காதல்போதை 38?

இரண்டு நாட்கள் கழித்து,
விமானநிலையத்தில்,

வசதி படைத்த சிலருக்கு ஒதுக்கப்படும் இருக்கையில் அமர்ந்திருந்த மாயாவுக்கோ மனதில் பலவேறு குழப்பங்கள். அதை யோசித்தவாறு ஒரு இடத்தையே வெறித்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்க, திடீரென தன் பக்கத்தில் அரவம் உணர்ந்து திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.

அவள் பக்கத்தில் கண்களை மூடி, இருக்கையில் சாய்ந்தவண்ணம் ரோஹன் அமர்ந்திருக்க, இத்தனை நேரம் அலைஸ் இருந்த இடத்தில் அவனை பார்த்து முதலில் அதிர்ந்த மாயா பின், அன்று அவன் நடந்துக் கொண்டது நியாபகத்திற்கு வந்ததில் கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.

கண்களை திறந்து அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்த ரோஹன், “ஐ அம் சோரி” என்று சொல்ல, “மிஸ்டர்.ரோஹன், நீங்க எனக்கு சோரி சொல்ற அளவுக்கு நமக்குள்ள எதுவும் இல்லை. ஜஸ்ட் நாங்க உங்க க்ளைன்ட், அவ்வளவு தான்” என்று காட்டமாக வந்த அவளின் வார்த்தைகளில், ரோஹனுக்கோ கோபம் எகிறியது.

“யூ க்னோ வட், என் வாழ்க்கையில நான் யாருக்கிட்டேயும் மன்னிப்பு கேட்டதில்லை. உன்கிட்ட நான் சொல்றேன்னா, என் லைஃப்ல நீ யாருன்னு புரிஞ்சிக்க” என்று ரோஹன் கோபமாக சொல்ல, “ஆஹான்! ஓகே மிஸ்டர்.ரோஹன், இந்தியா டூ இட்டாலி போற ஃப்ளைட்ல நீங்க என்ன பண்றீங்க?” என்று மாயா கேலியான குரலில் கேட்டாள்.

“எனக்கு ரொம்ப நெருங்கின ஒன்னு என்னை விட்டு போகுது, அதான் அதை விட்டு இருக்க முடியாம நானும் கூடவே போறேன்” என்று அவள் கண்களையே காதலாக பார்த்தவாறு அவன் சொல்ல,  அவன் கூறிய விதத்தில் விரிய முயன்ற இதழ்களை அடக்கியவளுக்கு அவனது பேச்சை ரசிக்கும் கண்களையும், சிவக்கும் கன்னங்களையும் மட்டும் அடக்க வழி தெரியவில்லை.

தன் கன்னச்சிவப்பை மறைக்க, அவள் முகத்தை திருப்பிக்கொள்ள, ரோஹனுடைய இதழ்கள் தானாக புன்னகைத்துக் கொண்டன. அவர்களுக்கு முன் அமர்ந்திருந்த அலைஸ் இருவரையும் எட்டிப்பார்த்து, புன்னகைத்தவாறு திரும்பிக்கொண்டாள்.

இத்தாலி சென்று சேரும் வரை இருவருக்கும் தன்னவர்களின் நெருக்கம் ஒருவித இதத்தையே கொடுக்க, மாயாவோ உரிமையாகவே ரோஹனின் தோள் மீது தலை வைத்துக் கொண்டாள். அவனும் அவளின் கைகளை தன் கைகளுக்குள் அடக்கி, தன் தோள் மீதிருந்த அவளின் தலை மேல் தலை வைத்து கண் மூடி கொண்டான்.

அடுத்த சில  மணிநேரங்களில் இத்தாலியின் வெனிஸ் நகர விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க, விமானத்திலிருந்து இறங்கியதும் ரோஹன் தன்னவளை கைவளைவுக்குள் வைத்தானோ இல்லையோ, மாயா ரோஹனை தன் பிடியிலே வைத்திருந்தாள்.

இத்தாலியில் இறங்கியதுமே மாயாவின் பாதுகாவலர்கள் ரோஹனையும் , மாயாவையும் சூழ்ந்துக் கொண்டு காரை நோக்கி அழைத்துச் செல்ல, மாயாவும் இத்தாலியின் மொழியில் அவர்களிடம் ஏதேதோ சொல்லியவாறு ரோஹனின் கையை இறுகப்பற்றிக் கொண்டு விறுவிறுவென செல்ல, ரோஹனுக்கு தான் ஏதோ கண்ணை கட்டி காட்டில் விட்டது போலிருந்தது.

அங்கு நின்றிருந்த ரோல்ஸ் ரொய்ஸ் கார் கதவை ஒரு பாதுகாவலர் திறக்க, உள்ளே மாயா ஏறிக்கொள்ளவும் அவளருகில் அமர்ந்துக் கொண்டான் ரோஹன். காருக்கு முன், பின் என பாதுகாவலர்கள் காரில் வர, வரிசையாக வீதியில் சென்ற அந்த விலையுயர் கார்கள் மாயாவின் பங்களாவை நோக்கி சென்றன.

ரோஹன் ஏதோ தயக்கத்தில் இருக்க, அதை உணர்ந்த மாயாவும் அவன் கைகளுடன் தன் கைகளை கோர்த்து, கண்களாலே, ‘என்ன’ என்று வினவினாள்.

“என்னை ஹோட்டல்ல இறக்கி விடு, நான் அங்க ஸ்டே பண்ணிக்கிறேன்” என்று ரோஹன் சொல்ல, பொய்யாக முறைத்தவன், “முழுசா நனைஞ்சாச்சு இதுக்கப்றம் முக்காடு எதுக்கு? நாளைக்கு நம்ம இரண்டு பேரும் தான் சோஷியல் மீடியால ட்ரென்டிங் ஆ இருக்க போறோம். ஐ திங், இப்போ நீங்க தனியா இருக்குறது உங்களுக்கு சேஃப் கிடையாது. என் கூடவே இருங்க ரோஹன், ப்ளீஸ்” என்று நிதானமாக சொன்னாள் மாயா.

“பட், உன் டாட் ஒத்துப்பாரா?” ரோஹன் அவளை அழுத்தமாக பார்த்தவாறு கேட்க, “ஐ வில் ஹேன்டல், எனக்கு ரொம்ப நெருக்கமானவங்களை நான் தனியா தவிக்க விட மாட்டேன். நீங்க இங்க இருக்கப்போற கொஞ்சநாளும் பிஸ்னஸ் ஹோலிடேய் ஆ மாத்திறலாம்” என்று மாயா சிரித்தவாறு சொன்னாள்.

எப்போதும் அவளுடைய அசால்ட்டான தனத்தில் வியந்துக் கொண்டவன் இன்றும் வாய்விட்டே, “உன்னால மட்டும் எப்படி இப்படி இருக்க முடியுது?” என்று கேட்க, மாயாவோ வாய்விட்டு சிரித்துக் கொண்டாள்.

அந்த பெரிய கேட்டை தாண்டி வரிசையாக கார்கள் உள்ளே செல்ல, கார் கண்ணாடி தாண்டி வெளியே பார்த்த ரோஹனின் கண்கள் விரிய, உதடுகளோ, “வாவ்!” என்று முணுமுணுத்தது. பெங்ளூரில் ரோஹனின் வீடே சின்ன அரண்மனை போன்று தான் ஆனால், இங்கு அவன் வீட்டை விட பல மடங்கு பெரிய இந்த அழகிய பங்களாவை பார்த்தவனுக்கோ வியக்காமல் இருக்க முடியவில்லை.

பச்சை பசேலென புற்தரையிலான தோட்டம், கூடவே செயற்கை நீர்வீழ்ச்சி என அந்த இடமே கண்ணை பறிக்க, வரிசையாக கார்கள் அந்த அரண்மனையின் போர்டிகாவில் நிறுத்தப்பட்டன. “வெல்கம் மிஸ்டர்.ரோஹன்” என்று புன்னகையுடன் கூறியவாறு மாயா இறங்கி ரோஹனின் கைப்பிடித்த உள்ளே அழைத்துச் செல்ல, ஹோலில் அமர்ந்திருந்த சர்வேந்திரன் ரோஹனை பார்த்து உச்சகட்ட கோபத்திற்கு தான் சென்றார்.

“ஹாய் டாட்” என்றவாறு மாயா உற்சாகமாக வர, ரோஹனோ சர்வேந்திரனை கண்டும் காணாதது போல் பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு சுற்றி முற்றி பார்த்தவாறு நின்றிருந்தான்.

மாயா அங்கிருந்த வேலையாட்களிடம் சில கட்டளைகளை பிறப்பித்துவிட்டு, ரோஹனை சோஃபாவில் அமர சொல்ல, அவனும் சர்வேந்திரனை, “ஹெலோ சார்” என்று நக்கல் பொதிந்த குரலில் சொன்னவாறு அமர்ந்தான். அலைஸ்ஸோ மாயாவிடம் கண்களால் எதையோ சைகை செய்துவிட்டு அங்கிருந்து நகர, அவளும் ஒரு தலைசைப்போடு திரும்பிக் கொண்டாள்.

அடுத்த சில நொடிகளிலே ஒரு சீருடை அணிந்த வேலைப்பெண் அவர்களுக்கு ஜூஸ் கொண்டு வர, அவர்களிடமிருந்து வாங்கி தானே ரோஹனுக்கு மாயா கொடுக்க, சர்வேந்திரனோ மாயாவை அழுத்தமாக பார்த்தவாறு, “மாயூ, எப்போதிலிருந்து நமக்காக வேலை பார்க்குறவங்க கூட இவ்வளவு நெருக்கமா பழக ஆரம்பிச்ச, அதுவும் பேப்பர்ஸ்ல உங்க ஃபோட்டோஸ் வர்ற அளவுக்கு” என்று காட்டமாக கேட்டார்.

ரோஹனோ எதுவும் பேசாது அமைதியாக குளிர்பானத்தை குடிக்க, ரோஹனை ஒருநிமிடம் தயக்கமாக பார்த்தவள் பின் சர்வேந்திரனை பார்த்து, “டாட், இவங்க ஒன்னும் நமக்கு கீழே வேலை பார்க்குறவங்க கிடையாது. அப்படி ஒருத்தர் நமக்கு கீழே வேலை பார்க்குறவங்களா இருந்தாலும், அவங்க கூட நட்பா பழகுறதுல என்ன தப்பு? சோ, பேசும் போது வார்த்தைய அளந்து பேசுங்க” என்றவள் ரோஹனிடம், “போகலாமா?” என்று கேட்டாள்.

அவனும் சர்வேந்திரனை ஏளனமாக பார்த்தவாறு எழுந்து நிற்க, மாயாவோ ரோஹனின் கைகளை இறுகப்பற்றி அவனுக்காக தான் தயார் செய்த அறைக்கு அழைத்துச் சென்றாள்.

வீட்டினுள்ளே இருந்த மின்தூக்கி வழியே அவனுக்கான அறைக்கு அழைத்துச் சென்ற மாயா, “உங்களுக்காக உடனே ரெடி பண்ண சொன்னேன், பிடிச்சிருக்கா? முன்னாடியே சொல்லியிருந்தா இன்னும் பெஸ்ட் ஆ உங்க ரூம் அ ரெடி பண்ணிருக்கலாம். உங்களுக்கு பிடிக்கலன்னா…” என்று இழுக்க,

“ஓ கோட்! மாயா, நான் தங்கிக்க ரூம் கேட்டா, ஒரு மினி வீட்டையே தந்திருக்க. ஐ லவ் திஸ்” என்றவாறு அங்கிருந்த பால்கெனிக்கு சென்ற ரோஹனின் விழிகளை இத்தாலியின் வெனிஸ் நகரத்தின் அழகு கவர்ந்திழுத்தது.

“பிடிச்சிருக்கா?” என்று மாயா அவனருகில் வந்து கேட்க, அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவன், “உன் அப்பாக்கு நான் வந்தது பிடிக்கலைன்னு நினைக்கிறேன்” என்று சொல்ல, அவனை முறைத்தாள் அவள்.

“எனக்கு பிடிச்சிருக்கு, அது போதும். எப்போவும் என் லைஃப்ல எதையும் நான்தான் டிஸைட் பண்ணுவேன், அதுல தலையிட யாருக்கும் உரிமையில்லை, என் டாட்க்கு கூட…” என்று மாயா வெளியே வெறித்தவாறு சொல்ல, “ஓஹோ! அப்போ லியோ கூட உனக்கு நடந்த நிச்சயதார்த்தமும் உன் முடிவு தானா?”  என்று ஒரு மாதிரி குரலில் கேட்டான் ரோஹன்.

“அது… எனக்கு ஆக்சிடென்ட் ஆகுறதுக்கு முன்னாடியிருந்து நானும் லியோவும் காதலிச்சதா டாட் சொன்னாரு. லியோவும் எப்போவும் என் கூடவே இருந்தான், அப்பப்போ ரொம்ப எமோர்ஷனல்ல ஃபீல் பண்ணி பேசுவான். என்ட், டாட்க்கு கூட லியோவ பிடிக்கும், எனக்கும் எந்த ஆப்ஜெக்ஷனும் இருக்கல்ல அதான்… ஆனா இப்போ…” என்றவள் ரோஹனை ஓரக்கண்ணால் பார்க்க,

அவனோ அவள் பேச்சிற்கும், தனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல், “ஆமா… உன் ஒரிஜின் நேம் கூட மாயா மஹேஷ்வரி தானா?” என்று அதி முக்கிய கேள்வியாக கேட்டு வைத்தான்.

‘க்கும்… ரொம்ப முக்கியம்’  என்று நொடிந்துக் கொண்டவள், “என் பேரு மாயா தான், அம்மா பேரு மஹேஷ்வரி. அம்மா எப்போவும் என்கூடவே இருக்குற மாதிரி ஃபீல் பண்ணனும்னு, என் இன்ஷியலா அம்மா பேர வச்சிட்டதா டாட் சொன்னாரு. நானும் அதை பத்தி எதுவும் கேக்கல்ல” என்று மாயா சொல்ல, ‘சரியான அண்டா புழுகனா இருக்கான், இப்படி இவக்கிட்ட புழுகி வச்சிருக்கான்’ என்று மனதிற்குள் சர்வேந்திரனை கெட்ட கெட்ட வார்த்தைகளையும் சேர்த்து அர்ச்சித்தான் ரோஹன்.

“நாளைக்கு ஆஃபீஸ்க்கு போகலாம் ரோஹன், பீ ரெடி” என்றவாறு மாயா நகர எத்தனிக்க, “ஆஃபீஸா?” என்று புரியாது கேட்டு, கேள்வியாக பார்த்தான் அவன்.

“ஆமா, ஐரா கம்பனீஸ். ஐ மீன் என்னோட க்வீன்டம்(Queendom) அ பார்க்க இன்ட்ரெஸ்ட் இல்லையா?” என்று மாயா கேட்டதில் சிரித்தவன், “சின்னதா பிஸ்னஸ் பண்றவங்கள்ல இருந்து பெரிய கம்பனீஸ் கூட, ஐரா நிறுவனத்தோட டீல் வச்சிக்கனும், இல்லை… மெய்ன் ப்ரான்ச்குள்ள ஒருதடவையாவது போகனும்னு எதிர்ப்பார்ப்பாங்க. பட், என் விஷயத்துல அந்த க்வீன் ஏ என்னை அவங்க க்வீன்டம்க்கு கூப்பிடும் போது முடியாதுன்னா சொல்ல போறேன்?”  என்றான் ரோஹன்.

இதழில் உறைந்த புன்னகையுடன், “டின்னர் இங்கேயே கொண்டு வருவாங்க, சோ, சாப்பிட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க” என்றுவிட்டு மாயா செல்ல, ரோஹனோ போகும் அவளையே காதலாக பார்த்தான்.

வெளியில் வந்தவள் நேராக சென்றது என்னவோ சர்வேந்திரரின் அறைக்கு தான்.

“டாட்” என்ற குரலில் யாருடனே தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த சர்வேந்திரன் திடுக்கிட்டு திரும்ப, எதிரே மாயாவை பார்த்தவர் முயன்று முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு, “என்ன மாயூ?” என்று கேட்டார்.

“டாட், ரோஹன் இங்க வந்ததுல உங்களுக்கு ஏதாச்சும் பிரச்சினையா?”  என்று மாயா கேட்டதில், வாய் வரை வார்த்தை வந்தாலும் அடக்கிக் கொண்டு, “அப்படி எல்லாம் எதுவுமில்ல, நீ யாருன்னு உனக்கு நல்லாவே தெரியும். அப்படி இருக்கப்போ, யாரையும் ஈஸியா நம்ப முடியாதுமா, உன் செல்வாக்குக்காக உன் கூட பழகுறவங்க தான் ஜாஸ்தி மாயூ” என்றார் சர்வேந்திரன்.

“ஐ க்னோ. பட், இந்த மாயா மஹேஷ்வரி முட்டாள் கிடையாது” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு மாயா செல்ல, போகும் அவளை பார்த்திருந்தவர் மனமோ, ‘உன்னை விட முட்டாள் யாருமேயில்லை ஸ்வீட்ஹார்ட்’ என்று வன்மமாக புன்னகைத்து கொண்டது.

அடுத்த நாள்,

“ரூஹி… ரூஹி…” என்ற குரலில் கண்விழித்த ரோஹன், குறும்புக் கண்களோடு புன்னகைத்தவாறு நின்றிருந்த தன்னவளை பார்த்ததும், “அம்மு…” என்று காதலோடு அழைத்தான்.

திடீரென, “ரோஹன்… மிஸ்டர்.ரோஹன்” என்று தன்னை உலுக்கியதில் நிகழ்காலத்திற்கு வந்தவன் அடித்து, பிடித்து, எழுந்து அமர்ந்து மலங்க மலங்க விழித்துக் கொண்டு  இருக்க, இறுகிய முகமாக அவனை பார்த்திருந்தாள் மாயா.

“சீக்கிரம் ரெடி ஆகி, டைனிங் ஹோல்க்கு வாங்க” என்றுவிட்டு, “அம்முவாம் அம்மு” என்று வாய்விட்டு கோபத்தில் முணங்கியவாறு அறையிலிருந்து மாயா வெளியேற, தலையை கோதி தன்னை சமன் செய்தவன், ‘இப்போ எதுக்கு இவ இங்க இருந்து ஃப்ரான்ஸ் வரைக்கும் மூஞ்ச தூக்கி வச்சிட்டு போறா?’ என்று புரியாமல் முழித்தான்.

ரோஹனும் அடுத்த பதினைந்து நிமிடங்களில் தயாராகி உணவறையை நோக்கி வர, அவன் எதிரில் வந்து நின்றார் சர்வேந்திரன்.

ரோஹனோ சிரிப்புடன், “ஹாய் மிஸ்டர்.சர்வா” என்று உற்சாகமாக சொல்ல, அவனை உக்கிரமாக பார்த்தவர், “ஒருதடவை என்னோட ட்ரேப்ல இருந்து தப்பிச்சிட்ட, இப்போ நீ இருக்குறது என் இடம், பீ க்யார்ஃபுல் ரோஹன்”  என்று மிரட்டலாக சொன்னார்.

“இஸ் இட்?” என்று கேள்வியாக கேட்ட ரோஹன் உதட்டை பிதுக்கியவாறு, “யூ க்னோ வட் மிஸ்டர்.சர்வா, உன் இத்தனை வருஷம் உழைப்பும் கூடிய சீக்கிரம் சிதைய போகுதுன்னு என் சிக்ஸ்த் சென்ஸ் சொல்லுது. சோ, யூ டூ பீ க்யார்ஃபுல்” என்று கேலிக் குரலில் பதிலடி கொடுத்தான்.

“ஏய்ய்…” என்று கர்ஜித்த சர்வேந்திரன் சுற்றி முற்றி பார்த்துவிட்டு, “இந்த சொத்துக்காக தானே மாயா பின்னாடி சுத்திகிட்டு இருக்க. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவ உன் பின்னாடி திரியும் போது கண்டுக்காத நீ, இப்போ அவ பின்னாடி சுத்தும் போதே ஐ கொட் இட்” என்று சொல்ல, கைமுஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்தினான் ரோஹன்.

அவரை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தவன், “அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சரியா தான் சொல்லியிருக்காங்க” என்று நக்கலாக சொல்லிவிட்டு நகர, கோபத்தில் பற்களை நரநரவென கடித்துக் கொண்டார் அவர்.

அந்த பெரிய உணவு மேசையில் இத்தாலிய உணவுகள் விதவிதமாக வைக்கப்பட்டிருக்க, “போதும்… போதும்…” என்று ரோஹன் அலறுமளவிற்கு அவனை உண்ண வைத்தே ஒருவழிப்படுத்தி விட்டாள் மாயா. காலை உணவு முடித்ததும் மாயா, ரோஹனை அழைத்து சென்றது என்னவோ ஐரா நிறுவனத்தின் தலைமையகத்துக்கே…

அத்தனை பெரிய வளாகத்துக்குள் கார் நுழைய, அந்த தலைமை அலுவலகம் ஒரு ஒப்பனை பொருளின் வடிவத்தில் அமைக்கப்பட்டிருப்பதை வியந்து பார்த்தான் ரோஹன். கண்ணாடி சுவர்களிலான அந்த கட்டிடத்தில் காலை சூரிய கதிர்கள் பட்டு தெறித்து அவனின் கண்களை கூசச் செய்தது.

காரிலிருந்து இறங்கியவாறு மாயா அலைஸ்ஸிடம், “அலைஸ் வர்க் எல்லாம் எப்படி போயிக்கிட்டு இருக்கு? லாஸ்ட் டூ மன்த்ஸ்ஸோட இம்போர்ட், எக்ஸ்போர்ட் டீடெய்ல்ஸ், என்ட் அக்கௌன்ட் டீடெய்ல்ஸ் அ நான் இம்மிடீயட்டா பார்த்தாகனும்” என்று ஆங்கிலத்தில் சொன்னவாறு முன்னே நடக்க, ரோஹனும் சுற்றி முற்றி பார்த்தவாறு அவளுடன் நடந்தான்.

கட்டிடத்தினுள் நுழைந்ததும் மாயாவுக்கான விஷேட மின்தூக்கியில் மாயாவும், ரோஹனும் ஏறவும், அது 50 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் நடு தளத்தை அடைந்தது. ரோஹனின் கையை இறுகப் பற்றியவாறு அழைத்துச் சென்றவள், “ஹவ் இஸ் இட்?” என்று உற்சாகமாக கேட்க,

‘இவ மாறவேயில்லை’ என்று ரோஹன் நினைக்கும் அவளிற்கு இருந்தது மாயாவின் தளம். கார்டூன் பொம்மைகளின் படங்கள் சுவற்றில் அலங்கரிக்கப்பட்டிருக்க, அங்கிருந்த சோஃபாவில் பொம்மைகள் குவிந்திருக்க, ஏதோ சிறுபிள்ளையின் அறையில் நுழைந்தது போலிருந்தது அவனுக்கு.

“கோப்ரேட் உலகத்துல கொடி கட்டி பறக்குற ஒரு கம்பனியோட எம்.டியோட ஃப்ளோர் இதுன்னு அடிச்சி சொன்னாலும் எவனும் நம்ப மாட்டான்” என்று சிரித்தவாறு ரோஹன் சொல்ல, மாயாவுக்கும் அவன் சொன்ன விதத்தில் சிரிப்பு வந்துவிட்டது.

“நம்ம கூட நமக்கு பிடிச்ச விஷயங்கள் இருந்தா தான், வேலை செய்யவே மனசுக்கே இதமா இருக்கும்” என்றவள் மேசையில் ஒற்றை காலை மடக்கி சாய்ந்து நிற்க, “யாஹ் ஐ சீ…” என்றவாறு ரோஹன் அவளை நெருங்க, சரியாக உள்ளே நுழைந்தான் லியோ.

அவனை பார்த்த மாயாவுக்கு, ‘நேரங் கெட்ட நேரத்துல இவன் வேற…’ என்று இருந்தாலும், முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு, “ஹாய் லியோ, திஸ் இஸ் ரோஹன். ஐ திங் யூ க்னோ ஹிம்” என்று வரவழைக்ப்பட்ட புன்னகையுடன் சொன்னாள்.

“ஹெலோ மிஸ்டர்.ரோஹன், வெல்கம் டூ இட்டாலி” என்று லியோ ரோஹனுக்கு கை கொடுக்க, அவனை அழுத்தமாக பார்த்தவாறு அவனுடன் கைக்குலுக்கியவன், “தேங்க்ஸ் லியோ” என்றுவிட்டு மாயாவை கண்களால் காட்டி, “எப்போ கல்யாணம்?” என்று கேலியாக கேட்டான்.

அவனும் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன், “சூன்” என்று ஒரு வார்த்தையில் முடிக்க, மாயா தான் ரோஹனை எரித்து விடுவது போல் பார்த்திருந்தாள்.

மாயாவை லேசாக அணைத்த லியோ, “ஐ மிஸ் யூ பேபி, ஷல் வீ கேட்ச்அப் டுநைட்” என்று கேட்க, “ஹிஹிஹி நானும் தான்” என்று அசடுவழிந்தவள் அவனிடமிருந்து மெல்ல விலகி, “சோரி லியோ, இன்னொரு நாள் பார்த்துக்கலாம்” என்று பல்லை கடித்துக் கொண்டு சொன்னாள்.

“சீக்கிரம் நம்ம கல்யாணத்தை நடத்தலாம்னு அங்கிள் சொன்னாரு, அதை பத்தி யோசிச்சு முடிவு பண்ணு மாயூ” என்ற லியோ,”லவ் யூ பேபி” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு ரோஹனை கேலி பொதிந்த பார்வையுடன் கடந்து செல்ல, ரோஹனின் முகமோ இறுகிப் போயிருந்தது.

அவனின் இறுகிய முகத்தை பார்த்தவளுக்கு பக்கென்று இருக்க, ‘அய்யோ! போச்சு… போச்சு… முனியாண்டி திரும்பவும் முருங்க மரத்துல ஏறிருச்சு’ என்று இருந்தது.

“வாங்களேன், கம்பனிய சுத்தி பார்க்கலாம்’ என்று மனநிலையை மாற்ற எண்ணி அவனை இழுத்துக் கொண்டு மாயா செல்ல, ரோஹனும் முயன்று தன்னை சமன்படுத்த நினைத்தாலும் லியோ தன்னவளை முத்தமிட்டதை அவனால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

“ரோஹன் உங்க வீட்டுக்கு வந்தப்போ, நீங்க கொலேஜ்ல கலந்து கொண்ட டான்ஸ் காம்படீஷன்ல எடுத்த ஃபோட்டோஸ் இருந்துச்சி, அண்ணா கூட ஒருதடவை சொன்னாரு. அதெல்லாம் உண்மை தானா?” என்று மாயா சந்தேகமாக கேட்க,

விரக்தியாக சிரித்தவன், “டான்ஸ் என்னோட உயிர் மாயா, அஞ்சு வருஷத்துக்கு ஒருதடவை லண்டன்ல நடக்குற டான்ஸ் ச்சேம்பியன்ஷிப்ல நானும் செலக்ட் ஆனேன். அது என்னோட கனவு. ஆனா…” என்று நிறுத்தியவன் குரலை செறுமிவிட்டு, “நான் டான்ஸ் பண்ணி அஞ்சு வருஷத்துக்கு மேல ஆகுது” என்று சொல்லி முடிக்க, அதிர்ந்தது என்னவோ மாயா தான்.

“வாட்?! அந்த கம்படீஷன்ல செலக்ட் ஆகுறது அவ்வளவு ஈஸி கிடையாது. பட் யூ டிட் இட். ஆனா, ஏன் மிஸ் பண்ணிங்க?” என்று மாயா அதிர்ந்து கேட்க, “என் அம்மு தான் காரணமே” என்றவனுக்கு அன்றைய நாட்களை நினைத்து லேசாக கண்கலங்க, அதை மறைக்க முகத்தை திருப்பிக் கொண்டான். ஆனால், இப்போது முகத்தை கடுகடுவென வைத்துக் கொள்வது மாயாவின் முறையானது.

“என்ன பண்ணா உங்க அம்மு?” என்று மாயா இறுகிய குரலில் கேட்க, “என்னோட வாழ்க்கையையே புரட்டி போட்டுட்டா. அவ இருக்கும் போது எதுவுமே தெரியல, என்னை விட்டு விலகினதும் தான் அவ காதல் புரிஞ்சது. எதுலயுமே கன்ஸ்ட்ரேட் பண்ண முடியல, அவள மறக்க ட்ரக்ஸ் எடுத்துக்கிட்டேன். நான் ஸ்டேஜ்ல பெஃபோர்ம் பண்ண வேண்டிய அன்னைக்கு, என் ஃப்ரென்ட் வீட்ல சுயநினைவே இல்லாம போதையில கிடந்தேன். இப்போ சொல்லு, அவ தானே காரணம். அவ ஏன் என்னை விட்டு போனா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டான் ரோஹன்.

மாயாவோ பல்லை கடித்துக் கொண்டு கோபத்தை கட்டுப்படுத்தியவாறு நிற்க, அவள் முகத்தை அப்போது தான் கவனித்தவன், “என்னாச்சு?” என்று புரியாமல் கேட்டான்.

“நத்திங், உங்க அம்மு மேல இத்தனை காதலா? நம்பவே முடியல” என்று மாயா கோபத்தின் உச்சியில் கேட்க, “என்னோட காதலுக்கே வியக்குற நீ, அவ என் மேல வச்ச காதல உணர்ந்தேன்னா வாயை பிளந்துருவ. அவள விட அதிகமா யாராலயும் காதலிக்க முடியாது. ஷீ இஸ் வேர்ல்ட்’ஸ் பெஸ்ட் லவ்வர்” என்று அவன் ரசனையாக சொல்ல, மாயா தான் உக்கிரமாக அவனை முறைத்து தள்ளினாள்.

காதல்போதை?
——————————————————

-ZAKI?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!