காதல்போதை 39?

காதல்போதை 39?

“வாவ்! இது ஐரா கோஸ்மெடிக்ஸ்ஸோட ஃபேக்டரில?!” என்று கேட்டவாறு காரிலிருந்து ரோஹன் இறங்க, “வெல்கம் மிஸ்டர்.ரோஹன்” என்று உற்சாகமாக சொல்லிய மாயா, அவனை ஐரா நிறுவனத்தின் ஒப்பனை பொருட்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலைக்குள் அழைத்துச் சென்றாள்.

இருவரும் உள்ளே வர, அவர்கள் முன் வந்து நின்ற தொழிற்சாலை பொறுப்பாளர், “வெல்கம் மேம்” என்றவாறு ரோஹனை கேள்வியாக பார்த்தார்.

“மீட் மை ஃப்ரென்ட் ரோஹன்” என்று ரோஹனை அவருக்கு அறிமுகப்படுத்தியவள் ரோஹனிடம், “திஸ் இஸ் ஸ்டீஃபன், இந்த ஃபேக்டரிக்கு மொத்த பொறுப்பும் இவரும் தான். என்னோட ஆர்டெர் அ மீறி யாரையும் உள்ள விட மாட்டாரு. யூ க்னோ வட், இங்க அவ்வளவு சீக்கிரம் யாரும் நுழைய முடியாது. முதல் தடவை ஒரு வெளியாள், நீங்க தான் ஃபேக்டரிய பார்க்க போறீங்க” என்றுவிட்டு ரோஹனை உள்ளே அழைத்துச் சென்றாள்.

“அப்படி என்ன சீக்ரெட் இந்த ஐரா ப்ரோடெக்ஸ்ல இருக்கு மிஸ்.மாயா, ரொம்ப க்யூரியோசிட்டி என்ட், ரொம்ப மிஸ்ட்ரியா இருக்கு” என்று அவர்களின் தயாரிப்பு முறைகளை பார்த்தவாறு சொன்னவன், வளரும் தொழிநுட்பத்திற்கேற்ப மனித உதவியின்றி உபகரணங்கள் மூலமாக வேலைகள் நடைபெறுவதை நுண்ணிப்பாக பார்த்தவாறு நடந்தான்.

“அதான் மிஸ்ட்ரின்னு நீங்களே சொல்லிட்டிங்களே… அப்றம் எப்படி அதோட ரகசியம் ஈஸியா தெரிய வரும்?” என்று சிரித்தவாறு சொன்ன மாயா, தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் சிலரை அறிமுகப்படுத்தியவாறு வர, அங்கிருந்த ஆர்செனிக்(Arsenic), லெட்(Lead) போன்ற சில இரசாயன கூறுகளை(Chemical elements) பார்த்தவனுக்கு புருவங்கள் யோசனையில் சுருங்கியது.

‘இது எல்லாம் கூடவா கோஸ்மெடிக்ஸ் ப்ரோடெக்ஸ்க்கு யூஸ் பண்றாங்க?’ என்று நினைத்தவாறு ரோஹன் நடக்க, “ஸ்டீஃபென் நாளைக்கு நம்ம புது ப்ரோடெக்ட் மார்கெட்க்கு வர்றதுக்கான எல்லாம் ஏற்பாட்டையும் பண்ணியாச்சு, சொன்னது சொன்ன நேரத்துக்கு நடக்கனும்” என்று இத்தாலியன் மொழியில் மையா அவரிடம் சொல்ல, அவரும் ஒரு தலையசைப்போடு அங்கிருந்து நகர்ந்தார்.

“ரோஹன், இன்னொரு முக்கியமான இடத்தை நீங்க பார்க்க வேண்டியிருக்கு” என்ற மாயா அவனை அடுத்து அழைத்துச் சென்றது என்னவோ, சுற்றி பல வகையான செடிகள், பூக்கள் நட்டப்பட்டு, நடுவில் மரப்பலகையால் கட்டப்பட்ட அந்த அழகிய வீட்டிற்கு தான்.

ரோஹனோ புரியாது சுற்றி முற்றி பார்க்க, அவன் முகபாவனைகளை அவதானித்தவள், “ஆதி நாராயணண், என் தாத்தா ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கும் போது இங்க தான் வருவாராம், அவருக்கு இங்க வர்றது ரொம்ப பிடிக்கும்” என்று சொன்னவாறு அவனை உள்ளே அழைத்துச் செல்ல,  அங்கிருந்த சில செடிகளை பார்த்தவனது இதழ்கள், “பெல்லடொன்னா” என்று முணுமுணுத்தது.

அது மாயாவின் காதிலும் சரியாக விழ, “ஓ! உங்களுக்கு பெல்லடொன்னா தாவரத்தை பத்தி தெரியுமா?” என்று ஆச்சரியமாக அவள் கேட்க,

நீலநிற பெர்ரி காய்கள் போன்று இருந்த அந்த பெல்லடொன்னா தாவரங்கள் வரிசையாக இருக்க, அதன் அருகில் சென்ற ரோஹன், “ம்ம்… கேள்விப்பட்டிருக்கேன், இதை பொய்ஸன் ப்ளான்ட்னு(Poison plant) சொல்வாங்க, மெடிகல்லி ரொம்ப யூஸ் ஆகும். ஆனா, இது உங்க தாத்தாவோட தோட்டத்துல என்ன பண்ணுது?”  என்று சந்தேகமாக கேட்டான்.

“இது என் தாத்தாவுக்கு ரொம்ப பிடிக்கும்” என்று மாயா சொல்ல, “யாரு, உன் டாட் சொன்னாரா?” என்று கேலியாக கேட்டான் ரோஹன்.

‘ஆம்’ என்ற ரீதியில் தலையசைத்தவள் அங்கிருந்த தாவரங்கள் மீது தன் பார்வையை பதித்திருக்க, அடுத்து ரோஹன் கேட்ட கேள்வியில் அதிர்ந்து திரும்பி பார்த்தாள்.

“அக்வா டொஃபேனா விஷத்தோட ஃபோர்மியூலாவுக்கு முக்கியமான ஒன்னு தான் பெல்லடொன்னா, இது மேல உங்க தாத்தாவுக்கு அவ்வளவு ஆர்வமா? தோட்டதுல பாதி பெல்லடொன்னா ப்ளான்ட்ஸ் ஆ இருக்கு” என்று ரோஹன் கேட்டதிலும், அவனுடைய சந்தேகப் பார்வையிலும் தடுமாறித்தான் போனாள் மாயா.

முயன்று தன் தடுமாற்றத்தை மறைத்தவள், “ஆங்… அதான் சொன்னேனே, தாத்தாவுக்கு இது ரொம்ப பிடிக்கும்னு. அதுக்கு எதுக்கு என்னை இப்படி லுக்கு விடுறீங்க?” என்று முறைப்பாக கேட்க, ரோஹனோ அவளை ஆராய்ச்சிப் பார்வை பார்க்க, சரியாக மாயாவின் தொலைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

திரையை பார்த்தவள் நிமிர்ந்து சுற்றி முற்றி கண்களை சுழலவிட்டு தேட, அவள் நினைத்தது போன்று அலைஸ் அந்த வீட்டின் வாசலில் நின்றிருந்தாள்.

“ரோஹன், இங்கேயே வெயிட் பண்ணுங்க, அலைஸ் வந்திருக்கா, ஆஃபீஸ் மேட்டர், நான் சீக்கிரம் பேசிட்டு வரேன்” என்றுவிட்டு மாயா விறுவிறுவென செல்ல, ரோஹனுக்கோ மாயாவின் செய்கைகள் சரியாகவே தோன்றவில்லை.

அந்த வீட்டினுள் அலைஸ் ஒரு இடத்தையே வெறித்தவாறு நின்றிருக்க, “சொன்ன வேலை முடிஞ்சதா?” என்ற மாயாவின் குரலில் திரும்பியவள், அவளிடம் இரு கோப்புக்களை நீட்டினாள். அதை ஆராய்ந்த மாயாவுக்கோ கோபம் உச்சத்தை தொட்டது.

“சில மாதங்களா உனக்கே தெரியாம கம்பனி அக்கௌன்ட்ஸ்ல இவ்வளவு பணம் எடுத்திருக்காங்க. என்ட், நீங்க சாதாரணமா எக்ஸ்போர்ட் பண்ற ப்ரோடெக்ஸ் அளவை விட இல்லீகலா ஐராவோட ப்ரான்ட் அ யூஸ் பண்ணி, போலியான பொருட்களை மார்கெட்க்கு கொண்டு வந்திருக்காங்க. ஒருவேள, அந்த போலியான ப்ரோடெக்ஸ்ஸால மக்களுக்கு பாதிப்பாகி பிரச்சினையானாலும், உங்க கம்பனி மேல தான் பொலிஸ் ஏக்ஷன் எடுப்பாங்க, அதுக்காக கூட இப்படி ப்ளான் பண்ணிருக்கலாம்

என்ட் மாயா, கடைசியா மர்மமா இறந்தவரோட வீட்ல இருந்த ஐராவோட ப்ரோடெக்ட் ஒரிஜின் கிடையாது. உங்க உற்பத்தியோட போலியான மாதிரி”  என்று அலைஸ் சொல்லி முடிக்க, அமைதியாக அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்தாள் மாயா.

பின், “நாளைக்கு கம்பனியோட நிவ் ப்ரோடெக்ட் மார்கெட்க்கு வருது. இன்னும் டூ டேய்ஸ்ல இந்த ஒட்டு மொத்த பிரச்சினைக்கும் முடிவு கட்டுறேன்” என்ற மாயாவின் குரலில் அத்தனை உறுதி.

அலைஸ்ஸோ வெற்றிப் புன்னகையுடன் மாயாவை பார்க்க, திடீரென, “என்னாச்சு மாயா?” என்ற ரோஹனின் குரலில் சட்டென திரும்பியவள், ‘இவன் எதுக்கு என் பின்னாடி வந்தான்? ச்சே! ‘ என்று மனதில் நினைத்தவாறு ரோஹனை ஆழ்ந்து நோக்கினாள்.

“ஏதோ பேசிக்கிட்டு இருந்தீங்க,  இத்தாலியன்ல பேசினதால எதுவுமே புரியல, பட் பேசின விதத்துல ஏதோ பிரச்சினைன்னு மட்டும் தெரிஞ்சது” என்று ரோஹன் இருவரையும் மாறி மாறி பார்த்ததாறு சொல்ல, ‘தேங்க் கோட்!’ என்று பெருமூச்சுவிட்டவள், ” நத்திங் மச், கம்பனில சின்ன பிரச்சினை, சரி பண்ணிரலாம்” என்று சமாளித்தாள்.

“ஓஹோ!” என்றவாறு ரோஹன் அவள் கையிலிருந்த கோப்புகளை பார்க்க, அவன் பார்வையை புரிந்து உடனே அதை அலைஸ்ஸிடம் ஒப்படைத்தவள், “அலைஸ், இதை என் கேபின்ல வை, நான் அப்றம் இதை டீஸ் பண்ணிக்கிறேன்” என்று சொன்னவாறு கண்களால் ரோஹனை காட்ட, அவளும் புரிந்துக் கொண்டு அதை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள்.

ரோஹனுக்கோ என்றும் இல்லாத மாயாவின் படபடப்பு, பேச்சு தடுமாற்றம் என்பன  சந்தேகத்தை மேலும் கிளர, சரியாக தனக்கு வந்த அழைப்பின் ஒலியின் அதை ஏற்றவாறு அவன் வெளியே செல்ல, மாயாவுக்கோ அப்போது தான் ‘ஹப்பாடா!’ என்றிருந்தது.

ரோஹன் அழைப்பை ஏற்றதும் மறுமுனையிலிருந்த பாபி, “ரோக்கி, உன் புகுந்த வீட்டுக்கு போனது தான் போன, எங்களை மறந்துட்டியேடா துரோகி” என்று திட்ட, “ச்சே! அதை விடு, இங்க எல்லாமே ரொம்ப வித்தியாசமா இருக்குடா, மாயாவோட நடவடிக்கை கூட… அவ என்கிட்ட ஏதோ மறைக்கிற மாதிரி இருக்கு” என்று ரோஹன் யோசனையாக சொன்னான்.

“புரியல” என்ற பாபியின் பதிலுக்கு, “இன்னைக்கு நான் ஐரா கோஸ்மெடிக்ஸ்ஸோட ஃபேக்டரிக்கு போனேன்டா” என்று ரோஹன் சொல்ல, “வாட்?! அதுக்குள்ள யாருமே அவ்வளவு சீக்கிரம் போக முடியாது. பட், ஐராவோட எம்.டி உன் ஆளு என்றதால ஈஸியா உள்ள போயிட்ட, ம்ம்ம்… நடத்து நடத்து” என்று கேலித் தொனியில் சொன்னான் பாபி.

“பக்கி! சொல்றதை கேளுடா, அங்க சில கெமிகல் எலெமென்ட்ஸ் பார்த்தேன்டா, கூடவே பெல்லடொன்னா ப்ளான்ட்ஸ்ஸும் தான். அதெல்லாம் கோஸ்மெடிக்ஸ் பொருட்களுக்கு மூலப் பொருளா பயன்படுத்துறது ரொம்ப ஆபத்து. என்ட், இப்போ அவ தாத்தாவோட தோட்டத்துல இருக்கேன், இங்க கூட அதிகமா பெல்லடொன்னா ப்ளான்ட்ஸ் தான் இருக்கு” என்று ரோஹன் தன் சந்தேகங்களை அடுக்கினான்.

“ரோக்கி, உன் சந்தேகத்தை நீ மாயாக்கிட்ட கேக்குறது பெட்டர், என்ட் நீ சொல்றதை வச்சி பார்த்தா எனக்கே ரொம்ப க்யூரியோசிட்டியா தான் இருக்கு” என்று பாபி சொல்ல,

“அந்த அழுத்தக்காரி சொல்லிட்டாலும்…” என்று பொறுமியவன் அழைப்பை துண்டித்து யோசனையில் மூழ்க, மாயாவும் சோஃபாவில் அமர்ந்தவாறு பல சிந்தனைகளின் மத்தியில் உழன்றுக் கொண்டிருந்தாள்.

*************************

“ஓ ஷீட்! யார கேட்டுடா அந்த மாயா சொன்னான்னு, கம்பனி சம்மந்தப்பட்ட டீடெய்ல்ஸ் அ கொடுத்த? நானே இத்தனை வருஷமா கம்பனியோட உண்மையான டீடெய்ல்ஸ் கொடுக்காம, என்னோட தப்பை மறைச்சி போலியான ரிப்போர்ட் தான் அவ டேபிள்க்கு போகுற மாதிரி பண்ணிக்கிட்டு இருந்தேன். இப்போ, அவளுக்கு சின்னதா சந்தேகம் வந்தாலும், எல்லாமே போயிறும்” என்று சர்வேந்திரன், ஐரா நிறுவனத்தின் தலைமையகத்தில் முக்கிய பதவிகளில் பொறுப்பாக இருக்கும் அந்த மூவரிடம் கத்திக் கொண்டிருந்தார்.

அதில் நிதித்துறைக்கு பொறுப்பாக இருப்பவனோ, “சார், நானும் தடுக்க ரொம்ப ட்ரை பண்ணேன். பட், அலைஸ் தான் மாயா மேடம்ஓட ஆர்டர் அப்படி இப்படின்னு மிரட்டி வாங்கிட்டாங்க. அவங்க பக்கத்துல இருந்ததால என்னால எதையுமே பண்ண முடியல” என்று பம்மியவாறு சொன்னான்.

“ச்சே! ஆனா, மாயா இப்போ வரைக்கும் அதை பத்தி ஒரு வார்த்தை கூட உங்ககிட்ட விசாரிக்கல்ல. இருந்தாலும், அலெர்ட் ஆ இருந்துக்கோங்க, இனி கொஞ்சநாளைக்கு அவளுக்கு சந்தேகம் வராத படி நடந்துக்கோங்க. புரியுதா? கூடிய சீக்கிரம் நான் நினைச்சதை அடைஞ்சிட்டேன்னா, அதுக்கப்றம் அந்த மாயா மஹேஷ்வரி இருந்ததுக்கு அடையாளமே இருக்காது” என்று சர்வேந்திரன் தீவிரமாக சொல்ல,

சர்வேந்திரன் முன் நின்றிருந்த மூவருக்குமே தாம் மாட்டிக் கொண்டால் நடக்கும் விபரீதங்கள் தான் கண் முன் தோன்றின. ஆனால், அடுத்த இருநாட்களிலே தங்களின் மொத்த செய்கைக்கும் தண்டனை கிடைக்கப் போவதை அவர்கள் அறியவில்லை.

அன்று இரவு,

“உள்ள வரலாமா?” என்று கேட்டவாறு மாயா ரோஹனின் அறைக்குள் நுழைய, அவளுக்கு பின்னால் வந்த வேலையாட்களின் கையிலிருந்த கோட் சூட்டை பார்த்த ரோஹன், மாயாவை கேள்வியாக நோக்கினான்.

“நாளைக்கு ஐராவோட புது ப்ரோடெக்ட் மார்கெட்க்கு வர போகுது. சோ, நைட் பார்டிக்கு அர்ரேன்ஜ் பண்ணிருக்கோம். நாளைக்கு விழாவுக்காக என்னோட ஸ்பெஷல் கிஃப்ட்” என்று மாயா புன்னகையுடன் சொல்லி, “பிடிச்சிருக்கா?” என்று கேட்டாள்.

அந்த ஆடை தனக்கு மிகவும் பிடித்த ரோயல் நீலநிறத்தில் இருப்பதை பார்த்து புன்னகைத்தவன், “தெரிஞ்சி பண்ணியா,  தெரியாம பண்ணியான்னு தெரியல. பட், ஐ லவ் திஸ் கலர்” என்றவாறு அதை வாங்கி லேசாக வருடினான்.

அவன் புன்னகையில் திருப்தியான மாயா, “குட் நைட்” என்றுவிட்டு வெளியேற எத்தனிக்க, “மாயா” என்றழைத்தவாறு அவளருகில் வந்த ரோஹன் அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

அதில் அவனை முறைத்தவள், “வாய்க்கு வாய் அம்மு அம்முன்னு புலம்ப வேண்டியது, அப்றம் எனக்கு முத்தம் கொடுக்க வேண்டியது, போயா…” என்று வாய்விட்டே திட்டியவாறு அறையிலிருந்து வெளியேற, வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்து விட்டான் ரோஹன்.

அடுத்தநாள் இரவு,

‘ஐரா கோஸ்மெடிக்ஸ் உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை உற்பத்தி செய்யப்படாத உதட்டுச்சாயத்தை இன்று ஐரா நிறுவனத்தை தலைமை ஏற்றிருக்கும் மாயா மஹேஷ்வரி சந்தைக்கு கொண்டு வந்திருக்க, பல உலக நாடுகளில் இவர்களின் உற்பத்திகளை வாங்கும் வியாபார நிறுவனங்களின் இந்த புது உற்பத்தி மீதான கேள்வி அதிகரித்த வண்ணம் உள்ளது.

குழந்தை தொடக்கம் முதியோர் வரை உபயோகிக்க கூடிய பொருட்களை ஐரா நிறுவனம் நல்ல தரத்தோடு உற்பத்தி செய்ய, இவர்களின் ஒவ்வொரு உற்பத்திகளையும் வாங்கும் வாடிக்கையாளர்கள், ஒரு தனிக்கூட்டம் இருக்கின்றனர்’

என்று அந்த பெரிய திரையில் ஐரா நிறுவனத்தின் இத்தனை நாள் வரையான வளர்ச்சி பற்றி படமாக ஓடிக் கொண்டிருக்க, மாயாவோ அதை கர்வப் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரோஹனோ தன் பக்கத்தில் சிவப்பு நிற பார்ட்டி ப்ரொக்கில் தேவதையென மின்னிக் கொண்டிருந்த தன்னவளையே வைத்த கண் வாங்காமல் பக்கவாட்டாக திரும்பி பார்த்துக் கொண்டிருக்க, ஏதோ ஒரு உந்துதலில் அவனின் புறம் திரும்பிய மாயா கண்களாலே, ‘என்ன’ என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டாள்.

அவனோ குறும்பாக ஒற்றை கண்ணை சிமிட்டியதில், அவனை முறைத்த மாயா முகத்தை திருப்பிக்கொள்ள, இதை கவனித்த லியொ இருவரையும் மாறி மாறி கடுப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.

சர்வேந்திரனோ அந்த திரையில் சொல்லப்படும் ஐரா நிறுவனத்தின் புகழை மனக் கொந்தளிப்போடு, ‘எத்தனை வருஷமா காத்துகிட்டு இருக்கேன், இந்த ஐரா கம்பனீஸ் அ மொத்தமா சிதைக்க. ஆனா, இவ பழைச மறந்தும், இவக்கிட்ட ஒரு கையெழுத்து கூட வாங்க முடியல. ஒவ்வொரு ஃபைல்ஸ்ஸா அலசி, ஆராய்ந்து கையெழுத்து போடுறா. அந்த ஆதி நாராயணனோட பேத்தின்னு அடிக்கடி நிரூபிக்கிறா, ச்சே…’ என்று பொறுமியவாறு, பல்லை கடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.

எதேர்ச்சையாக திரும்பிய ரோஹன் அங்கு அலைஸ், சர்வேந்திரனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து, ‘இவளுக்கும், இவருக்கும் அப்படி என்ன பிரச்சினை’ என்று யோசித்தவாறு , அலைஸ் கண்களில் தெரிந்த கோபத்தை புரியாது நோக்கினான். இவ்வாறு ஒவ்வொருவருடைய பார்வையும், சிந்தனையும் ஒவ்வொரு திசையில் இருந்தது.

அந்த திரையில் ஓடிய காட்சி நின்றதும் அந்த விழாவிற்கு வந்திருந்த பல தொழிலதிபர்கள், உயர் பதவி வகித்திருக்கும் நிறுவனத்தில் பணி புரிபவர்கள் முன் வந்து நின்ற மாயா, “ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், தேங்க்ஸ் ஃபோர் கம்மிங். இன்னைக்கு ஐரா நிறுவனத்தோட புது ப்ரோடெக்ட் லான்ச் ஆகியிருக்கு. எப்போவுமே ஐரா ப்ரோடெக்ஸ்க்கு டிமான்ட் ஜாஸ்தி தான். இட்டாலி மட்டுமில்ல பல நாடுகள்ல எங்க உற்பத்திகள தான் மக்கள் விரும்புறாங்க.

கண்டிப்பா இதுக்கு எங்க ஒவ்வொரு உற்பத்தியில இருக்குற தரம் மற்றும் எல்லாரும் வாங்க முடியுற மாதிரி நாங்க கொண்டு வந்த விலைத்திட்டமும் முக்கிய காரணம். பட், யூ க்னோ வெல், ஐரா கம்பனீஸ் மேல சந்தேகத்தின் பேருல நிறைய கம்ப்ளைன்ட்ஸ் இருக்கு. எங்க எதிரிகளோட எண்ணிக்கைய பத்தி நாங்க சொல்லவே தேவையில்லை, எங்க ஐரா ப்ரான்ட் அ பயன்படுத்தி போலியான பொருட்களை தயாரிச்சி மக்கள முட்டாளாக்குறாங்க.

என்ட் துரோகம், துரோகம் தான் ஒரு வெறித்தனமான வெற்றிக்கு அடித்தளம்னு நான் சொல்வேன். ஒரு ஊக்குவிப்பு கொடுக்குற உந்துதல விட துரோகத்தோட வலி நமக்கு கொடுக்குற உந்துதல் ரொம்ப ஆழமா இருக்கும். அதோட நமக்குள்ள இருக்குற வேகத்தையும் அதிகரிக்கும். அதான், ஐரா கம்பனீஸ் கோப்ரேட் உலகத்துல முதல் இடத்துல இருக்க காரணம்.

லாஸ்ட் பட் நொட் லீஸ்ட், ஐரா என்னோட க்வீன்டம், அதை அவ்வளவு சீக்கிரம் தரைமட்டமாக்க நான் விடமாட்டேன். தங்க் யூ ஆல்” என்று பேசி முடித்து அலைஸ்ஸை அழுத்தமாக ஒரு பார்வை பார்க்க, அவளும் அதே அழுத்த பார்வையுடன் மாயாவை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரோஹனோ தன்னவள் கம்பீரமாக எல்லார் முன் பேசிய அழகை விழி அகலாது பார்த்து ரசித்தான் என்றால், சர்வேந்திரனோ முகம் கறுத்து போய் மாயாவை வன்மமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

பல தொழிலதிபர்கள் நீண்டநாள் கழித்து சந்தித்துக் கொண்டதில் தங்கள் வியாபாரங்களை பற்றி பேசிக் கொண்டிருக்க, மாயாவோ ரோஹன் பக்கத்திலே இருந்தவாறு தன்னுடன் வந்து பேசுபவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். அங்கு வந்த மீடியாவை சேர்ந்தவர்கள் ரோஹனையும், மாயாவையும் தான் ஜோடியாக வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

லியோவோ ஒரு கட்டத்திற்கு மேல் பொருக்க முடியாமல் மாயாவிடம் வந்தவன், அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ரோஹனை விட்டு தள்ளி அழைத்துச் செல்ல, அவளோ, “லீவ் மீ லியோ” என்று அவன் பிடியிலிருந்து தன் கையை உறுவினாள்.

“மாயா, மொத்த மீடியாவும் உன்னை தான் பார்க்குறாங்க. ஏற்கனவே ரோஹன் கூட உன்னை சேர்த்து வச்சி ஏகப்பட்ட வதந்தி, இதுல இப்போவும் அவன் கூடவே ஒட்டிக்கிட்டு இருக்க. என்ன நினைச்சிக்கிட்டு இருக்க நீ?” என்று லியோ கத்த,

அவனை அலட்சியமாக பார்த்தவள், “ரோஹன நான்தான் இங்க கூட்டிட்டு வந்தேன். அவர் எந்த சந்தர்ப்பத்துலயும் சங்கடமா ஃபீல் பண்ணாம நான் தானே பார்த்துக்கனும்” என்றுவிட்டு மாயா ரோஹனை நோக்கி சென்றாள்.

“மாயா, நமக்கு கல்யாணம் ஆகப் போகுது. அது சரி உனக்கு நியாபகம் இருக்கா? இல்லையா?” என்று கடுப்பாக லியோ கேட்க, நிதானமாக திரும்பி அவனை பார்த்தவள், “ஐ ரிமெம்பர் வெல், பட் சோ வட்?” என்றுவிட்டு ரோஹனின் அருகில் சென்று நின்றுக் கொண்டாள். இங்கு லியோவுக்கு தான் ஒரே அவமானமாக போக, காலை தரையில் உதைத்து கோபத்தை கட்டுப்படுத்தினான்.

“ரோஹன், ஐ ஜஸ்ட் வோன்ட் டூ டோக் டூ யூ” என்று மாயா சொல்ல, இத்தனை  நேரம் லியோவும் மாயாவும் பேசுவதை கண்டுக்காதது போலிருந்த ரோஹன், மாயாவை தாண்டி தங்களை உக்கிரமாக முறைத்துக் கொண்டு நின்றிருந்த லியோவை இரு புருவங்களை உயர்த்தி பார்த்துவிட்டு, மாயாவை கேள்வியாக நோக்கினான்.

அவளோ யாரையும் கண்டுக்காது அவன் கையை பிடித்து, வீட்டின் பின்வளாகத்தில் நீச்சல் குளம் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள். ரோஹனின் விழிகளோடு தன் விழிகளை கலக்க விட்ட மாயா, அவனை காதலாக நோக்கியவாறு, “அது வந்து ரோஹன், நான்…” என்று ஏதோ சொல்ல வர,

அவள் கூற வருவதை புரிந்தவன் போல்,”வேணாம் மாயா, எதுவும் சொல்லாத” என்று ரோஹன் சட்டென சொன்னதில், புருவத்தை நெறித்தவள் அவனை புரியாது பார்த்தாள்.

“எனக்கு என் அம்மு தான் வேணும். இந்த மாயா மஹேஷ்வரி கிடையாது” என்று ரோஹன் சொல்ல, அவனை முறைத்து பார்த்த மாயா மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு, “ஓஹோ! ஆனா, எனக்கு இந்த ரோஹன் அதாவது, உன் அம்முவோட ரூஹி தான் வேணும். என் லைஃப்குள்ள நீதான் வந்த, நானும் ஆசைப்பட்டுட்டேன். இனி விடுறதா இல்லை” என்று தீர்க்கமாக சொன்னாள்.

அதை பார்த்தவனுக்கோ, ‘தன்னவளுக்கு நினைவு திரும்புதோ, இல்லையோ! நடந்ததை சொல்லிவிடலாமா’ என்று தான் இருந்தது.

‘என்னால முடியல அம்மு, உனக்காக ரொம்ப ஏங்குறேன்டி. ஆனா, என் எதிர்ல இருக்க நீ, என் அம்முவா எனக்கு தெரியல. என் மனசு ஏத்துக்க மாட்டேங்குதுடி’ என்று மானசீகமாக புலம்பியவன் அங்கிருந்து எதுவும் பேசாது நகர்ந்து போக, ‘இவன…’ என்று பல்லைகடித்தவள் விழா நடக்கும் மண்டபத்திற்கு சென்று அலைஸ்ஸை தேடினாள்.

அலைஸ்ஸோ வாசலில் நின்றிருந்த பாதுகாவலர்களை ஏதோ காரணம் சொல்லி அங்கிருந்து நகர்த்தியவள், தான் மறைத்து வைத்திருந்த ட்ராக்கிங் டிவைஸை சர்வேந்திரனின் காரில் யாரும் கவனிக்காத இடத்தில் பொருத்திவிட்டு, தன்னிடம் இருந்த மாயாவின் கார் கட்டுப்பாட்டை கொண்டு அவள் காரை திறந்து அதில் எதையோ தீவிரமாக தேடினாள்.

திடீரென, “என்ன பண்றீங்க மேடம்?” என்ற ஒரு பாதுகாவலரின் குரலில் திரும்பிய அலைஸ், அவனை அதிர்ந்து நோக்க, அவனோ சந்தேகமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

“அது… அது வந்து மாயா மேடம் தான் அவங்க கார்ல ஒரு முக்கியமான ஃபைல மறந்து வச்சிட்டதா எடுக்க சொன்னாங்க. அதான், நீங்க போயி உங்க வேலைய பாருங்க” என்று சொன்னவள் அங்கிருந்து விறுவிறுவென செல்ல, அந்த காவலாளியோ அவள் எதிர்ப்பார்த்தது போன்று அடுத்தநொடி நின்றது என்னவோ சர்வேந்திரனின் முன்னால் தான்.

 

காதல்போதை?
****************************

-ZAKI?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!