காதல்போதை 44💙

காதல்போதை 44💙

மாயா ரவீந்திரனை கூர்மையாக பார்க்க, அவளின் பார்வையில் சற்று திணறியவர், “அது வந்து… அது…” என்று தடுமாற, “மாமா” என்றழைத்தவாறு வந்தான் ரோஹன்.

“மாம்ஸ், அப்பா கூப்பிடுறாரு. அவர் கூட பேசிட்டு, மொதல்ல போய் ரெஸ்ட் எடுங்க” என்று ரோஹன் சொல்ல, மாயாவை வேதனை நிறைந்த ஒரு பார்வை பார்த்தவாறு அங்கிருந்து நகர்ந்தார் அவர்.

“அம்மு, இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க? ரூம்க்கு போய் ரெஸ்ட் எடு, அப்றம் பேசிக்கலாம்” என்று அவன் அதட்டவும், பூம்பூம் மாடு போல் தலையாட்டியவள் அங்கிருந்த வேலையாட்களிடம், “எல்லாரையும் அவங்களுக்கானை ரூம்க்கு அழைச்சிட்டு போங்க, யாருக்கும் எந்த குறையும் இருக்க கூடாது. என்ட்…” என்று சில இந்தியன் உணவுகளை சமைக்க சொல்லிவிட்டு, ஏதோ யோசனையிலே தன் அறையை நோக்கி சென்றாள்.

அறைக்குள் நுழைந்தவளோ தனக்கு நன்கு பழக்கப்பட்ட வாசனைத்திரவியத்தின் நறுமணத்தை உணர்ந்து, மெல்லிதாக புன்னகைத்தவாறு, மார்புக்கு குறுக்கே கைகளை கட்டி, “என் ரூம்ல என்ன பண்ணிகிட்டு இருக்க பேபி?” என்று கேட்டுக்கொண்டே திரும்ப, கதவில் சாய்ந்து நின்றிருந்த ரோஹன், தன்னவள் தன்னை பார்த்ததும் அவளை நெருங்கி தன்னவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தான்.

அவள் நெற்றியோடு நெற்றி முட்டி இதழொடு இதழ் பதிக்க, அவளும் தன்னவனின் முத்தத்தை கண்களை மூடி அனுபவித்தாள். அவளிடமிருந்து இதழ் பிரித்து, அவளின் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டவன், “நீ என் பக்கத்துல தான் இருக்க. ஆனாலும், உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் அம்மு. உன் கூட இப்படியே இருக்கனும்னு தோணுது” என்று காதல் பொங்க சொல்ல, சற்று எம்பி அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அவனின் கன்னத்தில் அழுந்த முத்தத்தை பதித்தாள் மாயா.

அவனின் தோளில் சாய்ந்த வண்ணம், “தேங்க்ஸ் பேபி” என்று நெகிழ்ந்த குரலில் மாயா சொல்ல, குனிந்து தன்னவளை கேள்வியாக நோக்கினான் ரோஹன். “எப்போவுமே யாராலயும் என்னை புரிஞ்சிக்க முடியாதுன்னு நினைச்சிகிட்டே இருப்பேன். ஆனா, நான் ஒரு வார்த்தை கூட சொல்லாம என் மனசை படிக்க உன்னால மட்டும் தான் முடியும் ரூஹி. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் வீட்ல இத்தனை பேரு, எல்லாரும் எனக்கு சொந்தமானவங்க. கனவு மாதிரி இருக்கு” என்று கண்கலங்க சொன்னாள் அவள்.

“ஐ லவ் யூ டெவில்” என்று புன்னகையுடன் ரோஹன் சொல்ல, “நான் உனக்கு டெவிலா?” என்று பொய்யான முறைப்புடன் கேட்டவள் பின் சிரித்துவிட்டு, “லவ் யூ டூ பேபி” என்று காதலாக சொன்னாள்.

“ரொம்ப தூரம் பயணம் பண்ணி வந்திருக்கோம், உனக்கு ரொம்ப அசதியாக இருக்கும். அதனால…” என்று குறும்பாக சொன்னவாறு ரோஹன் அவள் முகம் நோக்கி குனிய, தலையை பின்னால் சாய்த்துக் கொண்டவள், “சோ வாட் பேபி? போ, போய் உன் ரூம்ல ரெஸ்ட் எடு” என்று தன்னவனை ஒரு மார்கமாக பார்த்தவாறு சொன்னாள்.

அவளை முறைத்த ரோஹன், “அம்மு மை லவ், அப்போ இதுக்கு பெயர் என்ன?” என்று அவளின் அறையை கண்களால் சுட்டி காட்டி கேட்க, அவன் சொல்ல வருவதன் அர்த்தத்தை புரிந்துக் கொண்டவள், “க்கும்… ரொம்ப தான். இப்போ எல்லாம் நீ ரொம்ப பேட் போய் ஆகிட்ட ரூஹி” என்று திட்ட, அதில் முகத்தை சுருக்கிக் கொண்டு அவளிடமிருந்து அவன் விலக போக, அவனின் கோலரை பிடித்து இழுத்து தன்னவளின் இதழில் மாயா அழுந்த முத்தத்தை பதிக்கவும், இன்பமாய் அதிர்ந்தான் அவன்.

அவளை ரசனையாக பார்த்தவன், “இப்போ தான் நான் போக வேண்டிய நேரம் வந்தாச்சுன்னு நினைக்கிறேன்” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல, “உன்னெல்லாம் வச்சிகிட்டு…” என்று பல்லைகடித்த சொன்னவாறு அவள் விலக போக, அவளை இழுத்து அவளின் கன்னத்தை கடித்தவிட்டு ரோஹன் அங்கிருந்து ஓடி இருக்க, ‘ஆஆ…’ என்று அலறியவள், “ரூஹி, உன்னை…” என்று கத்தியவாறு அவனை துரத்தி சென்றாள்.

அடுத்தநாள்,

“என்னது…? என் ஆளு போலிஸாஆஆ…?” என்று அந்த ஹோலே அதிரும் வண்ணம் சஞ்சய் கத்த, அவன் முன்னே மாயாவும், ரோஹனும் அடக்கப்பட்ட சிரிப்புடன் நின்றிருந்தனர்.

“ஓஹோ! அந்த அக்கா போலிஸா…?” என்று கேட்ட கீர்த்தி, சஞ்சய்யை நோக்கி, “அப்போ, நீங்க…” என்று எதையோ நினைத்து, சொல்லி, கிளுக்கி சிரிக்க, “அந்த பொண்ணு விரைப்பா இருக்கும் போதே எனக்கு டவுட்டு வந்திச்சு. ஆனா, உன் செலக்ஷன் சூப்பர் பங்கு” என்று பாபியும் அவன் பங்கிற்கு வார, சஞ்சய்க்கு தான் ‘அய்யோ’ என்றிருந்தது.

‘ஏன் இந்த வெறி’ என்ற ரீதியில் சஞ்சய் தன் தங்கச்சிமாவை ஒரு பார்வை பார்க்க, “நான் தான் சொன்னேனே, ‘ஷீ இஸ் டேன்ஜரஸ்’னு… நீ தான் கேக்கல. என்ட், உனக்கு ஒன்னு நியாபகம் இருக்கா அண்ணாத்த?  ஒன்ஸ் அ உபொன் அ டைம், நீ ப்ரேக் அப் ஆகி சோகமாக இருந்தப்போ, வெளியூர் பொண்ணா பார்த்து கரெக்ட் பண்ணி உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்குறேன்னு நான் சபதம் போட்டேன். ஹப்பாடா! இப்போ தான் நிம்மதியா இருக்கு” என்று அசால்ட்டாக மாயா சொல்ல, ரோஹனோ வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான்.

சஞ்சய் ஏதோ பேச வர, “எல்லாரும் எப்படி இருக்கீங்க?” என்ற குரலில் சட்டென திரும்பி பார்த்தவன், தன் எதிரே நின்றிருந்த அலைஸ்ஸை பார்த்துவிட்டு, ‘யார்ரா அது’ என்று அவளை தாண்டி சுற்றி முற்றி தேட, அலைஸ்ஸும் சுற்றி முற்றி பார்த்தவாறு, “யாரை தேடுறீங்க மிஸ்டர்.சஞ்சய்?” என்று கேட்க, அவனுக்கு மயக்கம் வராத குறை தான்.

அலைஸ் தமிழை நன்கு அழுத்தம், திருத்தமாகவே பேச, அவனோ அவளை மிரண்டு பார்த்துவிட்டு மாயாவை தான் அதிர்ந்து நோக்கினான். “தமிழ் நல்லாவே பேசுவா அண்ணாத்த” என்று மாயா சொல்லி சிரிக்க, பக்கென்றானது சஞ்சய்க்கு. அவளிடம் கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினான்?

“சிக்கிடான்யா சிவனான்டி” என்று சொல்லி பாயியும், கீர்த்தியும் சிரிக்க, ‘அய்யய்யோ! மாட்டிக்கிட்டோமே…’ என்ற நினைத்தவாறு பெக்க பெக்கவென விழித்துக் கொண்டு நின்றிருந்தான் சஞ்சய். அலைஸ்கு கூட அவனின் முகபாவனைகளை பார்த்து ஒருவித சுவாரஸ்யம் தோன்றியது.

மாயாவோ கண்களால் சஞ்சய்யிடம் பேச சொல்லி சைகையில் சொல்ல, கண்களை அழுந்த மூடி திறந்தவள், “சஞ்சய் நான் உங்க கூட தனியா பேசனும்” என்று சொல்லிவிட்டு முன்னே நடக்க, சஞ்சய்யோ முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு தன் நண்பர்களை நோக்கினான்.

நால்வரும் ஒருசேர பெருவிரலை உயர்த்திக் காட்டி, ‘ஹிஹிஹி…’ என்று இழித்து வைக்க, நால்வரையும் மூக்குவிடைக்க முறைத்தவன், அலைஸ்ஸின் பின்னால் விறுவிறுவென சென்றான். தோட்டத்தில் அலைஸ் சஞ்சய்யை அழுத்தமாக பார்த்தவாறு நின்றிருக்க, “அது வந்து… நான்…” என்று  ‘எப்படி ஆரம்பிப்பது’ என்று தெரியாமல் அவன் தடுமாற, அவனை குறிக்கிட்டு பேச ஆரம்பித்தாள் அலைஸ்.

“மிஸ்டர்.சஞ்சய், நான் மொதல்ல பேச வேண்டியதை பேசிக்கிறேன். இட்டாலி சீக்ரெட் இன்வெஸ்டிகேஷன் டிபார்ட்மென்ட்ல  ஹையர் ஆஃபீஸர் ஆ இருக்கேன். என்ட், எனக்கு கல்யாணம் ஆகிறுச்சி” என்று சொல்ல, “வாட்?!” என்று அதிர்ந்து விட்டான் சஞ்சய்.

“பட், அவர் இப்போ உயிரோட இல்லை. அவரும் என் டிபார்ட்மென்ட் தான். ஒரு கேஸ் சம்மந்தமா இன்வெஸ்டிகேஷன் பண்ணப்போ, அவரை கொன்னுட்டாங்க. அதுவும் அந்த அக்வா டொஃபேனா விஷத்தை வச்சி கொன்னுட்டாங்க. ஆரம்பத்துல எதையுமே மறக்க முடியல, ரொம்ப டிப்ரெஷன்ல இருந்தேன். பட், மாயா என் லைஃப்ல திரும்ப வந்ததும் என்னை அதுல இருந்து முடிஞ்ச வரைக்கும் மீட்டெடுத்தா.

அதுக்கப்றம் உங்கள சந்திச்சேன். நீங்க என் கூட பழகுறதுலயும், உங்க பார்வையிலும் ஏதோ வித்தியாசம் தெரிஞ்சது. மொதல்ல கோபம் வந்திச்சு தான் அப்றம், மாயா உங்களை பத்தி சொன்னதும் உங்க மேல என்னை அறியாம ஒரு ஈர்ப்பு வந்திச்சுன்னு கூட சொல்லலாம். நீங்க என்கிட்ட பேசினது உண்மையான்னு எனக்கு தெரியல. ஆனா, நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறேன்.

என்னோட கடந்த காலம் உங்களுக்கு பிரச்சினையா கூட இருக்கலாம். உங்க பதில் எதுவா இருந்தாலும் ஐ வில் அக்ஸெப்ட். என்ட், எனக்கு இப்போ உங்க மேல காதலான்னு தெரியல. பட், கல்யாணத்துக்கு அப்றம் காதல் வரும்னு நம்பிக்கை இருக்கு. நீங்க யோசிச்சு உங்க பதில சொல்லுங்க, ஐ வில் வெயிட்” என்றுவிட்டு அலைஸ் அங்கிருந்து செல்ல, சஞ்சய்யோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“அண்ணாத்த” என்ற மாயாவின் குரலில் நிகழ்காலத்திற்கு வந்தவன் திரும்பி அவளை அமைதியாக பார்க்க, “அலைஸ் எல்லாமே சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன். நிறைய பேரு வெளிநாட்டு கலாச்சாரம் இப்படி தான்னு ஒரு எண்ணத்துல இருப்பாங்க. நிலையில்லாத காதல், நிலையில்லாத வாழ்க்கை அப்படின்னு… ஆனா, எல்லாருமே அப்படிதான்னு அர்த்தமாகாது. இங்க ஒருத்தருக்கு ஒருத்தர்னு வாழ்றவங்களும் இருக்காங்க. அப்படிபட்ட ஒருத்தி தான் அலைஸ்.

பொறந்து வளர்ந்தது எல்லாமே இங்க தான்னு இருந்தாலும், குணத்துல அப்படியே நம்மள மாதிரி. தமிழ் மேல இருக்குற பற்றுல என்கிட்ட தமிழ் பேச கத்துக்கிட்டா. மைக்கல் இறந்தது எனக்கு தெரியும் போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. அவள அதுலயிருந்து மீட்டெடுக்க ரொம்ப சிரமப்பட்டேன். இப்போ தான், அலளாகவே அவளுக்கு இன்னொரு வாழ்க்கைய அமைச்சிக்க நினைக்கிறா. நிஜமாவே அவ ரொம்ப நல்லவ அண்ணாத்த, இதுக்கப்றம் உங்க முடிவு”  என்றுவிட்டு நகர்ந்தாள் மாயா.

இங்கு, பாபியோ கீர்த்தியையே காதலாக பார்த்தவாறு நின்றிருக்க, அவளோ தயக்கமாக அவனை நிமிர்ந்து பார்த்ததும் தான் தாமதம், ஒற்றை கண்ணை சிமிட்டி பாபி சிரித்ததில், பயந்து அப்படியே திரும்பி அறைக்குள் ஓட போனாள் கீர்த்தி. அதில் கடுப்பானவன், விறுவிறுவென அவளின் முன்னே சென்று வழிமறித்து நின்றவாறு தன்னவளை முறைக்க, அவளோ குனிந்த தலை நிமிரவே இல்லை.

“என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு?” என்று காட்டமாக பாபி கேட்க, எதுவும் பேசாது அவள் அமைதியாக இருந்ததில் மேலும் வெகுண்டவன், அவள் முன் சொடக்கிட்டு, “நான் பார்க்க எப்படி இருக்கேன்? அழகா இருக்கேனா?” என்று கேட்டான்.

அவன் கேட்டதில் சட்டென நிமிர்ந்தவள், அவன் தன்னை முறைப்பதை பார்த்துவிட்டு தயக்கமாக, “அழகா இருக்கீங்க” என்று மெல்லிய குரலில் சொல்ல, அதில் அவனின் கோபம் கொஞ்சம் தணிந்தது.

“அப்போ, ஏன்டி ஏதோ பன்னிய பார்த்த மாதிரி என்னை பார்த்ததாலே பத்தடி தள்ளி ஓடுறா?” என்று பாபி கோபமாக கேட்க, “அது… எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லைங்க” என்று மறுபடியும் அதே வசனத்தை கீர்த்தி சொல்ல, ‘ஆண்டவா! இவள கட்டிக்கிட்டு, குடும்பம் நடத்தி… விளங்கிறும்’ என்று வாய்விட்டே அவன் புலம்பவும், ‘க்ளுக்’ என சிரித்துவிட்டாள் அவனவள்.

அதில் தன்னை தொலைத்தவன் அவளையே ரசனையாக பார்த்தவாறு நெருங்க, அவனின் நெருக்கத்தில் மருண்ட பார்வையுடன் கீர்த்தி அவனை நோக்க, அதில் இன்னும் இன்னும் தன்னை இழந்தான் அவளின் தரு.

அவளையே காதலாக பார்த்தவாறு இடம், பொருள் பாராது, “கிஸ் மீ” என்று கிறக்கமாக பாபி சொல்ல, அதில் அவளோ ‘ஆஆ’ என தன்னவனையே வாயை பிளந்துக் கொண்டு பார்த்தாள். அவளின் பாவனையில் சிரித்த பாபி, சுற்றி முற்றி ‘யாரும் தங்களை கவனிக்கவில்லை’ என்பதை உறுதி செய்து, மின்னல் வேகத்தில் அவளின் இடை பற்றி இழுத்து, இதழில் அழுந்த முத்தமொன்றை கொடுத்துவிட்டு விலகிக்கொள்ள, அதிர்ச்சியில் உறைந்தே விட்டாள் அவள்.

“லவ் யூ ஸ்வீட்டி” என்று ஒற்றை கண்ணை சிமிட்டி சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்று ரோஹனின் அருகில் அவன் நின்றுக் கொள்ள, ரோஹனோ தீவிரமாக அங்குமிங்கும் கண்களை சுழலவிட்டு எதையோ தேடினான்.

அவனை புரியாது பார்த்த பாபி, “என்னடா தேடுற?” என்று கேட்க, “அது ஒன்னுஇல்ல மச்சி, இந்த வீடு பிக்பாஸ் வீட்டை விட ரொம்ப மோசம்டா. எல்லா இடத்துலயும் கேமரா ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க” என்று ரோஹன் சொன்னதில், பாபிக்கு கன்னம் லேசாக சிவக்க வெட்கத்தில் ஒற்றை கண்ணை சிமிட்டி, முகத்தை மூடிக் கொண்டான்.

சஞ்சய்யிடம் பேசிவிட்டு உள்ளே வந்த மாயாவோ, கீர்த்தியின் அதிர்ந்த முகத்தையும், பாபியின் வெட்கத்தில் சிவந்த முகத்தையும் மாறி மாறி ஒரு மார்கமாக பார்த்து வைத்தாள். பாபியை நெருங்கி, “தருணு” என்று அவள் அழைக்க, நிமிர்ந்து அவளை முறைத்து பார்த்தவன், எதுவும் பேசாது அவளைக் கடந்து வெளியே செல்ல எத்தனித்தான்.

ஓடிச் சென்று பாபியின் கையை பிடித்துக் கொண்ட மாயா, “சோரிடா, என் கூட பேசாம இருக்காத தருணு, ப்ளீஸ்…” என்று கெஞ்ச, அவனோ அவளின் கையை உதறிவிட்டு சென்றிருக்க, மாயாவோ ரோஹனை உதட்டை பிதுக்கிக் கொண்டு பார்த்தாள்.

தன்னவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டவன், “அவன்கிட்ட சொல்லாம போயிட்டன்னு அவனுக்கு வருத்தம் அம்மு. என்ட், உனக்கு நியாபகம் இருந்தும் அவன தெரியாத மாதிரி நடந்துக்கிட்டன்னு கோபம். அதான், உன் கூட பேசாம வீராப்பா திரிஞ்சிக்கிட்டு இருக்கான். சீக்கிரம் புரிஞ்சிப்பான்” என்று சொல்ல, அவன் மார்பில் சோகமாக சாய்ந்துக் கொண்டாள் அவள்.

அடுத்து வந்த நாட்கள் கல்யாணத்துக்கான ஏற்பாடுகளில் வேகமாக நகர, பாபி தான் மாயாவிடம் பேசவே இல்லை. அலைஸ்ஸோ சர்வேந்திரனின் விசாரனை செய்வதிலும், சில கேஸ் விஷயமாக பரபரப்பாக இருந்ததால் அன்று கடைசியாக பேசிவிட்டு வந்த பிறகு சஞ்சய்யை பார்க்கவேயில்லை.

ரோஹனோ தன்னவளின் முந்தானையை பிடித்துக் கொண்டே திரிய, பாபி தான் கீர்த்தியின் வெட்கத்தில் அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தான். தன் மகள் தன்னுடன் சாதாரணமாக பேசுவதே ரவீந்திரனுக்கு போதுமாக இருக்க, இவ்வாறு நாட்கள் நகர்ந்து ஐந்து நாட்களில் நிச்சயதார்த்தம், அதற்கடுத்த நாள் கல்யாணம் என்ற விதத்தில் வந்து நின்றது.

கல்யாண ஏற்பாடுகளில் மாயாவின் குட்டி அரண்மனை கலை கட்ட, ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்ற வண்ணம் இருந்தன. நிச்சயதார்த்தம், கல்யாணத்திற்கான ஆடைகள் தொடக்கம் எல்லாமே வீட்டிற்கே வரவழைக்கப்பட்டிருக்க, லலிதாவோ ‘தன் மருமகளுக்கு தானே தெரிவு செய்கிறேன்’ பேர்வழி என்று செய்த அலப்பறையில், மாயா தான் திணறிவிட்டாள்.

“இந்த புடவை உன் நிறத்துக்கு ரொம்ப டல்லா இருக்குமா” என்றவாறு எடுத்த முப்பதாவது புடவையையும் லலிதா ‘வேண்டாம்’ என்று மறுக்க, மாயாவுக்கு தான் ‘அய்யோ’ என்றிருந்தது. அவளின் முகபாவனையை பார்த்து முட்டிக் கொண்டு வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டனர் அவளின் நண்பர்கள்.

இவ்வாறு பெண்கள் ஆடை தெரிவு செய்வதில் மும்முரமாக இருக்க, ரோஹனோ தன்னவளையே பார்த்திருக்க, மானவ்வோ தம் மனைவியின் கருத்துக்களை கேட்டுக் கொண்டும், மடிக்கணினியில் அலுவலக வேலையை பார்த்த வண்ணம் இருந்தார்.

“ஹாய் மாயூ” என்றவாறு அலைஸ் வர,  பாபியுடன் பேசிக் கொண்டிருந்த சஞ்சய்யோ அவளின் குரலில் சட்டென நிமிர்ந்து பார்க்க, அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மாயாவின் அருகில் அமர்ந்துக் கொண்டாள் அலைஸ்.

“சரியான நேரத்துக்கு தான் வந்திருக்க அலைஸ், உனக்கு பிடிச்சதை செலக்ட் பண்ணு” என்று மாயா உற்சாகமாக சொல்ல, அந்த புடவைகளை விழிவிரித்து பார்த்தவள், “நோ… நோ… எனக்கு இதேல்லாம் வேணாம், எனக்கு கம்ஃபோர்டபிள் ஆ இருக்காது” என்று மறுத்தாள்.

அலைஸ்ஸின் காதருக்கே குனிந்த கீர்த்தி, “என்ன அக்கா இப்படி சொல்றீங்க? சஞ்சு அண்ணாவ கல்யாணம் பண்ணும் போது, இதெல்லாம் பழகனும் தானே?” என்று கேட்க, “ஓ…!” என்றவாறு சஞ்சய்யை ஒரு பார்வை பார்த்தவள், “அப்போ, பார்ட்டி ஃப்ரொக் போட்டுகிட்டு உங்க அண்ணாவ கல்யாணம் பண்ண முடியாதா?” என்று கேட்டதில், சத்தம் போட்டு சிரித்து விட்டாள் கீர்த்தி.

“ஜிலேபி, நீயும் இதுவரைக்கும் புடவை  கட்டினதே இல்லல்ல?” என்று கீர்த்தி கேட்டது அங்கிருந்த ரோஹனின் காதில் விழ, மாயாவை குறும்பாக பார்த்தவன், “அட! ஆமா அம்மு, எதுக்கும் கல்யாணத்துக்கு சாரி கட்டுறதுக்கு முன்னாடி ஒரு ட்ரயல் பார்க்குறது நல்லது தானே? போ செல்லக்குட்டி, சமத்தா போய் சாரி கட்டிட்டு வா” என்று சொல்ல, மாயாவோ, “முடியவே முடியாது” என்று  மறுக்க, லலிதா தான் வெளிப்படையாக தலையிலடித்துக் கொண்டார்.

அந்நேரம் பாபிக்கு ஒரு அழைப்பு வர, அழைப்பை ஏற்றவாறு அவன் வெளியே செல்ல, அதை கவனித்த மாயா, “வன் மினிட்” என்றவாறு குடுகுடுவென்று அவன் பின்னாலே ஓடினாள். தோட்டத்தில் அங்கிருந்த பூக்களை ரசித்தவாறு பேசி முடித்து,அழைப்பை துண்டித்துவாறு திரும்பியவனின் புன்னகை தன் முன் நின்றிருந்தவளை பார்த்ததும் சுருங்கிப் போனது.

இறுகிய முகத்துடன் மாயாவை கண்டுக்காதவாறு பாபி செல்ல போக, “தருணு” என்றழைத்தவாறு மாயா அவனை நெருங்கவும், “ஷட் அப்! என்னை அப்படி கூப்பிடாத, எனக்கு பிடிக்காது” என்று கத்தினான் பாபி.
அவன் சொன்ன விதத்தால் மாயாவுக்கு முதன்முதலில் தான் அவனை இவ்வாறு அழைத்த போது அவன் சொன்ன இதே பதில் நினைவு வர, வாய்விட்டு சிரித்து விட்டாள்.

அவளின் சிரிப்பை பார்த்து மேலும் கடுப்பானவன், “ச்சே…” என்று சலித்தவாறு நகர, “அய்யோ…!” என்று வெளிப்படையாக நெற்றியில் அடித்துக் கொண்ட மாயா, “தருணு, அதான் சோரி கேக்குறேன்ல? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என் கூட பேசு ப்ளீஸ்…” என்று கெஞ்சினாள்.

“அவளோட சிடுவேஷன புரிஞ்சிக்கோங்க தரு, அவளுக்கு வேற வழி தெரியல. ப்ளீஸ் அவ கூட பேசுங்க” என்ற மெல்லிய குரல் வந்த திசையை பாபி நோக்க, அங்கே கைகளை பிசைந்தவாறு தலை குனிந்துக் கொண்டு நின்றிருந்தாள் கீர்த்தி. ரோஹனும் சஞ்சய்யும் எதுவும் பேசாது அமைதியாக நடப்பவற்றை பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

“டேய்… தங்கச்சிமாவ நானே புரிஞ்சிக்கிட்டேன், நீ ஏன்டா சைக்கோ இப்படி பண்ணிக்கிட்டு இருக்க?” என்று சஞ்சய் கோபமாக கேட்க, “லுக், நீங்க உங்க மாயாவ மன்னிக்கலாம். ஆனா, என்னால என் ஜிலேபிய மன்னிக்க முடியாது” என்று பல்லை கடித்துக் கொண்டு சொன்னான் பாபி.

“தருணு, உனக்கு கோபம்னா என்னை இரண்டு அடி வேணா அடிச்சிக்கோ. ஆனா, பேசாம மட்டும் இருக்காத, இட்ஸ் ஹர்டிங்” என்று மாயா சொன்ன அடுத்தநொடி, பாபி மாயாவை அறைந்திருக்க, ‘அடப்பாவி! ஒரு பேச்சுக்கு சொன்னா நிஜமாவே அடிச்சிறுவியாடா?!’ என்று நினைத்தவாறு கன்னத்தை பொத்திக்கொண்டு அதிர்ந்து போய் பாபியை பார்த்தாள் அவள்.

ரோஹனோ, “டேய்…” என்று உறுமியவாறு பாபியை அடிப்பது போல் நெருங்க, அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி நிறுத்தியவன், “நீ வேணா உன் அம்மு உன்னை தேடி வருவான்னு பைத்தியக்காரத்தனமா நினைச்சிக்கிட்டு இருந்திருக்கலாம். ஆனா, நான் என் பேபிய தேடி அலைஞ்சது எனக்கு தான் தெரியும். கொஞ்சமாச்சும் எங்கள பத்தி யோசிச்சியா இடியட்? எவ்வளவு பயந்தேன் தெரியுமா?” என்று கண்கள் கலங்கிய நிலையில் கத்தினான்.

“எங்கள பத்தி யோசிச்சதால தான் திரும்பி வந்தும், அவளோட உணர்வுகள வெளிக்காட்டாம ரொம்ப கஷ்டப்பட்டிருக்கா. என் அம்மு பாவம் பாபி” என்று ரோஹன் சொல்ல, “ஐ க்னோ. ஆனாலும், அவ பண்ணது தப்பு தான்” என்று சொன்னவன் மாயாவின் புறம் இரு கைகளையும் விரித்து, “இப்போ வா பேபி” என்று புன்னகையுடன் அழைக்க, மாயாவோ அழுதவாறு ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டாள். காமம் அற்ற தூய நட்பு தான் இந்த இருவருக்குள்ளும் மேலோங்கி நின்றது.

ரோஹனோ இருவரையும் பார்த்து இருபக்கமும் தலையாட்டி சிரித்துக் கொள்ள, கீர்த்தியோ அவர்களின் முதல் சந்திப்பையும், இப்போது இவர்களின் உறவையும் ஒப்பிட்டு வியந்து தான் போனாள்.

காதல்போதை💙
****************************

-ZAKI💙

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!