காதல்போதை 40?

காதல்போதை 40?

“மாயா அந்த பொண்ணோட நடவடிக்கை சரியில்லைன்னு ஏற்கனவே நான் உன்கிட்ட சொல்லியிருக்கேன். ஷீ இஸ் ச்சீட்டர். நான் உனக்கு அஸ்ஸைன் பண்ணியிருந்த பிஏவ வேணாம் சொல்லிட்டு, நீதான் இன்டர்வியூ வச்சி அவள அஸ்ஸைன் பண்ண. மொதல்ல இவள பத்தி பொலிஸ்ல இன்ஃபோர்ம் பண்ணியே ஆகனும்” என்றுவிட்டு சர்வேந்திரன் தொலைப்பேசியை எடுக்க,

அதை பிடுங்கிய மாயா, “ரிலாக்ஸ், துரோகத்தை நான் எப்போவுமே மன்னிக்க மாட்டேன். அவ தப்பான பொண்ணு கிடையாது. சோ, அலைஸ் விஷயத்தை நான் டீல் பண்ணிக்கிறேன்” என்றுவிட்டு அலைஸ் பற்றிய யோசனையில் மூழ்கினாள்.

ஏற்கனவே அலைஸ்ஸின் சர்வேந்திரன் மீதான பார்வையில் குழப்பத்தில் இருந்த ரோஹனுக்கு இப்போது நடக்கும் ஒவ்வொரு விடயங்களை பார்க்கும் போது, ‘இங்க நமக்கே தெரியாம ஏதோ நடந்துக்கிட்டு இருக்கு’ என்று மட்டும் புரிந்தது. ஆனால், நாளையே தன் மொத்த குழப்பங்களுக்கும் விடை கிடைக்கப் போகின்றது என்பதை அவன் அறியவில்லை.

அடுத்தநாள்,

மாயா தன் அறையில் தீவிரமாக சில கோப்புக்களை ஆராய்ந்துக் கொண்டிருக்க, கதவு தட்டப்படும் சத்தத்தில் அதை மறைத்தவள், “கம் இன்” என்று குரல் கொடுக்க, உள்ளே வந்த சர்வேந்திரனை பார்த்து, “என்ன விஷயம் டாட்?” என்று புரியாமல் கேட்டாள்.

அவரோ உச்சகட்ட கோபத்தில், “இப்போ, நீயே எல்லாம் முடிவுகளும் எடுக்க ஆரம்பிச்சிட்ட போல? உனக்கு அப்பான்னு நான் இருக்கேன் மாயா, என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கனும்னு உனக்கு தோணல்லையா?” என்று கத்த, மாயாவோ எதுவும் பேசாது அமைதியாகவே நின்றிருந்தாள்.

“யாரக் கேட்டு மாயா, நான் உனக்காக அஸ்ஸைன் பண்ணியிருந்த கார்ட்ஸ் அ வேலைய விட்டு தூக்கின?” என்று சர்வேந்திரன் கோபமாக கேட்க,

“ஓ கோட்! இனாஃப், எனக்கு அவங்க மேல நம்பிக்கை இல்லை, அவங்களோட நடவடிக்கை எனக்கு சரியா தோணல்ல, அதான்… என்ட், அலைஸ் வேலைய ரிஸைன் பண்ணிட்டா, என்னோட புது பிஏவ நானே இன்டர்வியூ பண்ணி செலக்ட் பண்ணிக்கிறேன்” என்று சாதாரணமாக சொன்னாள் மாயா.

அதில் அதிர்ந்த சர்வேந்திரன், “மாயூ, அந்த பொண்ணு நேத்து பார்ட்டில ஏதோ தப்பு பண்ணியிருக்கா, இன்னைக்கு வேலைய ரிஸைன் பண்ணியிருக்கா. இதுலயே உனக்கு அவ மேல சந்தேகம் வரலையா? இவ்வளவு பெரிய கம்பனி ரன் பண்ற நீ, இப்படி அஜாக்கிரதையா  இருக்க கூடாது. நமக்கு எதிரா ஏதோ தப்பா நடக்குதுன்னு தெரியும் போதே அதை முளையிலேயே கிள்ளி எறியனும்” என்று ஆதங்கமாக பேச,

“ஐ க்னோ, எதிரிகளையும் சரி, துரோகிகளையும் சரி விட்டு வைக்கவே கூடாது. இந்த கம்பனி என்னோடது, அவ்வளவு சீக்கிரம் இதுக்கு எதிரா நடக்குறதை நான் அசால்ட்டா விட்டுற மாட்டேன். என்ன நடந்தாலும், ஐ கென் ஹேன்டல்” என்ற மாயாவின் பேச்சிலிருந்த உறுதியிலும், நிமிர்விலும், அழுத்தத்திலும் சர்வேந்திரனுக்கு மறுவார்த்தை கூட பேச முடியவில்லை.

அப்போது சரியாக சர்வேந்திரனுக்கு ஒரு அழைப்பு வர, அதை ஏற்றவர் மறுமுனையில் சொன்ன செய்தியில் ஆடிப் போய்விட்டார்.

“வாட்?! என்னடா சொல்ற? இது எப்படி சாத்தியம்?” என்று சர்வேந்திரன் கத்த,

மறுமுனையில், “————————————–“

“ஓ ஷீட்! உடனே கிளம்பி வர்றேன்” என்று பதட்டமாக பேசிய சர்வேந்திரன், மாயா தன்னையே குறுகுறுவென பார்ப்பதை உணர்ந்து, அழைப்பை துண்டித்து வெளியே செல்ல எத்தனிக்க, அதை தடுத்தது மாயாவின் குரல்.

“என்னாச்சு டாட்? ஏதாச்சும் பிரச்சினையா?” என்று மாயா கேட்க, “நத்திங்மா, கம்பனில சின்ன பிரச்சினை, நான் ஹேன்டல் பண்ணிக்கிறேன்” என்றுவிட்டு விறுவிறுவென சர்வேந்திரன் அறையிலிருந்து வெளியேற, போகும் அவரை புரியாது பார்த்துக் கொண்டிருந்தவள், தன் தொலைப்பேசிக்கு அலைஸ் அனுப்பிய புகைப்படங்களை பார்த்ததும், இதழ்கள் தானாகவே புன்னகைத்து கொண்டன.

இங்கு, ரோஹனோ யோசனையுடன் பால்கெனி வழியே வெளியே வெறித்தவாறு நின்றிருக்க, அவன் மனதிலோ பல குழப்பங்கள். பெங்ளூரில் இருக்கும் போது மாயா இட்டாலி செல்வதாக சொன்னதும், எங்கு தன்னவளை மறுபடியும் இழந்து விடுவேனோ என்ற பயத்திலும், சர்வேந்திரனால் மாயாவுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற பயத்திலுமே அவளுடன் இட்டாலி வந்தான். ஆனால், இங்கு தனக்கே புரியாது நடக்கும் சம்பவங்களில் குழம்பித் தான் போனான் அவன்.

சரியாக, “ரூஹி” என்ற குரலில் சட்டென திரும்பியவன், அங்கு கதவு நிலையில் சாய்ந்தவாறு குறும்புப் புன்னகையுடன் நின்றிருந்த மாயாவை முறைத்து பார்த்து, “அது என் அம்மு என்னை கூப்பிடுறது மாயா, டோன்ட் கோல் மீ” என்று காட்டமாக சொல்ல,

“ஓஹோ! நான் நேத்து ராத்திரி சொன்னது எதுவும் உங்க மண்டையில ஏறல்லன்னு நினைக்கிறேன்” என்று கேலியாக சொன்னவாறு அவனருகில் வந்தாள் மாயா.

“உனக்கு ஏற்கனவே என்கேஜ்மென்ட் ஆகிறுச்சி, நியாபகம் இருக்கா?” என்று ரோஹன் கேலியாக கேட்க, அவனை முறைத்தவள், “ஆனா, எனக்கு உன்னை தான் பிடிச்சிருக்கு. அதனால மறுபடியும் அம்மு புராணம் பாடாம, என் ஃபீலிங்ஸ்ஸை புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க” என்று கோபமாக பதிலளித்தாள்.

“அவளோட இடத்தை யாராலையும் ரீப்ளேஸ் பண்ண முடியாது, இந்த பேச்சை இதோட நிறுத்திறு. என்ட், நான் போக வேண்டிய நேரம் வந்தாச்சுன்னு நினைக்கிறேன்” என்று ரோஹன் எங்கேயோ வெறித்தவாறு சொல்ல, அவனை ஆழ்ந்து நோக்கியவள், “அதுக்குள்ள என்ன அவசரம் மிஸ்டர்.ரோஹன்? என்னையும் உங்க கூடவே கூட்டிட்டு போகலாம், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று குறும்பாக சொன்னாள்.

“ஆர் யூ ஜோக்கிங்? அதான் சொல்றேன்ல, இந்த மாயா மஹேஷ்வரி என் அம்மு கிடையாதுன்னு” என்று ரோஹன் கத்த, வாய்விட்டு சிரித்த மாயா, “ஆமா, நான் உங்க அம்மு கிடையாது. அதேமாதிரி, நீங்களும் உங்க அம்முவோட ரூஹி கிடையாது, இந்த மாயாவோட ரோஹன். சோ, மறுபடியும் என் முன்னாடி அம்மு, பொம்முன்னு வேற ஒருத்திய பத்தி யோசிச்சீங்கன்னா, நான் யாருன்னு உங்களுக்கு காட்ட வேண்டி இருக்கும்” என்று கடைசி வசனத்தை மிரட்டலாக சொல்ல, அவனுக்கோ அன்று தன்னவள் தன்னை காதலின் பெயரில் செல்லமாக மிரட்டியது தான் நியாபகத்தித்கு வந்தது.

‘இல்லை… இது என் அம்மு கிடையாது’ என்று தலையை உலுக்கி சமன் செய்தவன், அன்று அவளை தான் ஒதுக்கியதற்கு இன்று தன்னை இவள் ஏங்க வைப்பதாக நினைத்து வாய்விட்டே எப்போதும் போல், “என்னை ரொம்ப டோர்ச்சர் பண்ற டெவில்” என்று சலிப்பாக சொன்னான் ரோஹன்.

“டெவில்…” என்று கேள்வியாக கேட்டு சிரித்தவள், “வட்எவர், இதுக்கப்றம் என் முன்னாடி உங்க ஓடி போன லவ்வர பத்தி பேசாதீங்க ரைட்?” என்று சொல்ல, அதில் கோபத்தின் உச்சத்திற்கே சென்றவன், “ஷட் அப், என் அம்முவ இப்படி சொல்லாத” என்று கத்தினான்.

“நான் என்ன பொய்யா சொன்னேன்? உங்கள விட்டுட்டு போன ஒருத்திக்காக இத்தனை வருஷம் காத்துக்கிட்டு இருக்கீங்க. இடியட், அவ போய்ட்டா அவ்வளவு தான். இனி எப்போதுமே வர போறதில்லை” என்று மாயா கடைசி வசனத்தை அழுத்தி சொல்லவும், தன்னை மீறி அவள் குரல்வளையை கோபத்தில் ஒற்றை கையால் பிடித்து விட்டான் ரோஹன்.

கிட்டதட்ட தானே ரோஹனின் அம்மு என்று தெரியாமல் தன்னவன் வேறொருத்தியை பற்றி பேசுவதை பொருக்க முடியாது மாயா சண்டையிட, தன் எதிரே நிற்பவளே தன்னவள் என்று தெரிந்தும் அவள் அவளை பற்றியே தவறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் ரோஹன் சண்டையிட என்று அங்கு இருவருக்கிடையிலான அளவு கடந்த காதலே அவர்களை ஆட்டிப் படைத்தது.

அவளோ அவன் கண்களை அழுத்தமாக பார்க்க, அப்போது தான் செய்து கொண்டிருக்கும் காரியம் உணர்ந்த ரோஹன் சட்டென கையை எடுத்து, “சோரிமா” என்றவாறு அவளை இறுக அணைத்துக் கொள்ள, மாயாவிற்கோ கோபத்திற்கு மாறாக சிரிப்பு தான் வந்தது.

அவனிடமிருந்து விலகியவள், “சீக்கிரம் ரெடி ஆகி வாங்க, வெளில வெயிட் பண்றேன். இன்னைக்கு நாம தீர்க்க வேண்டிய விஷயங்கள் நிறையவே பாக்கியிருக்கு” என்றவாறு வெளியே செல்ல, “புரியல” என்ற ரோஹனின் பதிலில், அவனை திரும்பி அழுத்தமாக பார்த்தாள் மாயா.

“துரோகம் ஒரு சாக்கடை மாதிரி பொதுவா பிஸ்னஸ்ல அந்த சாக்கடை எங்களுக்கே தெரியாம நிறைஞ்சியிருக்கும். அப்போ அப்போ அதை க்ளீன் பண்ணிரனும் மிஸ்டர்.ரோஹன்” என்றுவிட்டு அவள் செல்ல, புரியாது தலையை சொரிந்துக் கொண்டது என்னவோ அவளவன் தான்.

அடுத்த சில நிமிடங்களிலே ரோஹனும் தயாராகி வர, அவர்கள் சென்றது என்னவோ ஐரா கோஸ்மெடிக் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு தான்.

தன் அலுவலக அறைக்குள் நுழைந்த மாயா அங்கு நின்றிருந்தவர்களை பார்த்து ஏளனமாக சிரித்தவாறு, “ஹெலோ மிஸ்டர்ஸ், வெல் கம் டூ த ஹெல்” என்றவாறு வர, அங்கு நின்றிருந்த ஐரா நிறுவனத்தின் முக்கிய பதவியிலிருக்கும் மூன்று பேருக்குமே தங்கள் முதலாளியின் குரலே இருக்கும் பதட்டத்தை அதிகரித்தது.

உடல் நடுங்க அவர்கள் நின்றிருக்க, ரோஹனோ சோஃபாவில் அமர்ந்து நடப்பவற்றை புரியாது பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த மேசையின் விளிம்பில் ஒற்றை காலை மடக்கி அமர்ந்து கொண்ட மாயா, தன் இருபுறமும் இருந்த கோப்புக்களை காட்டி, “இது நீங்க எனக்கு கொடுத்த ரிபோர்ட், இது நீங்க எனக்கு கொடுத்திருக்க வேண்டிய ரிபோர்ட். பட், இரண்டுமே பேலன்ஸ் ஆகல, அது ஏன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று கேலிக் குரலில் கேட்க,

“இல்ல மேம், நாங்க சரியா தான்…” என்று கம்பனியின் நிதித் துறையில் முக்கிய பதவியிலிருப்பவன் ஏதோ சொல்ல வர, மாயாவின் குரல் அவர் பேச்சை தடை செய்தது.

“ஓஹோ! அப்போ நீங்க சரியா தான் உங்க வேலைய பார்த்திருக்கீங்க. தட்ஸ் ஓகே, ஆனா என்னன்னா, இவ்வளவு பெரிய கம்பனிய ஹேன்டல் பண்ற நான், உங்கள மட்டும் நம்பி இதெல்லாம் ஒப்படைச்சிருப்பேன்னு நீங்க எப்படி நினைக்கலாம்? ம்ம்…?

நீங்க எனக்கு கொடுத்த ரிபோர்ட்க்கு மேலாவே நீங்க பண்ண தப்ப சுட்டிக்காட்டி, எனக்கு சரியான ரிபோர்ட் கொடுக்குறதுக்கு ஆளுங்க ஒவ்வொரு டிபார்ட்மென்ட்லையும் இருக்காங்க. எனக்கு விசுவாசமானவங்க, துரோகம் அதிகமாயிருச்சில்ல, அவ்வளவு அசால்ட்டா இருந்துருவேன்னு நினைச்சிட்டீங்களோ?

என்னடா இத்தனை வருஷமா நீங்க கொடுக்குற ரிபோர்ட் அ அமைதியா பார்த்துட்டு இருக்குற எம்.டி, இன்னைக்கு ஏன் இப்படி லெஃப்ட் என்ட் ரைட் வாங்குறாங்கன்னு தானே யோசிக்கிறீங்க? வட் டு டூ, அப்படி இருக்க வேண்டிய நிலைமை.  ஆனா, என்னை முட்டாளா நினைச்சிட்டீங்கல்ல?” என்று மாயா கண்கள் சிவக்க கோபத்தில் கேட்க,

“இல்லை மேம், நாங்க…” என்று மற்றொருவர் ஏதோ பேச வர, அதை குறுக்கிட்ட மாயா, “நோ அதர் டோக்ஸ், ஒரே கேள்வி தான், எவ்வளவு பணம் வாங்கினீங்க?” என்று கேட்டு, தன் தொலைப்பேசியில் தனது ஆட்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

அடுத்த நிமிடம் அங்கு பத்து பதினைந்து பேர் அம்மூவரை சூழ்ந்துக் கொள்ள, அங்கிருந்த ஒருவனோ பயத்தின் உச்சத்தில், “மேம், இதேல்லாம் யாரு பண்ண சொன்னாங்கன்னா…” என்று உண்மையை சொல்ல வர, “ஷட் அப்” என்ற மாயாவின் கர்ஜனையில், அவன் பேச்சு தானாகவே தடைப்பட்டது.

“யூ க்னோ பெட்டர், ஐரா கம்பனீஸ்ல வேலை பார்த்துட்டு வேற எந்த கம்பனிக்கு போனாலும், உங்களுக்கு வேலை கிடைக்குறதே கேள்விகுறி தான். அதுவும் என்னோட ஒரு வார்த்தை எந்த கம்பனியும் உங்களுக்கு வேலை கொடுக்க முன்னாடி வர்றாது. நான் நினைச்சா உங்கள எந்த கம்பனிலையும் வேலை பார்க்க முடியாதபடி பண்ண முடியும். ஆனா, எதுக்கு நான் சின்னபுள்ள தனமா நடந்துக்கிட்டு, அதுல உங்க ஃபேமிலி பாதிக்கப்பட்டு…” என்று பெருமூச்சுவிட்டவள் அங்கிருந்த பாதுகாவலரிடம்,

“இனி இவங்க இந்த சிட்டில இருக்கவே கூடாது” என்றுவிட்டு மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு அவர்களை அழுத்தமாக பார்த்தவாறு நிற்க, அவர்களோ காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்க ஆரம்பித்து விட்டனர்.

அவர்களுக்கும் நன்றாகவே தெரியும், இத்தனை பெரிய கம்பனியில் வேலை செய்துவிட்டு வெளியேறினால், வேற எந்த கம்பனியிலும் அவ்வளவு இலகுவாக வேலை கிடைக்காது என்று. அதுவும் நகரத்தை விட்டே மாயா அவர்களை ஒதுக்கி வைப்பதில் அவர்களுக்கு தூக்கிவாரிப்போட, கடைசியாக ஒரு தடவை வாய்ப்பு கிடைக்காதா என்ற ரீதியில் கெஞ்ச ஆரம்பித்து விட்டனர்.

ஆனால், மாயாவோ அதையெல்லாம் கண்டும் காணாதது போலிருக்க, அவளுடைய ஆட்கள் முதலாளி சொன்ன வேலையை கச்சிதமாக முடித்தனர்.

ரோஹனோ மாயாவிற்கு எதிரே வந்து நின்றவன் அவளை கூர்மையாக பார்த்தவாறு, “அவங்கள உண்மைய சொல்ல விட்டிருக்கலாம்ல, உன் எதிரிங்க யாருன்னு தெரிஞ்சிருக்க முடியும்” என்று அழுத்தமாக சொல்ல,

“ரோஹன் எதிரிங்கள கூட நம்பலாம் ஆனா, துரோகிங்கள நம்பவே கூடாது. நானே காசு கொடுத்து என்னை காட்டி கொடுங்கன்னு சொன்னா, அதையும் நெஞ்சுல ஈரமே இல்லாம பண்ணுவாங்க. விட்டா அவனுங்க உங்கள கூட சொல்லியிருப்பாங்க. எத்தனை நாளைக்கு தான் எதிரி என்கூட கண்ணாமூச்சி விளையாடுவான் ஒருநாள், தானாகவே அவன் முகத்திரை கிழிஞ்சி என் முன்னாடி நின்னு தானே ஆகனும்” என்று மாயா சொல்ல, ரோஹனோ அவளை மெச்சுதலாக பார்த்து வைத்தான்.

ஒரு பெருமூச்சுவிட்டவள் அங்கிருந்த சில கோப்புக்களை எடுத்து புரட்டியவாறு, “வீட்டுக்கு போகலாமா?” என்று கேட்க, ரோஹனும் அந்த கோப்புக்களை சந்தேகமாக பார்த்தவாறு அவளுடன் நடந்தான்.

அதேசமயம்,

ஐரா கோஸ்மெடிக் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு பக்கத்திலிருக்கும் ஒரு பழைய, மூடப்பட்ட சின்ன தொழிற்சாலையை சுற்றி போலிஸ் அதிகாரிகள் நின்றிருக்க, சில ஆட்கள் கையில் விலங்குடன் அதிகாரிகளின் பிடியில் தலைகுனிந்து நிற்க,

பல பத்திரிகையாளர்களும் அங்கு கூடியிருந்தனர்.

அந்த பழைய தொழிற்சாலை தான் சர்வேந்திரன் தன் நண்பனும், ஆராய்ச்சியாளருமான மெட்ரிசன் கண்டுபிடித்த அக்வா டொஃபேனாவுடைய ஃபோர்மியூலாவை டார்க் வெர்ப்(Dark web) எனப்படும் இணையத்தின் மூலமாக, சட்டரீதியற்ற முறையில், ஐரா நிறுவனத்தின் வியாபாரக்குறியை பயன்படுத்தி உற்பத்தி செய்ய பயன்படுத்தும் இடம்.

இதை தூரத்திலிருந்து காரில் இருந்தவாறே பார்த்துக் கொண்டிருந்த சர்வேந்திரனுக்கு நன்றாகவே தெரியும், தன் ஆட்கள் எந்த சந்தர்ப்பத்திலும் உண்மையை சொல்ல மாட்டார்கள் என்று… அவர்களின் குடும்பம் எனும் பலவீனம் சர்வேந்திரனின் கையில் அல்லவா உள்ளது!

அடுத்தநொடி அங்கிருந்து நகர்ந்தவருக்கு மாயா இருக்கும் இடம் மட்டுமே தற்போது தனக்கான பாதுகாப்பான இடம் என்று மட்டும் புரிந்தது. இருக்கும் பதட்டத்தில் காரை நிறுத்திவிட்டு, கார் சாவியை கூட எடுக்காது விறுவிறுவென வீட்டுக்குள் நுழைந்தவருக்கு, சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த மாயா தான் தென்பட்டாள்.

முயன்று தன் முகபாவனைகளை மாற்றி அவளின் எதிரே அவர் அமர்ந்துக் கொள்ள, அவரின் களவரமான முகத்தை பார்த்த ரோஹனுக்கு சற்று நேரத்திற்கு முன் தான் அந்த சட்டரீதியற்ற உற்பத்திகள் நடந்த தொழிற்சாலை பிடிபட்ட செய்தி தெரிந்திருக்க, அடுத்து நடக்க போவதை ஒரு சுவாரஸ்யத்துடன் பார்த்திருந்தான்.

“ரோஹன், யூ க்னோ வன்திங், எங்க தாத்தா ஆரம்பத்துல கட்டின ஃபேக்டரி தான் அது… அதுக்கப்றம் புது ஃபேக்டரி  கட்டினதும், அதை இழுத்து மூடிட்டாங்க. பட், இப்போ அங்க இல்லீகலா பிஸ்னஸ் நடந்திருக்குன்னு தெரியும் போது ரொம்ப ஆத்திரமா இருக்கு. ஹவ் டேர்… அதுவும், எங்க ப்ரான்ட் அ யூஸ் பண்ணி இல்லீகலா பண்ணியிருக்காங்க” என்று மாயா ஆதங்கமாக பேச, சர்வேந்திரனோ தன் பதட்டத்தை மறைக்க அரும்பாடுபட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

ரோஹனுக்கோ, சர்வேந்திரன் தொடர்பாக ஆரம்பத்திலே தான் கணித்தது சரியென்றே தோன்றியது. அவர் மாயாவின் சொத்துக்களை அடைய ஆசைப்படுவதை தாண்டி, சட்டரீதியற்ற முறையில் ஏதோ தவறு செய்வதை அன்றே அவன் யூகித்திருக்க, இப்போதே சர்வேந்திரனின் மொத்த திட்டமும் அவனுக்கு புரிந்தது.

“டாட், நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்” என்று மாயா சொல்ல, சர்வேந்திரனோ முயன்று முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு, “சொல்லு மாயூ” என்று சொன்னார்.

சரியாக, அப்போது உள்ளே வந்த வக்கீலை பார்த்த மாயா, அவரை அமர சொல்ல, குடும்ப வக்கீல் வராது வேறொருவரை மாயா அழைத்திருந்தது சர்வேந்திரனுக்கு மேலும் குழப்பத்தை அதிகரித்தது.

“டாட், எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை, நான் ரோஹன லவ் பண்றேன்” என்று மாயா சொல்ல, இது எதிர்ப்பார்த்தது தான் என்பது போல் ரோஹனை முறைத்தவருக்கு, இப்போது இருக்கும் நிலைமையில் இதை பெரிதுபடுத்தவும் தோணவில்லை.

“மாயூ, லியோவ பத்தி யோசிக்காம சுயநலமா நீ நடந்துக்குறது போல உனக்கு தோணல்லையா?” என்று அமைதியாக சர்வேந்திரன் கேட்க, சோஃபாவில் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு சாய்ந்து அமர்ந்தவள், “லியோக்கிட்ட நான் பேசிக்கிறேன், எனக்கு ரோஹன் வேணும், இது தான் முடிவு” என்று அழுத்தமாக சொல்ல, பல்லைகடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டார் சர்வேந்திரன்.

ஆனால், ஏற்கனவே நடந்த சம்பவத்தில் பயத்திலும், பதட்டத்திலும் இருப்பவருக்கு இப்போது மாயா பேசியது கோபத்தை வேறு தூண்டி விட்டிருக்க, அடுத்து நடந்த நிகழ்வில் தன் முகத்திரையை கிழித்து உண்மை முகத்தை காட்டி விட்டார் சர்வேந்திரன்.

சர்வேந்தீரன் வக்கீலை கேள்வியாக பார்க்க, அவரிடமிருந்து ஒரு கோப்பை வாங்கி மாயா டீபாயில் வைக்கும் போதே அலைஸ், “ஹாய் மாயூ” என்றவாறு உள்ளே வர, ரோஹனோ அலைஸ் வரும் தோரணையில் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்து அவளை கூர்ந்து பார்க்க, சர்வேந்திரனோ கோபத்தில் பொங்கி விட்டார்.

“மாயா, இவ உன்னை ஏமாத்திக்கிட்டு இருக்கா, இன்னுமா இவள விட்டு வச்சிருக்க?” என்று கத்த, அலைஸ் அவர் கத்துவதை கண்டுக்காது மாயாவின் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

“டாட், ப்ளீஸ் ரிலாக்ஸ். நான்தான் சொன்னேன்ல, அவ தப்பான பொண்ணு கிடையாது. என்ட், இப்போ நான் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல போறேன். அதுவும், என் மொத்த சொத்து பத்தி” என்று மாயா சொல்ல, அதிர்ந்த சர்வேந்திரன, “சொத்தா…? அதுல என்ன முடிவு பண்ணியிருக்க?” என்று பதட்டமாக கேட்டார்.

“டாட், நான் ரோஹன கல்யாணம் பண்ணா, அவங்க வீட்டுக்கு போயிறுவேன். என்ட், என்னால இந்த சுதந்திரமே இல்லாத வாழ்க்கைய இதுக்கு மேல வாழ முடியாது. ஏதோ ப்ரோக்ரேம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் மாதிரி நடந்துக்கொள்ள வேண்டியிருக்கு. யூ க்னோ வெல், நான் இறந்தா என் சொத்து முழுக்க ஓர்ஃபெனேஜ்க்கு போயிறும். என்ட் கம்பனியையும், ஹோட்டல்ஸ்ஸையும் பார்த்துக்க, நான் சில விசுவாசமான ஆளுங்களை அஸ்ஸைன் பண்ணியிருக்கேன், அவங்க பார்த்துப்பாங்க. அதான், நான் இப்போவே சொத்தோட முழு உரிமையையும் ஆசிரமத்துக்கு எழுதி வச்சிட்டு ரோஹன் கூட பெங்ளூர் போயிரலாமேன்னு…”

என்று மாயா சொல்லி முடிக்கவில்லை, “வட் த *****…” என்று கெட்ட வார்த்தையால் திட்டியவாறு டீபாயில் இரு கைகளையும் அடித்து, கத்திக் கொண்டு எழுந்து நின்றார் சர்வேந்திரன்.

ரோஹனோ மாயாவை சந்கேகப் பார்வை பார்க்க, அவளோ சர்வேந்திரனின் அதிர்ச்சியை கண்டும் காணாதது போல் இருந்தாள். சர்வேந்திரனுக்கு இதை பொருத்துக் கொள்ளவே முடியவில்லை. இத்தனை வருடங்கள் இந்த சொத்தை அடைவதற்கே பொறுமையாக இருந்தவர், மாயா ஆறு வருடங்களுக்கு முன் பெங்ளூருக்கு சென்ற போது அவளை கொல்ல திட்டமிட்டதற்கு காரணம் கூட, இப்போது தனக்கு கிடைத்திருக்கும் ஐரா நிறுவனத்தின் பொறுப்போடு சேர்த்து மாயா இறந்ததும் மொத்த உரிமையையும் தன் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று தான்.

இறந்த விடயம் தெரிந்தால் தானே ஆசிரமத்தின் பெயரில் மொத்த சொத்துக்களும் மாற்றி எழுதப்படும், இதுவே ஐரா நிறுவனத்தின் நிர்வாகி மாயாமாகி விட்டார் என்றால், தானே மொத்தத்தையும் நிர்வகிக்கலாம் என்று கணக்கு போட்டு வைத்திருந்தார். ஆனால், அதுவும் முடியாது மீண்டும் மாயா ‘கம்பனியை பொறுப்பேற்க போகிறேன்’ என்று இட்டாலி வந்த போது அவளுக்கு விபத்தை ஏற்படுத்த, அவளோ இறக்காது, நினைவுகளை மறந்து போனாள்.

இதை வைத்தே மொத்த சொத்தையும் அவள் கையெழுத்தோடு தன் பெயருக்கு மாற்றி எழுத சர்வேந்திரன் திட்டம் போட, ஆனால் மாயா நினைவுகளை இழந்தும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஒவ்வொரு விடயத்தையும் அலசி ஆராய்ந்தே, பத்திரங்களை பொறுமையாக வாசித்தே கையெழுத்து இடுவாள்.

இப்போது சர்வேந்திரனின் இத்தனை வருட பொறுமைக்கும் ஒரு குழி மண்ணை அள்ளி போடுவது போல் இருக்கும் அவளின் செய்கையை அவரால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. அதுவே அவரின் போலியான முகத்திரையை கிழித்து எறிந்தது.

“ஹவ் டேர் யூ மாயா, எப்படி நீ இந்த மாதிரி ஒரு முடிவு எடுத்திருப்ப?  எல்லாம் விஷயத்துலையும் உன் முடிவ பொருத்துக்கிட்ட மாதிரி, இந்த விஷயத்துல என்னால பொறுத்துக்கொள்ள முடியாது. என்ட், இவ்வளவு ஈஸியா கம்பனிய சும்மா தூக்கி கொடுக்க போறேன்னு சொல்லுற?” என்று ஆதங்கமாக அவர் கத்த,

அவரின் எதிரே வந்து நின்ற மாயா, “கம்பனி பொறுப்பை தான் சில பேர நம்பி ஒப்படைக்க போறேன், உலகம் ரொம்ப சுருங்கிறுச்சி டாட், நான் எந்த மூலைல இருந்தாலும் கம்பனிய என்னால கவனிச்சிக்க முடியும்” என்று அழுத்தமாக சொன்னாள்.

“நோ… இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். உன் தாத்தா இந்த மொத்த சொத்துக்கும் பாதுகாப்பா என்னை தான் அஸ்ஸைன் பண்ணியிருக்காரு. உன் மொத்த சொத்தையும் ஏதோ அனாதைகளுக்கு தூக்கி கொடுக்க போறியா? அதுவும் உனக்கு கொஞ்சமும் தகுதியில்லாத இவன கல்யாணம் பண்ண” என்று சர்வேந்திரன் கத்த, மாயாவின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்தது.

ஏற்கனவே இருந்த பதட்டம், இப்போது இதுவும் கை நழுவிப் போவதில் ஏற்பட்ட ஆதங்கம் எல்லாமே சேர்ந்து சர்வேந்திரன் ஆத்திரத்தில் வெடிக்க, மாயாவோ ஒரு நொடி கண்களை மூடி திறந்து, “டாட், வார்த்தைய அளந்து பேசுங்க. சொத்தோட பாதுகாப்பு தான் உங்க பேருல, சொத்து என் பேருல இருக்கு. எனக்கு என்னோட காதலை விட ஒன்னும் பணம் முக்கியம் கிடையாது. நான் முடிவு பண்ணது, பண்ணது தான்” என்று கறாராக சொன்னாள் மாயா.

“லுக் மாயா, அவ்வளவு சீக்கிரம் இந்த சொத்து கை விட்டு போக நான் விடமாட்டேன். உன்னால முடியலன்னா, இதை நான் கவனிச்சிக்கிறேன்” என்ற சர்வேந்திரனை குறிக்கிட்டவள், “நோ டாட், அது சரியா வராது. உங்களுக்கு உங்க கம்பனி இருக்கு. ஐரா கம்பனீஸ் ஒரு கடல் மாதிரி, அதுல இறங்கினா அதுல மட்டும் தான் நம்ம கன்ஸன்ட்ரேட் இருக்கனும். என்ட், என்ன இருந்தாலும் ஷெர்வி கோஸ்மெடிக்ஸ் எங்க போட்டி கம்பனி தானே? மொத்த பொறுப்ப உங்ககிட்ட ஒப்படைக்கிறது, தட் இஸ் இம்போஸிபள்”  என்று அழுத்தமாக உரைத்தாள்.

அவருக்கோ இழுத்து பிடித்து வைத்திருந்த பொறுமை காற்றில் பறந்து போக, “ஏய், என்னடி நானும் பொறுமையா பேசிக்கிட்டு இருந்தா நீ ஓவரா பேசிக்கிட்டு போற? இத்தனை வருஷம் உன்னை பார்த்துக்கிட்ட, என்னை எதிர்த்து பேச உனக்கு தைரியம் வந்திருச்சா?” என்று கேட்டவாறு மாயாவை அடிக்க அவர் கையை ஓங்க, மாயாவோ அசையாது அழுத்தமாக அவரையே பார்த்தவாறு நின்றாள் என்றால், ரோஹன் தான் அவர் கையை பிடித்திருந்தான்.

தன்னவளை சர்வேந்திரன் அடிக்க செல்வதில் ரோஹனுக்கு கட்டுக்கடங்காமல் கோபம் வர, “இதோட நீங்க நிறுத்திட்டீங்கன்னா உங்களுக்கு மரியாதை, இல்லைன்னா அவ்வளவு தான்…” என்று மாயாவுக்காக அவன் நிதானமாக அதேசமயம் அழுத்தமாக சொன்னான்.

அவன் பிடித்திருந்த கையை உதறிய சர்வேந்திரன், “யூ… எவ்வளவு தைரியம் இருந்தா என் மேலயே கை வைப்ப?” என்று கேட்டவாறு ரோஹனை அறைய போக, அடுத்தநொடி தனக்கு விழுந்த அறையில் ஆடிப் போய்விட்டார் சர்வேந்திரன்.

ரோஹனின் விழிகளோ விரிந்துக் கொள்ள, தன் முன் கண்கள் சிவந்து பத்ரகாளி போல் தன்னை அறைந்த கையை உதறியவாறு நின்றிருந்த மாயாவின் தோற்றத்தில் சர்வேந்திரன் அதிர்ச்சியில் உறைந்தே விட்டார்.

“ஹவ் டேர் யூ இடியட்? நீ எப்படிடா அவன் மேல கை வைப்ப? மாயாவோட ரூஹி மேல கை வைச்ச, உன்னை தொலைச்சிறுவேன்” என்று ஒற்றை விரல் நீட்டி மாயா எச்சரிக்க, ‘இவளுக்கு நினைவுகள் திரும்பி விட்டதா’ என்று அதிர்ந்து நின்றார் அவர்.

ரோஹனுக்கு சந்தோஷம் தாளவில்லை. அவன் கண்கள் கலங்க, இதழ்களோ, “அம்மு” என்று முணுமுணுக்க, புன்னகையுடன் தன்னவளையே பார்த்திருந்தான்.

 

காதல்போதை

*******************************

-ZAKI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!