காதல்போதை 45💙

“நிஜமாவே அந்த சர்வா அமைதியா தான் இருக்கானா? அவ்வளவு சீக்கிரம் தோல்விய ஒத்துக்குற ஆள் இல்லையே அவன்?” என்று ரோஹன் சந்தேகமாக கேட்க, “அவன விசாரனை பண்ணும் போதும் கூட பண்ண எல்லா தப்பையும் ஒத்துக்கிட்டான், அமைதியா தான் இருந்தான்” என்றாள் அலைஸ்.

“அவன் அவ்வளவு நல்லவன் கிடையாதே…?” என்று பாபி யோசனையாக சொல்ல, “அலைஸ், எதுக்கும் க்யார்ஃபுல்லா இரு. அவன் எப்போ, என்ன வேணாலும் பண்ணலாம்” என்று மாயா தீவிரமாக சொன்னாள்.

அதை ஆமோதிப்பதாய் தலையசைத்த அலைஸ், “அவனால நிறைய உயிர் போயிறுச்சி, அதுக்கு அவன் அனுவிச்சே ஆகனும்” என்று பல்லைகடித்துக் கொண்டு கோபமாக சொல்ல, சஞ்சய்யோ அமைதியாக அவளையே தான் பார்த்திருந்தான்.

பால்கனியில் நின்றிருந்த ரவீந்திரனுக்கோ தன்னவள் வாழ்ந்த இடத்தில் இருப்பது, அவள் தன்னுடன் இருப்பது போன்ற உண்ர்வை கொடுத்தது. அவருடைய நினைவுகளோ முதன் முதலில் தன் காதலியை சந்தித்த தருணங்களை நினைத்து பார்த்தது.

நண்பன் ஒருவரின் திருமணத்திற்காக தன் சொந்த ஊரிலிருந்து அவர் பெங்ளூர் வந்திருக்க, நீண்ட நாள் கழித்து நண்பர்களை நேரில் சந்தித்ததில் அவருக்கோ அத்தனை மகிழ்ச்சி. சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தவர், ஏதோ ஊசி துளைக்கும் பார்வையில் திரும்பி பார்த்து கண்களை அங்குமிங்கும் சுழலவிட்டு தேட, அவர் பார்வையில் சிக்கினாள் அந்த இளம்பெண்.

அவளோ அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருக்க, அதை பார்த்தவருக்கோ ஒருவித சங்கடமாகத் தான் இருந்தது. அதுவும், அந்த பெண் அணிந்திருந்த ஆடையும், நகைகளுமே அவளின் குடும்பப் பிண்ணனியை எடுத்துக் காட்டியது. அவளின் பார்வையை தவிர்த்து ரவீந்திரன் அவளை கண்டுக்காதது போலிருந்தாலும், ஏதோ ஒரு உந்துதல்…

அவருடைய விழிகள் அவரையும் மீறி அவளை பார்க்க துடிக்க, முயன்று தன்னை அடக்கியவர் மண்டபத்திலிருந்து வெளியே செல்ல போக, சரியாக “ஹெலோ…” என்ற குரல் அவரை தடுத்து நிறுத்தியது.

அவருடன் இருந்த நண்பர்கள் கூட குரல் வந்த திசையை திரும்பிப் பார்க்க, ரவீந்திரனுக்கோ தன்னை பார்த்துக் கொண்டிருந்த பெண் தான் தன்னை அழைத்தாள் என்பதில் உச்சகட்ட அதிர்ச்சியாகிப் போனது. அவரின் எதிரே நின்றிருந்த அந்த பெண்ணோ, அவரை ஆள்காட்டி விரலால் அருகே வரும்படி சைகை செய்ய, அவருக்கோ விழிபிதுங்கி விட்டது.

தன்னை தான் அழைத்தாள் என்று தெரிந்தாலும் சுற்றி முற்றி பார்த்தவர், ‘நானா…?’ என்பது போல் சைகையில்  கேட்க, அந்த பெண்ணும் புன்னகையுடன் தலையசைக்க, ரவீந்திரனின் நண்பர்களோ அவரை கேலி செய்தே ஒருவழிப்படுத்தி விட்டனர். 

தன் நண்பர்களை முறைத்தவாறு அந்த பெண்ணின் அருகில் சென்றவர், அவளை கேள்வியாக நோக்க, “ஐ அம் மஹேஷ்வரி” என்று கைகுலுக்க கை நீட்டினார் மஹேஷ்வரி. ஒழுக்கம், கட்டுப்பாடு என்று வளர்ந்த, சாதரண குடும்பத்தை சேர்ந்த ரவீந்திரனோ கைகளை குவித்து, “வணக்கம்” என்று சொல்ல, இருபுருவங்களையும் உயர்த்தி அவரை வியந்து பார்த்தார் அவர்.

“என்னை எதுக்கு…” என்று ரவீந்திரன் முடிக்கவில்லை, “ஐ லவ் யூ” என்று பட்டென்று மஹேஷ்வரி சொன்னதில், திகைத்து விட்டார் அவர். “என் பேரு என்னன்னு கூட உங்களுக்கு தெரியாது. இப்போ தான் பார்த்திருக்கீங்க. அதுக்குள்ள காதலா?” என்று ரவீந்திரன் முறைப்பாக கேட்க,

“அதெல்லாம் தெரியல, எனக்கு உங்களை பிடிச்சிருக்கு.” என்று அடாவடியாக காதலை சொன்ன மஹேஷ்வரியுடனான முதல் சந்திப்பை அவரால் மறக்க முடியுமா, என்ன?

தன் காதலியின் நினைவில் அவர் இருக்க, “என்ன மாம்ஸ், உங்க லவ்வர் நினைப்பா?” என்று கேட்டவாறு வந்தான் ரோஹன். அவனை திரும்பி பார்த்த ரவீந்திரன் புன்னகையுடன் மீண்டும் தோட்டத்து பக்கம் பார்வையை திருப்ப, ரோஹனோ அவரை கூர்மையாக பார்த்தவாறு, “என்ன யோசிச்சிக்கிட்டு இருக்கீங்க?” என்று கேட்டான்.

“மாயாவ பத்தி தான்” என்று சட்டென சொல்லிவிட்டே தன்னை தானே நொந்துக் கொண்டவர், “அது… அது வந்து… மாயா எனக்கும் மகள் மாதிரி…” என்று தடுமாற, “ஒஹோ! அப்படியா?” என்று கேலிக்குரலில் கேட்ட ரோஹன், “மகள் மாதிரி என்ன? சொந்த மகள்னே சொல்லிக்கலாம், தப்பில்லை” என்று சொல்ல, சட்டென திரும்பி அவனை ஆழ்ந்து நோக்கியவர், “யூ க்னோ எவ்ரிதிங், ரைட்?” என்று கேட்க, தன் முத்துப்பற்கள் தெரிய சிரித்து வைத்தான் அவன்.

“நான் கூட உங்கள என்னமோ நினைச்சிட்டேன். ஆனா, த க்ரேட்  மிஸ்டர்.ஆதி நாராயணனோட வன் என்ட் ஒன்லி மருமகனா இந்த ரவீந்திரன்?” என்று கேலியாக ரோஹன் கேட்க, மென்மையாக புன்னகைத்துக் கொண்டார் அவர். “இது மட்டும் மாயாவுக்கு தெரிஞ்சா, மாயாவோட சொந்த அப்பாவா, உரிமையாவே எங்களோட கல்யாண சடங்குகள உங்களால செய்யலாமே மாமா?” என்று அவன் கேட்கவும் பதறிவிட்டார் அவர்.

“இல்லை கண்ணா, அவளுக்கு தெரியவே கூடாது. என்னை அவ ஏத்துக்க மாட்டா. அவ மனசுல கண்டிப்பா அவளோட அம்மாவ ஏமாத்தின ஒரு பாவியா தான் நான் இருப்பேன். நான் தான் அவளோட அப்பான்னு தெரியவே கூடாது” என்று ரவீந்திரன் வேதனையாக சொல்ல, ரோஹனுக்கு கூட அவர் சொன்னது சரியென்று தான் தோன்றியது.

ஆனாலும், ‘இந்த உண்மை மாயாவுக்கு தெரிந்தே ஆக வேண்டும். தன்னவளுக்கு அப்பாவின் பாசத்தை கொடுத்தே ஆக வேண்டும்’ என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான் ரோஹன்.

“ஆனால் மாமா, அந்த சர்வா ரொம்ப கேவலமானவன், பணத்துக்காக தன்னோட ஃப்ரென்டயே கொன்னுட்டான். அத்தை ரொம்ப பாவம்ல?” என்று வருத்தம் தேய்ந்த குரலில் ரோஹன் சொல்ல, ரவீந்திரனிடமோ எந்த பதிலும் இல்லை. நிமிர்ந்து அவரை பார்த்தவன், கண்கள் சிவந்து பற்களை கடித்த வண்ணம் இருந்தவரை பார்த்து ஆடிப் போய்விட்டான்.

இதுவரை மென்மையான ஒருவராகவே அவரை பார்த்தவனுக்கு அவரின் இந்த கோபமும், தோற்றமும் புதிது. ‘தான் உயிராக நேசித்தவள் கொல்லப்பட்டிருக்கிறாள்’ என்று கேள்விப்பட்டதிலிருந்து அவரின் மனதில் இந்த கோபத்தீ கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டு தான் இருக்கிறது.

தன் கோபத்தை கட்டுப்படுத்தியவர் ரோஹனின் புறம் திரும்பி, “ரோஹன், நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும்” என்று சொல்லி சில விடயங்களை சொல்ல, அவனுக்கோ ஆச்சரியம் உச்சத்தை தொட்டது. அவரிடம் சரியென்று தலையசைத்து ஒரு எண்ணிற்கு அழைப்பை எடுத்தவனின் மனமோ, ‘எக்காரணைத்தை கொண்டும் இது தன்னவளுக்கு மட்டும் தெரியவே கூடாது’ என்று நினைத்துக் கொண்டது.

அடுத்து வந்த நாட்கள் சில முக்கியமான நபர்களுக்கு அழைப்பை விடுக்கவும், கல்யாண ஏற்பாடுகளிலும் மும்முரமாக நகர, மாயாவோ இடையிடையே அலுவலக வேலைகளையும் கவனித்துக் கொள்ள, ரோஹனோ தன் அம்மாவிற்கு தெரியாமல் தன்னவளை சந்திக்க புது புது திட்டங்களை தீட்டி, செயல்படுத்துவதில் நேரத்தை கடத்தினான்.

பாபியோ தன்னவளிடத்தில் பத்து வார்த்தைகளை பேசி அவளின் ஒரு வார்த்தையை கேட்க காத்திருக்க, கீர்த்தி தான் ஏதோ பூச்சாண்டியை பார்ப்பது போல் அவனை பார்த்தால் ஓடியே விடுவாள். சஞ்சய் அலைஸ்ஸுடன் பேச காத்திருக்க, அதற்கான வாய்ப்பு தான் அவனுக்கு சரியாக அமையவில்லை.

நிச்சயதார்த்தத்திற்கு ஒருநாள் முன்னாடியே கீர்த்தி, பாபியின் குடும்பங்கள் வந்துவிட, வீடே சொந்தங்களின் பேச்சிலும், சிரிப்பலையிலும் நிறைந்திருந்தது ரவீந்திரனோ தள்ளி நின்றே தன் மகளை ஏக்கமாக பார்க்க, மாயாவுக்கு தான் அவரின் பார்வை இதுவரை அனுபவித்திராத ஒரு பாசத்தை உணர்த்துவது போன்ற உணர்வு. ஆனாலும், முகத்தில் எதையும் காட்டாது அவரை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்து விடுவாள்.

இவ்வாறு நாட்கள் காதல் ஜோடிகளின் சில பல சீண்டல்களில் கழிந்து, நிச்சயதார்த்த நாளும் வந்தது.

“அலைஸ், இதை தான் நீ போட்டாகனும். அடம்பிடிக்காம இந்த ட்ரெஸ்ஸை போட்டுக்கோ” என்று மாயா அவளின் கையில் ஒரு புடவையை திணிக்க, அலைஸ்ஸோ அதை மறுத்து மாயாவை கடுப்பாக்கிக் கொண்டிருந்தாள்.

“நீ அண்ணாத்தைய கல்யாணம் பண்ணும் போது, இதை போட்டுத் தான் ஆகனும். சோ, இப்போவே ட்ரை பண்ணி பார்த்துக்கோ” என்று மாயா சொல்ல, “க்கும்… உன் அண்ணாத்த தான் இப்போ வரைக்கும் ஒரு வார்த்தை கூட பேசல்லையே… ஆனா, என்னை லுக்கு விடுறதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை” என்று சலிப்பாக முணுமுணுத்தாள் அவள்.

சரியாக, தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியில் மாயாவோ அதிர்ச்சியாகி அலைஸ்ஸை பார்க்க, அவளும் யோசனையாக அந்த செய்தியை தான் பார்த்திருந்தாள். அதில் நேற்றிரவு சர்வேந்திரன் சிறையிலிருந்து தப்பித்ததாக செய்தி ஒளிபரப்பாக, இருவருக்குள் அதிர்ச்சியோடு சேர்த்து ஒருவித பதட்டமும் தொற்றிக் கொண்டது.

“அலைஸ், அவன் எப்படி தப்பிச்சான்? உங்க டிபார்ட்மென்ட் செக்யூரிட்டி என்ன அவ்வளவு வீக்கா? ஷீட்! ” என்று மாயா கத்த, “ச்சே! அவன் அவ்வளவு ஈஸியா தப்பிக்க வாய்ப்பில்லை மாயூ. டிபார்ட்மென்ட்ல ஒருத்தரோடு ஹெல்ப் கூட இல்லாம அவனால தப்பிக்க முடியாது. ஆனா, யாரு…?” என்று தலையை பிடித்துக் கொண்டாள் அலைஸ்.

இங்கு ரோஹனின் அறையிலும் அதே அதிர்ச்சி தான்.

“ரோக்கி ஹவ் இஸ் இட் பாஸிபள்?” என்று பாபி கத்த, சஞ்சய்யோ அந்த செய்தியை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

“ரோக்கி, கண்டிப்பா அவன் பேபிய தேடி தான் வருவான். மாயாவோட சேஃப்டி ரொம்ப முக்கியம். அதுவும், அவன் தப்பிக்கிற அளவுக்கு அவ்வளவு க்யார்லெஸ் ஆ இருந்திருக்காங்க இந்த இட்டாலியன் போலிஸ், ச்சே…” என்று பாபி கத்த,

“எப்படியும் நம்ம முன்னாடி வந்து தானே ஆகனும், அப்போ பார்த்துக்கலாம். இப்போ வந்து என் அழகுல என் டெவில் மயங்குற மாதிரி என்னை ரெடி பண்ணுங்கடா” என்று அசால்ட்டாக சொன்னவாறு
ரோஹனோ கண்ணாடியின் முன் தான் தயாராகுவதில் மும்முரமாக இருந்தான்.

‘ஙே’ என்று அவனை பார்த்த பாபி, “என் பிரச்சினை போயிக்கிட்டு இருக்கு? நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க ரோக்கி?” என்று கடுப்படிக்க, “இதெல்லாம் பார்த்தா என் கல்யாணம் தான் நடக்குமா? நான் குடும்பம் தான் நடத்த முடியுமா? குழந்தை குட்டிங்க பெத்து சந்தோஷமா தான் வாழ முடியுமா? லீவ் இட் தருணு” என்று மாயாவை போல் அசால்ட்டாக சொன்னவாறு தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தான் ரோஹன்.

“இப்போ தான் நீ மாயாவோட ஆளுன்னு கரெக்டா ப்ரூவ் பண்ற ரோக்கி” என்று சஞ்சய் கேலியாக சொல்ல, அவன் சொன்ன விதத்தில் வாய்விட்டு சிரித்த ரோஹனின் குட்டி மூளையில் உழன்றுக் கொண்டிருக்கும் பல யோசனைகள் அவனுக்கு மட்டும் தானே தெரியும்.

மாயாவின் குட்டி அரண்மனையே பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்க, விருந்தினர்களின் வருகையால் ஒரே கொண்டாட்ட மயமாக இருந்தது. வெள்ளை ஷர்ட்டுக்கு மேல் அடர் நீலநிற கோட் ரோஹனுக்கு கச்சிதமாக பொருந்தியிருக்க, முத்துப்பற்கள் தெரிய சிரிக்கும் அவன் சிரிப்பில் மயங்காத ஆளில்லை எனலாம். அவனோ தன்னவளின் வருகைக்கு காத்திருக்க, தன்னவனை சிறிது நேரம் காக்க வைத்து தரிசனம் தந்தாள் அவனின் அம்மு.

அடர்நீல நிற கற்கள் பதிக்கப்பட்ட லெஹெங்காவில், ஒப்பனையில் மேலும் அழகு கூடி, அடுத்தவர் கண்ணை பறிக்கும் அளவிற்கு தேவதையென அவள் நடந்து வர, ரோஹனோ வெளிப்படையாக தன்னவளுக்கு நெட்டி முறித்து பறக்கும் முத்தத்தை வழங்க, வெட்கம் பிடுங்கி தின்றது மாயாவுக்கு.

பாபியோ தன்னவளையே ரசனையாக பார்க்க, அவளோ ஓரக்கண்ணால் தன்னவனை ரசித்து பார்த்து, அவன் பார்ப்பதை உணர்ந்ததும் நிமிரவே இல்லை. சஞ்சய்யோ பார்ட்டி ஃப்ரொக்கில் இருந்த அலைஸ்ஸை விழுங்குவது போல் பார்த்து வைக்க, அவளோ அவனின் பார்வை மாற்றத்தை உணர்ந்து அவனை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாக பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டாள்.

மாயாவின் அப்பாவாக ரவீந்திரனே உரிமையாக தட்டை மாற்றிக்கொள்ள, ரோஹனும் மாயாவும் அனைவர் முன்னிலையும் நிச்சயதார்த்த மோதிரம் மாற்றிக் கொண்டனர். ரோஹனோ மாயாவின் விரலில் மோதிரத்தை அணிவித்துவிட்டு, “ஏய் டெவில், என்னடி இவ்வளவு அழகா இருக்க? கொல்றடி” என்று கிறக்கமாக சொல்ல, அவளும் அவனுக்கு மோதிரத்தை அணிவித்தவாறு, “நீயும் தான் பேபி, முதல் தடவை உன்னை பார்க்கும் போது என்னை எப்படி மயக்கினியோ, அப்படி இருக்க” என்று சொல்ல, வெட்கத்தில் சற்று சிவந்து போனது ரோஹனின் கன்னங்கள்.

நிச்சயதார்த்தம் முடிந்ததும் நாளை கல்யாணம் வரைக்கும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள கூடாது என பெரியவர்கள் சொல்லியிருக்க, உதட்டை பிதுக்கி அழுவது போல் பாவனை செய்து, கெஞ்சி, மன்றாடி, இப்போது கொண்டாட்டத்திற்கு இளசுகள் அனுமதி வாங்க, இவர்களின் அலப்பறையில் ‘சரி’ என்று தலையாட்டிவிட்டு ஓரமாக அமர்ந்துக் கொண்டனர் பெரியவர்கள்.

பாடல் ஒலிக்கப்பட்டு எல்லாரும் நடனமாட, இங்கு அலைஸ்ஸோ எதிலும் கலந்துக் கொள்ளாது அமைதியாக நின்றிருந்தாள். திடீரென, “ஓய்! மெழுகு பொம்மை” என்ற குரலில் திரும்பியவள், தன் எதிரே நின்றிருந்த சஞ்சய்யை விரைப்பாக நின்றவாறு கேள்வியாக பார்த்தாள்.

‘இப்போ கூட ஏதோ என்கூட போருக்கு
வர்ற மாதிரியே விரைப்பா நிக்கிறாளே… இவள வச்சிகிட்டு…’ என்று முணுமுணுத்த சஞ்சய், “இந்த ஃப்ரோக்ல ரொம்ப அழகா இருக்க. ஆனாலும், புடவை கட்டி பார்த்திருக்கலாமே…” என்று ஒருவித ஆர்வத்தில் சொல்ல, அவனை புரியாது பார்த்தவள், “ஃபோர் வாட்?” என்று கேட்டாள்.

“அது நம்ம கல்யாணத்துக்கு…” என்று சஞ்சய் இழுக்க, விழிவிரித்த அலைஸ், “வட் யூ மீன்? அப்போ, உனக்கு…” என்று ஏதோ கேட்க வர, அவளை நெருங்கி நின்றவன், “எனக்கு உன் கடந்தகாலம் தேவையில்லை. நீ மட்டும் தான் வேணும். உன் பாஸ்ட் எப்படி வேணா இருந்ததிருக்கலாம். பட், உன் ப்ரெசன்ட் என்ட் ஃப்யூச்சர் நானா இருக்கனும்னு ஆசைப்படுறேன். டீ ஆமோ அலைஸ் (நான் உன்னை காதலிக்கிறேன்)” என்று இத்தாலி மொழியில் தன் காதலை சொன்னான்.

அதில் வாய்விட்டு சிரித்தவள், “அப்போ சரி, நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று அதிரடியாக சொன்னதில் இப்போது அதிர்வது சஞ்சய்யின் முறையாயிற்று. “நாளைக்கேவா?” என்று அவன் அதிர்ச்சியாக கேட்க, சரியாக “படவா! எங்ககிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணிக்க போறியா?” என்ற குரலில், “அய்யோ! அம்மா, நான் இல்லை” என்று அலறிவிட்டான் சஞ்சய்.

அவனின் காதை பிடித்து திருகிய அவனின் அம்மா சுமதி, “என்னடா இது? உள்ளூர்ல உனக்கு நாங்க பொண்ணு தேடினா, நீ வெளிநாட்டு பொண்ணா பிடிச்சிருக்க?” என்று கேட்டவாறு அலைஸ்ஸை பார்க்க, அவளோ திருதிருவென முழித்தவாறு நின்றிருந்தாள்.

“உனக்கு என் பையனை பிடிச்சிருக்காமா?” என்று அவர் அலைஸ்ஸிடம் பட்டென்று கேட்க, அவளும் ‘ஆம்’ என்று தலையசைத்தாள். “சரிமா நான் ஒன்னு கேக்குறேன், அதுக்கு பதில் சொல்லு. நீ இங்க போலிஸா இருக்கன்னு மாயா சொன்னா. என் பையன் பெங்ளூர்ல பிஸ்னஸ் பண்றான். அப்படி இருக்கப்போ இரண்டு பேருக்கும் எப்படி ஒத்துப்போகும்?” என்று சுமதி கேட்க,

புன்னகைத்தவாறு அங்கு தன் அப்பாவின் கன்னத்தை கிள்ளி கொஞ்சிக் கொண்டிருந்த சஞ்சய்யை ஒரு பார்வை பார்த்தவள், “எனக்குன்னு எந்த சொந்தமும் இல்லை. இருந்த ஒரே உறவும் இல்லாம போயிறுச்சி. பிடிச்ச வேலை, கைநிறைய சம்பளம் இதை நான் என் வாழ்க்கையில எதிர்ப்பார்க்கல. எனக்கு ஒரு குடும்பம் வேணும். அது சஞ்சய் மூலமா கிடைக்கனும்னு ஆசைப்படுறேன். நான் கல்யாணத்துக்கு அப்றம் பெங்ளூர்க்கு வந்துருவேன், சஞ்சய்யை விட்டு எங்கேயும் இருக்க போறதில்லை” என்று சொல்ல, சஞ்சய்க்கோ மேலும் மேலும் தன்னவள் மேல் காதல் பெருக, சுமதிக்கோ மனது நிறைந்து போனது.

சுமதியும் அவர் கணவரும் வேலை வேலை என்று ஓட, சிறுவயதிலிருந்து தனித்து விடப்பட்டான் சஞ்சய் என்று தான் சொல்ல வேண்டும். வேலை விடயமாக இருவருமே வெளிநாட்டுக்கு செல்ல இருந்தப்போது கூட, ‘தான் வர முடியாது’ என்று அடம்பிடித்து தன் பாட்டியுடனே இருந்துவிட்டான். அவர்களும் மாதம் ஒரு முறை பெங்ளூருக்கு வந்து அவனை பார்த்துவிட்டு செல்வர்.

இந்த குற்றவுணர்ச்சி அவர்கள் மனதில் இருந்ததாலோ என்னவோ! கல்யாண வாழ்க்கையாவது அவனுக்கு நல்லவிதமாக அமைய எண்ணியவர்களுக்கு மாயா முதலில் அலைஸ் பற்றி சொன்னதும் அவ்வளவு உடன்பாடு இல்லை. அதனாலே, சுமதி அவ்வாறு ஒரு கேள்வியை கேட்க, அவளும் அவருக்கு சாதகமாகவே பதிலை தந்தாள்.

அங்கிருந்த மார்த்தாண்டமோ “கீர்த்தி, பாபியின் கல்யாண திகதியிலே இவர்களின் கல்யாணத்தை நடத்தலாமா?” என்று கேட்க, அவர்களுக்கும் சம்மதம், கூடவே சந்தோஷமும் தான். சஞ்சய்யோ தன் காதல் கை கூடிய சந்தோஷத்தில் அலைஸ்ஸை தாவி அணைத்து, சுமதியிடமிருந்து பல கொட்டுக்களையும் பெற்றுக் கொண்டான்.

இங்கு கீர்த்தியோ “ஸ்வீட்டி” என்ற குரலில் சட்டென பின்னால் திரும்பி பார்க்க, அவளவன் தான் அவளை குறும்பாக பார்த்தவாறு நின்றிருந்தான். அவனை பார்த்தவளுக்கு குப்பென்று முகம் சிவக்க, அதில் தன்னை தொலைத்த பாபி, கீர்த்தியை மேலும் நெருங்கி, “ஸ்வீட்டி, என் கண்ண பாரு”  என்று ஹஸ்கி குரலில் சொல்ல, அவளோ தயக்கமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அடுத்தநொடி அவனின் காதல் பார்வை இறைஞ்சும் பார்வையாகி, “என்னால முடியலடி ஸ்வீட்டி, ப்ளீஸ்டி… ஏன்டி இப்படி பண்ற? உன்னை சின்னவயசுல இருந்து தவிக்க விட்டதுக்கு இப்போ என்னை ஏங்க விடுறல்ல?” என்று அவன் கேட்க, “இல்லங்க, எனக்கு அதெல்லாம்…” என்று மீண்டும் கீர்த்தி அதே புராணத்தை பாட ஆரம்பிக்க, “ஈஷ்வரா…” என்று வாய்விட்டே புலம்பிவிட்டான் பாபி.

பாபியோ கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டு நிற்க, அவனை பாவமாக பார்த்த கீர்த்தி, சுற்றி முற்றி பார்த்துவிட்டு அவனின் புறங்கையில் பச்செக்கென்று ஒரு முத்தத்தை வைத்துவிட்டு ஓட போனாள். அதற்குள் அவளை எட்டி பிடித்தவன், “என்னது இது? இதுக்கு பேரு தான் முத்தமா?” என்று முறைப்பாக கேட்க, அவளோ அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு ஒரு பார்வை பார்த்தாள்.

அந்த பாவமான முகத்தை ரசித்தவன், “இப்படி பார்த்தே பார்த்தே ஆள அசறடிக்கிற ஸ்வீட்டி” என்று கொஞ்சியவாறு அவளின் கன்னத்தை கிள்ள, ‘ஹ்ர்ம்… ஹ்ர்ம்…’ என்ற செருமலில் திடுக்கிட்டு திரும்பினான். எதிரே மார்த்தாண்டம் முறைத்துக் கொண்டு நிற்க, ‘”ஹிஹிஹி… அப்பா” என்று அசடுவழிந்தவாறு அங்கிருந்து ஓடியே விட்டான் பாபி.

மாயாவோ இத்தனை நேரம் தன்னுடன் இருந்தவன் இப்போது எங்கே என்று தெரியாது ரோஹனை வலைவீசி தேடிக் கொண்டிருந்தாள். சரியாக அந்த நேரம் பாடல் ஒலிக்கப்பட, அந்த சத்தம் வந்த திசையை எதிர்ச்சையாக திரும்பி பார்த்தவள், அங்கு புன்னகையுடன் தன்னையே விழி அகலாது பார்த்தவாறு நின்றிருந்த ரோஹனை பார்த்து, “ரூஹி…” என்று அழைத்தவாறு அவனை நோக்கி ஓடினாள்.

அவள் இரண்டடி வைப்பதற்குள் ரோஹன் அந்த பாடல் ஒலிக்கேற்ப தன் உடலை வளைத்து நடனமாட, அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டாள் மாயா. கிட்டதட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகு அவன் நடனமாடுகிறான் என்பதை தெரிந்திருந்த மாயாவுக்கு அத்தனை ஆச்சரியம், கூடவே சந்தோஷமும் கூட.

பாபி, சஞ்சய் கூட அவன் நடனமாடுவதை பார்த்து, “யாஹூ…” என்று கத்தி கூச்சலிட்டவாறு அவனை நோக்கி சென்று, ரோஹனுடன் இணைந்து ஆட, ரோஹனும் தன்னவளை பார்த்தவாறே ஆடினான்.
திடீரென ரோஹன் மாயாவை நெருங்கி, அவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்து ஆட, மாயா தான் தன்னவனின் விழிகளை பார்த்தவாறே அவன் திருகி கொடுத்த பொம்மை போல் அவன் இழுத்த இழுப்பிற்கு ஆடிக் கொண்டிருந்தாள்.

நடனமாடிக் கொண்டே தன்னளிள் காது மடிலில் தன் மீசை முடி உரச, “லவ் யூ டெவில்” என்று ரோஹன் காதலாக சொல்ல, அவளுக்கோ வெட்கத்தில் கன்னங்கள் குங்குமப்பூ போன்று சிவந்திருந்தன. வதந்தியாக பரப்பப்பட்டிருந்த செய்தி நிஜமாகவே மாறியதில் பத்திரிகையாளர்கள் அவர்களை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்து தள்ளிவிட்டனர்.

எல்லாரும் ஒன்றாக ஆட, திடீரென மாயாவின் எண்ணிற்கு அழைப்பு வரவும், அங்கிருந்து சற்று தள்ளி சென்று அழைப்பை ஏற்று அவள் காதில் வைத்ததும் தான் தாமதம் மறுமுனையில், “ஹாய் ஸ்வீட்ஹார்ட், கங்கிராட்ஸ்” என்ற குரல் கேட்க, அந்த குரலுக்கு சொந்தக்காரன் யாரென்று உணர்ந்தவளின் இதழ்கள், “சர்வா…” என்று முணுமுணுத்தது.

 

காதல்போதை💙
*****************************

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!