காதல்போதை 37?

அழைப்பு மணி சத்தத்தில் மாயா கதவை திறக்க, எதிரிலிருந்த ரோஹன் தான் அவள் தோற்றத்தில் திகைத்து விட்டான். சாதாரண சுடியில், முகத்தில் எந்தவித ஒப்பனையுமின்றி இருந்த அவளின் தோற்றம், ஐந்து வருடத்திற்கு முன் மாயா இருந்தது போன்றே ரோஹனுக்கு தோன்ற, கீர்திக்கு கூட அப்படியே தோன்றியதில், “ஜிலேபி” என்று தாவி அணைத்துக் கொண்டாள்.

புன்னகையுடன் அவளை அணைத்துக் கொண்ட மாயா, கீர்த்தியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட, ரோஹனோ உதட்டை பிதுக்கிக் கொண்டு பொறாமை கலந்த பார்வை பார்வை பார்த்ததில், உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் அவள். ஆனால், திமிறிய மார்பை இறுக்கிப் பிடித்த கருப்பு ஷார்ட், கருப்பு பேன்ட்டில், காதில் கடுக்கன் என்று ரோஹன் இருந்த தோற்றத்தை மாயாவால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

“வாங்க… வாங்க…” என்று மாயா அழைக்கவும், அனைவரும் புன்னகை முகமாக உள்ளே வர,  ‘என்னடா இது, ஹோட்டல் ரூம்னு சொன்னீங்க, மினி மேன்ஷன் மாதிரி இருக்கு’ என்று சுற்றும்,முற்றும் அங்கிருந்த ஆடம்பர பொருட்களை  வியப்புடன் பார்த்தவாறே வந்தாள் கீர்த்தி.

எல்லோரையும் அமர சொன்னவள், அங்கு சீருடையில் நின்றிருந்த வேலையாட்களிடம் கண்ணை காட்ட, அவர்களும் அடுத்த நிமிடம் முதலாளியின் கட்டளைக்கு அமைய, வந்தவர்களுக்கு குளிர்பானங்கள் கொண்டு வந்து கொடுத்தனர்.

அலைஸ்ஸோ எப்போதும் போல் மாயாவின் பின்னால் விரைப்பாக நின்றிருக்க, அதை கவனித்த மாயா, “அலைஸ் முதல்ல இரு, எதுக்கு நின்னுகிட்டு இருக்க?” என்று திட்ட, “இட்ஸ் ஓகே மேம்” என்ற அவள் பதிலில், கோபம் உச்சத்தை தொட்டது மாயாவிற்கு.

“ஆஃபீஸ்ல நீ எனக்கு பீஏவா இருந்தா போதும், மத்தபடி எப்போவுமே நீ என் பெஸ்ட் ஃப்ரென்ட் தான், புரியுதா? மொதல்ல உட்காரு” என்று அதட்டியும் அப்போதும் தயக்கமாக நின்றிருந்த அலைஸ்ஸின் கைப்பிடித்து மாயா அமர வைக்க, அலைஸ்கோ சஞ்சய்யின் அருகில் அமர வேண்டிய நிலைமை.

சஞ்சய்யோ குறும்பாக, “வணக்கமுங்க  ஹிஹிஹி” என்று அலைஸ்ஸிடம் சொல்லி முப்பத்திரண்டு பற்கள் தெரிய இழித்து வைக்க, அவளோ அவனை திரும்பி விசித்திரமாக பார்த்துவிட்டு, சலிப்பாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ஒரு தடவை சொல்வாயா? உன்னை எனக்கு பிடிக்கும் என்று, ஒரு பார்வை பார்ப்பாயா? உன்னை எனக்கு பிடிக்கும் என்று” என்ற பாடல் வரிகளை பாடாமல், பேசும் பாவனையில் சஞ்சய் அந்த வரிகளை சொல்லிக்காட்ட, அலைஸ்ஸோ சஞ்சய்யின் புலம்பலில் மாயாவை தான் முறைத்தாள்.

மற்ற மூவரும் அலைஸ்ஸை பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்க, வாய்விட்டு சிரித்த மாயா, “அண்ணா, நான் எப்போவும் சொல்றது தான், ஷீ இஸ் வெர்ரி டேன்ஜரஸ்” என்று அழுத்தி சொல்ல, சஞ்சய்யோ அசால்ட்டான ஒரு பார்வை பார்த்து, “என்ன நீ, எப்போ பாரு இதையே சொல்லிக்கிட்டு இருக்க? இந்த மெழுகு பொம்மை அப்படி என்னை என்ன பண்ணிரும்?” என்று கேலியாக கேட்டான்.

“மெழுகு பொம்மை” என்று மழலை சொல்வது போல் அலைஸ் சொல்லிக் காட்டி மாயாவை கேள்வியாக பார்க்க, “அப்போ உங்களுக்கு ஆண்டவன் விட்ட வழி தான், யூ கேர்ரி ஒன்” என்று மாயா சொல்லி வாயைப்பொத்திக் கொண்டு சிரிக்க, சஞ்சய் அலைஸ்ஸிடம் அப்பட்டமாக வழிந்தான் என்றால், அவளோ அவனை அப்பட்டமாக முறைத்து தள்ளினாள்.

“நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லவே இல்லையே… இன்னைக்கு என்ன ஸ்பெஷல்னு எங்களை டின்னர்க்கு இன்வைட் பண்ணிருக்க?” என்று ரோஹன் கேட்க, “இன்னும் த்ரீ டேய்ஸ்ல நான் இட்டாலி கிளம்புறேன். மறுபடியும் எப்போ வருவேன்னு தெரியாது, அதான்…” என்று மாயா,  ரோஹனை பார்த்தவாறே சொன்னாள்.

சிறிது நேரம் தன்னவளையே அழத்தமாக பார்த்திருந்தவன் பின், எதுவும் பேசாது தொலைப்பேசியை நோண்டுவது போல் முகத்தை திருப்பிக் கொண்டான்.

“அப்றம் மாயா, எப்போ கல்யாணம்?” என்று பாபி நக்கலாக கேட்க, “கட்டிக்க போறவனுக்கு ஓகேன்னா, சீக்கிரமே பண்ணிக்கலாம்” என்று ரோஹனை ஓரக்கண்ணால் பார்த்தவாறு மாயா சொல்ல, அவனோ ஒருதரம் நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு குனிந்துக் கொண்டான்.

சஞ்சய்யோ ரோஹனை எட்டிப் பார்த்துவிட்டு, “அப்படியா தங்கச்சிமா? லியோ எப்போன்னாலும் ரெடியா தான் இருக்காரு, அன்னைக்கு அவர் உன்ன பார்த்த பார்வையில அம்புட்டு லவ்வு”  என்று சொல்ல, ரோஹனின் முகமோ இறுகிப் போனது.

‘அந்த குரங்க பத்தி இப்போ யாரு நினைச்சாங்க’ என்று உள்ளுக்குள் பொறுமியவள், “ஆங்… ஆமா, இட்டாலி போறேன்ல, பார்க்கலாம்” என்றவள், பேச்சை மாற்ற எண்ணி, “டின்னர் ரெடி , சாப்பிடலாமா?” என்று அழைத்தாள்.

அவர்களும் புன்னகையுடன் தலையசைக்க, அடுத்த நொடி அந்த பெரிய உணவு மேசையில் ஏகப்பட்ட உணவுகள் வகை வகையாக வைக்கப்பட, மாயாவே எல்லோருக்கும் சாப்பாட்டை பரிமாறினாள்.

ரோஹனுக்கு பரிமாறிய மாயா, அங்கேயே நின்று  அவனுக்கு உணவை வைத்துக் கொண்டே செல்ல, “இனாஃப் மாயா, போதும். அய்யோ! போதும்” என்று அலறியே விட்டான் அவன்.  எப்போதும் போல் அலைஸ் தான், ‘ஹ்ர்ம் ஹ்ர்ம்’ என்று செறும, ‘ஹிஹிஹி’ என்று அசடுவழிந்தவள், ஒருவித சங்கடத்துடன் அமர்ந்துக் கொண்டாள்.

“மெழுகு பொம்மை என்னடா இது, தட்டுல  இலைதழைன்னு வச்சிருக்க. நல்லா சாப்பிட்டா தானே கொழுக்கு மொழுக்குன்னு இருக்கலாம்” என்று சஞ்சய் சொல்ல, அவளோ அவனை விசித்திரமாக பார்த்து, “எக்ஸ்கியூஸ் மீ” என்றுவிட்டு சாப்பிட ஆரம்பிக்க, அவனோ அவளை பார்த்தவாறே சாப்பிட்டான்.

“மாயா, எதுக்கு சடன் ஆ இட்டாலி கிளம்புற, ஏதாச்சும் ப்ரோப்ளமா?” என்று பாபி கேட்க, “ஐரா கோஸ்மெடிக்ஸ்ஸோட நிவ் ப்ரோடெக்ட் பத்தி அறிவிச்சிருந்தேன். ஆல்மோஸ்ட் எல்லா ஃபோர்மலிட்டீஸ்ஸும் கம்ப்ளீட் தான். ஆனாலும், நான் போக வேண்டிய கட்டாயம். என்ட், மத்த ப்ரான்ச்சர்ஸ்ஸ ஹேன்டல் பண்ண சில பேரை அஸ்ஸைன் பண்ணிருக்கேன். பட், இட்டாலில இருக்குற மெய்ன் ப்ரான்ச்ச நான்தான் கவனிக்கனும். அதான்…” என்று மாயா சொல்ல, ரோஹனோ எதுவும் பேசாது உணவையே பிசைந்தவாறு இருந்தான். அவன் முகம் யோசனையில் இருப்பதை அப்பட்டமாக காட்டியது.

“நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன் ஜிலேபி” என்று கீர்த்தி சோகமாக சொல்ல, புன்னகைத்த மாயா பாபியை குறும்பாக பார்த்து, “தருண், உனக்கு எப்போ கல்யாணம்? பொண்ணு கூட பார்த்தாச்சு, உன் ஸ்வீட்டிய எப்போ எங்களுக்கு அறிமுகப்படுத்த போற?” என்று கேட்க, கீர்த்தியோ மாயாவை உக்கிரமாக முறைத்தாள்.

கீர்த்தியை ஒரு பார்வை பார்த்தவன் சலிப்பாக இருபுறமும் தலையாட்டி, “கூடிய சீக்கிரம்” என்று சொல்ல, “அப்போ நான் நெக்ஸ் டைம் இந்தியா வரேன்னா, உன் கல்யாணமா தான் இருக்கனும்” என்ற மாயாவின் பதிலில், வாய்க்கு வந்த வார்த்தைகளை கொண்டு அவளை கீர்த்தி திட்டியது அவள் உதட்டசைவிலே காட்டிக் கொடுத்தது.

திடீரென, “சாப்பிடும் போது பேசக் கூடாது” என்று ரோஹன் கண்டிப்பாக சொல்ல, அவனை புரியாது பார்த்த மாயா, “அது வந்து… ரோஹன்…” என்று அப்போதும் ஏதோ பேச வர, “சாப்பிடும் போது பேசக் கூடாது” என்று மீண்டும் அவன் சொன்னதில் விழிவிரித்தவள், ‘அய்யய்யோ! மறுபடியும் வேதாளம் முருங்க மரத்துல ஏறிட்டு போல’ என்று நினைத்துக் கொண்டாள்.

ரோஹன் கூறிய விதத்திலும், மாயா அதற்கு திருதிருவென விழிப்பதையும் பார்த்து அலைஸ்க்கு சிரிப்பு முட்டிக் கொண்டு வந்ததில் வாய்விட்டு அவள் சிரித்துவிட, பல நாட்கள் கழித்து தன் நண்பி சிரிப்பதை பார்த்து மாயா புன்னகைக்க, சஞ்சய்யோ, “வாவ்! உனக்கு சிரிக்க கூட தெரியுமா?” என்று ஆங்கிலத்தில் கேட்டான்.

“சோ…சோரி” என்று மீண்டும் முகம் இறுகிய அலைஸ், உணவுத் தட்டிலே முகத்தை புதைத்துக் கொள்ள, சஞ்சய்யோ கேள்வியாக மாயாவை பார்த்தான் என்றால், அவளோ தன் நண்பியை வேதனை நிறைந்த ஒரு பார்வை பார்த்தாள்.

சாப்பிட்டுவிட்டு எல்லோரும் பேசிக் கொண்டிருக்க, கீர்த்தி இல்லாததை கவனித்த மாயா அவளை தேடி பால்கெனிக்கு சென்றாள். அங்கு நிலவை வெறித்தவாறு நின்றிருந்த கீர்த்தியை பார்த்தவள், “கீர்த்தி” என்றழைக்க, திரும்பி அவளை முறைத்தவள், ” நீ என்கிட்ட பேசாத, நான் உன் மேல கோபமா இருக்கேன்” என்றதில், அவளின் சிறுபிள்ளை தனமான கோபத்தில் சிரித்தேவிட்டாள் மாயா.

“என்னாச்சு?” என்று மாயா சிரித்தவாறு கேட்க, “என்ன என்னாச்சு? நான் தருவ எவ்வளவு லவ் பண்றேன்னு உனக்கு தெரியும்ல, அதுவும் நான் தான் அந்த பொண்ணுன்னு தெரிஞ்சும், நீ எப்படி அப்படி சொல்லலாம்?” என்று உதட்டை பிதுக்கிக் கொண்டு கேட்டாள் கீர்த்தி.

அவளை ஆழ்ந்து நோக்கியவள், “நீ மொதல்ல உன் காதல உன் தருகிட்ட சொன்னியா?” என்று கேட்க, “முருகா! அவர்கிட்ட பேசவே எனக்கு நாக்கு தள்ளிரும். இதுல எப்படி நான் என் லவ்வ சொல்ல? அதுவும் நான் அவருக்கு தகுதியானவளான்னு எனக்கே சந்தேகமா இருக்கு. ஒருவேள நான் அவர்கிட்ட நேரடியா காதல சொல்லி, அவரும் நேருக்கு நேர் என்னை பிடிக்கலன்னு சொன்னா, அவ்வளவு தான் ரொம்ப உடைஞ்சி போயிறுவேன். அவருக்கு தான் நான் காதலிக்கிறது தெரியும்ல, அப்றம் ஏன் அவருக்கு என்னை பிடிக்கல?” என்று கீர்த்தி கண்கலங்க கேட்டாள்.

“நான் ஒன்னு சொல்லவா, தருண் என்ன நினைக்கிறான்?, என்ன பதில் சொல்வான்? அதெல்லாம் விட்டுறு. உன் காதல அவன்கிட்ட நேரடியா சொல்றது தான் முக்கியம். நம்ம காதலுக்காக நாம தான் போராடனும். உன் ஃப்ரென்ட் தான் நீ காதலிக்கிறத தருண்கிட்ட சொன்னான்னு, நீதானே சொன்ன. ஒருதடவையாவது உன் காதல அவன்கிட்ட நீ சொல்லு, அதுல என்ன உனக்கு பயம், தயக்கம் கீர்த்தி?

ரோஹன ஒரு பொண்ணு காதலிச்சான்னு சொன்னீங்கல்ல, இவர் எவ்வளவோ மறுத்தும் அவ காதலை ஒவ்வொரு நொடியும் உணர்த்திகிட்டு, இவர் பின்னாடியே சுத்திகிட்டு இருந்திருக்கா. அவ ஃப்ரென்டா இருந்துகிட்டு நீ உன் காதலுக்காக போராடலன்னா எப்படி?” என்று மாயா கேட்க, கீர்த்திக்கு கூட மாயா, ரோஹன் மீது காட்டிய காதலும், கல்லூரியில் நடந்த சில சம்பவங்களுமே நினைவுக்கு வந்தன.

“பாபி முகம் பார்க்காம காதலிச்ச அவன் ஸ்வீட்டியா அவன் முன்னாடி போய் நிக்காத. கீர்த்தியா போய் அவன்கிட்ட உன் மனசுல இருக்குறதை சொல்லு. அவனோட பதில ஏத்துக்க ஆனா, அவன் மேல நீ வச்சிருக்க காதல என்னைக்கும் விட்டுக் கொடுக்காத. போராடாம கிடைக்குற தோல்வியை விட கோழைத்தனம் எதுவும் இல்லை” என்று மாயா சொல்லி முடிக்க, கீர்த்திக்கோ நிஜமாகவே தெளிவு பெற்ற உணர்வு.

கீர்த்தி புன்னகையுடன் மாயாவை அணைத்துக் கொள்ள, ‘ஹ்ர்ம் ஹ்ர்ம்’ என்ற சத்தத்தில் இருவருமே ஒருசேர திரும்பி பார்த்தனர். அங்கு ரோஹன் தான் பேன்ட் பாக்கெட்டுக்குள் கையயை விட்டு, மாயாவை பார்த்தவாறு நின்றிருந்தான்.

“ஓகே, நீங்க பேசிட்டு வாங்க” என்று மாயாவை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டிவிட்டு கீர்த்தி நகர, ரோஹனோ மாயாவை மெல்ல நெருங்க, அவளுக்கோ அன்று முத்தமிட்டது நினைவு வந்து இதயம் படபடவென அடித்துக் கொண்டது.

அவளையே ரசனையாக பார்த்தவன் அவளை நெருங்கி, தன் பாக்கெட்டிலிருந்த ப்ரேஸ்லெட்டை அவள் கையில் அணிவித்து உள்ளங்கையில் முத்தம் பதிக்க, மாயாவோ அவனை அதிர்ந்து நோக்கினாள். அவள் காதுமடலில் தன் இதழ் உரச, “பிடிச்சிருக்கா?” என்று ரோஹன் ஹஸ்கி குரலில் கேட்க, அவன் அணிவித்த ப்ரேஸ்லெட்டை புன்னகையுடன் வருடியவள், “வாவ்! தேங்க் யூ” என்றவாறு அவனை கண்களில் ஒரு ஆர்வத்துடன் பார்த்தாள்.

அவனும் அவளையே தான் பார்த்திருந்தான் ஆனால், கண்களில் ஒரு குழப்பத்துடன். தன்னை மீறி அவனை நெருங்கியவள் அவன் ஷர்ட் கோலரை பிடித்து எம்பி, அவன் இதழில் முத்தமிட போக, சட்டென ரோஹன் முகத்தை திருப்பிக் கொண்டதில் மாயாவுக்கொ தர்ம சங்கடமாகிப் போனது.

முகம் இறுகியவள், “ஐ அம் சோரி” என்றுவிட்டு நகர போக, அவள் இடையை வளைத்து தன்னருகில் இழுத்தவன், அவளின் இதழில் முத்தத்தை பதிக்க, அவன் விலகலில் ஏற்கனவே கடுப்பானவள் அவன் மார்பில் கைவைத்து தள்ள, அவன் விட்டால் தானே…

அவன் பிடியோ உடும்புப்பிடியாக இருக்க, மாயாவும் சிறிதுநேரம் திமிறியவள் பின், அவனுடனே ஒன்றிப்போனாள். திடீரென கேட்ட காலடி சத்தத்தில் அவளிதழிலிருந்து தன்னிதழ் பிரித்து,  நிதானமாக திரும்பிப் பார்த்த ரோஹன், அங்கு அலைஸ் அங்குமிங்கும் வேடிக்கை பார்ப்பது போல் பாவனை செய்வதை பார்த்துவிட்டு, மாயாவை விட்டு விலகினான்.

அவன் விலகியதுமே நிகழ்காலத்திற்கு வந்தவள், அவனை முறைத்தவாறு அலைஸ்ஸை இழுத்துக் கொண்டு விறுவிறுவென அங்கிருந்து நகர, இங்கு ரோஹன் தான் தன் குழப்பம் புரியாமல், தலைமுடியை அழுந்த கோதி தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முயற்சித்தவாறு நிலவை வெறித்தவாறு நின்றிருந்தான்.

சிறிது நேரம் கழித்து ஹோலுக்கு வந்தவனை மாயா ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அடுத்த கொஞ்ச நேரத்திலே எல்லாரும் வெளியேற தயாராக, கதவு நிலையில் சாய்ந்நு நின்ற சஞ்சய், “என்ன சொல்ல போகிறாய்? என்ன சொல்ல போகிறாய்?” என்று அலைஸ்ஸை பார்த்தவாறு பாட, அவளோ எப்போதும் போல் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காது தொலைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தாள்.

ரோஹனோ மாயாவை அடிக்கடி திரும்பி பார்த்தவாறு செல்ல, ஏதோ யோசித்த மாயா, ” அண்ணா… அண்ணா…” என்று கத்தியவாறு சஞ்சய்யின் பின்னால் வர, அவனும் அவள் அழைப்பில் நின்று, அவளை கேள்வியாக நோக்கினான்.

“அண்ணா, நீங்க நிஜமாவே அலைஸ்ஸ காதலிக்கிறீங்களா? ஏன் கேக்குறேன்னா, நீங்க இதை விளையாட்டுக்கு பண்ணிகிட்டு இருக்கீங்கன்னா, வேணாம்” என்று மாயா சொல்ல,

“அய்யோ! தங்கச்சிமா, எனக்கு நிஜமாவே அந்த மெழுகு பொம்மைய பிடிச்சிருக்கு. என்னன்னு தெரியல, எப்போவும் விரைப்பா இருந்துகிட்டு, என்னை முறைச்சிகிட்டு இருக்குற அந்த முகத்துல தினமும் சிரிப்பை பார்க்கனும்னு தோணுது. ட்ரூலி ஐ லவ் ஹெர். ஆனா என்ன, அதை அவக்கிட்ட புரியும்படியா சொல்றதுக்கு தான் பயமா இருக்கு” என்று சிரிப்புடன் சொன்னான் சஞ்சய்.

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா, மூனு வருஷத்துக்கு முன்னாடி ஒரு இழப்புல அவ இறுகிப் போயிட்டா. அவ வாழ்க்கைல நடந்ததை நான் சொல்ல போறதில்லை. உங்க காதலை அவக்கிட்ட சொல்லுங்க, அப்றம் நீங்களே தெரிஞ்சிப்பீங்க. பட்  பீ க்யார்ஃபுல்” என்று மாயா கடைசி வசனத்தை அழுத்தி சொல்லி சிரிக்க, “வட்எவர்…” என்று இருபுறமும் தலையாட்டி சிரித்துக் கொண்டான் சஞ்சய்.

ரோஹனோ தன்னவளையே ஏக்கமாக பார்க்க, அவளோ அவனை கண்டுக்காது கீர்த்தியிடம் கண்களால் பாபியை காட்டி, ‘சொல்லு’ என்று சைகை செய்துவிட்டு செல்ல, ரோஹனுக்கோ அவளை எப்படி சமாதானம் செய்வதென்றே தெரியவில்லை.

கீர்த்தியை அவள் வீட்டில் இறக்கி விட்டவர்கள், தமது வீட்டை நோக்கி சென்றனர். போகும் வழியில் , “ஆமா… ஏன்டா மாயா உன்னை பார்த்து முறைச்சிகிட்டே இருக்கா?”  என்று புரியாமல் கேட்டான் பாபி.

“அது வந்துடா…” என்று தயங்கிய ரோஹன் ஒரு பெருமூச்சைவிட்டு, “என்னால முடியலடா, சில நேரம் என் அம்முவா தெரியுறா, சில நேரம் அவள பார்க்கும் போது மாயா மஹேஷ்வரியா தெரியுறா. அந்த நேரத்துல அவளே என்னை நெருங்கினாலும், என்னால அவள நெருங்க முடியல. இன்னைக்கு கூட…” என்று குரல் தழுதழுக்க சொல்ல,

அவனை முறைத்த பாபி, “இடியட், அன்னைக்கு நீதானே அவக்குள்ள தான் உன் அம்மு இருக்கான்னு சொன்ன. இப்போ மட்டும் என்ன? அவ எப்போவும் நம்ம மாயா தான். அதனால தான் என்னவோ, அவளால ஈஸியா எங்க கூட இன்டிமேட் ஆக முடிஞ்சது. மைன்ட் இட் ரோக்கி, கிறுக்குத்தனமா நடந்துகிட்டு மறுபடியும் அவள இழந்துராத” என்று காட்டமாக சொன்னான்.

ரோஹனின் முகமே அவன் மனதின் வலியை அப்பட்டமாக காட்ட, கார் கண்ணாடி வழியே வெளியே வெறித்துக் கொண்டிருந்தாலும், அவன் மனமோ, ‘அம்மு எப்போ என்கிட்ட வருவ?’ என்று ஏங்கிக் கொண்டிருந்தது.

ஹோட்டல் அறையில்,

அலைஸ்ஸின் கையிலிருந்த தொலைப்பேசியை பிடுங்கிய மாயா, அவளை அழுத்தமாக பார்த்தாள். அவளோ மாயாவின் செயலில் எரிச்சலாகி, “வாட்?” என்று சலிப்பாக கேட்க,  “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க போற?” என்று மாயா கேட்டதில் அவளை அலட்சியமாக பார்த்தாள் அலைஸ்.

“இப்போ உனக்கு என்ன பிரச்சினை?” என்று அலைஸ் கடுப்பாக கேட்க, “நீதான் என் பிரச்சினையே அலைஸ், சஞ்சய் அண்ணாக்கு உன்ன பிடிச்சிருக்கு. அது உனக்கும் தெரியும்னு, எனக்கு நல்லாவே தெரியும். நீ என்ன சொல்ற?” என்று மாயா ஆர்வமாக கேட்டாள்.

கலங்கிய விழிகளுடன் அவளை ஏறிட்ட அலைஸ், “என்னை பத்தி தெரிஞ்சும் இப்படி கேக்குறியே மாயூ” என்று சொன்னதில், அவளை அணைத்துக் கொண்டவள், “அலைஸ் ஐ ப்ரோமிஸ் யூ, சஞ்சய் அண்ணா மாதிரி ஒரு நல்ல லைஃப் பார்ட்னர் உனக்கு எப்போவும் கிடைக்க மாட்டாங்க,  ஹீ லவ்ஸ் யூ”  என்று சிரிப்புடன் சொன்னாள்.

ஆனால் விரக்தியாக புன்னகைத்த அலைஸ், “என்னை பத்தி தெரிஞ்சா அந்த காதலும் காணாம போயிறும் ” என்று சொல்ல, “நிச்சயமா இல்லை, ஐ க்னோ ஹிம்” என்ற மாயாவின் உறுதியான வார்த்தைகளையும் கண்டுக்காது அங்கிருந்து நகர்ந்தாள் அவள்.

அடுத்தநாள்,

பாபியின் அறையின் வெளியே நின்றிருந்த கீர்த்திக்கோ ஒரே படபடப்பாக இருந்தது. ‘அய்யய்யோ ஜிலேபி பேச்சை கேட்டு தருகிட்ட சொல்ல மனப்பாடம் பண்ண டயலாக் எல்லாம், இந்த கேபின் கதவை பார்த்ததும் மறந்து போச்சே… கடவுளே! நீதான்பா என்கூட இருக்கனும்’ என்று மானசீகமாக வேண்டிக் கொண்டவள் கதவை தட்டிவிட்டு உள்ளே செல்ல, பாபியோ இருக்கையில் சுழன்றவாறு ஏதோ ஒரு ஃபைலை தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

‘கந்தா, கடம்பா, கதிர்வேலா, பிள்ளையாரப்பா, ஈஷ்வரா…’ என்று இருக்கும் அத்தனை கடவுள்களையும் அழைத்தவாறு கீர்த்தி பாபியின் முன்னால் வந்து கைகளை பிசைந்துக்கொண்டு நிற்க, நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் ஃபைலில் முகத்தை புதைத்து, “மிஸ்.கீர்த்தி, வீ.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன் ப்ரோஜெக்ட் ரிப்போர் இன்னைக்கு ஈவினிங்குள்ள என் டேபிள்ல இருக்கனும், அலோங் வித் தட் கோபி.  என்ட், மதியம் சைட்க்கு போக வேண்டியிருக்கு, சோ, அதுக்குள்ள சொன்ன வேலைகளை முடிச்சிறுங்க” என்று எப்போதும் போல் அவன் பாட்டிற்கு வேலைகளை அடுக்கிக் கொண்டே போக, கீர்த்தி தான் திணறிவிட்டாள்.

மலங்க மலங்க விழித்த வண்ணம் கீர்த்தி அசையாது நின்றிருக்க, அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்த பாபி கண்களாலே, ‘என்ன’ என்று கேட்டான். அவளோ அந்த ஒரு பார்வையிலேயே மனப்பாடம் செய்திருந்த கொஞ்சநஞ்சத்தையும் மறந்துவிட்டாள்.

“மிஸ்.கீர்த்தி, சொன்ன வேலைய செய்யாம எதுக்கு என் முன்னாடி நின்னுகிட்ட பெக்க பெக்கன்னு முழிச்சிகிட்டு நிக்கிறீங்க?” என்று பாபி அதட்ட, “சார், நான்… அது வந்து… நான்… நீங்க” என்று பயத்தில் தடுமாற ஆரம்பித்து விட்டாள் கீர்த்தி.

“என்ன இப்போ தான் பேச கத்துக்கிறீங்களா?” என்று பாபி கடுப்பாக கேட்க, பதட்டத்தில் மேசையிலிருந்த தண்ணீர் குவளையை அவன் அனுமதியின்றி எடுத்து குடித்தவள், தைரியத்தை வரவழைத்து, தன் மனதிலுள்ளதை சொல்ல தொடங்கினாள்.

“ஐ லவ் யூ தரு, சின்ன வயசுலயிருந்து நான் உங்கள காதலிக்கிறேன். நீங்களும் என்னை காதலிக்கனும்னு நான் வற்புறுத்த மாட்டேன். என் காதல சொல்லாம விட்டேன்னு எப்போவும் நான் வருத்தப்பட்டுற கூடாதுன்னு தான் இப்போ சொல்லிட்டேன். மத்தபடி உங்க முடிவு எதுவா இருந்தாலும் எனக்கு சம்மதம் தான்” என்று பேசி முடித்து கீர்த்தி தலையை குனிந்துக்கொள்ள,

சிறிது நேரம் அவளையே பார்த்திருந்தவன் பின் இருக்கையில் நிதானமாக சாய்ந்து அமர்ந்து, “பேசி முடிஞ்சதா? நீங்க இப்போ கிளம்பலாம்” என்று சாதாரணமாக சொல்ல, சட்டென நிமிர்ந்த கீர்த்தி அவன் முகத்தை கூர்ந்து நோக்கினாள்.

அவன் முகத்தில் எந்த உணர்வுகளும் பிரதிபலிக்காது இருக்க, அந்த அதிர்ச்சியினூடே அறையிலிருந்து வெளியே வந்த கீர்த்தி, ‘என்னாச்சு? நான் போனேன், என் லவ்வ சொன்னேன், ஆனா ஒரு ரியாக்ஷனும்  இல்லையே… போங்கன்னு அசால்ட்டா சொல்லிட்டாரு. என்னடா இது?’ என்ற குழப்பத்திலே அன்றைய நாளை கழித்தாள்.

அடுத்த இரண்டு நாட்களும் ரோஹன், மாயாவை அழைத்தாலும், அவள் அவனை கண்டுக்காதது போலிருக்க, ரோஹனுக்கு தான் ஐந்து வருடங்களுக்கு முன் அவன் அவளை ஒதுக்கியதற்கு, இன்று மாயா  அவனை பழிவாங்குவது போலிருந்தது.

இவ்வாறு மாயா இத்தாலிக்கு செல்லும் நாளும் வந்தது.

காதல்போதை?
—————————————————–

ZAKI?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!