் தான்” என்று மாயா சலித்துக் கொள்ள,

     “ஒருவேள உங்க கம்பனி இன்வெஸ்டர்ஸ், டீலர்ஸ்கிட்ட கூட இப்படி தான் பழகுவிங்களா மிஸ்.மஹேஷ்வரி…?” என்று ரோஹன் அழுத்தமாக கேட்க,

அவனையே சிறிதுநேரம் வெறித்து பார்த்தவள் பின் புன்னகைத்து,
      “நம்ம மனசு சொல்லும் நமக்கு நெருக்கமானவங்க யாருன்னு, அவங்களே நம்மள தவிர்த்தாலும் எதுக்காகவும் அவங்கள விட்டுக் கொடுக்க கூடாதுன்னு தோணிக்கிட்டே இருக்கும், அந்த ஃபீலிங் எல்லார்கிட்டேயும் தோணாது,  புரியும்னு நினைக்கிறேன்…” என்று மாயா சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஹோட்டலின் முன் வண்டி நிறுத்தப்பட, இறங்கியவள் “தேங்க்ஸ்” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு செல்ல, செல்லும் அவளின் முதுகையே வெறித்து பார்த்த ரோஹனின் முகமோ இறுகிப்போய் இருந்தது.

அடுத்தநாள்,
    அலுவலகத்தில்,

பாபி தனது அறையில் ஃபைலில் மும்முரமாக ஏதோ பார்த்துக் கொண்டிருக்க , அனுமதி கேட்டு உள்ளே வந்த கீர்த்தியை பார்த்தவனுக்கு கோபம் ஏகத்துக்கும் எகிறியது. அவளோ, ‘என்ன திட்டு விழ போகுதோ’ என்ற ரீதியில் திருதிருவென விழித்துக்கொண்டு நிற்க மேசையில் ஒரு ஃபைலை எடுத்த தூக்கி எறிந்தவன்,
      “என்ன இது? எந்த வேலையுமே முழுசா முடிக்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? என்ட் திஸ் ஃபைல், இந்த வருஷத்தோட அக்கௌன்ட்ஸ்ஸ ரெடி பண்ண சொன்னா போன வருஷத்தோட அக்கௌன்ட்ஸ்ஸ கொண்டு வந்திருக்கீங்க, மிஸ்.கீர்த்தி உங்களுக்கு வேலை தெரியுமா? தெரியாதா?”  என்று பாபி கேட்க, கீர்த்திக்கோ கண்கள் கலங்கி அழுகையே வந்துவிட்டது.

கண்ணீரை மறைக்க அவள் தலையை குனிந்து கொள்ள, அதில் மேலும் கோபம் அடைந்தவன், “கெட் அவுட்” என்று கத்தியதில் வெளியேற போனவள் கதவை திறக்க போக, அந்த கதவு திறந்து கொண்டால் தானே…!

அவள் திரும்பி பாபியை கேள்வியாக பார்க்க, அவனோ எழுந்து வந்து ஒற்றை காலை மடக்கி மேசையில் சாய்ந்தவாறு அவளையே அழுத்தமாக பார்த்தவாறு இருந்தான்.

    “இவ்வளவு நேரமா ஆஃபீஷியலா பேசினோம், இப்போ பர்சனல்லா பேசுவோமா?” என்று பாபி கேட்க, திகைத்தவள்,
    “என்ன… என்ன சார்?” என்று திக்கித்திணறி கேட்டாள்.

   “டூ யூ ஸ்டில் லவ் மீ?” என்று பாபி சட்டென கேட்டதில், அவனை நிமிர்ந்து பார்த்தவள் என்ன கூறுவதென்று தெரியாமல் தவித்து தான் போனாள். அவளும் என்ன தான் செய்வாள்…! இத்தனை வருடமாக அவனுக்காக மட்டுமே அந்த பாவை காத்துக்கொண்டிருக்க அவனோ அவள் காதலை புரிந்துக் கொள்ளவே இல்லையே…!

எதுவும் பேசாது கீர்த்தி அமைதியாக இருக்க, அவளை நெருங்கிய பாபி,
      “லுக் உன் அப்பா ரொம்ப நல்லவரு. அன்னைக்கு என் டாட் கூட உன்னை பத்தி தான் ரொம்ப வருத்தமா பேசிக்கிட்டு இருந்தாரு.கல்யாணத்தை பத்தி பேச்சு எடுத்தாலே, ‘தொலைஞ்சி போன என் ஃப்ரென்டு திரும்ப வர்ற வரைக்கும் கல்யாணமே பண்ண மாட்டேன்னு’ சொன்னியாமே. இப்போ தான் அவ வந்துட்டால்ல, இனி எதுக்கு வெயிட்டிங். அதான் உன்கிட்ட கேட்டேன். ஏன்னா, நீ என்னை காதலிச்சது கூட மாயா சொல்லி தான் எனக்கு தெரியும்.” என்று பாபி சொல்ல, கீர்த்தி தான் உள்ளுக்குள் நொறுங்கிப் போனாள்.

     “நா  ஒரு பொண்ண காதலிக்கிறேன், அதுவும் உனக்கு தெரியும்னு நினைக்கிறேன். சோ, புரிஞ்சி நடந்துக்கோ, நவ் யூ மே கோ” என்று பாபி சொல்லிவிட்டு, அவன் பாட்டுக்கு தன் இருக்கையில் அமர்ந்து வேலையில் மூழ்க, அவன் அறையிலிருந்து வெளியேறியவள் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்து, அழ ஆரம்பித்து விட்டாள்.

   “என்னை ஏன் உனக்கு பிடிக்கல தரு? நிஜமாவே நா உனக்கு பொருத்தமே கிடையாதுடா, ஆனா என் மனசுக்கு தான் அது புரிய மாட்டேங்குது. உனக்காக தான் இத்தனை வருஷம் காத்திருக்கேன்னு உனக்கு புரியல்லையாடா? எவளோ முகம் தெரியாத ஒருத்திய காதலிக்கிற உனக்கு உன் கண்ணு முன்னாடி உனக்காக ஏங்குற என் தவிப்பு புரியல்லையா தரு?”  என்று வாய்விட்டே புலம்பியவாறு அழுதவளை தன் அறையிலிருந்த கணினி திரையில் உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் பாபி.

இவ்வாறு நாட்கள் கழிய,
      அன்று,

ரோஹன் தன் அறையில் லேப்டாப்பில் மும்முரமாக எதையோ டைப் செய்துக் கொண்டிருக்க, திடீரென கதவு திறக்கும் சத்தத்தில் நிமிர்ந்தவன் உள்ளே வந்த மாயாவை பார்த்ததும், கோபத்தில் கத்த ஆரம்பித்துவிட்டான்.
      “மிஸ்.மாயா இது ஒன்னும் உங்க கம்பனி கிடையாது, என் கேபின். உள்ள வரதுக்கு முன்னாடி பர்மிஷன் கேட்டு வரனும்னு, பேசிக் மேன்னர்ஸ் கூட மிஸ்.மஹேஷ்வரிக்கு தெரியாம இருக்காதுன்னு நினைக்கிறேன்” என்று ரோஹன் திட்ட,

மாயாவிற்கு பின்னால் வந்த பாபி ரோஹன் மாயாவை திட்டுவதை பார்த்து, “டேய்!” என்று கத்த, ரோஹனின் திட்டுக்களை ஏதோ ஓஸ்கார் அவார்ட் வாங்குவது போல் சிரிப்புடனே கேட்டுக் கொண்டு இருந்த மாயா அறையிலிருந்து வெளியேறி,
    “ரோஹன் ஜீ மே ஐ கம்இன்?” என்று கேலியாக கேட்டு வைக்க, பாபியோ ரோஹனை பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்க, ‘டெவில் தலைல டப்பா விழுந்தும் கொஞ்சமாச்சும் மாறியிருக்காளா’ என்று நினைத்தவாறு மாயாவையே உறுத்து விழித்தான் ரோஹன்.

உள்ளே வந்தவள் ரோஹனின் எதிரே நின்று,
    “ரோஹன் ஜீ மே ஐ சிட்?” என்று சிரிப்பை அடக்கியவாறு கேட்க,
      “இனாஃப்! பாபி நீயே இந்த மேடம் கூட பேசிக்கோ. என்னால இவங்கள ஹேன்டல் பண்ண முடியாது.” என்ற ரோஹன், ‘கடுப்பேத்துறா மை லார்ட்’ என்று முணுமுணுக்க, மாயாவோ சிரித்தவாறு ரோஹனின் எதிரே அமர்ந்துக் கொண்டாள்.

ரோஹன் அவளை கண்டுக்காது அல்கொஹோல் ஹிப் ஃப்ளாஸ்கை குடித்தவாறு ஒரு ஃபைலை எடுத்து பார்க்க துவங்க,  பாபி அவளின் புது ப்ரான்ச்கான கட்டுமான பணி பற்றி பேச ஆரம்பிக்க, அதை கண்டுக்காது,
     “உங்களுக்கு லவ் ஃபெய்லியரா மிஸ்டர்.ரோஹன்?” என்று ஆர்வமாக  கேட்டாள் மாயா.

அவளை ஒரு மார்கமாக பார்த்த ரோஹன் பாபியை முறைத்துவிட்டு,
     “மிஸ்.மஹேஷ்வரி உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க, என் பர்சனல் உங்களுக்கு தேவையில்லாதது. டோன்ட் இர்ரிடேட் மீ” என்று உறும,

மாயாவோ விழிவிரித்து,
      “நாலு வர்ட்ஸ்ல ஒரு கேள்வி கேட்டதுக்கு நாலு லைன்ல அட்வைஸ்ஸா! லவ் ஃபெய்லியரான்னு கேட்டது ஒரு குத்தமா?” என்று கேலியாக கேட்க, ரோஹனோ மூக்குவிடைக்க அவளை முறைத்து பார்க்க, பாபியோ நிலமையை சமாளிக்க எண்ணி,
      “மாயா அவனுக்கு இதெல்லாம் பிடிக்காது, இப்படி எல்லாம் பேசினேன்னா, அதிகமா திட்டுவான். நாம ஆஃபீஷியலா பேசலாமே” என்று பேச்சை மாற்ற முயற்சிக்க,

    “ஒ கோட்! எப்போ பாரு ஆஃபீஷியல் தானா..! அதை அப்றம் பேசலாம். ரோஹன் ஜீ நீங்க சொல்லுங்க, ஏன் இந்ந நவீன தேவதாஸ் வேஷம்? ” என்று கேட்ட மாயாவிற்கு ரோஹனை சீண்டுவதில் ஒரு அலாதி பிரியம் உருவானது என்னவோ உண்மை தான்.

தன் பேச்சில் கோபத்தில் முகம் சிவக்க, தன்னை முறைப்பதும் திட்டுவதுமாக இருக்கும் ரோஹன் மேல் ஒரு சுவாரஸ்யம் தோன்ற, தன்னிலை மறந்து அன்று அவனை வெறுப்பேற்றி விளையாடியது  போலவே இன்றும் சிறுபிள்ளை போல் விளையாடிக் கொண்டிருந்தாள் மாயா.

ரோஹனோ எழுந்து தன் தனிப்பட்ட தேவைகளுக்காக அந்த அறையின் மூலையிலிருந்த இன்னொரு அறைக்குள் புதுந்து கதவடைத்துக்கொள்ள, மாயாவோ வாயை பொத்திக்கொண்டு சிரித்தவள் அலைஸ்ஸை தேடி அறையிலிருந்து வெளியே வந்தாள்.

இங்கு அறைக்கு வெளியே அலைஸ் தன் கையில் வைத்திருந்த ஐபேட்டில் கண்களில் வலியுடன் ஒரு புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்க, திடீரென தன் அருகில் கேட்ட குரலில் தான் பார்த்துக் கொண்டிருந்ததை மறைத்தவள் திடுக்கிட்டு திரும்பி பார்க்க, சஞ்சய்யோ கண்களில் ரசனையுடன் அவளையே பார்த்தவாறு நின்றிருந்தான்.

அவளோ சஞ்சய்யை கேள்வியாக பார்க்க,
      “ஹாய் கண்மணி” என்று அவன் செல்லமாக அழைத்து கூப்பிட்டதில், புருவத்தை நெறித்து புரியாது பார்த்தாள் அலைஸ்.

“சோரி” என்று அலைஸ் புரியாமல் கேட்க, ‘ஹப்பாடா! நாம சொன்னது புரியல. இதை வச்சே நம்ம மெழுகு பொம்மைய சீண்ட வேண்டியது தான்’ என்று நினைத்தவாறு சன்ஞய்யும்,
      “உனக்கு ஒன்னு தெரியுமா கண்ணம்மா? நீ அவ்வளவு அழகு, அழகே பொறாமை கொள்ளும் பேரழகு. உன்னை பார்த்ததிலிருந்து நா நானாகவே இல்லை. உனக்காக துடிக்கும் என் இதயத்தை நீ சிறைபிடிக்க காத்துக்கொண்டிருக்கிறான் இந்த காதலன்” என்று அவன் பாட்டுக்கு ஏதேதோ காதல் வசனத்தை பேசிவிட்டு அலைஸ்ஸின் முகத்தை கூர்ந்து பார்க்க, அவளோ எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாத முக பாவனையுடன் நின்றிருந்தாள்.

    ‘இதுவே எங்க ஊரு அம்மணியா இருந்தா, உனக்கு செருப்படி தான் சஞ்சு. தேங்க் கோட்! நம்ம ஆளுக்கு எதுவுமே புரியல, அதுவே போதும்” என்று சஞ்சய் பெருமூச்சுவிட, அவன் முன் சொடக்கிட்டவள் இறுகிய முகமாக, “வாட்?” என்று கேட்க, சஞ்சய்யோ ‘ஹிஹிஹி’ என்று அசடுவழிய நின்றான்.

     “என்ன அண்ணா என் பிஏ கூட உங்களுக்கு என்ன பேச்சு? பட் பீ க்யார்ஃபுல், ஷீ இஸ் வெர்ரி டேன்ஜரஸ்” என்று மாயா எச்சரிக்கும் தொணியில் சஞ்சய்யின் பின்னால் நின்றவாறு சொல்ல,  அலைஸ்ஸோ அவளின் கடைசி வசனத்தின் அர்த்தத்தை புரிந்துக் கொண்டு மாயாவை முறைத்து பார்த்தாள்.

 

காதல்போதை?
—————————————————————

-ZAKI?