காதல்போதை 34?

காதல்போதை 34?

கீர்த்தி, சஞ்சய்யிடம் அழுதுக் கொண்டிருக்க, எப்போதும் போல் அலைஸ்ஸிடம் திட்டு வாங்கிக் கொண்டே ரோஹனை தேடி அலுவலகத்திற்கு வந்தாள் மாயா.

அறைக் கதவை திறந்தவள், கீர்த்தி அழுதுக் கொண்டிருப்பதை பார்த்து, “என்னாச்சு?” என்று பதறியபடி கேட்க, “ஜிலேபி…” என்று அழைத்தவாறு மாயாவை அணைத்து, மீண்டும் ஓவென்று அழ ஆரம்பித்து விட்டாள் கீர்த்தி.

மாயாவோ சஞ்சய்யை கேள்வியாக நோக்க, அலைஸ்ஸோ எப்போதும் போல் ‘தனக்கும், இவர்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை’ என்ற ரீதியில் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து தொலைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தாள்.

“என்னாச்சுன்னு சொல்லு” என்று மாயா அதட்டவுமே, “அது என்னாச்சுன்னா நான்…” என்று கீர்த்தி நடந்ததை சொல்லி முடிக்க, “வாவ்…!” என்று வாயை பிளந்தாள் மாயா.

“அப்போ நீதான் தருணோட அந்த சீக்ரெட் இன்ஸ்டடா கேர்ள் ஃப்ரென்டா?!” என்று மாயா ஆச்சரியாக கேட்க,

உதட்டை பிதுக்கிய வண்ணம் ‘ஆம்’ என்று தலையாட்டிய கீர்த்தி, “சின்னவயசுல இருந்து தருவ லவ் பண்றேன். ஆனா, அதை சொல்ல தான் தைரியம் இல்லை. அதனாலேயே இன்ஸ்டக்ராம்ல அவர் கூட பேச ஆரம்பிச்சேன். ஒவ்வொரு தடவையும் என் முகத்தை பார்க்கனும்னு அவர் கேக்குறப்போ, ஏதாச்சும் காரணம் சொல்லி தப்பிச்சிறுவேன்.

அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி திடீர்னு என் முகம் பார்க்காமலே என்னை காதலிக்கிறதா சொன்னதும், ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும், இன்னொரு பக்கம் ரொம்ப குற்றவுணர்ச்சியா இருந்துச்சி. அவங்க வீட்டு ட்ரைவர் பொண்ணு நான்தான் அவர் காதலிக்கிற பொண்ணுன்னு தெரிஞ்சா, அவர நான் ஏமாத்திட்டேன்னு நினைக்க மாட்டாரா? அதனாலேயே என் அக்கௌன்ட்ட டிஎக்டிவேட் பண்ணிட்டேன்.

ஆனா, தரு தான் நான் விட்டும் என்னை பார்க்காமலே இத்தனை வருஷம் காதலிச்சிருக்காரு. இப்போ திடீர்னு அந்த பொண்ண மீட் பண்ண போறதா கிளம்பி போயிட்டாரு. ஆனா, அது நான்தானே…?” என்று அழுதுக் கொண்டே சொன்னாள்.

“என்ன வேலையெல்லாம் பார்த்திருக்க நீ…?” என்று இரு புருவங்களை உயர்த்தி வியப்பாக கேட்ட மாயாவிற்கு, அவளின் இயல்பு குணம் தலைதூக்க, “நோ வொர்ரீஸ், இப்போ நாம தருண ஃபோலோ பண்ணி, அது யாருன்னு கண்டுபிடிக்கலாம். தருணுக்கு உன் லவ்வ ஃபீல் பண்ண வைக்கலாம்” என்று சிலபல பாவனைகளுடன் மாயா சொல்லிக் காட்ட,

“தங்கச்சிமா சூப்பரு, அப்போ நாங்க இப்போவே கிளம்புறோம்” என்றுவிட்டு நகர எத்தனித்த சஞ்சய், மாயாவின் “நானும் வருவேன்” என்ற வார்த்தையில் அதிர்ந்து,  “அது… அது எப்படி…? உன்ன…” என்று அவளை தடுத்து நிறுத்த வழி தெரியாது தடுமாற ஆரம்பித்தான்.

“மாயா தட்ஸ் நொட் சேஃப், நான் இதுக்கு அல்லோவ் பண்ண மாட்டேன்” என்று அலைஸ் ஆங்கிலத்தில் கத்த, “ஓ கோட்! அலைஸ் என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது. அதுக்கேத்த மாதிரி தான் நான் போவேன். சோ, யூ டோன்ட் வொர்ரி ஐ அம் ஆல்வேய்ஸ் சேஃப்” என்று சொன்னவள்,
“வாங்க கிளம்பலாம்” என்றுவிட்டு முன்னே நடந்தாள்.

கீர்த்தியும் சஞ்சய்யும், ‘மாயாவை பாதுகாவலர்கள் இல்லாமல் வெளியே அழைத்துச் செல்வது பாதுகாப்பில்லை’ என்பதை உணர்ந்து, அசையாது நிற்க, அவர்களருகில் வந்த மாயா, “எம்புட்டு நேரம் இப்படியே நிக்க போறதா உத்தேசம்? நாம இப்போ போனா தான் அந்த பொண்ண பார்க்க முடியும். அண்ணா, தருண் எங்க இருக்கான்னு கேளுங்க” என்று அவள் பாட்டிற்கு கீர்த்தியின் கழுத்தை சுற்றி கையை போட்டு அவளை இழுத்துக் கொண்டே முன்னே சென்றாள்.

அலைஸ்ஸோ கோபமாக தரையை காலால் உதைத்து விட்டு அவள் பின்னே செல்ல, சஞ்சய்யோ இருபுறமும் சலிப்பாக தலையாட்டிவிட்டு, பாபிக்கு அழைத்து பேசியவாறு அவர்கள் பின்னால் சென்றான்.

எப்போதும் போல் யாருக்கும் தெரியாமல், பாதுகாவலர்களின் கண்களுக்கு சிக்காது சஞ்சய்யின் காரில் ஏறிய மாயா, “அண்ணா, மிஸ்டர்.ரோஹன் எங்க?” என்று கேட்க,

“உங்க இரண்டு பேரோட போக்கே சரியில்லை. ம்ம்ம்… இருக்கட்டும்… இருக்கட்டும்… அவன் சைட்ல இருக்கான் மா” என்று விட்டு காரை செலுத்திய சஞ்சய், அந்த பெரிய மோலின் வாகனங்கள் நிறுத்திமிடத்தில் காரை நிறுத்தினான்.

“மாயா இங்க ரொம்ப கூட்டமா இருக்கு. யாராச்சும் உன்னை பார்த்து, நீ யாருன்னு கண்டுபிடிச்சா ப்ரோப்ளம் தான். கார்ட்ஸ் கூட இப்போ இல்லை” என்று அலைஸ் புலம்பி தள்ள, கண்ணாடியையும் தொப்பியையும் அணிந்துக் கொண்டவள், “இனாஃப் அலைஸ், ஐ கென் ஹேன்டல்” என்றவாறு காரிலிருந்து இறங்க, சஞ்சய்க்கும் கீர்த்திக்கும் கூட ‘மாயாவை தேவையில்லாமல் அழைத்து வந்துவிட்டோமோ’ என்று தோன்றாமலில்லை.

மாலின் உள்ளே வந்த நால்வரும் ஃபுட் கோர்ட்டிற்கு செல்ல, அங்கு பாபி ஒரு மேசையில் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கீர்த்தி உதட்டை பிதுக்கினாள்.  அந்த பெண்ணை உற்று பார்த்த மாயா, “அச்சோ! கீர்த்தி, அந்த பொண்ணு உன் அளவுக்கெல்லாம் இல்லை,  உன்னை மாதிரி அவளுக்கு ச்சப்பி சீக்ஸ் கூட இல்லை. நோ கமென்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட்” என்று சமாதானம் சொன்னாள்.

பாபியை பார்த்துக் கொண்டிருந்த சஞ்சய்யோ, சட்டென தன்னை கடந்து சென்ற பெண்ணை உற்று பார்த்து, “ரோஷினி” என்றழைக்க, ரோஷினியும் திரும்பி சஞ்சய்யை பார்த்து முதலில் அதிர்ந்தாலும், பின் கோபமாக அவனை முறைக்க, முகத்தை மூடியிருந்ததால் மாயாவை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை.

ரோஷினியை பார்த்து பளிச்சென்று சிரித்த சஞ்சய், “ஏய் ரோஷினி, நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா?” என்று கேட்க, அதில் வெகுண்டவள், “நான் எதுக்குடா சாகனும்?” என்று கோபமாக கேட்டாள்.

“அது… அன்னைக்கு நான்தானே உன்னை ப்ரேக்அப் பண்ணேன். அதுக்கப்றம் நீ கொலேஜ்க்கும் வரல. அதான், என் மேல நீ வச்சிருந்த லவ்க்கு சூசைட் கீசைட் பண்ணிட்டியோன்னு நினைச்சேன்” என்று சிரிக்காமல் தீவிர முக பாவனைகளுடன் சஞ்சய் சொல்ல, “இடியட்” என்று சிலபல கெட்ட வார்த்தைகளுடன் திட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் ரோஷினி.

அலைஸ்ஸோ இருவரையும் மாறி மாறி புரியாமல் பார்த்துவிட்டு, சஞ்சய்யை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாக பார்த்து வைக்க, அவனோ, “மை எக்ஸ் லவர்… கொலேஜ்ல… உன் அளவுக்கு இல்லை” என்று குறும்பாக சொல்ல, அலைஸ்ஸோ எதுவும் பேசாது அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, திரும்பிக் கொண்டாள்.

“கீர்த்தி அவ பேரு ரோஷினியா? ரொம்ப திமிர் பிடிச்சவளா இருக்கா” என்று மாயா போகும் ரோஷினியையே பார்த்தவாறு கேட்க, “ஆமா… ஆமா… என் ஆளோட ஃபர்ஸ்ட் லவ் கூட அவ தான். ஆனா என்ன, வன் சைட் தான், என் கூட தான் டூ சைட்” என்று பெருமையாக சொன்னாள் கீர்த்தி.

இத்தனை நேரம் ரோஷினி, சஞ்சய் பேசுவதையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தியும், மாயாவும் தனக்கு பின்னால் நின்றிருந்தவனை கவனிக்கவில்லை.

சரியாக, “நீங்க எல்லாரும் இங்க என்ன பண்றீங்கன்னு, தெரிஞ்சிக்கலாமா?” என்ற குரலில் அதிர்ந்த மூவரும், “மாட்டிக்கிட்டோம்” என்று வாய்விட்டு சொன்னவாறு ஒருசேர திரும்ப, அலைஸ்க்கோ இந்த கூத்தை பார்த்து சிரிப்பை அடக்குவது பெரும் பாடாக இருந்தது.

மூவரையும் முறைத்த பாபி, கீர்த்தியை உக்கிரமாக பார்க்க, அவளோ பயத்தில் மாயாவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள்.

“அது வந்து தருண், நாங்க…” என்று மாயா பேச வரும் போது சரியாக, ஒருவன் ஓடி வந்து மாயாவை வேகமாக இடித்து விட்டு சென்றதில், மாயா அணிந்திருந்த முகத்தை மறைத்திருந்த பெரிய கண்ணாடி கீழே விழ, பதறிவிட்டாள் அவள்.

அலைஸ் அதை அவசரமாக எடுக்கும் முன்னே, அங்கிருந்த சில கல்லூரி மாணவர்களுக்கு மாயாவை அடையாளம் தெரிந்துவிட, “ஹேய்… அது மிஸ்.மஹேஷ்வரி தானே…?” என்ற குரல்களும், அங்கே சலசலப்பும் உருவாக, ‘இனிமேலும் இங்கு இருப்பது பாதுகாப்பில்லை’ என்று நினைத்த அலைஸ், மாயாவிற்கு அந்த கண்ணாடியை மாட்டிவிட்டு வேகமாக  இழுத்துச்செல்ல, அதற்குள்  அவர்கள் பின்னால் ஒரு கூட்டமே வர ஆரம்பித்து விட்டது.

பாபியும், சஞ்சய்யும், கீர்த்தியும் யாரும் அவளை நெருங்காதவாறு கார் பக்கத்தில் அழைத்துச்சென்று காரில் ஏற்ற, மின்னல் வேகத்தில் வண்டியை செலுத்திய பாபி அலுவலக வாசலிலே காரை நிறுத்தினான்.

காரை நிறுத்திவிட்டு பாபி எதுவும் பேசாது விறுவிறுவென்று அலுவலகத்திற்குள் நுழைய, சஞ்சய்யும் கீர்த்தியும், “தவறு செய்து விட்டோமோ…’ என்று நினைக்க, முதலில் இத்தனை பேர் தன்னை துரத்தி வந்ததில் பதறினாலும், அதன்பிறகு ஆசுவாசமடைந்து சாதரணமாக மாயா இருந்தாள் என்றால் அலைஸ் தான் அவளை விடாது முறைத்தாள்.

விருந்தினர் செல்லும் வழியாக மேல் தளத்தில் இருக்கும் விருந்தினர் அறைக்கு கீர்த்தி, மாயாவை அழைத்து செல்ல, அவளோ, “அந்த பொண்ணு யாரு கீர்த்தி? முதல்ல அது யாருன்னு கண்டுபிடிச்சு நாலு சாத்து சாத்துவோம். உன் பேருல அவன ஏமாத்திகிட்டு இருக்கா,  ச்சீட்டர்” என்று பேசியவாறு அறைக்குள் நுழைந்தவள் இன்ப அதிர்ச்சியானாள்.

அங்கே ரோஹன் மேசையில் ஒற்றை காலை மடக்கி, கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியவாறு கோபத்தில் முகம் சிவக்க நின்றிருக்க, பாபியோ ரோஹனின் பக்கத்தில் அவனின் கோபம் புரிந்து அமைதியாக இருக்க, சஞ்சய்க்கு தான் உடல் உதறலெடுக்க ஆரம்பித்தது.

“ஹாய் ரோஹன், சத்தியமா உங்களை எக்ஸ்பெக்ட் பண்ணல” என்று உற்சாகமாக கூறியவாறு மாயா ரோஹனை நெருங்க முதல், சஞ்சய்யை அறைந்திருந்தான் ரோஹன்.

“அவ கேட்டா உனக்கெங்க போச்சு புத்தி…?” என்று ரோஹன் கோபத்தில் கத்த, தவறை உணர்ந்து சஞ்சய் அமைதியாக இருந்தான் என்றால் மாயா தான் அதிர்ந்துவிட்டாள்.

“ரோஹன் அது… நான்தான்…” என்று மாயா, சஞ்சய்யை காப்பாற்ற எண்ணி ஏதோ பேச வர, அடுத்தநொடி அவளே எதிர்ப்பார்க்காது ‘பளார்’ என அவளை அறைந்திருந்தான் அவளவன்.

கன்னத்தை பொத்திக்கொண்டு மாயா அதிர்ச்சியாக ரோஹனை பார்க்க, “எதுவும் பேசாத” என்று பல்லை கடித்துக்கொண்டு கூறியவாறு தன்னவளை எரிப்பது போல் பார்த்தான் ரோஹன்.

ரோஹன் அடித்ததில் கீர்த்தி பதற, சஞ்சய்யோ,”என்னடா இது?” என்று ரோஹனை கடிந்துக்கொள்ள, பாபியோ அவன் அடித்ததன் காரணம் புரிந்து எதுவுமே பேசவில்லை.

அலைஸ்ஸிற்கோ ரோஹன் அடித்ததில் கோபம் உச்சத்தை தொட, அடுத்தநொடி ரோஹனின் சட்டையை பிடிக்க போனவளின் கையை பிடித்து தடுத்த மாயா புன்னகையுடன் ரோஹனை பார்க்க,  அவனுக்கோ அவளின் சிரிப்பு எப்போதும் போல் பழைய மாயாவையே நினைவுபடுத்தியது.

ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை ஆசுவாசப்படுத்தியவன்,  “மிஸ்.மாயா நீங்க இங்க இருக்கும் போது உங்க சேஃப்டிக்கு நாங்க தான் பொறுப்பு. நீங்க யாருன்னு அடிக்கடி எங்களால நியாபகப்படுத்திகிட்டு இருக்க முடியாது. உங்க கம்பெனிக்கு எதிரா ஏகப்பட்ட கம்மபனீஸ் இருக்கு. உங்கள சுத்தி எதிரிங்க ரொம்ப அதிகம். உங்க கெயார்லெஸ் உங்களுக்கு ஆபத்தா முடியலாம்” என்று பொறுமையை இழுத்து பிடித்து புரிய வைக்க, மாயாவோ அன்று ரோஹன் அவளை வெளியே அழைத்து சென்றதை நினைத்து, இருபுருவங்களை கேலியாக உயர்த்தி ‘ஆஹான்’ என்ற ரீதியில் பார்த்தாள்.

அந்த பார்வையின் அர்த்தத்தை உணர்ந்த ரோஹன், “என் பக்கத்துல நீ இருக்குற வரைக்கும், உனக்கு எதுவும் ஆக நான் விட மாட்டேன். நான் இல்லாத சமயம் இப்படி கிறுக்குத்தனமா எதுவும் பண்ணாத, புரியுதா? இல்லை, ஒரு அடியோட விட மாட்டேன்” என்று மிரட்ட, 

‘அன்னைக்கு தான் கிஸ் பண்ணான், இன்னைக்கு அடிக்கிறான். இவன் என் மேல ஏன் இவ்வளவு உரிமையா நடந்துக்குறான்..? என்னால அதை தடுக்க கூட தோணல்லையே…’ என்று நினைத்தவாறு அவனையே ஆழ்ந்து நோக்கினாள் மாயா.

அவள் முன் சொடக்கிட்டவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி ‘என்ன’ என்று கேட்க, அதில் தன்னை தொலைத்தவள் ‘ஆஆ’ வென வாயை பிளந்துக் கொண்டு அவனையே பார்த்தாள். ‘ஹ்ர்ம்… ஹ்ர்ம்…’ என்று தொண்டையை செறுமி மாயாவை நடப்புக்கு கொண்டு வந்த அலைஸ் கண்களாலே எச்சரிக்க செய்ய, ‘ஹிஹிஹி’ என்று அசடுவழிய நின்றாள் மாயா.

ரோஹனோ யாரையும் கண்டுக்காது மாயாவின் கைப்பிடித்து இழுத்துச் செல்ல, பின்னால் வர தயாரான அலைஸ்ஸை பார்த்தவன் சஞ்சய்யிடம், “ஹேன்டல் ஹெர்” என்றுவிட்டு நகர, அலைஸ்ஸோ, “மாயா திஸ் இஸ் டூ மச்” என்று கத்தியது மாயாவின் காதில் விழவில்லை என்றால், ரோஹனோ அவள் கத்தலை சட்டை செய்யவே இல்லை.

மாயாவின் காரின் அருகில் அழைத்து வந்தவன், இருவரையும் கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்த பாதுகாவலர்களை கண்டுக்காது, காரின் பின்சீட்டில் மாயாவை அமர வைத்து, தானும் அவள் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டான்.

அவர்கள் ஏறியதும் முன் இரு இருக்கையில் ஏறிய ஓட்டுனரையும், பாதுகாவலரையும் பார்த்த ரோஹன் மாயாவை பார்க்க, அவன் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவள் அவர்களிடம் ஏதோ சொல்லி வெளியேற சொல்ல, அவர்கள் இறங்கியதும் தான் தாமதம் அடுத்தநொடி மாயாவை இழுத்து இறுகி அணைத்த ரோஹன், தான் அறைந்த கன்னத்திலே தன் இதழை அழுந்த பதித்தான்.

அவன் முத்தமிட்டதில் திடுக்கிட்டவள் மலங்க மலங்க விழித்துக்கொண்டு அவனை பார்க்க, ரோஹனுக்கோ அன்று கல்லூரியில் கடைசி சந்திப்பின் போது அவளை அறைந்தது வேறு நினைவு வந்ததில், அன்று அறைந்ததற்கு இன்று பரிகாரமாக அவள் மற்ற கன்னத்திலும் அவன் முத்தமிட, மாயாவுக்கோ இனம் புரியாத உணர்வு.

அவன் முத்தத்தை இவள் கண்கள் மூடி அனுபவிக்க, ரோஹனோ அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவன், “என்னை மன்னிச்சிறுடி” என்று தழுதழுத்த குரலில் சொல்ல, பட்டென்று கண்களை திறந்து பார்த்தவளுக்கு அவன் கண்களில் தெரிந்த வேதனை எதற்கென்று தெரியவில்லை.

“எதுக்கு மன்னிப்பு?” என்று மாயா புரியாமல் கேட்க, மென்மையாக சிரித்தவன், “எல்லாத்துக்கும் தான்” என்றவாறு அவளை விட்டு விலக, அவளுக்கோ ஒன்றுமே புரியவில்லை.

“நாளைக்கு சைட்ல தான் இருப்பேன். என்னை பார்க்கனும்னா அங்க வா ஆனா, தனியா இல்லை” என்றுவிட்டு மீண்டும் அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு ரோஹன் காரிலிருந்து இறங்க, அவன் முன் முகமெல்லாம் சிவந்து பத்ரகாளி போல் வந்து நின்றாள் அலைஸ்.

சஞ்சய்யோ தூரத்திலிருந்து, “ஏய் பொண்ணே… ஏம்மா… இப்படியா சொன்ன பேச்ச கேக்காம உன் இஷ்டத்துக்கு வருவ” என்று கத்திக் கொண்டே வர, அலைஸ்ஸோ சஞ்சய்யை பார்த்துவிட்டு ரோஹனை மூக்குவிடைக்க முறைத்தவள், “அவன என்கிட்ட இருந்து சேஃபா பார்த்துக்க” என்று ஆங்கிலத்தில் பல்லை கடித்துக்கொண்டு உரைத்துவிட்டு மாயாவின் அருகில் அமர்ந்த அடுத்தநொடி, அங்கிருந்த மூன்று கார்களும் சீறிப் பாய்ந்தது.

சஞ்சய்யோ மூச்சு வாங்க நின்றவாறு, “அவ நிஜமாவே பொண்ணாடா? அப்பப்பா…! முடியல. எப்போ பாரு உம்முனு, டென்ஷனா மூஞ்ச வச்சிகிட்டு இருக்காடா என் மெழுகு பொம்மை. ஐ திங் போன ஜென்மத்துல பொலிஸா இருந்திருப்பாவோ என்னவோ…? விரைப்பாவே திரிஞ்சிக்கிட்டு இருக்கா. எப்படி தான் இவள கட்டிகிட்டு ஹேன்டல் பண்ண போறேனோ…?” என்று வாய்விட்டு புலம்ப,  பக்கென்று சிரித்து விட்டான் ரோஹன்.

அலுவலகத்தினுள்,

பாபியோ கோபமாக தன் அலுவலக அறைக்குள் நுழைந்து மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு கீர்த்தியை உக்கிரமாக பார்க்க, அவளோ அவன் முன் வந்து நின்று, திருதிருவென விழித்துக் கொண்டு நின்றாள்.

“மிஸ்.கீர்த்தி, நான் போகும் போது சொன்ன வேலையெல்லாம் கரெக்டா முடிச்சிட்டிங்களா? இல்லை…” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் பாபி கேட்க,  என்ன சொல்வதென்று தெரியாமல், “அது வந்து… அது…” என்று தடுமாறியவள் “ஷட் அப்” என்ற பாபியின் கர்ஜனையில் திடுக்கிட்டு தலைகுனிந்துக் கொண்டு நின்றாள்.

“ஆஃபீஸ் டைம்ல கொடுத்த வேலைய பார்க்காம என்ன வேவு பார்க்க கிளம்பி வந்திருக்க, ஓஹோ! ஒருவேள மேடம் மனசுகுள்ள இன்னும் அந்த தேவையில்லாத நினைப்பு சுத்திகிட்டு இருக்கா?” என்று அவன் காட்டமாக கேட்டதில், அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது.

கீழுதட்டை கடித்து அவள் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு நிற்க, சிறிது நேரம் அவளை ஆழ்ந்து பார்த்தவன், “லுக் கீர்த்தி, என் மனசுல வேற பொண்ணு இருக்கா. அதான், இன்னைக்கு பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். கூடிய சீக்கிரம் எங்களுக்கு கல்யாணம் ஆக போகுது. தேவையில்லாத எண்ணத்தை விட்டுட்டு, முக்கியமா என்னை வேவு பார்க்குறதை விட்டுட்டு ஆஃபீஸ் வேலைய கவனிக்கிறது பெட்டர்” என்றுவிட்டு வெளியேற,

கீர்த்திக்கோ வாய்விட்டே, ‘டேய் மடையா நான்தான்டா உன் ஆளு. அவ உன்னை ஏமாத்திகிட்டு இருக்கா டா, உனக்கு ஏன் எதுவுமே புரிய மாட்டேங்குது?’ என்று கத்த வேண்டும் போலிருந்தது.

காதல்போதை?
—————————————————————–

-ZAKI?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!