காதல்போதை 43💙

அடுத்தநாள்,
   அலுவலகத்தில்,

பாபி மடிக்கணினியில் மும்முரமாக ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்க, அவன் முன் வந்து நின்ற கீர்த்தி, “சார்…” என்று மெல்லிய குரலில் அழைக்க, நிமிர்ந்தவன் அவளை கேள்வியாக நோக்கினான்.

“ஒரு த்ரீ ஹவர்ஸ் பர்மிஷன் வேணும் சார்” என்று கீர்த்தி தடுமாற, அவளை அழுத்தமாக பார்த்த பாபி, “சும்மா எல்லாம் வேலைய வச்சிக்கிட்டு உங்களை அனுப்ப முடியாது, ரீசன் சொல்லுங்க மிஸ்.கீர்த்தி” என்று சொன்னான்.

தயக்கமாக அவனை ஏறிட்டவள், “இன்னைக்கு என்னை பொண்ணு பார்க்க வர்றாங்க” என்று தலையை குனிந்துக் கொண்டு சொல்ல, இருக்கையில் சாய்ந்து அமர்ந்து அவளை ஆழ்ந்து பார்த்தவன், “ஓஹோ! இப்போவாச்சும் புத்தி வந்ததே…” என்று கேலிக் குரலில் சொன்னான்.

“ஏதாச்சும் ஒன்னாவது நல்லதா நடக்கனும், என் அப்பாவோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்” என்று கீர்த்தி சொல்ல, அவளையே சிறிது நேரம் அமைதியாக பார்த்தவன், “யூ மே கோ” என்றுவிட்டு திரையில் பார்வையை பதிக்க, ‘என் மேல உனக்கு காதலே இல்லையா தரு?’ என்று மானசீகமாக கேட்டுக் கொண்டவள், தன்னவனை ஏக்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினாள்.

உடனே வீட்டுக்கு போக மனமில்லாமல் கோயிலுக்கு சென்றவள், தன் மனக் குமுறல்களை கடவுளிடமே கொட்டிவிட்டு, மனநிம்மதிக்காக சிறிது நேரம் கோயிலில் அமர்ந்துக் கொண்டாள். அப்பாவின் சந்தோஷத்துக்காக சம்மதம் சொன்னாலும், மனம் முழுக்க தன்னவன் இருக்க, வேறு ஒருவனை மனம் ஏற்க விட்டால் தானே!

கண்கள் கலங்க தன்னவனை நினைத்துக் கொண்டிருந்தவளின் சிந்தனையை கலைக்கும் விதமாக அலறியது அவளுடைய கைப்பேசி. அவளுடையே தங்கையே அழைத்திருக்க, அழைப்பை ஏற்றவள், “வர்றேன் கீதா” என்று மட்டும் சொல்லிவிட்டு அழைப்பு துண்டித்து, வீட்டை நோக்கி சென்றாள்.

வீட்டை நெருங்கியவளுக்கு, வாசலில் வரிசையாக நின்றிருந்த கார்களை பார்த்ததும் முகம் பிரகாசமானது. “ஜிலேபி” என்றழைத்தவாறு அவள் வீட்டுக்குள் நுழைய, அவள் நினைத்தது போலவே ஹோல் சோஃபாவில் மாயாவும் ரோஹனும் அமர்ந்திருந்தனர். அரவம் உணர்ந்து திரும்பி பார்த்த மாயா, “போன்டா…” என்றழைத்தவாறு அவளருகில் செல்ல, அவளின் அழைப்பை கூட உணராது மாயாவை ஓடி வந்து அணைத்திருந்தாள் கீர்த்தி.

கீர்த்தியின் தங்கை கீதாவோ தன் அக்காவின் அருகில் வந்து, “அக்கா, நிஜமாவே இவங்க உன் ஃப்ரென்ட் தானா?” என்று குறையாத அதிர்ச்சியில் கேட்க, அவளை புன்னகையுடன் பார்த்த மாயா, கீர்த்தியின் தோளில் கை போட்டு, “பின்ன, நானும் உன் அக்காவும் சேம் கொலேஜ், சேம் டிபார்ட்மென்ட், என்ட் ஹோஸ்டல்ல கூட ஒரே ரூம் தான்” என்று சொல்ல, கீர்த்தியோ அவளை அதிர்ந்து பார்த்தாள்.

அவளுடைய கண்கள் கலங்க, “ஜிலேபி…” என்று தழுதழுத்த குரலில்  அழைத்தவளுக்கு மாயாவின் கண்களில் தெரிந்த குறும்புப் பார்வையே ‘அவளுக்கு எல்லாம் நியாபகம் இருக்கிறது’ என்பதை உணர்த்தியது. மாயாவை தாவி அணைத்து அவள் அழ, ஆதரவாக அவள் முதுகை நீவி விட்டவள், “ஐ அம் சோரி போன்டா, அஞ்சு வருஷம் கழிச்சி உன்னை பார்க்கும் போது எனக்கு எல்லாமே நியாபகம் இருந்துச்சி. ஆனா, வெளிக்காட்ட முடியாத சூழ்நிலைல நான் இருந்தேன்” என்று வேதனையுடன் சொன்னாள்.

அப்போது தான் இவர்கள் அழைத்ததாக கீர்த்தியின் வீட்டுக்குள் நுழைந்த சஞ்சய்க்கும் மாயா சொன்னதை கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. ரோஹனின் புறம் திரும்பியவன், “நிஜமாவாடா?” என்று கேட்க, அவனோ புன்னகையுடன் தலையசைத்தான். “தங்கச்சிமா…” என்று சஞ்சய் ஆரவாரமாக அழைத்ததில், “அண்ணாத்த, உன்னை மறப்பேனா நானு?” என்று மாயாவும் ஆரவாரமாக கேட்க, ரோஹனோ நெற்றியை நீவி விட்டவாறு சிரித்துக் கொண்டான்.

“ரொம்ப நன்றி அக்கா, உங்க ட்ரஸ்ட் மூலமா தான் என்னால படிக்க முடிஞ்சது. இப்போ நான் செகன்ட் இயர் மெடிக்கல் ஸ்டூடன்ட்” என்று கீதா  நன்றியுணர்ச்சியோடு சொல்ல, அப்போது தான் கீர்த்திக்கும் பொறி தட்டியது. அன்று, மாயாவிடம் கீர்த்தி தங்கையின் படிப்பு சம்மந்தமாக வேதனையாக பேசிய அடுத்த கொஞ்ச நாளில் தான் அவளது மொத்த படிப்பு செலவையும் மஹேஷ்வரி ட்ரஸ்ட் ஏற்றுக் கொண்டது.

இப்போது தான் கீர்த்திக்கும் அது மாயாவின் வேலை என்று புரிய, “அப்போ, அன்னைக்கு…” என்று கண்கலங்க அவள் ஏதோ சொல்ல வர, அவளை முறைத்த மாயா, “அடிச்சி மூஞ்சு முகரைய பேத்துருவேன். உன் சிஸ்டர் எனக்கும் சிஸ்டர் தான். இங்க நான் வந்தப்போ என் எல்லா கஷ்டத்துக்கும் ஆறுதலா இருந்தவ நீ,  என்னோட இன்னொரு அம்மா மாதிரி போன்டா” என்று சொல்ல, “இப்போ தான் என் ஜிலேபி ஒரு ஃபோர்ம்க்கு வந்திருக்க போல?” என்று கேலியாக கேட்டாள் கீர்த்தி.

மாயா சிரிக்க, “நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? உரிமையா உன் கூட பழக முடியாம. ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. ஏன்டி அன்னைக்கு என்கிட்ட சொல்லாம கொல்லாம போன? இனி அப்படி பண்ண, நிஜமாவே உன் கூட பேச மாட்டேன்” என்று கீர்த்தி கடிந்துக் கொள்ள, “நல்லா புத்திக்கு உரைக்குற மாதிரி அடிச்சி சொல்லு தங்கச்சி” என்று ரோஹனும் அவன் பங்கிற்கு சொன்னான்.

“சோரி… சோரி… எனக்கும் புரிஞ்சது போன்டா, என்கிட்ட உனக்கு ஒரு விலகல் இருக்கத்தான் செய்தது. ஆனா, என்னால உண்மைய சொல்ல முடியல, அது உங்க உயிருக்கு தான் ஆபத்தா முடிஞ்சிருக்கும்” என்றுவிட்டு மாயா நடந்தது அனைத்தையும் சொல்லி முடிக்க, கீர்த்திக்கு அதிர்ச்சி தாங்கவேயில்லை.

கீர்த்தி அதிர்ந்து போய் இருக்க, அவளின் மனநிலையை மாற்ற எண்ணிய மாயா குறும்பாக, “உன் லவ்வ தருணுகிட்ட சொல்லிட்டியா? அவன் என்ன சொன்னான்? வேணாம்னு சொல்லியிருந்தாலும் ஒன்னும் பிரச்சினை இல்லை, நான் அன்னைக்கு கொலேஜ்ல சொன்ன மாதிரா சூப்பரா, ஹேன்ட்ஸமா உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கேன். மாப்பிள்ளை ஒன் த வேய்…” என்று சொல்ல,

“என்னடி சொல்ற?!” என்று கீர்த்தி அதிர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் போதே, “உள்ள வரலாமா மாமா?” என்ற குரலில் திரும்பியவள், வாசலில் நின்றிருந்தவனை பார்த்து உறைந்தே விட்டாள். “மாப்பிள்ளை வந்துட்டாரு…” என்று மாயா உற்சாகமாக சொல்ல, கீர்த்திக்கு தான் புன்னகையுடன் நின்றிருந்த பாபியை பார்த்த அதிர்ச்சியில் மாயா சொன்னது கூட புத்தியில் ஏறவில்லை.

வாசலில் பாபியும் அவன் தந்தை மார்த்தாண்டமும் நின்றிருக்க, அவர்களை பார்த்த கீர்த்தி, ‘மாப்பிள்ளை வீட்ல வர்ற நேரத்துல இவங்க இங்க என்ன பண்றாங்க?’ என்று நினைத்தவாறு புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, அடுத்தகணம் அவளின் அப்பாவின் அழைப்பில் வாயை பிளந்து விட்டாள் அவள்.

“வாங்க ஐயா… வாங்க மாப்பிள்ளை…” என்று கீர்த்தியின் தந்தை மகிழன் வரவேற்க, “அவன் மட்டும் மாப்பிள்ளை, நான் மட்டும் ஐயாவா? சம்மந்தின்னு கூப்பிடு மகிழ்” என்று சாதாரணமாக சொல்லி சிரித்தவாறு மார்த்தாண்டம் உள்ளே வர, அவரும் தயக்கத்தை விட்டு, “வாங்க சம்மந்தி” என்று சிரித்தவாறு அழைத்தார்.

சோஃபாவில் அமர்ந்த பாபி, கீர்த்தியை குறும்பாக பார்க்க, அவளோ தன்னவனையே அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னமா மருமகளே! எப்படி இருக்க?” என்று மார்த்தாண்டம் கேட்க, கீர்த்தியோ ‘மருமகளா…? யாரு நானா…?!’ என்று அவரை மிரண்டு போய் பார்க்க, அவளின் பார்வையில் முட்டிக் கொண்டு வந்த சிரிப்பை அடக்க படாத பாடுபட்டான் பாபி.

“அம்மாடி, மாப்பிள்ளைக்கும் சம்மந்திக்கும் கோஃபி எடுத்துட்டு வா மா” என்று மகிழன் சொல்ல, அவளோ அப்போதும் அதிர்ச்சியிலிருந்து மீளாது மலங்க மலங்க விழித்துக் கொண்டு நிற்க, மாயாவும் ரோஹனும் சஞ்சய்யும் வாய்விட்டே சிரித்து விட்டனர்.

“அதுக்கு முன்னாடி உங்க பொண்ணு கூட நான் கொஞ்சம் பேசனும் மாமா, வித் யுவர் பர்மிஷன்” என்று பாபி இழுக்க, “இதுல என்ன மாப்பிள்ளை தயக்கம், நீங்க தாராளமா பேசலாம்” என்றவர் கீர்த்தியிடம், “கீர்த்தி, மாப்பிள்ளை அழைச்சிட்டு போ மா” என்று சொல்ல, அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்த பாபி தான், “ஸப்பாஹ்ஹ்…” என்று பெருமூச்சுவிட்டு, அவளின் கையை பிடித்து இழுத்துச் சென்றான்.

அப்போது தான் மாயாவை கவனித்த மார்த்தாண்டம், “மிஸ்.மாயா நீங்க இங்க…? என் பையன் சொல்லும் போது கூட என்னால நம்பவே முடியல, வட் அ ப்ளசன்ட் சப்ரைஸ்” என்று உற்சாகமாக சொல்ல, “க்ளேட் டூ மீட் யூ அங்கிள்” என்று அவருடன் கை குலுக்கியவள், “பிஸ்னெஸ் எல்லாம் எப்படி போகுது?” என்று பேச்சை ஆரம்பிக்க, ரோஹன் தான் ‘இவள…’ என்று பல்லை கடித்தவாறு, இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

வீட்டின் பின் வளாகத்துக்கு பாபி கீர்த்தியை இழுத்துக் கொண்டு வந்திருக்க, அவளோ பயத்தில் கைகளை பிசைந்தவாறு அவனை ஏறெடுத்தும் பார்க்காது, தலை குனிந்து நின்றிருந்தாள். அவனோ பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டவாறு அவளையே அழுத்தமாக பார்த்தபடி நிற்க, “நீங்க என்னை…” என்று கீர்த்தி கேட்டு முடிக்கவில்லை, “ஐ லவ் யூ” என்று பட்டென்று சொன்னான் பாபி.

அதில் திடுக்கிட்டவள் கொஞ்ச நஞ்ச தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “நீங்க தான் வேற ஒரு பொண்ண…” என்று தயக்கமாக நிறுத்த, தன்னவளை நெருங்கி நின்றுக் கொண்டவன், “அட ஆமால்ல! நான் என் ஸ்வீட்டியை லவ் பண்றேன்ல! ஆனா என்னன்னா, என் ஸ்வீட்டி யாருன்னு தெரியாத அளவுக்கு முட்டாள் இல்லை நான். என்கிட்ட காதல சொல்ல உனக்கு இத்தனை நாளா?” என்று கேட்க, கீர்த்தி அதிர்ந்து விட்டாள்.

“அப்போ உங்களுக்கு… எப்படி…?” என்று கீர்த்தி திகைத்து போய் திக்கித்திணறி கேட்க, அவளின் கன்னத்தில் பெருவிரலால் கோலம் போட்டவாவாறு, “பேபி  முதல்தடவை என்கிட்ட நீ காதலிக்கிறதா சொன்னப்போ, நீ என்னை தருன்னு கூப்பிடுறதா சொன்னா. நியாபகம் இருக்கா? அப்போவே தெரிஞ்சிட்டு, ஏன்னா என் ஸ்வீட்டி மட்டும் தான் என்னை அப்படி கூப்பிடுவா. ஆனா, நீயா வந்து உன் காதல சொல்லனும்னு காத்திருந்தேன்.

அன்னைக்கு நீயா வந்து உன் காதல சொன்னதும் அவ்வளவு சந்தோஷப்பட்டேன். ஒவ்வொரு தடவையும் நீ என் பக்கத்துல இருக்கும் போது, என்னை மீறி உன்னை ரசிக்கிற என் கண்கள கட்டுப்படுத்த ரொம்ப சிரமப்படுவேன். எங்க நீயா உன் காதல சொல்றதுக்கு முன்னாடி என் காதல நான் வெளிப்படுத்திருவேனோன்னு, பயத்துல உன்கிட்ட கோபமா நடந்துகிட்டேன்.

நீ இப்போ வரைக்கும் கல்யாணம் செய்யாததுக்கு பேபிய காரணமா சொன்ன. ஆனா, அதுக்கான காரணம் நான்னு எனக்கு மட்டும் தான் தெரியும். என்னையே சின்னவயசுல இருந்து நினைச்சிகிட்டு என்னை மட்டுமே உருகி உருகி காதலிக்கிற ஒருத்தி என் முன்னாடி இருக்குறதை பார்க்கும் போது, அப்படியே பறக்குற மாதிரி இருக்கு. ஐ லவ் யூ ஸ்வீட்டி” என்றவாறு பாபி அவளை அணைத்திருக்க, கீர்த்திக்கு ‘இது கனவா?’ என்று தான் இருந்தது.

‘என் தரு என்னை காதலிக்கிறாரா’ என்று அவள் மனம் கேள்வி கேட்டு, அடுத்து என்ன செய்வதென்று கூட தெரியாது அவள் சந்தோஷத்தில் உறைந்து போய் இருக்க, அவள் நெற்றியில் அவன் கொடுத்த அழுத்தமான முத்தத்திலே கீர்த்தி எனும் சிலைக்கு உயிரே வந்தது.

கூடவே ஒரு சந்தேகமும் அவளுக்கு எழ, அவனை விட்டு இரண்டடி பின்னால் நகர்ந்த கீர்த்தி, “அப்போ, அன்னைக்கு ஸ்வீட்டிய மீட் பண்ண போறேன்னு ஒரு பொண்ணு கூட பேசிக்கிட்டு இருந்தீங்களே, அது யாரு?” என்று கேட்க,  வாய்விட்டு சிரித்தவன் அவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்து, “அது என் ஸ்கூல் ஃப்ரென்ட். அப்போ, உன்கிட்ட விளையாட்டா அப்படி சொன்னேன். ஆனா, மேடம் ஒரு படையவே கிளப்பிட்டு என்னை வேவு பார்க்க வந்துட்டீங்க” என்று கேலியாக சொன்னான்.

அவளோ ஒற்றை கண்ணை சிமிட்டி, நாக்கை கடித்தவாறு வெட்கப்பட்டு தலை குனிந்துக் கொள்ள, அதில் தொலைந்தவன் அவளை மேலும் தன்னுடன் நெருக்கி, “ஸ்வீட்டி…” என்று கிறக்கமாக அழைக்க, அவனின் குரல் மாற்றத்தை உணர்ந்து விலுக்கென நிமிர்ந்து பார்த்த கீர்த்தி, பெக்கபெக்கவென விழித்தாள்.

“ஒன்னே ஒன்னு…” என்று கெஞ்சுதலாக கேட்டவாறு பாபி அவளை நெருங்க, அதன் அர்த்தத்தை புரிந்தவள், “எனக்கு அதெல்லாம் பழக்கம் இல்லைங்க” என்று பயந்தவாறு தலை குனிந்துக் கொண்டாள்.

“ஆமா, நான் மட்டும் தினமும் நாலைஞ்சு பேருக்கு கொடுத்துட்டு தான் வர்றேன், பாரு…” என்று கடுப்பாக சொல்லிவிட்டு மீண்டும் அவள் முகம் நோக்கி அவன் குனிய, அவளோ பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டு , ‘முருகா… முருகா… முருகா…’ என்று புலம்ப, அவளின் வேண்டுதலை கடவுள் ஏற்றுக் கொண்டார் போலும்!

“ஹ்ர்ம்… ஹ்ர்ம்…” என்ற செறுமல் சத்தத்தில் பட்டென்று கண்களை திறந்தவள், அவனை தள்ளிவிட்டு பதட்டமாக நிற்க, “கரடிங்க… கரடிங்க…” என்று திட்டியவாறு பாபி திரும்பி பார்க்க, இங்குமங்கும் வேடிக்கை பார்ப்பது போல் நின்றிருந்தனர் அவர்களின் தோஸ்த்துக்கள்.

“என்ன?” என்று பாபி கடுப்பாக கேட்க, “கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்பு தருணு, நமக்குன்னு ஒரு கலாச்சாரம் இருக்கு…” என்று மாயா பேசிய தோரணையில் அவனை முறைத்தவன் வலது கைகாப்பை ஏற்றிவிட்டவாறு ஒரு அடி முன்னே வைக்க, மாயாவோ குடுகுடுவென வீட்டுக்குள் ஓடி விட்டாள்.

“ஸ்வீட்டி” என்றவாறு பாபி திரும்பி பார்க்க, அங்கு அவனவள் இருந்தால் தானே! எப்போதோ அவள் அங்கிருந்து ஓடி மறைந்திருக்க, “கடவுளே…” என்று பாபி வாய்விட்டு புலம்ப, அவன் தோளில் கை போட்ட ரோஹன், “வாடா மாப்பிள்ளை, இதுக்கெல்லாம் புலம்பிகிட்டு…” என்று சிரித்தவாறு உள்ளே அழைத்துச் சென்றான்.

பாபி கீர்த்தியின் திருமணம் தொடர்பாக பேசி முடிவு செய்யப்பட்டு இன்னும் ஒரு மாதத்திலே அவர்களின் திருமணத்தை நடத்தவென அவர்கள் சொன்ன திருமணத் திகதியை கேட்ட மாயா உற்சாகமாக, “வாவ்! போன்டா, எங்க கல்யாணம் முடிஞ்சி வன் வீக்ல உங்க கல்யாணம் நடக்க போகுது” என்று சொல்ல, நண்பர்கள் மூவருக்குமே இந்த விடயம் புதிது தான்.

“வாட்?! ஜிலேபிக்கு கல்யாணமா? வாவ்! கங்கிராட்ஸ் டி” என்று கீர்த்தி குதூகலிக்க, பாபியும் சஞ்சய்யும், “நிஜமாவா டா?” என்று ரோஹனை கட்டியணைத்தனர். “ஆனா, கல்யாணம் இட்டாலில” என்று மாயா சொன்னதும், கீர்த்தியோ திகைத்து, “என்னடி சொல்ற?” என்று கேடட்டாள்.

“என் அம்மா வாழ்ந்த இடத்துலயே என் கல்யாணம் நடக்கனும்னு நினைச்சேன், அதான்… ஆனா, நோ வொர்ரீஸ்.. இன்னும் இரண்டு வாரத்துல இட்டாலி கிளம்புறோம், எல்லாரும் வர்றதுக்கான ஏற்பாட்டையும் பண்ணியாச்சு” என்று சொன்ன மாயா, மார்த்தாண்டம் மற்றும் மகிழனின் புறம் திரும்பி, “அங்கிள் கல்யாணம் வேற வேற திகதியில நடந்தாலும், ரிசெப்ஷன ஒன்னாவே பண்ணிரலாம். என்ட், என் கல்யாணத்துல எனக்கு நெருக்கமானவங்க என் கூடவே இருக்கனும். அதனால, நீங்களும் இட்டாலி வர்றீங்க” என்று சொன்னாள்.

“எது இட்டாலியா…?! நானா…?!” என்று கீர்த்தி வாயை பிளக்க, “எங்களுக்கு சம்மதம் தான் மாயாமா, ஆனா இப்போதைக்கு இதுங்கள மட்டும் கூட்டிட்டு போயிரு.  இதுங்க உன் கூட வந்ததும் நான்தான் இவங்க பிஸ்னஸ்ஸையும் கவனிச்சிக்கனும். அதுமட்டுமில்ல, கல்யாணம் வேலையும் இருக்குல்ல? என்ட், ரிசெப்ஷன பத்தி நான் மானவ் கூட பேசிக்கிறேன். உன் கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்னாடி நாங்க வர்றோம்” என்று மார்த்தாண்டம் சொன்னார்.

“ஆமா மா, நீ வேணா கீர்த்தியை அழைச்சிட்டு போ, நானும் சின்னவளும் கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்னாடி சம்மந்தி கூட வர்றோம்” என்று மகிழனும் சொல்ல, மாயா புன்னகையுடன் தன்னவனை பார்க்க, ரோஹனோ ஒற்றை கண்ணை சிமிட்டி பறக்கும் முத்தத்தை வழங்கியதில் வெட்கப்பட்டு தலை குனிந்துக் கொண்டாள் அவள்.

பாபியை வாழ்த்த அவன் புறம் திரும்பிய மாயா, “தருணு” உற்சாகமாக அழைக்க, அவனோ அவள் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நடந்ததை ரோஹன் பாபியிடம் சொன்னதிலிருந்தே தன் பேபியின் மேல் கொலைவெறியில் இருக்கிறான் அவன். அவனோ முகத்தை கோபமாக திருப்பிக் கொள்ள, அதில் முகம் வாடியவள் அவனை எப்படி சமாதானப்படுத்துவது என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள்.

அடுத்த இரு வாரமும் இட்டாலி செல்வதற்கான ஏற்பாடுகளில் பரபரப்பாக நகர, ஆண்கள் மூவருமே இந்த இரு வாரத்திற்கான அலுவலக  வேலைகளை முடிப்பதில் மும்முரமாக இருந்தனர். இட்டாலி செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அலுவலக பொறுப்பை மார்த்தாண்டத்திடம் ஒப்படைத்தவர்கள் அப்போது தான் “ஹப்பாடா…!” என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இரு வாரங்களாக குவிந்திருந்த அலுவலக வேலையால் தன்னவளுடன் அதிக நேரம் பேச முடியாது தவித்த ரோஹன், ‘எப்போதடா இட்டாலி செல்வோம்’ என்று காத்திருக்க, மாயா தான் தன் மாமியார் வீட்டில் வாய் ஓயாமல் பேசியே எல்லோரையும் ஒருவழிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

மாயாவின் செல்வவாக்கில் முதலில் அவளுடன் பேச தயங்கியவர்கள் பின் அவள் சாதாரணமாக பழகுவதில் வியந்து தான் போனர். இதில் ரவீந்திரன் தான் தன் மகளை நேருக்கு நேர் பார்க்க முடியாது ஒருவித தவிப்பில் இருக்க, இவ்வாறு இட்டாலி செல்வதற்கான நாளும் வந்தது.

மாயாவின் சொந்த விமானத்தில் அமர்ந்திருந்த கீர்த்தி கண்களை அங்குமிங்கும் சுழலவிட்டு பார்த்தவாறு, “ஜிலேபி என்னடி இந்த ஃப்ளைட் ரொம்ப வித்தியாசமா இருக்கு. அதுவும் நம்ம குடும்பம் மட்டும் தான் இருக்கு” என்று புரியாது கேட்க, “இது நமக்கு சொந்தமான ப்ரைவேட் ஜெட் போன்டா” என்று மாயா சாதரணமாக சொன்னாள்.

“என்னடி? ஏதோ ஆட்டோ, கார் சொந்தமா வச்சிருக்க மாதிரி அசால்ட்டா சொல்ற” என்று கீர்த்தி திகைத்து போய் கேட்க,  “இது உனக்கும் சொந்தமானது தான், நீயும் யூஸ் பண்ணிக்கலாம்” என்று மாயா அடுத்து சொன்னதில், “என்னது…? வேணாம் வேணாம்… எனக்கு என் ஸ்கூட்டியே போதும்” என்று கீர்த்தி சொன்ன பாவனையில் வாய்விட்டு சிரித்தவள், தன் நண்பியை அணைத்துக்கொள்ள, அவளும் புன்னகையுடன் அணைத்துக் கொண்டாள்.

இதை வயிற்றில் புகை கிளம்ப ரோஹனும், பாபியும் உதட்டை பிதுக்கியவாறு பார்த்துக் கொண்டிருக்க, இருவரையும் முறைத்த சஞ்சய், “டேய்! நானும் இரண்டு வாரமா கேட்டுக்கிட்டு இருக்கேன், என் ஆளு என்ன ஆனான்னு… தங்கச்சிமாவும் எதுவும் சொல்ல மாட்டேங்குறா, நீங்களும் பதில் சொல்ல மாட்டேங்குறீங்க. என்னடா நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? எங்கடா என் ஆளு?” என்று கடுப்பாக கேட்க, அவனின் நண்பர்கள் அவனை ஒரு பொருட்டாக மதித்தால் தானே!

ரோஹனோ தன்னவளையே பார்த்திருக்க, ஏதோ ஒரு உந்துதலில் அவனின் புறம் திரும்பியவள் கண்களாலே, ‘என்ன’ என்று கேட்க, அவனும் ‘ஐ மிஸ் யூ’ என்று கண்களாலே உணர்த்தினான். தன்னவனின் மனதை படித்த மாயா சுற்றி முற்றி பார்த்துவிட்டு பறக்கும் முத்தமொன்றை வழங்க, அவளின் முத்தத்தை பிடித்து தன் இதழுடன் விரலை ஒத்தி எடுத்தவன், “லவ் யூ” என்று காதலாக முணுமுணுக்க, வெட்கப்பட்டு கீர்த்தியின் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டாள் மாயா.

இருவரையும் மாறி மாறி பார்த்த பாபி, ‘இதை ஏன் நம்ம ஆளுகிட்ட நாம ட்ரை பண்ண கூடாது’ என்று யோசித்தவாறு கீர்த்தியை குறுகுறுவென பார்க்க, அவளும் எதேர்ச்சையாக அவன் புறம் திரும்பி பார்த்தாள். தன்னவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதில் குழம்பி ‘என்ன’ என்று கண்களாலே அவள் கேட்க, சுற்றி முற்றி பார்த்த பாபி பறக்கும் முத்தமொன்றை வழங்கினான்.

அதில் விழி பிதுங்கி விடுவது போல் விழிவிரித்தவள் பயந்து பட்டென்று தலையை குனிந்துக் கொள்ள, பாபிக்கு தான் ‘அய்யோ’ என்றிருந்தது. இந்த இளைஞர் பட்டாளம் இவ்வாறு சேட்டைகள் செய்துக் கொண்டு செல்ல, ரவீந்திரனோ தன் மகளையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தார். அதை ரோஹனும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

சில மணி நேரங்கள் கழித்து எல்லொரும் இட்டாலிக்கு வந்து சேர, காரில் ஏறியதும் வண்டி வீட்டை நோக்கி பறந்தது. கீர்த்தியோ, “வாவ்! வெனிஸ் சூப்பரா இருக்கு ஜிலேபி” என்று உற்சாகமாக சொல்ல, மாயாவுக்கோ தன் சொந்தங்கள் தன் வீட்டுக்கு வருவதில் சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை.

சில நிமிட பயணத்திற்கு பிறகு அந்த பெரிய வாயிற்கதவு திறக்க, மானவ்வோ மாயாவின் வீட்டின் பிரம்மாண்டத்தை பார்த்து, “கண்ணா, மருமகள் உன் கூட பெங்ளூர்ல படிச்சான்னு நீ சும்மா கதை தானே விட்ட? உண்மைய சொல்லு கண்ணா, நான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன்” என்று சொல்ல, “டாட்…” என்று பல்லை கடித்த ரோஹன், கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டான்.

காரிலிருந்து இறங்கியதும், “ஜிலேபி, வீட்டுக்கு கூட்டிட்டு வர்றேன்னு சொல்லிட்டு, உன் பேளஸ்க்கு கூட்டிட்டு வந்திருக்க?” என்று கீர்த்தி சிரிப்புடன் கேட்க, அவளின் தோளில் கை போட்ட மாயா, “என் வீடு இல்லை, நம்ம பேளஸ் போன்டா” என்றவாறு உள்ளே அழைத்துச் சென்றாள்.

எல்லோரையும் உள்ளே அழைத்து, சோஃபாவில் அமர வைத்த மாயா வேலையாட்களிடம் கண்ணை காட்ட, அடுத்தநொடி அவர்களும் குளிர்பானங்களை கொண்டு வந்து கொடுக்க, அதை தானே வாங்கி புன்னகையுடன் பரிமாறினாள் மாயா.

“என்னமா நீ? உனக்கும் ரொம்ப களைப்பா இருக்கும்ல, மொதல்ல நீ என் பக்கத்துல இரு” என்று லலிதா அக்கறையாக சொல்ல, “தட்ஸ் ஓகே அத்தை” என்றவள் ரவீந்திரனை தேட, அவரோ அங்கு சுவற்றில் மாட்டியிருந்த இரண்டு ஆளுயுர படங்களுக்கு முன் நின்றுக் கொண்டிருந்தார்.

அவரை புரியாது பார்த்த மாயா அவரருகில் சென்று, “அங்கிள்” என்றழைக்க, சட்டென திரும்பிய ரவீந்திரனோ அவள் தன்னை அழைத்த விதத்தில் சற்று மனம் வாடித்தான் போனார். தன்னை கஷ்டப்பட்டு சமன் செய்தவர், “மிஸ்டர்.ஆதி நாராயணண், எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய முன்மாதிரியா இருந்தவரு” என்று அவளின் தாத்தாவின் புகைப்படத்தை காட்டி சொல்ல,

“ஆமா அங்கிள்… என்ட், இது என் அம்மா மஹேஷ்வரி, உங்களுக்கு தெரியாம இருக்காதுன்னு நினைக்கிறேன்” என்று மாயா சொன்ன தோரணையில், ரவீந்திரனோ அவளை கூர்மையாக பார்த்தார்.

“ஐ மீன், ஐரா கம்பனீஸ் ஓட நிர்வாகியா இவங்கள பத்தி யாருக்கும் தெரியாம இருக்காது” என்று மாயா சொல்ல, சட்டென்று தன் முக பாவனைனை மாற்றியவர், “ஆமா மா” என்று சொல்லி, பின் மாயாவை வாஞ்சையாக பார்த்தவாறு, “உருவத்துல மட்டுமில்ல குணத்துல கூட அப்படியே நீ உன் அம்மா மாதிரியே இருக்க” என்று சொன்னார்.

அதில் யோசனையாக புருவத்தை நெறித்தவள், “என் அம்மாவோட குணத்தை பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கூர்மையாக பார்வையுடன் அழுத்தமாக கேட்க, அவர் தான் என்ன பதில் சொல்வதென்று தெரியாது திணறிப் போனார்.

காதல்போதை💙
********************************

-ZAKI💙

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!